Thiruchchikkaaran's Blog

Author Archive


சிவன் கோவிலுக்கு போய்க் கும்பிட்டு வருவது, கூட்டமாக சேர்ந்து கோவிலில் தேவாரம் பாடுவது, வீட்டிலே தனிமையில் சிவலிங்கம் முன் தியானத்தில் அமர்வது… இது உங்களுக்கு போதுமா, அல்லது சிறப்பு நிகழ்ச்சி வேண்டுமா …அப்படியானால் உங்களுக்க்காக முக்கிய நிகழ்ச்சிகளை இங்கே தருகிறோம்!

சிவராத்திரியன்று தூங்கப் போகிறீர்களோ, சிவராத்திரி விரதம் இருக்கப் போகிறீர்களோ …கீழ்க் காண்பவற்றில் உங்களை அதிகம் கவர்ந்தது எது என்று சொல்லுங்கள் !

சிவ ராத்திரி

சிவ ராத்திரி

சிவ ராத்திரி

சிவ ராத்திரி

 

Advertisements

சங்கராச்சாரியார் யார், அவர் சொல்ல வந்தது என்ன, அதனால் நம் வாழ்க்கைக்கு என்ன உபயோகம்? – என்பது பெரும்பாலான இந்துக்களுக்கே தெரியாத நிலையில் வைத்திருப்பதுதான் இந்த மடங்கள் முக்கியமாக சாதித்தது!

நீங்கள் தமிழ் நாட்டில் பொது மக்களிடம் போய், சங்கராச்சாரியார் யார் என்று கேட்டால் ஜெயேந்திரர் என்பார்கள். கர்நாடகத்தில் போய்க் கேட்டால் சிருங்கேரி பீடாதிபதியைச் சொல்வார்கள்.

மொத்தத்தில் பெரும்பாலான இந்துக்களுக்கு,  1200 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் சங்கராச்சாரியார் என்று ஒருவர் இருந்ததோ,  அவர் இந்தியாவின் சமய சரித்திரத்தை மாற்றியதோ   தெரியாத நிலையில், அவருடைய கோட்பாட்டை அவர்கள் அறியும் வாய்ப்பு இருக்கிறதா?

உலகிலே பல  அறிஞர்கள் தோன்றியுள்ளனர். அவர்களை பின்பற்றி உருவான அமைப்புகள் அறிஞர்களின் கருத்துக்களையும்,  அறிஞர்களையும் நினைவு  படுத்துவதை அயர்வின்றி உற்சாகத்துடன் செய்து வருகின்றனர்.

மிகப் பெரிய இந்திய சமுதாயத்தின் போக்கை தனி ஒருவராக மாற்றி விட்டவர் சங்கராச்சாரியார். இப்படிப்பட்ட  ஒருவரின் கோட்பாடுகள் அவருடைய மதத்தை சேர்ந்தவர்களுக்கே போய்ச் சேராமல் பார்த்துக் கொண்ட சாதனை  உலகிலே வேறெங்கும் கிடையாது!

ஒன்று மவுன சாமியாராக அப்படியே இருப்பார்கள்…இல்லையென்றால்  சங்கராச்சாரியார் சொன்னதை விட்டு மிச்ச எல்லா வேலைகளையும் செய்வார்கள்!

எனவே சங்கராச்சாரியார் யார், அவர் சொல்ல வந்தது என்ன, அதனால் நமக்கு என்ன லாபம் என்பதைத் தளத்திலே எழுதுவதற்கு நாம் ஏன் தயங்க வேண்டும். இதை செய்ய வேண்டும் , எழுதவேண்டும் என்கிற உணர்வு தோன்றுவதாலே தொடர்ந்து எழுதுவோம்!

சத்யம் ஏவ ஜயதே – உண்மை மட்டுமே வெல்லும்! 

 


//நிற்க , இப்ப நம்ப விஜெயேந்திராள், தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது, அவாளும் சேர்ந்து பாடாம கண்ணை மூடிண்டு உட்கார்ந்து இருந்துட்டா. அது தியானம் என்று  மடம் அபீசியலா டிக்ளேர் பண்ண ,  அதுதான் மிகச் சிறந்த மரியாதை என்றும் பல பரிவார எழுத்தாளர்கள் சொல்ல- அப்ப அதே ரூல் தான் இஸ்லாமிய சகோதரருக்கும் அப்ளை ஆகும்//

வந்தே மாதரம்”  இந்தப் பாடலைக் கேட்கும்போதே,   முழு நிலவு தன்னொளி வீச, நறுமண மலர் பூத்த சோலையில்  நடந்து செல்லும் அமைதி உண்டாகும். ஒரே நேரத்தில் இனிமையையும் நம்பிக்கை உணர்வையும் மனதில் அள்ளித் தெளிக்கும் பாடல் இது, நம் நாட்டின் மீதான பெருமிதத்தை வெளிப்படுத்தும்.

இது என்னுடைய அனுபவம் . இதே எண்ணம் எல்லாருக்கும் வரும் என நான் எதிர்பார்க்க முடியாது. இந்தப் பாடலை எல்லோரும் பாடித்தான் ஆக வேண்டும் என நான் சொன்னால் அது   நாகரீகமாக எனக்குப் படவில்லை. இந்தப் பாடலைப் பாடுவதற்கு இஸ்லாமிய சகோதரர்களில் பலருக்கோ சிலருக்கோ சங்கடங்கள் இருக்கலாம்.

அதை இந்துவாக இருந்து நான் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். இஸ்லாமிய சிந்தனைகளில் மனம் ஆழமாக செல்லும் போதுதான் அதை என்னால் உணர முடியும்.

இஸ்லாமின் மிக முக்கிய கோட்பாடு “வேறு கடவுள் இல்லை, அல்லா ஒருவர்   மட்டுமே கடவுள்” என்பதாகும். “முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) கடவுளின் கடைசி தூதுவர்” என்பதும் அவர்களின் முக்கிய கோட்பாடாகும்.

இந்திய ஆன்மீக வாதிகள் எந்த ஒரு பொருளை எடுத்துக் கொண்டாலும்,  அது நிலையானதா, நிலையற்றதா (அநிக்கா, நிக்கா – அநித்யா, நித்யா) என்று இந்த இரண்டில் எந்த ஒன்று என்று பிரித்துப் பார்ப்பார்கள்.

ஆனால் இஸ்லாத்தில் இரண்டாகப் பிரிப்பது- படைத்தவன் – படைப்பு- என்பதாகும். எல்லாவற்றையும் படைத்தவன் ஒருவனே, அவனைத் தவிர மிச்ச எல்லாம் வெறும் படைப்புகளே என்று பிரித்துப் பார்ப்பார்கள். அப்படி எண்ணும் போது படைத்தவன் மீது அவர்களுக்கு மனதில் அந்த அளவு ஒரு அன்பும் மரியாதையும் , பக்தியும், மட்டுமல்ல அச்சமும் வரும். இவ்வளவு சிறப்புகளை உடைய படைத்தவன் ஒருவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவனாவான்.

மற்ற எதற்கும் வணக்கம் செலுத்துவது அவசியமில்லாதது, தகுதியில்லாதது, தவறானது, குற்றம், மிகப் பெரும் பாவம் என்பது இஸ்லாமியர்கள் உறுதியாக நம்பும் கோட்பாடு

அது மட்டும் அல்ல, ஏக இறைவனான அல்லவைத் தவிர மற்றொருவரை வணங்கினால் இறைவனுக்கு இணை வைத்த ஷிர்க் குற்றம் செய்தவர் ஆவர்.

அதற்க்கு தண்டனை என்னவென்றால் மறுமையில் நரகத்தில் அவர்கள் தோல்கள் கருக்கப் படும். புதிய தோல்கள் தரப்பட்டு அந்த தோலும் கருக்கப் படும்.மறுமையில் நரகத்தில் இருக்கும் நெருப்பானது, இங்கே இருக்கும் நெருப்பை போல அறுபது மடங்கு கொதிப்பாக இருக்கும். இதை எல்லாம் அப்படியே அப்பட்டமான உண்மையாக கருதி இறைவனுக்கு அஞ்சி வாழ்வது இஸ்லாம் ஆகும். 

இந்த வாழ்க்கை கொஞ்ச வருடம் , மறுமை வாழ்க்கை முடிவில்லாததது அப்ப முடிவில்லாதா நரக நெருப்பில் உடல் தினமும் கருகுமோ என்று அஞ்சிக் கொண்டு இருப்பவர்கள் பலர். என்னிடத்தில் வந்து உன்னை  நெருப்பில் கருக விட மாட்டேன் என்று அவர்கள் சொல்லும் போது , எனக்கே ஒரு வேளை இவங்க சொல்றது உண்மையா இருந்துட்டா என்ன ஆகும் என்கிற அச்சம் கண நேரம் தோன்றியது என்றால் அவர்களுக்கு எப்படி இருக்கும்?

இவர்களிடம்  போய் வந்தே மாதரம் பாடச் சொல்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இஸ்லாமியரின் மன நிலை என்ன என்று தெரியவில்லை என்றுதான் அர்த்தம். அப்படி அவர்களை கட்டாய படுத்தி வேறு வழியில்லாமல் பாட வைப்பதால் இவர்கள் அடைவது என்ன?

அதற்கு பதில் “நாம எப்படி அல்லாஹுத்த  ஆலாவை  மதிக்கிறோமோ அப்படித்தான் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவையும், பரமபிதாவையும், (கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மேரி மாதாவையும்) , இந்துக்கள் முருகன், சிவன், விஷ்ணு …உள்ளிட்ட பல கடவுள்களை மதிக்கிறார்கள். இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் தான் நம்பும் நம்பிக்கையின் படி நடக்க விடுவதுதான் நாகரீகம், பிற மதக் கடவுள் வழிபாட்டை வெறுக்காமல் மதிக்க வேண்டும்என்கிற நல்லிணக்க மனநிலையை இஸ்லாமிய சிந்தனையாளர்கள் பெற்று அதை பிரச்சாரம் செய்தால் அனைவரும் அவர்களை ஆரத் தழுவுவர். இந்த பிரச்சாரத்தை இந்திய இஸ்லாமிய சிந்தனையாளர்கள் மற்ற நாட்டுக்கும் பரப்பினால் உலகம் முழுமைக்கும் நல்லது. இதற்கான கல்வித் திட்டத்தை உருவாக்க வேண்டும். பள்ளிகளில் எல்லா மதத்தினரின் வழி பாட்டுத் தலங்களையும் சிறிய அளவிலாவது கட்டுங்கள். பெரியாரின் சிலையும் வைத்து கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் இடம் கொடுங்கள். இது நாகரீகம், பண்பாட்டை உருவாக்கும்.   மத, இன , மொழி, வர்க்க, சாதி பேதங்களை விட்ட நட்பை உருவாக்கும்.

இதைச் செய்யாமல், வந்தே மாதரம் பாடுங்கள் என்று கட்டாயப்படுத்தி என்ன பலன்? அவர்கள் “படைத்தவனை வணங்குங்கள் , படைப்புகளை வணங்காதீர்கள்” என்று அவர்களுக்கு தெரிந்ததை பேனராக எழுதி வைத்துக் கொண்டு இருப்பார்கள். அது மட்டும் அல்ல, இவன் என்ன சொல்றது, நாம என்ன கேட்கிறது, இவன் என்ன கடவுளின் தூதுவனா என்கிற ஆவேசமும் அவர்களுக்கு வரக் கூடும்!

நிற்க , இப்ப நம்ப விஜெயேந்திராள், தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது அவாளும் சேர்ந்து பாடாமல் கண்ணை மூடிண்டு உட்கார்ந்து இருந்துட்டா. அது தியானம் என்று  மடம் அபீசியலா டிக்ளேர் பண்ண  , அதுதான் மிகச் சிறந்த மரியாதை என்றும் பல பரிவார எழுத்தாளர்கள் சொல்ல, நம்ப அஞ்சா நெஞ்சன் அடலேறு ராஜா ஜி யும் அதையே சொல்லிட்டார். அப்ப அதே ரூல் தான் இஸ்லாமிய சகோதரருக்கும்  அப்ளை ஆகும்.

அதனால நம்ப ராஜா உடனடியாக பரிவார இயக்கங்கள் அனைவரிடமும் சொல்லி இனிமேல் வந்தே மாதரம் பாடச் சொல்லி யாரையும் கட்டாய படுத்தக் கூடாது என்று பரிவாரங்களின் கட்டப் பஞ்சாயத்து கெஜட்டில் வெளியிட வேண்டும்.

