Thiruchchikkaaran's Blog

ஆதாரம் கேட்கிறோமா?

Posted on: September 16, 2010


  நாம் ஆதாரம் கேட்டு (கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம் கேட்டு)  தொல்லைப் படுத்துவதாக சில அன்பு நண்பர்கள் வருத்தப் படுகிறார்கள். நான் யாரையும் தொல்லைப் படுத்தவில்லை.

எல்லோரும் அவரவர் மனதுக்கு விருப்பமான கடவுளை அமைதியான முறையில்  வணங்கும்போது நான் யாரையும் எதையும்  கேட்கவும் இல்லை, இன்னும் சொல்லப் போனால் நீங்கள் யாரைத் தொழுதாலும், நானும் நல்லிணக்க அடிப்படையில் தொழுகையில் , பிராத்தனையில் கலந்து கொள்கிறேன்.

உங்கள் ஆலயத்துக்கு நான் வந்து உங்கள ஆலயத்தை நான் சுத்தப் படுத்தி தருகிறேன். நீங்கள் வணங்கும் முறையிலே நானும் வணங்கிக்  கொள்கிறேன் என்கிறோம், இது மனப் பூர்வமான  மத நல்லிணக்க செயல்.

ஆனால் சில நண்பர்கள் தங்களை அறியாமலே சில இனவாத  வெளி நாட்டினரின் சகிப்புத் தன்மை இல்லாத  மத வெறிக்  கொள்கைகளுக்கு பலியாகி விடுகின்றனர். அவர்கள சொல்லியதை அப்படியே கேட்டுக் கொண்டு நம்மிடம் வந்து அவர்கள சொல்லும் கடவுள் மட்டும் தான் ஜீவனுள்ள கடவுள், மத்த கடவுள்கள் பொய்யானவை என்கிற வெறுப்பு பிரச்சாரத்தை, விஷப்  பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர் . 

உங்கள  கடவுள்  உண்மையானவர் என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு.மத்த கடவுள்கள் பொய்யானவை என்று சொல்ல உரிமையும் இல்ல, அது சமூகத்தில் மோதலை உண்டு பண்ணும், சமூக  விரோத , மக்கள்  விரோத  கருத்தே.

அந்த அளவுக்கு பிற மதங்களை இகழ்ந்து வம்பு செய்ய வேண்டும் என்று துடிக்கிறீர்களே, உங்கள் கடவுள் மட்டும் தான் உண்மையான கடவுள் என்றால், அதை நிரூபியுங்கள், முதலில் கடவுள் ஒன்று இருப்பதை நிரூபியுங்கள, பிறகு நீங்கள் கூறுவதுதான் உண்மையான கடவுள் என்பதையும் நிரூபியுங்கள்.

அப்படி ஆதாரம் இல்லாத, நிரூபணம் இல்லாத பட்சத்தில் வெறும் யூகத்தின் அடிப்படையில் செய்யப் படும் வெறுப்பு பிரச்சாரத்தை சமூக விரோத மத வெறிப் பிரச்சாரத்தைக் கை விடுங்க என்று கேட்டுக் கொள்கிறோம்.

அதோடு உண்மையிலே கடவுள் என்று ஒருவர் தனியாக இருக்கிறாரா என்கிற ஒரு கேள்வியானது  உலக மக்கள் பலரின்  மனதில் எழுவது போல என்னுடிய மனதிலும் எழுகிறது. அது  உண்மையை அறிய விரும்பும் ஒரு சிந்தனையாளனின் நேர்மையான கேள்வி. அந்தக் கேள்விக்கு விடை காண மனக் குவிப்பு பயிற்சி முதலான பல்வறு பயிற்சிகளில் ஈடுபடுகிறோம். இந்தக் கேள்வி யாரையும் சங்கடப் படுத்தவோ, தொல்லை கொட்க்கவோ கேட்கப் படவில்லை. அதனாலேயே நாம் எந்த தெய்வத்தையும் இகழவில்லை,  காரணம் இல்லமால் விமரிசிக்கவில்லை. நல்லிணக்க அடிப்படையில்  எல்லோரும்  தெய்வங்களாக வணங்குபவர்களை நாமும்  வணங்கத் தயாராக இருக்கும் அளவுக்கு, சமரச சமத்துவ நாகரீகப் பண்பை கடைப் பிடிக்கிறோம்

மேலும் கடவுள் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் என்று நம்மைக் கேட்கிறார்கள். என் கையில் பணம் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் தர முடியும், என் உள்ளங்கையை விரித்துக் காட்டலாம், பணம் இல்லை . இல்லை அவ்வளவுதான். எனவே ஆதாரம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு தான். இதை ஒரு எடுத்துக் காட்டாக சொல்கிற வேளையிலே நாம் முன்பே சொன்னது போல நாம் அவசரம் அவசரமாக கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கான சாத்தியமே இல்லை என்று அடித்து ,  அறுதி இட்டு , இறுதியாக  சொல்லவில்லை.  கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்று ஆராய்கிறோம். அதில் நிரூபிக்கப் படக் கூடிய வகையில் யாரும் இது வரை ஒரு வலையை சொல்லாததால் , நிரூபிக்காத ஒன்றை வைத்து இங்கே மனிதர்களுக்கு இடையில் கலகத்தை உருவாக்க வேண்டாம், அமைதியாக வழி படுங்கள் என்று பண்போடு சொல்லுகிறோம்.

