Thiruchchikkaaran's Blog

இராம‌னுஜாச்சாரியார், ஆன்மீக‌த்தின் மூல‌ம் ச‌மத்துவ‌த்தை உருவாக்கிய‌ மாவீர‌ர்! (Part-1 )

Posted on: December 18, 2010


File:Ramanujacharya Idol in a temple.jpg

இந்திய‌ ச‌முதாய‌ம் மிக‌ பழ‌மையான‌ ச‌முதாய‌ம். அந்த‌ ச‌முதாய‌ம் வாழ்ந்த‌ நில‌ப் ப‌குதியும் மிக‌ப் பெரிய‌ ச‌ம‌வெளி நில‌ப் ப‌குதியே. ம‌ற்ற‌ ஆற்ற‌ங்க‌ரை நாக‌ரீக‌ங்க‌ளில் எல்லாம் குறுகிய‌ நில‌ப் ப‌ர‌ப்பிலே  வாழ்ந்த‌ன‌ர்.

எகிப்தை எடுத்தக் கொண்டால் அங்கே நைல் நதியை ஒட்டி கரையின் இரு மருங்கிலும் ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே மக்களின் வாழும் பகுதி அமைந்து இருந்தது. மற்றவை பாலைவனங்களாகவோ  , புறம்போக்கு தரிசாகவோ இருந்தது.

சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, கோதாவரி , கிருஷ்ணா, காவிரி, நர்மதை உள்ளிட்ட பல்வேறு நதிகளையும், சமவெளிகளையும் கொண்டிருந்த இந்தியா மக்கள் தொகை பெருகவும், வளரவும், வாய்ப்பாக இருந்தது. எனவே பல்வேறு தொழில்களும், கலைகளும் உருவாகவும், சிறக்கவும் செய்தன.

வெவ்வேறு தொழில்களை மேற்கொண்ட மக்கள் தாங்கள் தங்கள்  தொழிலை ஒட்டிய பகுதிகளில் வாழவும், குழுவாக அமையவும் செய்தனர். தங்கள் குழுக்களுக்குள்ளேயே திருமண உறவுகளை செய்து கொள்ள ஆரம்பித்தனர். தங்கள் தொழிலை வளப்படுத்தவும், மேம்படுத்தவும் அது உதவியாக இருந்தது. குடும்பத்தில் பிறக்கும் மகனுக்கு தங்களின் தொழிலை அதன் சிறப்புகளை கற்றுத் தேர்ச்சி பெற வைத்தனர். தச்சு  தொழில் செய்தவர் தன மகனுக்கு தச்சு  வேலை கற்றுக் கொடுத்தார்,  குயவர்  தன்   மகனுக்கு மண் பாண்ட வேலையை சொல்லிக் கொடுத்தார்.   இவ்வாறாக ஒருவர் பிறக்கும் போதே அவருடைய வேலை வாய்ப்பு உறுதி செய்யப் பாட்டாலும் , இந்த முறை இறுக்கமான சாதீய அமைப்புகள் உருவாகும் முறையிலே அமைந்து விட்டன.

முதலிலே எல்லோரும் ஒன்றாக இருந்தனர் என்றும், பிறகு பல் வேறு தொழிலை செய்ய வேண்டிய காரணத்தினால் அவர்கள் பிரிந்தனர் என்றும் சுவாமி விவேகானந்தர் சொல்கின்றார். முன்பு எல்லோரும் பிராமணர்கள் ஆகவே இருந்தனர் என்கிறார். இப்படி  இருந்திருப்பதற்க்கான வாய்ப்புகள் வலுவாக உள்ளன.

பத்து மகன் உள்ள ஒரு குடும்பத்திலே, எல்லா மைந்தர்களும் காலையிலும் மாலையிலும் பூசனை, சந்தியாவந்தனம் போனறவற்றை செய்து கொண்டு இருந்திருக்கக் கூடும்.

குடுமபப் பொறுப்புகளை எல்லோரும் பிரித்துக் கொள்ளும் போது மாடுகளை மேய்க்கும் பணியை இரு மைந்தர்கள் பார்த்துக் கொள்ளும்படி இருந்து இருக்கலாம். காலையிலே மாடுகளை ஓட்டி சென்று, மாலையில் பொழுது சாயும் போது களைப்புடன் வீடு திருப்பும் மைந்தர்களுக்கு  பூசனைகளில் ஈடுபட நேரம் இருந்திருக்காது. எனவே அவர்கள் தினமும்  பூசனை செய்ய வேண்டியதில்லை என குடும்பத் தலைவரான தந்தை எக்செம்ப்சன் கொடுத்திருக்கலாம். இவ்வாறாக குடும்பங்கள் விரிவடைவது, பெருகுவதும் பல்வேறு தொழில்களில் ஈடுபடுவது மாக சமூக  அமைப்பு முறை விரிவடைந்து இருக்கிறது.

சாதீய சமூகம் உருவான போது ஒரு வகையில் பலரும் அதை தங்களுக்கு பாது காப்பாக கருதினார்கள். உதாரணமாக ஒரு பிராமண சிறுவன்  ஒரு பொற் கொல்லரிடம் போய் அந்த தொழிலை தனக்கு கற்று தரக் கோரினால் அக்ககாலத்திலே அவ்வாறு கற்றுத் தர சம்மதித்து இருக்க மாட்டார்.

ஒரு சாதியை சேர்ந்தவர்கள், பிற சாதியை சேர்ந்தவர்களை மதிப்புடனும்

கவ்ரவத்துடனும்  மனிதனுக்கு மனிதன் என்ற வகையிலே அணுகி இருந்தால் சாதி அமைப்பு என்றைக்குமே ஒரு தொழில் ரீதியான பிரிவாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால் சாதி என்பது ஒரு பெருமைக்குரிய விடயமாக கருதப் பட்டு, மனிதம் பின்னுக்குத் தள்ளப் பட்டு விட்டது. தன்னுடைய சாதியை உயர்ந்த சாதியாக நிலை நிறுத்தினால், தான் ஆட்டமேடிக்காக உயர்ந்தவனாக கருதப் படுவேன் என்கிற ரூட்டை பாலோ செய்ய ஆரம்பித்தனர்.

ஆனால் ஆன்மீக வாதிகளோ, மனிதன் மனிதனாக வாழ வேண்டும், உயரிய மன  நிலைக்கு தன்னை  உயர்த்தி எல்லா மனிதர்களையும் அன்புடன் நோக்க வேண்டும் என்கிற கோட்பாட்டை வைத்து இருந்தனர். இதற்க்கு ஆன்மீகத்தையே ஒரு கருவியாக பயன் படுத்தினார்.

அவ்வகையிலே குறிப்பிட்டு சொல்லக் கூடியவர் மகான் இராமனுஜாச்சாரியார். இன்றைக்கு  21 ஆம் நூற்றாண்டிலேயே பலர் ஒப்புக்கு சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று மேடையிலே முழங்கி விட்டு, இறங்கி வந்து சாதிக் கணக்கு போட்டு செயல் படுவதைக் காணும் போது,

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த இராமானுஜரின் மனப் பூர்வமான சமத்துவம்  இணையற்றதாக உள்ளது.

உண்மையான ஆன்மீகம் மனிதர்களின் மனநிலையை உயர்த்தி அவர்களை சமத்துவத்தில் இணைக்கக் கூடியது என்பதை செய்து காட்டியவர் இராமானுஜர். அவர் அதை உணர்ந்து இருந்தார், உண்மையான பக்தியின் வலிமையை, சிறப்பை அவர் புரிந்து இருந்தார்.

 இத்தனைக்கும் கண்டிப்புக் காட்டியோ, கட்டளைகளைப் போட்டோ இராமானுஜர் தன்னுடைய கொள்கைகளை புகுத்தவில்லை. அமைதியான வழியிலே, அன்பு வழியிலே, அஹிம்சை வழியிலே  பூக்கள் மலர்வது போல மக்களின் மனங்களை மலர வைத்தவர் இராமானுஜ ஆச்சாரியார்.

(தொடரும்)

Title: இராம‌னுஜாச்சாரியார் ‍ ஆன்மீக‌த்தின் மூல‌ம் ச‌மத்துவ‌த்தை உருவாக்கிய‌ மாவீர‌ர் .

Advertisements

10 Responses to "இராம‌னுஜாச்சாரியார், ஆன்மீக‌த்தின் மூல‌ம் ச‌மத்துவ‌த்தை உருவாக்கிய‌ மாவீர‌ர்! (Part-1 )"

கரெக்டுங்க. ஆனா பாருங்க. இன்னைக்கு இராமானுஜரை வணங்குபவர்கள் வெறும் பிராமணர்கள் மட்டுமே? ஏன் மற்றவர்கள் அவரை வணங்கவில்லை? காரணம், பிராமணர்கள் அவரை வணங்குவதால், இல்லையா? 🙂

நன்றி திரு. சீனு அவர்களே,

இராமானுஜரை இன்றைக்கு தமிழ் நாட்டில் பலரும் அறிந்திருக்கவில்லை என்பது உண்மையே.

இரானுஜர் ஆன்மீகத்தை எல்லா மக்களிடமும் எடுத்து செல்வதில் காட்டிய முனைப்பை அவருக்கு பின் வந்தவர்கள் காட்டினார்களா என்பது ஆராயப் பட வேண்டிய ஒன்று. உண்மையான ஆன்மீகம் மனிதர்களை பக்குவப்படுத்தி உயர்த்துவதாக இருக்கும் என்பதே எனது கருத்து. அப்படிப்பட்ட உண்மையான ஆன்மீகத்தை தங்களுக்கு அளித்த ஒருவரை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள் என்றும் கருதுகிறேன்.

ஆன்மீகத்தையும், அதன் விளைவால் சமத்துவத்தையும் இராமனுஜர் பரப்பிய அளவிற்கு அவருக்கு பின் வந்தவர்கள் பரப்பாததே காரணமாக கருத இயலும். அதாவது இராமனுஜரின் பணி முழுமை அடையவில்லை.

என் கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே நீங்கள்!

அன்புக்குரிய திரு. சீனு அவர்களே,

//இன்னைக்கு இராமானுஜரை வணங்குபவர்கள் வெறும் பிராமணர்கள் மட்டுமே? ஏன் மற்றவர்கள் அவரை வணங்கவில்லை? காரணம், பிராமணர்கள் அவரை வணங்குவதால், இல்லையா? //

பிராமணர்கள் என்று சொல்லப் படுபவர்களைத் தவிர வேறு யாரும் இராமனுஜரை வணங்கவில்லை, ஏனென்றால் அவர்கள் இராமானுஜரைப் பற்றிக் கேள்விப்பட்டது கூட இல்லையே. கேள்விப்படாத ஒருவரை, தாங்கள் அறிந்திராத ஒருவரை அவர்கள் வணங்குவார்கள் என்று எப்படி எதிர் பார்க்கக் முடியும்?

பிராமணர்கள் என்று சொல்லப் படாத பலரை இராமானுஜர் தன்னுடைய ஆன்மீகப் பாதையில் இணைத்தார். அவர்கள் வழி வந்தவர்கள் இராமனுஜரை வணங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் இராமனுஜரின் காலத்துக்குப் பின் அந்தப் பணி விரிவுபடுத்தப் படவில்லை. அதனால் பெரும்பாலானோருக்கு இராமனுஜரை தெரியாது.

சரியா?

//பிராமணர்கள் என்று சொல்லப் படுபவர்களைத் தவிர வேறு யாரும் இராமனுஜரை வணங்கவில்லை, ஏனென்றால் அவர்கள் இராமானுஜரைப் பற்றிக் கேள்விப்பட்டது கூட இல்லையே. //

கேள்விப்படாததற்கு காரணம் என்ன? எது அவர்களை தடுத்தது?

சீனு அவர்களே,

அவர்களை யாரும் தடுக்கவும் இல்லை, யாரும் அவர்களிடம் சொல்லவும் இல்லை. இந்து மதத்தின் ஆன்மீக உண்மைகளை, ஆன்மீகத்தை மக்களிடம் யாரும் கொண்டு சேர்க்கவும் இல்லை.

வசதி, வாய்ப்பு, பணம், காசு, புகழ் ஆகியவற்றை மக்கள் தாமாக நாடி செல்வார்கள். ஆன்மீகத்தை பெரும்பாலானோர் நாடி செல்வதில்லை, அது தேவையா , உபயோகமா என்று அவர்களுக்கு தெரியாது. ஆன்மீகத்தினால் உபயோகம் இருக்கிறதா, அது எந்த அளவுக்கு மக்களுக்கு உதவும் என்று எடுத்து சொல்லக் கூடிய சுயநலமற்ற , காசு பண சுகங்களை நாடாத உண்மையான ஆன்மீகவாதிகள், மக்கள் ஆன்மீகத்தினால உருவாகும் அமைதியை உணரும் படி செய்தால் அப்போது மக்கள் புரிந்து கொள்வார்கள்.

இல்லை. நான் சொல்ல வந்தது, பிராமணர்கள் இராமானுஜரை இன்றும் வணங்குகின்றனர். அவர்கள் வணங்குவதால், தமிழ்நாட்டில் இயல்பாகவே(!) அவரை வணங்காமல் விடப்பட்டார் என்கிறேன்…

இராமானுஜரால் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைந்த பிராமணர்கள் அல்லாத பலரின் வம்சாவழியினர் இப்போதும் இராமனுஜரை வணங்கி கொண்டுதான் இருக்கின்றனர் என்று நான் கருதுகிறேன். தமிழ் நாட்டிலே பிராமணர் அல்லாத ஒருவர் கூட இராமானுஜரை வணங்குவது இல்லை என நீங்கள் சொல்கிறீர்களா?

//தமிழ் நாட்டிலே பிராமணர் அல்லாத ஒருவர் கூட இராமானுஜரை வணங்குவது இல்லை என நீங்கள் சொல்கிறீர்களா?//

வணங்குகிறார்கள். ஆனால், ஒப்பீட்டளவில் மிக மிக குறைவே…

(தெரிந்தவர்களுக்கு) ராமானுஜர் ஒரு வைணவ சாமியார் என்பதை தவிற மற்ற விஷயங்கள் தெரியாது. தெரிந்துகொள்ள முயற்சிக்காததும் பிராமணர்கள் இராமானுஜரை வணங்குவதால் என்கிறேன்.

அன்புக்குரிய திரு. சீனு அவர்களே,

இது உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளும் சமாதானம்.

இராமனுஜரின் ஆன்மீகத்தையும் அதனால் அவர் உருவாக்கிய சமத்துவத்தையும் அவருக்கு பின் வந்தவர்கள் எல்லோரிடமும் கொண்டு போகவில்லை என்பதை பலமுறை சொல்லி விட்டேன்.

சரியான ஆன்மீகத்தை எல்லா மக்களிடம் கொண்டு செல்லுவத்தின் மூலம், இராமனுஜர், சங்கரர், சைதன்யர், புத்தர் கபீர், நானக், இயேசு கிறிஸ்து, முகமது நபி …. உள்ளிட்ட அனைவரையும் பற்றிய புரிதலையும் , அறிதலையும் உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னால் முடிந்த அளவுக்கு நான் அதை செய்வேன்.

நம்பிக்கை உடையவன் செயலில் இறங்குவான். வெறுமனே சாப்பிட்டு சாப்பிட்டு பாத்திரத்தை அலம்பிக் கவிழ்த்துக் கொண்டிருப்பதால் பலன் இல்லை. நம்மிடம் உண்மையான ஆன்மீகம் இருந்தால் அதை அடுத்தவருக்கு தூண்டுதலாக செலுத்த வேண்டும். அதற்க்கு முதலில் சரியான ஆன்மீகத்தை நாம் பயில வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: