Thiruchchikkaaran's Blog

உலக மகா யோக்கியர் போல பேசும் அமெரிக்க சமுதாயம், உண்மையிலேயே நாகரிக சமுதாயமா ?

Posted on: May 10, 2011


மக்களாட்சி, மனித உரிமை, தனி மனித சுதந்திரம்என்றெல்லாம் வாய் கிழிய பேசும் அமேரிக்கா உண்மையிலே அப்படி நடந்து கொள்கிறதா?

இன்றைய தினம் உலக மக்களுக்கு அபாயத்தை கொடுக்க கூடிய காரணிகளில் முக்கியமானது மத வெறியினால் உருவாகும் பயங்கர வாதமும், உலக முழவதையும் தானே சுரண்டிப் பிழைக்க , எத்திப் பிழைக்க நினைக்கும் ஏகாதிபத்தியமுமே.

தனக்கு எது ஆதாயம் என்பதைத் தான் அமேரிக்கா முதலில் பார்க்கிறது, முதலில் மட்டுமல்ல  கடைசி வரையிலும் அது தன் சுய நலத்தை  மட்டுமே சிந்திக்கிறது என்பதை பள்ளி சிறுவர்கள் கூட அறிந்து கொண்டு உள்ளனர். உலகில் எங்கெல்லாம் கனிம வளம் உள்ளதோ அங்கெல்லாம் நட்பு நாடாக காட்டிக் கொண்டு பாதுகாப்பாக தருவதாக சொல்லி மிகப் பெரிய குண்டுகளை மக்களின் தலையிலே இறக்குகிறது.

வியட்நாம் முதல் லிபியா வரை அமேரிக்கா அப்பாவி மக்களின் தலையின் இறக்கிய குண்டுகளையும் அதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையை , ஓடிய இரத்த ஆற்றை எண்ணினால் நெஞ்சம் தாங்காது.  இப்போது இஸ்லாமிய மத வெறி , பயங்கர வாதம் என்று எல்லாம் கர்ஜிக்கும் பேச்சுக்களை தரும் அமெரிக்க, உண்மையிலே தன பங்குக்கு மத வெறியை குறைக்க முயற்சி செய்து இருக்கிறதா?

அழகிய  உடை அணிந்த இளம் அமெரிக்க பெண்கள் சன்  கிளாஸ் போட்டுக் கொண்டு, இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும் சென்று அங்கே இருக்கும் சிறுவர்களை கட்டித் தழுவிக் கொண்டு விளையாடி அவர்களுக்கு ஜீன்ஸ் , டி சர்ட் தருகிறார்கள்.

அட இது என்ன தவறா ஐயா, என்றால் இது தவறு இல்லை, அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் … அன்பு காட்டுங்கள் . வரவேற்கிறோம்,

ஆனால் அன்பு காட்டுவதாக் சொல்லி அப்படியே அவர்களை மத வெறி விடத்தில்  மூழ்க வைத்து பாவ ஸ்நானம் செய்ய வைக்கிறார்கள். இந்த அமெரிக்க யுவதிகளை  சந்திக்கும் முன் இந்திய அப்பாவி குடிசை வாசிகள் எந்த மதத்தையும் வெறுக்காத நாகரிக அன்பு நெஞ்சங்களாக வாழ்ந்தன. இவரக்ள அவர்களை மாற்றி , அவர்களின் மத சகிப்புத்தன்மையை அழித்து வெறுப்பு கருத்துக்கள் உள்ளவர்கள் ஆக்குகின்றனர்.

இவர்கள் அறிமுகப் படுத்தும் பரிசுத்த புனித நூலில் உள்ள பிற மத சகிப்புத் தன்மை அழிப்பு, மத வெறி பரப்பு கோட்பாடுகளை படியுங்கள்.