இன்றைக்கு விஜேயேந்திராள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிக்காமல் கண்ணை மூடி உட்கார்ந்து இருந்ததும், அதற்க்கு மடம் கொடுத்த விளக்கமும் எல்லாருக்கும் செல்லும் அண்ணா !

 

 


இசை ஞானி இளையராஜா அவர்களுக்கு பத்ம விபூஷண் பட்டம் கொடுக்கப் பட்டுள்ளது, தமிழர் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும் விடயம் ஆகும்.

அவருடைய இசையைப் பற்றி எழுதும் தகுதியோ ஞானமோ எனக்கு இல்லை. ஆனாலும் எனக்குப் பட்டதை எழுதுகிறேன்.

எம்.எஸ்.வி அவர்களை அடுத்து தமிழ் திரை உலக இசை சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி பதவியை இளையராஜா ஆண்டார். எம். எஸ். வி அவர்கள் அதிகம் கவனம் செலுத்தியது லைட் ம்யூசிக்கில். இளையராஜாவின் சிறப்பு என்னவென்றால் நாட்டுப் புற பாடல்கள், வெஸ்டர்ன் ம்யூசிக் , கர்நாடக சங்கீதம்  மூன்றிலும் கோலோச்சினார் இளையராஜா!

தமிழ் நாட்டின் ஆன்மீகத்தோடு கலந்த இசை  மரபை மிக சரியாக தொடர்ந்தவர் இளையராஜா அவர்கள்.

 

Folk :

Light music:

Carnatic

 

இசை ஞானி இளையராஜா வாழ்க !

 

 

 


எனக்கு இந்த அமைப்பின் மீது கோபம் இருக்கலாம். நான் ஏமாற்றப் படுவதாக கருதலாம். ஆனால் நான் இந்த அமைப்பின் ஒரு அங்கம் , இதை மாற்றவும், முன்னேற்றவுமான வாய்ப்பு எனக்கு இருக்கிறது.

என் தாய் நாடுதான் எனக்கு கல்வியை, வேலை வாய்ப்பை தந்தது , அமைதியான சூழ்நிலையை , பாதுகாப்பை தருகிறது.

130 கோடி மக்கள் வாழும் நம் நாடு பல்வேறு சவால்களை பிரச்சினைகளை எதிர் நோக்கி இருக்கலாம்.

சகோதரர்களாக அனைவரும் இணைந்து சவால்களை எதிர் நோக்குவோம், இந்திய நாட்டின் குடியரசு தின விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்

நம் அனைவருக்கும் வெற்றி, வெற்றி, வெற்றி

 


கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சண்டை போடுவதற்க்காக ஆக்கி அதில் உங்கள் சக்தியை எல்லாம் விரயம் செய்கிறீர்கள் என்றார் ஒரு அறிஞர்.

விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதிக்கும் நோக்கோடு உட்கார்ந்து இருந்தாரா, அல்லது நிஜமாகவே வேறு ஏதாவது சிந்தனைக் குவிப்பில் ( அதாவது தியானத்தில்) இருந்தாரா என்று சொல்ல முடியாது. யாரோ ஒருத்தன் கிடைச்சான் வந்து குமுறுங்க என்று வடிவேலு படத்தில் சொல்லுவது போல ஆளாளுக்கு கணடனம், வசவு..என்று பின்னி எடுக்கிறார்கள்

நானே சிலமுறை (அலுவலக) மீட்டிங்குகளில் தூங்கியிருக்கிறேன். அயற்சியால் மேடையில் தூங்குவது / கவனம் மாறுவது அவ்வப் போது நடை பெறுவதுதான், இதில் பெரிய தவறு ஒன்றும் இல்லை.

இதை நாம் எழுதுவதால் நாம் விஜேயேந்திரரை ஆதரிக்கிறோம் என்று இல்லை.  ஆனால் ஒரு அன் இன்டென்சனல் செயலுக்காக ஒருவரைக் குமுறுவது சரியல்ல என்பது நமது கருத்து.

 

 


தமிழகத்தை சேர்ந்த பார்ப்பனர்கள் தங்களை அறிவாளிகள் என்று தாங்களே கருதிக் கொண்டாலும் சரி, அல்லது வேறு யாரவது அவர்களை அப்படி கருதினாலும் சரி, இன்றைய கால கட்டத்தில் அவர்கள் பரிவாரங்களிடம் வாங்கியிருக்கும் பல்பு, அவர்கள்  உலக்கைக்கு கொழுந்து முளைத்த நிலையிலே இருப்பதைத் தெளிவாக்கும்!

தமிழ் நாட்டில் பலரின் வசவுக்கும் கிண்டலுக்கும் உள்ளான பார்ப்பனர்களிடம் அவர்கள் அறிந்தோ அறியாமலோ ஒரு நல்ல பண்பு இருந்தது , அது என்னவென்றால் பிற மதத்தினரை வெறுக்காத, பிற மதங்களை இகழாத மத நல்லிணக்க பண்பு.

இது இந்துக்களில் பெரும்பாலோர் பெற்றிருக்கும் பண்பு.

வட இந்தியாவில்   இந்துக்களின் இந்த மத நல்லிணக்கப் பண்பை அழிப்பதில் பரிவார இயக்கங்கள் கணிசமான வெற்றியைப் பெற்று வருகின்றன. வட இந்தியாவில் இந்துக்களின் மனதில் மத நல்லிணக்க ஓட்டத்தை, பரிவார இயக்கங்கள் ஒரேடியாக அழித்து விட முடியாது, மாறாத நல்லிணக்க மலர்கள் மீண்டும் பூக்கும் என்றே கருதலாம், ஏனெனில் இந்து மதத்தின் அடிப்படைகளில் முக்கியமான ஒன்று மத நல்லிணக்கமாகும்.

நிற்க, தமிழ் நாட்டில் பெரும்பாலான இந்துக்களின் வீட்டில் தாய்மார்கள் பிள்ளைகளுக்கு பிற மதங்ககளின் மீது மரியாதையுடன் நடந்து கொள்ளும் நல்லிணக்க பண்பை வூட்டி வளர்க்கிறார்கள். பெரும்பாலான பார்ப்பனர்  வீடுகளிலும்ள அப்படியே.

ஆனால் சமீப காலமாக பரிவார இயக்கங்களின் மூளைச் சலவைக்கு அடிமையாகி பரிவார இயக்கங்கள் வெளியிடும் வெறுப்புணர்ச்சிக் கருத்துக்களை அப்படியே பார்வேர்ட் செய்வதில் பார்ப்பனர்கள் “பார்வேர்டாக” இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

வட இந்தியாவில் இருந்து காலங் காலமாக இந்து மதத்தின் பேரால் பரப்பப் படும் ஆவேச அடாவடி கற்பிதங்களை மறுப்பதிலும், எதிர்த்து மென்மையான உண்மையான இந்து மதத்தை முன் வைத்து செயல் படுவதிலும் முக்கிய பங்காற்றியவர்கள் தென்னிந்திய இந்துக்கள். இதில் முக்கிய மத நல்லிணக்க கர்த்தாக்களை ஆதரிப்பதில் தென்னிந்திய தமிழக பார்ப்பனர்ககளும் முனைப்புடன் செயல் பட்டனர்

இன்றைக்கு பரிவார இயக்கங்களின் கைப் பாவையாகி,தங்களின் அடிப்படைகளை தாங்களே கைவிட்டு வெறுப்புணர்ச்சி கொள்கைகளுக்கு சாமரம் வீசும் இவர்கள் பரிவார இயக்கங்களிடம் பல்பு வாங்கி விட்டார்கள் என்றால் அது மிகையாகுமா?

இந்த பல்பு அவர்கள் எப்போது ஆன்மிகம் என்பது சிந்திப்பதில், நிமிர்ந்து நிற்பதில் ஆரம்பிக்கிறது என்பதை விட்டு, கண்ணை மூடிக் கொண்டு அங்க வஸ்திரத்தை அவிழ்த்து இடுப்பில் கட்டிக் கொண்டு நெடுஞ்சாண் கிடையாக விழ ஆரம்பித்தார்களோ அப்போது வாங்க ஆரம்பித்த பல்பு  என்பதை அவர்கள் உணர்வார்களா?
.


Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements