Thiruchchikkaaran's Blog

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு 5 நட்சத்திர பளபளப்பு தலைமை செயலகமும் தேவையா?

Posted on: May 16, 2011


ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு 5 நட்சத்திர பளபளப்பு  தலைமை செயலகமும் தேவையா?

File:Tamilnadu-Secretariat-Assembly-New-Building.jpg

அடே அப்பா , இது என்ன ஏதாவது எண்ணை வளமுள்ள சுல்தானின் அரண்மனையா? இங்கிலாந்து அரசியின் மாளிகையா?  சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரமாண்ட புதிய பளபளப்பு வளாகத்தை பார்க்கும் சாமானியனுக்கு இந்தக் கேள்வி எழுந்தால் ஆச்சரியம் இல்லை.

ஏற்கெனவே தலமைசெயலகம் , சட்டசபை இவை  எல்லாம் நடை  பெற  வளாகங்கள் உள்ளன.

நாட்டிலே அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை தேய்ந்து தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எல்.கே.ஜி சீட்டுக்கு ஒரு லட்சம் டொனேசன் கேக்கிறாங்க. இந்த பளபளப்பு வளாகத்தை கட்ட செலவிட்ட பணத்தை வைத்து புதிய அரசு பள்ளிகளை கட்டி இருக்கலாம்.

மக்களின் வரிப் பணத்திலே  இப்படி தாஜ்மஹால் போல படுபந்தாவாக கட்ட வேண்டுமா?

காந்தி வாழ்ந்த நாடு இது. காந்தி எப்படி எளிமையாக வாழ்ந்தார் என்பதை நாம் மறந்து விடவில்லை.

தனியார் பளபளப்பான பில்டிங் கட்டுகிறார் என்றால் சொந்தக் காசை போட்டு கட்டுகிறான். மக்களின் வரிப் பணத்தில் இப்படியா? எத்தனை படிகள் , அடேயப்பா…

ஸ்ட்ரக்சர் நன்றாக இருக்கிறது என்றால்  பழைய தலைமை செயலகத்தில், சட்ட சபையில் தொடர்ந்து இயங்குவதில் எந்த தவறும் இல்லை. தேவையான  மராமத்து பணிகளை செய்து கொள்ளலாம். எக்மோர் , சென்டிரல் ரயில் நிலையங்கள் எல்லாம் அன்று கட்டியது இன்றும் தொடர்ந்து உபயோகப் படுகிறது. தினமும் எத்தனை பயணிகள் வருகிறார்கள்.

புதிய  பளபளப்பு வளாகத்தை மென் பொருள் நிறுவனங்களுக்கு லீசில் வாடகைக்கு கொடுத்து அதில் வரும் பணத்தை வைத்து அரசாங்கப் பள்ளிகளுக்கு அதிக வசதிகள் தந்து அவற்றின் தரத்தை முன்னேற்ற வேண்டும் என்று  மக்கள் விரும்பினால் அது சரியானதே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: