Thiruchchikkaaran's Blog

சுவிசேஷத்தை கண்டு சாத்தான் துடிக்கிறான்!

Posted on: May 16, 2011


சுவிசேஷத்தை கண்டு சாத்தான் துடிக்கிறான்! என்கிற தலைப்பை பார்த்தவுடன் நாம் ஏதோ இதை சொல்லியது போல  எண்ண வேண்டாம். இந்த தலைப்பில் நம்மை விமர்சித்து கட்டுரை வெளியிட்டு உள்ளனர். எனவே அதற்க்கு பதில் சொல்லும் விதமாகவே இக்கட்டுரையை வெளியிடுகிறோம்.

கடவுள் என்கிற ஒருவர் உண்மையில் இருக்கிறாரா என்பது யாருக்கும் தெரியாது.  கடவுள் என்கிற யாரையும் யாரும் பார்த்தது இல்லை. ஆனால் கடவுள் என்று ஒருவர் இருப்பதாக கருதிக் கொண்டு அமைதியாக தொழுவதை நாம் இகழ்வதில்லை.

ஆசிய சமூகத்தை  பொறுத்த அளவிலே நன்மை செய்வது கடவுள் தன்மை என்று கருதி வருகின்றனர். இதிலே சாத்தான் என்று இன்னொருவர்  இருப்பதாகவும் அவர் கெட்டவர் எனவும், எல்லோரயும் தீமை பாதைக்கு இட்டு செல்பவர் என்றும் மத்தியக் கிழக்கு பகுதியில் சிலகருத்துக்கள உருவாகின.

நாம் முன்பே சொன்னது போல நாம் கடவுளையும் பார்க்கவில்லை, சாத்தனையும் பார்க்கவில்லை. கடவுளோ, சாத்தானோ இருப்பதற்கான சரி பார்த்துக் கொள்ள கூடிய நிரூபணத்தை யாரும் தாவும் இல்லை. எனவே நம்முடைய அக்கறை மனிதனைப் பற்றியே.

மனிதன் நல்லதுக்கான பாதையில், அமைதிப் பாதையில், சிநேகப் பாதையில் , அன்புப் பாதையில் , நல்லிணக்கப்  பாதையில் செல்ல வேண்டும் என்பதே நமது விருப்பம், அதுவே மனித சமூகத்துக்கு நல்லது.

ஆனால் இந்த கருத்துக்களை முன் வைத்து எழுதி அமைதியாக , சிநேகமாக , இணக்கமாக வாழ்வோம், மத சகிப்புத் தன்மை யை அழிக்க வேண்டாம் என்று எழதினால், நம்மை  சாத்தானின் வலிமை வாய்ந்த ஆயுதம் சாத்தான் , சாத்தானின் கையாள் என்கிற ரீதியில் எழுதுகின்றனர்.

அதாவது பிற மதத்தினரின் வழிபாட்டு  தளங்களை உடையுங்கள், இடியுங்கள் ,பிற இனத்தவரை படுகொலை செய்து அவர்களின் இடங்களை கைப்  பற்றிக் கொள்ளுங்கள் என்றால் அது தெய்வத் தன்மையாம். பிற மதங்களுடன் சகிப்புத் தன்மையை கடைப் பிடித்து, சிநேகமாக  இணக்கமாக அமைதியாக வாழுங்கள் என்றால் அது சாத்தானிய தன்மையாம்.  நம்மைப் பற்றி நம்முடைய சகோதரகளின் விமரிசனங்களைப் படியுங்கள்!

//சுவிசேஷத்தை கண்டு சாத்தான் துடிக்கிறான்!

நண்பர்களே,

எனது சமீபத்திய தளவலத்தில் (நகர்வலம் மாதிரி), திருச்சிக்காரன் தளத்தில்  உலக மகா யோக்கியர் போல பேசும் அமெரிக்க சமுதாயம்,  உண்மையிலேயே  நாகரிக சமுதாயமா ? என்று ஒரு மொக்கை கட்டுரை போட்டிருந்தார். ஒரு மொக்கை கட்டுரை பற்றி இங்கு எதற்கு பேசணும் ன்னு சொல்லறீங்களா?

அந்த கட்டுரை மொக்கையா இருந்தாலும், அதில் அவரது சூழ்ச்சி ஒன்று உள்ளதை கவனித்த பின்னாலும் சொல்லாமலிருக்க என்னால் முடியவில்லை. அமெரிக்காவை பற்றி குறை பேசும் போக்கில் கிறிஸ்துவத்தையும், சுவிசேஷத்தையும் மனுஷன் சீண்டிபார்கிறார்.  இதில் அவர் சூழ்ச்சி என்னவென்றால், அமெரிக்காவையும் கிறிஸ்த்துவத்தையும் ஒன்றாக இணைத்து விட்டு, பிறகு அமெரிக்காவில் பல குறைகள் உள்ளது அதனால் கிறிஸ்த்துவமும் குறை உள்ளது என்று நிரூபிக்க இந்த ஏற்பாடு. மேலும் வேத வசனங்களை out of context இல் எடுத்து (சாத்தானை போல) தவறான பிராச்சாரம் செய்கிறார். இவர் கிறிஸ்த்துவத்திற்கு எதிரியாக இருப்பதால் இப்படி காழ்ப்புணர்ச்சி கொண்டு, மதவெறியினால் இப்படி கேவலமாக நடந்து கொள்கிறார். இவர் காந்தி அடிகளுக்கு எதிரியாக இருந்திருந்தால், மரண வேதனையில் துடித்த கன்றுக்குட்டியை கருணைகொலை செய்யசொன்ன அவர் வார்த்தைகளை திரித்து. காந்தியார் பசுவதைகாரர், கசாப்பு கடைக்காரர் என்றெல்லாம் கதை அளந்திருப்பார்.

வெளிநாட்டில் இருந்து வந்து இந்தியாவில் சுவிசேஷ ஊழியம் செய்யும் பெண்களை இந்த ராம பக்தன் இவ்வாறு சொல்கிறார்:

//அழகிய  உடை அணிந்த இளம் அமெரிக்க பெண்கள் சன்  கிளாஸ் போட்டுக் கொண்டு, இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும் சென்று அங்கே இருக்கும் சிறுவர்களை கட்டித் தழுவிக் கொண்டு விளையாடி அவர்களுக்கு ஜீன்ஸ் , டி சர்ட் தருகிறார்கள்.//

வேண்டுமானால் இவர்கள் இந்த மக்களுக்கு வேட்டி, சட்டை கொடுத்து கூடவே பகவத் கீதையை கொடுக்க வேண்டியதுதானே? குறைந்தது அவர்களுக்கு ஒரு கோவணமாவது கொடுத்திருக்கலாமே. இந்த இந்துத்துவாக்கள் அவர்களது கோவணத்தையும் பிடுங்கிக்கொண்டு அகோரிகலாக்கமளிருந்தால் சரி. இவர்களும், இவர்கள் சாமியார்களும், வெள்ளைக்காரனுக்கு அடிமையாகி அவனிடம் இப்போது நைந்துபோன இந்து சரக்கை விற்றுகொண்டிருக்கின்றனர் (நிர்வாண, ஆபாச ஆசிரமங்கள் அமைக்க). சாமியார்களிடம் கொள்ளை கொள்ளையாக பணம் கொடுத்து அவர்கள் சொல்லும் அபத்தத்தை ஆண்மீகமென்று நம்பும் இவர்களிடம், இலவசமாக உண்மையை, சுவிசேஷத்தை, சொர்க்கத்தை கொண்டு சென்றால், இப்படித்தான் கழுதையை போல் உதைப்பார்.

//ஆனால் அன்பு காட்டுவதாக் சொல்லி அப்படியே அவர்களை மத வெறி விடத்தில்  மூழ்க வைத்து பாவ ஸ்நானம் செய்ய வைக்கிறார்கள்.//

ஞானஸ்நானத்தை அவதூறு செய்யும் அளவுக்கு சாத்தான் இந்தாளை உபயோப்படுத்துகிறான்.

// இந்த அமெரிக்க யுவதிகளை  சந்திக்கும் முன் இந்திய அப்பாவி குடிசை வாசிகள் எந்த மதத்தையும் வெறுக்காத நாகரிக அன்பு நெஞ்சங்களாக வாழ்ந்தன. இவரக்ள அவர்களை மாற்றி , அவர்களின் மத சகிப்புத்தன்மையை அழித்து வெறுப்பு கருத்துக்கள் உள்ளவர்கள் ஆக்குகின்றனர்.//

இந்த யோக்கியன் அந்த மக்களை சந்தித்து, அவர்களை அன்புள்ளவர்கலாக்கலாமே. இந்த மனுஷனுக்கு (???) என்ன ஒரு எரிச்சல் பாருங்கள்.

மொத்தத்தில், சுவிசேஷம் அறிவிக்கப்படுவதை அறிந்து சாத்தான் துடிதுடிப்பதை அறிய, இந்த “யோக்கியன்” ஒரு உதாரணம்.//

நம்முடைய முந்தைய கட்டுரை :

r=914966https://thiruchchikkaaran.wordpress.com/2011/05/10/eulogising-religious-chaunism/


உலக மகா யோக்கியர் போல பேசும் அமெரிக்க சமுதாயம்,  உண்மையிலேயே  நாகரிக சமுதாயமா ? 

மக்களாட்சிமனித உரிமைதனி மனித சுதந்திரம் … என்றெல்லாம் வாய் கிழிய பேசும்அமேரிக்கா உண்மையிலே அப்படி நடந்து கொள்கிறதா?

இன்றைய தினம் உலக மக்களுக்கு அபாயத்தை கொடுக்க கூடிய காரணிகளில்முக்கியமானது மத வெறியினால் உருவாகும் பயங்கர வாதமும்உலக முழவதையும் தானேசுரண்டிப் பிழைக்க , எத்திப் பிழைக்க நினைக்கும் ஏகாதிபத்தியமுமே.

தனக்கு எது ஆதாயம் என்பதைத் தான் அமேரிக்கா முதலில் பார்க்கிறது, முதலில் மட்டுமல்ல  கடைசி வரையிலும் அது தன் சுய நலத்தை  மட்டுமே சிந்திக்கிறது என்பதை பள்ளி சிறுவர்கள் கூட அறிந்து கொண்டு உள்ளனர். உலகில் எங்கெல்லாம் கனிம வளம் உள்ளதோ அங்கெல்லாம் நட்பு நாடாக காட்டிக் கொண்டு பாதுகாப்பாக தருவதாக சொல்லி மிகப் பெரிய குண்டுகளை மக்களின் தலையிலே இறக்குகிறது.

வியட்நாம் முதல் லிபியா வரை அமேரிக்கா அப்பாவி மக்களின் தலையின் இறக்கிய குண்டுகளையும் அதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையை , ஓடிய இரத்த ஆற்றை எண்ணினால் நெஞ்சம் தாங்காது.  இப்போது இஸ்லாமிய மத வெறி , பயங்கர வாதம் என்று எல்லாம் கர்ஜிக்கும் பேச்சுக்களை தரும் அமெரிக்க, உண்மையிலே தன பங்குக்கு மத வெறியை குறைக்க முயற்சி செய்து இருக்கிறதா?

அழகிய  உடை அணிந்த இளம் அமெரிக்க பெண்கள் சன்  கிளாஸ் போட்டுக் கொண்டு, இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும் சென்று அங்கே இருக்கும் சிறுவர்களை கட்டித் தழுவிக் கொண்டு விளையாடி அவர்களுக்கு ஜீன்ஸ் , டி சர்ட் தருகிறார்கள்.

அட இது என்ன தவறா ஐயா, என்றால் இது தவறு இல்லை, அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் … அன்பு காட்டுங்கள் . வரவேற்கிறோம்,

ஆனால் அன்பு காட்டுவதாக் சொல்லி அப்படியே அவர்களை மத வெறி விடத்தில்  மூழ்க வைத்து பாவ ஸ்நானம் செய்ய வைக்கிறார்கள். இந்த அமெரிக்க யுவதிகளை  சந்திக்கும் முன் இந்திய அப்பாவி குடிசை வாசிகள் எந்த மதத்தையும் வெறுக்காத நாகரிக அன்பு நெஞ்சங்களாக வாழ்ந்தன. இவரக்ள அவர்களை மாற்றி , அவர்களின் மத சகிப்புத்தன்மையை அழித்து வெறுப்பு கருத்துக்கள் உள்ளவர்கள் ஆக்குகின்றனர்.

இவர்கள் அறிமுகப் படுத்தும் பரிசுத்த புனித நூலில் உள்ள பிற மத சகிப்புத் தன்மை அழிப்பு, மத வெறி பரப்பு கோட்பாடுகளை படியுங்கள்.

//உபாகமம்

12 அதிகாரம்

1.உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கிற தேசத்திலே, நீங்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கைக்கொண்டு நடக்கவேண்டிய கட்டளைகளும் நியாயங்களுமாவன:

2. நீங்கள் துரத்திவிடும் ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்த உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,

3. அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி, அவைகளின் பேரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள்.//

இப்படி ஒரே நேரத்தில் – ஏகாதிபத்திய , சுரண்டல் முனைப்பு, அப்பாவி மக்கள் அழிப்பு அரசியலை ஒரு புறத்திலும் –  மத சகிப்புத் தன்மை  அழிப்பு, மத வெறி விட பரப்பு செயலை இன்னொரு புறத்திலும் செய்து வரும் அமேரிக்கா-  மனித சுதந்திரம், மக்களாட்சி, மக்கள நலம், மக்கள உரிமை, மத சார்பின்மை, பயங்கர வாத எதிர்ப்பு ஆகியவற்றை பற்றி எல்லாம் வாய் கிழிய பிரச்சாரம் செய்வது வேடிக்கையாக இல்லை?

Title: உலக மகா யோக்கியர் போல பேசும் அமெரிக்க சமுதாயம்,  உண்மையிலேயே  நாகரிக சமுதாயமா ?

சுவிசேஷத்தை கண்டு சாத்தான் துடிக்கிறான்!

http://chillsam.activeboard.com/t42771440/topic-42771440/?


4 Responses to "சுவிசேஷத்தை கண்டு சாத்தான் துடிக்கிறான்!"

அவர்களும் மீண்டும் மீண்டும் முருங்கை மரம் ஏறாமல் இருக்க போவதில்லை, நீங்களும் உங்கள் முயற்சியில் சற்றும் தளரபோவதில்லை.
பார்ப்போம் இங்கு கடைசியில் ஜெயிக்கபோவது அல்லது விக்ரமாதித்தனா? என்று. ஆனால் நீங்கள் ஏதோ விழலுக்கு நீர் பாய்ச்சுவது போலதான் தெரிகிறது.
any how all the best to you

தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதிடக்கூடியவர்கள். ”முடவர்கள் நடக்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள் குருடர்கள் பார்க்கிறார்கள்” என்று ஒரு வசனத்தை விளம்பரம் செய்வார்கள். அந்த வசனத்தின் இறுதியில் மரித்தோர் எழுந்திருக்கிறார்கள் என்ற வசனம் உண்டு. அதை மட்டும் விளம்பரம் செய்ய மாட்டார்கள். இந்த பித்தலாட்டக்காரர்கள் இத்தனை ஆண்டுக்காலம் கோடிகோடியாக மதமாற்றத்திற்காக செலவு செய்து பிரசாரம் செய்து எதை சாதித்துவிட்டார்கள்.

இவர்களின் ஜெபக்கூட்டங்களில் நடக்கும் அற்புதங்கள் எல்லாம் ஏமாற்றுவேலைகள் என்பது அவர்களுக்கே தெரியும். இவர்களின் கமெண்டுகளுக்கு நாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. விட்டு விடுங்கள்.

உங்கள் கட்டுரையில் வரும் உண்மைகளைக் கண்டு மூச்சு திணறுகிறார்கள் போலிருக்கிறதே இந்த சுவிசேஷக்காரர்கள். எனக்குத் தெரிந்து சுவிசேஷப் பாவிகளை தொடர்ந்து விடாக்கண்டனாக ஓடவிடுவது நீங்கள் மட்டும் தான் என நினைக்கிறேன். மத மாற்றம் என்கிற பெரிய வியாபாரத்தில் ஏசு விற்கப்பட்டுவிட்டார். அவர் காணாமல் போய் விட்டார். இப்போது நடப்பது வெறு வியாபாரம். இது அன்பு வியாபாரம். அன்பு என்கிற பெயரால் பயமுறுத்தி மக்களை மூளைச் சலவை செய்யும் பண வியாபாரம். இந்த வியாபாரத்தில் பணம் சம்பாதித்த அநேகர்கள் உங்களோடு வாதிட்டுக்கொண்டே தான் இருப்பார்கள். நீங்கள் சளைக்கவில்லை. பாராட்டுக்கள்.

வாங்க ராம்,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

மத சகிப்புத் தன்மையை அழித்து, மத வெறிக் கோட்பாடுகளைப் பரப்புவோர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்யும் போது, சினேக தன்மை, சகிப்புத் தன்மை, மத நல்லிணக்க தன்மை கோட்பாடுகளைப் பரப்பும் நாம் வாளா இருக்க முடியுமா?

இயேசு பிரானின் பேரால் , இயேசு நீக்க விரும்பிய முரட்டுப் பிடிவாத கோட்பாடுகளை , சமரச மறுப்பு , உடன்படிக்கை மறுப்பு, இரக்க மறுப்பு கோட்பாடுகளை உலகம் முழுதும் அவர் பேராலே பரப்பி சகிப்புத் தன்மையை அழித்து வெறுப்புணர்ச்சியை பரப்பி விட்டனர். இந்திய சமூகத்திலும் இத்தகைய கோட்பாடுகளை பரப்ப துடிக்கின்றனர். இந்திய சமூகத்தை மத வெறி விடத்தில் இருக்கும் காக்கும் கடமை நமக்கு உள்ளது. இயேசு பிரானின் சரியான கொள்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி, அவற்றை மத வெறிக் கோட்பாட்டு பிரச்சாரகர்களைடம் இருந்து விடுவிப்போம்.

இந்த நேரத்திலே பெரும்பாலான இந்தியர்கள் பிற மத தெய்வங்களின் மீது மரியாதை வைத்திருப்பவர்கள் என்பதை அறிந்திருக்கிறோம். நீங்களே கூட மரத்தையும் , மண்ணையும் வணங்குகிறார்களே , பிற மத தெய்வங்களுக்கு ஏன் மரியாதை தர மாட்டார்கள் என்ற ரீதயில் பின்னோட்டம் இட்டதாக நினைவு.

இவ்வாறாக மத சகிப்புத் தன்மை உள்ள பெரும்பாலான இந்தியர்களின் தெய்வங்களை இகழ்ந்து, அவர்களுக்கு ஆத்திரமூட்டிஅவர்களையும் மத வெறிப் பாதைக்கு இழுப்பதாகவே இவர்களின் செயல் உள்ளது. இத்தகைய எண்ணப் போக்கு எங்கிருந்து இவர்களுக்கு வந்தது , யார் சொல்லிக் கொடுத்தர்கள் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

Leave a comment

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 45 other subscribers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09