  

பகுத்தறிவாளர்களுக்கு மற்றவர்களை விட பொறுப்பும், நிதானமும், எச்சரிக்கையும் அவசியமாகும்.

ஒவ்வொரு வார்த்தையையும் பகுத்தறிவாளன் மிகவும் யோசித்தே, பலமுறை சிந்தித்தே கூற வேண்டிய நிலை உள்ளது.

ஏனெனில் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு செயல் படுபவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. என்ன வேண்டுமானாலும் கூறலாம்.  கேட்டால் “எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்பார்கள்,“நான் சாட்சி குடுக்கிறேன்”, என்பார்கள்.  நேரிலே பார்த்து கை குலுக்கி விட்டு வந்தது போல, அவ்வளவு உறுதியாக சொல்வார்கள்.

ஆனால் பகுத்தறிவுவாதி நேர்மையானவன். அவன் தன்னால் முடிந்த வரைக்கும் உண்மையைத் தேடுவான். தெரிந்த வரையில் கண்டதைக் கூறுவான்.

“கடவுள் இருக்கிறார் என்பதை இது வரை யாரும் எனக்கு காட்டவில்லை. எனவே கடவுள் இருப்பதை ஆதாரம் காட்டி நிரூபிக்காதவரை கடவுள் இருக்கிறார் என்பதை நாம் ஒப்புக் கொள்ள முடியாது” என்பதே சரியான பகுத்தறிவு என்பது எனது தாழ்மையான கருத்து.

அதே நேர‌ம் க‌ட‌வுள் இல்லை என்று கூறும் க‌ருத்து சுத‌ந்திர‌ம்  வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வேண்டும். பார்க்காத‌ க‌ட‌வுளை, இருக்கிறார் என்று அடித்து சொல்லும் போது – பார்க்காத‌ க‌ட‌வுளை,  பார்க்க‌வில்லை என்று கூற‌ அனும‌தி இல்லையா? இதைக் கூறினால் தண்ட‌னை!

பகுத்தறிவுவாதி, “கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?” என்று அறிய தொடர்ந்து ஆராய்ச்சி செய்வான். அதில் தவறில்லை. நாம் ந‌ம்பிக்கை வாதிகளை விட‌ நேர்மையாக‌ இருப்பொம்.

20 Responses to "ஆதாரம் கேட்கிறோமா?"

நம்ம (திருச்சி)ஊரா? நீ வீடு எங்க? இருக்கு.

உறையூர், அண்ணே !

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற கேள்வி சாகாவரம் பெற்ற கேள்வி. மனித இனம் இருக்குமட்டும் இருக்கப்போகும் கேள்வி. இதற்குப் பதிலும் என்றும் கிடைக்கப்போவதில்லை.

தளத்தைப் பார்வை இட்டு கருத்துப் பதிவு இட்டதற்கு மிக்க நன்றி ஐயா. இரத்தின சுருக்கமாக சொல்லி இருக்கிறீர்கள்.

// “கடவுள் இருக்கிறார் என்பதை இது வரை யாரும் எனக்கு காட்டவில்லை. எனவே கடவுள் இருப்பதை ஆதாரம் காட்டி நிரூபிக்காதவரை கடவுள் இருக்கிறார் என்பதை நாம் ஒப்புக் கொள்ள முடியாது” என்பதே சரியான பகுத்தறிவு என்பது எனது தாழ்மையான கருத்து. //

அப்படியானால் உங்கள் புராணக் காலக் குப்பைகளையெல்லாம் தூக்கி கடலில் எறிந்து அங்கேயே ஒரு முழுக்கு போட்டுட்டு வாருமையா…பெறவு பேசுவோம்..!

அதுக்கு வெளக்குவொறை பொலிப்புவொறையெல்லாம் சொல்லிண்ட்ருக்காதேள்…சாமியோவ்……………..!

தளத்தைப் பார்வை இட்டு உங்களின் மேலான கருத்துக்களைப் பதிவு செய்ததற்கு நன்றி திரு. சில்சாம் அவர்களே,

புராணத்துக்கு நம்மிடம் விளக்கம் கேட்கிறார்கள். அதற்க்கு பதில் சொல்லாவிட்டாலும் திட்டு, சொன்னாலும் திட்டு.

பார்ப்பவன் குருடனடி, படித்தவன் மூடனடி, உண்மையை சொல்பவனே உலகத்தில் பித்தனடி என்னும் பாடலே நினைவுக்கு வருகிறது.

//“கடவுள் இருக்கிறார் என்பதை இது வரை யாரும் எனக்கு காட்டவில்லை. எனவே கடவுள் இருப்பதை ஆதாரம் காட்டி நிரூபிக்காதவரை கடவுள் இருக்கிறார் என்பதை நாம் ஒப்புக் கொள்ள முடியாது”//

இதுல யாரும் – ங்கிற சொல் யாரோ ஒரு கடவுள் முகவரா ?

இவர் தான் கடவுள் என்று காட்டப்படுவர்களையே கடவுள் ஏற்பாளர்கள் நம்புவதில்லை. எந்த ஒரு இஸ்லாமியரிடமு ஏசு கடவுள் என்று சொன்னால் ஏற்கமாட்டார்கள், ஆனால் ஏசு கிறித்துவர்களுக்கு கடவுள். இதுல நாத்திகன் கடவுளை நம்பவேண்டும் என்பதும் அவன் ஏன் நம்பவில்லை என்பதற்கு சுய விளக்கம் இப்படித்தான் கொடுக்க வேண்டும் என்று வரையறுப்பது இவையெலலம் அறியாமை.

இன்னும் எளிமையாகச் சொல்லப் போனால் உலகத்தில் எந்த ஒரு நம்பிக்கையாளரும் நாத்திகரே ஏனென்றால் அவர் பிற மதக்கடவுளின் மறுப்பாளர்களாகத்தான் இருக்கிறார்கள். சும்மா வாதத்திற்கு வேண்டுமானால் எல்லாக் கடவுளும் ஒண்ணு அல்லது கடவுள் என்று இருந்தால் அவர் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்பதெல்லாம். நடைமுறையில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசிலர் தவிர அனைத்து நம்பிக்கைகளும் ஒன்றே என்று பார்பவர் குறைவு. எல்லா நம்பிக்கையும் சரி என்று ஆத்திகனும், எல்லா நம்பிக்கையும் தவறு என்கிற நாத்திகனும் அடிப்படையில் மனித நேயம் ஒன்றை மட்டுமே வழியுறுத்துகிறார்கள். இவர்களில் (நல்ல நாத்திகர் மற்றும் நல்ல ஆத்திகர்) இவர் தான் சிறந்தவர் என்று கூறுவதும் மடைமை.

*********

உங்கள் இடுகைகளை தொடர்ந்து படித்துவருகிறேன். லேசான இந்துத்துவ தீய்ந்தவாசனை அடித்தாலும் அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் எழுத்துகள் நன்றாகத்தான் இருக்கிறது. நல்ல சிந்தனை ஊறும் நீங்கள் இந்துத்துவத்திற்கு வக்காலத்துவாங்கி அதிலிருந்து மீள முடியாத வட்டத்தை நீங்களே போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். அவை வெறும் மனத்தடைதான் உடைத்து எரிய முடியும்.

பழைமை வாதத்தை புனிதமாகக் கருதி அவற்றைப் புறக்கணிக்க முடியாமல் சிக்கிக் கொள்ளும் போது நம்மால் அவற்றை எதிர்த்து எதையும் எழுதிவிட முடியாது. இது போன்ற மனத்தடைகள் பலருக்கும் உண்டு, ஆன்மிகத்திற்கும் மதவாதத்திற்கும் வேறுபாடு தெரிந்தால் அவற்றை கடந்து வரமுடியும்.

நல்வாழ்த்துகள்

அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய சகோதரர் கோவி .கண்ணன் அவர்களே,

தளத்தைப் பார்வை இட்டு உங்களின் மேலான கருத்துக்களைப் பதிவு செய்ததற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்து மதம் மட்டும் அல்லாது, கிறிஸ்தவ,இசுலாமிய, பவுத்த மதங்களிலும் பல உயரிய கருத்துக்கள் சொல்லப் பட்டுள்ளதாகவே கருதுகிறேன். அவற்றை அவ்வப் போது மேற்கோள் காட்டி மக்கள் சமுதாய நன்மைக்கு பாடுபடுகிறோம்.

சுவாமி விவேகானந்தர் சென்னையிலே பேசியபோது அவர் நாத்தீக கருத்துடைய நண்பர்களைப் பார்த்து ” நான் சகோதர ரீதியில் உங்களுக்கு சொல்வது என்னவென்றால், மனிதனின் மனதில் பலவீனம் என்று ஒன்று இருக்கும் வரையில் கடவுள் என்கிறதை வைத்துக் கொண்டும், நம்பிக் கொடும் தான் இருப்பார்” என்றார்.

வலியால் துடிக்கும் போது அழும்போது அழைக்கவும், தன்னை கண்ணுக்குத் தெரியாத ஒருவர் காப்பார் என நம்பவும், பலவீனமான மனிதனுக்கு ஒருவர் தேவை. எனவே உலகில் பெரும்பாலோர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் ஆக உள்ளனர். ஆனால் இந்த நம்பிக்கை மத நம்பிக்கை ஆகி, அடித்துக் கொண்டு சாகும் வரை சென்று விடுகிறது.

உலகில் உள்ள எல்லா மக்களும் நல்லிணக்கப் பாதைக்கு வந்தால உலகில் உள்ள முக்கால வாசி பிரச்சினைகள் தீர்ந்து விடும். எல்லா மதத்தவரிடமும் நல்லிணக்கத்தைப் பரப்புவதே நம்முடைய முக்கிய குறிக்கோளாக வைத்து செயல் படுகிறோம்.

உங்களின் வருகை தளத்துக்கு பெருமையாகும். உங்களின் அறிவுரைகளை மனதில் வைப்போம்.

யோவ் இப்போ மன்னார்புரம் வெங்கடேஸ்வரா தியேட்டர்ல என்ன படம் போட்டிருக்கான்? (சிராக்கோ போட்டா சொல்லுய்யா!)

யப்பா, சொந்த வூரு காரங்க லொல்லூ தாங்க முடியலைடா சாமி. ஜன்க்சனை ஒட்டிய மன்னார்புரத்தில் சி. எல்.சி காம்பவுண்ட் பகுதியில் பல மாதங்கள் வசித்து இருக்கிறேன். அங்கே பல அன்புள்ள, யாருக்கும் தீங்கு செய்யாத பல பன்னி குட்டிகள் அலைவதும் உண்டு.

சரி விடுப்பா, கல்கண்டார்கோட்டை மேகலாவுல என்ன ஓடுதுன்னாவது சொல்லுப்பா!

இங்க வந்து பாருங்கப்பு…நம்ம ஊரப் பத்தின விஷேசமான மேட்டர் ஒன்னு போட்டிருக்கேன்!
http://shilppakumar.blogspot.com/2010/06/18_11.html

//உங்களின் வருகை தளத்துக்கு பெருமையாகும். உங்களின் அறிவுரைகளை மனதில் வைப்போம்.//

மன்னிக்கவும் அறிவுறைகள் எதையும் நான் சொல்லுவதில்லை. நான் கூறியவை உங்கள் எழுத்துக்களின் மீதான விமர்சனம் மட்டுமே.

தமிழ் ஹிந்து தளத்திலும், இங்கும் உங்கள் எழுத்துக்களை படிக்க நேரிட்டது, அவற்றை ஒப்பு நோக்குகையில் ‘ஹிந்து’ உணர்வில் மேம்பட்டு ஆன்மிகம் எழுதுகிறீர்கள் என்பதாக நினைத்தேன்.

நான் பொதுவாக மதவாதிகளுக்கும் மதவெறியர்களுக்கும் ஒரே ஒருவேறுபாடு தான் சொல்லுவேன். கையில் தீவட்டி வைத்திருந்தால் மதவாதி, அப்போது அங்கு கலவரசூழல் ஏற்பட்டால் மாற்று மதத்து வீட்டுக்காரன் வீட்டின் மீது அதே தீவட்டியை வீசி எரியும் போது அவன் மதவெறியன். மதவாதி, மதவெறியன் இந்த இரண்டு பேருக்கும் நடுவில் அங்கிருக்கும் புறச் சூழல் மட்டுமே வேறுபாடு.

நன்றி, நண்பர் திரு. கோவி .கண்ணன் அவர்களே,
என்னைப் பொறுத்தவரையில் என் மீதான விமரிசனங்கலே எனக்கு அறிவுரையாகவும அமைந்து விடுகின்றது.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் முழுப் பாது காப்பு, சம வாய்ப்பு வழங்கப் பட வேண்டும் யாரும் அவரது மொழி, இன, மத, பிராந்திய, வர்க்க, சாதீய வேறுபாடுகளின் காரணமாக அச்சுறுத்தப் படவோ, நிராகரிக்கப் படவோ கூடாது என்பதுவும் நமது முக்கிய கொள்கை. இதில் உறுதியாக இருக்கிறோம்.

தமிழ் ஹிந்துவில் நாம் எழுதுவது நாம் இந்த தளத்தில் எழுதுவதும் பெரும்பாலும் ஒன்றுதான். பல நேரங்களில் தமிழ் ஹிந்து தளத்திலும், பிற தளங்களிலும் எழுதியதை அப்படியே எடுத்து இங்கே கட்டுரையாகப் போட்டு இருக்கிறோம். உதாரணமாக பகுத்தறிவு என்ற தலைப்பில் இங்கே உள்ள கட்டுரையானது முதலில் சகோதரர் மதிமாறன் தளத்திலும், பிறகு தமிழ் ஹிந்துவிலும் நான் பின்னூட்டமாக எழுதியது.

தமிழ் ஹிந்து தளத்தில், நான் இயேசுவின் கொள்கைகளில் உள்ள நல்ல விடயங்களை அப்போது அங்கே எழுதிய போது பலரும் என்னை கிரிப்டோ கிறிஸ்துவன் என்று அங்கே திட்டினார்கள். அதற்காக நான் என் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அதே போல இந்து மத்தில் உள்ள நல்ல விடயங்களை எடுத்து சொல்ல தயங்க வேண்டியதில்லை என்றே நான் கருதுகிறேன்.

உலகில் உள்ள மதங்களில் மத சகிப்புத் தன்மையிலும், மத நல்லிணக்கத்திலும் இந்து மதம் முன்னணியில்
நிற்கிறது. இந்து மதத்தில் உள்ள எந்த ஒரு கடவுளும் பிற கடவுள்களை வணங்கக் கூடாது என்று சொன்னதாகவோ, இகழ வேண்டும் என்று சொன்னதாகவோ இல்லவே இல்லை. இந்து மத முக்கிய தத்துவங்களில் பிறர் வணங்கும் கடவுள்களை இழிவு செய்யத் தூண்டும் கருத்துக்கள எதுவும் இல்லை.

நீங்கள் கருமாரி அம்மனை வழிபடுபவரையோ, அல்லது முருகனை வழிபாடு செய்பவரையோ கவனித்துப் பாருங்கள் , அவர்கள அமைதியாக தங்கள் குடும்ப த்துக்கு நன்மை செய்யுமாறு வேண்டுகிறார்கள்.

மேல் மருவத்தூர் அம்மன் வழி பாட்டுக் குழுவோ, சபரி மலைக்கு மாலை போட்டுக் கொள்ளும் குழுவோ தங்கள் கடவுள் மட்டுமே உண்மையான கடவுள் என்றோ, பிறர் வணங்கும் கடவுள்கள் பொய்யானவை , சாத்தான்கள் என்றோ சொல்கிறார்களா? அப்படி நினைத்துக் கூடப் பார்ப்பது இல்லை. இவ்வளவு சிறப்பான அமைதியான சகிப்புத் தன்மையும், அரவணைக்கும் தன்மையும் உள்ள ஒரு போக்கை இந்து மதம் தந்து இருக்கும் போது அதை பாராட்டி அந்த நல்லிணக்கத்தை முன்னெடுத்து செல்வது அவசியம் இல்லையா?

மத வெறியர்கள் என்று வெறுமனே திட்டிக் கொண்டு இருப்பதோடு என்னுடைய பணி முடிந்து விட்டதாக எண்ணவில்லை. இந்து, கிறிஸ்துவ, முஸ்லீம் மார்க்கத்தினர் எல்லோருடனும் என்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு , எல்லா மதங்களிலும் மத நல்லிணக்கத்துக்கான கருத்துக்கள உள்ளதை சுட்டிக் காட்டி அதை முன்னிலைப் படுத்துவதே நம் பணி. மத வெறி தீ பரவாமல் தீயை அணைப்பதே நாம் செய்யும் பணி.

இந்து அடிப்படை வாதிகள் என்னைக் கிறிஸ்தவர்களிடம் காசு வாங்கிக் கொண்டு எழுதுபவன் என்று வைகிறார்கள். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த சில நண்பர்களோ என்னை இந்து அடிப்படை வாதி என்கிறார்கள். இசுலாத்தை ஏன் விமர்சிக்கவில்லை என்கிறார்கள்.

நாம் நம்முடைய கொள்கையிலும் செயல் பாட்டிலும் தெளிவாக இருக்கிறோம்.

சமத்துவ, சமரச, நல்லிணக்க, நாகரிக சமுதாயம் அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தி எழுதுகிறோம். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் காக்கப் பட வேண்டும், மரியாதையுடன் நடத்தப் பட வேண்டும். வன்முறை கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இது மத வாதமா?

உலகில் மக்களில் பலர் இராமர், புத்தர், இயேசு, அல்லாஹ், காந்தி ஆகியோரின் அன்பையும், கருணையும் தியாகத்தையும், சுயநலமற்ற உழைப்பையும் புரிந்து கொண்டு இவர்களை மரியாதையுடன் நோக்கினாலே உலகில் உள்ள பல பிரச்சினைகள் தீர்ந்து விடு ம் என்கிற கருத்தை முன் வைக்கிறோம். இது மத வாதமா?

இந்தக் கட்டுரையில் எழுதப் பட்டுள்ள //உங்கள் ஆலயத்துக்கு நான் வந்து, நீங்கள் வணங்கும் முறையிலே நானும் வணங்கிக் கொள்கிறேன் என்கிறோம், இது மனப் பூர்வமான மத நல்லிணக்க செயல்// என்ற கருத்தை பல முறை தமிழ் இந்துவில் என்னுடைய பின்னூடங்களில் பதிவு இட்டு இருக்கிறேன். இதுதான் ‘”இந்து உணர்வு”‘ மேம்பட்ட ஆன்மீகமா? அப்படி என்றால் இருந்து விட்டுப் போகட்டுமே. உலகில் என்றைக்கும் சமாதானத்தை நிலவச் செய்யும் கருத்தாக தானே இது இருக்கிறது!

//“எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்பார்கள்,“நான் சாட்சி குடுக்கிறேன்”, என்பார்கள். நேரிலே பார்த்து கை குலுக்கி விட்டு வந்தது போல, அவ்வளவு உறுதியாக சொல்வார்கள்.//
பார்த்து கை குலுக்கி பேசினால் நம்பிவிடலாமா? உங்கள் அறியாமை வியப்பை அளிக்கிறது. கண்ணால் பார்ப்பது மட்டுமே எப்போதும் நிரூபணம் ஆகாது. உங்களை ஒருவர் ஒரு தேநீர்க்கடையில் பார்த்து, கைகுலுக்கி, தன்னை தனபால் என்று அறிமுகப்படுத்திகொண்டு, விடைப்பெற்று செல்லலாம். நீங்கள் தனபாலை சந்தித்ததாக நினைக்கலாம், ஆனால் அவர் வேறு யாரோவாக இருக்கலாம். சில மனோவியாதிகளால் காட்சிப்பிழைகள் ஏற்ப்படுவது உண்டு. இல்லாதவை இருப்பதுபோல் தோன்றும், இருப்பது இல்லாதபடி தோன்றும். அதனால், நீங்கள் நிரூபணம் என்று நினைக்கும் பல விஷயங்கள் நம்பகமானவை அல்ல.
ஒருவர், எங்கோ இருந்தபடி, கடிதங்கள் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும், சில நம்பர்கள் மூலமாகவும் நம்மை தொடர்பு கொள்ளலாம். நமக்கு அறிவுரை வழங்கலாம், நம்மிடம் அன்பு செலுத்தலாம், தங்களை பற்றிய “உண்மைகளை” பகிர்ந்து கொள்ளலாம். அனைத்தும் உண்மையாகவே இருக்கலாம். நேரில் வந்து நிரூபிக்காத ஒரே காரணத்தால், அவை அனைத்தும் பொய் என்று சொல்ல முடியாது.
என் தேவனும் அதுபோலதான், தன் தாசர்கள் மூலமாகவும், வேதத்தின் மூலமாகவும் எங்களுடன் பேசுகிறார். அவரை, உங்களை சந்திக்க அழைத்துவராத ஒரே காரணத்தால், அவர் இல்லவே இல்லை என்று கூற முடியாது. பரிசுத்த ஆவியானவராக எங்களுடன் நேரடியாகவே தொடர்பு கொள்கிறார் (ஆனால் நீங்கள் அதை ஒப்புக்கொள்ளமாடீர்கள்). அவர் எங்களுடன், பகிர்ந்த தகவல் உண்மையானதாய் இருக்கிறது, அன்பு உண்மையானதாய் இருக்கிறது, அதைக்கொண்டு அவர் உண்மையாய் இருக்கிறார் என்று நாங்கள் அறிகிறோம்.
உங்களை, கிரிச்துவராகுவது எங்கள் வேலை அல்ல. ஆனால், உங்களுக்கு கிருஸ்துவ சுவிசேஷத்தை அறிவிப்பது எங்கள் கடமை, அதே நாங்கள் செய்கிறோம்.

//கிருஸ்துவ சுவிசேஷத்தை அறிவிப்பது எங்கள் கடமை, அதே நாங்கள் செய்கிறோம்.//

எதை அறிவிக்கிரீர்களோ, மொத்தத்தில் மத சகிப்புத்தன்மை அழியும் வகையில், மத வெறிக் கோட்பாடுகளை, பிற மதங்களுக்கு எதிராப்ன வெறுப்பு பிரச்சாரத்தை எங்களிடம் அறிவிப்பாக செய்கிறீர்க்ள.

இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை நாங்கள் நன்றாக அறிந்து இருக்கிறோம், இயேசு கிறிஸ்துவின் சமரச விட்டுக் கொடுக்கும் கருத்துக்களுக்கு எதிரான முரட்டுப் பிடிவாதக் கருத்துக்களை, அவர் பெயராலே எங்களிடம் பரப்புகிறார்கள்.

இயேசு கிறிஸ்துவுக்கு முன்பும் , பின்பும் வாழ்ந்த யார் யாரோ சொன்ன மத வெறிக் கருத்துக்களை எல்லாம் அவர் பெயரால் எங்கள் தலையில் கட்டுகின்றனர்.

எந்தக் கொடூரக் கருத்துக்களை சீர் திருத்த இயேசு முயன்றாரோ அதே கொடூரக் கருத்துக்களை அவர் பெயராலே பரப்புவதாலே அவருடைய உண்மையான கருத்துக்களை மக்களுக்கு தெரிவிப்போம்.

மத சகிப்புத் தன்மையை அளிக்கும் மத வெறிக் கருத்துக்களை புனிதம் போலக் காட்டி பரப்பும் போது, நல்லிணக்க கருத்துக்களைப் பரப்புவோர் மக்கள நலக் கருத்துக்களை சொல்ல வேண்டியக் கடமைக்கு உள்ளாகின்றனர். .

//அவர் எங்களுடன், பகிர்ந்த தகவல் உண்மையானதாய் இருக்கிறது, அன்பு உண்மையானதாய் இருக்கிறது//

பைபிளில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் போக, புதிய கருத்துக்கள் எதையாவது பகிர்ந்து இருக்கிறீர்களா? அப்படியானால் அதை அறிக்கை பண்ணி உலகுக்கு அறிவிக்கலாமே. பைபிளில் சொல்லப் பட்ட அதே கருத்துக்கள் தான் என்றால், அவை நாங்கள் நன்கு அறிந்தது தான்.

அன்புள்ள திருச்சிகாரருக்கு, உங்கள் கருத்துக்கு நான் பரிபூரண ஆதரவு தருகிறேன். நானும் இதே ரகம்தான். ஒரு படி மேலே என்றும் கூறலாம். நான் ஒரு முதுநிலை வணிகவியல் பட்டதாரி. சிறுவயதிலேயே என் பெற்றோரை இழந்த ஒரு அனாதை. தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கும் சென்னை மாந(ர)கரவாசி.

எந்த ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயமும் விவாதிப்பது தவறே இல்லை. ஆனால் அதற்காக தமது முடிவே சரி என்று சாதிக்கும் பிடிவாத குணம்தான் என்னை சலிப்படைய செய்கிறது. உண்மையில் வெட்டியாக பேசுவதோடு இருக்க கூடாது என்றே என் பட்டப்படிப்பு முடித்தபின் ஒரு நல்ல வேத வித்திடம் இருவருடங்கள் வேதம் பயின்றேன். அதனை நடைமுறையிலும் கொண்டுவந்து சுமார் 19 வருடங்கள் இறைவழிபாடு மற்றும் தீவிர ஆராதனைகளில் ஈடுபட்டவன்.

என் தந்தை மிக நேர்மையான ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்தவர். எந்த ஒரு கேட்ட பழக்கமும் இல்லாதவர். அவரை புற்றுநோய் ஆட்கொண்டது. ஏனோ பழக்கம் மற்றும் நம்பிக்கை இவை அணித்திலுமே நான் அனுபவபட்டவரை கெடுதல் செய்பவரைவிட நல்லவரே நோயும் சரி, கஷ்டமும் சரி மிகவும் நெருங்கிய உறவினராக விடாமல் படுத்துகிறது!

தெய்வம் பற்றிய என் முடிந்த முடிவான கருது இதோ

தெய்வம் என்பது நிச்சயமாக இல்லை. எந்த ஒரு மனிதனுக்கும் பிறரிடம் சொல்ல முடியாத / சொல்ல கூடாத பல விஷயங்கள் இருக்கும். ஆனால் அவற்றை சொல்லி மனம் ஆறுதல் பட ஒரு வஸ்து தேவையாயிருந்தது. அந்த வஸ்து சொல்வதை கேட்டுக்கொண்டு பேசாதிருக்க வேண்டுமே தவிர நியாயம் பேசவோ நமக்கு அறிவுரை கூறவோ கூடாது. அப்படி ஒரு வஸ்து கல் மற்றும் மரம் மட்டுமே. எனவேதான் மனிதன் கோவில் என்ற ஒன்றை உருவாக்கி அதில் கல்லை தெய்வம் என்று வைத்தான்.

கடவுள் நின்று கொல்லும் – என்ற ஒரு பழமொழியை யாவரும் அறிந்திருப்போம். உண்மையில் அது நின்று நிதானமாக நன்மை செய்பவனைதான் கொல்கிறதே தவிர அயோக்கியனை இல்லையே!!

தவிர அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்பவே அனைத்தும் நடக்குமே தவிர இதில் கடவுளின் பங்கு என்று ஒன்றுமே இல்லை;

முன் ஜன்ம பாப மற்றும் புண்ய கர்மத்திர்கேற்பவே இந்த பிறவி

முற்பிறவியின் தொடர்ச்சியே அடுத்த பிறவியில் அதற்கு தக்க மறுபிறவி அமைகிறது என்று வேதாந்தம் பேசும் அனைவரையும் நான் கேட்க விரும்புவது:

கர்ம வினைகள் பொறுத்தே அனைத்தும் நடக்கும் என்றும் கடவுள் இதில் எந்த விதத்திலும் தொடபுடையவர் இல்லை எனும்பட்சத்தில் பிறகு கடவுளை எதற்கு வணங்க வேண்டும்?

முன் ஜன்ம வினைக்கேற்ப அனைத்தும் நடக்கும் என்றால் அப்போது, கருணாநிதி போன்ற அரசியல்வாதிகள் பூர்வ ஜன்மத்தில் அப்படியே உத்தம புருஷர்களா??

உண்மையில் நமது அரசியலமைப்பு சட்டத்தை போலவே இறைவன் அருள் என்பதும் இருக்கும் வரை அருகே வரவே வராது என்பதே நிதர்சனம்.

கீதையில் நான் எதற்குமே பொறுப்பில்லை எனும்போது பிறகு என்ன மயிரை பிடுங்க இறைவன் வருகிறானா?

கேட்டவன் மேலும் மேலும் முன்னேறுவதும், நல்லவன் படு மோசமாக போவதும்தான் இறைஅருளா??

வாழ்நாள் எல்லாம் கஷ்டப்பட்டுவிட்டு சாகும்போது உனக்கு இப்போதுதான் நான் அருளும் நேரம் வந்தது என்று வாய்கரிசி போடவரும் இறைவன் தேவையே இல்லையே!!

தனலக்ஷிமி என்று பணத்தை கொண்டாடி மாதம் முழுதும் கஷ்டப்பட்டு சம்பாதித்து வந்த பணத்தை நாம் வத்தி கொளுத்தி பெட்டியில் வைத்து பூட்டி ஒருவாரத்தில் போவது தெரியாமல் சென்று விடுகிறது!! மாறாக பலரிடம் சிறிதும் இரக்கமின்றி வட்டி மேல் வட்டி வாங்கும் மார்வாடி கட்டு கட்டாக தமது சூத்தின் கீழ் போட்டு கொள்கிறானே அவனிடம்தானே பணம் மேலும் மேலும் சேர்கிறது!!

கவியரசர் சொன்னது போல தேடும்போது வருவதில்லை ..போகும் பொது சொல்வதில்லை. இவை நம்மை போன்ற நேர்மையாக உழைக்கும் உழைப்பாளிகளுக்கு மட்டுமே. மாறாக ஊரை அடித்து உலையில் போடுபவர்கள் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டார்கள்?

உண்மையில் தன லக்ஷிமி என்பதைவிட தனத்தேவடியாள் என்பதே சரி.

இறுதியாக ஒன்று, முதல் முதல் அனைத்தையும் படைக்கும் பொது இறைவன் என்ற ஒருவன் அனைத்தையும் சமமாகத்தானே படைத்திருக்க வேண்டும்! அதற்க்கு பிறகு வேண்டுமானால் பிற பிறவிகளில் முற்பிறவி என்ற வாதம் எடுபடும்! மாறாக கஷ்டபடுபவன் கஷ்டமே படுவதும், பிறர் பற்றி சிறிதும் கவலையின்றி தான், தன் சுகம் என்று உள்ளவன் மிக நல்ல நிலையில் இருப்பதும் இறைவன் என்ற வாதத்தையும் சரி அவன் பாரபட்சமற்றவன் என்பதையும் சரி ஏற்கும்படி செய்யவில்லை.

எனவே இல்லாத ஒன்றை நினைத்து கற்பனைசெய்து பிறகு இருதலை கொள்ளி எறும்பாக இருப்பதை விட எதுவுமே நடப்பது முன்பே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்ற நிலையில் நாம் முடிந்தால் பிறருக்கு நன்மை செய்வோம். இல்லையா நாம் நமது வேலையே பார்த்துகொண்டு செல்வோம் என்பதே சரி. இல்லாத இறைவனை வேண்டுவதை விட இருக்கும் சக மனிதனை மதிப்போம்.

கிறிஸ்துவ மத பிரசாரம் பற்றியும் ஒன்று சொல்ல வேண்டி உள்ளது. முதலில் இயேசு இறைவன் என்று கூறும் இவர்களது வரலாற்றை பாருங்கள். ஒரு நல்ல மனிதனாக, பல நியாயமான சந்தேகங்கள் உள்ள அவரை மத குருமார்கள் பொய் குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்து சாகடித்தபின் அதே ஆசாமிகள் அவர் பெயரால் ஒரு மதத்தையே ஸ்தாபித்து அவரையே தெய்வமும் ஆக்கி கதை கட்டும் இவர்களை என்ன என்பது. ஆக இருக்கும் வரை இன்னதுதான் என்று சொல்ல முடியாத துன்பங்கள் கொடுத்துவிட்டு கொன்று பிறகுதான் இறைவன் என்று கும்பிடுவார்களோ??

இறைவன் என்பவன் இருந்திருந்தால் அவனுக்கு நல்ல நிலையில் இருக்கும்போது அருள் செய்யத் தெரியாதோ??
உண்மையில் அவன் ஒரு சாடிஸ்டாகவே இருக்க வேண்டும்.

தவிர பிரசாரம் என்பது ஒரு புதிய ஒன்றை அறிமுகபடுத்தவே தேவை. பிறகு அந்த பொருளின் நமபத்தன்மை மற்றும் அதன் தரமே அதனை நீடிக்கச்செய்யும். இந்த விதி பொதுவானது.

நமது இந்து மதத்தை யாராவது வீதி வீதியாக பரப்புகிறார்களோ? உண்மையில் இவை இவை நல்லவை . ஏற்பதும் ஏற்காததும் உன் இஷ்டம் என்ற விதத்தில் தான் நமது சமய கருத்துக்கள் உள்ளன!!

மாறாக கிறிஸ்துவ மதத்தை மட்டும் என் இப்படி விழுந்து விழுந்து பரப்ப வேண்டும். அது சரியான கருத்துக்களை கொண்டதாக இருக்கும் பட்சத்தில் தாமே அதனை ஏற்க முன்வருவார்களே!!

தவிர ஒருவரது ஏழ்மை பொருளாதார குறை இவற்றை குறிவைத்து என் சொல்லை கேட்டு என்மதத்தில் சேர்ந்தால் உன்னை காப்பாற்றுவேன் என்று பேரம் பேசும் மத குருமார்கள் .. அவர்களுக்கு இதையே தொழில் என்று செய்து சுகபோகம் தரும் மிஷனரிகள் .. கேவலம். இவையே இவர்களின் மத ஆதார கருத்துகளின் பலவீனத்தை நன்கு தெரிய வைக்கிறதே

ஹோ பர மண்டலத்தில் உள்ள பிதாவே இந்த பாவிகளை இரட்சித்தருளும்.

வணக்கம் ஐயா!
நான், கடவுளை காண்பதற்காக சத்யலோகம் சென்ற என் பயண அனுபவத்தை, ஒரு கட்டுரை வடிவில் எழுதியிருக்கிறேன். இதை நீங்கள் ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!
நன்றி ஐயா!
http://www.eppoluthu.blogspot.in

Leave a comment

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 45 other subscribers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09