//உபாகமம்

12 அதிகாரம்

1.உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கிற தேசத்திலே, நீங்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கைக்கொண்டு நடக்கவேண்டிய கட்டளைகளும் நியாயங்களுமாவன:

2. நீங்கள் துரத்திவிடும் ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்த உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,

3. அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி, அவைகளின் பேரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள்.//

இப்படி ஒரே நேரத்தில் – ஏகாதிபத்திய , சுரண்டல் முனைப்பு, அப்பாவி மக்கள் அழிப்பு அரசியலை ஒரு புறத்திலும் –  மத சகிப்புத் தன்மை  அழிப்பு, மத வெறி விட பரப்பு செயலை இன்னொரு புறத்திலும் செய்து வரும் அமேரிக்கா-  மனித சுதந்திரம், மக்களாட்சி, மக்கள நலம், மக்கள உரிமை, மத சார்பின்மை, பயங்கர வாத எதிர்ப்பு ஆகியவற்றை பற்றி எல்லாம் வாய் கிழிய பிரச்சாரம் செய்வது வேடிக்கையாக  இல்லை?

Title: உலக மகா யோக்கியர் போல பேசும் அமெரிக்க சமுதாயம்,  உண்மையிலேயே  நாகரிக சமுதாயமா ?Advertisements

10 Responses to "உலக மகா யோக்கியர் போல பேசும் அமெரிக்க சமுதாயம், உண்மையிலேயே நாகரிக சமுதாயமா ?"

அன்பரே,கீதோபதேசம் கூறுவதென்ன‌…எதிரே நிற்பவன் யார் என்று பாராமல் கொன்றழிக்கவேண்டும் என்று சொல்லவில்லையா..? கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற வேதமொழியே கொலையை கடமை என்று சொல்லுகிறதே…கண்ணனே துர்போதனையல்லவா செய்திருக்கிறான்..? இன அழிப்பையும் ஆதிக்கவெறியையும் எல்லா மதங்களும் ஊக்குவித்தே வந்துள்ளன; அது புத்தரை தெய்வமாக வழிபடும் சீனா, இலங்கை, ஜப்பான் போன்ற‌ நாடுகளானாலும் யுத்தம் செய்து ஆதிக்கம் செய்வதையே விரும்புகிறது;

நீங்கள் குறிப்பிட்டுள்ள பைபிள் பகுதி பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது; அப்படியானால் புதிய ஏற்பாட்டின் நோக்கம் என்ன,அது கூறுவதென்ன என்றும் பார்க்கவேண்டுமல்லவா..? இறைவனால் யூதருக்கு இன அழிப்பு கட்டளை கொடுக்கப்பட்ட காலத்தில் மற்ற இனங்கள் என்ன செய்துகொண்டிருந்தன என்றும் பார்க்கவேண்டுமல்லவா..? மாவீரன் அலெக்ஸாண்டர் உலக முழுவதும் வெற்றி பெற்றுக்கொண்டே வந்தவன் எருசலேமில் வந்து மண்டியிட்டானல்லவா..? அது அக்காலத்தில் யூதருடைய கட்டுப்பாட்டில் இராதிருந்தும் எருசலேமின் மீது கிரேக்கனான அவனுக்கு நன்மதிப்புண்டாகக் காரணமாக இருந்தது எது…? வரலாற்றை ஒருபோதும் குறுகிய கண்ணோட்டத்தில் பாராதிருங்கள்,அகண்ட பார்வை மட்டுமே அகண்ட பாரதத்தின் முழு பிரச்சினையையும் வெளிக்காட்டும்.

http://chillsam.activeboard.com/t42771440/topic-42771440/?r=914966

சகோ. கிளாடி அவர்களே,

மத சகிப்புத் தன்மை அழிப்பு, மத வெறி பரப்பு ஆகியவை இந்த உலக மக்களுக்கு எவ்வளவு கொடூரத்தை தந்துள்ளது என்பதை அறிந்து இருந்தும் , உங்களுக்குப் பிடித்த மதம் என்பதால் பரவாயில்லை, என் மதத்தில் மத சகிப்புத் தன்மை அழிப்பு இருந்தால் பரவாயில்லை என்று சொல்வது சரியல்ல.

பழைய ஏற்பாட்டில் மட்டும் அல்ல, புதிய ஏற்பாட்டிலும் பிற மதங்களை சகித்துக் கொள்ள மறுக்கும் கருத்துக்கள உள்ளனவே. விக்கிரக ஆராதனைக் காராரை மிக இழிவாக காட்டி , அவருடன் சேராதே, சாப்பிடாதே என்று உள்ளது.

இதை எல்லாம் படித்து விட்டு, நீங்களும் நம் தளத்திலே யே பல முறை, பிற மத தெய்வ வழிபாட்டு முறைகளுக்கான சகிப்புத் தன்மை இன்மையைகாட்டி உள்ளீர்கள் அல்லவா?

புத்த மதம், ஒரு ஆட்டைக் கூட கொல்லாதே எனசொல்லி உள்ளது. எனவே சிங்களமோ, சப்பானோ, சீனாவோ, அப்பாவி மக்களை கொடுமைப் படுத்தினால், அவர்கள் பவுத்த மத கோட்பாட்டிற்கு எதிராக செயல் படுகின்றனர் என்பதே உண்மை.

ஆனால் இங்கே மத கோட்பாடே சகிப்புத் தன்மை அழிப்பை , அடியுங்கள், உடையுங்கள் என்று சொல்லுகிறது.

குரு சேத்திரப் போர், தன்னுடைய மதத்தை நிலை நிறுத்த இன்னொரு மதத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக நடத்தப் பட்ட மதப் போ ர் அல்ல. குரு சேத்திரப் போர் இன அழிப்பு போர் அல்ல. கீதை கொலை செய்ய சொல்லவில்லை . போர்க் களத்தில் நின்று கொண்டு திரும்பிப் பார்க்க வேண்டாம் என்கிறது , அறிவிக்கப் பட்ட போரில் ஆயுத பயிற்சி பெற்ற போர் வீரர்கள் சமரில் ஈடுபட்டனர். திரவுபதியின் சீலையை பிடித்து இழுத்து அவளை நிர்வாணமாக்கி அவமானப் படுத்த முயன்றான் துரியோதனன். அனால் அவன் பாண்டவருக்கு பர்ஸ்ட் கசின் என்பதால் தம்பியை கொல்ல வேண்டாம் என்று இந்த நிலையில் கூட போர் வேண்டாம் என அவனிடம் சமாதான பேசினார் கிருஷ்ணர். ஐந்து மாநிலங்களாவது தர சொன்னார். மறுத்தான். ஐந்து கிராமங்களாவது தர சொன்னார். மறுத்தான். ஐந்து வீடுகளையாவது தர சொன்னார். வூசி முனை நிலம் கூட தர முடியாது என்று சொன்னான் துரியோதனன். பாண்டவர் வாழ்வதையே துரியோதனன் சகிக்கவில்லை. பாண்டவரை நினைத்தாலே துரியோதனன் மனதில் வெறுப்புணர்ச்சி கொழுந்து விட்டு எரிந்தது. எனவே அநியாய வாழ்வாதார பறிப்புக்கு எதிரான போரே குரு சேத்திரப் போர்.
இதெல்லாம் உங்களுக்கு தெரியும் என்று எண்ணுகிறேன். ஆனாலும் நீங்கள் மதிக்கும் நூலில் உள்ள மத சகிப்புத் தன்மை அழிப்பு கருத்துக்களை நியாயப் படத்தி புனிதம் போல காட்ட முயல்வது அப்பாவி மக்களுக்கு உதவாது.

இந்தியாவில் மத வெறி விடத்தை நிலைநிறுத்துவது எளிதல்ல.

// பழைய ஏற்பாட்டில் மட்டும் அல்ல, புதிய ஏற்பாட்டிலும் பிற மதங்களை சகித்துக்கொள்ள மறுக்கும் கருத்துக்கள உள்ளனவே. விக்கிரக ஆராதனைக் காராரை மிக இழிவாக காட்டி , அவருடன் சேராதே, சாப்பிடாதே என்று உள்ளது. //

உங்கள் கருத்துப்படி தீண்டாமைக்குக் காரணம் பைபிள் என்றாகிறது;அப்படியானால் இன்றைக்கும் கிராமங்களிலும் ஏன் சில நகரங்களிலும் இந்தியாவில் நிலவி வரும் தீண்டாமை குற்றங்களுக்கு பைபிளின் கருத்தே காரணமா..? அப்படியானால் இந்தியாவை கடந்த ரெண்டாயிரம் வருடங்களாக பைபிளா ஆட்சி செய்துவருகிறது;பைபிளுக்கு எதிராகவா பாரதி விவேகானந்தர் போன்றோர் போராடினார்கள்..? விக்கிரகத்தை ஆராதிப்பவரிலேயே சிலரை பாகுபடுத்தியும் சிலரை ஊரைவிட்டு தள்ளிவைத்தும் சிலர் கோவில் தேர்வடத்தைத் தொட தடைவிதித்தும் கொடுமை செய்தது யார் குற்றம்..?

http://chillsam.activeboard.com/t42771440/topic-42771440/?r=914966

எந்த இந்து மதக் கடவுளும் தீண்டாமையை சொல்லவும் இல்லை. இந்து மத்தில் ஸ்ருதி என சொல்லப் படும் முக்கிய நூல்களான வேதம் , கீதை ஆகியயவ்றில் தீண்டாமையை பற்றி சொல்ல படவில்லை. இந்திய சமூகத்தில் தொழில் அடிப்படையில் குழுவாக பிரிந்தவர்கள் சாதியாக உருவாகி பிறகு சாதி மைப்பு இறுக்கமாகி விட்டது என்பதை முன்பே தெளிவாக சொல்லி இருக்கிறோம். இந்து மதத்தின் பேரால் தீண்டாமை கோட்பாட்டை , சாதி வேறுபாடுகளை நிலை நிறுத்துவதை முழு வீச்சில் எதிர்க்கிறோம்.

தீண்டாமையை , சாதீய வேறுப்பாட்டை முழுமையாக எதிர்க்கிறோம். அது இந்து மதத்தில் சொல்லப் பட்டு இருந்தாலம் சரி, சொல்லப் படாமல் இருந்தாலும் சரி.

மத சகிப்புத் தன்மை அழிப்பை, தன் மதம் மாத்திரமே இருக்க வேண்டும், பிற மதங்கள் இல்லாமல் போக வேண்டும் என்கிற துடிப்பினால் எழுகிற மத வெறியை நீங்கள் கைக் கொள்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா என்று எண்ணிப் பாருங்கள்.

எந்த இந்து மதத்தின் மீது தீண்டாமை குற்றச் சாட்டு வலுவாக வைக்கப் பட்டதோ, அந்த இந்து மதத்தின் முக்கியக் கோவில்களில் இன்று யாரும் சாதி வித்யாசம் பார்ப்பதும் இல்லை, அருகில் நின்று சாமி கும்பிடுபவர் எந்த சாதி என நினைத்துப் பார்ப்பதுமில்லை. திருப்பதியில், மதுரையில், சபரி மலையில் எல்லா மக்களும் அருகருகே நின்று இடித்துப் பிடித்து சாமி கும்பிடுகின்றனர். கிராமங்களிலும் சாதீய வேறுபாடுகள் முற்றிலுமாக களையப பட்டு சமத்துவம் நிலை நாட்டப் பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், விருப்பம் எல்லாம்.

சாதி வேறுபாடுகளில் இருந்து இந்திய சமுதாயம் மீது வரும் அதே நேரத்தில், இந்தியாவை மத வெறி விடத்தில் மூழ்கடிப்பது சரியல்ல

//எந்த இந்து மதக் கடவுளும் தீண்டாமையை சொல்லவும் இல்லை. இந்து மத்தில் ஸ்ருதி என சொல்லப் படும் முக்கிய நூல்களான வேதம் , கீதை ஆகியயவ்றில் தீண்டாமையை பற்றி சொல்ல படவில்லை. இந்திய சமூகத்தில் தொழில் அடிப்படையில் குழுவாக பிரிந்தவர்கள் சாதியாக உருவாகி பிறகு சாதி மைப்பு இறுக்கமாகி விட்டது என்பதை முன்பே தெளிவாக சொல்லி இருக்கிறோம். இந்து மதத்தின் பேரால் தீண்டாமை கோட்பாட்டை , சாதி வேறுபாடுகளை நிலை நிறுத்துவதை முழு வீச்சில் எதிர்க்கிறோம். //

பெருமாள் என்பவன் ஒருவேளை மெய்யாகவே இருந்து அவனே நேரடியாக எழுந்து வந்தாலும் உங்களைத் திருத்தமுடியாதுங்க அண்ணே,மனசாட்சி என்பதை அடகுவைத்துவிட்டு மனுஸ்மிருதி எனும் புனிதமான ஆதிவேதத்தையே (???) திரித்துக்கூறும் ஒரே காரணத்துக்காகவே பெருமாள்(???) உங்களை தண்டிக்கட்டும்..!

http://chillsam.activeboard.com/t42771440/topic-42771440/?r=914966

சகோ. கிளாடி அவர்களே,

மனு என்பவர் இந்து மதத்தை தோற்றுவிக்கவில்லை. மனு ஒரு அரசர் , அவர் எழுதியது அவரது காலத்தில் நிலவிய சமூக சூழலை ஒட்டிய சட்ட திட்டங்களே. ரவுலட் சட்டம், காலாவதியானது போல மனு சட்டமும் காலவதி யாகி விட்டது. இந்துக்கள சாதியை விட்டால் கூட, ஐயா விடாதீங்க, அப்புறம் நாங்க எதை சொல்லி பிழைப்பு நடத்துவது என்ற நிலையில் சிலர் ஐயோ, சாதி இல்லாம போயிடும் போல இருக்கே என பதறுகின்றனர்.

இந்து மதத்தின் அமைதியான ஆன்மீகத்தை எல்லோருக்கும் வழங்கி, நாகரீ க சிந்தனையில் நேர்மையான சமத்துவ சமூகம் உருவாக்கப் படும், உங்களின் அக்கறைக்கு நன்றி. நான் சாதி வேறுபாடன்றி என்னை விட வயது மூத்தவர் யாராக இருந்தாலும் அவர் காலில் விழுந்து வணங்கி நல்லிணக்கத்தில், நாகரீகத்தில், சமத்துவத்தில் ஒன்றிணையும் பழக்கமுள்ளவன்.

மொத்தத்திலே மனு ச்மிரிதி ஆதியுமில்லை, வேதமுமில்லை. வாய்க் கூசாமல் பொய் சொலக் கூடாது. சமத்துவத்துக்கான முயற்சியில், பிறப்பு, நிற, மத, மொழி அடிப்படையில் உயர்வு தாழ்வு க்கு எதிரான போராட்டத்தில், மத வெறிக்கு எதிரான் எச்சரிக்கை மணி அடிப்பதில் எந்த தேவன் (அப்படி யாரவது இருந்தால்) குறுக்கே வந்தாலும், எங்கள் பயணம் தொடரும்.

// சாதி வேறுபாடுகளில் இருந்து இந்திய சமுதாயம் மீது வரும் அதே நேரத்தில், இந்தியாவை மத வெறி விடத்தில் மூழ்கடிப்பது சரியல்ல… //

கடந்த சுமார் ரெண்டாயிரம் வருடமாக சாதிவெறியிலிருந்து எழுந்துகொண்டே இருக்கிறீர்களா..? நல்ல கதை…ஏன் தேர்தலில் சீட் கொடுத்த கட்சிகள் சாதிபாகுபாடு பாராது சீட் கொடுத்ததா..? சினிமாவில் சாதி ஒழிக்கப்பட்டுவிட்டதா..? சாதிபாடு ஒழிக்கப்பட்ட இரண்டு இடங்களை மிகுந்த சிரமத்துடன் இறுதி செய்யலாம்,ஒன்று சுடுகாடு இன்னொன்று டாஸ்மாக் கடை..! மூன்றாவதும் ஒன்றுண்டு, கண்டிப்பா சொல்லணுமின்னா சொல்றேன்,விபச்சார விடுதி..!நான்காவது சொல்லட்டுமா,கூவாகம்..!

இரண்டாயிரம் வருடமோ, இருநூறு வருடமோ வேகமாக சாதீய வேறுபாடுகள் களையப் படுகின்றன.

//டாஸ்மாக் கடை..! மூன்றாவதும் ஒன்றுண்டு, கண்டிப்பா சொல்லணுமின்னா சொல்றேன்,விபச்சார விடுதி..!நான்காவது சொல்லட்டுமா,கூவாகம்..!//

நீங்கள் ஆவேசத்தில் எழுதுகிறீர்கள்

glady அவர்களே,

///மனுஸ்மிருதி எனும் புனிதமான ஆதிவேதத்தையே///

சுருதி என்பது எக்காலத்திற்கும் ஏற்ற நிலையான தர்மம்.வேதமும் உபநிஷதமும் சுருதி ஆகும்.ஸ்மிருதி என்பது அந்த அந்த காலத்திற்குத் ஏற்றாற்போல் ஏற்படுத்தப் பட்டவையாகும்.அதனால் மனுஷ்மிருதி என்பது வேதமல்ல என்பதை முதலில் தெளிவு படுத்திக்கொள்ளவும்.

glady ” யை
இதை படிக்க சொல்லவும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: