Thiruchchikkaaran's Blog

இறைவ‌ன் இருக்கின்றானா- 2

Posted on: January 20, 2010


இறைவன் இருக்கின்றானா என்று யாராவது கேள்வி கேட்டாலோ, ஆராய மேற்பட்டாலோ உடனே இறைவன் இருப்பதாக  நம்பும்   நண்பர்களுக்கு வருத்தமும் , ஆதங்கமும்,  கோபமும் வருகிறது. 

 நாம் என்ன சொல்கிறோம்?

 கடவுள் இல்லை என்று சொல்லச் சொல்லும்படி யாரையும் வற்புறுத்தவோ, கட்டாயப் படுத்தவோ இல்லை.

கடவுள் இருக்கிறாரா என்று ஆராய்ச்சி செய்யும் உரிமையை எங்களுக்கு தாருங்கள் என்றுதான் கேட்கிறோம்.

நாம் கேட்பது சிந்தனை சுததந்திரம், சிந்திக்கும் உரிமை அவ்வளவுதான்.நாம் ந‌ம்பிக்கையாள‌ர்களை க‌ட்டாய‌ப் ப‌டுத்த‌வோ,  தொந்த‌ர‌வு செய்ய‌வோ, மிர‌ட்ட‌வோ, ச‌பிக்க‌வோ செய்ய‌வில்லை‍.

 அவர்க‌ள் கூறும் க‌ருத்துக்க‌க‌ளில் எவ்வ‌ள்வு தூர‌ம் உண்மை இருக்க‌ முடியும், ம‌னித‌ நாக‌ரீக‌த்துக்கு உத‌வும் க‌ருத்துக்க‌ள் அவ‌ற்றில் உள்ளன‌வா என்ப‌தையும் நாம் ஆராய்கிரோம்.

ந‌ல்லிண‌க்க‌ அடிப்ப‌டையிலே அவ‌ர்க‌ளுடைய‌ வ‌ழிபாட்டிலே,  விழாக்க‌ளிலே  க‌ல‌ந்து கொண்டு ச‌கிப்புத் த‌ன்மை, ச‌க‌ஜ‌த் த‌ன்மை ஆகிய‌ நாக‌ரீக‌க் க‌ருத்துக்க‌ளை வ‌ள‌ர்க்க‌வும் நாம் த‌யார் என்ப‌தையும் நாம் கூறி விட்டோம்.

 ந‌ம்பிக்கையாளர்க‌ள் அமைதியாக‌ வ‌ழிபாடு செய்வ‌தையும் நாம் த‌டுக்க‌வில்லை.

ஆனால் ந‌ம்பிக்கையாள‌ர்க‌ளின் ந‌ட‌ப‌டிக‌ள் இவ்வ‌ளவு அமைதியாக, எளிதாக‌ முடிந்து விடுவ‌தில்லை.

ந‌ம்பிக்கையாள‌ர்க‌ள் இன்னும் அதிக‌ அதிகார‌ங்க‌ளை அவ‌ர்க‌ளே எடுத்துக் கொள்கின்ர‌ன‌ர். அவ‌ர்க‌ளது ந‌ம்பிக்கையை த‌விர‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் ந‌ம்பிக்கையை முழுவ‌துமாக‌ க‌ண்டித்து நிராக‌ரிக்கும் உரிமையை எடுத்துக் கொள்கின்ற‌ன‌ர். பிற‌ மார்க்க‌ங்க‌ள் த‌ங்க‌ளுக்கு க‌ட‌வுளாக‌ தேர்ந்து எடுத்துக் கொண்ட‌வ‌ர்க‌ளை பேய், பிசாசு என்று இக‌ழும் உரிமையையும் அவ‌ர்க‌ளாக‌வே எடுத்துக் கொள்கின்ற‌ன‌ர். பிற‌ மார்க்க‌ங்க‌ளின் மீது வெறுப்பு பிர‌ச்சார‌த்தைக் க‌ட்ட‌விழ்த்து விடுகின்ர‌ன‌ர். இத‌னால் வெவ்வேறு மார்க்க‌ங்க‌ளைப் பின்ப‌ற்றும் ச‌மூக‌த்தின‌ரிடையே மோத‌ல் உருவாகி அது பெரும் போர்க‌ளாக‌ தொட‌ர்ச்சியான‌ போர்க‌ளாக‌ உருவெடுத்து விடுகின்ர‌ன‌.

ந‌ம்பிக்கை ம‌ட்டுமே இவ‌ர்களிட‌ம் உள்ள‌து. ச‌ரி இருந்து விட்டு போக‌ட்டும்‍. ஆனால் அந்த‌ ந‌ம்பிக்கை தான் உண்மை என்று எந்த‌ வித‌ ஆதார‌மும் , நிரூப‌ண‌மும் இல்லாம‌ல் அடித்து சொல்லி அதை அப்ப‌டியே ஒப்புக் கொள்ள‌ வேண்டு‍ம், பிற‌ ந‌ம்பிக்க‌கைக‌ளை அப்ப‌டியே நிராக‌ரிக்க‌ வேண்டும், இதையே எல்லா ந‌ம்பிக்கைத் த‌ர‌ப்பாரும் சொல்கின்ற‌ன‌ர். 

ந‌ம்பிக்கையின் அடிப்ப‌டையிலே பல்வேறு க‌ருத்துக்க‌ளை,   திட்ட‌ வ‌ட்ட‌மாக‌, ஆணித் த‌ர‌மாக‌  ம‌க்க‌ளின் ம‌ன‌திலே ஏற்றி, அதை அப்ப‌டியே ஒத்துக் கொண்டு ப‌ல‌ க‌ட்ட‌ளைக‌ளுக்கு அடி ப‌ணிய‌ வேண்டும் என்கிற நிலைக்கு கொண்டு வ‌ந்து விடுகின்ற‌ன‌ர்.

ச‌ரி யார் கூறும் ந‌ம்பிக்கையை ந‌ம்புவ‌து? நான் நேற்று ஒரு நண்ப‌ர், இசுலாமிய‌ ச‌மூக‌த்தை சேர்ந்த‌வ‌ரை ச‌ந்தித்தேன். அவ‌ர் சொன்னார்,  ” நாங்க‌ இயேசு கிறிஸ்துவையும் இறைவ‌னின் தூதுவ‌ராக‌ ஏற்றுக் கொண்டு உள்ளோம்.  இங்கே பாருங்க‌ள், “இயேசு கிறிஸ்து (PBUH)”  என்று அவ‌ர் ந‌ண்ப‌ருக்கு அனுப்ப‌ எழுதி வைத்திருந்த‌ ஒரு க‌டித‌த்தை என‌க்கு காட்டுகிறார். இயேசு கிறிஸ்துவுக்கும் PBUH  போட்டு இருக்கிறேன், ஆபிர‌காம் , மோச‌ஸ் ஆகியோரும் இறை தூத‌ர்க‌ளே என்று நாங்க‌ள் சொல்கிறோம்.

அல்லாவிற்க்கு யாரையும் இணை வைப்ப‌து இய‌லாது, முக‌ம‌து ந‌பி தான் க‌டைசியாக‌ வ‌ந்த‌ இறுதி தூத‌ர், இசுலாமிய‌ரைத் த‌விர‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் இறைவ‌னின் க‌ட்ட‌ளைக்கு க‌ட்டுப் ப‌டாம‌ல் வாழ்ந்து க‌டைசியில் த‌ண்ட‌னை பெற‌ப் போகின்ற‌ன‌ர் என்று வ‌ருத்த‌ப் ப‌ட்டார்.

நான் அவ‌ரிட‌ம், நல்லிண‌க்க‌ அடிப்ப‌டையிலே ர‌ம‌தானில் நோன்பு இருக்கிறேன் என்றேன். இசுலாத்தில் ந‌ம்பிக்கை வைத்து, இசுலாமிய‌ராகி விடுங்க‌ள்.  “இல்லை ஒரு க‌ட‌வுள், அல்லாவினைத் த‌விர‌, முக‌ம‌து அவர‌து தூத‌ர்” என்கிற‌ கொள்கையை ந‌ம்புங்க‌ள். பிற மார்க்க‌ங்க‌ளின் வ‌ழி பாட்டுத் த‌ளங்க‌ளுக்கு போக‌ கூடாது என்று “தெளிவு” ப‌டுத்தினார். 

ஆனால் கிறிஸ்துவ‌ர்க‌ளோ, முக‌ம‌து ஒரு இறை தூத‌ர் என்கிற‌ ந‌ம்பிக்கையை ஏற்றுக் கொள்ள‌ த‌யார் இல்லை. இயேசு கிறிஸ்து தான் க‌ட‌வுளின் ம‌க‌ன், க‌ட‌வுள் எல்லாமே. இயேசுவுக்கு முன் வ‌ந்த‌ ஆபிர‌காம், மோச‌ஸ்… ஆகியோர் கிறிஸ்துவ‌ர்க‌ளால் அங்கீக‌ரிக்க‌ப் ப‌ட்ட‌ இறைத் தூதுவ‌ர்க‌ள்.  பைபிளில் கூற‌ப்ப‌ட்டுள்ள‌தை அப்ப‌டியே ந‌ம்ப‌ வேண்டும்.

கிறிஸ்துவ‌ர்க‌ளிலும் பல‌ பிரிவுக‌ள் இருந்தாலும், என‌க்குத் தெரிந்த‌ வ‌ரையிலே எல்லோரும் இயேசு கிறிஸ்து க‌ட‌வுளின் ம‌க‌ன், அல்ல‌து ம‌க‌னாக‌ வ‌ந்த‌ க‌ட‌வுள் என்கிற‌ ந‌ம்பிக்கையில் உள்ள‌ன‌ர். பைபிளுக்கு அப்பாற்ப‌ட்ட‌ எல்லா மார்க்க‌ங்க‌ளுமே முழுமையாக‌ க‌ண்டிக்க‌ப் ப‌ட்டு நிராக‌ரிக்க‌ப் ப‌ட‌ வேண்டும். இறுதி தீர்ப்பு நாள் வரும், க‌ட‌வுள் மீண்டும் இற‌ங்கி வ‌ருவார்… இப்ப‌டியாக‌ உல‌கில் உள்ள‌ பிற‌ மார்க்க‌ங்க‌ளை எல்லாம் பொய் என்று சொல்லி, பிற‌ மார்க்க‌த்த‌வ‌ர் வ‌ண‌ங்கும் தெய்வ‌ங்க‌ள் எல்லாம் பேய்க‌ள் என்று இக‌ழ்ந்து த‌ங்க‌ள் மார்க்க‌ப் பிர‌ச்சார‌த்தை துவ‌ங்குகின்ற‌ன‌ர் கிறிஸ்தவர்க‌ள்.

இதிலே இன்னொரு முக்கிய நம்பிக்கை கோஷ்டியினர் உண்டு.  அவர்கள் யூத மதத்தினர் அதாவது யூதர்கள். இவர்களின் நம்பிக்கை மோசஸ் என்பவரே இது வரை வந்த கடைசி தூதர் எனவும்,  மோசஸ் என்பவர் தங்களுக்காக “கடவுளுடன்” ஏற்படுத்தி தந்த  “நியாயப்  பிரமாணம்”   இப்போதும் அமுலில் உள்ளது எனவும்,  தங்களை இரட்ச்சிக்க மெசியா எனப்படுபவர் இனிமேல் தான் வருவார் என்பனவற்றையும்   நம்பிக்கையாக வைத்து உள்ளனர்.

இயேசு என்பவர் தங்களுடைய மெசியா அல்ல என்று உறுதியாக தெரிவிக்கின்றனர்.  இயேசு ஒரு சாதாரண யூதர் என்பதே அவர்களுடைய நிலைப் பாடு.

அவரவர்கள் அவரவருக்கு விருப்பமான நம்பிக்கையை வைத்துக் கொண்டு, அமைதியாக வணங்கிக் கொண்டு இருந்திருந்தால், மனித சமுதாயம் இந்த நம்பிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்தி இருக்கும்.

ஆனால் அவர்கள் அப்படி செய்வதில்லை. தங்கள் நம்பிக்கை தான் உண்மையான நம்பிக்கை என்றும் உலகில் உள்ள எல்லோரும் அதையே தான் “நம்ப” வேண்டும், பிற மார்க்கங்கள் எதுவும் இல்லாமல் “சுத்தமாக்கப்”  பட்டு, தங்களுடைய நம்பிக்கை  மட்டுமே இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதானாலும் நம்பப் பட்டு, பின்பற்றப் பட வேண்டும்,  இதற்காக பிற மதங்கள் எல்லாம் கண்டிக்கப் பட்டு ஒழிக்கப் பட வேண்டும்  என்பதுமான  “அன்பு” பிரச்சாரத்தை, மக்களின் மூளைகளில் ஆணியடித்தனர்.

இந்த வெறிப் பிரச்சாரத்தினால் மக்கள் காட்டு மிராண்டி மன நிலைக்கு திரும்பி  கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு பெரும் மோதலில் ஈடு பட்டு, உலகிலே  இரத்த ஆறு ஓட விட்டனர்.  முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் இரண்டிலும் இறந்தவர்களை  விட அதிகமானவர்கள் சிலுவைப் போர்க‌ள் என்று அழைக்க‌ப் ப‌டும் தொட‌ர்ச்சியான‌ ப‌ல‌ போர்க‌ளில்  நம்பிக்கை வாதிகளின் நம்பிக்கை வெறிக்காக, யார் கடவுள் உண்மையான கடவுள் என்பதை நிரூபிக்க கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டு மிராண்டித் தனத்துக்கு தங்கள் உயிரைப் பறி கொடுத்து,  பல பெண்கள் விதைவையாக்கப் பட்டு , குடும்பங்கள் நிர்க்கதியாக்கப் பட்டனர்.

ப‌குத்த‌றிவு அடிப்ப‌டையிலே செய‌ல் ப‌ட்டால் மோத‌ல் வ‌ர‌ வாய்ப்பு இல்லை. உதார‌ணமாக‌ ஒருவ‌ர் “மின் மாற்றியின் முத‌ன்மை க‌ம்பிச் சுருளில் நேர் மின் அழுத்த‌த்தை செலுத்தினால், இரண்டாம் க‌ம்பிச் சுருளில் எந்த‌ வித‌மான‌ மின் அழுத்த‌மும் இருக்காது” என்கிற‌ க‌ருத்தை சொல்கிறார். இன்னொருவ‌ருக்கு அந்த‌க் க‌ருத்தில் ஒப்புத‌ல் இல்லை என்றால் வாளை உருவிக் கொண்டு போராட‌ வேண்டிய‌தில்லை. ஒரு மின் மாற்றியை எடுத்து அத‌ன் பிரைம‌ரி காயிலில் நேர் மின் அழுத்த‌த்தை செலுத்தி செக‌ண்ட‌ரி காயிலில் ஏதாவ‌து வோல்டேஜ் கிடைக்கிர‌தா என்ப‌தை ச‌ரி பார்த்துக் கொள்ள‌லாம். எது உண்மையோ அதை எல்லோரும் ஒத்துக் கொள்ள‌லாம்.

ஆனால் வெறும் ந‌ம்பிக்கை அடிப்ப‌டையில் செய‌ல் ப‌டும் போது, ச‌ரி பார்ப்ப‌த‌ற்க்கு வாய்ப்புக‌ள் இல்லாத‌ போது, ந‌ம்பிக்கையை அழுத்தி திணித்து மோத‌ல் உருவாக‌ கார‌ண‌மாக‌ இல்லாம‌ல் அமைதியாக‌ வ‌ழி ப‌டுங்க‌ள் என்று தான் சொல்கிரோம்.

நாம் இவ்வாறு சொல்வ‌து இந்து, புத்த‌, ச‌ம‌ண‌ ம‌த‌ங்க‌ள் உட்ப‌ட எல்லா ம‌த‌ங்க‌ளுக்கும் பொருந்தும். இந்து புத்த‌ ச‌ம‌ண‌ ம‌த‌ங்க‌ளுக்கு இடையிலும் க‌ருத்து வேறுபாடுக‌ள் இருந்த‌ போதிலும், அவ‌ர்க‌ளுக்கிடையிலான மோத‌ல் க‌ருத்து அடைப்ப‌டையிலே வாக்கு வாத‌ம், ஆராய்ச்சி என்ற‌ வ‌கையிலே இருந்த‌தே அல்லாம‌ல், ம‌க்க‌ள் ப‌ங்கு பெற்ற‌ ஆயுத‌ப் போராட்ட‌மாக‌ இருக்க‌வில்லை என்ப‌தை ஒரு உதார‌ண‌மாக‌ காட்டுகிறோம். அப்படிப் ப‌ட்ட‌ இந்து, ப‌வுத்த‌ ம‌தங்களும் வ‌ன்முறை போக்கிற்க்கு செல்லும் அபாய‌ம் வ‌ந்து விடுமோ என்கிற‌ க‌வ‌லையையும் தெரிவிக்கிறோம். இந்து ம‌த‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள் சில‌ர், பிற‌ மார்க்க‌த்தின‌ர் கடவுளாக‌ வ‌ழிப‌டுப‌வ‌ரைப் ப‌ற்றி இழிவாக‌ எழுதுவ‌தை க‌ண்டிக்கிரோம்.

ந‌ம்முடைய‌ விருப்ப‌ம் என்ன‌வென்றால் எல்லா மார்க்க‌க‌த்தின‌ரும், பிற‌ மார்க்க‌ங்க‌ளை இக‌ழக் கூடாது, எவ்வளவு தூர‌ம் ந‌ல்லிண‌க்க‌ப் பாதையில் செல்ல‌ முடியுமோ அவ்வ‌ளவு நட்பு பாதையில் செல்லுங்க‌ள் என்று கோருகிறோம்.  எந்த‌ ஒரு மார்க்க‌த்தையும் அழிக்க‌வோ, கெடுக்க‌வோ, இழிவு ப‌டுத்த‌வோ இந்த‌க் க‌ட்டுரையை  எழுத‌வில்லை, எல்லா மார்க்க‌ங்க‌ளின் பாதைக‌ளிலும் போட‌ப் ப‌ட்ட‌ முட்க‌ளை அக‌ற்றி சீர் ப‌டுத்தி அவ‌ற்றை அறிவுப் பாதையாக‌, அன்புப் பாதையாக‌ ஆக்க‌வே இதை எழுதுகிரோம்.

“க‌ட‌வுளை ம‌ற‌, ம‌னித‌னை நினை” என்றார் பெரியார்.

உங்க‌ளால் க‌ட‌வுளை ம‌ற‌க்க‌ முடியாவிட்டாலும் ப‌ர‌வாயில்லை, ம‌னித‌னையாவ‌து நினைவு கூறுங்க‌ள்!  ம‌னித‌ இர‌த்த‌ம் ஆறாக‌ ஓடிய‌து போதும். வெறுப்பு க‌ருத்துக்க‌ளுக்கு விடை கொடுத்து அன்புப் பாதைக்கு, அறிவுப் பாதைக்கு வாருங்க‌ள்.

உங்க‌ளால் பிற‌ மார்க்க‌த்தைக் க‌ண்டிக்காம‌ல், பிற‌ தெய்வ‌ங்க‌ளை இக‌ழாம‌ல், வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை ப‌ர‌ப்பாம‌ல், மோத‌லை உருவாக்காம‌ல் உங்க‌ளின் க‌ட‌வுள் பிர‌ச்சார‌த்தை செய்ய‌ முடியாது என்றால், அப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌ட‌வுள் ந‌ம்பிக்கை ம‌னித‌ ச‌முதாய‌த்துக்கு எதிரி.

இணைப்பு- 1

ச‌கோத‌ர‌ர் அசோக் குமார் க‌ணேச‌ன் ம‌ற்றும் ச‌கோத‌ர‌ர் Chillsam அவ‌ர்க‌ள் இட்ட‌ பின்னூட்ட‌ங்க‌ள் சில‌,
ந‌ம்பிக்கை உண்டாக்கும் வெறியான‌து எந்த‌ அளவுக்கு நாகரீக‌த்துக்கு, அமைதிக்கு எதிராக‌ செய‌ல் ப‌டும் என்ப‌தைக் காட்டுவ‌தாக‌ அமைந்து உள்ள‌ன‌. அவ‌ற்றையும் இங்கே க‌ட்டுரையின் ப‌குதியாக‌  பிர‌ச‌ரிக்கிரோம்.

Comment by Ashok kumar Ganesan — January 21, 2010

//பிற‌ மார்க்க‌ங்க‌ள் த‌ங்க‌ளுக்கு க‌ட‌வுளாக‌ தேர்ந்து எடுத்துக் கொண்ட‌வ‌ர்க‌ளை பேய், பிசாசு என்று இக‌ழும் உரிமையையும் அவ‌ர்க‌ளாக‌வே எடுத்துக் கொள்கின்ற‌ன‌ர்.//
திருச்சிக்காரரே,
நாங்களும் ஆராய்ச்சி செய்ய உரிமை உள்ளவர்கள்தான். எங்கள் ஆராய்ச்சியின் முடிவுதான் மேற்கூறிய பேய் பிசாசு விஷயமெல்லாம்.

Will Continue,
Ashok

Comment by Mr. Chillsam

// திருச்சிக்காரரே, நாங்களும் ஆராய்ச்சி செய்ய உரிமை உள்ளவர்கள்தான்;எங்கள் ஆராய்ச்சியின் முடிவுதான் மேற்கூறிய பேய் பிசாசு விஷயமெல்லாம்…//

ஆம்,நண்பர் அசோக் அவர்களே…இது என்னுடைய அனுபவம் சார்ந்த உண்மையாகும்; கருப்பண்ண சாமி என்று புகழப்படும் தீயசக்தியை கோபப்படுத்தினால் அது செய்யும் துஷ்டத் தனங்களை பலர் அனுபவித்ததை நேரில் கண்டிருக்கிறேன்;

இணைப்பு- 2

ப‌குத்த‌றிவை விட்டு வில‌கி விட்டால்

இறைவ‌ன் இருக்கிறான் என்று “ந‌ம்பி” விட்டால்,

ந‌ம்புகிரோம் என்று த‌ப்பித் த‌வ‌றி சொல்லி விட்டால்,

அதை அடிப்ப‌டையாக‌ வைத்து எவ்வ‌ள‌வு தூர‌ம் காட்டு மிராண்டி, வெறுப்புக் க‌ருத்துக்க‌ளுக்கு அடிமையாக்க‌ப் ப‌ட்டு விடும் வாய்ப்பு உள்ளது என்ப‌தைக் காட்டவே இந்த‌க் க‌ட்டுரை – Thiruchchikkaaran

இணைப்பு- 3  (Feb 6, 2010)

நண்பர்கள் பலரும் நம் மேல் ஆத்திரம் காட்டுகின்றனர். அதற்கான காரணம் என்னவாக இருக்க கூடும்?

நாம் எந்த மதத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சி காட்டவில்லை. ஒவ்வொரு மார்க்கத்திலும் கூறப்பட்டுள்ள நல்ல கருத்துக்களை பாராட்டி வரவேற்கிறோம். அமைதியாக வழிபாடு செய்வதை நாம் குறை கூற வில்லை. நாமும் அவர்களுடன் சேர்ந்து நல்லிணக்க அடிப்படையில் வழிபடத் தயார் என்றும் சொல்லி விட்டோம். இப்படிப் பட்ட நிலைப்பாட்டிலே நம் மீது இவ்வளவு கோவம் வர வேண்டிய அவசியம் என்ன?

வெவ்வேறு மார்க்கங்களைப் பின்பற்றுபவர்களிடம் நல்லிணக்கத்தை உருவாக்கும் வகைக்கான முயற்ச்சிகளை நாம் எடுக்கிறோம். ஆனால் தன் மார்க்கம் மட்டுமே உண்மையானது, பிற மார்க்கத்தினர் கடவுளாக வணங்க்குபவரை இழிவு செய்வோம், அதனால் சண்டை வந்தாலும் பரவாயில்லை என்கிற கோட்பாட்டு சிலரின் மனதிலே திணிக்கப் பட்டு விட்டது – அந்த கோட்பாட்டுக்கு இடையூறாக நம்முடைய சமரசக் கருத்துக்கள் மக்களிடையே நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்தினால், வெறுப்புக் கருத்துக்களை மக்கள் ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவே நம் மீது ஆத்திரம் வருவதாகவே நாம் கருத வேண்டியுள்ளது.

நம் அனைவருக்கும் சிந்திக்கும் திறன் உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறேன். உங்களின் சிந்தனையைத் தூண்டுவதே என் நோக்கம்.

Advertisements

171 Responses to "இறைவ‌ன் இருக்கின்றானா- 2"

அன்பு திருச்சிகாரன்,

நல்லா சொல்லி இருக்கிறீர்கள், ஆனால்…. மதத்தை தேடுவதில் இறைவனை மறந்துவிடுகிறோம்… உண்மையில் அதுதான் எங்கும் நடந்து கொண்டுள்ளது… நீங்களும் பாருங்களேன், இறைவன் இருக்கிறானா என்று கேட்டுவிட்டு மதத்தை ஒப்பிடுவதில் இறங்கிவிட்டீர்கள், எல்லா மதமும் ஒன்றையே கூறி இருந்தால் பல்வேறு மதங்களே இருக்காது, மதததை மறந்துவிட்டு கடவுளை தேடுவோம்…

மற்றபடி… சில கருத்துக்கள் மிகவும் நன்றாய் இருக்கிறது
<<>>

<<>>>

வழ்த்துக்கள் இன்னும் அதிகமாக எழுதவும்… தேடவும்.

ந‌ன்றி திரு ம‌ஸ்தான் அவ‌ர்க‌ளே,

//எல்லா மதமும் ஒன்றையே கூறி இருந்தால் பல்வேறு மதங்களே இருக்காது//

முக்கிய‌மான‌ க‌ருத்தை வெளியிட்டு இருக்கிறீர்க‌ள். அப்ப‌டி வேறுபாடு காண‌ப்ப‌டும் போதிலும், எந்த‌ வ‌கையில் எல்லாம் ந‌ல்லிண‌க்க‌த்தை அனுச‌ரிக்க‌ இய‌லும் என்ப‌தை ப‌ற்றி நாம் சிந்த‌னை செய்வோம்.

//மதததை மறந்துவிட்டு கடவுளை தேடுவோம்… //

மிக‌வும் சிற‌ப்பான‌ க‌ருத்து! இந்த‌க் க‌ருத்து நீங்க‌ள் ம‌னித‌ர்க‌ளின் ந‌ன‌மையை ம‌ற‌க்காத‌வ‌ர் என்ப‌தையே காட்டுகிற‌து.

க‌ருத்தை ப‌திவு இட்ட‌த‌ற்க்கு ந‌ன்றி. தொட‌ர்ந்து உங்க‌ளின் க‌ருத்துக்களை ப‌தித்து வாருங்க‌ள்.

நண்பர் திருச்சிக்காரன்,
பதிவு அருமை . ஆனால் ,
//இந்து புத்த‌ ச‌ம‌ண‌ ம‌த‌ங்க‌ளுக்கு இடையிலும் க‌ருத்து வேறுபாடுக‌ள் இருந்த‌ போதிலும், அவ‌ர்க‌ளுக்கிடையிலான மோத‌ல் க‌ருத்து அடைப்ப‌டையிலே வாக்கு வாத‌ம், ஆராய்ச்சி என்ற‌ வ‌கையிலே இருந்த‌தே அல்லாம‌ல், ம‌க்க‌ள் ப‌ங்கு பெற்ற‌ ஆயுத‌ப் போராட்ட‌மாக‌ இருக்க‌வில்லை என்ப‌தை ஒரு உதார‌ண‌மாக‌ காட்டுகிறோம்.//
எத்தனையோ சமண மதத்தவரை கழுவில் எற்றினார்களே சைவ அரசர்கள் .அரசர்களே இந்த வேலைகளை செய்ததால் மக்கள் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிருக்கலாம் .

ந‌ண்ப‌ர் ச‌ங்க‌ர் அவ‌ர்க‌ளே,
ந‌ன்றி.

சைவ‌ அர‌சர்க‌ள் ச‌மண‌ துற‌விக‌ளைக் க‌ழுவில் ஏற்றி இருந்தால் அதுவும் ச‌கிப்புத் த‌ன்மை இல்லாத‌ காட்டு மிராண்டி செய‌லே.

ஆனால் சைவ‌ அர‌சர்க‌ள் ச‌ம‌ண‌த் துற‌விக‌ளையோ அல்ல‌து ச‌ம‌ண‌ர்க‌ளையோ க‌ழுவில் ஏற்றியோ, வேறு வ‌கையிலோ சித்திர‌வ‌தை செய்த‌தாக‌வோ, கொன்ற‌தாக‌வோ ச‌ரித்திர‌த்தில் குறிப்புக‌ள் இல்லை.

ச‌ம‌ண‌ர்க‌ள் தங்க‌ள் மத‌த்தின் வ‌ர‌லாற்றை அவ‌ர்க‌ளே பதிவு செய்து உள்ள‌ன‌ர். அதிலும் இது போன்ற‌ நிக‌ழ்ச்சி ந‌ட‌ந்த‌தாக‌ ப‌திவு இல்லை. ஒரு கொடும் செய‌ல் ந‌ட‌ந்து இருந்தால், அத‌னால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அதை க‌ண்டிப்பாக‌ ப‌திவு செய்து இருக்க‌ கூடும் என்றே நினைக்கிறேன்.

ம‌ற்ற‌ப‌டி இந்து ச‌ம‌ய‌த்தை பின்ப‌ற்றிய‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் ச‌கிப்புத் த‌ன்மையுட‌ன் இருந்தார்க‌ள் என்று நான் கூற வர‌வில்லை.

தொட‌ர்ந்து உங்க‌ளின் க‌ருத்துக்களை ப‌தித்து வாருங்க‌ள்.

“தங்களுடைய நம்பிக்கை மட்டுமே இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதானாலும் நம்பப் பட்டு, பின்பற்றப் பட வேண்டும், இதற்காக பிற மதங்கள் எல்லாம் கண்டிக்கப் பட்டு ஒழிக்கப் பட வேண்டும் என்பதுமான “அன்பு” பிரச்சாரத்தை, மக்களின் மூளைகளில் ஆணியடித்தனர்”

இந்த மேட்டர் தான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம்.

கொஞ்சம் லோக்கலா சொல்லணும்னா….

என் பொண்டாட்டி பத்தினி சொல்றது ஓகே…..
என் பொண்டாட்டி மட்டும் தான் பத்தினி சொல்றது தான் பிரச்சினைக்கு அடிப்படையே…….

தெளிவான கட்டுரை. வாழ்த்துக்கள்!

ந‌ண்ப‌ர் திரு, க‌பில‌ன் அவ‌ர்க‌ளே,

த‌ள‌த்தைப் பார்வை இட்டு க‌ருத்து தெரிவித்த‌த‌ற்க்கும், பாராட்டுத‌ல்க‌ளுக்கும் ந‌ன்றி.

தொட‌ர்ந்து உங்க‌ளின் க‌ருத்துக்களை ப‌தித்து வாருங்க‌ள்.

அன்பு நண்பரே.
மிகத் தெளிவாக உங்கள் நிலைப்பாட்டை விளக்கி இருக்கிறீர்கள்.
தொடர்ந்து எழுதுங்கள். எனக்கு ஏதாவது மாறுபாடுகள் தெரிந்தால் அவற்றை மனம் விட்டு பகிர்ந்து கொள்வேன் என்பதை முன்கூட்டியே தெளிவு படுத்தி விடுகிறேன்.

நன்றி.

அன்புடன் – பி. ஜி.எஸ். மணியன்.

ந‌ண்ப‌ர் திரு, பி. ஜி.எஸ். மணியன் அவ‌ர்க‌ளே,

த‌ள‌த்தைப் பார்வை இட்டு க‌ருத்து தெரிவித்த‌த‌ற்க்கும், பாராட்டுத‌ல்க‌ளுக்கும் ந‌ன்றி.

தொட‌ர்ந்து உங்க‌ளின் க‌ருத்துக்களை ப‌தித்து வாருங்க‌ள்.

Your criticism is as valuable to us as that of appreciation.

Dear Trichikar,
Nobody cannot prevent you to do your experiment about God. Don’t come to any conclusion based on others saying, you do your own experiment, own thinking and come to conclusion whether God is available or not.
True spritual person either Hindu, Muslim or Christian or atheist is very very selfish person and lives only for and only for his way and he definetly know “All Gods are not equal and only his God(s) is best” or only his ways are best.
The term all Gods are equal is preached by politician to get all votes of all religions
Morning they goto Hindu temple to accept “parivattam”, afternoon they goto
church to cut the cake and evening they will go to darka for ramjan. Religions are for individuals and not for society you cannot ask or not even dream that everyone to accept same idea about God. The motto of our nation is “unity in diversity” not “unity in unity”
One of the meaning of 33 crores of Gods in Hindu is every person in the world has his own
God that means every one having his own thought, emotion and will about God.
If you think religion is the reason for all problems it is also the reason for many good things also. It depends upon the person. Asking everyone to come to same idea about God is like asking everyone to do same type of work.

Dear Mr. SANDOSH,

Welcome to our site and thanks for participation.

//If you think religion is the reason for all problems it is also the reason for many good things also//

The good things due to religions were nullified by the bad things done in the name of the religions. I only say to do good things to pepole due to religions and leave the bad things.

//No body cannot prevent you to do your experiment about God. Don’t come to any conclusion based on others saying, you do your own experiment, own thinking and come to conclusion whether God is available or not.//

There are various types of punishments including death sentence for denial of existence of God in countries with strong religious sentiments in the past and now as well. As Indian soceity is relatively a tolerant soceity we can say that there is no God now.

//It depends upon the person. Asking everyone to come to same idea about God is like asking everyone to do same type of work//

I am not asking anyone to accept the same idealogy. I am not compelling any one. I am only saying its not correct to infuriate others by calling their Gods as Devils and spreading hatreness for other religions. This attitude creates animosity between soceities and consequent bloodshed.

//he definetly know “All Gods are not equal and only his God(s) is best” or only his ways are best.//

I neither say all Gods are equal, nor say some Gods are superior – when no God is proved or verified, I suggest to refrain from cliaming that this God alone is superior and thus lead into conflict. Instead pray your God peacefully, amicably.

//Morning they goto Hindu temple to accept “parivattam”, afternoon they goto
church to cut the cake and evening they will go to darka for ramjan. Religions are for individuals and not for society you cannot ask or not even dream that everyone to accept same idea about God. //

We are common people, we are not acting to gain votes. I never ask every one to accept the same idea about GOD. I only say that dont do venemous camapaign against all other religions and thus spoil the peace.

//The motto of our nation is “unity in diversity” not “unity in unity”//

THANK YOU. This motto is correct, we want this motto in word and spirit. The unity can be acheived in a diversified socity by tolerance only. TOLERANCE is one of the pillars of our nation. I request all to keep our mottos, and keep our country as INDIA, please do not convert it as another Philosthine by fundemenatalist and dogmatic approach.

எனது தாழ்மையான வேண்டுகோளாக நான் நண்பர் திருச்சிக்காரனுக்கு சொல்லிக்கொள்ள‌ விரும்புவது என்னவென்றால் “ஒரு கண்ணில வெளக்கெண்ணெயும் மறு கண்ணில சுண்ணாம்பும்” என்பார்களே,அதுபோல நீங்கள் செயல்படாமல் நடுநிலையுடன் ஆராய வேண்டுகிறேன்;

உங்களுக்குப் பிடித்தமான துறவியான விவேகானந்தரையே எடுத்துக் கொள்ளுங்கள்; அவர் இந்தியாவின் மக்கள் தொகை வெறும் 30 கோடியாக இருந்தபோதே இந்தியாவிலிருந்த மூடநம்பிக்கைகளையும் பல்வேறு சடங்காச்சாரங்களையும் எந்த அளவுக்கு கண்டித்தார்;

சமூக மேம்பாட்டுக்கு அவர் கொடுத்த தீர்வு என்ன? அதையொட்டியே கிறித்துவ துறவிகளும் செயல்பட்டனர் என்பதைத் தாங்கள் ம‌றுக்க முடியுமா?

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=33589255

ச‌கோத‌ர‌ர் Chillsam அவ‌ர்க‌ளே,

பிர‌ச்சினை என்ன‌ என்று விருப்பு வெறுப்பு இல்லாம‌ல் ஆராய்ந்து எழுதுவ‌து ந‌டு நிலையாக‌ தெரிவ‌து க‌டின‌ம்.

நாம் கிறிஸ்த்துவ‌ர்க‌ளை ம‌ட்டும் தாக்குவ‌து போல‌ நீங்க‌ள் உங்க‌ள் தளத்திலே எழுதி இருக்கிறீர்க‌ள்.
சிலுவைப் போர்க‌ள் என்று நான் குறிப்பிட்ட‌தால் உங்‌க‌ளுக்கு அப்ப‌டி தோன்ற‌லாம்.

போரில் கிறிஸ்த‌வ‌ர், இசுலாமிய‌ர், யூத‌ர் எல்லோரும் ப‌ங்கு கொண்ட‌ன‌ர். ஆனால் சிலுவைப் போர்க‌ள் (Crusade wars) என்று வ‌ர‌லாற்று ஆசிரிய‌ர்க‌ள் தான் பேர் வைத்து உள்ளன‌ர். அத‌னாலே அந்த‌ப் பேரையே நானும் குறிப்பிட‌ வேண்டி உள்ள‌து.

//கடவுள் இருக்கிறாரா என்று ஆராய்ச்சி செய்யும் உரிமையை எங்களுக்கு தாருங்கள் என்றுதான் கேட்கிறோம்.//
யார் உங்களுக்கு இந்த உரிமையை தரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்களுக்கு அந்த உரிமை இல்லையா?
//நாம் கேட்பது சிந்தனை சுததந்திரம், சிந்திக்கும் உரிமை அவ்வளவுதான்.நாம் ந‌ம்பிக்கையாள‌ர்களை க‌ட்டாய‌ப் ப‌டுத்த‌வோ, தொந்த‌ர‌வு செய்ய‌வோ, மிர‌ட்ட‌வோ, ச‌பிக்க‌வோ செய்ய‌வில்லை‍.//
உங்கள் சிந்தனை சுதந்திரத்தை யார் பறித்தது?
உங்களுக்கு சிந்திக்கவும் ஆராயவும் சகல உரிமைகளும் சுதந்திரமும் உள்ளது நண்பரே.
Will Continue….

Ashok

//பிற‌ மார்க்க‌ங்க‌ள் த‌ங்க‌ளுக்கு க‌ட‌வுளாக‌ தேர்ந்து எடுத்துக் கொண்ட‌வ‌ர்க‌ளை பேய், பிசாசு என்று இக‌ழும் உரிமையையும் அவ‌ர்க‌ளாக‌வே எடுத்துக் கொள்கின்ற‌ன‌ர்.//
திருச்சிக்காரரே,
நாங்களும் ஆராய்ச்சி செய்ய உரிமை உள்ளவர்கள்தான். எங்கள் ஆராய்ச்சியின் முடிவுதான் மேற்கூறிய பேய் பிசாசு விஷயமெல்லாம்.
பலர், இயேசுவை சாதாரண மனிதன், அல்லது ஒரு ஞானி, அல்லது அப்படி ஒருவர் இல்லவே எல்லை என்று அவர்கள் ஆராய்ச்சி முடிவை கூறும்போது ஒத்துக்கொள்ளும் நீங்கள், எந்த அடிப்படையில் கிறிஸ்துவர்கள் கூற்றை வெறுக்கிறீர்கள்?
Will Continue,
Ashok

Dear Brother Ashokji,

//பிற‌ மார்க்க‌ங்க‌ள் த‌ங்க‌ளுக்கு க‌ட‌வுளாக‌ தேர்ந்து எடுத்துக் கொண்ட‌வ‌ர்க‌ளை பேய், பிசாசு என்று இக‌ழும் உரிமையையும் அவ‌ர்க‌ளாக‌வே எடுத்துக் கொள்கின்ற‌ன‌ர்.//
திருச்சிக்காரரே,
நாங்களும் ஆராய்ச்சி செய்ய உரிமை உள்ளவர்கள்தான். எங்கள் ஆராய்ச்சியின் முடிவுதான் மேற்கூறிய பேய் பிசாசு விஷயமெல்லாம்.//

உங்க‌ள் பின்னூட்ட‌ம் நம் முன்னே உள்ள‌ ப‌ணி எவ்வ‌ள‌வு க‌டின‌மான‌து என்ப‌தைக் காட்டுகிர‌து.

இவ்வள‌வு தூர‌ம் நாம் எழுதியும், நீங‌க‌ள் பிற‌ மார்க்க‌த்த‌வ‌ர் கட‌வுளாக‌ வ‌ண‌ங்குப‌வ‌ரை பேய், பிசாசு என‌க் கூறுவோம் என‌ சொல்கிறீர்க‌ள். இது பிற‌ மார்க்க‌த்த‌வ‌ருக்கு ஆத்திர‌மூட்டும் செய‌ல். இது மார்க்க‌ங்க‌ளுக்கு இடையிலே மோத‌லை உருவாக்கும். மீண்டும், மீண்டும் சொல்கிறோம், ம‌னித‌த்தை வாழ‌ விடுங்க‌ள். கடைசி ம‌னித‌னின் இர‌த்த‌மும் ருசி பார்க்க‌ப் ப‌டும் வ‌ரையிலே உங்க‌ள் ம‌த‌ வெறியை வ‌ள‌ர்க்காதீர்க‌ள்.

//நாங்களும் ஆராய்ச்சி செய்ய உரிமை உள்ளவர்கள்தான். எங்கள் ஆராய்ச்சியின் முடிவுதான் முடிவுதான் மேற்கூறிய பேய் பிசாசு விஷயமெல்லாம்.//

உங்க‌ளிட‌ம் என்ன‌ ஆராய்ச்சி உள்ள‌து? நேர் மின்னோட்ட‌ம் போல‌ நிரூபிக்க‌ முடியுமா? வெறும் ந‌ம்பிக்கையின் அடிப்ப‌டியிலே சொல்கிறீர்க‌ள்.

//இயேசுவை சாதாரண மனிதன், அல்லது ஒரு ஞானி, அல்லது அப்படி ஒருவர் இல்லவே எல்லை என்று அவர்கள் ஆராய்ச்சி முடிவை கூறும்போது ஒத்துக்கொள்ளும் நீங்கள்//

இயேசுவைக் குறித்து அபாண்ட‌மாக‌ கூறினால் அதை வ‌ன்மையாக‌க் க‌ண்டிக்கிரோம். அவ‌ர்க‌ளுக்கும் புத்தி சொல்லிகிரோம். இயேசு ஒரு ஞானி என்று சொன்னால் உங்க‌ளுக்கு என்ன‌ க‌ஷ்ட‌ம், அவ‌ர் சிற‌ந்த‌ க‌ருத்துக்க‌ளை வ‌ழ‌ங்கிய‌வ‌ர் தானே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை உண்மையா என்று அதிக‌ம் ஆராய்வ‌து மேலை நாட்ட‌வ‌ர் தான். இயேசு கிரிஸ்து என்ப‌வ‌ர் க‌ற்ப‌னை என்று சில‌ர் கூறிய‌ போது, அதை எதிர்த்து அப்ப‌டி முடிவு க‌ட்டி விட‌ முடியாது என்று நான் வாதாடிய‌த‌ற்க்கு எழுத்து சான்று உள்ளது. என‌வே நீங்க‌ள் கூறுவ‌து உண்மைக்கு புற‌ம்பான‌து. அவ‌ச‌ரத்திலே அவ‌தூறை அள்ளி வீசுகிறீர்க‌ள்.

உங்க‌ளால் பிற‌ மார்க்க‌த்தைக் க‌ண்டிக்காம‌ல், பிற‌ தெய்வ‌ங்க‌ளை இக‌ழாம‌ல், வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை ப‌ர‌ப்பாம‌ல், மோத‌லை உருவாக்காம‌ல் உங்க‌ளின் க‌ட‌வுள் பிர‌ச்சார‌த்தை செய்ய‌ முடியாது என்றால், அப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌ட‌வுள் ந‌ம்பிக்கை ம‌னித‌ ச‌முதாய‌த்துக்கு எதிரி

// திருச்சிக்காரரே, நாங்களும் ஆராய்ச்சி செய்ய உரிமை உள்ளவர்கள்தான்;எங்கள் ஆராய்ச்சியின் முடிவுதான் மேற்கூறிய பேய் பிசாசு விஷயமெல்லாம்…//

ஆம்,நண்பர் அசோக் அவர்களே…இது என்னுடைய அனுபவம் சார்ந்த உண்மையாகும்; கருப்பண்ண சாமி என்று புகழப்படும் தீயசக்தியை கோபப்படுத்தினால் அது செய்யும் துஷ்டத் தனங்களை பலர் அனுபவித்ததை நேரில் கண்டிருக்கிறேன்;

//பலர், இயேசுவை சாதாரண மனிதன், அல்லது ஒரு ஞானி, அல்லது அப்படி ஒருவர் இல்லவே எல்லை என்று அவர்கள் ஆராய்ச்சி முடிவை கூறும்போது ஒத்துக்கொள்ளும் நீங்கள், எந்த அடிப்படையில் கிறிஸ்துவர்கள் கூற்றை வெறுக்கிறீர்கள்? //

இயேசுகிறிஸ்துவைக் குறித்த திருச்சிக்காரனுடைய அனைத்து கூற்றுகளுடனும் அவர் அறிந்துக் கொள்ளவேண்டிய மிக முக்கியமான உண்மை என்னவென்றால் இயேசு இன்னும் உயிருடனிருந்து விண்ணுலகில் நமக்காகப் பணிசெய்துக் கொண்டிருக்கிறார்; இது நம்பிக்கை சார்ந்த விஷயம் மட்டுமல்ல,அநேகருடைய அனுபவமாகும்;

சிலையாக நாட்டப்பட்டும், சித்திரமாகவும் காலங்காலமாக வணங்கப்பட்டும் வந்ததொரு உருவத்தின் வடிவில் அல்லாமல் மகாஜோதியாக அநேகரை சந்தித்து மரணத்தினின்றும் தற்கொலையினின்றும் காப்பாற்றிக் கொண்டிருப்பவர் இயேசுகிறிஸ்து எனும் மெய்யான தெய்வம்;அவர் சொல்லிச்சென்ற தம் வாக்குகளையும் உயிருடனிருப்பதாலேயே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்..!

ச‌கோத‌ர‌ர் chillsam அவ‌ர்க‌ளே

//ஆம்,நண்பர் அசோக் அவர்களே…இது என்னுடைய அனுபவம் சார்ந்த உண்மையாகும்; கருப்பண்ண சாமி என்று புகழப்படும் தீயசக்தியை கோபப்படுத்தினால் அது செய்யும் துஷ்டத் தனங்களை பலர் அனுபவித்ததை நேரில் கண்டிருக்கிறேன்;//

வெறுப்பு பிர‌ச்சார‌த்தை, பிற‌ர் தெய்வ‌ங்க‌ளாக‌ க‌ருதுப‌வ‌ரை இக‌ழும் செய‌லை இங்கேயே செய்து காட்டி இருக்கிறீர்க‌ள்.

கருப்ப‌ண்ண‌ சாமியை வ‌ண‌ங்கும் எவ‌ரும் அல்லாவையோ, இயேசு கிறிஸ்துவையோ. ஜெஹோவாவையோ, அஹுரா ம‌ஸ்தாவையோ இக‌ழ‌ நினைப் ப‌தில்லை. அமைதியாக‌ வேண்டுகிறான். க‌ருப்ப‌ண்ண‌ சாமி என்னும் கான்செப்ட் அவ‌ன் ம‌ன‌தில் வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை உருவாக்க‌வில்லை.
ஆனால் ச‌கிப்புத் த‌ன்மையையும், விட்டுக் கொடுக்கும் த‌ன்மையையும், போதித்த‌ இயேசு கிறிஸ்துவை வ‌ண‌ங்குவ‌தாக கூறிக் கொண்டே, பிற‌ர் வ‌ணங்கும் தெய்வ‌ங்க‌ளை இக‌ழ்ந்து பொல்லாப்பு செய்து, உங்க‌ளை அறியாம‌லேயே இயேசு கிறிஸ்துவுக்கு கெட்ட‌ பெய‌ர் வாங்கிக் கொடுக்கிறீர்க‌ள்.

அதாவ‌து இயேசு கிறிஸ்து உங்க‌ளுக்கு போதித்த‌து, யூத‌ர்க‌ளூக்கு போதித்த‌து போல‌ க‌ற்பாறையில் விழுந்த‌ விதை போல‌ ஆகி விட்ட‌து.

இந்துக்க‌ள் பெரும்பான்மையாக‌ வாழும் இந்தியாவில் அவ‌ர்க‌ளின் தெய்வங்க‌ளை இக‌ழ்ந்து பேசினாலும், அவ‌ர்க‌ளில் பெரும்பான்மையின‌ர் அதை பொருட்ப‌டுதாம‌ல் செல்லும் அளவுக்கு அவ‌ர்க‌ளின் ம‌த‌ம் ச‌கிப்புத் த‌ன்மையை அவ‌ர்க‌ளுக்கு உருவ‌க்கி உள்ள‌து. ஆனால் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் தெய்வங்க‌ள் இக‌ழ‌ப் ப‌டுவ‌தை க‌ண்டு பொறுமை இழ‌க்கும் நிலைக்கு வ‌ந்து விட்ட‌ன‌ர்.

ம‌த‌ வெறியால் இந்தியாவை பாலஸ்தீன‌ம் ஆக்க‌ வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆறாவது அறிவு இல்லாத ஒரு விலங்கிற்கு கணிதமோ, அறிவியலோ கற்று தரமுடியாது. நேர்மின்னோட்டதையும், கற்றுதரமுடியாது.
அதைப்போல, ஆத்துமா இறந்த நிலையில் உள்ளவர்க்கு, உண்மையான ஆன்மீகத்தை கற்றுதரமுடியாது.
ஆகமொத்தத்தில், நாங்கள் காட்டும் ஆதாரங்கள் உங்கள் ஆத்துமா உயிர்க்கும்வரை புரியாது.
Will Continue,
Ashok

// பிர‌ச்சினை என்ன‌ என்று விருப்பு வெறுப்பு இல்லாம‌ல் ஆராய்ந்து எழுதுவ‌து ந‌டு நிலையாக‌ தெரிவ‌து க‌டினம் //

தாங்கள் உலகளாவிய பார்வையை விட்டு இந்திய சமுதாயத்தின் தேவை சார்ந்த கருத்தினை ஆராய்ந்து பாருங்களேன்..!

நம்பிக்கை என்ற போர்வையில் இந்து மார்க்கத்தின் காரியங்களை கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக்கொள்ளும் நீங்கள் கிறித்தவத்தை மட்டும் ஆராய்ச்சி கோணத்தில் பார்ப்பது ஏன்?

நான் சொல்லுகிறேன்,இந்தியாவுக்கு நாகரீகமும் செழிப்பும் வரக் காரணமே கிறித்தவ துறவிகளின் தியாகம் தான்..!

கல்வியையும் சுகாதாரத்தையும் கலாச்சாரத்தையும் குக்கிராமங்கள் வரையிலும் கொண்டு சென்றதில் கிறித்தவம் மாபெரும் பங்காற்றியிருப்பதை தாங்கள் மறுக்கமுடியுமா?

கிறித்தவர்களை உள்ளே விடாமல் எதிரியாக பாவித்து துரத்துவது யார் தெரியுமா,சாராய வியாபாரிகளும் மந்திரவாதிகளும் தான்..!

ஏனெனில் கிறித்தவம் நுழைந்த கிராமங்களிலெல்லாம் மக்கள்
தெளிவடைகிறார்கள்; கெட்ட நடத்தையுடைய முரடர்கள் திருந்துகிறாகள்;இந்த மார்க்கம் தேவையற்ற சடங்குகளிலிருந்தும் தோஷம்,பரிகாரம் சம்பந்தமான அச்சங்களிலிருந்தும் முழுமையான விடுதலையினைத் தருகிறது என்பது அனுபவப்பூர்வமான உண்மையாகும்;

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=33589255

//நம்பிக்கை என்ற போர்வையில் இந்து மார்க்கத்தின் காரியங்களை கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக்கொள்ளும் நீங்கள் கிறித்தவத்தை மட்டும் ஆராய்ச்சி கோணத்தில் பார்ப்பது ஏன்?//

இந்து ம‌த‌த்தின‌ரின் ப‌ல‌ ந‌ம்பிக்கைக‌ளை விம‌ரிசித்து எழுதி இருக்கிறேன். இந்து ம‌தத்தையும் ப‌குத்த‌றிவு கோண‌த்திலே அணுகி அங்கும் ப‌ல ந‌ம்பிக்கைவாதிக‌ளுட‌ன் விவாத‌ம் செய்து வ‌ருகிறோம். தொட‌ர்ந்தும் எழுதுவோம். இந்துக்க‌ள் ப‌லரும் என்னை டுபாக்க்கூர் பார்ட்டி என‌வும், கிறிஸ்த‌வ‌ர்க‌ளிட‌ம் காசு வாங்கிக் கொண்டு எழுதுப‌வ‌ன் என்றும் திட்டும் அள‌வுக்கு அவ‌ர்க‌ள‌து ந‌ம்பிக்கைக‌ளை விம‌ரிசித்து இருக்கிறேன்.

//கல்வியையும் சுகாதாரத்தையும் குக்கிராமங்கள் வரையிலும் கொண்டு சென்றதில் கிறித்தவம் மாபெரும் பங்காற்றியிருப்பதை தாங்கள் மறுக்கமுடியுமா//

அவ‌ர்க‌ளூக்கு ந‌ன்றிக‌ள் பல‌. ந‌ல்ல‌ ச‌மார‌த்த‌ன் பிர‌தி ப‌ல‌ன் பார்க்காம‌ல் யூத‌னுக்கு உத‌வின‌து போல‌ செய்த‌வ‌ர்க‌ளுக்கு ந‌ன்றிக‌ள்.

நானும் ‌ கிறிஸ்த‌வ‌ ப‌ள்ளிக‌ளில் ப‌டி‌த்த‌வ‌ன் தான். நெத்தியிலே திருநீறு இடாம‌ல் வ‌குப்புக்கு போனால், இன்னிக்கு சாமி கும்புட‌லையா என்று கேட்கும் அன்பும், நாக‌ரீக‌மும், ப‌ண்பும் உடைய‌ கிறிஸ்த‌வ ஆசிரிய‌ர்க‌ளையே க‌ண்டு இருக்கிறேன். ஆனால் இப்போது இவ்வ‌ளவு ம‌த‌ வெறியையும், ம‌த‌க் காழ்ப்புண‌ர்ச்சியையும் தான் பார்க்கிறேன்.

//இந்தியாவுக்கு நாகரீகமும் செழிப்பும் வரக் காரணமே கிறித்தவ துறவிகளின் தியாகம் தான்..!//

நாகரீக‌த்தை சொல்லிக் கொடுக்க‌ வேண்டிய‌துதான். யாருக்கு யார் சொல்லிக் கொடுப்ப‌து? ப‌ல்லாயிர‌ம் வ‌ருட‌மாக‌ திரும‌ண‌ம், குடும்ப‌ வாழ்க்கை என்று அமைதியாக‌ வாழும் இந்திய‌ நாக‌ரீக‌த்தை மேலை நாடுக‌ளுக்கு சொல்லிக் கொடுங்க‌ள். வர‌ம்ப‌ற்ற‌ விப‌ச்சார‌ம், குடும்ப‌ வாழ‌க்கை சீர்குலைவு என்ற‌ நாக‌ரீக‌த்தில்‍ இருப்ப‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் தான். இது விட‌ய‌மாக‌ நான் இன்னும் பல‌ க‌ருத்துக்களை கூற‌ இய‌லும். ஆனாலும் த‌விர்க்கிறேன்.

செழுமையை இந்தியாவில் இருந்து சுர‌ண்டிய‌து யார்? ப‌ல‌ பில்லிய‌ன் செழுமைக‌ளை சுர‌ண்டி விட்டு சில‌ ஆயிர‌ம் செழுமைக‌ளை கொடுத்த‌த‌ற்க்கு ந‌ன்றி.

//கிறித்தவர்களை உள்ளே விடாமல் எதிரியாக பாவித்து துரத்துவது யார் தெரியுமா,சாராய வியாபாரிகளும் மந்திரவாதிகளும் தான்..!

ஏனெனில் கிறித்தவம் நுழைந்த கிராமங்களிலெல்லாம் மக்கள்
தெளிவடைகிறார்கள்; கெட்ட நடத்தையுடைய முரடர்கள் திருந்துகிறாகள்;இந்த மார்க்கம் தேவையற்ற சடங்குகளிலிருந்தும் தோஷம்,பரிகாரம் சம்பந்தமான அச்சங்களிலிருந்தும் முழுமையான விடுதலையினைத் தருகிறது என்பது அனுபவப்பூர்வமான உண்மையாகும்;//

நீங்க‌ள் பர‌ப்புவ‌து கிறிஸ்தவமா? கிறிஸ்தவம் என்ற‌ பேரிலே, இயேசு கிறிஸ்துவின் பெய‌ராலே, அவ‌ருக்கு ச‌ம்ப‌ந்த‌மே இல்லாத‌ க‌ருத்துக்க‌ளை, வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை, காட்டு மிராண்டிக் க‌ருத்துக்க‌ளை அறிந்தோ, அறியாம‌லோ ப‌ர‌ப்பி வ‌ருகிறீர்க‌ள்.

சகோதரர் chilsm அவர்களே.
//நம்பிக்கை என்ற போர்வையில் இந்து மார்க்கத்தின் காரியங்களை கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக்கொள்ளும் நீங்கள் கிறித்தவத்தை மட்டும் ஆராய்ச்சி கோணத்தில் பார்ப்பது ஏன்?//

நண்பர் திருச்சிக்காரன் அவர்கள் கிரித்தவத்தை மட்டும் ஆராய்ச்சிக் கோணத்தில் பார்க்கவில்லை.
அவர் கூறுவது போல பிற சமயங்களின் போற்றுதலுக்குரிய தெய்வங்களை சைத்தான்கள் என்று
குறிப்பிடுவது நீங்கள்தானே? இந்த விவாதமே “இறைவன் இருக்கிறானா?” என்பதுதானே தவிர
கிறித்தவம் இருக்கிறதா? இஸ்லாம் இருக்கிறதா? இந்து மதம் இருக்கிறதா? என்பது அல்ல.

அடுத்து நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள்?

//இந்தியாவுக்கு நாகரீகமும் செழிப்பும் வரக் காரணமே கிறித்தவ துறவிகளின் தியாகம் தான்..!//
அப்படியானால் கிறித்தவம் வருவதற்கு முன்னால் இந்தியர்கள் காட்டு மிராண்டிகளாகவா இருந்திருக்கிறார்கள்?

கிறித்துவம் பிறந்ததே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகத்தான்.

அதற்க்கு முன்பே சிந்து சமவெளி நாகரீகம் – உலகின் மிகப் பழமையான நாகாரீகம் செழித்தோங்கியது
இந்தியாவில் தான்.

“பூஜ்ஜியத்தை” கண்டுபிடித்தவர்களே இந்தியர்கள் தான். கணிதத்திலும், வாழ்வியலிலும், வானவியலிலும்
செல்வச் செழிப்பிலும் மற்றவர்களை விட இந்தியா மேலோங்கி இருந்தது. அதனால் தான் வாணிகமும், வர்த்தகமும் செழித்தோங்கி இருந்தது. இந்தியா எங்கே இருக்கிறது என்றே தெரியாத
மக்கள் இந்தியாவின் செழிப்பை கேள்விப்பட்டு அதனை தேடி வந்தார்கள். அப்படி வந்தவர்தானே வாஸ்கோடகாமா. அவரது வருகைக்கு பிறகுதானே கிறித்தவம் என்ற புதிய மதம் இந்தியாவில் கால் பதித்தது. அதனைக் கூட “இறைவனை அடைய” வழி சொல்லும் இன்னொரு புதிய மார்க்கம் என்ற ரீதியில் பார்த்து பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு அதற்கும் இடம் தந்தவர்கள் தான் நாங்கள்.

இன்னும் சொல்லப்போனால் “இந்தியாவின் செல்வத்தை சுரண்டி கொள்ளை அடிக்க வந்த கூட்டம்” என்றாலும்
அவர்கள் பின்பற்றும் மத நம்பிக்கையில் உள்ள நல்ல விஷயங்களை பாராட்டி ஏற்றுக்கொண்டவர்கள் தான் இந்து சமயத்தினர்.

கிறித்தவ துறவிகளின் தியாகத்தையும் சேவையையும் நாங்கள் மறுக்கவில்லை. மறக்கவும் இல்லை.

ஆனால் என்னவோ அவர்கள் வருகைக்கு முன்பாக இந்தியர்கள் நாகரீகத்திலும் செல்வச் செழிப்பிலும் பின் தங்கி இருந்ததாக சொல்வதை என்னால் மட்டும் அல்ல யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

அவர்களை வரவேற்று இடம் தந்து கிறித்தவம் என்னும் மார்க்கத்துக்கும் இடம் அளித்த பெருந்தமையான நாகரீகம் – ஆங்கிலத்தில் சொல்லவேண்டும் என்றால் “DECENCY ” இந்து சமயத்தவர்களிடம் இருந்ததே எங்கள் நாகரீகத்துக்கு சாட்சி.

கிறித்துவத்தை பரப்பவேண்டும் என்ற நோக்கத்துக்காக அல்லாமல் “செல்வம்” நிறைந்த இந்தியாவுடன்
வர்த்தகத் தொடர்பு வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தியாவில் கால் பதித்தது ஒன்றே
எங்கள் செழிப்புக்கு சாட்சி.

-அன்புடன் மணியன்

திருச்சிக்காரரே…

chillsam இப்படி நாலு கமெண்ட் கொடுத்தார்னா…..நமக்கு வேலை ரொம்ப குறைவு…..Cat is out of the box.

பல கிறித்துவச் சபைகளின் வெளிப்பாடுகளைத் தான் அவர் கருத்தில் சொல்லி இருக்கிறார்.

மதமாற்றத்தின் வேறே மற்ற சமயக் கடவுளரை இழிவுபடுத்தவேண்டும், பழிக்க வேண்டும் என்பது தான் கிறித்துவ போதகர்களின் மையமே. பெரும்பாலான திருச்சபைகளில் போதிப்பதும் இதைத் தான். ஐரோப்பியர்கள் இதனைச் சொல்லிக்கொடுத்து, திருச்சபைகளுக்கு மாசா மாசம் காசு கொடுப்பது இதற்காகத்தான்.

இட்லி சாப்பிடுபவனை, எப்படி பிட்சா உண்ண வைப்பது ? பிட்சா சாப்ப்டு…பிட்சா சாப்ப்டு… என்றால் சாப்பிட மாட்டாங்க என்பது ஐரோப்பியனுக்குத் தெரியும். இட்லி ஒரு விஷம் என்று பிரச்சாரம் செய்தால், இட்லி சாப்பிடுவதை விட்டுறுவான். அதன் பிறகு, பிட்சாவிற்கு மாற்றுவது சுலபமாயிற்றே!

திருச்சிக்காரரே.

நோக்கத்தை விட்டு விலகிப் போகிறது போல தோன்றுகிறது. நீங்கள் எடுத்துக்கொண்ட பொருளே இறைவன் இருக்கிறானா? என்பதுதான். டாபிக் மாறுகிறது. சில்ல்சம் அவர்களுடைய கருத்துக்களுக்கு(?!) இதற்க்கு மேலும்
பதில் அளித்து நேரத்தை வீணாக்க வேண்டாம். நீங்கள் சொல்லவந்ததில் கவனம் செலுத்துங்கள் நண்பரே.,

Dear Brother Manian,

ப‌குத்த‌றிவை விட்டு வில‌கி விட்டால்

இறைவ‌ன் இருக்கிறான் என்று “ந‌ம்பி” விட்டால்,

ந‌ம்புகிரோம் என்று த‌ப்பித் த‌வ‌றி சொல்லி விட்டால்,

அதை அடிப்ப‌டையாக‌ வைத்து எவ்வ‌ள‌வு தூர‌ம் காட்டு மிராண்டி, வெறுப்புக் க‌ருத்துக்க‌ளுக்கு அடிமையாக்க‌ப் ப‌ட்டு விடும் வாய்ப்பு உள்ளது என்ப‌தைக் காட்டவே இந்த‌க் க‌ட்டுரை.

நீங்க‌ள் கவ‌லையே ப‌டாதீர்க‌ள், ச‌கோத‌ர‌ர்க‌ள் அசொக்ஜி, சில்ச‌ம் போன்ற‌வ‌ர்க‌ள், நாக‌ரீக‌ப் பாதைக்கு வ‌ருவார்க‌ள், அல்ல‌து த‌ங்க‌ள் செய‌ல்க‌ள் எவ்வ‌ள‌வு தீமையை உண்டாக்குகிர‌து என்ப‌தையாவ‌து புரிந்து கொள்வார்க‌ள்.

ஹல்லோ.. நீங்க சொல்வதைப் பார்த்தால் “கடவுளை நம்புகிறவர்கள் எல்லாரும் காட்டுமிராண்டிகள்” என்பது போல இருக்கிறதே?

அப்படி எல்லாம் சொல்ல முடியாது. சரி.. சரி.. முதலில் உங்கள் கருத்துக்களை முழுவதுமாக
சொல்லி முடியுங்கள்.

அப்புறம் மாற்றுக்கருத்துக்களை – (கண்டிப்பாக இருக்கும்) – அவற்றில் ஏற்றுக்கொள்ளக் கூடியவைகளாக இருப்பவற்றை நீங்கள் தலை வணங்கி ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.

ச‌கோத‌ர‌ர் ம‌ணிய‌ன் அவ‌ர்க‌ளே,

//ஹல்லோ.. நீங்க சொல்வதைப் பார்த்தால் “கடவுளை நம்புகிறவர்கள் எல்லாரும் காட்டுமிராண்டிகள்” என்பது போல இருக்கிறதே?//….. என்ப‌து போல‌ இல்லையே!

க‌ட‌வுள் இருப்ப‌தாக‌ ந‌ம்பிக் கொண்டு, அமைதியாக‌ அந்த‌க் க‌ட‌வுளை வ‌ண‌ங்கிக் கொண்டு, பிற மார்க்க‌ங்க‌ளை வெறுக்காம‌ல், வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை ப‌ர‌ப்பாம‌ல், பிற‌ருக்கு தீங்கு நினைக்காம‌ல் இருந்தால் அவ‌ர்க‌ளை நாங்க‌ள் குறை சொல்ல‌வில்லை.

அடுத்த‌வ‌ரை இக‌ழாதீர்க‌ள், பிற‌ மார்க்க‌ங்க‌ளின் தெய்வ‌ங்க‌ளை இக‌ழாதீர்க‌ள் என்றுதான் சொல்லுகிரோம்.

ந‌ல்ல‌ க‌ருத்து எங்கிருந்தாலும் ச‌ரி,அதை வ‌ர‌வேற்கிறோம். அதே நேர‌ம் இந்த‌ த‌லை வ‌ண‌ங்கி , கால் வ‌ண‌ங்கி என்று க‌ட்ட‌ளை எல்லாம் எத‌ற்க்கு?

நாமார்க்கும் குடி அல்லோம், ந‌ம‌னை அஞ்சோம் என்றார் திருநாவுக்க‌ர‌ச‌ர்.
ந‌ம்ப‌ த‌லை எல்லாம் வ‌ண‌ங்கா முடி த‌லைங்க‌.

நண்பர் திருச்சிக்காரன்,
என்னையோ சில்சாமையோ வில்லன்களாக, காட்டுமிராண்டிகளாக, அல்லது காமெடியன்களாக காண்பித்தாலும், உலகம் அதை நம்பினாலும். நாங்கள் கிறிஸ்துவை குறித்தோ, எங்கள் வேதம் எங்களுக்கு கற்றுகொடுத்தவைகளை குறித்தோ, வெட்கப்படுவதில்லை, வேதனைபடுவதில்லை.
Once you taste the love of Christ, you will never give the Glory and Praise to anyone / anything apart from Jesus.
Will Continue…
Ashok

யாராகயிருந்தாலும் சமயம் பார்த்து கற்பழிப்பு / கொலை செய்யும் சைக்கோ ஒருவன் இருப்பதாக நீங்கள் அறிந்தால், நீங்கள் அவன் பற்றி அறியாமல் அவனுடன் ஆபத்தோடு வாழ்ந்து வருபருக்கு அறிவிக்க மாட்டீர்களா? அப்படி அறிவிப்பது வெறுப்பு பிரச்சாரம் ஆகுமா?
அதேநேரம் அப்படி பாதிக்கப்பட்டவர்க்கு மறுவாழ்வளிக்க ஒருவர் அன்புடன் காத்திருக்கிறார் என்ற நற்செய்தியை மற்றவர்க்கு கூறுவது தவறா?
நான் நலமாயிருந்தால் போதும், மற்றவர் எக்கேடோ கெட்டு போகட்டும் என்று சுயநலத்தோடு இருக்க வேண்டுமா?
Will Continue…
Ashok

உங்க‌ளின் வெறுப்பு பிர‌ச்சார‌த்துக்கு என்ன‌ என்ன‌வோ முலாம் பூசி எழுதுகிறீர்க‌ள்.

அடாவ‌டி மத‌ வெறிப் பிர‌ச்சார‌த்தினால் கோடிக் க‌ணக்கான‌வ‌ர் இற‌ந்தும், அதை நாம் குறிப்பிட்டு எழுதியும் உங்க‌ள் அறிவை ம‌த‌ப் ப‌ற்று ம‌றைக்கிர‌து.

நீங்க‌ள் எழுதுவ‌தைப் ப‌டிக்கும் யாரும், சைக்கோ என்பது ம‌த‌ வெறி பிடித்த‌ ம‌த‌க் காழ்ப்புண‌ர்ச்சியாள‌ர்க‌ள் தான் என்ப‌தை புரிந்து கொள்வார்க‌ள்.

நீங‌கள் மனித‌ர்க‌ளுக்கு இடையிலே பூச‌ல் வ‌ரும் வ‌ண்ண‌ம் உங்க‌ள் மத‌க் காழ்ப்புண‌ர்ச்சியை வெளிக்காட்டாம‌ல் இருந்தால் போதும், ம‌னித‌ ச‌முதாய‌ம் ந‌ன்றி உடைய‌தாக‌ இருக்கும்.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=33589255

// வெறுப்பு பிரச்சாரம்
முலாம்
அடாவடி மதப் பிரச்சாரம்
அறிவை மறைக்கும் மதப் பற்று
சைக்கோ
மதவெறி
மதக் காழ்ப்புணர்ச்சி
பூசலை உண்டாக்குதல்//

அன்பான சகோதரரே,மாற்றுக் கருத்துக்கு இத்தனை கடினமான வார்த்தைகள்தான் பதிலாக இருக்கமுடியுமா?

மாற்றுக் கருத்து என்பது மாற்றக்கூடாததாக இருக்குமானால் நாங்கள் என்ன செய்யமுடியும்?

மாற்றுக் கருத்தே இருக்கக் கூடாதா?

ஒப்பிட்டுப் பாராமல் ஒன்றைத் தள்ளுவதும் இன்னொன்றை ஏற்பதும் மனிதனின் வழக்கமல்ல;ஏன் அனைத்து ஜீவராசிகளுக்கும் இது பொருந்தும்;

புதிதான ஒன்றை ஏற்கும் தள்ளப்பட்டதற்கான காரணம் ஆராய்வது மனித இயல்பே;

ந‌ற்செய்தி எங்களிடம் வந்த வடிவிலேயே பகிர்வது மாத்திரமே அந்த செய்திக்கும் உங்களுக்கும் முன்பாக நேர்மையான செய‌லாக இருக்கமுடியும்;

மேற்கண்ட வார்த்தைகளை கண்ணாடி முன்னின்று உங்களுக்கு நீங்களே சொல்லிப் பாருங்கள்;முகத்தின் அழகைப் பாருங்கள்;உங்களுக்கே தெரியும்,யார் குற்றவாளி என்று..!

நாங்கள் வேற்று கிரக வாசிகளோ வெளிநாட்டவரோ அல்ல;உங்களோடு உண்டு,உறங்கி,ஓடிவிளையாடியவர்கள் தான்;
ஆனால் எம்மை சந்தித்த இறை ஒளியின் மேன்மையை மாத்திரம் தங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுகிறோம்;அதுவும் நீங்களே முன்வந்து “இறைவன் இருக்கின்றானா‍” என்று கேட்டதால்..!

நாங்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்தவற்றைவிட்டு வரும்போது அவை பேய் பிசாசுகள் என்று யாரும் எங்களுக்குச் சொல்லவில்லை;ஆனால் எங்கள் அனுபவத்தின் அடிப்படையில் ஒரு காலத்தில் அவற்றை உருகி உருகி பிரார்த்தித்தவர்களே தைரியமாகச் சொல்லுகிறோம்;

இன்னும் எங்கள் வழிமுறையினை ஏற்றுக் கொள்ளாத எமது சொந்தங்கள் இருளில் இருக்கிறார்கள்; அவர்களைக் கேட்டால் தெரியும், நாங்கள் பணத்துக்காக வந்தோமா, மன நிம்மதிக்காக வந்தோமா என்று..!

இன்னும் கேட்டால் ஒன்றான மெய்த் தேவனை தொழத் துவங்கியபிறகே செல்வமும் ஞானமும் சுகமும் பெருகியது;

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=33589255

சகோதரர் சில்சாம் அவர்களே,

நாம் தெளிவாக எழுதி இருக்கிறோம். கடவுள் என்பதே ஒரு நம்பிக்கை, வெறும் நம்பிக்கை மட்டுமே, நிரூபிக்கப் படும் வரை கற்பனை மட்டுமே. கடவுள் இருப்பதை நிரூபித்தால் மட்டுமே, காட்டினால் மட்டுமே ஆணித் தரமாக பேசலாம்.

நம்பிக்கை அடிப்படையில் செயல் படும் போது, அடுத்தவரின் நம்பிக்கையை இழிவு படுத்தி சமூக அமைதியைக் கெடுக்கும் செயலை, பொல்லாப்பு கருத்தை, வெறுப்பைக் கருத்தை, மாற்றுக் கருத்து என்று எளிதாக சொல்கிறீர்கள். ஒருவனிடம் சென்று அவன் அம்மாவைப் பற்றி “மாற்றுக் கருத்து” சொல்வது போன்றது தான் இது. நீங்கள் அமைதியாக வணங்கிக் கொள்ளுங்கள். இதுதான் எங்கள் கடவுள் என்று சொல்லி விட்டு போங்கள், எங்கள் கடவுள் நல்லவர், வல்லவர் என்று சொல்லி விட்டுப் போங்கள். அடுத்தவர் கடவுளைப் பற்றி இழிவு படுத்த தேவையில்லை. வன்முறையை தூண்டும் வகையில் கருத்து சொல்லி விட்டு அதை எளிதாக மாற்றுக் கருத்து என்று ஏதோ பொது உடமைகாரர், முதாளித்துவம் பற்றிக் கூறுவது போல சொல்கிறீர்கள்.

செல்வம், சுகம் எல்லா மார்க்கத்தவருக்கும் உள்ளது. ஞானம் அடைந்தவன் மனதில் வெறுப்புக் கருத்துக்கள் இருக்காது, ஞானம் அடைந்தவன் மக்களிடையே பூசலை உருவாக்க மாட்டான்.

இயேசு கிறி ஸ்து உன் செல்வ‌ங்க‌ளை எல்லாம் விற்று த‌ரித்திர‌ருக்கு கொடுத்து விட்டு, என்னைப் பின்ப‌ற்றி வா என்றார். ஆனால் நீங்கள் தேவனைத் தொழுது செல்வம் பெருகியது என்கிறீர்கள், அதாவது தேவனைத் தொழுதால் செல்வம் பெருகும் , அதனால் தான் தொழ சொல்லுகிறோம் என்பது அர்த்தம்.

அப்படிப் பார்த்தால் அரேபிய நாட்டவரிடம் தான் உலகின் ஐம்பது சதவீத பெட்ரோல், எரி வாயு உள்ளது. செல்வச் செழிப்புடன் உள்ளனர். அப்படியானால் அவர்கள் கடவுளாக வழிபாடும் அல்லாஹ் தான் அதிக செல்வம் கொடுக்கக் கூடியவர் என ஒத்துக் கொள்கிறீர்களா?

திருச்சிக்காரரே,
தங்கத்துக்கு முலாம் தேவையில்லை. என் வார்த்தைகள் யாருக்கு புரியவேண்டுமோ அவர்களுக்கு புரியும்.
என்னால்தான், ஏதோ கலவரங்கள் நடப்பது போல பேசுகிறீர்கள். என் வார்த்தைகளினால் பலர் இந்த உலகில் மடிவார்கள் என்றால், மடியட்டும். நித்திய அக்கினியில் அவர்கள் அல்லல் படுவதைவிட, இது பரவாயில்லை. உங்கள் வலைத்தளத்தில் கலவரக்காரன் என்ற பெயரில், நன்மை செய்பவனாக, உண்மையை சொல்பவனாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நன்றி,
அசோக்

//செழுமையை இந்தியாவில் இருந்து சுர‌ண்டிய‌து யார்? ப‌ல‌ பில்லிய‌ன் செழுமைக‌ளை சுர‌ண்டி விட்டு சில‌ ஆயிர‌ம் செழுமைக‌ளை கொடுத்த‌த‌ற்க்கு ந‌ன்றி.//
சுரண்டியவர்களில் வெள்ளைக்காரனும் ஒருவன். ஆனால், கொடுத்தது கிறிஸ்துவன். வெள்ளையன் எல்லோரும் கிறிஸ்துவன் இல்லை.

//நீங்க‌ள் பர‌ப்புவ‌து கிறிஸ்தவமா? கிறிஸ்தவம் என்ற‌ பேரிலே, இயேசு கிறிஸ்துவின் பெய‌ராலே, அவ‌ருக்கு ச‌ம்ப‌ந்த‌மே இல்லாத‌ க‌ருத்துக்க‌ளை, வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை, காட்டு மிராண்டிக் க‌ருத்துக்க‌ளை அறிந்தோ, அறியாம‌லோ ப‌ர‌ப்பி வ‌ருகிறீர்க‌ள்.//
அப்போது கிறிஸ்துவம்ன்னா என்னங்க? அனைத்தும் அறிந்த தாங்களே சொல்லுங்கள். இது குறித்து நமது தலத்தில் ஒரு கட்டுரை எழுதுவோம்ன்னு சொல்லி தப்பிக்க பார்க்காதீங்க.
Will Continue,
Ashok

சகோதரர் சில்சம் மற்றும் அசோக் அவர்களுக்கு…
இறைவன் இருக்கின்றானா – பதிவில் நீங்கள் கூறும் கருத்துக்களை நானும் படித்தேன்.
உங்கள் கருத்துக்களுக்கு எனது பதில்களையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
முதலில் உங்களை நாங்க வில்லன்களாக, காட்டுமிராண்டிகளாக, அல்லது காமெடியன்களாக காட்ட விரும்பவில்லை. நாம் அனைவரும் மதத்தால் வேறுபட்டிருக்கிறோம். ஆனால் இனத்தால் மனிதர்கள்.
தேசத்தால் இந்தியர்கள். அன்பு செலுத்துவதிலோ அல்லது நாட்டுப்பற்றிலோ நாம் அனைவரும் ஒருவருக்கு
ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. பின்பற்றும் மார்க்கங்கள் வேறு வேறாக இருக்கலாம். அதற்காக என்னுடையது
தான் உயர்ந்தது. அடுத்தவர்களுடையது எல்லாமே மட்டமானவை என்ற எண்ணம் தான் கூடாது.
உன் வழியில் நீ செல்வதற்கு உனக்கு எல்லா உரிமைகளும் உண்டு… என் வழியில் நீ குறுககிடாதவரை.
இந்த ஒரு இடத்தில் தான் ஹிந்து மதம் தனித்து நிற்கிறது. இங்கு பத்வாக்கள் இல்லை. மத மாற்றங்கள் இல்லை. எல்லா மதத்தவர்களையும் ஏற்றுக்கொள்கிறது. ஏன். கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திக வாதத்தைக் கூட இந்து மதம் அனுமதிக்கிறது.
“உனது தாயையும் தந்தையையும் நீ கணம் செய்யக்கடவாய்” என்று கிறித்தவம் கூறுகிறது. அதையே நாங்கள்
கிறித்துவ மதம் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே “மாத்ரு தேவோ பவா. பிதுர் தேவோ பவா” என்று பள்ளிகளில் பாடமாகவே உபதேசம் செய்து வந்து வாழ்க்கைக் கல்வியையே கற்றுக் கொடுத்து வந்திருக்கிறோம்.
அப்படிப்பட்ட எங்களையும், நாங்க சார்ந்திருக்கும் மார்க்கத்தையும், வணங்கும் கடவுள்களையும், எங்கள் நம்பிக்கைகளையும் நீங்கள் இழித்தும் பழித்தும் எள்ளி நகையாடியும் பேசி மத மாற்றம் செய்து வருவது எந்த விதத்திலும் சரி இல்லை.
நீங்கள் செய்வது போல நாங்கள் எப்பொழுதும் செய்து வருவது கிடையாது. ஏனென்றால் நீங்கள் சொல்லும் நல்ல கருத்துக்களை நாங்கள் உங்களுக்கு முன்பே நடைமுறையில் வாழ்ந்தே காட்டி இருக்கிறோம்.
மானிடர் பாவங்களை தான் ஏற்று சிலுவையில் இறைத்தூதர் அன்பின் வடிவமான ஏசுநாதர் அறைபட்டார் என்ற தியாகச் செயலை நாங்கள் மிகவும் போற்றுகிறோம்.
உங்கள் வீட்டில் நல்லவர் இருக்கிறார் என்றால் எங்கள் வீட்டில் அனைவரும் தீயவர்களா என்ன?
இறைவனின் தூதர் செய்த தியாகச் செயல் உங்களை பெருமிதம் கொள்ளவைக்கிறது என்றால்…
வாயில்லாத ஜீவனான ஒரு புறாவின் உயிர் காக்க தனது சதையையே அறிந்து கொடுத்த சிபிச் சக்ரவத்தியின் தியாகச் செயல் எங்களிடமும் உள்ளது.
நாங்கள் ஒன்றும் இருளில் மூழ்கி வெளிச்சம் தேடிக்கொண்டிருக்கவில்லை. எங்கள் வெளிச்சம் பரவாத இடங்களுக்கும் அது பரவ பல தீபங்களை ஏற்றவைக்கும் அளவுக்கு எங்களிடம் ஞான வெளிச்சம் சுயமாகவே இருக்கிறது.
இன்னும் சொல்கிறேன். உங்கள் வழி உங்களுக்கு. எங்கள் வழி எங்களுக்கு. நீங்கள் மதமாற்றம் செய்வதால் தான் உங்கள் மதம் வளரும் என்றால் தாராளமாகச் செய்யுங்கள். அது உங்கள் மார்க்கத்தின் மேன்மையை மட்டுமே பறை சாற்றி செய்யப்படட்டும். எங்கள் மார்க்கங்களை இழிவு படுத்திச் செய்யப்பட வேண்டாம்.
– அன்புடன் மணியன்

மணியன் ஐயா அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.

இங்கே பதிவிடும் சில நண்பர்கள் பிற மார்க்கத்தவர் தெய்வமாக வணங்கும் கடவுள்களை பேய் என்றும் , தீய சக்தி என்று சொல்லத்தான் செய்வோம் என்று சொல்கிற நிலையிலே,

மணியன் ஐயா இயேசு கிறிஸ்துவை மிகவும் உயர்வு படுத்தி எழுதி இருக்கிறார். கிறிஸ்துவின் செயலை போற்றி எழுதி இருக்கிறார்! பிற மதத்தினர் கடவுளாக வழிபடுபவரை நாம் இழிவு செய்யக் கூடாது என்கிற கொள்கையில் இன்னும் ஒரு படி மேலே போய், பிற மதக் கடவுள்களை போற்றி எழுதி இருக்கிறார்.

இந்து மதத்தை சேர்ந்த நண்பர்கள் ஒருவர் கூட பிற மதக் கடவுள்களை இழிவு படுத்தி இதுவரை இங்கே பின்னூட்டம் இடவில்லை.

இசுலாமிய மார்க்கத்தை சேர்ந்த நண்பர் மஸ்தான் அவர்கள் அதே போல பிற மார்க்கத்தினரின் தெய்வங்களைப் பற்றி இழிவு படுத்தாமலும், மிக நாகரீகமான முறையிலும் பின்னூட்டம் இட்டு இருக்கிறார்.

அனைவருக்கும் நன்றி செலுத்துகிறேன்.

நண்பர்கள் அசோக் ஜி, சில்சாம் போன்றவர்கள் நாங்கள் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டு நாகரீகப் பாதைக்கு வருவார்கள் என நம்புவோம். நல்லிணக்க அடிப்படையிலே மனிதத்தின் புனிதம் கருதி சகிப்புத் தன்மை, நாகரீகம் இவற்றின் அடிப்படையிலே உங்கள் வழிபாட்டில் கலந்து கொள்ள நான் தயார், இன்னும் பல இந்து மதத்தை சேர்ந்த நண்பர்களும் என்னுடன் வருவார்கள் என்று அசோக் ஜி, சில்சாம் ஆகியோர் வணங்கும் தெய்வங்களை நாம் மரியாதை செய்து நம்முடைய நாகரீகத்தைக் காட்டி விட்டோம்.

நண்பர்கள் அசோக் ஜி, சில்சாம் போன்றவர்கள் குறைந்த பட்சம் ” பிற மார்க்கத்தினரின் கடவுள்களை இகழ்ந்து அதனால் மோதல் உருவாகி மக்கள் மடிந்தாலும் மடியட்டும்” என்ற முரட்டுத் தனமான கற்கால பழக்க வழக்கங்களை கை விட்டு நாகரீகப் பாதைக்கு திரும்புவார்கள் என நம்புவோம்.

அன்புச் சகோதரர் திருச்சிக்காரர் அவர்களே.
என்னை மணியன் அய்யா என்று அழைத்து வயதானவன் ஆக்கவேண்டாம்.
மணியன் என்று சொன்னாலே போதும்..

அன்புடன் – மணியன்

இதற்கு பிறகாவது அசோக், சில்சாம் போன்றவர்கள் தங்களை மாற்றிக்கொண்டால் சந்தோஷமே.

என்னைப் பொறுத்தவரையில் எனது பழைய முதலாளிகளுக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையைக் கொடுத்துவருகிறேன்;அவர்களுடைய கொடூர முகத்தையும் அறிந்திருக்கிறேன்;யாரையும் தாழ்த்திப் பேசவில்லை;

அனுபவத்திலிருந்தும் பாதிப்புகளைக் குறித்தும் பேசுவதற்கு “ஒரு கைதியின் டைரி” படத்தைப் பார்க்கவேண்டிய அவசியமில்லை;

வெளிச்சத்துக்கு அழைக்கிறோம்; நீங்களோ இருளே சௌக்கியம்,பாக்கியம் என்கிறீர்கள்; என்ன செய்ய..?

இது ம‌த‌க் காழ்ப்புண‌ர்ச்சியின் வெளிப்பாடே

இவ்வ‌ளவு தூர‌ம் ம‌ணிய‌ன் அவ‌ர்க‌ள் எழுதியும் பிற‌ர் தெய்வ‌மாக‌ வ‌ண‌ங்குப‌வ‌ர்க‌ளை கொடூர‌மான‌வ‌ர்க‌ள் என்று தூற்றும் ம‌த‌ வெறியை விட‌வில்லை. மாற்ற‌ம் அவ்வ‌ளவு எளிதில் வ‌ராது. நீங்க‌ள் தூற்றும் தெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்குப‌வ‌ர்க‌ள் ச‌கிப்புத் தன்மை உள்ள‌வ‌ராக‌ இருக்கின்ற‌ன‌ர். க‌னிக‌ளை வைத்துதான் ம‌ர‌ம் அறிய‌ப் ப‌டுகிற‌து. ந‌ல்ல‌ ம‌ர‌ம் தான் ந‌ல்ல‌ க‌னிக‌ளை கொடுக்க‌ இய‌லும்.

வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை ப‌ர‌ப்பி, ம‌க்க‌ள் மோதி ம‌டிந்தாலும் ப‌ர‌வாயில்லை என‌ நினைப்ப‌துதான் கொடூர‌ம்.

நீங‌கள் அழைப்பது வெளிச்ச‌திற்க்கு அல்ல‌, இருட்டுக்கு, ம‌த‌ வெறிக்கு. ஏனெனில் ப‌ல‌ர், இயேசு கிறிஸ்து உட்ப‌ட‌ பிற‌ மார‌க்க‌த்தின‌ர் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ணங்குப‌வ‌ர்க‌ளை போற்ற‌வும், வ‌ண‌ங்க‌வும் செய்கின்ற‌ன‌ர். ஆனால் நீங்க‌ளோ, பிற‌ர் க‌ட‌வுளாக‌ வ‌ண‌ங்குப‌வ‌ர்க‌ளை தூற்றுவ‌தையே முக்கிய‌ மார்க்க‌க் காரிய‌ங்க‌ளில் ஒன்றாக‌ போதிக்கிறீர்க‌ள், செய்கிறீர்க‌ள்.

உங்க‌ளுடைய‌ தூற்றுத‌ல்க‌ளை கேட்கும் சில‌ர் ம‌ன‌ம் பாதிப்ப‌டைந்து, வ‌ன்முறையைக் கைக்கொள்ளுகின்ற‌ன‌ர். இத‌னால் ப‌ல‌ர் இற‌ந்தாலும் க‌வ‌லை இல்லை, என்னும் அள‌வுக்கு ம‌த‌ வெறி உள்ள‌து.

என‌வே சாதார‌ண‌ ம‌னித‌னைக் கூட‌ வ‌ன்முறைக்கு தூண்டும் வ‌கையிலே உள்ள‌ ம‌த‌ வெறியைக் கை விட்டு விடுங்க‌ள்.

திருச்சிக்காரரே,
நண்பர் மணியன், இயேசுவை உயர்த்தி போற்றியுள்ளார் என்று கூறியுள்ளீர்கள். ஆனால், உண்மையில் அவர் இயேசு கிறிஸ்த்துவை குறைபடுத்தியே கூறியுள்ளார். இயேசு, இறைதூதர் அல்ல. எல்லாம்வல்ல ஏக இறைவனே மனு உருவில் ஏசுவாக வந்தார்.
நண்பர் மணியன்,
ஒருவர் வீட்டில் உள்ளவரை கேட்டவர் என்று கூற ஒரு தனி துணிச்சல் தேவை. இந்த துணிச்சல் எங்களுக்கு எப்படி வந்ததென்று நீங்கள் யோசிக்க வேண்டும். இது அடுத்தவரை குறை கூறும் முரட்டு துணிச்சல் அல்ல, அடாவடித்தனமும் அல்ல. உங்கள் மேல் உள்ள அன்பு, நாங்கள் கூறும் அந்த கேட்டரவரிடம் ஏற்ப்பட்ட முன் அனுபவம். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களை இந்த கேட்டவரிடமிருந்தும், பாவத்திலிருந்தும், நரகதிலிருந்தும் உங்களை காக்க ஒரு நல்லவர் இருக்கிறார். அந்த நற்செய்தியை பகிர்வதே எங்கள் நோக்கம். நாங்கள், செய்தியை தான் சுமந்து செல்கிறோம். எங்கள் செய்தியை ஏற்றுக்கொள்வதோ நிராகரிப்பதோ உங்கள் விருப்பம்.
நன்றி,
அசோக்

ச‌கோத‌ர‌ர் அசோக்ஜி அவ‌ர்க‌ளே,

இயேசு கிறிஸ்துவை ம‌ணிய‌ன் அவ‌ர்க‌ள் போற்றி உள்ளார், அதைப் பாராட்டாவிட்டாலும் ப‌ர‌வாயில்லை. ஆனால் அதிலும் குற்ற‌ம் க‌ண்டு பிடிக்கிறீர்க‌ள். பிற‌ மார்க்க‌த்த‌வ‌ர் தெய்வ‌மாக வ‌ண‌ங்குப‌வ‌ர்க‌ளை திட்டுவ‌து உங்க‌ள் ப‌ழ‌க்க‌ம். போற்றுவ‌து ம‌ணிய‌ன் அவ‌ர்க‌ளின் ப‌ழ‌க்க‌ம்.

நான் மீண்டும் ம‌ணிய‌னைப் பாராட்டுகிறேன்.

ந‌ல்ல‌வ‌ர் இருக்கிறார் என்ற‌ ந‌ற்செய்தியை கூறுங்க‌ள், அதை யாரும் குறை கூற‌வில்லை.

ம‌ணிய‌ன் வீட்டில் கெட்ட‌வ‌ர் யாரும் இல்லை. உங்க‌ளுடைய‌ ம‌ன‌தில் உள்ள‌ வெறுப்புக் க‌ருத்துக்க‌ளும், ம‌த‌ வெறியும், ம‌த‌க் காழ்ப்புண‌ர்ச்சியுமே ம‌ற்ற‌வ‌ர் வீட்டில் உள்ளவ‌ரைக் கெட்ட‌வ‌ராக‌ எண்ண‌த் தூண்டுகிர‌து.

//ஒருவர் வீட்டில் உள்ளவரை கெட்டவர் என்று கூற ஒரு தனி துணிச்சல் தேவை. இந்த துணிச்சல் எங்களுக்கு எப்படி வந்ததென்று நீங்கள் யோசிக்க வேண்டும். இது அடுத்தவரை குறை கூறும் முரட்டு துணிச்சல் அல்ல, அடாவடித்தனமும் அல்ல. உங்கள் மேல் உள்ள அன்பு, நாங்கள் கூறும் அந்த கெட்டரவரிடம் ஏற்ப்பட்ட முன் அனுபவம். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களை இந்த கெட்டவரிடமிருந்தும், பாவத்திலிருந்தும், நரகதிலிருந்தும் உங்களை காக்க //

“உன் ந‌ல்ல‌துக்கு தான் சொல்கிறேன், உன் ம‌னைவி ரொம்ப‌ கெட்ட‌வ‌” என்று சொல்வ‌தைப் போல‌ உள்ள‌து.
“என் ம‌னைவியைப் ப‌ற்றி என‌க்குத் தெரியும்” என்று சொல்வான். “குடும்ப‌த்தில் குழ‌ப்ப‌த்தை உருவாக்கி, குடும்ப‌த்தைக் கெடுத்து, ம‌னைவியையும் கெடுக்க‌ப் பாக்கும் குடிகேடியின் செய‌லை செய்யாதீர்க‌ள்” என‌ சொல்வான்.

ம‌த‌ வெறிக் க‌ருத்துக்க‌ளினால், பல‌ கோடி ம‌க்கள் இற‌ந்த‌துதான் உண்மையான‌ முன் அனுப‌வ‌ம்.
இப்போது நீங்க‌ள், இன்னும் ப‌லர் ம‌டிந்தாலும் ச‌ரி, ம‌த‌க் காழ்ப்புண‌ர்ச்சி பிர‌ச்சார‌த்தை தொட‌ருவோம் என‌ அறிவிப்ப‌துவும் கேட்க‌வே வேத‌னையை உருவாக்கும் ஒரு அனுப‌வ‌மாக‌ உள்ள‌து

எனது முந்தைய பதிப்பில் “கேட்டவரிடமிருந்தும்” என்று எழுதியுள்ளேன், அதை “கெட்டவரிடமிருந்து” என்று படிக்கவும்.
அசோக்

ந‌ண்ப‌ர்க‌ளே, ம‌ன‌ம் த‌ளர்ந்து விடாதீர்க‌ள்!

ந‌ம்முடைய‌ ச‌கோத‌ர‌ர்க‌ள் அசோக்ஜியும், சில்சாமும் பிற‌ மார்க்க‌த்த‌வ‌ரின் தெய்வ‌ங்க‌ளை எப்ப‌டி எல்லாம் இக‌ழ‌ முடியுமோ, அப்ப‌டி எல்லாம் இக‌ழ்ந்து பார்க்கின்ற‌ன‌ர் . ஆனால் நாம் பொறுமையை இழ‌க்க‌க் கூடாது. அவ‌ர்க‌ள் எந்த‌ அள‌வுக்கு உங்க‌ள் தெய்வ‌ங்க‌ளைத் திட்டினாலும், நீங்க‌ள் உங்க‌ள் நாகரீக‌த்தை விட்டு விடாதீர்க‌ள்.

த‌ன் முக‌த்தில் மீண்டும் மீண்டும் துப்பிய‌ போதிலும், பொறுமையாக‌ ஒவ்வொரு முறையும் த‌ன்னை சுத்த‌ம் செய்து கொண்ட‌ புத்த‌ரை நினையுங்க‌ள். புத்த‌ர் சொன்ன‌து போல‌ அவ‌ர்க‌ள‌து ம‌ன‌தில் இருக்கும் அசுத்த‌ங்க‌ளும், வாயில் இருக்கும் அசுத்த‌ங்க‌ளும் வெளியில் வ‌ர‌ட்டும்.

// க‌னிக‌ளை வைத்துதான் ம‌ர‌ம் அறிய‌ப் ப‌டுகிற‌து. ந‌ல்ல‌ ம‌ர‌ம் தான் ந‌ல்ல‌ க‌னிக‌ளை கொடுக்க‌ இய‌லும் //

பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய அற்புதமான வரிகள்..!

காரணம் நண்பர் திருச்சிக்காரன் சொன்னதாலல்ல;இது இறைமகனார் இயேசுவானவர் சொன்னது; இதுபோலவே எண்ணற்ற நன்மொழிகள் பலராலும் எடுத்துச் சொ(செ)ல்லப்பட்டு யார்யாரோ சமதர்ம சன்மார்க்கம் பேசத் துவங்கிவிட்டார்கள்;

ஏனெனில் இயேசுவானவரின் திருவாய்மொழிகள் இந்த அண்டமெங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது; காரணம்,அவர் பெரும்பாலும் வெட்டவெளியிலே பேசினார்; அரசர்களின் அரண்மனைகளையும் அதிகார பீடங்களையும் விட்டுவிலகியே இருந்தார்; இன்றைக்கும் கூட அவருடைய உண்மையான அடியவர்களையும் இதைக் கொண்டே அடையாளம் காணமுடியும்..!

பிற மார்க்கத்தவரின் தெய்வங்களை இகழ்ந்ததாகவும் வெறியைத் தூண்டிவிட்டதாகவும் காழ்ப்புணர்ச்சியை பரவச் செய்வதாகவும் நீங்களே சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே தவிர இங்கே என்ன செய்தோம் என்று விவரமாக எதையும் சொல்லவில்லையே;

உதாரணமாக நீங்கள் இயேசுவை தூஷித்தால் நான் என்ன செய்யவேண்டும்?
அதனை மறுத்து அவருடைய அருமை பெருமைகளையும் தியாகத்தையும் உங்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்;

அதுபோலவே நீங்களும் செய்யலாமே;அப்படியானால் உங்கள் தெய்வங்களைப் பற்றி பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

உங்கள் தெய்வம், எங்கள் தெய்வம் என்று கூட நான் பிரித்துப் பார்க்கவில்லை; ஒரு காலத்தில் நாங்களும் கண்மூடித்தனமாக மனிதரால் போலியாக ஏற்படுத்தப்பட்ட பக்தி உணர்வுடன் வணங்கி ஏமாற்றப்பட்ட எங்கள் குலதெய்வங்கள் அவை..!

ஒரு மாற்றுப்பாதையில் நான் செல்லும்போது அதனைக் குறித்த மேன்மையைச் சொல்லுவதே பழைய பாதையைப் பழிப்பதாகிவிடுமா?

குறிப்பாக இந்த தொகுப்பில் மற்ற தெய்வங்களைப் பேய்,பிசாசு என்று நாங்கள் பழித்ததை தயவுசெய்து வரிசைப்படுத்திப்பாருங்கள்; எங்களைவிட நீங்களே அதிகம் உங்கள் தெய்வங்களை இதுபோன்ற வார்த்தைகளால் தூஷிக்கிறீர்கள்;

எங்களுக்கு அதன் பயங்கரங்கள் தெரிந்ததால் அவ்வளவு தைரியமாக எதையும் சொல்லமாட்டோம்; அதிலும் மதுரை மாநகரின் “அஞ்சாநெஞ்சனே” மகா உக்கிரமானவரான நரசிம்மரை வாராவாரம் சாந்தி பண்ணிக் கொண்டிருக்கிறாராம்;

எங்க ஆளு ரொம்ப சாதாரணமானவரு, கையில ஒரு ஆட்டுக்குட்டியை வைத்துக்கொண்டு உன்னையும் இதுபோல பாதுகாப்பேன் என்று சொல்லவும் நாங்க மயங்கிப்போய் அவர் பின்னால போயிட்டோம்,அவ்வளவுதான்..!

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=33589255

ச‌கோத‌ர‌ர் சில்சாம் அவ‌ர்க‌ளே,

எல்லா ம‌தத்த‌வ‌ரும் தாங்க‌ள் க‌ட‌வுளாக‌ வ‌ண‌ங்குப‌வ‌ரின் சிற‌ப்பை விளக்கி கொண்டுதான் இருக்கிறார்க‌ள்.

இந்து ம‌த‌த்தில் இராம‌ர் இராச்சிய‌த்தை விட்டுக் கொடுத்து காட்டுக்குப் போன‌து, சிவ‌ன் ம‌க்க‌ளைக் காக்க‌ ஆல‌கால விச‌த்தை உண்ட‌து, அனும‌ர் ந‌ல்ல‌ கொள்கைக்காக‌, நல்ல‌ நோக்க‌த்துக்காக‌ பிர‌திப‌ல‌ன் பாராம‌ல் உழைத்த‌து….

இசுலாத்திலே வ‌ட்டி வாங்க‌க் கூடாது, சாராய‌ம் குடிக்க‌க் கூடாது, சூதாட‌க் கூடாது…. என்று எல்லாம் குறிப்பு இருக்கிற‌து…

இப்ப‌டியாக‌ ம‌க்க‌ளின் ந‌ன்மைக்கான‌ செய‌ல்க‌ளும் க‌ருத்துக்க‌ளும் எல்லா மார்க்க‌ங்க‌ளிலும் உள்ள‌ன‌.

ஆனால் பெரும்பாலான‌ ம‌க்க‌ள் பொறுமையாக‌ விள‌க்க‌ த‌யார் இல்லை. ஒரு மாண‌வ‌ன் ந‌ட‌ந்து செல்லும் போது அவ‌னிட‌ம் சென்று, ப‌லரும் கேட்கும் ப‌டி, “டேய்… உன் த‌ங்க‌ச்சி பல‌ பேரிட‌ம் தொடுப்பு வ‌ச்சிருக்குடா” என்று சொன்னால்- அவ‌ன் பொறுமையாக, ‌ “என் த‌ங்க‌ச்சி காலையில‌ எங்க‌ அப்பாரோட‌ தான் பாட்டு கிளாஸ் போகுது, என் கூட‌ தான் இஸ்கூலுக்கு வ‌ருது” … இப்ப‌டியாக‌ விள‌க்க‌ம் கொடுத்துக் கொண்டிருக்க‌ மாட்டான். “டேய்… உன் த‌ங்க‌ச்சி பல‌ பேரிட‌ம் தொடுப்பு வ‌ச்சிருக்குடா” என்ற வார்த்தையைக் கேட்டு முடிக்கு முன், கையில் கிடைப்ப‌து, க‌ட்டையொ, க‌ல்லோ அந்த‌ப் பைய‌ன் மேல் தாவி தாக்க‌ ஆர‌ம்பித்து விடுவான் . அத‌னால் ஒருவ‌ர் த‌‌ம்முடைய‌‌ ம‌ன‌ வ‌க்கிர‌ங்க‌ள் அடுத்த‌வ‌ருக்கு பாதிப்பு உண்டாகாத‌ வ‌கையிலே செயல் ப‌ட‌ வேண்டும்.

நீங்க‌ள் இந்துவாக‌ இருந்து கொண்டு இந்துக் க‌ட‌வுள்க‌ளை விம‌ரிசிப்ப‌து என்ப‌து வேறு விட‌ய‌ம். ஆனால் வேறு ம‌த‌ம் என்று ஆகி விட்டால் அது இரண்டு ம‌த‌ங்களுக்கு இடையிலான‌ பிரச்சினை ஆகி விடும்.

கூட்டுக் குடும்ப‌மாக‌ இருக்கும் போது, அதில் உறுப்பின‌ராக‌ உள்ள‌ கொழுந்த‌னாரை ‌ பண‌ம் செல‌வ‌ழிக்காதே என்று சொல்லலாம், ஏனெனில் ந‌ம‌து வ‌ருமான‌மும் கூட்டுக் குடும்ப‌த்திற்க்கு த‌ர‌ப் ப‌டுகிற‌து. ஆனால் த‌னிக் குடும்ப‌மாக‌ போன‌ பிற‌கு ப‌ழைய‌ குடும்ப‌ உறுப்பின‌ரைக் குறை சொல்ல‌ ந‌ம‌க்கு உரிமை அல்ல‌. ந‌ம‌து ப‌ண‌ம் எதுவும் கூட்டுக் குடும்ப‌த்திற்க்கு போவ‌தில்லை. வில‌கி விட்டால் எல்லைக‌ளை உண‌ர்ந்து செய‌ல் ப‌ட‌ வேண்டும். பிரித்து தான் பார்க்க‌ வேண்டும்.

நாங்க‌ முன்பு கும்பிட்டோம் என்ப‌தை சாக்காக‌ வைத்து ம‌த‌ வெறியை, ம‌த‌க் காழ்ப்புண‌ர்ச்சியை
வெளிப் ப‌டுத்துவ‌தை நாக‌ரீக‌ ச‌முதாய‌ம் அனும‌திக்காது. ம‌த‌ வெறியை நியாய‌ப் ப‌டுத்த‌ காரண‌ம் தேடுவ‌தை ம‌க்க‌ள் தெரிந்து கொள்வார்க‌ள்.

இயேசு கிறிஸ்துவை நீங‌க‌ள் பாராட்டுவ‌தை யாரும் குறை சொல்ல‌வில்லை.

ந‌ர‌சிம்ம‌ர் என‌ச் சொல்ல‌ப் ப‌டுப‌வ‌ர், ஒரு கொடுங்கோல் எதேச்ச‌திகார‌ அர‌ச‌னை, த‌ன் ம‌க‌னை தானே கொல்ல‌ முய‌ன்ற‌வ‌னை போரிட்டு வென்றதாக சொல்ல‌ப் ப‌டுகிர‌து. அந்த‌க் கொள்கையில் த‌வறு இல்லை. அநியாய‌த்துக்கு எதிராக‌ போராடிய‌வ‌ரை ம‌க்க‌ள் வண‌ங்குவ‌து இய‌ல்புதான்.

அழ‌கிரி ந‌ர‌சிம்ம‌ரைக் கும்பிட்டால் என்ன‌? வேண்டுமானால் அவ‌ரிட‌ம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கி இயேசு கிறிஸ்துவின் சிற‌ப்பை சொல்லி விட்டு வாருங்க‌ள், யாரும் த‌டுக்க‌வில்லை.

ப‌ல‌ரும் ந‌ர‌சிம்ம‌ரைக் கும்பிடுகிறார்க‌ள். அது அவ‌ர்க‌ள் விருப்ப‌ம். ந‌ர‌சிம்ம‌ரை கும்பிடுப‌வ‌ர்க‌ள் இயேசுவை இக‌ழ்ந்தார்க‌ளா?

இயேசு கிறிஸ்துவை நீங‌க‌ள் பாராட்டுவ‌தை யாரும் குறை சொல்ல‌வில்லை!

எல்லாம் சரி அண்ணாச்சி…முதலில் நீங்கள் “இறைவன் இருக்கின்றானா” என்பதைச் சொல்லி முடியுங்களேன்..!

த‌ம்பி சில்சாம்,

இறைவ‌ன் இருக்கின்றானா என்ற‌ ஆராய்ச்சி தொட‌ரும். இறைவ‌ன் என்கிற‌ கான்செப்டை வைத்து ச‌மூக‌ங்க‌ளுக்கு இடையில் மோத‌ல் உருவாகி விட‌க் கூடைய‌ ஆபாய‌ம் இருப்ப‌தை சுட்டிக் காட்ட‌ வேண்டிய‌ பொறுப்பும் இருக்கிறது.

நிரூபிக்க‌ப் ப‌டாத‌ ஒரு கான்செப்டை வைத்து, அத‌ன் அடிப்ப‌டையில் வெறுப்புக் க‌ருத்தை ப‌ர‌ப்பினால் என்ன‌ ஆகும் என்ப‌தும் இறைவ‌ன் இருக்கின்ரானா என்ற‌ ஆராய்ச்சியின் அவ‌சிய‌த்தை காட்டுகிற‌து.

சகோதரர் அசோக்ஜி அவர்களுக்கு..
எங்கே எனது கருத்துக்கள் உங்கள் கவனத்துக்கு வராமல் போய்விடுமோ என்று பயந்து இருந்தேன். நல்லவேளை.
நீங்கள் அவற்றை படித்துவிட்டீர்கள். படித்தற்கு நன்றி.
ஆனால் சகோதரா .. ஒன்றைப் படிப்பது வேறு. புரிந்து கொள்வது என்பது வேறு.
நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்களோ ஆனால் நான் ஒன்றை நன்றாகவே புரிந்து கொண்டேன்.
“எங்கள் பாவங்களில் இருந்து எங்களை ரட்சிப்பதற்கும் , நாங்கள் நரகம் செல்லாமல் காப்பதற்கும் இயேசு பிரான் மட்டுமே இருக்கிறார் ”
என்ற ஆணித்தரமான பிடிப்பில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் தீவிரமான நம்பிக்கையை நான் உளமாரப் பாராட்டுகிறேன்.
நண்பர்களே நான் இருப்பது கோயமுத்தூர். இங்கிருந்து சென்னைக்கு செல்லவேண்டும் என்றால் ரயில் மார்க்கமாகவும் போகலாம்.
பேருந்திலும் பயணிக்கலாம். விமானம் மூலமாகவும் பயணிக்கலாம். அது போலே செல்லும் வழிகளும் அநேகம் உள்ளன.
அவினாசி, ஈரோடு, சேலம் மார்க்கமாகவும் செல்லலாம். திருச்சி வந்தும் கூட போகலாம். பாதைகள் வேறு. பயணங்கள் வேறு.
ஆனால் சென்று சேரும் இடம் ஒன்றுதான்.
அதுபோல ஹிந்து, இஸ்லாம், கிறித்தவம், யூதம், பவுத்தம், ஜைனம் என்று பல மார்க்கங்கள் இறைவனை அடைய இருக்கின்றன.
இதில் எனது மட்டும் தான் உயர்ந்தது.. மற்றவை எல்லாம் படுமட்டமானவை என்று சொல்வதைத்தான் நாங்கள் தவறு என்கிறோம்.
ஆனால் நீங்களோ கண்மூடித்தனமாக “நான் அப்படித்தான் சொல்லுவேன். நான் தான் நல்லவன். அடுத்தவன் கெட்டவன்” என்று
பிடிவாதமாக இருக்கிறீர்கள்.
உங்களால் தான் எங்களுக்கு கல்வி அறிவு வந்தது என்கிறீர்கள். அந்தக் கல்வி சகிப்புத்தன்மையை கொடுக்கவில்லையே நண்பரே.
உங்களுக்கே அது இல்லையே.
நீங்கள் சொல்கிறீர்கள் ‘பாவத்திலிருந்தும் நரகத்தில் இருந்தும் ரட்சிப்பவர் இயேசு ஒருவர்தான்.” என்று. அப்படியானால் “பாவ மன்னிப்பு” என்று
ஒரு பாதிரியார் (அவரும் சாதாரண மனிதர்தானே) கொடுக்கிறாரே. அவருக்கு அந்த வல்லமை எப்படி வந்ததாம்? அது உங்கள் மத நம்பிக்கை.
மனிதர்கள் தவறு செய்யும் போது ஏற்படும் குற்ற உணர்ச்சியில் இருந்து மன ஆறுதல் பெறுவதற்காக வேதம், ஆகமம்
கற்றுத் தேர்ந்த, தனது வாழ்வையே இறைவனுக்காக அர்ப்பணித்த ஒருவர் நமக்காக இறைவனிடம் மன்னிப்பை யாசிக்கிறார். அவரிடம் நமது மனச் சுமையை இறக்கி வைப்பதால் மனதுக்கு ஆறுதல் ஏற்படுகிறது. அதனால் தான் நாளும் இறை நாமத்தை ஜபம் செய்து வரும் பாதிரியாரிடம் நீங்கள் சென்று உங்கள் பாவங்களை
அவரிடம் பகிர்ந்து கொண்டு ஆறுதல் பெறுகிறீர்கள். இதை நாங்கள் மறுக்கவில்லை.
மனித மனம் ஒருவருக்கு இருப்பது போல இன்னொருவருக்கு இருக்காது. ஆகவே தான் ஒவ்வொரு பிரிவினருக்கும் நம்பிக்கைகள் வேறுபடுகின்றன.
நீங்கள் அழைத்த குரலுக்கு கர்த்தர் வருவது போல நாங்கள் அழைக்கும் குரலுக்கு கண்ணன் வருவான் என்பது எங்கள் நம்பிக்கை.
இதில் உங்களுடையது எந்த அளவுக்கு உயர்ந்ததோ அதே அளவுக்கு அடுத்தவருடையதும் உயர்ந்ததே. அதனை ஏற்று அவர் அவர் வழியில் உள்ள
நல்லவைகளை – மறுபடியும் சொல்கிறேன் – நல்லவைகளை மட்டுமே பகிர்ந்து கொண்டு இணக்கமாக வாழ்வோம்.
ஞாயிறு தோறும் தேவாலயத்துக்கு செல்லும் நீங்களும் போற்றப்பட வேண்டியவர்தான். ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகையை விடாமல் மேற்கொள்ளும்
இசுலாமியர்களும் போற்றப்படவேண்டியவர்கள் தான். அதுபோலவே ராகுகால பூஜை, கிருத்திகை விரதம் கொண்டாடும் நாங்களும் உங்களை விட எந்த
வகையிலும் குறைந்தவர்கள் அல்ல.
// எல்லாம்வல்ல ஏக இறைவனே மனு உருவில் ஏசுவாக வந்தார்.// அசோக் அவர்களின் கருத்தை நான் மறுக்கவில்லை. உங்களை மீட்க ஏசுவாக வந்த ஏக இறைவன்
எங்களுக்காக ராமனாகவும், கண்ணனாகவும், கந்தனாகவும் அதற்க்கு முன்பே வந்து விட்டிருக்கிறார்.
நான் சொல்லி இருப்பதில் உள்ள நல்ல கருத்துக்களை எல்லாம் அடியோடு மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு இயேசுவை இறைத்தூதர் என்று சொல்லியதற்காக
நான் அவரை குறைத்துவிட்டேன் என்று சொல்லி இருக்கிறீர்கள்.
முடிவாக நண்பர் அசோக்ஜி அவர்கள் தனது பதிவில் “கேடடவர்கள் ” என்று எழுத்துப்பிழை வந்தற்காக திருத்தம் கொடுத்து “கெட்டவர்கள்” (அடேயப்பா.. கெட்டதை சொல்வதில்
தான் எவ்வளவு சந்தோசம்?) இருக்கிறார்.
எழுத்தில் பிழை இருக்கலாம். ஆனால் எண்ணத்தில் தான் பிழை இருக்கக் கூடாது நண்பரே.
அன்புடன் – மணியன்.
பி.கு. : நண்பர் சில்சாம் அவர்களின் கருத்துக்களுக்கு என் பதிலை தனியாக எழுதுகிறேன்.

அன்புச் சகோதரர் சில்சாம் அவர்களுக்கு:
வெளிச்சத்துக்கு நீங்கள் அழைப்பதாகவும், நாங்களோ இருளே சௌக்கியம், பாக்கியம் என்றும் சொல்வதாகவும் குறைப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் அழைப்புக்கு நன்றி.
//இதுபோலவே எண்ணற்ற நன்மொழிகள் பலராலும் எடுத்துச் சொ(செ)ல்லப்பட்டு யார்யாரோ சமதர்ம சன்மார்க்கம் பேசத் துவங்கிவிட்டார்கள்// – இதுவும் உங்கள் புலம்பல்தான்.
என்னவோ சமரச சன்மார்க்கம் பேசுவதற்கு உங்களை விட்டால் யாருக்குமே தகுதி இல்லை என்பதாக நினைத்துக்கொண்டு.. வாஸ்தவத்தில் நீங்கள் அந்த சன்மார்க்க நெறியை கடைப் பிடிப்பது இல்லை என்பது தான் என் வருத்தம். நீங்கள் “நிந்தனா மார்க்கத்தை” தானே கடைப்பிடிக்கிறீர்கள்.
எம்.எல்.எம். நிறுவனத்துக்கு ஆள் பிடிப்பது போல அல்ல நண்பரே இறை நம்பிக்கை. இத்தனை ஆண்டுக்குள்
உலகில் இத்தனை பேரை எங்கள் மதத்துக்கு மாற்றுவோம் என்று கணக்குப் போட்டுக்கொண்டு கடவுள் நம்பிக்கையை கொண்டு வரமுடியாது. கூட்டம் போட்டு “குருடர்கள் பாடுகிறார்கள். செவிடர்கள் பேசுகிறார்கள்” என்று மேடை போட்டு வித்தை காட்டி வரவழைப்பதற்கு பெயர் மத மாற்றம் அல்ல. மனமாற்றத்தை ஏற்படுத்துங்கள். உங்களுக்கு தெரியுமா? வேளாங்கண்ணி மாதா ஆலயத்துக்கு நாங்களும் செல்கிறோம். போகும் வழியில் சாலை ஓர விநாயகருக்கு கும்பிடு போடும் அதே கைகள் தான் மாதா கோவில் கோபுரத்தையும் வணங்குகிறது. ஏனென்றால் “எல்லாம் ஒருவனே” என்கிற சன்மார்க்க நெறியை நாங்கள் உளமார மனமார உண்மையிலேயே கடைபிடிப்பதால் தான்.
அதற்காக நீங்களும் எங்கள் ஆலய கோபுரம் கண்டால் கையெடுத்து வணங்குங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் வணங்கும் அதே கடவுள் தான் எங்கள் ஆலயத்திலும் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு எங்கள் மத உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுங்கள்.
இன்னும் சொல்லப்போனால் இந்த நாட்டில் பெரும்பாலான கிறித்துவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
உங்களைப் போன்ற ஒரு சிலரால் தான் இந்த நாட்டின் ஒருமைப்பாடு, நட்புணர்வு எல்லாமே கேள்விக்குறியாகி விடுகிறது.
//ஒரு மாற்றுப்பாதையில் நான் செல்லும்போது அதனைக் குறித்த மேன்மையைச் சொல்லுவதே பழைய பாதையைப் பழிப்பதாகிவிடுமா?// – என்று கேட்டிருக்கிறீர்கள். தாரளாமாக நீங்கள் உங்கள் பாதையின் மேன்மையைப் பற்றிச் சொல்லலாம். வரவேற்கிறோம். நிறைகளை சொல்லுங்கள். கர்த்தரின் அருமை பெருமைகளை நாவாரச் சொல்லுங்கள். நாங்களும் நெஞ்சம் நெகிழ்ந்து கேட்கத் தயாராக இருக்கிறோம்.
“உங்கள் தெய்வத்தை விட” என்று ஆரம்பித்து ஒப்பீடு செய்து உயர்த்துகிறீர்களே அதைத் தான் நாங்கள் வேண்டாம் என்கிறோம்.
மதுரையின் அஞ்சாநெஞ்சன் அழகிரி “உக்கிரமான” நரசிம்மரை சாந்தி செய்து வழிபடுகிறாறாம் என்று நக்கல் வேறு. நரசிம்மரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவர் உக்கிரம் கொண்டது ஒரு பச்சிளம் பாலகனின்
வார்த்தையை காப்பதற்காக. ஏளனம், கேலி என்கிற கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்க்கும் உங்கள் கண்களுக்கு அவர் கருணையின் வடிவம் என்பது தெரியாது.
கடைசியாக “எங்க ஆளு ரொம்ப சாதாரணமானவரு, கையில ஒரு ஆட்டுக்குட்டியை வைத்துக்கொண்டு உன்னையும் இதுபோல பாதுகாப்பேன் என்று சொல்லவும் நாங்க “மயங்கிப்போய்” அவர் பின்னால போயிட்டோம்” என்று சொல்லி இருக்கிறீர்கள்.
ரொம்ப சந்தோசம். அவர் அன்பின் முழு வடிவம். தன்னை சிலுவையில் அறைந்த எதிரிகளுக்கு கூட மனம் புண்படக்கூடாது என்பதற்காக “அவர்களை மன்னிக்கும்படி” இரட்சகனிடம் வேண்டிக்கொண்டவர்.
ஆனால் சகோதர மார்கத்தை சேர்ந்த எங்கள் மனதை புண்படுத்தும் படி எங்கள் நம்பிக்கைகளையும், தெய்வங்களையும் இகழ்து பேசும் நீங்கள் அந்த மயக்கத்தில் இருந்து முதலில் விடுபடுங்கள். அப்போது தான் அவர் பின்னால் நீங்கள் “மயங்கிப் போனதற்கு” அர்த்தம் இருக்கும்.
அன்புடன் – மணியன்

சகோதரர் அசோக் – அவர்களுக்கு.
“நான் இயேசு கிறிஸ்துவை குறைப் படுத்திக்கூறி இருக்கிறேன்”-என்று குற்றம் சாட்டி இருக்கிறீர்கள். ஆகவே ஒன்றுக்கு இரண்டு முறையாக நான் மறுபடி படித்துப் பார்த்தேன். மானிடர் பாவங்களை தான் ஏற்று அன்பே வடிவமாக சிலுவையில் அறைபட்ட அவரது தியாகத்தை நான் குறைத்து மதிப்பிட்டு ஏதாவது எழுதி இருக்கிறேனா என்று மீண்டும் ஒரு முறை படித்து உறுதி செய்து கொண்டேன். அந்த தியாகத்தை பற்றி நான் குறிப்பிட்டிருப்பதை விட்டுவிட்டு , அவரை “இறைத்தூதர்” என்று நான் சொல்லிவிட்ட ஒன்றை மட்டுமே பிடித்துக்கொண்டு (ஏனென்றால் அது தானே நீங்கள் விதண்டாவாதம் செய்வதற்கு வசதியாக அமைந்த வார்த்தை) நான் அவரை குறைபடுத்திக்கூறி இருப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். ஆகவே கோளாறு உங்கள் பார்வையில் தான் என்று புரிந்தது.
நண்பரே..எனது பதிவில் குறிப்பிட்டிருந்த மற்ற விஷயங்களை எல்லாம் படிக்க மறந்து விட்டீர்களா அல்லது மறைத்துவிட்டீர்களா? அவற்றை மறுக்க உங்களால் முடியாததால் எப்பொழுதும் போல நீங்கள் பாடிப் பாடி உங்களுக்கே அலுத்துப் போன “கெட்டவரிடம் இருந்தும், பாவத்திலிருந்தும், நரகத்திளிருந்தும் எங்களைக் காக்க ஒரு நல்லவர் இருக்கிறார்” என்ற ஒரே பல்லவியையே மறுபடி மறுபடி விடேன் தொடேன் என்று பிடித்துக்கொண்டு இருக்கிறீர்கள். (இதில் எழுத்துப் பிழைக்காகத் திருத்தம் வேறு! – நண்பரே.. எழுத்தில் பிழை இருக்கலாம். ஆனால் எண்ணத்தின் பிழை இருக்கக் கூடாது) எங்கள் மேல் நீங்க கொண்ட அன்புக்கு நன்றி. மீண்டும் ஒருமுறை எனது தகவல்களை மறுபடி நிதானமாக படித்துப் பார்க்கவும்.
மீண்டும் சொல்கிறேன். கர்த்தரின் சர்வ வல்லமை பொருந்திய கருணையை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசுங்கள். நெஞ்சம் நெகிழ்ந்து கேட்க நாங்கள் தயார்.
ஆனால் “உங்கள் கடவுள்களை விட” என்று ஒப்பீட்டில் இறங்கிவிடாதீர்கள். அதற்க்கு உங்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை. உங்கள் மதத்தை சேர்ந்தவர்களே அதை விரும்ப மாட்டார்கள். நோபெல் வென்ற ஒபாமா அவர்களே வெள்ளை மாளிகையில் தீபாவளி தினத்தன்று தீபங்கள் ஏற்று வழிபாடு செய்து மத நல்லிணக்கத்தையும் மனித நேயத்தையும் மதிக்கும் காலத்தில் நீங்கள் இன்னும் சிலுவை போர் காலத்திலேயே இருக்காதீர்கள். மதப் பிரச்சாரம் என்பது எம்.எல்.எம். இல் ஆள் பிடிக்கும் வேலை இல்லை. அது இறைவனின் கருணையை மற்றவருடன் பகிர்ந்து கொள்வது. “உனக்கு தெரிந்ததை நீ உணர்ந்ததை நீ சொல். நான் உணர்ந்ததை நான் சொல்கிறேன். அனைவருமாக சேர்ந்து அந்த இறைவனின் பெரும் கருணையில் திளைப்போம்.” – என்று வாருங்கள். நாங்கள் வரவேற்கிறோம். உங்களுக்கு அது தெரியாவிட்டால் நாங்கள் நிகழ்த்தும் ஆன்மீகச் சொற்பொழிவுகளுக்கு வந்து கேளுங்கள். நேரில் வர விருப்பம் இல்லாவிட்டால் குறுந்தகடில் கேட்டுப் பாருங்கள். அப்போது உங்களுக்கு சரியான வழிமுறை
தெரியும். அதில் எங்கள் கடவுளை போற்றுவோம். ஆனால் அதற்காக மற்றவர் நம்பிக்கைகளை ஒரு பொழுதும் தூற்றி இருக்கமாட்டோம். –
அன்புடன் – மணியன்.

// க‌னிக‌ளை வைத்துதான் ம‌ர‌ம் அறிய‌ப் ப‌டுகிற‌து. ந‌ல்ல‌ ம‌ர‌ம் தான் ந‌ல்ல‌ க‌னிக‌ளை கொடுக்க‌ இய‌லும் //

பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய அற்புதமான வரிகள்..!

காரணம் நண்பர் திருச்சிக்காரன் சொன்னதாலல்ல;இது இறைமகனார் இயேசுவானவர் சொன்னது; இதுபோலவே எண்ணற்ற நன்மொழிகள் பலராலும் எடுத்துச்
சொ(செ)ல்லப்பட்டு யார்யாரோ சமதர்ம சன்மார்க்கம் பேசத் துவங்கிவிட்டார்கள்;//

இவை இயேசு கிறிஸ்துவின் வாச‌க‌ங்க‌ள் தான். இயேசு கிறிஸ்துவின் வாச‌க‌ங்க‌ளை நாம் இங்கே அடிக்க‌டி குறிப்பிட‌க் கார‌ண‌ம் இயேசு கிறிஸ்துவின் வாச‌க‌ங்க‌ளுக்கு ம‌திப்புக் கொடுத்தாலாவ‌து ந‌ன்மைக்கு திரும்ப‌ட்டுமே என்கிற‌ கார‌ண‌த்தினால் தான்.

பிற‌ரைத் த‌ங்க‌ள் மார்க்க‌த்த‌வ‌ராக்கும் பொருட்டு பூமியையும், ச‌முத்திர‌த்தையும் சுற்றித் திரிகிறார்க‌ள். த‌ங்க‌ள் மார்க்க‌த்த‌வ‌ராக்கிய‌ பின் அவ‌ர்க‌ளை, த‌ங்க‌ளை விட‌ அதிக‌மான‌ பாவிக‌ள் ஆக்குகிரார்க‌ள்

என்கிற‌ கார‌ண‌த்தால் தான், ம‌ன‌ம் திருந்துங்க‌ள் என‌ அழைக்கிறோம்.

இந்த‌ பூமி முழுதும் சுற்றித் திரிந்து வெறுக் க‌ருத்துக்க‌ளைப் ப‌ர‌ப்பி, தங்க‌ளிலும் அதிக‌ பாவிகளாக்கி, ம‌க்க‌ள் மடிந்தாலும் ப‌ர‌வாயில்லை என‌ மோத‌லை உருவாக்கி, இந்த‌ பூமியையே எரி ந‌ர‌க‌ம் ஆக்க‌ வேண்டாம் என‌க் கோருகிரோம்.

கேட்க‌ச் செவி உள்ளோர் கேட்க‌ட்டும்.

ந‌ல்ல க‌ருத்துக்க‌ள் எல்ல‌ மார்க்க‌த்தின‌ரிட‌மும் உள்ள‌ன‌. காழ்ப்புண‌ர்ச்சியை ம‌ன‌தில் இருந்து எடுத்து விட்டால் அது புல‌ப்ப‌டும்.

யார் யாரோ ச‌மத‌ர்ம‌ம் பேச‌ ஆர‌ம்பித்து விட்டார்க‌ள் என்றால் சில‌ருக்கு ம‌ட்டும்தான் அதைப் பேச‌ உரிம‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌தா?

ச‌ம‌த‌ர்ம‌ ச‌ன்மார்க்க‌ம் பற்றி பேசினால் ஏன் இவ்வ‌ள‌வு ஆத‌ங்க‌ம்?

இயேசு கிறிஸ்துவின் பாதையை ச‌ரியான‌ பாதையை உல‌குக்கு காட்ட‌,

இயேசு கிறிஸ்துவின் பெயரால் காட்டு மிராண்டிக் க‌ருத்துக்க‌ளை ப‌ர‌ப்பி, அவ‌ர் உருவாக்கிய‌ பாதையின் மேல் த‌வ‌றான‌ அபிப்பிராய‌ம் வ‌ர‌வ‌ழைத்த‌வ‌ர்க‌ளின் பிடியில் இருந்து இயேசு கிறிஸ்துவின் ச‌ரியான‌ பாதையை, இயேசு கிறிஸ்துவின் புக‌ழை, மீட்டெடுக்க‌ நாம் தொட‌ர்ந்து இயேசு கிறிஸ்துவை மேற்கோள் காட்டி விள‌க்க‌ம் அளிப்போம்.

இயேசு கிறிஸ்துவை இக‌ழ‌ அல்ல‌,அவ‌ரின் புக‌ழை மீட்டெடுக்க‌வே நாம் எழுதுகிறோம்.

திருச்சிக்காரன் அவர்களே.
உங்கள் ஆதங்கம் புரிகிறது. இறைவன் இருக்கிறானா? என்ற கேள்விக்கு விடை காணும் முயற்சிக்கு தடைகற்களாக இருக்கும் கருத்துக்களுக்கு பதில் அழித்துக் கொண்டிருப்பதிலேயே கவனத்தை செலுத்தாமல்
மேற்கொண்டு தொடருங்கள். சூடான விவாதங்கள் – மாறுபட்ட கருத்துக்கள் – இன்னும் நிறைய வரலாம் – ஏன்..? என்னிடமிருந்தே கூட வரலாம் – எல்லாமே நல்ல தீர்வை அளிக்கும். ஆகவே மேற்கொண்டு நீங்கள் சொல்லவருவதை தொடருங்கள்.
அன்புடன் மணியன்

// இறைவன் இருக்கிறானா? என்ற கேள்விக்கு விடை காணும் முயற்சிக்கு தடைகற்களாக இருக்கும் கருத்துக்களுக்கு பதில் அழித்துக் கொண்டிருப்பதிலேயே கவனத்தை செலுத்தாமல்
மேற்கொண்டு தொடருங்கள் //

நண்பர் திருச்சிக்காரன் தோரணம் கட்டியதோடு சரி; இன்னும் எதையும் துவங்கவில்லை; அதனை நயமாகச் சொல்லியும் அவருக்குப் புரியவில்லை;

“இறைவன் இருக்கிறானா?” என்ற ஆராய்ச்சிக்கு வலு சேர்க்கும் எதையும் அவர் கட்டுரையிலேயே முன்வைத்திருக்க வேண்டும்; அவர் அந்த வழியினைக் காட்டாமல் “இறைவன் இருக்கிறானோ இல்லையோ,அவரவர் எப்படியோ கெட்டுப்போகட்டும்,எல்லோரும் அமைதியா இருங்க,சத்தம் போடாதீங்க,அடிச்சிக்காதிங்க‌ என ஊமைகள் பள்ளிக்கூடத்தில் சென்று சத்தம் போட்டது போல எதையோ நடத்துவதாலே குழப்பம் வருகிறது;

ஏற்கனவே சத்தியத்தைக் கேட்க வாய்ப்பில்லாமலும் சத்தியத்தைப் பார்க்கமுடியாமலும் சத்தியத்தைக் குறித்துப் பேசமுடியாமலும் இந்திய சமுதாயம் முடங்கிக் கிடக்கிறது;

அடுத்த வீட்டில் கொலையான அப்பாவிகளை துக்கம் விசாரிக்கக்கூட திராணியற்ற கேவலமான ஈனப்பிறவிகளாகி நிற்கிறோம்;

ஆம்,என் இனத்தின் வேர்கள் பிடுங்கப்பட்ட ஈழத்தையே சொல்கிறேன்..!

(தொடர்ந்து வாசிக்க…
என்னுடைய தளத்துக்கு அன்புடன் அழைக்கிறேன்…)
http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=33589255

சகோதரர் சில்சாம் அவர்களே,

இறைவன் இருக்கின்றானா? – என்ற கேள்வி எவ்வளவு முக்கியமானது, அதை பகுத்தறிவு அடிப்படையிலே அணுகாமால் நம்பிக்கை அடிப்படையிலே மட்டும் அணுகினால், அதனால் எந்த அளவுக்கு மக்கள் சமுதாயத்துக்கு தீங்கு வரும் என்பதை தெளிவு படுத்திக் காட்டினால்தான், இந்த கேள்வியை முன் வைக்க வேண்டிய அவசியமும், இதன் முக்கியத்துவமும் புரியும். எனவே நாம் இப்போது கட்டுவது தோரணம் அல்ல, அடித்தளமே ஆகும்.

“இறைவன் இருக்கிறானோ இல்லையோ- யாரும் பார்த்திராத , தானும் பார்த்திராத, நிறுபிக்கப்பட்டிராத இறைவன் கான்செப்டை வைத்து- இப்படித்தான் இருப்பார் , அப்படித்தான் கும்பிட வேண்டும் என்று பல கற்பனைகளை உருவாக்கி, பல கற்கால கட்டளைகளைப் போட்டு, அதை எல்லோரின் பேரிலும் திணிக்க முயற்சி செய்து , வெறுப்புணர்வை தூண்டி விடாமல், எல்லோரும் அமைதியா இருங்க, சத்தம் போடாதீங்க,அடிச்சிக்காதிங்க‌ என்று தான் சொல்லுகிறேன்.

உங்கள் தளத்துக்கு வருவது எங்களுக்கு மகிழ்ச்சியே. ஆனால் அங்கே எழுதியதற்கு இங்கே பதில் அளிக்க முடியுமா? நமது தளத்திலே மட்டுறுத்தல் எதுவும் இல்லை. ஒவ்வொரு வார்த்தையும், எழுத்தும் விடாமல் பிரசுரிக்கப் படுகின்றன. நீங்கள் இங்கேயே முழு பதிவையும் இடுவது பொருத்தமானது.

//அடுத்த வீட்டில் கொலையான அப்பாவிகளை துக்கம் விசாரிக்கக்கூட திராணியற்ற கேவலமான ஈனப்பிறவிகளாகி நிற்கிறோம்;

ஆம்,என் இனத்தின் வேர்கள் பிடுங்கப்பட்ட ஈழத்தையே சொல்கிறேன்..!//

//என் இனத்தின் வேர்கள்// – இதுவும் பிரச்சினைக்கு ஒரு காரணி, “நம் இனத்தின் வேர்கள்” என்று சொல்லுங்கள். பிளவு ஏற்பட்டால் வலிமை குறையும்.

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=33589255

// “நம் இனத்தின் வேர்கள்” என்று சொல்லுங்கள்;பிளவு ஏற்பட்டால் வலிமை குறையும் //

பிளவு ஏற்படுத்திய கருங்காலிகளுக்கு சிலர் வால் பிடிப்பதாலேயே நான் தனிமைப்பட்டேன்; அறிவுபூர்வமான- தியான மார்க்கத்தைச் சேர்ந்த- இயற்கையை மட்டுமே வழிபட்ட மறத் தமிழர்களை, மரத் தமிழர்களாக்கி வடக்கை வாழச் செய்து தானும் வாழச் செய்த‌ சூழ்ச்சிக்கு வால் பிடித்த துரோகிகள் என் அடுத்த வீட்டிலிருந்தாலும் நான் தனிமைப்பட்டே நிற்பேன்;

// இறைவன் இருக்கிறானோ இல்லையோ, இறைவனை யாருக்கும் காட்டாமலே, அவர்களும் பார்க்காமலே, நிரூபிக்காமலே பல கற்கால கட்டளைகளைப் போட்டு…//

நீங்கள் தீமிதித்தல்,அலகு குத்துதல்,தலையில் தேங்காய் உடைத்தல் போன்ற காட்டுமிராண்டித்தனத்தையா சொல்லுகிறீர்கள்..?

வடக்கில் அரதப்பழசாகி விலைபோகாத‌ சரக்குகளை இங்கே கடைவிரித்து (தாயத்துகளையும் உத்திராட்சங்களையும் சுண்டைக்காய்களையும்) பல்லாயிரம் ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கும் மத வியாபாரிகளைக் கண்டித்தால் உங்களுக்கு கோடி புண்ணியமாகப் போகும்;இதையெல்லாம் வெறுமனே நம்பிக்கை என நீங்கள் புறந்தள்ளிவிடமுடியாது;

அவர்கள் தான் புனிதமான தமிழ் மண்ணை மதவாதத்தால் அடிப்படை வாதத்தால் “இந்துத்வா” வெறியால் சாக்கடையாக்கிக் கொண்டிருக்கின்றனர்..!

தயவுசெய்து சிந்தியுங்கள்..!

(எனது தளத்தில் நான் பதிவதைக் குறித்து…உங்கள் தளத்தில் என்னைப் போன்ற தடைக் கற்களும் ஞான சூன்யங்களும் அபஸ்வரமாக ஒலிப்பதை சிலர் விரும்பாததாலேயே எனது எழுத்துக்களை சுருக்கிக் கொண்டு எனது தளத்தில் விவரமாக எழுதுகிறேன்;தங்கள் அன்புக்கு நான் என்றைக்கும் கட்டுப்பட்டவனாக இருப்பேன்..!)

சகோதரர் chillsam அவர்களே,

//அறிவுபூர்வமான- தியான மார்க்கத்தைச் சேர்ந்த- இயற்கையை மட்டுமே வழிபட்ட மறத் தமிழர்களை, மரத் தமிழர்களாக்கி வடக்கை வாழச் செய்து தானும் வாழச் செய்த‌ சூழ்ச்சிக்கு வால் பிடித்த துரோகிகள் என் அடுத்த வீட்டிலிருந்தாலும் நான் தனிமைப்பட்டே நிற்பேன்//

உங்கள் கருத்து பதிவுக்கு நன்றி.

இயற்கை வழிபாட்டுக்கு அதிக முக்கியத்துவமும், உருவ வழிபாட்டை ஓரளவும் கொண்டிருந்தது வட இந்தியப் பகுதியில் இருந்த இந்தியர்கள் தான்.
தென் இந்தியப் பகுதியில் வசித்த இந்தியர்கள் , குறிப்பாக தமிழர்கள் தான் இயற்கை வழிபாட்டுக்கு முக்கியத்துவம் குடுக்காமல், உருவழிபாட்டை முழுமையாகக் கடைப் பிடித்து வந்தனர். முருகனை சிறப்பாக வழிபட்டது தமிழர்கள் தான். தமிழ் இனம் உலகில் எங்கெங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் முருகன் கோவில் உண்டு.

போகர் என்னும் தமிழ் சித்தர் மலையிலே தனியாக வசித்து, முருகனுக்கு தானே ஒரு சிலை வடித்து வழிபட்டு , மனக் குவிப்பு செய்து வந்தார். பல்லாயிரம் வருடங்களுக்கு முன் அவர் உருவாக்கிய அதே முருகன் சிலை- அந்த இடம் பெரிய கோவிலாக கட்டப் பட்டு -பல மக்களாலும் வழி படப் பட்டு வருகிறது.

இப்படி தென் இந்தியர்கள் உருவ வழிபாட்டின் மூலம் மனக் குவிப்பு செய்வதில் வேகமாக மன வலிமையும் அமைதியும் அடைவதை கண்ட வட இந்தியர்கள் தாங்களும் முழு அளவில் உருவ வழிப்பாட்டில் ஈடுபட்டனர்.

உருவ வழிபாடு, பக்தி பற்றி கீதையிலே தனிப் பகுதியே இருந்தாலும் இருந்தாலும், உருவ வழிபாட்டை அன்று முதல் இன்று வரை விடாது முழு அளவில் பின்பற்றி வந்தது தமிழர்களே. எனவே தமிழரைப் பார்த்துதான் வட இந்தியர் உருவ வழிபாட்டின் சிறப்பை புரிந்து கொண்டனர். நீங்கள் அவசரத்திலே மாற்றி எழுதி விட்டீர்கள். நீங்கள் ஆழ்ந்து யோசித்தால், உண்மையை உணர உங்களால் முடியும்.

//நீங்கள் தீமிதித்தல்,அலகு குத்துதல்,தலையில் தேங்காய் உடைத்தல் போன்ற காட்டுமிராண்டித்தனத்தையா சொல்லுகிறீர்கள்..?//
தீமிதித்தல்,அலகு குத்துதல்…..இந்த செய்கைகள் எல்லாம் ஒரு மனிதன் தன்னைத் தானே வருத்திக் கொள்கிற செயல்களே அன்றி பிறரை எந்த வகையிலும் வருத்தம் அடைய வைக்கவில்லை.

பிறரை வருத்தம் அடைய வைப்பது , பிறரை துன்புறுத்துவது தான் காட்டு மிராண்டித்தனம்.

நான் தீ மிதிப்பதயோ, அலகு குத்திக் கொள்வதையோ வூக்குவிக்கவில்லை.

ஆனால் தீ மிதிப்பவரும், அலகு குத்திக் கொள்பவரும் துன்பத்தை தாங்கும் மன வலிமையை தாங்கள் பெறுவதாகவும், அதை அர்ப்பணிப்பாக தாங்கள் செய்வதாகவும் கூறுவதைக் கேட்டு இருக்கிறேன்.
அதை அவர்கள் தாங்களாகவே செய்கின்றனர்.

அலகு குத்திக் கொள்வதை பற்றி நீங்கள் குறிப்பிட்டது எனக்கு இயேசு கிறிஸ்து தன்னை தானே சிலுவையில் அறையப் படக் கொடுத்ததாக கூறப் படுவதை நினைவு படுத்தியது. சிலுவையில் அறையப் படுவது, அலகு குத்திக் கொள்வதை விட அதிக வேதனை தரக் கூடியது என்றாலும், கருத்து அளவிலே இரண்டும் ஒன்றுதான். இயேசு கிறிஸ்து தன் கொள்கையில் இருந்து பின் வாங்காமல் உலக மக்களின் நன்மைக்கு தன் கருத்துக்கள் பயன் படட்டும் என்று தன்னை சிலுவையில் அறையக் கொடுத்ததாக கொள்ளலாம். இங்கே இவர்கள் தங்கள் குடும்பத்தினருக்காக , தங்கள் சமுதாயத்துக்காக சிறிய அளவிலே தங்களை வருத்திக் கொள்வதாக கருதலாம். இதனை எழுதுவதால் இயேசு கிறிஸ்துவோடு ஒப்பிட்டாதாக கருதக் கூடாது. தன்னை தானே ஆக்கினைக்கு உட்படுத்திக் கொள்வது என்கிற கொள்கையை நினைவு படுத்தவே குறிப்பிடுகிறோம்

//நீங்கள் தீமிதித்தல்,அலகு குத்துதல்,தலையில் தேங்காய் உடைத்தல் போன்ற காட்டுமிராண்டித்தனத்தையா சொல்லுகிறீர்கள்..?//

பிறரின் வழிபாட்டை சகித்துக் கொள்ள முடியாமல், பிறர் வணங்கும் தெய்வங்களை இழிவு படுத்தி, அதனால் மக்களுக்கிடையே மோதல் வந்து பல்லாயிரக் கணக்கானவர் மடிந்தாலும் சரி, பிற மதங்களை இழிவு படுத்துவேன் என்ற காட்டுமிராண்டி சிந்தனை , செயல்களையே குறிப்பிட்டேன்.

திருச்சிக்காரரையும், மணியம் அவர்களையும் பாராட்டுகிறேன்: இந்த அளவு ஒரே கருத்தைத் திருப்பிச் சொல்லி, ஒரே ராகத்தில் சிலர் பாடிக்கொண்டிருந்தாலும், மிகப் பொறுமையுடன் கொஞ்சம் கூட காழ்ப்பு உணர்வு காட்டாமல் நாங்கள் எங்கள் பாதையில் போகிறோம், நீங்கள் உங்கள் பாதையில் செல்லுங்கள், நாம் ஒருவரை ஒருவர் வெறுக்காமல், நல்லுணர்வுடன் சேர்ந்து வாழலாம்; என்பதை வெவ்வேறு விதமாக சொல்லி இந்துக்களின் சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக பதில் கூறுகிறீர்கள்.
இது போன்ற விவாதம் இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர போகிறதா என அஞ்சுகிறேன் .

சகோதரர் நெற்குப்பை தும்பி அவர்களே, வருக, வருக.
கருத்துப் பதிவு இட்டதற்கு நன்றி. எந்த அளவுக்கு அதிகம் பதிவு இட முடியுமோ அந்த அளவுக்கு அதிகம் பதிவு இடுங்கள் என்று கோருகிறேன்.

//அவர்கள் தான் புனிதமான தமிழ் மண்ணை மதவாதத்தால் அடிப்படை வாதத்தால் “இந்துத்வா” வெறியால் சாக்கடையாக்கிக் கொண்டிருக்கின்றனர்..!//

எந்த அளவுக்கு இந்து மதக் கடவுள்களை பிற மார்க்கத்தவர் இகழ்கிரர்களோ அந்த அளவுக்கு இந்துத்துவா, சக்திகள் அதிக வலுப் பெரும்.

அமைதி சிந்தனையாளர்கள் தான் இந்து மதத்திலே அதிகம். அவர்கள் பொறுமையுடன் நல்லிணக்கப் பாதையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு இருப்பார்கள்.

ஆனால் இந்துக்களில் கணிசமானவர்கள் பொறுமையை இழக்க ஆரம்பித்து விட்டனர். நாம் பிற மார்க்கத்தினரின் கடவுள்களை இகழாத போது, பிற மார்க்கத்தினர் நமது கடவுள்களை இழிவு செய்வதை நாம் அனுமதிக்க முடியுமா? நாம் உப்பு போட்டு சோறு திங்கவில்லையா, என்று எண்ண ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் இந்துத்துவ சக்திகள் வலிமை பெறுகின்றன.

எனவே உண்மையிலே இந்துத்துவ சக்திகளின் கரங்களை வலுப் படுத்துவது- இந்துக்களின் கடவுள்களை இகழ்பவர்கள்தான், என்கிற உண்மையை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

புனிதமான தமிழ் மண்ணிலே மதக் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தி இந்த தமிழ் மண்ணை பாலஸ்தீன் போல எரி நரகம் ஆக்கி விட வேண்டாம் எனக் கோரிக்கை வைக்கிறேன்.

ஒருவன் நல்லவனாக,தூய்மையானவனாக,தர்மவானாக இருந்து எந்த இறைவனை வழிபட்டாலும் ,இறைவனை வணங்கவிட்டலும் அவன் இறைவனையே அடைகிறான்.இதுவே இந்து மதம் கூறும் உண்மையாகும்.
இந்து மத உண்மைகளின் மையத்தை நெருங்க நெருங்க வேறுபாடுகள் அனைத்தும்,மறைந்து அனைவரையும் நேசிக்கும் பண்பு வளரும்.
அனைத்து மதமும் ஒரே இறைவனை அடையும் பல பாதைகளேயாகும்.இந்த வேத உண்மையை தான் அனுபவத்தில் உணர்ந்து கூறியவர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.அதனால் அனைவரையும் நேசிப்போம்.

// தென் இந்தியப் பகுதியில் வசித்த இந்தியர்கள்,குறிப்பாக தமிழர்கள் தான் இயற்கை வழிபாட்டுக்கு முக்கியத்துவம் குடுக்காமல், உருவ வ‌ழிபாட்டை முழுமையாகக் கடைப் பிடித்து வந்தனர்; முருகனை சிறப்பாக வழிபட்டது தமிழர்கள் தான் //

நண்பர் போகப் போக ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் எழுதப் போய் யாரிடமோ குட்டு வாங்கப் போகிறீர்கள்;அதை நான் தான் தடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்;

தமிழர் வரலாற்றைப் பற்றிய எந்த தெளிவும் இல்லாமல் நுனிப்புல் மேய்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள எனக்கு கொஞ்சமும் தைரியமில்லை;(விட்டால் முகமது நபியும் முருகனும் கிபி 1515ல் சைதாப்பேட்டையில கில்லி விளையாடினாங்க என்று கூட நீங்கள் சொல்லக்கூடும்…இஸ்லாமிய நண்பர்கள் ஜாக்கிரதை..!)

முருகனின் சொந்த அண்ணனுக்கு வடக்கில் இருக்கும் மௌசு முருகனுக்கு ஏன் இல்லை? ஏரியா பிரித்துக் கொண்டார்களா என்ன?
முருகன் என்ற இறைவன் இருக்கின்றானா?
விநாயகர் என்ற இறைவன் இருக்கின்றானா?
சிவனுக்கு இரண்டு பிள்ளைகள் மட்டும் தானா?
ஃபேமிலி ப்ராப்ளம் ஏன் தெருவுக்கு தெரு வந்து சந்தி சிரிக்கிறது?

இப்படி முப்பது கோடி தெய்வங்களுக்கும் அதன் கோடானுகோடி விமானக்குக்குமுரிய வரலாற்றை ஆராய்ந்தால் ஓய்ந்து போவீர்கள்;

தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் கொடுத்த தலைப்பில் இவ்வளவு விவகாரம் இருக்கிறது; இதையெல்லாம் தீர்த்துவைத்தாலே உங்கள் கட்டுரை முழுமையடையும்;

அதைவிட என்னைப் போன்ற ஆட்களைத் தீர்த்துகட்டுவது எளிது;அதையே ஒரிசாவிலும் பீகாரிலும் சிலர் கடைபிடிக்கிறார்கள்;

தப்பித் தவறி (காசி) கங்கைக் கரையோரம் பக்கம் நீங்கள் போய்விட்டால் எரிந்தும் எரியாத பிணங்களைத் தின்னும் சிவனடியார்கள் கையில் வசமாக சிக்கிக் கொள்ளுவீர்கள்; இந்த விஷப் பரீட்சை வேண்டாம்;

அதைவிட பேசாம குஜராத்தின் குடிசைப்பகுதிகளின் திறந்தவெளிகளை சுத்தம் செய்யப்போன காந்திஜியைப் போல போகலாம்ணேன்..!

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=33589255

சகோதரர் சில்சாம் அவர்களே,

மட்டுறுத்தல் இல்லாமல் வெளியிட வேண்டும் என்றுதான் எல்லாக் கருத்தையும் வெளியிடுகிறோம். ஆனால் நீங்கள் இப்படி எழுதுவது சரியா . மத அடிப்படையிலே , சாதி அடிப்படையிலே , இன அடிப்படையிலே, மொழி அடிப்படையிலே ஒருவர் மீதும் சிறு தாக்குதல் கூட நடத்தப் படக் கூடாது. எல்லா மக்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்கப் பட வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படியிலே தான் நாம் கருத்து வெளியிடுகிறோம், செயல் படுகிறோம். எங்கள் கரங்கள் யாரையும் காக்க வருமே அல்லாது தாக்க வராது. அஹிம்சை கொள்கையின் அடிப்படையிலே செயல்படுகிறோம்.

மதக் காழ்ப்புணர்ச்சி வேண்டாம், அது மோதலை உருவாக்கும், தயவு செய்து மத வெறியைக் கை விடுங்கள், மத வெறி தீவிரவாதிகளின், அடிப்படை வாதிகளின் கரங்களை வலுப்படுத்துகிறது என்று சொன்னால் அதற்கு இப்படி எழுதுவது சரியா சகோதரரே?

நீங்கள் எழுதுவதை நாங்கள் தடுக்கவில்லை. உங்கள் பின்னூட்டங்கள் அனைத்தும் இங்கே பதிவு செய்யப் பட்டு அவற்றுக்கு பதில் விளக்கமும் தரப்படுகிறது. பிற மார்க்கக் கடவுள்களை இகழ்ந்தும் , திட்டியும் நீங்கள் எழுதியது எதையும் கூட மட்டுறுத்தவில்லையே. எங்களிடம் சகிப்புத் தன்மை இருக்கும் போது, அஹிம்சை கொள்கை இருக்கும்போது , அறிவு அடிப்படையில் சார்பில்லாமல் சிந்திக்கும் போது , வன்முறையை எந்த நிலையிலும் நாட மாட்டோம் என்று பள்ளியிலே உறுதி எடுத்த நிலையிலே நீங்கள் பொறுப்போடு எழுதுவது நல்லது.

மத வெறிப் பிரச்சாரத்தால் பல்லாயிரக் கணக்கானவர் மடிந்தாலும் சரி, நாங்கள் பிற தெய்வங்களை இகழ்வதை நிறுத்த மாட்டோம் என்று கூறியது திரு அசோக் குமார் கணேசன் தான், அவரின் பிற தெய்வங்களை இகழும் கருத்தை ஆதரித்து உடனே பின்னூட்டம் இட்டது நீங்கள் தான். எனவே உயிரைப் பற்றிக் கவலைப் பட வேண்டியது நடு நிலையான நாகரீக சிந்தனையாளர்களான நாங்கள் தான்.

எனவே தயவு செய்து பொறுப்போடு எழுதுங்கள் , மத வேறுப்பாட்டை மீறிய நட்பு நம்மிடம் உள்ளது. இது போன்ற கருத்துக்களை இனி இங்கே எழுத வேண்டாம், எங்கும் எழுத வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இங்கே எழுதப் பட்டுள்ள பதிவுகளைப் படிக்கும் எவருக்கும் யார் நியாயமாக எழுதுகிறார்கள், யார் அமைதிக்காக எழுதுகிறார்கள். யார் அவசரத்தில் காழ்ப்புணர்ச்சியை பதிய விட்டு, மோதலை கடைப் பிடிக்கிறார்கள் என்று புரியும். அமைதியின் பக்கம் இருங்கள் என்று கோருகிறோம்.

// எந்த அளவுக்கு இந்து மதக் கடவுள்களை பிற மார்க்கத்தவர் இகழ்கிறார்களோ அந்த அளவுக்கு இந்துத்துவா, சக்திகள் அதிக வலுப்பெரும்… //

இது என்ன மிரட்டலா…தத்துவமா..?

“ஒருவன் நல்லவனாக,தூய்மையானவனாக,தர்மவானாக இருந்து எந்த இறைவனை வழிபட்டாலும் ,இறைவனை வணங்கவிட்டலும் அவன் இறைவனையே அடைகிறான்.இதுவே இந்து மதம் கூறும் உண்மையாகும்.”

அருமையான விளக்கம் தனபால் !

இந்த தேசத்தில் பேச்சுரிமையும் எழுத்துரிமையும் இருக்கும்வரை யாரும் எதையும் செய்யலாம்…இது பொதுவானது…ஆனால் எங்கள் வரலாறு நான் அன்றைக்கும் யாருக்கும் அடங்கிப்போனதில்லை…இன்றைக்கும் அடங்கவில்லை….எந்நாளும் எதிர்த்து நிற்போம்…செத்த மீனு தண்ணி போற போக்குல போகுமாம்…உயிருள்ள மீனு எதிர்த்து போகுமாம்..!

// தன்னை தானே ஆக்கினைக்கு உட்படுத்திக் கொள்வது..?//

அப்படியானால் ஆக்கினைக்குக் காரணமானது என்ன?
யாரோ செய்த ஆக்கினைக்கு வேறொருவர் தண்டிக்கப்படுதல் நியாயமா? தற்கொலையும் கூட இதே போன்ற வகையில் வரக்கூடுமே?
எனவே தான் சாமி கும்பிட்டுவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்களா?
இதற்கு மீண்டும் அடுத்த பிறவியிலாவது நான் நல்ல பிறவியாகப் பிறக்கவேண்டும் என்ற குருட்டு மூட நம்பிக்கைதான் காரணமா?

chillsam,

எனக்கு ஒரு சின்ன Doubt chillsam. உங்க பேச்சுக்கே வர்றேங்க.

மாற்று சமய தெய்வங்கள் எல்லாம் பேய் பிசாசுன்னு வச்சுக்கோங்க. இயேசு கிறிஸ்து தான் உண்மையான தெய்வம் என்று வச்சுப்போம்.

ஏதோ ஒரு பெயரில் கடவுளை வழிபட்டால், அது உண்மையான கடவுளுக்குப் போய் சேராதா ?
இந்தப் பெயர் சொல்லி கடவுளை வழிபட்டால் தான் கடவுளுக்கு கேட்குமா ?
கடவுளுக்கு கூட ஒரு ஐடெண்டிட்டி தேவையா ? இந்த வணங்குதலை அவர் புரிந்துகொள்ள மாட்டாரா ?
சரி, அப்படின்னா, நாத்திகர்களுக்கு கடவுள் கெட்டது செய்வாரா ?
அப்படி இந்தப் பெயர் வைத்து மட்டும் தான் என்னை வணங்க வேண்டும் என்று சொல்லுகிற கடவுள், மற்றவர்களை ஏன் விட்டு வைக்க வேண்டும் ?

ஆக, எந்தப் பெயர் கொண்டு கடவுளை வழிபட்டாலும், வழி படாவிட்டாலும் அது கடவுளுக்கு தெரியணும்.

அந்த வகையில், கண்ணா என்று வழிபடுவதும், இயேசுவே என்று வழிபடுவதும், அல்லா என்று வழிபடுவதும் கடவுளுக்கேப் போய்ச் சேர வேண்டும். அதனால, எந்தப் பெயர் கொண்டு இறைவனை அழைத்தால் என்ன ? ஏன் “B” என்ற பெயர் கொண்ட கடவுள் பேய், பிசாசாகவும், “A” வை மட்டும் வணங்குங்கள் என்று சொல்வதன் அர்த்தம் என்ன?

அனைத்தும் ஆராயாமலே அறிந்து கொள்ளகூடிய முத்து முத்தான பதிவுகள். தொடரட்டும் உங்கள் வியத்தகு பணி.

வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்களுடன்,
வி.பி.மறவன்.

ச‌கோத‌ர‌ர் மற‌வ‌னுக்கு நெஞ்சார்ந்த‌ ந‌ன்றிக‌ளையும்வ‌ண‌க்க‌ங்க‌ளையும் தெரிவிக்கிறேன்.

அடிக்க‌டி த‌ளத்திற்க்கு வ‌ருகை த‌ந்து உங்க‌ளின் மேலான‌ க‌ருத்துக்க‌ளை ப‌திவு இடுமாறு கோருகிறேன்.

இந்திய‌ நாட்டிலே பேச்சுரிமையும், எழுத்துரிமையும் இருக்கிர‌து. யாரும் த‌ங்க‌ள் மத‌த்தைப் ப‌ற்றி பிர‌ச்சார‌ம் செய்ய‌லாம்.

ஆனால் இந்த‌ பேச்சுரிமையும், எழுத்துரிமையும் பொது அமைதியை கெடுத்து, மோத‌லை உருவாக்க்கும் வ‌ண்ண‌ம் உப‌யொக‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட‌க் கூடாது என்ப‌த‌ற்க்காக‌, பிற‌ ம‌த‌த்த‌வ‌ரின் ம‌த‌ உண‌ர்வுக‌ளை புண்ப‌டுத்தும் வ‌ண்ண‌ம் பேசுவ‌து, எழுதுவ‌த‌ற்க்கு அனும‌தி இல்லை, அது ச‌ட்ட‌ப் ப‌டி குற்ற‌மாகும்.

அத‌னால் தான் இயேசு கிறிச்துவை பற்றி ச‌ர்ச்சையை உருவாக்கிய‌ டாவின்சி கோட் நூல், ம‌ற்றும் திரைப் ப‌ட‌ம், இந்தியாவில் த‌டை செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌து. முன் ச‌ல்மான் ருஷ்டி எழுதிய‌ ச‌டானிக் வ‌ர்ச‌ஸ் என்ற‌ நூளும் இந்தியாவில் த‌டை செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌து. சிறிய‌ அளவில், பிற‌ ம‌த‌ங்க‌ளுக்கெதிரான‌ காழ்ப்புண‌ர்ச்சி பிர‌ச்சார‌ம் செய்ய‌ப் ப‌டும் போது அதை யாரும் பொருட் ப‌டுத்துவ‌தில்லை. ஆனால் அதுவும் ச‌ட்ட‌ப் ப‌டி குற்ற‌மே.

நாங்க‌ள் உயிருள்ள‌ மீனாக‌ இருப்ப‌தால் தான்,ஆத்தோடு அடித்துக் கொண்டு போக‌ப் ப‌டாம‌ல், உண்மையை அறிய‌ ஆராய்ச்சி ந‌ட‌த்துகிறோம். எந்த‌ மார்க்க‌த்து க‌ட‌வுள்க‌ளையும் நாங்க‌ள் இக‌ழ‌வில்லை. எல்லா மார்க்க‌த்தின‌ருட‌னும் ந‌ல்லிண‌க்க‌ அடிப்ப‌டியிலே அவ‌ர்க‌ளின் வ‌ழி பாட்டில் க‌ல‌ந்து கொள்ள‌ நாங்க‌ள் விருப்ப‌த்தையும் தெரிவித்து இருக்கிறோம்.

அன்புச் சகோதரர் சில்சாம் அவர்கள் நான் கூறிய கருத்துக்களை தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்.
//// இறைவன் இருக்கிறானா? என்ற கேள்விக்கு விடை காணும் முயற்சிக்கு தடைகற்களாக இருக்கும் கருத்துக்களுக்கு பதில் அழித்துக் கொண்டிருப்பதிலேயே கவனத்தை செலுத்தாமல் மேற்கொண்டு தொடருங்கள் // – என்று நான் சொல்லி இருந்தேன்.
ஹிந்து தெய்வங்களை அவர் இகழ, பதிலுக்கு நாங்கள் ஏதோ சொல்ல, மீண்டும் அவர் தொடர ……. இப்படி சங்கிலித் தொடர்
போல ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டும் காயப்படுத்திக்கொண்டும் இருப்பதால் என்ன பயன்? வீணான மனக் கசப்புதானே
சகோதரர்களுக்குள் ஏற்படும். அப்படிப்பட்ட கருத்துக்களைத் தான் தடைக்கற்கள் என்று நான் சொல்லி இருந்தேன்.
ஆனால் அன்புச் சகோதரருக்கு ஏனோ தெரியவில்லை.. ஆத்திரமும் ஆவேசமும் கண்களை மறைக்க
//…உங்கள் தளத்தில் என்னைப் போன்ற தடைக் கற்களும் ஞான சூன்யங்களும் அபஸ்வரமாக ஒலிப்பதை சிலர் விரும்பாததாலேயே//
என்று ஆரம்பித்து இருக்கிறார். அவரை ஞான சூன்யம் என்றோ அவரை தடைகள் என்றோ நான் எங்கே குறிப்பிட்டேன். வீணான மத துவேஷத்தில் ஈடுபடுவதைத்தானே வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவரோ அதை நிறுத்துவதாகத் தெரியவில்லை. எனவே தான் “பதிவின் நோக்கத்தை மாற்றக்கூடிய கருத்துக்களுக்கு பதில் தருவதிலேயே நேரத்தை செலவிட வேண்டாம். விஷயத்துக்கு வாருங்கள்” என்று திருச்சிக்காரருக்கு சொன்னேன். மற்ற படி நண்பர் சில்சாம் அவர்கள் எங்களுடன் மேலான பல கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். ஆவலுடன் கேட்க நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் அவரோ என்னை ஆணவப் போக்குள்ளவன் என்று அவரது தளத்தில் ஆரம்பித்து மறுபடியும் ஹிந்துக் கடவுள்களைப் பற்றி எப்படி எல்லாம் வசை மாறி பொழிய முடியுமோ அவ்வளவு பொழிந்து தள்ளி இருக்கிறார்.
அவரது கருத்துக்களை இங்கே முழுவதுமாக கொடுத்து இணக்கமாக இருக்கும் ஹிந்து சமயத்தவர் மனத்தை ஆவேசப் படுத்த நான் விரும்பவில்லை. என்றாலும்.. அவரது ஒரு சில கருத்துக்களுக்கு மறுமொழி தருவது அவசியம் என்று நினைக்கிறேன்.
//வேளாங்கண்ணி மாதா ஆலயத்துக்கு நாங்களும் செல்கிறோம். போகும் வழியில் சாலை ஓர விநாயகருக்கு கும்பிடு போடும் அதே கைகள் தான் மாதா கோவில் கோபுரத்தையும் வணங்குகிறது. ஏனென்றால் “எல்லாம் ஒருவனே” என்கிற சன்மார்க்க நெறியை நாங்கள் உளமார மனமார உண்மையிலேயே கடைபிடிப்பதால் தான்.// – என்று நான் சொல்லி இருந்தேன்.
இதற்கு அருமைச் சகோதரர் “நீங்கள் இயேசுவை வணங்குவது பெரிய அதிசயமே இல்லை; சாதாரண வேப்பம‌ரமே தொழத்தக்கதானால் வரலாற்றையே இரண்டாக(கர்மவினை சார்ந்த யுகமும் தேவ அநுக்கிரஹம் சார்ந்த யுகமுமாக…) வகுத்துத் தந்த ப்ரஜாபதியை எப்படி உங்களால் புறக்கணிக்கமுடியும்?” – என்று கேட்டிருக்கிறார்.
சாதாரண வேப்ப மரத்திலேயே நாங்கள் இறைவனை காண்கிறோம். அனைத்திலும் அவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் புனிதமான கோட்பாடுகளைக் கொண்டிருப்பதை இது உணர்த்துகிறது. கர்ம வினை சார்ந்த யுகம், தேவ அனுக்கிரகம் சார்ந்த யுகம் என்று வரலாற்றை இரண்டாக பகுத்துத் தந்த “பிரஜாபதி”யை நாங்கள் புறக்கணிக்க முடியாது தான். நாங்கள் என்றுமே புறக்கணித்ததில்லையே. உங்களுக்கு இரண்டு யுகங்கள். அதை கர்ம காண்டம், ஞான காண்டம் என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எங்கள் நால்வேதங்களில் பிரித்து ஞானம் அடைய வேண்டுமானால் அவரவருக்கு விதித்த முறைப்படி கர்மங்களை ஒழுங்காகச் செய்து பரம்பொருள் (அதாவது ‘பிரஜாபதி”) அடையவேண்டும். என்று கொண்டிருக்கிறோம்.
அடுத்து:
// மாதாவையும் இயேசுவையும் பற்றிய விவரமே அறியாமல் இரண்டையும் பொதுவில் வைத்து வணங்குவது உங்கள் அறியாமையே; இது அறிவுசார்ந்த உணர்வுபூர்வமான தொழுகையாகத் தெரியவில்லை;//
என்று சொல்லி இருக்கிறீர்கள். நண்பரே அதைத்தானே நானே குறிப்பிட்டு வருகிறேன். நீங்கள் வணங்கும் தெய்வத்தின் மேன்மையை நாங்கள் அறியாதவர்கள் தான். அந்த அருமை பெருமைகளை பகிர்ந்து கொள்வோம். ஆனால் நீங்களோ உங்கள் மதம் மட்டும் தான் உயர்வு என்று கூறிக்கொண்டு எங்கள் மத நம்பிக்கைகளை இழித்தும் பழித்தும் பேசிக்கொண்டு இருக்கிறீர்களே.
இரண்டாயிரம் ஆண்டு நம்பிக்கையே இவ்வளவு பேச வைக்கிறது என்றால் என்று தோன்றியது என்றே ஆராய்ச்சியாளர்களால் கணிக்க முடியாத மதத்துக்கு சொந்தக்காரர்களான எங்கள் நம்பிக்கை எவ்வளவு பேசவைக்கும்? ஆனால் நாங்கள் பேசுவது இல்லை.
காரணம் என்ன தெரியுமா? எங்களால் முடியாது என்பது அல்ல. எங்கள் பெருந்தன்மை தான் காரணம்.
//விட்டால் முகமது நபியும் முருகனும் கிபி 1515ல் சைதாப்பேட்டையில கில்லி விளையாடினாங்க என்று கூட நீங்கள் சொல்லக்கூடும்…இஸ்லாமிய நண்பர்கள் ஜாக்கிரதை..!)//”..- இது என்ன பேச்சு சார். சிண்டு முடியும் வேலை. பிரித்தாளும் சூழ்ச்சியின் வெளிப்பாடு. (வழி வழியாக உங்களுக்கு இது கைவந்த கலை ஆயிற்றே). ஒற்றுமையாக இணையத்தில் இருக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எங்களுக்கும் இடையில் பிரிவினையை உண்டு பண்ணுவது ஏனோ? இந்து, இஸ்லாம், கிறித்துவம் என்ற மார்க்கங்கள் தான் நம்மை வேறுபடுத்துகின்றன. மற்றபடி அவர் அவர் வழியில் கடவுளை உணர்ந்து கொள்வோம். கருணையே வடிவான அவர் படைப்பில் நாம் அனைவரும் ஒன்றுதான். நாம் அவரை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும்- நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் அவர் நம்மை வாழவைத்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த உண்மையை நாங்கள் உணர்ந்தவர்கள். ஆகவேதான் பாதைகள் தான் வேறு. சேரும் இடம் ஒன்று என்கிறோம். ஆனால் நீங்களோ முதலையும் மூர்க்கமும் கொண்டது விடாது என்பதற்கு உதாரணமாக உங்கள் பாதை மட்டுமே வழி. நாங்கள் எல்லாரும் முட்டாள்கள் என்ற ரீதியில் பேசிக்கொண்டிருப்பதால் தான் ஒரிசாவிலும் பீகாரிலும் பாதிக்கப் படவேண்டியதாகிறது. வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வேளையில் நீங்கள் இறங்குவதால் தான்… பிரச்சினையே வருகிறது.
உங்களது போக்குக்கு காரணம் தெள்ளத்தெளிவாக உங்கள் இடுகைகளில் இருந்து புரிகிறது.
ஆத்திரம் உங்கள் கண்களை மறைத்து அறிவுக்கு திரை போடுகிறது. என்னதான் நாம் செய்தாலும் இந்த இந்து மதத்தை ஒரேயடியா ஒழிச்சுக் கட்டமுடியலேயே என்ற தோல்வி தரும் ஏமாற்றம் தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே தான் உங்கள் போக்கை மாற்றிக்கொள்ள மறுக்கிறீர்கள்.
உங்களுக்காக நாங்கள் செய்ய முடிவதெல்லாம் ஒன்றுதான். நீங்கள் வணங்கும் அந்த தேவனிடமே உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.
“ஆண்டவரே. இவர்கள் அறியாமையால் தவறு செய்கிறார்கள். இவர்களை மன்னியும். இவர்களிடமும் கருணை காட்டுங்கள்.”

திரு. தனபால் அவர்களின் கருத்துக்கு நன்றி.

எத்தனை உயர்வான கருத்துக்கள்! அன்புக் கருத்துக்களை, அரவணைப்புக் கருத்துக்களை எழுதி உள்ளார்.

நன்றி சகோதரர் தனபால் அவர்களே!

“இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான். அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?” கவியரசு கண்ணதாசன் அவர்கள் 1965 இல் எழுப்பிய கேள்வி இது. அந்தக் கேள்வியை நண்பர் திருச்சிக்காரன் மறுபடி எழுப்பி தேடலில் இறங்கி இருக்கிறார். அவருக்கு இந்த எளியேனின் கருத்துக்கள் எந்தவிதத்திலாவது உதவும் என்ற நம்பிக்கையில் எனது பதிவை தொடர்கிறேன்.

கவியரசர் தனது பாடலின் அடுத்த வரிகளில் இப்படிக் குறிப்பிடுகிறார்”

“நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை. நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை.” – இந்த வரிகளையே ஆதாரமாகக் கொண்டு தொடர்கிறேன்.

ஆம். கவி அரசர் சொல்வது போல ஆத்திகனாக மாறி ஆலயம் தொழுவதாலும், மந்திரங்கள் ஜபிப்பதாலும் பூசனைகள் செய்வதாலும் இறைவன் அகப்படமாட்டான். அதாவது தெய்வத்தை காணமுடியாது. அதுபோல நாத்திகனாக மாறி அவனை மேடை போட்டு திட்டுவதாலோ இல்லை என்று மறுப்பதாலோ அவன் பயந்துவிடவும் மாட்டான். அதாவது புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டும் இறைவனுக்கு ஒன்றே தான் என்பதை வெகு எளிதாக வலியுறுத்தும் இந்த வரிகளைப் பார்க்கும் போது உள்ளீடாக ஒரு ஆச்சரியம் நமக்கு காத்திருக்கிறது.

அதாவது.. ஒரே மனிதனின் இருவேறு பட்ட மன நிலையை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

ஒரு ஆத்திகன். (அவன் ஆறுகால பூஜை செய்பவனாகவோ, ஐந்து நேரம் தொழுகை புரிபவனாகவோ, மண்டியிட்டு சிலுவைக் குறி இட்டுக் கொள்பவனாகவோ இருக்கலாம்.) அவன் இறைவனை பார்க்க துடித்து தேடுகிறான். ஆனால் இறைவன் தென்படவில்லை. நாள் தோறும் நியமம் தவறாமல் தனது மதக் கோட்பாட்டை கடைப்பிடித்து தனது புனித நூல்களில் சொல்லி இருக்கிற முறைப்படி அவனை காணவேண்டும் என்ற துடிப்போடு எவ்வளவோ போராடுகிறான். தோல்வியே மிஞ்சுகிறது.

விளைவு – நாத்திகனாக மாறிவிட்டால் தனக்கு இவன் செய்து வரும் பூசனைகள் எல்லாம் நின்று போய்விடுமே என்று பயந்து இறைவன் வந்துவிடுவான் என்று கணக்குப் போட்டு நாத்திகனாக மாறுகிறான்.

ஆனால்.. இறைவன் அதற்க்கெல்லாம் பயப்படுகிறவன் அல்ல என்று பிறகு உணர்ந்து கொள்கிறான்.

அவனது தேடல் தொடர்கிறது. அந்தத் தேடல் நமது அருமை நண்பர் திருச்சிக்காரன் அவர்கள் இணையத்தில் பதிவோட்டல் செய்து தேடும் வரை வந்துவிட்டது.

சரி.. அப்படி என்றால் நம் கண்ணால் அவனை நாம் காணவே முடியாத போது அவனை எப்படி நம்புவது.?

எது ஒன்றுக்கும் “பிரத்யட்சப் பிரமாணம்” இல்லாவிட்டால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது.?

எல்லாவற்றையும் நாம் பார்வை ஒன்றை வைத்தே தீர்மானிக்க முடியாது. ஏனென்றால் நமது பார்வை ஒரு எல்லைக்கு உட்பட்டது. அருகில் உள்ள ஒரு வஸ்து தூரம் அதிகமாக அதிகமாக சிறுத்து ஒரு புள்ளியாகி நம் பார்வையை விட்டே மறைந்தும் விடுகிறது. அப்படியானால் அந்தப் பொருள் இல்லை என்று சொல்லிவிடலாமா?
சில சமயம் நமது பார்வை சரியான பொருளை உணர்த்துவதும் இல்லை.
இருளில் கீழே கிடக்கும் கயிறு.. பாம்பாக தெரிகிறது. பதறுகிறோம். வெளிச்சம் வந்ததும் தான் அது பாம்பு அல்ல வெறும் கயிறுதான் என்பதை புரிந்து கொள்கிறோம்.
சில நபர்கள்,”அதோ அங்கே “என்னவோ” இருக்கே.. என்னன்னு சரியாவே தெரியலே. நீ பாரேன்.” என்று அடுத்தவரை துணைக்கு அழைப்பார்கள்.
ஆகவே ஒரு வரையறைக்குட்பட்ட நமது பார்வையாலோ, அறிவாலோ இறைவனை அடைய முடியாது என்று தெளிவாகிறது.
அப்படியானால் “இறைவன் இருக்கின்றானா?” என்பதை எப்படி தெரிந்து கொள்வது.?
அடுத்த பதிவூட்டலில் இன்னும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
அன்புடன்- மணியன்

அண்ணன் மணியன்:
// நீங்களோ முதலையும் மூர்க்கமும் கொண்டது விடாது என்பதற்கு உதாரணமாக உங்கள் பாதை மட்டுமே வழி. நாங்கள் எல்லாரும் முட்டாள்கள் என்ற ரீதியில் பேசிக்கொண்டிருப்பதால் தான் ஒரிசாவிலும் பீகாரிலும் பாதிக்கப் படவேண்டியதாகிறது //

இந்த ஒரு சில வரிகளிலேயே ச்சும்மா (என் வயித்த..!) கலக்கிட்டிங்கண்ணே..!

உங்களுக்கு சொல்லவேண்டியது நிறைய இருக்கு…
ஆனாலும் சக எழுத்தாளன்,சிந்தனையாளன் என்ற முறையில் உங்களுக்குடைய உழைப்புக்கும் உணர்வுக்கும் தலைவணங்குகிறேன்…
தொடர்ந்து கதைப்போம்,சரியா..?

(நண்பர் திருச்சிக்காரனுக்கொரு திருத்தம்,நீங்கள் மணியன் அவர்களுக்கு பதிலாக தனபால் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்களென நினைக்கிறேன்.)

அண்மையில் சென்னைக்கு அருகில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவத்தை தழுவிய மக்களின் வீடுகள் இந்துத்துவா பற்றாளர்களால் அடித்து உடைத்து நொறுக்கப்பட்டது. சகிப்புத்தன்மையின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இதுவன்றோ. நண்பர் திருச்சிக்காரர் அடிக்கடி பாலைவன வெறுப்பியல் கருத்து அது இது என கூறுவார். அப்படியே இந்த வெறுப்பியல் கருத்தயும் என்ன என விளக்கினால் சரி.
தென் தமிழகத்தின் குக்கிராமங்களில் பனை இறக்கிய மக்கள் எவ்வாறு மேல் சாதியினரால் துன்புறுத்தப்பட்டனர், வாழ்வின் பின் தங்கிய நிலையில் இருந்த அவர்களை தமது சமுதாய பணிகளால் முன்னேற்றம் அடையச்செய்தவர்கள் ஆங்கிலேய மிஷனரிகள் தாம். அவர்களை மிகக்கேவலமாக விமர்சிப்பது தமிழ் ஹிந்து தளத்தின் முக்கிய பணியாகவே இருந்து வந்துள்ளது. ஐயா எங்களை வாழ விடவே தயங்கிய சமயத்தை எங்களது முன்னோர் விட்டு வெளியே வந்து கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு சீரமைத்து கொண்டது தவறா? ஒரு வேளை ஆங்கிலேய மிஷனரிகள் அப்பகுதிகளுக்கு வராமலே போயிருந்தால் எங்கள் நிலை என்னவாக இருந்திருக்கும், இன்னும் இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு செருப்பை கையில் தூக்கிக்கொண்டு, மாரில் சேலை அணியாமலே தான் இருந்திருப்போம். இந்த சமுதாய மாற்றம் தவறா. சரி நாங்கள் கொண்ட இந்த பக்தியை கிட்டத்தட்ட 3 அல்லது 4 தலைமுறைகளாக விட்டுவிடவில்லையே.மதம் மாறியதால் எங்களது வாழ்வு முன்னேறிதான் இருக்கிறது. தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இன்றைக்கு தேசமெங்கும் பரவி தங்களது திறமையால் முன்னேறியுள்ளனர். மதம் மாறியதால் எங்களுக்கு தேசபக்தி காத தூரம் ஓடிவிடவில்லை, எங்களது இதயத்திலொஉம் செயலிலும் தேசபக்தி நிறைந்தே உள்ளது.

Dear Brother Joseph,

இந்து ம‌த‌த்தின‌ர் ச‌கிப்பு த‌ன்மை இல்லாத‌ வ‌கையிலே ந‌ட‌ந்து கொண்டாலோ, இப்படி குடிசைக‌ளை பிரிப்ப‌து போல‌ ந‌ட‌ந்து கொண்டாலோ, அதை திட்ட‌வ‌ட்ட‌மாக‌ க‌ண்டிக்கிரோம். ம‌த‌ அடிப்ப‌டையிலே ஒருவ‌ருக்கு கூட‌ தீங்கு விளைவிக்க‌க் கூடாது, வேறு எந்த‌ அடிப்ப‌டையிலும் யாருக்கும் தீங்கு விளைவிக்க‌க் கூடாது என்ப‌தெ ந‌ம‌து கொள்கை.

இந்து ம‌தத்திலே வ‌ன்முறை புகுத்த‌ப் ப‌டுவ‌தை நாம் எதிர்க்கிரோம். அது போக‌ப் போக‌ மிக‌ அபாய‌மான‌ விளைவுக‌ளை உருவாக்கி விடும். ஆனாலும் பெரும்பாலான‌ இந்துக்க‌ள் ச‌கிப்புத் த‌ன்மை உடைய‌வ‌ர்க‌ளாக‌ இருக்கிறார்க‌ள் என‌ நான் க‌ருதுகிரேன்.

நீங்க‌ளே வ‌சிக்கும் ப‌குதியில், அலுவ‌ல‌க‌த்தில் இந்து ம‌த‌த்தை சேர்ந்த‌ ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ளை நீங்க‌ளே ச‌ந்த்தித்து இருப்பீர்க‌ள், அவ‌ர்க‌ளில் பெரும்பாலானொர் ம‌த‌ ச‌கிப்புத் த‌ன்மை உடைய‌வ‌ர்க‌ளாக‌ இருக்கிறார்க‌ளா, ம‌த‌க் காழ்ப்புண‌ர்ச்சி உடைய‌வ‌ர்க‌ளாக‌ இருக்கிறார்க‌ளா என்று நீங்க‌ளே கூற‌லாம். இந்து ம‌தத்தில் காழ்ப்புண‌ர்ச்சி புகுத்த‌ப் ப‌டுவ‌து மிக‌ த‌வ‌றான அபாய‌மான‌ போக்கு, அதை க‌ண்டிக்கிறோம்.

இந்தியாவிலே சாதி முறையால் தாழ்த்த‌ப் ப‌ட்ட‌வ‌ருக்கு அநீதி இழைக்க‌ப் ப‌ட்ட‌து . அந்த‌ அநீதி ச‌ரி செய்ய‌ப் ப‌ட‌ வேண்டும் என்ப‌தில் மாற்றுக் க‌ருத்து இல்லை. அத‌ற்க்காக‌ அர‌சாங்க‌ம் ப‌ல‌ திட்ட‌ங்க‌ளை தீட்டி செய‌ல் ப‌டுத்தி வ‌ருகிற‌து. அதனால் முன்னேற்ற‌ம் வ‌ருகிர‌து. தாழ்த்த‌ப் ப‌ட்ட‌வ‌ரின் முன்னெற்ற‌ம் இன்னும் விரைவாக‌ இருக்க‌ வேண்டும் என்ப‌தே ந‌ம‌து விருப்ப‌ம். எல்லொரும் ஒரே ம‌னித‌ இன‌மாக‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாயமாக‌ இணைய‌ வேண்டும் என்கிற‌ கொள்கையில், நோக்க‌த்தில் தெளிவாக இருக்கிறொம். என்னுடைய‌ ந‌ண்ப‌ன் ஒருவ‌ன் கூட‌ எம். டி. ப‌டித்து பெரிய‌ டாக்ட‌ராக‌ இருக்கிறான்.

என்னுடைய‌ வூரிலே ப‌ணக்கார‌ப் பைய‌ன்க‌ள், வ‌லுவான‌ ச‌முத‌ய‌ப் பிண்ண‌ணி உடைய‌வ‌ர்க‌ள் சிறு வ‌ய‌திலே என்னை மிர‌ட்டி இருக்கிறார்க‌ள். நான் யாரை திட்டுவ‌து? இப்போது கூட‌ ஒரு வணிக‌ நிறுவ‌ன‌த்தை ஆர‌ம்பித்துப் பாருங்க‌ள். எத்த‌னை பேர் வ‌ந்து மிர‌ட்டி மாமூல் கேட்கின்றார்க‌ள் என்று தெரியும். நாம் எல்லோருமே அடிமைக‌ள் தான். அடிமைக‌ளுக்குள் த‌க‌றாறு தேவையா?

இந்த‌ பெண்க‌ள் மார்பில் துணி அனியாம‌ல் இருந்த‌து த‌மிழ் நாட்டில் பெரும்பால‌ன ப‌குதிக‌ளில் என்றுமே இருந்த‌து கிடையாது, அவ‌ர்க‌ள் எந்த‌ பிரிவை சேர்ந்தவ‌ராக‌ இருந்தாலும். கேர‌ளாவை ஒட்டிய‌ த‌மிழ‌க ப‌குதிக‌ளில் அந்த‌ சூழ்னிலை இருந்திருக்க‌க் கூடும். அது கேர‌ள‌ ப‌குதியில் உருவாக்க‌ப் ப‌ட்ட‌ ஒரு அனீதி.

சாதி என்ப‌து தொழில் அடிப்ப‌டையில் உருவாகி, பிற‌கு பிற‌ப்பு அடிப்ப‌டையிலே இறுக்க‌ப் ப‌ட்டு விட்ட‌து. சாதிக‌ளற்ற‌ ச‌மத்துவ‌ ச‌மூக‌ம் உருவாக்குவ‌த‌ற்க்கான‌ வ‌ழிக‌ள் பற்றி நாம் தொட‌ர்ந்து ப‌ல‌ க‌ட்டுறைக‌ளை வெளியிடுவோம்.

உங்க‌ளுடைய‌ க‌ருத்துக்க‌ள் , உங்க‌ளின் ஆத‌ங்க‌த்தை நேராக‌ வெளிப் ப‌டுத்தி இருக்கிறீர்க‌ள். காழ்ப்புண‌ர்ச்சி உங்க‌ள் ப‌திவில் அதிக‌ம் இல்லை. பாராட்டுகிறேன்.

Dear Brother Joseph,

எங்களை வாழ விட‌வே த‌ய‌ங்கிய‌ ச‌ம‌ய‌த்தை என்று குறிப்பிட்டு இருக்கிறீர்க‌ள். சாதியின் கார‌ண‌த்தை , வ‌ர‌லாறை ச‌ரியாக‌ப் புரிந்து கொள்ளா விட்டால் ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் அமைக்க‌ முடியாது.

தமிழ் நாட்டில் ம‌ட்டும் எத்த‌னை சாதிக‌ள்? செட்டியார் பிரிவை எடுத்துக் கொண்டால் ந‌க‌ர‌த்தார், நாட்டுக் கோட்டை செட்டியார், கோமுட்டி செட்டியார்… இப்ப‌டி ப‌ல‌ பிரிவுக‌ள். ஆசாரியார் ச‌மூகத்தை எடுத்துக் கொண்டால் த‌ச்சு ஆசாரி, பொன் ஆச்சாரி… இப்ப‌டி எத்த‌னை பிரிவுக‌ள். ஆயிர‌க் க‌ண‌க்கில் , ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கில் சாதிக‌ள் இந்தியாவில். இத்த‌னை சாதிப் பிரிவுக‌ளும் இந்து ம‌த‌ வேத‌த்திலே சொல்லி பிரித்து வைத்தார்க‌ளா? . அவ‌ர‌வ‌ர்க‌ள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப‌ பிரிந்து கொண்ட‌ன‌ர். த‌க‌ப்ப‌ன் த‌ன் ம‌க‌னுக்கு த‌ன் தொழில் நுணுக்க‌ங்க‌ள் அணைத்தையும் சொல்லித் த‌ந்து அவ‌னை அந்த‌ துறையிலே ப‌யிற்சி பெற‌ வைத்தான். இப்ப‌டியாக‌ தொழில் அடிப்ப‌டையில் உருவான‌ சாதிக‌ள் பிற‌ப்பு அடிப்ப‌டையில் இருக்க‌ப் ப‌ட்ட‌ன‌.

இந்தியாவில் கி.மு. நாலாம் நூற்றாண்டு முத‌ல் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வ‌ரை ப‌த்து நூற்றாண்டுக‌ள் புத்த‌ ச‌ம‌ண‌ ம‌த‌ங்க‌ள் முன்னிலையில் இருந்து இந்து ம‌தத்தை பின்ன‌டைய‌ வைத்த‌ன‌. . ஆனால் இந்திய‌ ச‌முதாய‌ம் சாதி அமைப்பை த‌ள்ளி வைக்க‌வில்லையே?

இப்போது த‌மிழ் நாட்டில் கிறிஸ்தவர்க‌ளிடையெ சாதிப் பிரிவினை இல்லையா? எரையூரில் சாதிக் கிறிஸ்தவர்‌ ம‌ற்றும் த‌லித் கிறிஸ்த்த‌வ‌ர்க‌ளுக்கு இடையே ந‌ட‌ந்த‌ மோத‌லில் இருவ‌ர் ம‌ர‌ண‌ம் அடைய‌வில்லையா?

போன‌ வார‌ம் தென் த‌மிழ‌க‌த்தில் சாதி கிறி ஸ்த்த‌வ‌ர்க‌ள் சில‌ர் த‌லித் பிரிவு கிறிச்த்த‌வ‌ர் ஒருவ‌ரை அவ‌மான‌ப் ப‌டுத்திய‌தாக புகர் கொடுக்க‌ப் ப‌ட்டுள்ள‌தெ.

சாதியின் ச‌ரியான‌ கார‌ணிக‌ளை புரிந்து கொண்டு, சாதிக‌ளை கை விட்டு ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் அமைக்க‌ பாடுப‌ட வேண்டும். இல்லாவிட்டால் சாதிக‌ள் நிர‌ந்த‌ர‌மாகி விடும்.

//நோபெல் வென்ற ஒபாமா அவர்களே வெள்ளை மாளிகையில் தீபாவளி தினத்தன்று தீபங்கள் ஏற்று வழிபாடு செய்து மத நல்லிணக்கத்தையும் மனித நேயத்தையும் மதிக்கும் காலத்தில் நீங்கள் இன்னும் சிலுவை போர் காலத்திலேயே இருக்காதீர்கள். மதப் பிரச்சாரம் என்பது எம்.எல்.எம். இல் ஆள் பிடிக்கும் வேலை இல்லை. அது இறைவனின் கருணையை மற்றவருடன் பகிர்ந்து கொள்வது//
மணியன் ஐயா, ஒபாமா மத நல்லிணக்கத்தை மதிக்கிறார், இல்லை யென சொல்லவில்லை. ஏன் அமெரிக்க செனட் சபையில் வேத மந்திரங்கள் முழங்க நிகழ்வுகள் ஒருமுறை ஆரம்பிக்கப்பட்டது, ஆனால் இங்கு கிறிஸ்தவ பள்ளிகளில் ஏறெடுக்கப்படும் பிரேயர் கூட தவறாக விமர்சிக்கப்படுகிறதே, ஒரு ஓலை குடிசையில் கிறிஸ்தவ ஆலயம் இருந்தால் பல இடங்களில் பிய்த்து எறியப்படுகிறதே. ஏன் தமிழகத்தில் கூட கிறிஸ்தவத்தை தழுவியதால் ஒரு குடியிருப்பே அடித்து நொறுக்கப்பட்டதே, இந்த மாதிரியான சகிப்புத்தன்மையை எந்த கணக்கில் சேர்ப்பீர்கள். பலமுறை விளக்கியும் இந்திய கிறிஸ்தவர்களை வெள்ளைக்காரனிடம் கையேந்தும் பிச்சைக்காரர்களாக தானே தமிழ் ஹிந்து தளத்தில் விமர்சிக்கப்படுகின்றனர். யார் வெறி கொண்டு அலைகிறார்கள் என தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

//நோபல் வென்ற ஓபாமா அவர்களே வெள்ளை மாளிகையில் தீபாவளி தினத்தன்று தீபங்கள் ஏற்று வழிபாடு செய்து மத நல்லிணக்கத்தையும் மனித நேயத்தையும் மதிக்கும் காலத்தில் நீங்கள் இன்னும் சிலுவை போர் காலத்திலேயே இருக்காதீர்கள் //

அதுமாத்திரமல்ல,அமெரிக்கா கிறிஸ்தவ நாடு…ஆக்கிரமிப்பு செய்கிறது எனும் மதவாதிகளின் காட்டுக் கூச்சலுக்கு சம்மட்டி அடியானது இந்த செய்தி சம்பந்தமான பின்னூட்டம்;

ஒரு கிறிஸ்தவ நாடு தீபாவளியைக் கொண்டாட வேண்டிய அவசியமென்ன? சிந்தியுங்கள்;

அமெரிக்கா கிறிஸ்தவ நாடல்ல;அங்கு நடைபெறும் சம்பங்களுக்கும் கிறிஸ்தவத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை;

அடுத்த வருடம் வாடிகனில் போப்பாண்டவரும் கூட ஆடித் திருவிழா நடத்தி கூழ் ஊற்றி மாரியையும் மேரியையும் ஒன்றாக்கலாம்;

மனிதனையா…மனிதன்…எப்ப வேணாலும் எப்படியும் போவான்,எதையும் பேசுவான்,ஆனால் உலக இரட்சகரான இயேசுகிறிஸ்து இதுவரை மா(ற்)றி விடவில்லை..!

அமெரிக்கா ஒரு ஆயுத வியாபாரி…பாசிஸ்ட்… முதலாளித்துவ பிசாசு..!

அதன் ஃப்ளக் கடந்த வருடத்தில் பிடுங்கப்பட, “தெய்வம் நின்று கொல்லும்” என்பது நிரூபிக்கப்பட்டது;

தெய்வ நம்பிகையை தனது கரன்ஸியிலேயே பதித்து மத நல்லிணக்கத்தையும் கட்டற்ற சுதந்தரத்தையும் பேணி வளர்த்த அமெரிக்க தேசத்தையே சர்வ வல்லக் கடவுளும் நியாயாதிபதியான இயேசுகிறிஸ்து ச்சும்மா விடவில்லையே…நம்முடைய கதி என்னாகுமோ..?

//நண்பர்களே நான் இருப்பது கோயமுத்தூர். இங்கிருந்து சென்னைக்கு செல்லவேண்டும் என்றால் ரயில் மார்க்கமாகவும் போகலாம்.
பேருந்திலும் பயணிக்கலாம். விமானம் மூலமாகவும் பயணிக்கலாம்.//
அடடா, இரண்டு நாட்களில் இவ்வளவு கருத்து பரிமாற்றங்களா?
நண்பர் மணியன்,
நானும் கோயமுத்தூர்காரன்தான், இப்போது இருப்பது அமெரிக்கா. இங்கு நான் வரும்போது விமானத்தில்தான் வந்தேன். பஸ்ஸில் எல்லாம் வரமுடியாது. விமானத்தில் கூட, எல்லா விமானமும் இங்கு வராது, குறிப்பிட்ட சில விமானங்கள் தான் இங்கு வரும். வந்தவுடன், உங்களை ஆவணங்கள் எல்லாம் சரி பார்க்கப்பட்ட பின்னரே உங்களை உள்ளே அனுமதிப்பார்கள். சாதாரண அமெரிக்காவுக்கே இப்படி பல விஷயங்கள் உள்ளது.
சென்னைக்கு போவது போல பல வழிகளில் நீங்கள் பரலோகம் போக முடியாது. Jesus is the ONLY way. Jesus himself told these words. If there are multiple ways, Jesus wouldn’t have told that. And there is no necessity for him to come and die for our sins.

//“பாவ மன்னிப்பு” என்று
ஒரு பாதிரியார் (அவரும் சாதாரண மனிதர்தானே) கொடுக்கிறாரே.//
பாவமன்னிப்பை தருவது தேவன் மட்டுமே, எந்த ஒரு பாதிரியாரும் அல்ல.
மன ஆறுதல் பெறுவதற்காக பாவமன்னிப்பு கேட்க்க படுவதில்லை. அதுவும் மனிதனிடமில்லை, தேவனிடம். உங்கள் புரிதல் தவறாக உள்ளது.

//எங்களுக்காக ராமனாகவும், கண்ணனாகவும், கந்தனாகவும் அதற்க்கு முன்பே வந்து விட்டிருக்கிறார்.//
ராமனும் கண்ணனும் வந்து உங்களை பாவத்திலிருந்து மீட்டார்களா? அப்படி மீட்க்க என்ன செய்தார்கள்? அவர்கள் அவதாரத்தின் நோக்கம் என்ன??
//இயேசுவை இறைத்தூதர் என்று சொல்லியதற்காக
நான் அவரை குறைத்துவிட்டேன் என்று சொல்லி இருக்கிறீர்கள்.//
Dont you think that there is big difference between a “King” and just a “Messenger”?

சர்ச்சுக்கு போவதோ, ஐந்து வேலை தொழுவதோ, சந்தியாவந்தனம் செய்வதோ எதுவும் உங்களை பாவத்திலிருந்து காக்கபோவதில்லை. இயேசுவின் ரத்தமே நமது பாவத்தை கழுவும் ஒரே பரிகாரம். அவர் நாமத்தை விசுவாசித்து, நாம் அவரிடம் நாம் மன்னிப்பு பெற்றால் மட்டுமே வாழ்வு.

//நண்பர் அசோக்ஜி அவர்கள் தனது பதிவில் “கேடடவர்கள் ” என்று எழுத்துப்பிழை வந்தற்காக திருத்தம் கொடுத்து “கெட்டவர்கள்” (அடேயப்பா.. கெட்டதை சொல்வதில்
தான் எவ்வளவு சந்தோசம்?) இருக்கிறார்.
//
That is the big difference, I am able to see the fault I made and I am trying to correct it. But, u guys r pretending that there is no fault.
Thanks,
Ashok

நான் ஒரு பேருந்தில் எழுதி வைத்திருந்த‌ வாச‌க்த்தைப் ப‌டித்தேன்,

//ப‌டிக்க‌ட்டில் ப‌ய‌ண‌ம், ப‌ர‌லோக‌ பய‌ண‌ம்// என்று. (இது சும்மா ஜோக்கு அண்ணா, சீரிய‌ஸா எடுத்துக்காதீங்க‌.

தனபால்,
//ஒருவன் நல்லவனாக,தூய்மையானவனாக,தர்மவானாக இருந்து எந்த இறைவனை வழிபட்டாலும் ,இறைவனை வணங்கவிட்டலும் அவன் இறைவனையே அடைகிறான்.இதுவே இந்து மதம் கூறும் உண்மையாகும்.//
இதை இந்துமதம் கூறுகிறது. ஆனால் அது உண்மையா??
ராமகிரிஷ்ணரின் அனுபவம் எப்படி? அவர், இறந்து சொர்க்கம் சென்று வந்து சொன்னாரா? அவர் முன் பின் அறியாத சொர்க்கத்தை பற்றி அவர் எப்படி கூற முடியும்?
சிந்திக்கவும்…
Ashok

கபிலன்,
//அந்த வகையில், கண்ணா என்று வழிபடுவதும், இயேசுவே என்று வழிபடுவதும், அல்லா என்று வழிபடுவதும் கடவுளுக்கேப் போய்ச் சேர வேண்டும். அதனால, எந்தப் பெயர் கொண்டு இறைவனை அழைத்தால் என்ன ? ஏன் “B” என்ற பெயர் கொண்ட கடவுள் பேய், பிசாசாகவும், “A” வை மட்டும் வணங்குங்கள் என்று சொல்வதன் அர்த்தம் என்ன?//
உங்கள் குழந்தை, உங்களை விட்டு தெருத்தெருவாக சென்று யார்யாரிடமோ “அப்பா பென்சில் வாங்கி தாங்க, அப்பா, பேனா வாங்கி தாங்க” என்று கேட்டால் உங்கள் மனசு என்ன பாடு படும். அதே நிலைமைதான் ஏகதேவனுக்கும். அப்படி அலைவது அந்த குழந்தைக்கு எவ்வளவு ஆபத்தாக முடியும்… அதே ஆபத்தில்தான் நீங்கள் இருக்கிறீர்கள்.

சிந்தியுங்கள்.

அசோக்

// இந்து ம‌த‌த்தின‌ர் ச‌கிப்பு த‌ன்மை இல்லாத‌ வ‌கையிலே ந‌ட‌ந்து கொண்டாலோ, இப்படி குடிசைக‌ளை பிரிப்ப‌து போல‌ ந‌ட‌ந்து கொண்டாலோ, அதை திட்ட‌வ‌ட்ட‌மாக‌ க‌ண்டிக்கிறோம் //

ரொம்ப சந்தோஷமுங்க…பெரிய மனசு பண்ணி கண்டிச்சிட்டீங்க…
பெரும்பான்மை சமூகத்தின் நடுவில் …

// இந்து ம‌தத்திலே வ‌ன்முறை புகுத்த‌ப் ப‌டுவ‌தை நாம் எதிர்க்கிறோம் //

இது இந்த உலகின் மிகப் பெரிய நகைச்சுவையாகக் கூடாது என விரும்புகிறேன்;ஏனெனில் இந்து மதத்திலே வன்முறை இருக்கக்கூடாது எனில் இராமனும் கிருஷ்ணனும் …

// பெரும்பாலான‌ இந்துக்க‌ள் ச‌கிப்புத் த‌ன்மை உடைய‌வ‌ர்க‌ளாக‌ இருக்கிறார்கள் //

ஏற்கனவே இதைக் குறித்துச் சொல்லியிருக்கிறேன்; சகிப்புத்தன்மை என்பது …

// இந்தியாவிலே சாதி முறையால் தாழ்த்த‌ப் ப‌ட்ட‌வ‌ருக்கு அநீதி இழைக்க‌ப் ப‌ட்டது; அந்த‌ அநீதி ச‌ரி செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும் என்ப‌தில் மாற்றுக் க‌ருத்து இல்லை //

நண்பரே நான் ஒரு புதிய சட்டையை வாங்கிய பிறகும் அதனுடன் பழைய சட்டையையும் சேர்த்து அணிவேன் என்று சொன்னால் …

// இந்த‌ பெண்க‌ள் மார்பில் துணி அணியாம‌ல் இருந்த‌து த‌மிழ்நாட்டில் பெரும்பாலான ப‌குதிக‌ளில் என்றுமே இருந்த‌து கிடையாது //

இது மிகவும் அநியாயமான கருத்து,அன்பரே;தன் இனத்துக்கு அங்கீகாரமும் மரியாதையையும் பெறவேண்டி தன் முலையை அறுத்து வேள்வித் தீயில் …

(அருமையான கருத்துக்களால் இதயத்தைக் கொள்ளைக் கொண்ட அசோக்கை (அது என்ன “ஜி” இதெல்லாம் நமக்குப் பிடிக்காது;ஊசிப் போன “வட”வாசனையே வருகிறது,ஒற்றுமை வேண்டுமானால் “தென் திசைத் தென்றல்” அங்கு செல்லட்டும்..!) பாராட்டுகிறேன்;

இதுவரை நான் திருந்தாமலிருந்தால் உங்கள் கருத்தைப் படித்து திருந்தியிருப்பேன்..!)

=>(தொடர்ந்து வாசிக்க…)
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=33589255

இராமன் ஒரு போர் வீரன். போர் வீரனுக்கு ஆயுதம் எடுத்துப் போராட வேண்டிய கடமை உள்ளது. சீதையை இராவணன் தூக்கி சென்றதால், மீட்கவே போர் நடத்தப் பட்டது. அதே போல அநீதிக்கு எதிராக நடத்தப் பட்ட போரே மகாபாரதப் போர். இவை நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையே நடந்த போராட்டம். மதக் காரணங்களுக்காக நடத்தப் பட்ட வன்முறை அல்ல.

நான் தமிழ் நாட்டில் பெரும்பாலான இடங்களில் பெண்கள் எப்படி உடை அணிகிறார்கள் என்பதையே சொன்னேன். நீங்கள் சம்பந்தம் இல்லாமல் ஏதோ ஒரு நிகழ்ச்சியை மேற்கோள் காட்டி இருக்கிறார்கள்.
துச்சாதனன் திரவுபதியின் சேலையை பிடித்து இழுத்தான் என்றால், இந்தியாவில் எல்லா ஆண்களும் அப்படி செய்பவர்கள் என அர்த்தமா? காழ்ப்புணர்ச்சி இல்லாமல் சிந்தித்தால் தெளிவாகும்.

ஒருவரை திருத்துவது என்பது, உண்மையை புரிய வைப்பது என்பதோ எளிதல்ல. யூதர்களிடம் நிலவிய காட்டு மிராண்டி கருத்துக்களை , வெறுப்புக் கருத்துக்களை மாற்றி விட இயேசு கிறிஸ்து எவ்வளவோ முயன்றார். ஆனால் யூதர்கள் அவரை அங்கீகரிக்காமல், சிலுவையில் அறைந்து விட்டனர். இன்றளவும் இயேசு கிறிஸ்துவை யூதர்கள் அங்கீகரிக்கவில்லை.

நானோ மிகவும் சாதரணமானவன். காழ்ப்புணர்ச்சிக் கருத்துக்களை, வெறுப்பு எண்ணங்களை நீக்கி அன்பின் பாதையில் , அறிவின் பாதையில் சிந்தியுங்கள் என்று கோரிக்கை வைக்கவும், விளக்கம் அளிக்கவுமே என்னால் இயலும்.

அசோக்ஜி என்று அவரை மரியாதையாக முன்பே சில தளங்களிலும் அழைத்து இருக்கின்றனர். அதையே தொடருகிறோம். அவ்வாறு அழைப்பது மரியாதையை வெளிப்படுத்தவே. இது அவருக்கும் தெரியும் என எண்ணுகிறேன். அவர் ஆட்சேபிக்காததால் நாம் அதை தொடருகிறோம்.

இந்து ம‌த‌த்தின‌ர் ச‌கிப்பு த‌ன்மை இல்லாத‌ வ‌கையிலே ந‌ட‌ந்து கொண்டாலோ, இப்படி குடிசைக‌ளை பிரிப்ப‌து போல‌ ந‌ட‌ந்து கொண்டாலோ, அதை திட்ட‌வ‌ட்ட‌மாக‌ க‌ண்டிக்கிறோம்

ரொம்ப சந்தோஷமுங்க…பெரிய மனசு பண்ணி கண்டிச்சிட்டீங்க…
பெரும்பான்மை சமூகத்தின் நடுவில் …//

இதில் பெரிய மனது வைக்க ஒன்றுமில்லை. எந்த மதத்தினர் மீது , இனத்தினர் மீது தாக்குதல் நடத்தினாலும் அது என் மீது நடத்தப் பட்டதாகவே , நான் அவமானப் படுத்தப் பட்டதாகவே உணர்கிறேன். இது எனக்கும் என் மனசாட்சிக்கும் உள்ள விடயம். இது மனிதாபிமான, நாகரீக அடிப்படியில் உருவாகும் உணர்வு. குறுகிய சிந்தனை இருந்தால் இதைப் புரிதல் செய்ய இயலாது.

சகோதரர் சில்சாம் அவர்களுக்கும், அசோக்ஜி அவர்களுக்கும் –
அன்பு வணக்கங்கள்.
எங்கே எனது கருத்துக்கள் உங்கள கவனத்தை ஈர்க்காமல் போய் விடுமோ என்று பயந்திருந்தேன். அவற்றை கவனித்து பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.
புதிய நண்பர் ஜோசப் அவர்களுக்கும் என் நன்றிகள். நண்பர்களே.. உங்கள் அனைவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த தளத்தில் நண்பர் திருச்சிக்காரர் அவர்கள் மதத்தின் பெயரால் அடுத்தவரை துன்புறுத்துபவர்கள் யாராக இருந்தாலும் சரி – நாங்கள் சார்ந்திருக்கும் ஹிந்து மத்ததை சேர்ந்தவர் என்றாலும் சரி அவர்கள் கண்டிக்கப் படவேண்டியவர்களே என்று தான் கூறி இருக்கிறார். அதையே நானும் சொல்லி வருகிறேன்.
ராமனோ, கண்ணனோ, கர்த்தரோ – எந்தப் பெயரில் அழைத்துக் கொண்டிருக்கிறோமோ அந்த இறைவன் என்பவன் இருக்கிறானா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காவே துவங்கப்பட்ட
இந்த தளத்தில் அந்த கேள்விக்கு முதலில் விடை கண்டுபிடித்து அவரது – ஏன் – இறைவனையே நம்பாத பெரும்பாலானவர்களின் சந்தேகங்களை முதலில் தீர்த்து வைப்போம். அதன் பிறகு “யார் தெய்வம்” என்பதற்கான நமது சண்டையை பிறகு வைத்துக்கொள்வோம் என்று நினைக்கிறேன்.
இறைவன் இருக்கின்றானா? – என்ற கவியரசரின் பாடலை ஆரம்பமாக வைத்து நான் சொல்லி இருக்கும் கருத்துக்களை படித்து பாருங்கள். நீங்களும் உங்கள் பங்குக்கு நாம் நம்புவதாக இருக்கும் இறைவனின் இருப்பை சொல்லக்கூடிய கருத்துக்களை (தயவு செய்து எந்தப் பெயரிலான ஒப்பீடும் செய்யாமல்) உங்களது தூயவேதம் பைபிளில் சொல்லி இருக்கக்கூடிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அன்புடன் அழைக்கிறேன். மதச் சண்டை எப்போதும் வேண்டாம். இனி வரும் நாட்களில் எனது பதிவுகளை கவனித்து வாருங்கள். நான் பைபிளை அதிகம் படித்தது இல்லை. நான் தெரிந்து கொண்ட சில வாசகங்களை அவ்வப்போது பயன்படுத்துவேன். அதுவும் இறைவனின் இருப்பை எடுத்துக்காட்டவே எங்கள் சமயங்களில் என்ன சொல்லி இருக்கிறது.. எப்படி சொல்லி இருக்கிறது என்று கூறும் போது.. இதுபோலவே தான் கிருத்துவ வேதமும் கூறுகிறது என்று சொல்லி “இறைவனின்” இருப்பை உறுதி செய்வதற்காக மட்டுமே.
ஆகவே இனி வரும் பதிவுகளில் நாம் அனைவரும் நான் ஒரு இந்து – ஒரு இஸ்லாமியன் – ஒரு கிறிஸ்தவன் என்பதை மறந்துவிட்டு “இறை பற்றாளன்” என்ற ஒரே உணர்வுடன் ஒற்றுமையாக நமது கருத்துக்களை இங்கு பதிவு செய்வோம்.
என்ன சகோதரர்களே.. நான் சொல்வது சரிதானே?
– அன்புடன் மணியன்.

//அசோக்ஜி என்று அவரை மரியாதையாக முன்பே சில தளங்களிலும் அழைத்து இருக்கின்றனர். அதையே தொடருகிறோம். அவ்வாறு அழைப்பது மரியாதையை வெளிப்படுத்தவே. இது அவருக்கும் தெரியும் என எண்ணுகிறேன். அவர் ஆட்சேபிக்காததால் நாம் அதை தொடருகிறோம்.//
I dont have any objection about me called as “Ashok ji” but, I prefer to be called as “Ashok”.
Thanks,
Ashok

Dear Mr. Ashok,

No problem. We can call you Ashok. Not a deal. Whatever your preference, I can call You in that way.

I also thank you as you clarified that you were being called as Ashokji, is not objectionable to you.

Its obvious that we dont have any special interest to call every one with “Ji”, we did not call any one else with “Ji” in this blog.

கிறித்தவம் பிரிக்கிறதா..?

// அசோக்ஜி என்று அவரை மரியாதையாக முன்பே சில தளங்களிலும் அழைத்து இருக்கின்றனர்; அதையே தொடருகிறோம்; அவ்வாறு அழைப்பது மரியாதையை வெளிப்படுத்தவே //

தமிழர்களாகிய நமக்கென்று நல்ல அழகான விளித்தல் முறைகள் இருக்க மற்றவற்றைப் பயன்படுத்துவது பரியாசம் செய்வது போலிருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து;

// ராமனோ, கண்ணனோ, கர்த்தரோ – எந்தப் பெயரில் அழைத்துக் கொண்டிருக்கிறோமோ அந்த இறைவன் என்பவன் இருக்கிறானா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காவே துவங்கப்பட்ட இந்த தளத்தில் அந்த கேள்விக்கு முதலில் விடை கண்டுபிடித்து அவரது – ஏன் – இறைவனையே நம்பாத பெரும்பாலானவர்களின் சந்தேகங்களை முதலில் தீர்த்து வைப்போம் //

ஆம், இந்த கருத்துக்கும் எண்ணற்ற மார்க்கபேதங்களுக்கும் எதிராகவும் தமிழ்ஹிந்து தளத்தில் அற்புதமானதொரு விஞ்ஞான-மார்க்க ஆராய்ச்சி கட்டுரை வெளியாகி இருக்கிறது;

http://www.tamilhindu.com/2010/01/adimudi-kaanaa-athisayam-a-dimension-of-the-universe/

சிருஷ்டி சம்பந்தமான சூத்திரங்களை எத்தனை எளிமையாக நமது முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர்..!

ஆனால் ஞானத் தெளிவில்லாத நாமோ பொருள் விளக்கக் கூறப்பட்ட ஒவ்வொரு குறியீட்டையும் விக்கிரகமாக்கித் தொழுது கொண்டிருக்கிறோம்;

இந்த சூத்திரங்கள் அனைத்தும் யூத பாரம்பரியத்திலிருந்தே பெறப்பட்டுள்ள‌து;

யூதர்களோ உருவ வழிபாட்டை வெறுப்பவர்கள்;பிரச்சினை எங்கே என்பது தெரியவரும் என்று நினைக்கிறேன்;

ஆனால் விண்வெளி ஓடத்துக்கே தேங்காய் உடைத்து பொட்டு வைக்கிறோமே..?

// ஆகவே இனி வரும் பதிவுகளில் நாம் அனைவரும் நான் ஒரு இந்து – ஒரு இஸ்லாமியன் – ஒரு கிறிஸ்தவன் என்பதை மறந்துவிட்டு “இறை பற்றாளன்” என்ற ஒரே உணர்வுடன் ஒற்றுமையாக நமது கருத்துக்களை இங்கு பதிவு செய்வோம்;என்ன சகோதரர்களே.. நான் சொல்வது சரிதானே?
– அன்புடன் மணியன் //

சகோதரர் மணியன் அவர்களுடைய கருத்துக்களை நான் வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்;

நண்பர் திருச்சிக்காரன் அவர்களும் கிறித்துவையும் கிறித்தவத்தையும் யூதத்தையும் பற்றிய அடிப்படைத் தத்துவங்களுக்குப் பொருந்தாத தனது கருத்துக்களை மறுபரிசீலனை செய்யவேண்டுகிறேன்;

போற்றவேண்டாம்,தூற்றாமலிருக்கவே வேண்டுகிறேன்;நான் இந்தியன்,தமிழன் என்ற அடையாளத்தை எந்த நிலையிலும் இழக்க விருமபவில்லை;நான் மதம் மாறியவன் என்ற இழிச் சொல்லை என்னை விட்டு விலக்குங்கள்;

மேலும் கிறித்துவையும் கிறித்தவத்தையும் யூதத்தையும் பற்றிய அடிப்படைத் தத்துவங்களைக் குறித்து அறிய வேண்டுமானால் அவற்றைக் குறித்து கருத்துச் சொல்லும் முன்பதாக முதலில் அவைகளைக் கேள்விகளாக எனது தளத்தில் பதிவு செய்யுங்கள்;

உங்களுக்குத் தகுந்த பதிலைத் தர ஆயத்தமாக இருக்கிறோம்; இது நம்முடைய நல்லுறவைப் பேணவும் உதவியாக இருக்குமென்று எண்ணுகிறேன்..!
__________________

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=33589255

ச‌கோத‌ர‌ர் சில்சாம் அவ‌ர்க‌ளே ,

அசோக் ஜி பிர‌ச்சினை இல்லை என்ப‌தை திரு. அசோக் அவ‌ர்க‌ளே விள‌க்கி விட்டார்.

மேலும் இயேசு கிறி ஸ்து அவ‌ர்க‌ளைப் ப‌ற்றியும், யூத‌ ம‌த‌ம் பற்றியும் ஒவ்வொரு முறையும் எழுதும் முன்பு உங்க‌ளின் க‌ருத்தைக் கேட்டு விட்டு எழுதுவ‌து ந‌டை முறையில் சாத்திய‌ப் ப‌டுமா?

இந்த‌ த‌ளத்திலே இந்து, புத்த‌, ச‌ம‌ண‌ யூத‌ , கிறிஸ்து, இசுலாமிய‌ மார்க்க‌ங்க‌ள் பற்றியும் ப‌ல‌ க‌ட்டுறைக‌ள் வெளிவ‌ரும். அவ‌ற்றைப் ப‌டித்து நீங்க‌ள் க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்யுங்க‌ள்.

உங்க‌ளது க‌ருத்துக்க‌ள், ஆட்சேப‌னைக‌ள் முழுவ‌தும் ப‌திவு செய்ய‌ப் ப‌டும். விள‌க்க‌மும் அளிக்க‌ப் ப‌டும்.

நான் கிறிஸ்த‌வ‌ , யூத‌ மார்க்க‌ங்க‌ள் பற்றி மிக‌ச் சிறித‌ளவே இது வ‌ரை எழுதி இருக்கிறேன். கிறி ஸ்த‌வ‌ ப‌ள்ளியில் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் ப‌டித்த‌தாலே, ப‌ள்ளிப் ப‌ருவ‌த்திலேயே யூத‌, கிறி ஸ்த‌வ‌ ம‌த‌ங்க‌ளைப் ப‌ற்றி க‌ணிச‌மாக‌ அறிந்து கொள்ளும் வாய்ப்பு என‌க்கு இருந்த‌து. இந்த‌ மார்க்க‌ங்க‌ளைப் ப‌ற்றி என்னுடைய‌ புரித‌ல் ச‌ரியாக‌வே இருப்ப‌தாக எண்ணுகிறேன்.

அவைக‌ளின் அடிப்ப‌டை த‌த்துவ‌ங்க‌ள் பற்றிய‌ என‌து க‌ருத்து ம‌று ப‌ரிசீல‌னை செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும் என்றால், நான் எழுதிய‌தை மேற்கோள் காட்டி நீங்க‌ள் க‌ருத்து தெரிவிக்க‌லாம். இதுவ‌ரை கிறிஸ்த‌வ‌, யூத‌ மார்க்கங்க‌ளின் அடிப்ப‌டைக‌ள் குறித்த‌ என்னுடைய‌ க‌ருத்தில் உங்க‌ளுக்கு வேறுபாடு இருந்தால் அதை தாராள‌மாக‌ எழுத‌லாமே. ஆனால் எப்ப‌டி வேறுபாடு என்று விள‌க்க‌ வேண்டும். நானும் என்னுடைய‌ புரித‌ல் ச‌ரியான‌து என்ப‌தற்கான‌ என‌து த‌ரப்பு வாத‌ங்க‌ளையும் முன் வைப்பேன்.

நான் இயேசு கிறிஸ்துவை ம‌ரியாதை செய்தே எழுதி இருக்கிறேன். ம‌ணிய‌ன் அவ‌ர்க‌ளும் அவ்வாறே எழுதி உள்ளார். அப்ப‌டிப்ப‌ட்ட‌ நிலையிலே ந‌ல்லுறைவைப் பேண‌ என்ன‌ த‌டை?

ம‌ற்ற‌ ப‌டி நான் எந்த‌ ஒரு இட‌த்திலும் உங்க‌ளை இக‌ழ‌வில்லை. பிற‌ மார்க்க‌த்த‌வ‌ரின் தெய்வ‌ங்க‌ளை இக‌ழ‌ வேண்டாம் என்று ம‌ட்டுமே கோரிக்கை வைத்தேன். பிற‌ மார்க்க‌த்த‌வ‌ரின் தெய்வ‌ங்க‌ளை இக‌ழ்வ‌து க‌ற்கால‌ போக்கு, பூச‌லை உருவாக்கும் என்ற‌ அக்க‌றையை வெளிப்ப‌டுத்தி இருக்கிறேன்.

மணியன் அவர்களே,
நான் மீண்டும் இறைவன் இருக்கிறாரா என்ற ஆராய்ச்சியில் எல்லாம் இறங்கப்போவது இல்லை. இறைவன் இருப்பதற்கான சாத்திய கூறுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் நம் பரந்துவிரிந்த விண்வெளியை பாருங்கள். எவ்வளவு அழகாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றை பார்த்தால் ஏதோ விபத்தில் இப்படி உருவானது இன்று சொல்லக்கூடுமா? ஒரு swiss கடிகாரத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அவற்ற்றை இந்த பிரபஞ்சத்தில் தூக்கி எறிந்தால், அவை அனைத்தும் தற்செயலாக கூடி ஒரு முழு கடிகாரமாக உருவாக எவ்வளவு சாத்தியகூறுகள் உள்ளதோ அதைவிட மிககுறைவான சாத்தியங்களே இந்த பிரபஞ்சம் தற்செயலாக உருவாக உள்ளது. இந்த பிரபஞ்சத்தின் வடிவமைப்பை பார்த்தால், மிகுந்த ஞானம் உள்ள ஒரு வடிவமைப்பாளரே இதை வடிவமைத்திருப்பார் என்று தோன்றுகிறது. இந்த எல்லை இல்லா பிரபஞ்சத்தை வடிவமைத்த எல்லை இல்லா ஞானமுள்ள இறைவன் கண்டிப்பாக இருக்கிறார்.
அன்புடன்,
அசோக்

திரு .அசோக் குமார் கணேசன் அவர்களே
###//ஒருவன் நல்லவனாக,தூய்மையானவனாக,தர்மவானாக இருந்து எந்த இறைவனை வழிபட்டாலும் ,இறைவனை வணங்கவிட்டலும் அவன் இறைவனையே அடைகிறான்.இதுவே இந்து மதம் கூறும் உண்மையாகும்.//
இதை இந்துமதம் கூறுகிறது. ஆனால் அது உண்மையா??###

இறைவனை அடைய முதலில் மனிதன் நல்லவனாக,தூய்மையானவனாக,தர்மவானாக இருப்பதே முதல் மற்றும் மிக முக்கியமானதாகும்.மற்ற தவமும்,ஜெபமும், தியானமும்,வழிபாடும்,கடவுளும் இரண்டாம் பட்சமே யாகும் என்றே சனாதன தர்மம் (இந்து மதம்) கூறுகிறது..
”’இரக்கமுள்ளவர்கள் பாகியமுள்ளவர்கள்…………
இதயத்தில் தூய்மை உள்ளவர்கள் பாக்கியமானவர்கள்………”’
எங்கோ சர்ச் சுவரில் படித்த ஜாபகம்.(இதில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் எனக்கு சரியாக ஜாபகம் இல்லை

###ராமகிரிஷ்ணரின் அனுபவம் எப்படி? அவர், இறந்து சொர்க்கம் சென்று வந்து சொன்னாரா? அவர் முன் பின் அறியாத சொர்க்கத்தை பற்றி அவர் எப்படி கூற முடியும்?###
ஸ்ரீ ராமகிருஷ்ணர் சிறு வயதிலிருந்தே இறைவனை காண வேண்டும் என்ற தீராத ஏக்கத்துடனே ஒவ்வொரு நாளும் இருந்தார்.
நாளாக,நாளாக அவரது ஏக்கம் மிக அதிகமானது.இந்தநாளும் இறைவனை காணாமல் கழிந்ததே என்று உணவு இன்றி,தூக்கம் இன்றி தூணிலே தன் தலையால் முட்டி ரத்தம் பீறிட பலமுறை மயங்கி விழுந்திருக்கிறார்.ஒரு நொடி கூட இறைவனை நினைக்காமல் என்னால் இருக்கமுடியவில்லை என்று கூறியிருக்கிறார்.கடைசியில் தன் உயிரை மாய்த்து கொள்ள முயற்சித்த போது காளி தேவியே இவருக்கு காட்சி தந்திருக்கிறார்.பின் தினமும் இந்த இறைகாட்சி அவருக்கி கிடைத்திருக்கிறது.பின் சிவன்,விஷ்ணு,ஆகிய கடவுளர்களையும் தியானித்து அவர்களையும் கண்டிருக்கிறார்.பின் கிருஷ்துவ மார்க்கத்தை மிக உள்ளத்தூயமையுடன் கடைப்பிடித்து ஏசுவையும்,இதைப் போலவே இஸ்லாமிய மார்க்கப் படியும் மிக தூய்மையுடன் தொழுது சில தினங்களிலேயே முஹம்மது நபியையும்,கர்த்தர்,அல்லா,பிரம்மம் என்ற அனைத்து மதக்கடவுளையும் அவர் கண்டார்.இவை யாவும் அவர் உயிருடன் இருந்த போதே நடந்தது.இந்து மதத்தில் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே கடவுளைக் காண நிறைய வழிகள் உள்ளன.தேவை மிகத்தூய்மையான உள்ளமும்,இறைவனைக் காணவேண்டும் என்ற தீராத ஏக்கமுமே.ராமக்ரிஷ்ணரைப் போல ஒரு நொடி கூட இறைவன் நினைவிலிருந்து விலகாத,தூய உணர்வுடன் இருந்தால் அனைத்து இறைவனையும்,அவர்கள் யாவரும் ஒன்றே என்றும் காணலாம்.இதையே அவர் (உயிருடன் வாழ்ந்தக் காலத்திலேயே) அனுபவத்தில் கண்டு கூறினார்.அவர் வாழும் போதே இந்து மதத்தின் அனைத்து பிரிவுகளும்,அனைத்து மதமும் இறைவனை அடையும் பாதைகளே என்றும் அனைத்து கடவுளும் ஒரு இறைவனின் பல வடிவங்களே என்று தன் அனுபவத்தில் உணர்ந்துக் கூறினார்.
அந்த மாகனின் மனநிலையில் நாம் இருந்தால் நிச்சயம் நம்மால் கடவுளைக் காணமுடியும்.
###ராமகிரிஷ்ணரின் அனுபவம் எப்படி? அவர், இறந்து சொர்க்கம் சென்று வந்து சொன்னாரா? அவர் முன் பின் அறியாத சொர்க்கத்தை பற்றி அவர் எப்படி கூற முடியும்?###
சார் நான் சொர்க்கம்,நரகம் பற்றிக் கூறவே இல்லையே.

அரசன் ஒருவன் ஒரு முனிவரிடம் வரம் கேட்டுச் சென்றானாம்;அந்த முனிவரோ முனிவர்களுக்கே உரிய கர்வத்துடன் எதுவும் சொல்லாமல் “நான் செத்ததும் வா” என்று சொல்லிவிட அரசன் குழப்பத்துடன் திரும்பினானாம்;

ஆனாலும் ஆர்வ மிகுதியால் மீண்டும் சென்றான்;அதே பதில்;இப்படி மூன்று முறை சென்ற பிறகு நான்காவது முறை முனிவர் விளக்கினார்;”நான், ‘நான்’ எனச் சொன்னது என்னையல்ல,உனக்குள்ளிருக்கும் ‘நான்’என்பதையே”என்றானாம்;பிறகு அதற்கான சூத்திரங்களைப் பெற்றுக் கொண்டு அரசன் மகிழ்ச்சியுடன் திரும்பினான்,என்பது ஒரு நீதிக் கதை;

இங்கே சிநேக பாவத்துடன் எழுதி வந்த நண்பர் திருச்சிக்காரன் அவர்களை நான் ஏதோ கோபப்படுத்திவிட்டேன்,போலும்;அவருடைய எழுத்துக்களில் சற்று கடுமை தெரிகிறது;அவரை சமாதானப்படுத்தவே கதை சொன்னேன்;ஆனால் அதுவும் “நான்” சரியாகச் சொன்னேனோ தெரியவில்லை;அது வேறு புதிய பிரச்சினை;

ஆனாலும் அவர் இந்த வாதத்தைத் தொடருவதையும் பின்னூட்டமிடுவதையும் விட்டுவிட்டு அடுத்த கட்டுரையை ஆயத்தம் செய்வது நல்லது;

இது முடிவில்லாமலே போகும்;

// கிறிஸ்த‌வ‌ ப‌ள்ளியில் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் ப‌டித்த‌தாலே, ப‌ள்ளிப் ப‌ருவ‌த்திலேயே யூத‌, கிறிஸ்த‌வ‌ ம‌த‌ங்க‌ளைப் ப‌ற்றி க‌ணிச‌மாக‌ அறிந்து கொள்ளும் வாய்ப்பு என‌க்கு இருந்தது; இந்த‌ மார்க்க‌ங்க‌ளைப் ப‌ற்றி என்னுடைய‌ புரித‌ல் ச‌ரியாக‌வே இருப்ப‌தாக எண்ணுகிறேன் //

அதுதான் பிரச்சினையே;மிக எளிமையாக ஒரு காரியத்தைச் சொல்லுவார்கள்;ஒரு ஜீவனின் பிரச்சினை உணரவேண்டுமானால் நான் அதுவாகவே மாறவேண்டும்;(எனவே தெயவமான இயேசு மனிதனானார்..!)

நீங்கள் பள்ளியில் கற்பிக்கப்பட்ட மார்க்கத்தையே இறுதியான தத்துவமாக‌ எடுத்துக் கொள்ளமுடியாது; புரிதல் வேறு; உணர்தல் வேறு; அறிதல் வேறு; தொடருதல் வேறு;

நான் முன்னாள் இந்துவாகவும் பிறகு கம்யூனிஸ கருத்துக்களால் கவரப்பட்டு தேவனற்றவ‌னாகவும் தற்போது கிறித்துவின் சீடனாகவும் இருக்கிறேன் என்றால் மற்ற அனுபவங்களினுள்ளே ஊறிக் கிடந்த பாதிப்பு எனக்குள் இருப்பது இயல்பு (இதைக் குறித்து இன்னும் சொல்லவேண்டும்);

இதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதில் எனக்கு அதிக வாய்ப்புண்டு;வெளியிலிருந்து (உள்ளே) ஒரு மார்க்கத்தை ஆராய்வதற்கும் உள்ளேயிருந்து (வெளியே) பார்ப்பதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமுண்டு;

// அவைக‌ளின் அடிப்ப‌டை த‌த்துவ‌ங்க‌ள் பற்றிய‌ என‌து க‌ருத்து ம‌று ப‌ரிசீல‌னை செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும் என்றால், நான் எழுதிய‌தை மேற்கோள் காட்டி நீங்க‌ள் க‌ருத்து தெரிவிக்க‌லாம் //

நீங்கள் தவறான ஒன்றை எழுதிய பிறகு அதைச் சரி செய்வதைவிட முன்னரே சரியானதை அறிந்து எழுதலாமே; நீங்கள் நிச்சயமாகவே தவறு செய்கிறீர்கள்; நீங்கள் எங்களைப் புரிந்துக்கொள்ளாததுடன் தவறாகப் புரிந்துக்கொண்டு எங்களுக்குப் போதிக்க முயற்சிக்கிறீர்கள்;அதாவது ஏதோ பொதுவான நீதிக் கதைகளையல்ல;கிறித்துவையே..!

ஆனால் இந்து மர்க்கத்தின் ஆதாரத் தத்துவங்களையும் ப்ரஜாபதியான இயேசுகிறித்துவுடன் தொடர்புள்ள தத்துவங்களையும் கூறி மார்க்கத்தை ஒன்றுபடுத்த நல்லெண்ணத்துடன் முயற்சித்தாலோ தற்போதய நவீன கால மூடநம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களையும் கண்டித்தாலோ காழ்ப்புணர்ச்சி,துவேஷம்,காட்டுமிராண்டிக் கருத்துக்கள் என்கிறீர்கள்;

மாற்றுவழியைச் சொல்லாமல் கண்டித்தால் நாத்திகன்,அறிவுஜீவி; மாற்றுவழியுடன் கூடிய எச்சரிப்பைச் சொன்னால் மதவெறியாளன் என்பதுதானே உங்கள் தீர்ப்பு?

போகட்டும்; யூதர்களின் காட்டுமிராண்டிக் கருத்துக்களைக் கண்டிக்கவே இயேசு வந்தார்,அவரைச் சிலுவையிலறைந்து கொன்றனர்’என்கிறீர்கள்; பிரச்சினை அத்துடன் முடிந்ததா?

அவர் மீண்டும் உயிருடன் எழுந்து (தற்போதும் விண்ணகத்திலிருப்பதும்) தமது அடியவர்களுக்கு தாம் செய்த அதே பணியினைப் பணித்ததும் என்ன?

யூதர்களுக்காக மட்டுமே இயேசு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தார்; ஆனால் அவர்களால் புறக்கணிக்கப்பட்டபோது- யூதர்களின் கீழ்ப்படியாமை சர்வ லோக இரட்சிப்பாக மாறியது என்பது நற்செய்தி;

பழைய ஏற்பாட்டில் ஜாதிகளை (அசுரர்களை) அழிக்கச் சொன்ன அதே “யாவே” தெய்வமே “யாஷ்வா” என வந்தார்;அதன் மருவிய சொல்லே “இயேசு” என்பது;

யுத்தம் இன்னும் முடியவில்லை;ஆனால் அதன் தன்மை மாறியிருக்கிறது;
முன்பு வேல்,அம்பு,ஈட்டியுடன் -மாம்சத்துடன் நடந்த யுத்தமானது தற்போது ஆவியுலக யுத்தமாக அதாவது தீயச் செயல்களைச் செய்யத் தூண்டும் சிந்தையை சாகடித்து இறைவனுக்கு தத்தம் செய்யும்- தன்னோடு தான் செய்யும் யுத்தமாக மாறியிருக்கிறது; புத்தனும் கூட உள்சென்று தேடியே ஞானம் பெற்றான்,என்பார்கள்;

“யாஷ்வா” தேவனும் சொல்கிறார்,”உன்னை நீ ஆராய்ந்து பார்த்தால் ஆக்கினைக்கு, தண்டனைக்கு தப்புவாய்;உனக்காக நான் சிந்திய இரத்தம் உன் கர்ம,கன்ம,பாவ,சாப,தோஷங்களை நீக்கி பரிகரிக்கும்” என்று..!

நான் குறிப்பிட்டுள்ள ஒவ்வொன்றும் “யாஷ்வா ” தேவனின் புனிதக் கருத்துக்களே;இதில் எதை மறுப்பீர்கள் ? இதையா நீங்கள் எழுதினீர்கள் ?

இயேசு தம்முடைய பிதா என்று குறிப்பிட்ட சிருஷ்டிக் கர்த்தாவை காட்டுமிராண்டிக் கடவுள் என்றும் யூதர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும் இயேசுவை ஐயோ பாவம் என்றும் கிறித்துவர்களை ரெண்டுஙகெட்டான் போலவும் கூறு போட உங்களுக்கு யார் உரிமை தந்தது?

இயேசு வெறும் அன்பை மட்டும் போதிக்கவில்லை; பாவத்தையும் அதன் விளைவையும் அதற்கான தீர்வையும் போதித்தார்;அதை மற்றவருக்குப் போதிக்கும் பணியையும் எனக்குக் கொடுத்துள்ளார்;

இதையே நீங்களும் செய்தால் எனக்கு எந்த ஆட்சேபணையுமில்லை..!

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=33589255

சகோதரர் சில்சாம் அவர்களே,

எனக்கு உங்கள் மேல் அன்பு தான். கோவம் இல்லை.

நான் யூத , கிறிஸ்தவ மார்க்கங்கள் பற்றி எழுதியதை அப்படியே எடுத்து காப்பி அண்ட் பேஸ்ட் செய்து, இந்தக் கருத்து, இந்த வாசகம், இந்த வார்த்தை பரிசீலிக்கப் பட வேண்டும் என்று காட்டினால் எனக்கு விடயம் எளிதாகி விடும். அதன்னியில் நான் எதுவும் செய்ய இயலாது.

“பாத்திரமறிந்து பிச்சையிடு”
இது ஒரு நல்ல பழமொழி. இதை போலதான் வாழ்க்கையில் பல விஷயங்களும். என் மனைவியிடம் காட்டும் அன்பை, பிற பெண்களிடம் காட்டமாட்டேன். எங்க பசுவிடம் நடப்பது போல ஒரு பாம்பிடம் நடந்துகொள்ள மாட்டேன். என் தந்தையிடம் காட்டும் மரியாதையை, என் பிள்ளையிடம் காட்டமாட்டேன், என் பிள்ளையிடம் காட்டும் ஒரு அன்பான அதிகாரத்தை, என் தந்தையிடம் காட்டமாட்டேன்.
நான் மேற்கூறிய அனைத்தும் பகுத்தறியும் செயல்பாடே. இதைப்போலத்தான், என் ஆண்டவருக்கு தரப்படவேண்டிய எந்த ஒரு மரியாதையையும் யாருக்கும் தரமாட்டேன். எந்த ஒரு நல்லுறவுக்காகவும், இன்னொரு மனிதனை தகப்பன் என்று சொல்லமாட்டேன். வேற்று பெண்களை மனைவி என்று கூறமாட்டேன்.
ஒரு பிள்ளைக்கு ஒரே தகப்பன் இருப்பது போல, நாமேல்லோர்க்கும் ஒரே தேவன் என்று நம்பும் நான், பல கதை நாயகர்களை தெய்வம் என்று வணங்கி நண்பர் திருச்சிக்காரனுடைய வேண்டுகோளுக்கு இணங்கினால், என் தெய்வத்தை மறுதளிப்பதாகாதா?
இந்துக்கள், அனைத்து மார்க்கங்களையும் நாத்திகர்களையும் ஏற்றுக்கொள்வதாக பெருமைபடுகிறீர்கள். வேப்பமரத்தையும், அரசமரத்தையும் கும்பிடுபவர் சிலுவை மரத்தை பார்த்தாலும் கும்பிடுவதில் வியப்பில்லை. ஆனால், இவை அனைத்திற்கும் அவர் ஏன் கும்பிடு போட்டார் என்று தெரியுமா? சிந்தியுங்கள்…
முப்பதிமுக்கொடி தேவர்கள்… யாரவது ஒரு இந்துவுக்காவது அனைவரது பெயரும் தெரியுமா? அதனால்தான், உங்களுக்கு யாரையும் / எதையும் தெய்வமாக ஏற்றுக்கொள்ள முடிகிறது (எந்தவித பகுத்தறிவையும் உபயோகிக்காமல்).
தன்னைவிட வலிமையான, தனக்கு அச்சம் தரக்கூடிய அனைத்தையும் தெய்வமாக்கி வணங்குகிறார்கள். அப்படி வணங்கினாலாவது அதன்மூலம் வரும் ஆபத்துக்கு தப்பலாம் என்ற எண்ணத்தில். பல கிராமங்களில் கோயில் பூசை செய்வது அந்த தேவதையின் கோபத்தில் இருந்து தப்பிக்க.
அடுத்தது வளமையான,அழகான, தனக்கு உலக பிரமாணமாக அனுகூலம் தரக்கூடிய விஷயங்களை (லாப நோக்கத்தோடு) வணங்குவது.
இப்படி பயத்தில் கும்பிடு போட்டு, லாபத்திற்காக கூழைக்கும்பிடு போட்டு அதற்க்கு “பக்தி” என்று நீங்களே பெயர் வைத்து விடுகிறீர்கள். எங்கள் சகோதரர்களாகிய உங்களை, இந்த அடிமைத்தனத்தில் வைத்திருக்கும் அந்த தீயசக்தியை நாங்கள் தீயசக்தி என்று கூறினால் நீங்கள் கொவப்படுகிறீர்கள்.
பகுத்தறிவுடன் சிந்திப்பாதாக கூறி, “தேவன் கடலை இரண்டாக பிளந்தார்” என்பதை கேள்வி கேட்கும் இவர்கள், பத்துதலை, நான்குதலை, யானைத்தலை, ஆறுமுகம், இன்னும் பல சுவாரசியமான மற்றும் சொல்லமுடியாத விஷயங்களை, கேள்விகேட்காமல் நம்புகின்றனர். இதை கேள்வி கேட்டால், அவை பல தத்துவங்களின் குறியீடு என்று மழுப்பல் வேறு.
Will Continue….
Ashok

அசோக் அவர்களே,

இந்துக் கடவுள்கள் மட்டும் உண்மை என்று நான் சொல்லவில்லையே. இந்துக் கடவுள்கள் உட்பட எந்தக் கடவுளையும் நான் இதுவரை பார்க்கவில்லை! எந்தக் கடவுளையும் யாரும் பார்க்கவில்லை, நிரூபிக்கவில்லை என்பதுதானே உண்மை.

நான்கு தலை உடைய பிரமன்…. யானை தலை உடைய விநாயகர்…., etc யாரையும் நான் பார்க்கவில்லை! போதுமா?

நீங்கள் பிற மதத்தினரின் கடவுள்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நான் கட்டாயப் படுத்தவில்லை- பிற மதத்தினரின் கடவுள்களை பேய், பிசாசு என்று இகழ்ந்து பேசி அமைதியைக் கெடுத்து, பூசலை உருவாக்க வேண்டாம் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.

ஆனால் நீங்கள் பல்லாயிரம் பேர் மடிந்தாலும் சரி, நான் பிற மார்க்கததவரின் கடவுளைத் திட்டுவேன் என்கிறீர்கள். அதுக்கு ஆயிரம் நியாயம் வேறே. மத வெறியை அழகான வார்த்தையால் வெளிப்படுத்தினால் சரியாகி விடுமா?

அவ்வளவு மத வெறி இருந்தால் – கடவுளை நிரூபித்துக் காட்டுங்கள். முன்பு 6 மாதங்கள் எல்லா நாளும், முழு நிலவாக, பவுர்ணமியாக இருக்குமாறு நிலவை ஒளி விடச் செய்ய முடியுமா என்று கேட்டேன். நட்பு அடிப்படையிலே இப்போது டிஸ்கவுன்ட் தருகிறோம். 4 மாதங்கள் எல்லா நாளும், முழு நிலவாக, பவுர்ணமியாக இருக்குமாறு நிலவை ஒளி விடச் செய்ய முடியுமா?

இல்லை என்றால் நாளைக் காலை சாந்தி தியேட்டர் வாசலில் நிற்கிறேன். சர்வ வல்லமை உடைய கடவுளைக் கூடிக் கொண்டு வந்து காட்டுங்கள், ஒத்துக் கொள்கிறேன்.

இப்படி எல்லாம் செய்ய முடியாவிட்டால் அமைதியாக, நீங்கள் உங்கள் கடவுளை வணங்கிக் கொள்ளுங்கள். நான் உங்களையும் ஒன்றும் சொல்லவில்லை, உங்கள் கடவுளையும் இகழவில்லை, நல்லிணக்க அடிப்படையில் உங்களுடன் சேர்ந்து வணங்க்க தயார். ஆனால் நிரூபிக்காமலேயே பிறர் உணர்வைப் புண்படுத்தி, பூசலை ஏற்படுத்தி பலரை மடிய விடுவது நாகரீகத்துக்கு எதிரான காட்டு மிராண்டித் தனமே.

நீங்கள் கேட்டவண்ணமாக நான் தெளிவாகவே எழுதியிருக்கிறேன்,நண்பரே; நீங்க்ள் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை; இதனால் அந்த கருத்துக்களைக் குறித்து நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என நானே விட்டுவிட்டேன்;

என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்; நீங்கள் என்னுடைய தளத்திலும் உங்கள் பதிலை (ஒரே சமயத்தில்) பதிவிட்டால் எனது தளத்துக்கு வருபவர்களுக்கும் வசதியாக இருக்கும்; நானும் அப்படியே செய்கிறேன்; உங்கள் தளத்துக்கும் தொடுப்பு கொடுத்துள்ளேன்;

// அவ்வளவு மத வெறி இருந்தால் – கடவுளை நிரூபித்துக் காட்டுங்கள். முன்பு 6 மாதங்கள் எல்லா நாளும், முழு நிலவாக, பவுர்ணமியாக இருக்குமாறு நிலவை ஒளி விடச் செய்ய முடியுமா என்று கேட்டேன். நட்பு அடிப்படையிலே இப்போது டிஸ்கவுன்ட் தருகிறோம். 4 மாதங்கள் எல்லா நாளும், முழு நிலவாக, பவுர்ணமியாக இருக்குமாறு நிலவை ஒளி விடச் செய்ய முடியுமா? //

இந்த நிலவை ஒளிவிடும் சமாச்சாரம்…மிக மிக எளிது;
மிக மிகச் சாதாரணம்;ஆனால் விண் ஞான ரீதியில் நீங்கள் அதனை சிந்திப்பீர்களானால் அது மிகவும் ஆபத்தானது;

ஏனென்றால் அது போல் நிலவு நான்கு மாதமும் ஒளிவிட வேண்டுமானால் இந்த பூமியின் சுழற்சி விதியில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழும்;”ரிஸ்க்” வேண்டாமே என்று பார்க்கிறேன்;

ஆனால் நீங்கள் கேட்காமலே இந்த யுகத்தில் நிகழ்ந்தொரு மாபெரும் அதிசயம்,”தெய்வம் மனிதனாகிப் பாவப் பரிகாரியானது..!”

வர்ட்டா..?

(அசரீரியில் திருச்சிக்காரனின் குரல்: “நல்லா பேசறானுங்கப்பா..!”)

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=33589255

சகோதரர் சில்சாம் அவர்களே,

//இந்த நிலவை ஒளிவிடும் சமாச்சாரம்…மிக மிக எளிது;
மிக மிகச் சாதாரணம்;ஆனால் விண் ஞான ரீதியில் நீங்கள் அதனை சிந்திப்பீர்களானால் அது மிகவும் ஆபத்தானது;

ஏனென்றால் அது போல் நிலவு நான்கு மாதமும் ஒளிவிட வேண்டுமானால் இந்த பூமியின் சுழற்சி விதியில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழும்;”ரிஸ்க்” வேண்டாமே என்று பார்க்கிறேன்;//

உங்களுக்காக இன்னும் சாதரணமாக்கித் தருகிறோம். பூமியின் சுழற்ச்சியில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. பூமி அதே போல சுழலாம்.

தானே ஒளி அளிக்கும் தன்மை நிலவிற்கு கிடைத்து விட்டால் அது நான்கு மாதமும் எல்லா நாளும் பவுர்ணமியாக ஒளி தரும்.

நிலவு சூரியனிடமிருந்து பெற்ற ஒளியை பிரதிபலிப்பு மட்டுமே செய்வதால் தான் இப்படி பவுர்ணமியில் முழு நிலவாகவும், பிறகு ஒளி குறைந்து கொண்டே வந்து இறுதியில் அமாவசை அன்று ஒளி இல்லாத நிலை அடைகிறது.

தானே ஒளி அளிக்கும் தன்மை நிலவிற்குகிடைத்து விட்டால் அது நான்கு மாதமும் எல்லா நாளும் ஒளி தரும்.

எல்லாம் வல்ல “இறைவனால்” விண்ணுக்கும் மண்ணுக்கும் அதிபதியால் நிலவுக்கு தானே ஒளி விடும் சக்தி தரும் வல்லமை இல்லாமல் இருக்குமா? கடவுள் – அப்படி ஒருவர் இருந்தால் – அவருக்கு இதெல்லாம் தெரியும், அவருக்காக பலரும் மடிந்தாலும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு அவரோடு நெருக்கமாக இருப்பவர்கள் , அவரிடம் சொல்லி அவரின் வல்லமையை உபயோகப்படுத்த சொல்லலாமே.

சகோதரர் சில்சாம் அவர்களே,

//நீங்கள் கேட்டவண்ணமாக நான் தெளிவாகவே எழுதியிருக்கிறேன்,நண்பரே; நீங்க்ள் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை; இதனால் அந்த கருத்துக்களைக் குறித்து நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என நானே விட்டுவிட்டேன்;//

அப்படியா? நீங்கள் தயவு செய்து – கிறிஸ்துவம் யூதம் பற்றி திருச்சியார் கூறிய கருத்து – என்று எழுதி

நான் யூத , கிறிஸ்தவ மார்க்கங்கள் பற்றி எழுதியதை அப்படியே எடுத்து காப்பி அண்ட் பேஸ்ட் செய்து, இந்தக் கருத்து, இந்த வாசகம், இந்த வார்த்தை பரிசீலிக்கப் பட வேண்டும் என்று காட்டினால் நான் விளக்கம் அளிக்க இயலும். அதோடு வேறு எந்த விடயங்களையும் சேர்த்து எழுத வேண்டாம். மேற்கோள் காட்டுவது அவசியம்.

உங்கள் தளத்திலும் நிச்சயம் எழுதுவேன் – கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து.

http://thamizmandram.blogspot.com/

மேற்கண்ட தளத்தின் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு ஆராய அன்புடன் வேண்டுகிறேன்..!

சிறுவன் 1 : உனக்கு அப்பா இருக்கிறாரா?
சிறுவன் 2: இருக்கிறாரே.
சிறுவன் 1: அவர் உன்மேல் அன்பா இருக்காரா?
சிறுவன் 2: என் மேல் உயிரா இருக்கார்.
சிறுவன் 1: உங்கப்பா பணக்காரரா?
சிறுவன் 2: எங்கப்பா ரொம்ப பெரிய பணக்காரர்.
சிறுவன் 1: அப்போ, நீ பள்ளிக்கு வரும்போது தினமும் பத்து புது பேனா வாங்கி வாங்கிதரசொல்லி கொண்டுவா பார்க்கலாம்.
சிறுவன் 2: எனக்கு தினம் பத்து புது பேனா தேவையே இல்லையே.
சிறுவன் 1: உனக்கு அப்பா இருக்கிறது உண்மைன்னா, அவர் உன் மேல் அன்பு வைத்திருக்கிறது உண்மைன்னா, அவர் கிட்ட பணம் இருக்கிறது உண்மைன்னா, இதை எல்லாம் பண்ண சொல்லுடா. இல்லேன்னா நீ சொல்லறதெல்லாம் பொய்.

இந்த இவர்களின் உரையாடலுக்கும், திருச்சிக்காரருக்கும் நமக்கும் நடக்கும் “நிலவை” பற்றிய உரையாடலுக்கும், அதிக வித்தியாசமில்லை.
With Love,
Ashok

I have answered many times for this Appaa based explanation.

There is an evidence for the existence of Appaa.

But there is no evidence or proof or verification for God.

நண்பர்களே? நலம் தானே?
எனது கருத்தை புரிந்து கொண்டு பதிவேற்றிய அருமைச் சகோதரர் சில்சாம் அவர்களுக்கு எனது நன்றிகள்.
நண்பர் திரு. அசோக் குமார் கணேசன் அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு அருமையான முறையில் தனது பதிவில் இறைவன் இருக்கிறார் என்பதற்கான சாத்தியக்கூறுகளை அருமையாக முதலில் “இந்த பிரபஞ்சத்தின் வடிவமைப்பை பார்த்தால், மிகுந்த ஞானம் உள்ள ஒரு வடிவமைப்பாளரே இதை வடிவமைத்திருப்பார் என்று தோன்றுகிறது. இந்த எல்லை இல்லா பிரபஞ்சத்தை வடிவமைத்த எல்லை இல்லா ஞானமுள்ள இறைவன் கண்டிப்பாக இருக்கிறார்” என்று எடுத்துக்கூறி இருந்தார். அவருக்கு எனது நன்றிகள்.
ஆனால் அடுத்த இடுகையில் அவர் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல “இதைப்போலத்தான், என் ஆண்டவருக்கு தரப்படவேண்டிய எந்த ஒரு மரியாதையையும் யாருக்கும் தரமாட்டேன்.” என்றும் (யார் இவரிடம் அப்படி தரச் சொல்லிக் கேட்டார்கள் என்று தெரியவில்லை!)
“நாமேல்லோர்க்கும் ஒரே தேவன் என்று நம்பும் நான், பல கதை நாயகர்களை தெய்வம் என்று வணங்கி நண்பர் திருச்சிக்காரனுடைய வேண்டுகோளுக்கு இணங்கினால், என் தெய்வத்தை மறுதளிப்பதாகாதா?” என்றும் மீண்டும் தனது பழைய வழியில் கொஞ்சம் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்.
நண்பரே.. எனக்கு தெரிந்த வகையில் திருச்சிக்காரன் அவர்கள் உங்களை நீங்கள் சொல்கிறபடி பல கதை நாயகர்களை தெய்வம் என்று வணங்கும் படி எந்த வேண்டுகோளும் இங்கு விடுக்கவில்லையே? அவரே பாவம் “இறைவன் இருக்கின்றானா” என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார். அவர் எப்படி அசோக் உங்களுக்கு அந்த மாதிரி வேண்டுகோள் விடுக்க முடியும்? ஆகவே – அந்தப் பிரச்சினையில் இப்போது நுழையாமல் மேலே தொடருவோம்.

நேற்று “பிரத்யட்சப் பிரமாணம்” மூலமாக இறைவனை – அவன் இருப்பை நாம் – அறிந்து கொள்ள முடியாது என்ற அளவில் எனது கருத்தைப் பதிந்திருந்தேன்.

அப்படி என்றால் இறை இருப்பை எப்படி தெரிந்து கொள்வது?

கண்ணுக்கு தெரியாத ஒன்றை கண்ணுக்கு தெரிந்த இன்னொன்றின் மூலமாக உறுதி செய்து கொள்வது. இதற்க்கு “அனுமானப் பிரமாணம்” என்று நமது முன்னோர்கள் கூறி இருக்கின்றார்கள்.

உதாரணமாக நமது பார்வையின் எல்லைக்கு மீறிய ஒரு இடத்தில் இருந்து புகை மண்டலம் ஒன்று கிளம்பி நமது கண்களுக்கு புலப்படுகிறது. அந்தப் புகை மண்டலத்தைப் பார்த்ததும் நாம் என்ன புரிந்து கொள்கிறோம். “அதோ.. அங்கே.. தூரத்துலே எங்கேயோ தீ பிடித்துக்கொண்டு கொழுந்து விட்டு எரிகிறது” என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம். நாம் அந்த நெருப்பை கண்களால் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் அதன் இருப்பை புகை மூலம் உறுதி செய்து கொள்கிறோம்.

நீண்ட கடலில் பயணம் செய்பவர்கள் பறவைகள் பறந்து வந்து கப்பலில் அமர்ந்து கொண்டால் கரையை நெருங்கிக் கொண்டு இருக்கிறோம் என்று உறுதி செய்து கொள்வதும் இந்த அனுமானப் பிரமாணத்தின் மூலமாகத் தான்.

நண்பர் அச்காக் அவர்கள் சொல்லியது போல இந்த பிரபஞ்சத்தின் வடிவமைப்புகளை பார்த்தோமானால்..
புவியை விட்டுத்தள்ளுங்கள் – கோள்கள் எத்தனை எத்தனை கோடிக் கணக்கான ஆண்டுகளாக அவற்றுக்கு
என்று நிர்ணயித்திருக்கிற பாதையிலேயே இயங்கிக்கொண்டு இருக்கின்றன. ஒன்றை ஒன்று நெருங்கியும் விலகியும் அதே நேரம் எந்த ஒரு “ட்ராபிக் ஜாம்’மோ விபத்தோ சம்பவிக்காமல் அவை எப்படி இயங்கி வருகின்றன. இவற்றை எல்லாம் உருவாக்கி அவற்றுக்கு என தனிப் பாதையை வடிவமைத்து இயக்க விதிகளை நிர்ணயித்து இயங்க வைப்பது யார்..?
இந்தப் புவியில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தன்மையை நிர்ணயித்துக் கொடுத்தது யார்?
மலருக்கு சுகந்தத்தையும், காய்களுக்கு துவர்ப்பையும், கனிகளுக்கு இனிப்பையும் கொடுத்தவர் யார். ?
அதிலும் ஒன்றைப் போல இன்னொன்று இருப்பதில்லை. இனிப்பிலேயே எடுத்துக்கொண்டோமானால் மாங்கனிக்கு உள்ள சுவை பாலாவுக்கு உள்ளதில் இருந்து வேறுபடுகிறது. சர்க்கரையின் இனிப்புக்கும் வெல்லத்தின் இனிப்புக்கும் வித்தியாசம் தெரிகிறது? இவை எல்லாம் மனிதன் தோன்றுவதற்கு முன்னாலேயே தோன்றியவை – இருப்பில் இருந்து வருபவை – ஆதியில் காட்டில் உள்ள கனி கிழங்கு வகைகளை மனிதன் உண்டு வந்த போதே.. இவற்றின் சுவை மாறுபாட்டை அறிந்து கொண்டு தனக்கு பிடித்தவற்றை உண்டு பிடிக்காதவற்றை விலக்கி வைத்து வாழ்ந்து கொண்டு இருந்திருக்கிறான் என்னும் போது.. அவன் தோன்றி முறையாக பயிரிட்டு வளர்ப்பதற்கு முன்பே இவை தோன்றி வளர்ந்து இருக்கின்றன. ஒரு தகப்பன் தனது மகனுடைய பிறப்புக்கு முன்பே அவனுக்கு தேவையானவற்றை தயார் செய்து வைத்துக் கொள்வது போல – மனித குலத்தை சிருஷ்டிப்பதற்கு முன்பே அவனுக்கு உதவுவதற்காக அனைத்தையும் முதலில் படைத்துவிட்டு அதன் பிறகே மனிதனைப் படைத்திருக்கிறான் இறைவன். உருவான முதல் நாள் முதல் நிமிடம் தொட்டு அவன் பசியாறவேண்டும், சுகித்திருக்கவேண்டும் என்று எவ்வளவு கருணையுடன் இவற்றை எல்லாம் செய்திருக்கிறான் அந்த இறைவன் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். அவன் இருப்பை இப்படி எல்லாம் அனுமானத்தின் மூலமாகவே நாம் உறுதி செய்து கொள்ளவேண்டும். இதுதான் “அனுமானப் பிரமாணம்”. ஆகவே நமது பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தி இறைவனின் இருப்பை அறிந்து கொள்ள முடியும். தெரிந்து கொள்ள முடியும். புரிந்து கொள்ளவும் முடியும்.

அன்புடன் : மணியன்.

பின் குறிப்பு: நண்பர் அசோக் அவர்கள் நன்றாக கவனிக்கவேண்டும் நான் “இறைவன்” என்ற வார்த்தையைத்தான் இதுவரை பயன்படுத்தி வந்திருக்கிறேனே தவிர எந்த குறிப்பிட்ட பெயரிலும் அல்ல.. ஆகவே தயவு செய்து உங்கள் கருத்துக்களும் இதை ஒட்டியே அமைந்தால் நண்பர் திருச்சிக்காரன் அவர்களுடைய கவனம் வேறு எதிலும் செல்லாது. அவருக்கும் தனது கருத்துக்களை பதிவூட்டம் செய்ய பேருதவியாக இருக்கும்.)

ம‌திப்பிற்குரிய‌ திரு. மணிய‌ன் அவ‌ர்க‌ளே,

நான் பாவ‌ப் ப‌ட்ட‌வ‌ன் இல்லை. என‌க்கு ஒரு பிர‌ச்சினையும் இல்லை. உண்மையை பேசுவ‌தே என் கொள்கை. நான் எந்த‌க் க‌ட‌வுளையும் பார்க்க‌வில்லை, பார்க்காத‌ க‌ட‌வுளுக்கு சாட்சி கொடுத்து, ப‌ல‌ கடுமையான‌ க‌ட்ட‌ளைக‌ளைப் போட்டு, ம‌க்க‌ளை காவு குடுக்கும் வ‌ண்ண‌ம் வெறுப்பு பிர‌ச்சார‌த்தில் இற‌ங்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என‌க்கு இல்லை.

இர‌ண்டாவ‌தாக‌ இந்த‌ கோள்க‌ளை சுழ‌ல‌ விட்டு….அதை எல்லாம் எங்க‌ “க‌ட‌வுள்” செய்து…. இதெல்லாம் ஒரு அனுமான‌ம் தான். இந்த‌ கோள்க‌ள் மோதாம‌ல்… இது ப‌ற்றிய‌ என‌து விள‌க்க‌ம்‍ இறைவ‌ன் இருக்கின்றானா‍ 3 ல் வ‌ரும். ஆனால் அத‌ற்கு முன் வ‌ர‌ வேண்டிய‌ ப‌ல‌ க‌ட்டுரைக‌ள், வேறு பொருள் ச‌ம‌ப‌ந்த‌ப் ப‌ட்ட‌வை உள்ள‌ன‌.

நேரிலே பார்க்க‌ முடியாது என்று நீங்க‌ள் சொல்கிறீர்க‌ள். ஆனால் – ம‌ந்திர‌ திருஷ்டா- ‍ நேரிலேயே பார்க்க‌ இய‌லும் என்று சில‌ நூல்க‌ளில் சொல்ல‌ப் ப‌ட்டு இருக்கின்ற‌ன‌. நேருக்கு நேர் பார்ப்ப‌துதான் ஆன்மீக‌த்தின் முடிவு என்று சொல்கிரார்க‌ள்‍. இவை எதையுமே எதையுமே நான் ச‌ரி பார்க்காம‌ல் க‌ண்ணை மூடிக் கொண்டு ஒத்துக் கொள்ள‌ பொவ‌தில்லை. ஆனால் பிர‌த்ய‌ட்ச‌ பிர‌மாண‌ம் சாத்திய‌மில்லை என்ப‌து ஒரு வ‌கையான் சால்ஜாப்பு ஆகி விடும். அதை வைத்து ஆயிர‌ம் க‌ட்ட‌ளைக‌லைப் போட்டு, இர‌த்த‌ ஆறு ஓட‌ விடும் வாய்ப்பு உள்ள‌து. நேரிலே பார்த்தால்தான் நான் சாட்சி கொடுக்க‌ இய‌லும். சும்மா, காதிலே கேட்டு பொய் சாட்சி கொடுக்க‌ நான் த‌யார் இல்லை.

//இறைவனை அடைய முதலில் மனிதன் நல்லவனாக,தூய்மையானவனாக,தர்மவானாக இருப்பதே முதல் மற்றும் மிக முக்கியமானதாகும்.மற்ற தவமும்,ஜெபமும், தியானமும்,வழிபாடும்,கடவுளும் இரண்டாம் பட்சமே யாகும் என்றே சனாதன தர்மம் (இந்து மதம்) கூறுகிறது..
”’இரக்கமுள்ளவர்கள் பாகியமுள்ளவர்கள்…………
இதயத்தில் தூய்மை உள்ளவர்கள் பாக்கியமானவர்கள்………”’
எங்கோ சர்ச் சுவரில் படித்த ஜாபகம்.(இதில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் எனக்கு சரியாக ஜாபகம் இல்லை //

தனபால்,
அருமையான வார்த்தைகள். என் பாராட்டுக்கள்.
தேவனை அடைய ஒரு மனிதன் நல்லவனாக “இருக்கவேண்டும்”, உள்ளத்தூய்மையோடு “இருக்கவேண்டும்”. இதுவே உண்மையாக எல்லா மதமும் சொல்லவேண்டிய விஷயங்கள். ஆனால் மக்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டது என்ன?? நல்லவனாக “நடந்துகொள்ளவேண்டும்”.
நீங்கள் எல்லாரும், நல்லவனாக “நடந்துகொண்டால்” போதும் என்று நினைக்கிறீர்கள். நல்லவனாக “இருப்பதற்கும்”, நல்லவனாக “நடப்பதற்கும்” நிறைய வேறுபாடுகள் உள்ளது. பசுவாகவே மாறுவதற்கும், பசுவாக நடந்து கொள்வதற்கும் உள்ள வித்தியாசம் அது.
நீங்கள், எவ்வளவு கடின முயற்சித்தாலும் நல்லவனாக “நடந்து கொள்ளவே” முடியும், ஆனால் உண்மையில் நீங்கள் நல்லவனா என்பது தேவனக்கே வெளிச்சம். உங்கள் மனதை நீங்களே கேட்டு பாருங்கள். நீங்கள் பசுவாக நடந்து கொள்ளலாம், ஆனால் உண்மையில் நீங்கள் பசுவா?? நீங்கள் உண்மையிலேயே நல்லவன் ஆக, உங்கள் மேல் உள்ள பாவம் கழுவப்பட வேண்டும். அதற்க்கு இயேசு கிறிஸ்து வேண்டும். அவரே உங்கள் பாவங்களை கழுவி, உங்களை நல்லவன் ஆக்க முடியும். அப்படி நல்லவன் ஆனால், நீங்கள் கஷ்ட்டப்பட்டு நல்லவனாக “நடந்துகொள்ள” தேவையில்லை, அது இயல்பாகவே வரும். ஒரு பசு, தான் பசுவாக நடந்து கொள்ள எந்த கஷ்டட்டமும் படத்தேவையில்லை, அது செய்வதெல்லாம் பசுவின் செயலே. இல்லாவிட்டால், நீங்கள் நல்லவனாக “நடந்துகொள்ள” மட்டுமே முடியும், ஆனால் நல்லவனாக “இருக்க” மாட்டீர்கள். நல்லவனாக இருக்காவிட்டால், தேவனை அடைய முடியாது.
அன்புடன்,
அசோக்

அருமை நண்பர் திருச்சிக்காரன் அவர்களுக்கு:
நண்பரே.. நான் “பிரத்தியட்சப் பிரமாணம்”, அனுமானப் பிரமாணம் ஆகியவை பற்றி குறிப்பிட்டு இருந்தேன்.
எனது கருத்துக்களை இன்னும் நான் முடிக்கவில்லை.
இறைவனை அனுமானப் பிரமாணம் மூலம் உணரலாம். ஆனால் பார்ப்பது என்பது எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பதை இனி வரும் கருத்துக்களில் விளக்க முற்படுகிறேன்.
நீங்கள் பாவப்பட்டவர் என்று அசோக் அவர்களிடம் கூறியதற்கு இவ்வளவு வேகம் வேண்டாம்.
(திரு.. அசோக் அவர்களின் பின்னூட்டம் படித்தேன். அது பற்றி தனியாக சொல்கிறேன்.)

நேரிலே பார்க்க முடியாதா என்பதை பற்றி சொல்வதற்கு முன்னால் நீங்கள் “மந்திர த்ருஷ்டா” என்று சொல்லி இருக்கிறீர்களே.. அது பற்றி கொஞ்சம் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

மந்திரங்களை இத்தனை ஆயிரம் கோடி முறை ஜபம் செய்தால் இறைவனை காண முடியும்.
(இது எல்லா மதத்துக்கும் பொருந்தும். திரு அசோக் அவர்கள் உடனே எங்கள் மந்திரம் தான் உயர்ந்தது என்று ஆரம்பித்து விடப் போகிறார்!)

நான் அடுத்து ஒரு உதாரணத்துக்காக நான் சார்ந்த மதத்தில் இருக்கும் ஆதார பூர்வ தகவல்களை தருகிறேன்.

இந்தக் கலி யுகத்திலேயே மந்த்ர ஜபம் மூலமாக கடவுளை கண்டவர்கள் இருக்கிறார்கள்.

தியாகராஜர் 96000 கோடி முறை ராம நாம ஜபம் செய்து ஜபசித்தி பெற்றபிறகு ராமனை லக்ஷ்மணர், விச்வாமித்ரருடன் கண் முன்பு காட்சி தரக் கண்டிருக்கிறார். பாடல் புனைந்து இருக்கிறார்.

ஜபம் செய்வது என்றால்…. சும்மா மனசு பாட்டுக்கு ஒரு பக்கம் எதையோ சிந்தித்துக்கொண்டிருக்கும்.
வாய் மட்டும் எதையோ மொணமொணவென்று முணுமுணுத்துக் கொண்டிருப்பதற்கு பெயர் ஜபம் அல்ல.

மனது வேறு எதையும் நினைக்காமல் எந்நேரமும் கடவுளைக் காணவேண்டும் என்ற துடிப்போடு.. என் தாயும் அவனே: தந்தையும் அவனே என்ற நினைப்புடன் அவனை விட்டு பிரிந்து வந்திருக்கிறோம். அவனை மீண்டும் காணவேண்டும் என்ற தவிப்புடன் மேற்கொள்ள வேண்டியது தான் ஜபம்.

அதற்கு முதல் படி.. ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்”. நமது மனத்தில் எழும் தீய எண்ணங்களைக் களைந்து நல்லதையே நினைக்க வேண்டும். அப்படி நம்மால் இருக்க முடியுமா? முடியவில்லையே? முடிந்திருந்தால் இந்தக் கேள்வியே அவசியம் இல்லையே.

நமது மதம், நமது தெய்வம் என்ற பேதமே நம்மை விட்டு அகலவில்லையே. அடுத்தவர் தெய்வம் என்று வணங்குபவரை தூஷிக்க வேண்டும் என்று தோன்றுகிறதே? அப்படி தூஷிப்பவர் மீது கோபம் வருகிறதே?
இந்த ஒரு எண்ணமே போதுமே. தெய்வம் நாம் இருக்கும் இடத்தை விட்டு மூவாயிரம் கோடி மைல்களுக்கப்பால் ஓடிவிடுமே.

அது மட்டும் அல்ல. “உனக்கு தீமை செய்பவருக்கும் நன்மையே செய்” என்று இறைவன் சொல்கிறான். நடைமுறையில் நாம் அப்படி இருக்கிறோமா? சின்ன வயசில் பள்ளியில் சேர்ந்த புதுசுலேயே பக்கத்துப் பையன் கூட சண்டை. “பெற்ற தாய் தந்தையுடன் சண்டை” போடாத மகன்கள் யார்? மனைவியை வருத்தாத கணவன் யார்? பேதங்கள் நமக்கு வீட்டிலேயே நமது உறவுகளுடனேயே ஆரம்பித்து விடுகிறது. ஆசைகள் பல. அவை நிறைவேறாத போது அடுத்தவர் மீது ஆத்திரம். சமயத்தில் இறைவனை நம்புகிற நாமே அவனை திட்டவும் ஆரம்பித்து விடுகிறோம்.

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இந்த நான்கையும் நாம் இன்னும் கைவிட்ட பாடில்லை. அப்படி இருக்க நாம் ஜபம் செய்து இறைவனைக் காண முடியுமா என்ன? ஜபம் செய்யும் போது மனதில் வேறு எந்த சிந்தனைகளும் இல்லாமல் இறைவன் நினைப்பு மட்டுமே தான் இருக்கவேண்டும்.
நமக்கோ ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள். அவைகள் சிலந்திக் கூடுகளாக நமது எண்ணத்தை ஆக்கிரமிக்கும் போது “தைல தாரையாக” இறை நினைப்பு ஊறி வருமா என்ன?

தெய்வத்தை காண்பதற்கு முதல் படி “மன மாசுகளை எல்லாம் அகற்றி இருப்பது தான்”. அப்படி இருந்துவிட்டு தெய்வத்தை பார்ப்பதை பற்றி யோசிக்கலாம். அது இல்லாத பட்சத்தில் அதை பற்றிய சிந்தனையே இல்லாமல் “தெய்வம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? எனக்கு இருக்கு ஆயிரம் கவலைகள்” என்று சொல்லிக்கொண்டு நமது வாழ்க்கையை இன்றைக்கு என்ன செய்வது? நாளைக்கு என்ன செய்வது? என்ற யோசனையோடு நடத்திக்கொண்டே … போகலாம்.

சகோதரர் திருச்சிக்காரன் அவர்களுக்கு – நாம் நம்புவதாலே நம்பாததாலோ கடவுள் ஒன்றும் செய்யப்போவது இல்லை. நம்பினாலும் நம்மைக் காப்பாற்றுவார். நம்பாவிட்டாலும் அவர் நம்மை காப்பாற்றுவார்.

ஆயிரம் கட்டளைகளை இங்கு யாரும் போடுவது இல்லை. நம்மை நெறிப்படுத்தவே நமது வாழ்க்கையை ஒரு கட்டுக்குள் வைத்து செம்மையாக வாழவே நாம் வேலிகளைப் போட்டுக்கொண்டிருக்கிறோம்.

“படிக்கிற வயசுலே பாடத்தை பற்றி மட்டும் தான் சிந்திக்கணும்” என்று நமது மகனுக்கு நாம் வேலிபோடுவது எதற்க்காக? அவன் நல்ல முறையில் கற்றுத் தேரவேண்டும் என்பதற்காகத்தானே.

அது போல நமது வாழ்க்கை சிறந்த முறையில் அமைய வேண்டும் என்பதற்காகத்தான் நாமே நெறிமுறைகளை தர்மங்கள் என்ற பெயரில் வகுத்துக்கொண்டிருக்கிறோம்.

இன்னும் சொல்வேன்….

(அன்புடன் – மணியன்)

ம‌திப்பிற்குரிய‌ ம‌ணிய‌ன் சார்,

நான் வேக‌ம் காட்டிய‌தாக‌ நீங்க‌ள் எண்ண‌ வேண்டாம், ஆராய்ச்சிப் பாதையில் செல்ப‌வ‌ர்க‌ளை ப‌ரிதாப‌மாக‌ எண்ணி விட‌க் கூடாதே என்ப‌தாலேயே அப்ப‌டி எழுதினேன்.

நீங்க‌ள் மந்திர‌ த்ருஷ்டா என்ப‌தற்க்கு அளித்த‌ விள‌க்க‌த்தை ப‌டித்தேன். ந‌ன்றி. நான் ப‌டித்த‌ அளவிலே ம‌ந்திர‌ த்ருஷ்டா என்ப‌து இறைவ‌னை நேரில் காண்ப‌து என்ப‌தாக‌ சுவாமி விவேகான‌ந்த‌ர் கூறிய‌தாக‌ப் ப‌டித்திருக்கிறேன். த்ருஷ்டா என்றால் காண்ப‌து, இந்த‌ இட‌த்தில் ம‌ந்திர‌ என்ப‌து இறைவ‌ன் என்கிற‌ பொருளிலே, இறைவ‌னை நேரில் காண்ப‌தையே அவ‌ர் குறிப்பிட்ட‌தாக எண்ணுகிரேன். ம‌ந்திர‌ங்க‌ளை ஜ‌பிப்ப‌தின் மூல‌ம் இறைவ‌னைக் காண்ப‌து என்கிற‌ க‌ருத்திலே அவ‌ர் கூறிய‌தாக நான் எண்ண‌வில்லை என‌த் தாழ்மையுட‌ன் தெரிவிக்கிரேன்.

மொத்த‌த்திலே ம‌ந்திர‌ம் ஜ‌பிக்கிறார்க‌ளோ, தியானம் செய்கிறார்க‌ளோ, இல்லை எப்ப‌டியோ – இறைவ‌னை நேரில் காண‌ வேண்டும், அடுத்த‌வ‌ருக்கு காட்ட‌ வேண்டும், நிரூபிக்க‌ வேண்டும், பிற‌கு க‌ட்ட‌ளைக‌ளைப் போட‌லாம்.

பல‌ க‌ட்ட‌ளைக‌ளை போடுகிரார்க‌ள். இறைவ‌ன் இருக்கிறான் என்று ந‌ம்பிக் கொண்டு, அமைதியாக‌ வ‌ழிபாடு செய்வ‌தை நாங்க‌ள் குறை சொல்ல‌வில்லை. ஆனால் வெறும் ந‌ம்பிக்கையை ஆதார‌மாக‌க் கொண்டு செய‌ல் ப‌டும் போது அடுத்த‌வ‌ருக்கு பிர‌ச்சினை த‌ராம‌ல், ச‌மூக‌த்திற்க்கு தீங்கு விளைவிக்காம‌ல், அமைதியாக‌ வ‌ழி ப‌டுவ‌தே சிற‌ப்பு.

ஆனால் பிற‌ர் தெய்வ‌ங்க‌ளாக‌ வ‌ழிப‌டுப‌வ‌ரை, நான் தீய‌ ச‌க்தி என்று சொல்லுவேன், பேய் பிசாசு என்று திட்டுவேன், அத‌னால் ம‌க்க‌ள் ச‌ண்டை போட்டு ம‌டிந்தாலும் ச‌ரி என்றால் – அவ்வ‌ளவு அத்தாரிட்டியாக‌, அதிகாரமாக‌,ஆணித்த‌ர‌மாக‌ சொல்லுவ‌தென்றால் அத‌ற்க்கான‌ நிரூப‌ண‌த்தை, ஆதார‌த்தை கொடு. உன் க‌ட‌வுளைக் காட்டு, அவ‌ருக்கு ச‌க்தி இருக்கிர‌தா என்ப‌தைக் காட்டு, அது ந‌ல்ல‌ ச‌க்தியோ, தீய‌ ச‌க்தியோ – முத‌லில் அந்த‌ ச‌க்தியைக் காட்டி விட்டு, அப்புற‌ம் அத்த‌னை ஆர்பாட்ட‌ம், அடுத்த‌வ‌ர் க‌ட‌வுளாக‌ வ‌ண‌ங்குப‌வ‌ரை திட்டும் உரிமை ஆகிய‌வ‌ற்றை எடுத்துக் கொள்ளலாம்.

அமைதியாக அடுத்த‌வ‌ர் க‌ட‌வுளை இக‌ழாத‌ நிலையிலே நானும் ந‌ல்லிண‌க்க‌ அடிப்ப‌டையிலே ம‌ரியாதை செய்ய‌த் தயார். நான் அசோக் அவ‌ர்க‌ளுட‌னும், சில்சாம் அவ‌ர்க‌ளுட‌னும் சேர்ந்து இயேசு கிறிச்துவை ம‌ரியாதை செய்ய‌ த‌யார், அவ‌ர்க‌ள் வழி பாட்டில் க‌ல‌ந்து கொள்ள‌த் த‌யார் என்று ப‌ல‌முறை சொல்லி இருக்கிறேன். ஆனால் ந‌ம்பிக்கையை ம‌ட்டுமே அடிப்ப‌டையாக‌ வைத்து ம‌னித‌ இன‌த்தினில் வெறியைப் ப‌ர‌ப்பி ப‌ல்லாயிர‌க் கண‌க்கான‌ ம‌க்க‌ளை கொல்லுவ‌தை நாகரீக‌ , அறிவு சார் ம‌க்க‌ள் ச‌மூக‌ம் அனும‌திக்காது. அதைப் போல உங்களுடனும் சேர்ந்து நல்லிணக்க அடிப்படையிலே அனுமனையோ, முருகனையோ மரியாதை செய்ய, உங்களுடைய வழிபாட்டில் கலந்து கொள்ள நாம் தயார். ஆனால் அனுமனையோ, முருகனையோ வணங்குபவர் யாரவது அல்லாஹ்வை இழிவு படுத்தி பேசினால் நாம் அனுமதிக்க இயலாது, நாகரீக சமுதாயம் அதை அனுமதிக்காது.

இவ்வ‌ளவு தூர‌ம் சொல்வ‌து, ம‌க்க‌ளின் ந‌ன்மைக்காக‌த் தானே த‌விர‌ , நாம் ப‌ரிதாப‌மாக இருப்ப‌தாக யாரும் நினைக்க‌க் கூடாது. நீங்க‌ள் என்னை பாவ‌ம் என்று சொன்ன‌தில் த‌வ‌றேயில்லை, ஆனால் அப்படி சொன்ன‌து த‌வ‌றாக‌ புரித‌ல் செய்ய‌ப் ப‌ட‌க் கூடாது என்ப‌த‌ற‌க்காக‌வே எழுதினேன்.

தொட‌ர்ந்து எழுதுங்க‌ள், உங்க‌ளின் எழுத்தினால் இந்த த‌ளமும் சிற‌ப்ப‌டைகிர‌து.

அருமை நண்பர் திருச்சிக்காரன் அவர்களுக்கு..
உங்கள் மறுபதிவுக்கு நன்றி. “மந்திர த்ருஷ்டா” என்றால் மந்த்ரங்களின் மூலம் காணப்படுபவன் என்று அர்த்தம்.
மந்த்ரம் என்றால் என்ன? “மனதினால் காணப்படுவது எதுவோ, மனதினால் சிந்திக்கப் படுவது எதுவோ, மனனம் செய்யப்படுவது எதுவோ அதுவே மந்த்ரம்.”
நமது முன்னோர்கள் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளின் சர்வ வல்லமை பொருந்திய சக்தியை
தங்கள் மனதினால் கண்டு, சிந்தித்து, மனனம் செய்து மந்த்ரங்களின் மூலம் கண்டார்கள்.
மின்சக்தி எங்கும் நிறைந்திருக்கிறது. அதனை மின்கம்பிகளின் மூலம் நமது உபயோகத்துக்கு செயல் படுத்திக் கொள்கிறோம். அதுபோலவே எங்கும் நிறைந்த பரம்பொருளை ஒலி வடிவில் தங்கள் தவ
மேன்மையால் கண்டுணர்ந்து மனித குலத்தின் பயன்பாட்டுக்காக மந்திர வடிவில் அளித்தனர்.
அந்த மந்த்ரங்களை கண்டு உணர்ந்தவர்கள் “மந்த்ர த்ருஷ்டா” என்று அழைக்கப் படுகின்றனர்.
ஒவ்வொரு மந்த்ரத்துக்கும் அதற்கான ரிஷி உண்டு. காயத்ரி மந்த்ரம் என்றால் அதனை அளித்தவர்
விச்வாமித்ர முனிவர். (விச்வம் என்றால் உலகம்.. மித்திரன் என்றால் நண்பன். உலக நன்மைக்காக
ஒப்புயர்வற்ற மந்த்ரத்தை அளித்த முனிவருக்கு விஸ்வாமித்திரன் என்று பொருத்தமான பெயர்).
சுவாமி விவேகானந்தர் கூறிய மந்த்ர த்ருஷ்டா என்ற சொல் இந்தப் பொருளில் தான் காலம் காலமாக வழங்கப் பட்டு வருகிறது.
இனி –
நீங்கள் சொல்வது போல : எங்களுக்கு இந்தப் பாதை உயர்வாகத் தெரிகிறது. இந்தப் பாதை எங்கள் மனதுக்கு நிம்மதியை நிறைவைத் தருகிறது என்று நாங்கள் சொன்னால், இது ஒரு வழியா? கெட்டபாதை என்று சொல்பவர்கள் – சாதிப்பவர்கள் – இருக்கத்தான் செய்கிறார்கள்.
என்ன செய்வது. இதெல்லாம் இங்கே தானே அவர்களால் முடியும்?
மற்ற மார்க்கத்தவர் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் பேய், பிசாசு என்று பூச்சாண்டி காட்டினால் சிறு பிள்ளைகள் தான் பயப்படுவார்கள். (இந்தக் காலத்து குழந்தைகள் கூட இப்படிப் பட்ட பூச்சாண்டிகளுக்கு பயப்படுவது இல்லை. இதெல்லாம் சும்-மா கிராபிக்ஸ் வித்தை என்று அவர்களுக்கு கூட புரிந்துவிடுகிறது). ஆகவே இப்படிப் பட்ட பூச்சாண்டிகளை அவர்கள் கூட சீரியசாக எடுத்துக் கொள்வதே இல்லை.

Dear Maniyan Sir,

I am sorry, to the best of my memory, I think Swami Vivekaanadha has described the Manthra Thirishtaa as Seeing the God. I have to trace back and clarify.

Any way , if any one can see God by chanting Manthras or any other means, and show the God to me as well, then I can see how it is, all powerful, merciful….. then I can give witness!

Again, to the best of my knowledge no body in this world has seen the God or show it to others or gave any proof.

So, I consider it as a belief, I respect your belief …. but it is still a belief, not a proof! So all concerned, please dont create animosity and bloodshed based on your belief. Do your worship peacefully.

//மந்த்ரம் என்றால் என்ன? “மனதினால் காணப்படுவது எதுவோ, மனதினால் சிந்திக்கப் படுவது எதுவோ, மனனம் செய்யப்படுவது எதுவோ அதுவே மந்த்ரம்.//

நல்ல விளக்கம் மனியன் சார்.

திருச்சி தான் பக்கம் பக்கமா எழுதுவார்ன்னு நினைச்சேன். மனியன் சாரும் பின்றாரே!
இப்ப கடைசியா என்ன முடிவு பண்ணிருக்கீங்க.?

ராம்,
வ‌ருக‌. லைட்டாக‌ எழுதி விட்டீர்க‌ள். பாராட்டுகிறேன். உங்க‌ க‌ருத்தையும் சொல்ல‌லாமெ.

Brothers,
This is what I call as heights of hypocrasy.
Bro.Thrichikkaaran,
Take one stance sir. If you are just researching whether the GOD is there or not, how can you participate in any worship whole heartedly? What kind of worship is that when you dont even know or beleive whether the one whom you worship is there or not? Is that participation in the worship is just to please the people? Just to give a “good feeling” to others?? Then, who is that “Ramar saami”, “Hanumaar saami” and all, whom you mentioned in your previous writings? When me or Chillsam worships we know that there is A GOD to listen to our prayers. When Mr.Manian or Mr.Dhanpal worships they beleive that there is someone to listen to them. But, how about you?
Thanks,
Ashok

ps: My questions may seem little harsh, but it is just out love. Do not mistake me.

ஒரு ஹிப்போகிர‌சியும் இல்லை. ம‌க்க‌ளை நேசிக்கிரோம். அவ‌ர்க‌ளுடைய‌ நிக‌ழ்ச்சியில் ப‌ங்கு கொள்கிரோம். இத‌னால் ச‌மூக‌ இணைப்பு உருவாகிர‌து. வெறுப்பு குறைகிர‌து, அமைதி உருவாகிற‌து.மும்பையில் ப‌ல‌ இசுலாமிய‌ர் க‌ணேஷ் பூஜையில் க‌ல‌ந்து கொள்கின்ர‌ன‌ர். ச‌ல்மான் கான், சோனி நிக‌ம் வீட்டில் ந‌டை பெற்ற‌ க‌ணேஷ் பூஜையில் க‌ல‌ந்து கொண்டார்.

இதில் ம‌ன‌ப் பூர்வ‌மாக‌வும் க‌ல‌ந்து கொள்ள‌லாம். இயேசு கிறிஸ்துவின் பல‌ க‌ருத்துக்க‌ள் ம‌க்க‌ளுக்கு ந‌ன்மை ப‌ய‌க்க‌க் கூடிய‌வை, நாக‌ரீக‌ ச‌முதாய‌த்துக்கு உத‌வ‌க் கூடைய‌வை. அத‌னால் அவ‌ரை ம‌ன‌ப் பூர்வ‌மாக‌ ம‌ரியாதை செய்வ‌தில் பிர‌ச்சினை இல்லையே. இதில் அசோக் அவ‌ர்க‌ளுக்கு புரியாத‌து என்ன? இயேசு கிறிஸ்துவின் ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ளுக்காக‌ அவ‌ர் ம‌ரியாதை செய்ய‌ப் ப‌ட‌லாம் என்ப‌து கூட‌ புரிய‌வில்லையா?

இராம‌ர் சாமி, ஹ‌னுமான் சாமி இவ‌ர்க‌ள் எல்லாம் ந‌ல்ல‌ கொள்கைக‌ளுக்காக‌, எவ்வ‌ளவு க‌ஷ்ட‌ கால‌த்திலும் த‌வ‌றான‌ வ‌ழிக்கு செல்லாம‌ல், சொல்லொனா துய‌ர‌ங்க‌ளை அனுப‌வித்த‌ நேர‌த்திலும் நல்ல‌ வ‌ழியில் உறுதியாக‌ நின்றவர்கள் என்ற‌ கார‌ண‌த்தினால் என‌க்கு அவ‌ர்க‌ள் மீதும் ம‌திப்பு உண்டு. அத‌னால் ம‌திப்பைக் குறிக்கும் விட‌ய‌மாக‌ சாமி என‌ அழைத்தேன். எப்ப‌டி அசோக்கை , அசோக்ஜி என‌ அழைப்ப‌து ம‌ரியாதைக்காக‌வோ, அப்ப‌டியே இராம‌ரை , அனும‌னை இராம‌ர் சாமி என‌ ம‌ரியாதையாக‌ அழைத்தோம். அந்த‌ வ‌கையிலே புத்த‌ரும் புத்த‌ர் சாமி என‌ அழைக்க‌ப் ப‌ட‌த் த‌குந்த‌வ‌ரே.

இதை நாம் தெளிவாக‌ ப‌ல‌ த‌ள‌ங்க‌ளிலும் எழுதி இருக்கிரேன். திரு . ராம் அவ‌ர்க‌ளின் த‌ளத்திலும் இது ப‌ற்றி எழுதி இருக்கிறென். ந‌ம‌க்கு இராம‌ருட‌னும், அனும‌னுட‌னும் உள்ள‌ உற‌வு கொள்கை அடிப்ப‌டையில் தான். குக‌ன் இராம‌ருக்கு ம‌ரியாதை செய்த‌து அவ‌ருடைய‌ தியாக‌த்தைப் பார‌ட்டி. குக‌ன் இராம‌ரைக் க‌ட‌வுளாக‌ எண்ண‌வில்லை. குக‌னுக்கும் இராம‌ருக்கும் என்ன‌ தொட‌ர்போ, அதே தொட‌ர்புதான் என‌க்கும். இராம‌ரோ, அனும‌ரோ வான‌த்தில் இருக்கிறார்க‌ள் என்று நான் சாட்சி கொடுக்க‌வில்லை. அவ‌ர்க‌ள் பேரை வைத்து இங்கே ச‌முதாய‌த்தில் குழ‌ப்ப‌த்தையும் பூச‌லையும் உருவாக்க‌வுமில்லை.

ம‌ன‌தினில் அன்பு வேண்டும். உயிர்களை நேசிக்க‌ தெரிய‌ வேண்டும். அதைத் தெரிந்து கொண்டால் எல்லாம் புரியும். க‌ட‌வுளுக்காக ம‌னித‌ர்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்டால் ப‌ர‌வாயில்லை என்ற‌ க‌ருத்திலே சிக்கிக் கொண்டால், அன்புக் க‌ருத்துக்க‌ள் ஹிப்போகிர‌சி போல‌ தான் தெரியும்.

நண்பர் திருச்சிக்காரன்,
நீங்கள் அடிக்கடி சொல்லும் மதக்காழ்ப்புனர்சிக்கு நான் விளக்கம் தருகிறேன். அது உங்கள் குணங்களில் ஒன்று. உங்களுக்கு இறைவனை அடைய, இந்து மார்க்கத்தவர் சொல்லும் வழிகளில் தான் செல்லவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதாவது, த்யானம், தவம், மந்திரம், சந்நியாசம், போன்றவை. எதுவாக இருந்தாலும், அதை ஒரு இந்திய துறவி சொல்லியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். மற்ற மார்க்கத்தார் அனுபவ பூர்வமாக ஒரு வழியை சொன்னாலும், அதை நம்பமாட்டேன் அவர் பொய் சொல்லுகிறார், நிரூபிக்க வேண்டும் என்றால், இறைவனை சினிமாகொட்டகைக்கு அழைத்துவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள் (ஏதோ இறைவன் உங்கள் வீட்டு வேலைக்காரனை போல்).

நானும் இந்து குடும்பத்தில் பிறந்தவன்தான். இறைவனை தேடி அலைந்தேன், பலவித த்யானங்களை கட்டறேன். ஒரு வருடம், பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்லாமல் யோகம், தியானம், சாமியார்களை சந்திப்பது, என்று தேடலில் இருந்தேன். பிறகு, ராமகிருஷ்ண mission கல்லூரியில் பயின்றேன், அங்குள்ள சன்யாசிகளிடம் பலவிஷயங்களை கற்றுக்கொண்டேன். இவையெல்லாம் என் தனிமனித வாழ்வில் சில வெற்றிகளை அடைய உதவியதே அல்லாமல், என் ஆன்மீக தாகத்துக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.பல தெய்வங்களின் கதைகளை கேட்டு குழப்பமே மிஞ்சியது. பிறகு, நான் மேல்படிப்பிற்காக திருச்சி RECயில் படிக்கும்போதுதான், இயேசுவை அறிந்துகொண்டேன். அவர் என் பாவங்களை மன்னித்தார், என் தாகத்தை தீர்த்தார்.
நான் கூற விழைவது என்னவென்றால், இந்து முறைகளை முயற்சிசெய்து பார்க்காமல், நான் வெறும் காழ்புணர்ச்சியில் பேசுகிறேன் என்று நினைக்கவேண்டாம். நீங்களும், உங்களுக்கு எந்த வரையறைகளும் வைத்துக்கொள்ளாமல், எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல், தேடுங்கள். அப்போது கண்டடைவீர்கள்.
அன்புடன்,
அசோக்

அசோக் அவ‌ர்க‌ளே,

நான் சொல்லிய‌து எத‌ற்க்கு என்று த‌ய‌வு செய்து புரிந்து கொண்டு எழுதுங்க‌ள். திரு. ம‌ணிய‌ன் இந்து மார்க்க‌த்தை சேர்ந்த‌வ‌ர், அவ‌ர் நேரடியாக‌ பார்க்க‌ இய‌லாத‌ ப‌ட்ச‌த்தில்… பிர‌த்ய‌ட்ச‌ பிர‌மாண‌ம் இல்லை…. என்று எழுதி இருந்த‌தாலேயே , நேர‌டியாக‌ பார்த்து உறுதி செய்வ‌துதான் உண்மையை அறிய‌ ச‌ரியான‌ வ‌ழி என்று இந்து ம‌த‌த் துற‌வி ஒருவ‌ரே சொன்ன‌தை அவ‌ருக்கு சுட்டிக் காட்டினேன். திரு. ம‌ணிய‌ன் இந்து என்ப‌தால் நான் அவ‌ருக்கு இந்து துற‌வி ஒருவ‌ரின் வார்த்தையை உதார‌ண‌ம் காட்டினேன்.

உங்க‌ளிட‌மும் நேர‌டியாக‌ காட்டுங்க‌ள், ந‌ம்புகிறேன் என்று ப‌ல‌ முறை சொல்லி விட்டேன். உங்க‌ளுக்கு தான் முத‌ல் சான்ஸ். திருப்தியா?

சினிமா தியேட்ட‌ர் ச‌ரிய‌ல்ல‌ என்றால் வேண்டாம். மாலையிலே சோலையிலே உலாவும் ப‌ழ‌க்க‌ம் க‌ட‌வுளுக்கு உண்டு என‌ சில‌ ந‌ம்பிக்கையாளர் கூறக் கேட்டு இருக்கிறென். என‌வே மாலையிலே அண்ணா ந‌க‌ர் ட‌வ‌ர் பார்க்கிலே ச‌ந்திக்க‌ முடியுமானாலும் ச‌ரியே.

இறைவ‌ன் என் வீட்டு வேலைக்கார‌ன் இல்லை. ஆனால் பார்க்காம‌ல் நான் பொய் சாட்சி கொடுக்க‌ இய‌லாதே.

என்னை ம‌ன்னியுங்க‌ள், உங்க‌ள் எழுத்துக்க‌ளைப் ப‌டிக்கும் போது நீங்க‌ள் இயேசு கிறிஸ்துவை அறிந்த‌வ‌ர் போல‌ தெரிய‌வில்லையே, மீண்டும் ம‌ன்னியுங்க‌ள், நீங்க‌ள் கிறிச்துவின் க‌ற்பித‌ங்க‌ளுக்கு எதிராக‌ செய‌ல் ப‌டுவ‌து போல‌வே தெரிகிர‌து. இயேசு கிறிஸ்து, பிற‌ மார்க்க‌த்தின‌ர் க‌ட‌வுள்களாக‌ வ‌ண‌ங்குப‌வ‌ர்க‌ளை, திட்ட‌ சொல்ல‌வில்லையே! ஆனால் நீங்க‌ள் அதைதான் முக்கிய‌மாக‌ க‌ற்பித்தும் செய்தும் வ‌ருகிறீர்க‌ளே. வெறுப்பு பிர‌ச்சார‌தால் ச‌மூக‌ங்க‌ளுக்கு இடையிலே ச‌ண்டை வ‌ந்து ப‌ல‌ர் கொல்ல‌ப் ப‌ட்டாலும் ப‌ரவாயில்லை என்கிறீர்க‌ளே, இது கிறிஸ்து சொல்லிக் குடுத்த‌தா?

கிறிச்து எப்ப‌டி ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும் என்ப‌தில் தான் அதிக‌ க‌வ‌ன‌ம் செலுத்தினார். நீங்க‌ள் யாரை வ‌ண‌ங்க‌ வேண்டும், யாரை பேய் என்று திட்ட‌ வேண்டும் என்ப‌தில் தான் க‌வ‌ன‌ம் செலுத்துகிரீர்க‌ள். இயேசு ம‌ண்ணுல‌கில் இருந்த‌ போது யூத‌ர்க‌ள் அவ‌ரை சிலுவையில் அறைந்தார்க‌ள். நீங்க‌ளோ அவ‌ரின் கொள்கைக‌ளை சிலுவையில் அறைந்து முள் முடியை அழுத்தி அடிக்கிறீர்க‌ள்,உங்க‌ளுட‌ன் சேர்ந்து நானும் கிறிஸ்துவின் க‌ருத்துக்க‌ளுக்கு எதிராக‌ செய‌ல் ப‌ட‌ வேண்டுமா?

Dear Thiruchchikkaaran,
Please try to understand that, there is a huge difference between, just repecting and worshiping. I respect you for some good things that I can see in you, but that respect is not worship. Try to mean the words that you are using. “Vazhipaadu” or “Pooja” is not just respecting, it is much more than that. If “Saami” means GOD. Then, that is not the word to use for mere respect.If you are taking Salman khan as your role model for this, I dont know what to say.
Yeah, I love souls of the people than the people. Whether there is war or peace in this world, none of the people is going to live here for ever. Everyone is going to die. But, their souls are important. It is going to live for ever and I want them have a better eternity. Every other thing is secondary.
With Love,
Ashok

Dear Mr. Ashok,

I am sorry, I can not resort to the path which leads to killing of innocent people.

If soldiers fight in the war for a just cause, to defend their territory, that is inevitable.

But killing innocents for religious reasons is not acceptable to us.

For me, I prefer to be in fire or any hell but not create rift and kill people.

என்னைக் கும்பிடாவிட்டால், உன்னை எரி ந‌ர‌கத்தில் போடுவேன் என்று மிர‌ட்டி ம‌ரியாதை கேட்கும் மேலான‌வ‌ரை வ‌ண‌ங்கிப் பிழைப்ப‌தை விட‌ அவ‌ரை எதிர்த்து எரி ந‌ர‌க‌த்தை எதிர் கொள்ள‌ நாங்க‌ள் த‌யார்.

முத‌லில் க‌ட‌வுள், அடுத்து எரி ந‌க‌ர‌ம், அதை அடையாம‌ல் த‌ப்பிக்க‌ ம‌க்க‌ளைக் கொல்ல‌லாம்….. ந‌ட‌த்துங்க‌ள் ந‌ம்பிக்கையின் அடைப்ப‌டையினால் உருவான‌ பிர‌ச்சார‌ங்க‌ளை!

அசோக் அவ‌ர்க‌ளே,
நீங்க‌ள் பிற‌ ம‌த‌க் க‌ட‌வுள்களை வ‌ண‌ங்க‌வும் வேண்டாம், ம‌ரியாதை செலுத்த‌வும் வேண்டாம், அவ‌ர்க‌ளை தீய‌ ச‌க்திக‌ள், பேய், பிசாசு என‌ இக‌ழ்ந்து ச‌முதாய‌ ங்க‌ளுக்கு இடையே மோத‌லை உருவாக்காம‌ல் இருந்தாலே ம‌க்க‌ள் உங்க‌ளுக்கு ந‌ன்றி சொல்லுவார்க‌ள்.

//தியாகராஜர் 96000 கோடி முறை ராம நாம ஜபம் செய்து ஜபசித்தி பெற்றபிறகு ராமனை லக்ஷ்மணர், விச்வாமித்ரருடன் கண் முன்பு காட்சி தரக் கண்டிருக்கிறார். பாடல் புனைந்து இருக்கிறார்.//
ஒரு நொடிக்கு ஒரு மந்திரம் என்று சொல்லி இருந்தால் கூட, 96000 கோடி நொடிகள், எவ்வளவு நூற்றாண்டுகள் என்று தெரியுமா? மூட நம்பிக்கைக்கு அளவே இல்லையா?

//இந்த ஒரு எண்ணமே போதுமே. தெய்வம் நாம் இருக்கும் இடத்தை விட்டு மூவாயிரம் கோடி மைல்களுக்கப்பால் ஓடிவிடுமே. //
தெய்வத்தை கண்டு தீமை விலகி ஓடுமா? தீமையை கண்டு தெய்வம் ஓடுமா?
Will Continue,
Ashok

//நீங்க‌ள் பிற‌ ம‌த‌க் க‌ட‌வுள்களை வ‌ண‌ங்க‌வும் வேண்டாம், ம‌ரியாதை செலுத்த‌வும் வேண்டாம், அவ‌ர்க‌ளை தீய‌ ச‌க்திக‌ள், பேய், பிசாசு என‌ இக‌ழ்ந்து ச‌முதாய‌ ங்க‌ளுக்கு இடையே மோத‌லை உருவாக்காம‌ல் இருந்தாலே ம‌க்க‌ள் உங்க‌ளுக்கு ந‌ன்றி சொல்லுவார்க‌ள்.//
மக்களின் நன்றிகாகவும், பாராட்டுக்காகவும் நான் எதையும் செய்வதில்லை. நீங்கள் பயப்படுவது போல் சமுதாய மோதல்கள் ஒன்றும் என்னால் வரப்போவது இல்லை. மிஞ்சிபோனால் என்னை மக்கள் இகழுவார்கள், அல்லது அடிப்பார்கள். நாம் திருப்பி அடித்தால்தானே அது மோதலாகவும், கலவரமாகவும் மாறும். ஆனால், உங்களுக்கு வரும் அபாயத்தை பார்த்தும் நான் மௌனமாய் இருப்பது எனக்கு சரியாக தோன்றவில்லை.
“உனக்கு இந்த உண்மைகள் தெரிந்திருந்த போதும் அதை மறைத்து எங்களுடன் உறவாடிக்கொண்டிருந்தாயே, ஒரு வேளை நீ அதை சொல்லியிருந்தால் நான் ஆக்கினைக்கு தப்பியிருபேனே” என்று உங்கள் ஆத்மா என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வது?
நன்றி,
அசோக்

மக்கள் உங்க‌ளை ஒன்றும் செய்ய மாட்ட‌ர்க‌ள்.

மத‌ வெறியைப் ப‌ர‌ப்புப‌வ‌ர்க‌ள், அப்ப‌டியே சைல‌ன்டாக‌ ம‌க்க‌ள் ம‌ன‌தில் விச‌க் க‌ருத்துக்க‌ளை, வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை ஏற்றி விட்டு சென்று விடுவார்க‌ள்.

அது ம‌க்க‌ளின் ம‌ன‌திலே வ‌ள‌ர்ந்து பெரிய‌ மோத‌லாக‌ , போர்க‌ளாக‌ உருவெடுக்கிற‌து.
ஜிஹாதி தீவிர‌வாத‌த்தை விட‌ கொடுமையான‌ சைல‌ன்டான‌ தீவிர‌வாத‌ம் இப்ப‌டி பிற‌ ம‌தத்த‌வ‌ர் க‌ட‌வுளாக‌ வ‌ண‌ங்குப‌வ‌ர்க‌ளை பேய், தீய‌ ச‌க்‌தி என‌ இக‌ழ்வ‌து. உண்மையிலே இப்ப‌டிப்ப‌ட்ட‌ விச‌ப் பிர‌ச்சார‌மும் ஜிஹாதி வ‌கை தீவிர‌வாத‌ம் உருவாக‌க் கார‌ண‌ம்.

விச‌க் க‌ருத்தைப் ப‌ரப்பிய‌வ‌ர்க‌ள் த‌ப்பி விடுவார்க‌ள், அப்பாவி மக்கள் பலியாவார்க‌ள்.

//உனக்கு இந்த உண்மைகள் தெரிந்திருந்த போதும் அதை மறைத்து எங்களுடன் உறவாடிக்கொண்டிருந்தாயே, ஒரு வேளை நீ அதை சொல்லியிருந்தால் நான் ஆக்கினைக்கு தப்பியிருபேனே” என்று உங்கள் ஆத்மா என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வது?//

என் ஆத்மா உங்க‌ளிட‌ம் வ‌ந்து பேசினால் அப்போது நீங‌கள் அத‌னிட‌ம், “நான் யாரோ புத்த‌க‌மாக‌ எழுதிய‌தை ப‌டித்து விட்டுதானெ சொல்லுகிறேன். நான் சொல்லும் வெறுப்புக் க‌ருத்துக்க‌ளைக் கேட்டு, அதனால் என்னையும் விட‌ அதிக‌ பாவி ஆகி விடாதே. என்னிட‌மிருந்து த‌ப்பி சென்று ம‌க்க‌ளை நேசிக்கும் அன்பு வாழ்க்கை வாழ்வாய்” என‌ என் ஆத்மாவுக்கு சொல்லி, என் ஆத்மாவை கேட்டில் இருந்து த‌ப்பிக்க‌ விடுங‌க‌ள்.

Thank you very much Bro.Thiruchchikkaaran. I have shared my message. Rest of the things are up to you guys. You escaped from me ( I mean, I wont be writing in this blog anymore, I have written enough which is needed). Hope u escape from the Devil too.
God Bless You,
Ashok

அன்பு சகோதரர் திரு. அசோக் குமார் அவர்களே,

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த தளத்திற்கு வந்து எழுதலாம். உங்களின் எந்தக் கருத்தும் மட்டுறுத்தல் இங்கே செய்யப் படவில்லை.

உங்களிடம் நாங்கள் ஒத்துக் கொள்ளப் பட முடியாத கருத்து என்னவென்றால், பிற மார்க்கத்தவர் கடவுளாக வணங்குபவற்றை தீய சக்திகள், பேய் என்று இகழ்வதும், அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி கவலைப் படாமல் இருப்பது ஆகியவையும் தான்.

நீங்கள் ஆவேசப் போக்கை கைவிட்டு, அன்புப் பாதைக்கு திரும்புவீர்கள் என்று நம்புகிறோம்.
பிராடிகல் சன் கதையில் வரும் தந்தையைப் போல இந்த தளம் காத்திருக்கும். வெறுப்புக் கருத்துக்களைக் கை விட்டு, இயேசு கிரிஸ்துவை சரியாகப் புரிந்து கொண்டு, அன்புப் பாதைக்கு திரும்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

பகுத்தறிவுப் பாதைக்கு வந்து, உங்களின் அறிவு தூண்டப் பட எமது வாழ்த்துக்கள்.

அன்புடன்

திருச்சிக்காரன்

// ஜிஹாதி தீவிர‌வாத‌த்தை விட‌ கொடுமையான… இப்ப‌டிப்ப‌ட்ட‌ விச‌ப் பிர‌ச்சார‌மும் ஜிஹாதி வ‌கை தீவிர‌வாத‌ம் உருவாக‌க் கார‌ணம் …//

அப்படியானால் இஸ்லாமியர்களும் உங்கள் அகராதிப்படியே வெறுப்புக் கருத்துக்களைப் பரப்பி காழ்ப்புணர்ச்சியைத் தூண்டுகிறார்கள் என்கிறீர்களா?

சீக்கியரும் கூட இந்துக்களுடன் ஒத்துப்போகாமல் வேறு ஏதோ ஒன்றுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார்கள்; இதனால் இந்துக்களின் மனம் புண்படுகிறது..!

திரு . கிளாடி அவர்களே,
தளத்திற்கு வருகை தந்ததற்கும், கருத்து பதிவு இட்டதற்கும் நன்றி.

இந்துக்களுடன் ஒத்துப் போக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. பல இந்துக்கள் இயேசு கிறிஸ்துவை போற்றி ஒத்துப் போக தயாராக இருக்கிறார்கள். நம்முடைய கோரிக்கை என்னவென்றால், பிற மார்க்கத்தவர் தெய்வங்களாக கருதுபவரை இகழ்ந்து பொது அமைதியைக் கெடுத்து பூசலை உருவாக்க வேண்டாம் என்பதே.

இசுலாமிய மார்க்கமானது பிற மார்க்கங்களை அங்கீகரிக்கவில்லை , அல்லாஹ் வை தவிர வேறு எந்த தெய்வத்தையும் இசுலாம் ஒத்துக் கொள்ளவில்லை, எனவே கருதுகிறேன். இசுலாத்தில் கூறப் பட்டுள்ள வழிபட்டு முறைகளைத் தவிர வேறு முறைகளை நிராகரிக்கிறது. ஆனால் சமீப காலமாக கணிசமான இசுலாமிய சமூக நண்பர்கள் பிற மார்க்கத்தின் தெய்வங்களைக் குறிப்பிட்டு அவைகளை இழிவு செய்வதை தவிர்க்கின்றனர் என நான் கருதுகிறேன். சீக்கியர் சாமரசம் வீசும் குருத்வாராவுக்கு பல இந்துக்கள் சென்று வழிபடுவது உண்டு. இப்படியான சமூக நல்லிணக்க பழக்கங்களைக் கண்டு யார் மனமும் புண்பட வேண்டிய அவசியம் இல்லையே!

// ஜிஹாதி தீவிர‌வாத‌த்தை விட‌ கொடுமையான… இப்ப‌டிப்ப‌ட்ட‌ விச‌ப் பிர‌ச்சார‌மும் ஜிஹாதி வ‌கை தீவிர‌வாத‌ம் உருவாக‌க் கார‌ணம் …//

அப்படியானால் இஸ்லாமியர்களும் உங்கள் அகராதிப்படியே வெறுப்புக் கருத்துக்களைப் பரப்பி காழ்ப்புணர்ச்சியைத் தூண்டுகிறார்கள் என்கிறீர்களா?

சீக்கியரும் கூட இந்துக்களுடன் ஒத்துப்போகாமல் வேறு ஏதோ ஒன்றுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார்கள்; இதனால் இந்துக்களின் மனம் புண்படுகிறது..!

I Love India..!

அன்பு நண்பர் திரு.. அசோக் அவர்களுக்கு.
உங்கள் பதிவுகளை படித்தேன். சில விளக்கங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்: “உங்களுக்கு இறைவனை அடைய, இந்து மார்க்கத்தவர் சொல்லும் வழிகளில் தான் செல்லவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதாவது, த்யானம், தவம், மந்திரம், சந்நியாசம், போன்றவை. எதுவாக இருந்தாலும், அதை ஒரு இந்திய துறவி சொல்லியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். மற்ற மார்க்கத்தார் அனுபவ பூர்வமாக ஒரு வழியை சொன்னாலும், அதை நம்பமாட்டேன் அவர் பொய் சொல்லுகிறார்” என்று நிரூபணம் கேட்பதாகச் சொல்கிறீர்கள்.
மற்ற மார்கத்தவர் தங்கள் வழியைச் சொல்லும் போது நாங்கள் கேட்டுக்கொள்ளத் தான் செய்கிறோம். அதே சமயம் நீங்கள் உங்கள் வழியை சொல்லும்போது எங்கள் வழியை நிந்தனை செய்து பேசுவதால் தான் பிரச்சினையே வருகிறது.
மற்ற மார்கத்தவர்கள் எல்லாரும் பாவிகள் என்றும் அவர்கள் பாவங்கள் தீரவேண்டுமானால் உங்களிடம் தான் வரவேண்டும் என்று சொல்லுவதால் தான் பிரச்சினையே.
“உங்கள் மதத்தில் பாவம் தீர இப்படி வழி சொல்லப் பட்டிருக்கிறதா? எங்கள் மதத்தில் இப்படி சொல்லப் பட்டிருக்கிறது” என்று நீங்கள் சொல்வது இல்லையே. உங்கள் மதம் ஒன்று தான் ரட்சனைக்குரியது. மற்றவை எல்லாம் நிந்தனைக்குரியது என்று நீங்கள் செயல்படுவதால் தான் நிரூபணம் கேட்கவேண்டியதாகி விடுகிறது.
//திருச்சி RECயில் படிக்கும்போதுதான், இயேசுவை அறிந்துகொண்டேன். அவர் என் பாவங்களை மன்னித்தார், என் தாகத்தை தீர்த்தார்.// அப்படி என்றால் அதுவரை நீங்கள் செய்த பாவங்கள் எல்லாம் போய்விட்டன. இப்போது புதிதாக பாவங்களை செய்து கொண்டிருக்கிறீர்களா என்ன? அப்படி இல்லை நண்பா.
உங்கள் மனப்போக்குக்கு தெய்வம் தன்னை இயேசு கிறிஸ்துவின் வடிவில் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.
“லோகோ பின்ன ருசி” என்பார்கள். அதாவது இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான உணர்வுகள், தேடல்கள், தாகங்கள், விருப்பங்கள். அவற்றில் உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. கருணை நிரம்பிய தெய்வம் உங்கள் மனப்போக்குக்கு ஏற்றபடி உங்களை அந்த வடிவில் ஆட்கொள்கிறது. “நீ எதை கேட்கிறாயோ அதை அடைகிறாய்”, அதன்படி உங்கள் விருப்பத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. நீங்களும் அடைந்தீர்கள். “எதை எதையோ தேடி அலைந்தேன். கடைசியின் இந்த உருவில் எனக்கு நீ சாந்தி அளித்திருக்கிறாய். இறைவா உனக்கு நன்றி. அதுபோல் மனித குலத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் எந்த உருவில் உன்னை காணவேண்டும் என்று நிச்சயித்திருக்கிறாயோ அந்த வடிவிலேயே அவர்கள் உன்னைக் காண விரைவில் அருள் புரிவாயாக” என்று வேண்டுவது தான் உண்மையான பிரார்த்தனை. இயேசுவின் வடிவத்தில் தான் இறைவன் இருக்கவேண்டும் என்று கட்டளை இட உங்களுக்கு என்ன உரிமை. இறைவனை உங்கள் வீட்டு வேலைக்காரனைப் போல நீங்கள் தான் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் தான் இந்த வடிவத்தில் தான் நீ இருக்கவேண்டும் என்று அவருடைய சுய இச்சையிலே குறுக்கிடுகிறீர்கள்.
தியாகராஜர் 96000 கோடி ராம நாமாவை ஜபித்த பிறகு ராம தரிசனம் சித்திக்கும் என்பது நியதி. நண்பரே ..
இதனை நீங்கள் கால்குலேட்டர் வைத்துக்கொண்டு ஒரு கணக்கு போட்டு எத்தனை வருடங்கள் ஆகும் என்று எல்லாம் சிரமப்பட்டு கண்டுபிடித்திருக்கிறீர்கள். சத்குரு தியாகராஜர் எப்போதும் இறை சிந்தனையுடன் இருந்த ஒரு பரம பக்தர். சிறு குழந்தை நடை பழகும் போது அன்னையை நோக்கி ஒரு அடி எடுத்துவைத்தால் அவள் பத்தடி முன்னால் வந்து அள்ளி அணைத்துக்கொள்கிறாள். அந்த வகையில் தெய்வமும் தன்னை நோக்கி ஜீவன் தன்னை நோக்கி சித்தம் ஒன்றி அழைத்தவுடனேயே எவ்வளவு விரைவாக வரமுடியுமோ அவ்வளவு விரைவாக வந்து அவனை ஆட்கொள்கிறது. அதுவும் தவிர அவர் ஜபம் செய்த இடமோ திருவையாறு அம்மன் ஆலய சந்நிதிக்கு பின்னால். மாட்டுத் தொழுவத்தில், தீர்த்தக்கரையில், புனித ஆலயத்தில் – இங்கெல்லாம் ஒரு முறை ஜபம் செய்வது என்பது முறையே நூறு மடங்கு அதிகப் பலனைத் தரும். அதாவது இறை அருளை எவ்வளவு சீக்கிரம் ஒரு மனிதன் அடைய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடைய வழி செய்து தந்திருக்கிறார்கள். அந்த வகையில் தியாகராஜருக்கு ஸ்ரீ ராமனின் சாட்சாத்காரம் கிடைத்திருக்கிறது. அவருக்கு ராமனின் வடிவில் காட்சி கொடுத்து ஆட்கொண்ட தெய்வம். உங்களுக்கு கர்த்தரின் வடிவில் வந்திருக்கிறது. இதில் மூட நம்பிக்கை எல்லாம் இல்லை.
இறுதியாக தெய்வம் தீமையைக் கண்டு ஓடுமா? அல்லது தீமை தெய்வத்தை கண்டு ஓடுமா என்று கேட்டு முடித்திருக்கிறீர்கள். தெய்வம் நம்மை நாடி வரவேண்டுமானால் நம் மன மாசுகளை – நமக்கே தெரிந்த தவறுகளை நாம் திருத்திக்கொள்ளவேண்டும். அப்படி நமது மன மாசுகளை நாம் நீக்கிக் கொண்டால் தான் தெய்வம் வந்து நம்மை நெருங்கும் தீமைகளை அஞ்சி ஓடச் செய்யும். நான் இப்படித்தான் இருப்பேன். ஆனால் கடவுள் என்னை ஒன்றும் கேட்ககூடாது என்று இருந்தோமானால்… நம்மை பார்க்கவே கடவுள் விரும்பமாட்டார்.
திருச்சிக்காரன் ஆத்மா உங்களிடம் கேட்பது இருக்கட்டும். உங்கள் ஆத்மாவிடம் அந்த தேவன்,”எங்கும் நிறைந்திருக்கும் என்னை ஒரு குறிப்பிட்ட வடிவத்துக்குள் மட்டுமே குறுக்கி விட்டாயே. நீ குருக்கியதோடு அல்லாமல் எல்லா வடிவிலும் அருளக்கூடிய சர்வ வல்லமை பொருந்திய என்னை மற்ற வடிவில் கண்டவர் மனதை வாடும் படி செய்து விட்டாயே.” என்று கேட்கப் போகிறாரே அந்தக் கேள்விக்கான பதிலை முதலில் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் திருச்சிக்காரன் அவர்களின் ஆத்மாவைப் பற்றிக் கவலைப் படலாம்.
அன்புடன் – மணியன்.

நண்பர் Glady அவர்களுக்கு.
இஸ்லாமியர்கள் – மற்றும் கிறிஸ்தவ நண்பர்கள் அனைவருமே வெறுப்புக் கருத்துக்களை கூறுவது இல்லை. சென்னை திருவல்லிக்கேணியில் பேட்டை ஈஸ்வரன் கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலுக்கு அர்த்த ஜாம பூஜைக்கான கட்டளை இஸ்லாமிய சகோதரர்களால் இன்றும் நடத்தப் பட்டு வருகிறது.
அது போலவே மன்றோ துரை அவர்கள் மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு மனம் உவந்து அளித்த காணிக்கை இன்றும் மத நல்லிணக்கத்தை பறை சாற்றி வருகிறது.
பத்ராசலம் ராமர் ஆலயத்துக்கு நவாப் அளித்த காணிக்கைகளும், மாஞ்சாலா என்ற கிராமத்தையே மகான் ராகவேந்திரர் “பிருந்தாவனம்” எழுப்ப காணிக்கையாக அளித்த இஸ்லாமிய நவாபின் எழுத்துப்பூர்வமான ஆதாரம், எல்லாமே மத நல்லிணக்கத்துக்கு அடையாளங்கள்.
இஸ்லாமியர்களும், ஏன்..வெள்ளையர்கள் ஆண்ட காலத்தை விட சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளை கடந்த இந்தக் கால கட்டத்தில் தான் காழ்ப்புணர்ச்சி ஊட்டும் மதப் பிரச்சாரங்கள் பெருகி மத நல்லிணக்கம் கேள்விக்குறியாகி மதத் தீவிரவாதமாக புது வடிவம் எடுத்திருக்கிறது. இது மிகவும் வேதனையான ஒரு விஷயம்.

// பல இந்துக்கள் இயேசு கிறிஸ்துவை போற்றி ஒத்துப் போக தயாராக இருக்கிறார்கள் //

இப்படித்தான் அனைவரையும் வம்புக்கு இழுக்கிறீர்கள்;ஒருவருடைய பெயரை வைத்தே கணித்து அதற்கேற்ற மறுமொழி இடுவதை நிறுத்துங்கள்;

நான் இயேசுகிறிஸ்துவைக் குறித்து எதுவும் சொல்லவில்லை என்றே எண்ணுகிறேன்;இந்த கட்டுரைக்கும் அந்த ஆராய்ச்சி தேவையில்லாதது;

இறைசக்தியைக் குறிததே இன்னும் ஒரு முடிவுக்கு வராத போது இயேசுகிறிஸ்துவைக் குறித்து என்ன அவசரம்..?

இந்துக்களுக்கென்று தனிக் கொள்கையும் கட்டுப்பாடும் எதுவுமில்லாததால் எல்லோருடனும் ஒத்துப்போகிறார்கள்;ஆனால் இந்தியாவின் கௌரவமான சமுதாயமான சீக்கிய சமுதாயம் மற்ற எந்த விக்கிரகங்களையாவது வழிபட்டதுண்டா என்பதே எனது ஆராய்ச்சி..!

அன்பு ச‌கோத‌ர‌ர் கிலாடி அவ‌ர்க‌ளே,

யாருடைய‌ பெய‌ரையும் வைத்து நான் க‌ணிக்க‌வில்லையே, அத‌ற்க்கு ஏற்றார் போல‌ ம‌றுமொழியும் இட‌வில்லையே. இங்கே ச‌கோத‌ர‌ர் ம‌ணிய‌ன் அவ‌ர்க‌ள் இயேசு கிற்ஸ்துவை போற்றி எழுதி இருக்கிறார், அதை ஒரு உதார‌ண‌மாக் காட்ட‌வே மேற்கோள் காட்டினேன்.

நீங்க‌ள் இயேசு கிறி ஸ்துவை மேற்கோள் காட்டினீர்க‌ள் என்று நான் கூற‌வில்லையே. இயேசு கிறிஸ்து நாக‌ரீக‌ க‌ருத்துக்க‌ளைக் கூறிய‌வ‌ர், விட்டுக் கொடுத்து செல்லும் ச‌ம‌ர‌ச‌ க‌ருத்துக்க‌ளை, ஒருவ‌ர் உன்னை ஒரு மைல் தூர‌ம் வ‌ர‌ச் சொன்னால் , இர‌ண்டு மைல் தூர‌ம் போ என்னும் ப‌டியான‌ க‌ருத்துக்க‌ளை ப‌ர‌ப்பிய‌வ‌ர், அதைப் போல‌வே எல்லொருட‌னும் ச‌ம‌ர‌ச‌ப் போக்கை வ‌ள‌ர்க்க‌ விரும்பும் நாங்க‌ள் அவ‌ரைப் ப‌ற்றிக் குறிப்பிட்டால் உங்க‌ளுக்கு ஆட்சேப‌ம் வ‌ருவ‌து ஏன்?

இந்தியாவின் கௌரவமான சமுதாயமான சீக்கிய சமுதாயம், அவ‌ர்க‌ள் பிற‌ மார்க்க‌த்தின‌ர் தெய்வ‌மாக‌ வ‌ண‌ங்குப‌வ‌ரை இழிவு செய்து பேச‌வில்லையே, தீய‌ ச‌க்திக‌ள், பேய் என‌ பிர‌ச்சார‌ம் செய்ய‌வில்லையே? பிற‌ மார்க்க‌த்தின‌ர் தெய்வ‌மாக‌ வ‌ண‌ங்குப‌வ‌ரை இழிவு செய்யாம‌ல் இருந்தால் போதுமே! காழ்ப்புண‌ர்ச்சி இல்லாம‌ல் இருந்தால் போறுமே!அதைத்தானே ப‌ல‌ பின்னூட்ட‌ங்க‌ளிலும் ப‌ல‌ரும் எழுதி வ‌ருகின்ற‌ன‌ர்.

நான் யாரையும் வ‌ம்புக்கு இழுக்க‌வில்லையே, ஆனாலும் நான் வ‌ம்புக்கு இழுப்ப‌தாக‌ எழுதுகிறீர்க‌ளே, எனினும் நான் உங்க‌ளை ஒன்றும் சொல்ல‌வில்லை, மறு க‌ன்ன‌த்தையும் காட்டுகிறேன்!

நண்பர் Glady அவர்களே:
//இந்துக்களுக்கென்று தனிக் கொள்கையும் கட்டுப்பாடும் எதுவுமில்லாததால் எல்லோருடனும் ஒத்துப்போகிறார்கள்//
தவறு நண்பரே.. மிகத் தவறு. எங்களுக்கு என்று கொள்கை, கோட்பாடுகள் எல்லாமே இருக்கின்றன.
ஆனால் நிர்ப்பந்தங்கள் தான் இல்லை. எங்கள் வேதங்கள் சொல்லும் போதனைகள் எல்லாமே ஒரு நண்பனுக்கு சொல்வதைப் போலத்தான். “எங்கள் காதுகள் நல்லதையே கேட்கட்டும்.” என்று தான் அவை துவங்குகின்றன. நீங்களும் இன்னும் இருக்கும் மற்றவர்களுக்கும் எங்கள் கோட்பாடுகளைப் பற்றி என்ன என்ன சந்தேகங்கள் ஏற்படுமோ அவை எல்லாவற்றையும் எங்கள் உபநிடதங்கள் தாங்களே கேள்விகளாக எழுப்பி பதில்களையும் தருகின்றன. அதனால் தான் இந்த மண்ணே ஞான பூமி என்று
போற்றப் படுகிறது. இங்கு நின்றுகொண்டு எங்களையே கட்டுப்பாடு எதுவும் இல்லாதவர்கள் என்று நீங்கள் பேசுவதுதான் நல்லிணக்கத்துக்கு வைக்கப் படும் வேட்டாக இருக்கிறது.
“ladies and gentlemen ” என்று பிரசங்கங்களை ஆரம்பித்துக் கொண்டிருந்த நீங்கள் இன்று “BROTHERS AND SISTERS ” என்று துவக்குகிறீர்கள் என்றால் அதை உங்களுக்கு கற்றுக்கொடுத்தவரே ஒரு இந்துமதத் துறவி தான். எங்கள் கட்டுப்பாட்டுக்கு இதை விட வேறு என்ன சார் சான்று வேண்டும்.
//இந்தியாவின் கௌரவமான சமுதாயமான சீக்கிய சமுதாயம்// என்று சொல்லி இருக்கிறீர்கள். ஒரு சிறு திருத்தம். “இந்தியாவில் உள்ள கௌரவமான சமுதாயங்களுள் ஒன்றான சீக்கிய சமுதாயம்” என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட பரந்த மனம் உங்களுக்கு இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியமைக்கு நன்றி.
சீக்கிய சகோதரர்கள் விக்கிரக ஆராதனை செய்வதுண்டா என்பது “ஆராய்ச்சிக்குரிய” விஷயமாக உங்களுக்கு தோன்றுகிறது. ஒவ்வொரு சமயத்தவருக்கும் ஒவ்வொரு வழிமுறைகள். அதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். இதில் எல்லாம் “அவங்க ஏன் செய்யவில்லை?” என்று ஆராய்ச்சி செய்து அவர்களை உங்களுடன் சேர்த்துக்கொண்டு “பார்த்தீங்களா இவங்களும் எங்க கட்சிதான்” என்று ஆதரவு தேடவேண்டிய அவசியம் உங்களுக்கு தான் இருக்கிறது. எங்களுக்கு அது கிடையாது.
ஆகவே அவர்கள் வழியை அவர்களிடமே விட்டுவிட்டு அதன் மூலம் அவர்கள் இறை அருளை அடைகிறார்கள் என்றால் அதில் மகிழ்ச்சி கொண்டவர்களாக எங்கள் பாதையில் நாங்கள் பயணித்துக்கொண்டு இருக்கிறோம்.
மீண்டும் சொல்கிறேன். உங்கள் வருகைக்கு முன்பே சிந்து சமவெளியில் நாகரீகம் கண்டவர்கள் நாங்கள்.
இறை அருளை பெறுவதில் எங்களுடன் “இணைந்து” (சேர்ந்து அல்ல… இணையாக நடந்து..) பயணம் செய்யுங்கள்..
உங்கள் பாதையில் தான்.
– அன்புடன் மணியன்.

வணக்கம் நண்பர்களே,
எதார்த்தமாக தமிழ் ஹிந்து தலத்தில் இருந்து, திருச்சிக்காரனின் பின்னூட்டத்தை பார்க்க, சொடுக்கினால் இங்க கொண்டு வந்து விட்டது. தனியே தளம் துவங்கியதற்கு நன்றி நண்பரே. அதுவும், இந்த தலைப்பு நன்றாக உள்ளது.
நம் நாட்டில், பலர் தங்களை ஆத்திகர்களாயும், நாத்திகர்களாயும் காட்டிகொண்டாலும் பெரும்பான்மையோர் Agnostics என்று சொல்லகூடிய சந்தேக நிலையிலேயே, ஒரு முடிவுக்கு வராத நிலையிலேயேதான் உள்ளனர்.
தன்னை ஒரு Agnostic என்று வகைப்படுத்திக்கொள்ள நிறையே பேருக்கு தெரிவதில்லை அல்லது எதற்கு வம்பு என்று ஏதோ ஒரு பெரும்பான்யான கூட்டத்தில் சேர்ந்து கொள்கிறார்கள்.
அண்ணன் திருச்சிக்காரனின் துணிவை பாராட்டுகிறேன். எதையும் கேள்வி கேட்க ஒரு தைரியம் வேண்டும். அது திருச்சிக்காரனுக்கு இருப்பதாக நம்புகிறேன். ஆனால் ஆராய, மிகுந்த பொறுமையும், திறந்த மனநிலையும் வேண்டும். அதுவும் திருச்சிக்காரனுக்கு இருக்கவேண்டும்.
பின்னூடங்கள் சுவாரசியமாயும், அதிகமாகவும் இருப்பதால், அவற்றையெல்லாம் படித்துவிட்டு பிறகு எழுதுகிறேன்.
வணக்கம்,
தமிழன்

Dear Mr. tamizhan,

Welcome to our blog. Kindly consider this as your blog and feel free to post your opinions.

I appreciate your knoweledge in philosophyas can differentiate between, athiest, theist and agnostic. However I think that my aim is to seek the truth, rather being an absolute agnostic.

Kindly read this article as well.

https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/16/rationalism/

I thank you for your visit and appreciation.

கிளாடி: // சீக்கியரும் கூட இந்துக்களுடன் ஒத்துப்போகாமல் வேறு ஏதோ ஒன்றுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார்கள்; இதனால் இந்துக்களின் மனம் புண்படுகிறது..! //

திருச்சிக்காரன்:
// திரு.கிளாடி அவர்களே,
இந்துக்களுடன் ஒத்துப் போக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. பல இந்துக்கள் இயேசு கிறிஸ்துவை போற்றி ஒத்துப் போக தயாராக இருக்கிறார்கள் //

பெரும்பான்மை இந்துக்களை சிறுபான்மையினரான இஸ்லாமியரும் கிறித்தவரும் சீக்கியரும் விட்டு ஒதுங்க என்ன காரணம் என்பதே எனது கேள்வி;

கிளாடி:
// இப்படித்தான் அனைவரையும் வம்புக்கு இழுக்கிறீர்கள்;ஒருவருடைய பெயரை வைத்தே கணித்து அதற்கேற்ற மறுமொழி இடுவதை நிறுத்துங்கள்; //

திருச்சிக்காரன்:
// யாருடைய‌ பெய‌ரையும் வைத்து நான் க‌ணிக்க‌வில்லையே, அத‌ற்க்கு ஏற்றார் போல‌ ம‌றுமொழியும் இட‌வில்லையே. இங்கே ச‌கோத‌ர‌ர் ம‌ணிய‌ன் அவ‌ர்க‌ள் இயேசு கிற்ஸ்துவை போற்றி எழுதி இருக்கிறார், அதை ஒரு உதார‌ண‌மாக் காட்ட‌வே மேற்கோள் காட்டினேன். //

அன்பு சகோதரர் அவர்களே,மேற்கண்ட நமது உரையாடலைச்
சற்று ஒப்பிட்டுப் பாருங்கள்;பெலவீனமான ஒரு வாதத்தை நடத்திக் கொண்டிருப்பது உங்களுக்கே தெரியவரும்;

இந்து சீக்கிய பார்வையையும் இந்து முஸ்லீம் பார்வையையும் முன்வைத்ததற்கு நீங்கள் தேவையில்லாமல் கிறித்தவத்தையே சம்பந்தப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்கிறேன்;எனக்காகச் சொன்னதொரு பதிலையே மறுக்குமளவுக்கு உங்கள் தராசு தடுமாறுகிறது;

திருச்சிக்காரன்:
// இந்துக்களுடன் ஒத்துப்போகவேண்டுமென்று சொல்லவில்லை;இந்துக்கள் கிறிஸ்துவுடன் ஒத்துப்போகிறார்கள் //

எத்தனை முரண்பாடானதொரு வாதம்,
உங்களுக்கு சுற்றி சுற்றி வந்து கிறித்தவத்தையும் இஸ்லாத்தையும் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கவேண்டும்,அப்படித்தானே?

திருச்சிக்காரன்:
// இசுலாமிய சமூக நண்பர்கள் பிற மார்க்கத்தின் தெய்வங்களைக் குறிப்பிட்டு அவைகளை இழிவு செய்வதை தவிர்க்கின்றனர் //

இழிவு செய்கிறார்களோ, இல்லையோ ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வெளிப்படையானதுதானே?

ஒரு இஸ்லாமிய தொழுகை ஸ்தலத்தில் மந்திரிக்கவென ஒரு
இந்து செல்வதுண்டு (ஓதுமிடத்து நாற்ற வாயால் ஊதிக் கொள்வதற்கு..!) ஆனால் அதே இஸ்லாமியர் எந்த ஆலய கோபுரத்தையும் பார்த்து “முத்தி” போட்டு நான் பார்க்கவில்லை;

அதுபோலவே சீக்கியரும் கங்கையைப் புனிதமாகக் கருதி அதில் மூழ்குவதில்லை;

இவர்களைப் போலவே கிறித்தவரும்..!

இந்த மறுப்புக் குழுக்களிடத்தில் நீங்கள் விசாரித்துப் பாருங்கள், உங்களுக்கு சரியான பதில் கிடைக்கும்;அது நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் “வெறுப்புக் கருத்தாகவே” இருக்கும்;அதை ஆழமாகப் பதிய வைக்கச் சொல்லும் ஆதாரமோ “காழ்ப்புணர்ச்சியினால்” சொல்லுவது போலிருக்கும்;

இந்த “காழ்ப்புணர்ச்சி” என்ற வார்த்தையை எங்கே பிடித்தீர்களோ,அதன் பொருள் உணர்ந்தே குறிப்பிடுகிறீர்களோ தெரியவில்லை;ஆனாலும் அந்த வார்த்தை அத்தனைப் பொருத்தமானதாகத் தெரியவில்லை;

காழ்ப்புணர்ச்சியுடன் இணைந்த ஒரு சொல்லானது “பொறாமை” என்பதாக இருக்கலாம்;அப்படியானால் யார் மீது யாருக்குப் பொறாமை;ஏன்,எதற்கு?

என்னைப் பொருத்தவரை ஒரு இந்து தெய்வத்துக்குத் தொண்டாற்றி பெயர் புகழடைவதே எளிதானது;இங்கே போட்டி பொறாமை எதுவுமில்லை;எங்கு வேண்டுமானாலும் கோவில் கட்டலாம்;கொஞ்சம் சாமர்த்தியமிருந்தால் உடுக்கை அடித்து குறி சொல்லி பிழைப்பு நடத்தலாம்;

பரந்து விரிந்த இந்தியாவில் பெரும்பான்மை சமூகத்தில் இருப்பதால் தாழ்த்தப்பட்டவர் என்ற அங்கீகாரத்தை எளிதில் பெற்று கல்வி வேலைவாய்ப்பு சலுகைகளையும் இனிதே பெற்று அனுபவிக்கலாம்;

இதையெல்லாம் விட்டு விட்டு குடும்பத்தாரையும் சொந்தங்களையும் ஊராரையும் விரோதித்துக் கொண்டு ஏன் என்னைப் போன்ற சகோதரிகள் வெளியேறி வந்தனர் என்று கேளுங்கள்;

ஆம்,நான் ஒரு பெண்ணாக சந்தித்த அனுபவங்களை இங்கே எழுத எனக்கு விருப்பமில்லை; நீங்களெல்லாம் “அப்பாவி”களாக இருக்கலாம்; ஆனால் நான் “அடப்பாவி”களையும் “படுபாவி”களையும் சந்தித்திருக்கிறேன்;

அதுபோன்ற துஷ்டர்களுக்காக நீங்கள் வக்காலத்து வாங்குவதை நினைத்து பரிதாபப்படுகிறேன்; இன்னும் சிலருடைய சுயரூபம் தெரியாததால் மறைப்பு கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்;(நான் ராமனையும் கிருஷ்ணனையும் சேர்த்தே சொல்லுகிறேன்..!)

மணியன்:
// ஈஸ்வரன் கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலுக்கு அர்த்த ஜாம பூஜைக்கான கட்டளை இஸ்லாமிய சகோதரர்களால்…

மன்றோ துரை அவர்கள் மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு…

பத்ராசலம் ராமர் ஆலயத்துக்கு நவாப் அளித்த காணிக்கைகளும்…

மகான் ராகவேந்திரர் “பிருந்தாவனம்” எழுப்ப காணிக்கையாக அளித்த இஸ்லாமிய நவாபின் எழுத்துப்பூர்வமான ஆதாரம்… //

அதுமட்டுமா,ஜெயலலிதா ரம்ஜான் கஞ்சி குடித்ததையும் எழுதியிருக்கலாமே..!

சார்,இதேபோன்ற தரும காரியங்களை ஆங்கிலேயரும் செய்தனர்;அப்படியானால் அவர்களெல்லாரும் புனிதர்களா?

ஒரு குறிப்பிட்ட இனத்தை ஆக்கிரமித்து ஆளுவதே பாவமென்றால் “அண்டை வீட்டு நெய்யாம்,என் பொண்டாட்டி கையாம்” என்பது போல நம்மிடமே பறித்து நமக்கே கொடுத்தால் அதை வாங்கியது எத்தனை கேவலம்..?

இதைப் போய் வெட்கமில்லாமல் பெருமையாகக் குறிப்பிடுகிறீர்களே..!

இன்றைக்கும் சரி அன்றைக்கும் சரி வாழ்வியல் தேவைகளுக்காக சமரசம் செய்துக் கொண்டு போவது ஒத்துப்போவதாகாது;

திருப்பதியில் முறைப்படி ஏலத்தில் லட்டு காண்டிராக்ட் எடுத்தவர் மீது மோசடி புகார் எழுந்ததே;அப்போது எங்கே போனது உங்கள் மத நல்லிணக்கம்?

அவர் கிறித்தவர் மோசடியாக லட்டு காண்டிராக்ட் பெற்றுவிட்டார்;இந்து மாத்திரம் நேர்மையாக அனைத்தையும் செய்கிறாரா?

ஏன்,பூஜாரிகளே திருட்டுப் புகாரில் சிக்கவில்லையா?

//“BROTHERS AND SISTERS ” //
என்ற சொல்லாட்சி புனித பைபிளிலிருந்தே பெறப்பட்டு உலகமெங்கும் பரவியது;மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து கிறித்தவம் வரவில்லை;கீழ்த்திசை மார்க்கமான அது மேற்கில் புகழ்பெற்று அங்கிருந்து இங்கு வந்தது;

இங்கே எல்லாமே “ஸ்வாமி” என்பது தானே;ஆனால் விவேகானந்தரோ கிறித்தவக் கருத்துக்களால் அதிகம் கவரப்பட்டு ஆனாலும் மதம் மாறி தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பாமல் தனித்தன்மையுடன் செயல்பட்டு புகழ்பெற்றார்;

// “இந்தியாவில் உள்ள கௌரவமான சமுதாயங்களுள் ஒன்றான சீக்கிய சமுதாயம்” //

ஓஹோ,சீக்கியருக்கு இணையான கௌரவமான ஒரு சமுதாயத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்;

மார்வாடிகளைச் சொல்லலாமா?

போங்க சார், வீரத்துக்கும் உழைப்புக்கும் நேர்மைக்கும் தேசபக்திக்கும் அவனுக்கு (சீக்கியருக்கு) இணை யாருமில்லை என்று நான் சொல்லுகிறேன்;கண்டிப்பாக மற்றொரு சமுதாயத்தைச் சொல்லமுடியுமானால் அது தமிழன் தான்..!

அவனையும் பிரித்துக் கூறுபோட்டு விட்டார்களே,போகட்டும்;

// சிந்து சமவெளியில் நாகரீகம் கண்டவர்கள் நாங்கள் //

அது ஒரு பெரிய சப்ஜெக்ட்,அதை இப்போது தொடவேண்டாம்;அங்கே நீங்கள் நிகழ்த்திய கொடூரத்தை இன்றைக்கு வரலாறு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது;

ஒரு இனத்தையே பூண்டோடு அழித்து தனதாக்கிக் கொண்டதில் என்ன பெருமை?

அவனுடைய எழுத்து இருந்தும் அதைப் படித்துச் சொல்ல ஒருவனையும் நீங்கள் விட்டு வைக்கவில்லையே;

அந்த பதட்டத்தால்தான் எல்லோரையும் பார்த்து மிரளுகிறீர்கள்; ஆக்கிரமித்தவனுக்கு தானே அதன் முழு கொடூரமும் தெரியும்?

“ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம்” அதுபோல சிந்துசமவெளி மக்களை அழித்து அவர்கள் கலாச்சாரத்தைத் திருடிய உங்களுக்கு அவர்கள் எழுத்தை மட்டும் படிக்கத் தெரியாமல் அது பொம்மை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே;

//பெரும்பான்மை இந்துக்களை சிறுபான்மையினரான இஸ்லாமியரும் கிறித்தவரும் சீக்கியரும் விட்டு ஒதுங்க என்ன காரணம் என்பதே எனது கேள்வி;//

சன்னி என்ற பெயருடைய பஞ்சாபி நண்பரிடம் இதைக் கேட்டேன். “முன்பு பஞ்சாபி குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஒரு ஆணை சீக்கியராகவும் , இன்னொரு ஆணை இந்துவாகவும் வளர்ப்பார்கள் “என்று கூறி என்னைப் பார்த்து அன்புடன் சிரித்தார், “இந்துக்களும் சீக்கியர்களும் சகோதர்கள்”.

சீக்கியர்கள் இந்துக்களை விட்டு ஒதுங்கவில்லை.

மத வெறி இல்லாத இசுலாமியரும், கிறிஸ்தவர்களும் இந்துக்களை விட்டு ஒதுங்கவில்லை.

மனதிலே மத வெறியை நீக்கி விட்டால் ஒன்றாக கலக்கலாம்.

நண்பர் திருச்சிக்காரன்,
உங்கள் கட்டுரையை பார்க்கும் போது. மனித சமுதாயம் இதுவரை செய்த ஆராய்ச்சிகள், அதன் அனுபவங்கள், பலர் கண்டு சொன்ன முடிவுகள் அனைத்தையும் தள்ளுபடி செய்துவிட்டு. புதிதாக தொடங்குவோம் என்று சொல்லுகிறீர்களா?

//அவர்க‌ள் கூறும் க‌ருத்துக்க‌க‌ளில் எவ்வ‌ள்வு தூர‌ம் உண்மை இருக்க‌ முடியும், ம‌னித‌ நாக‌ரீக‌த்துக்கு உத‌வும் க‌ருத்துக்க‌ள் அவ‌ற்றில் உள்ளன‌வா என்ப‌தையும் நாம் ஆராய்கிரோம்.//
ஒரு கருத்து உண்மையானதாகவும், அதே சமயம் நாம் நாகரீகம் என்று நினைத்துக்கொண்டிருப்பதற்க்கு எதிராகவும் இருக்க கூடாதா?

//ந‌ல்லிண‌க்க‌ அடிப்ப‌டையிலே அவ‌ர்க‌ளுடைய‌ வ‌ழிபாட்டிலே, விழாக்க‌ளிலே க‌ல‌ந்து கொண்டு ச‌கிப்புத் த‌ன்மை, ச‌க‌ஜ‌த் த‌ன்மை ஆகிய‌ நாக‌ரீக‌க் க‌ருத்துக்க‌ளை வ‌ள‌ர்க்க‌வும் நாம் த‌யார் என்ப‌தையும் நாம் கூறி விட்டோம்.//
வழிபாடு என்பது சமூக நல்லினக்கதிர்க்க அல்லது பக்தியின் வெளிப்பாடா?

முகமது கடைசி தூதராக இருக்க கூடாதா?
ஏசுவே மனிதனாக வந்த தேவனாக இருக்க கூடாதா? அல்லது அவர் சாதாரண மாநிதராகதான் இருக்க கூடாதா?
அனைத்து மார்க்கமும் மெய்யானதாக இருக்கத்தான் வேண்டுமா? சிலது பொய்யானதாகவும் இருக்கலாம் அல்லவே.

எந்த ஒரு மனிதனின் கூற்றையும் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று பார்க்காமல், அதில் உள்ள உணர்வை பார்ப்பது ஆராய்ச்சிக்கு உதவாது. பாரத யுத்தத்தில் ரத்த ஆறு ஓடும் என்று தெரிந்தாலும் அது நடந்த நோக்கம் கண்டு நாம் அதை ஒத்துக்கொள்கிறோம். உங்கள் ஆராய்ச்சியின் முடிவில் உண்மை புலனாகி, அதனால் ரத்த ஆறு ஓட நேர்தால் என்ன செய்வீர்கள் (எல்லோராலும் எல்லாவற்றையும் ஒத்துக்கொள்ள முடியாதே)? உண்மையை மறைத்து வைப்பீர்களா?
ஒரு உண்மை வெளிப்படும்போது, அங்கே கலகம் நிகழ்வது இயற்க்கை. அதனால்தானோ என்னோவோ நாரத முனிவரை கலகக்காரன் என்று கூறுகிறார்கள். என்ன செய்வது, உண்மை சுடுகிறது, கசக்கிறது.
//ப‌குத்த‌றிவு அடிப்ப‌டையிலே செய‌ல் ப‌ட்டால் மோத‌ல் வ‌ர‌ வாய்ப்பு இல்லை.//
இதை நம்ப நான் தயாரில்லை. உலகம் உருண்டை என்று சொன்னவர் கதை நினைவிருக்கா?
நண்பர் அசோக்கையும், சில்சாமையும் நான் முன்னமே பார்த்திருக்கேன். வாழ்த்துக்கள் நண்பர்களே, உங்களுடன் நானும் இதில் பங்கு கொள்கிறேன்.
அசதியாயுள்ளது நாளை பார்க்கலாம்,
தமிழன்

சகோதரர் தமிழன்,

எல்லோரும் சொன்னது தவறு என்று நான் சொல்லவில்லை.

ஒவ்வொரு கருத்தையும் ஆராய்ந்து அந்தக் கருத்தில் எவ்வளவு நன்மை உண்டு, எவ்வளவு உண்மை உண்டு என்று பார்த்து, நன்மை இருந்தால் உண்மை இருந்தால் ஏற்றுக் கொள்கிறோம். எந்தக் கருத்தையும் ஆராயமால் நிராகரிக்கவில்லை.

உலகம் உருண்டை என்று சொன்னவர்களை நெருப்பிலேபோட்டு கொளுத்தினார்கள். சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்தார்கள். உண்மையை சொன்னவர்கள் அழிக்கப் பட்டனர். உண்மையை அழிக்க முடியாது.

எங்களால் இரத்த ஆறு வராது, மக்கள் மனதில் இருக்கும் வெறுப்பும், குரோதமும் களையப் பட்டு மனிதர்களின் மீது அன்பு பிறக்கும். அதனால் இரத்தாறு எப்படி உருவாகும்?

வழி பாடு என்பது நம்பிக்கையாளர்களுக்கு பக்தி. மனிதர்களை நேசிப்பவர்கள் சமரசத்தைக் காட்ட வழி பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். இது ஜெயாவைப் போல, கருணாநிதி போல வோட்டு வாங்க அல்ல. உண்மையான நல்லிணக்கத்தைக் காட்ட. ஒரு முசுலீம் அல்லது இந்து ஒரு கிறிஸ்தவ நண்பருடன் ஒரு சர்சிசில் வழிப்பாடு செய்யக் கலந்து கொண்டால், அந்த மன நிலை அவனுக்கு வருமானால், அவன் மனதில் கிறிஸ்துவத்தின் மீது வெறுப்புக் கருத்து வராது . சமூக நல்லிணக்கம் வரும். இது தவறா? மார்க்கங்களுக்கிடையில் ஒற்றுமை வந்தால் சுமூகம் உருவானால் அது தவறா?

Dear Brother Thamilan,

//ப‌குத்த‌றிவு அடிப்ப‌டையிலே செய‌ல் ப‌ட்டால் மோத‌ல் வ‌ர‌ வாய்ப்பு இல்லை.//
இதை நம்ப நான் தயாரில்லை. //

நம்ப வேண்டாம் , சிந்தித்துப் பாருங்கள்.

ப‌குத்த‌றிவு அடிப்ப‌டையிலே செய‌ல் ப‌ட்டால் மோத‌ல் வ‌ர‌ வாய்ப்பு இல்லை. உதார‌ணமாக‌ ஒருவ‌ர் “மின் மாற்றியின் முத‌ன்மை க‌ம்பிச் சுருளில் நேர் மின் அழுத்த‌த்தை செலுத்தினால், இரண்டாம் க‌ம்பிச் சுருளில் எந்த‌ வித‌மான‌ மின் அழுத்த‌மும் இருக்காது” என்கிற‌ க‌ருத்தை சொல்கிறார். இன்னொருவ‌ருக்கு அந்த‌க் க‌ருத்தில் ஒப்புத‌ல் இல்லை என்றால் வாளை உருவிக் கொண்டு போராட‌ வேண்டிய‌தில்லை. ஒரு மின் மாற்றியை எடுத்து அத‌ன் பிரைம‌ரி காயிலில் நேர் மின் அழுத்த‌த்தை செலுத்தி செக‌ண்ட‌ரி காயிலில் ஏதாவ‌து வோல்டேஜ் கிடைக்கிர‌தா என்ப‌தை ச‌ரி பார்த்துக் கொள்ள‌லாம். எது உண்மையோ அதை எல்லோரும் ஒத்துக் கொள்ள‌லாம்.

ஆனால் வெறும் ந‌ம்பிக்கை அடிப்ப‌டையில் செய‌ல் ப‌டும் போது, ச‌ரி பார்ப்ப‌த‌ற்க்கு வாய்ப்புக‌ள் இல்லாத‌ போது, ந‌ம்பிக்கையை அழுத்தி திணித்து மோத‌ல் உருவாக‌ கார‌ண‌மாக‌ இல்லாம‌ல் அமைதியாக‌ வ‌ழி ப‌டுங்க‌ள் என்று தான் சொல்கிரோம்.

//நன்மை இருந்தால் உண்மை இருந்தால் ஏற்றுக் கொள்கிறோம். எந்தக் கருத்தையும் ஆராயமால் நிராகரிக்கவில்லை. //
நன்மை என்பது relative . உங்களுக்கு நன்மையாக தோன்றுவது இன்னொருவருக்கு தீமையாக தோன்றும். ஆனால் உண்மை அப்படி அல்ல. அது absolute .
மேலும், கடவுளை கண்டதாக பல மார்க்கங்களை சேர்தவர்கள் அந்தந்த புனித(??) நூல்களில் எழுதியுள்ளனர். யாருமே கடவுளை பார்த்ததில்லை என்று நீங்கள் கூறுவது, அந்தந்த புனிதர்கள்(??) கூறுவது பொய் என்று சொல்லுவதற்கு சமம்தானே?

//ப‌குத்த‌றிவு அடிப்ப‌டையிலே செய‌ல் ப‌ட்டால் மோத‌ல் வ‌ர‌ வாய்ப்பு இல்லை. உதார‌ணமாக‌ ஒருவ‌ர் “மின் மாற்றியின் முத‌ன்மை க‌ம்பிச் சுருளில் நேர் மின் அழுத்த‌த்தை செலுத்தினால், இரண்டாம் க‌ம்பிச் சுருளில் எந்த‌ வித‌மான‌ மின் அழுத்த‌மும் இருக்காது” என்கிற‌ க‌ருத்தை சொல்கிறார். //
முரட்டு உலகம்மையா இது. உலகம் உருண்டைன்னு சொன்னவனுக்கு நிரூபிக்க முடியாமலா இருந்தது? புதிய கருத்துக்கள் உண்மையா இருந்தாலும் ஏற்றுக்கொள்ள படாது.
எத்தனை கணவர்கள், தனக்கு ஆண்மை குறைவு என்று பரிசோதனைக்கு தயாராயிருக்கிறார்கள்? பரிசோதனை செய்தால் உண்மை நிலவரம் தெரியும், ஆனால் பரிசோதனைக்கு உட்படாமல், தன் மனைவி மலடி என்று பட்டம் கட்டுவார்கள். பகுத்தறிவு சொல்பவன், கேட்பவன், இரண்டு பேருக்கும் இருந்தால்தான் பயன். தன் ஆண்மை குறைவு வெளியே தெரியகூடாது என்று மனைவி கொன்றவர்கள் போல், தன் இஷ்ட தெய்வத்தை, தெய்வம் இல்லை என்றோ, தெய்வமே இல்லை என்றோ நீங்களோ நானோ நிரூபித்தால், அதை வணங்குபவன் அதை மறுக்க / மறைக்க என்ன வேண்டுமானாலும் செய்வான்.

//சமூக நல்லிணக்கம் வரும். இது தவறா? மார்க்கங்களுக்கிடையில் ஒற்றுமை வந்தால் சுமூகம் உருவானால் அது தவறா?//
சமூக நல்லிணக்கம் ஒரு நல்ல விஷயம். ஆனால், அது உண்மையின் அடிப்படையில் வந்தால் மட்டுமே நிலைக்கும். சமூக நல்லிணக்கத்துக்காக உண்மையை தியாகம் செய்தால், அது அஸ்திவாரமில்லாத கட்டிடம் போல இருக்கும்.
நீங்கள் பல மார்க்கங்களை கற்றவர், உங்களுக்கு தெரியாததா…
ராமனை, தெய்வம் என்று கூறினால். ஒரே தேவன் என்ற கொள்கை கொண்ட கிறிஸ்துவனும், இஸ்லாமியனும் ஒத்துக்கொள்வார்களா? அதெப்படி, அவர்கள் ஒன்றாய் வழிபாடு செய்வார்கள்?
கிறிஸ்துவர்களின் வேதமே, அவர்கள் தேவனை தவிர, மற்றவைகள் எல்லாம் பிசாசு என்று சொல்லுகிறது. சர்ச்க்கு செல்லும் இந்து இதை கேட்டால், ஒன்று அவன் கிறிஸ்துவன் ஆவான், இல்லை சண்டை பிடிப்பான். எந்த ஒரு projectஐ செய்யும் போதும் அது சாத்தியம்தானா (feasibility study ) என்று பார்க்கவேண்டும். அதை விடுத்து ஆடும் ஓநாயும் கூடி குலாவ வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது பகுத்தறிவல்ல.
கொள்கைபிடிப்புள்ள ஒரு முஸ்லிம், கிறிஸ்துவன், இந்து, இவர்கள் யாரும் ஒன்றாய் வழிபட முடியாது. இதை நான் காட்டுமிராண்டித்தனம் என்று கூறமாட்டேன்.
இந்த தளத்தை பார்க்கும் யாருடனாவது சேர்ந்து நீங்கள் வழிபாடு செய்ய போனால், நம்ம நல்லிணக்கத்தை ஏதாவது ஒரு பார்டியில் வைத்துக்கொள்ளலாம், இப்போது என் பக்தியில் குறுக்கிடாதே என்பான். ஏனென்றால் நீங்கள் பக்தியில் அந்த வழிபாடிற்கு வரவில்லை என்பது அவனுக்கு தெரியும்.

//மனதிலே மத வெறியை நீக்கி விட்டால் ஒன்றாக கலக்கலாம்.//
communisam போன்ற விஷயங்கள் அதை முயற்சி செய்தது, அவை வெற்றி பெற்றதா?
சற்று அலுவலை பார்த்து விட்டு மீண்டும் எழுதுவேன்,
தமிழன்

Dear Brother Tamizahan,

//communisam போன்ற விஷயங்கள் அதை முயற்சி செய்தது, அவை வெற்றி பெற்றதா?//

Communists banned all religious practices. But We dont ban religious practices, we only request not to insult the Gods worshipped by others.

//கிறிஸ்துவர்களின் வேதமே, அவர்கள் தேவனை தவிர, மற்றவைகள் எல்லாம் பிசாசு என்று சொல்லுகிறது. சர்ச்க்கு செல்லும் இந்து இதை கேட்டால், ஒன்று அவன் கிறிஸ்துவன் ஆவான், இல்லை சண்டை பிடிப்பான். //

இயேசு கிறிஸ்து, பிற மார்க்கத்தினர் கடவுள்களாக வணங்குபவர்களை, திட்ட சொல்லவில்லையே! ஆனால் “கிறிஸ்தவர்கள்” (எனக் கூறிக் கொள்பவர்கள்) அதைதான் முக்கியமாக கற்பித்தும் செய்தும் வருகிறார்களே. வெறுப்பு பிரச்சாரதால் சமூகங்களுக்கு இடையிலே சண்டை வந்து பலர் கொல்லப் பட்டாலும் பரவாயில்லை என்கிறார்களே, இது கிறிஸ்து சொல்லிக் குடுத்ததா?
கிறிச்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் தான் அதிக கவனம் செலுத்தினார். இவர்கள் யாரை வணங்க வேண்டும், யாரை பேய் என்று திட்ட வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள்.

இறைவன் இருக்கிறான் என்று நம்பிக் கொண்டு, அமைதியாக வழிபாடு செய்வதை நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால் வெறும் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு செயல் படும் போது அடுத்தவருக்கு பிரச்சினை தராமல், சமூகத்திற்க்கு தீங்கு விளைவிக்காமல், அமைதியாக வழி படுவதே சிறப்பு.

ஆனால் பிறர் தெய்வங்களாக வழிபடுபவரை, நான் தீய சக்தி என்று சொல்லுவேன், பேய் பிசாசு என்று திட்டுவேன், அதனால் மக்கள் சண்டை போட்டு மடிந்தாலும் சரி என்றால் – அவ்வளவு அத்தாரிட்டியாக, அதிகாரமாக,ஆணித்தரமாக சொல்லுவதென்றால் அதற்க்கான நிரூபணத்தை, ஆதாரத்தை கொடு. உன் கடவுளைக் காட்டு, அவருக்கு சக்தி இருக்கிரதா என்பதைக் காட்டு, அது நல்ல சக்தியோ, தீய சக்தியோ – முதலில் அந்த சக்தியைக் காட்டி விட்டு, அப்புறம் அத்தனை ஆர்பாட்டம், அடுத்தவர் கடவுளாக வணங்குபவரை திட்டும் உரிமை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்” என்றே நாம் அவருக்கு சொல்லுவோம்.

அன்புச் சகோதரி கிளாடி அவர்களுக்கு:

வணக்கம். உங்கள் பதிவூட்டம் பார்த்தேன். அப்பப்பா.. பொரிந்து தள்ளி இருக்கிறீர்கள். வேகம் அதிகமாக இருக்கிறது.. எனது பதிலில் உங்களுக்கு தேவையான வார்த்தைகளை மட்டும் தனியே பகுத்து எடுத்துக் கொண்டு அதை முன்னிறுத்தி வாதிடும் சாமர்த்தியம் தெரிகிறது. ஆனால்.. விவேகம்..? நிதானம்..?
மன்னிக்கவேண்டும் சகோதரி அது எங்கே போயிற்றென்று தெரியவில்லை.
இருந்தாலும் எனது எழுத்துக்களையும் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு எனது நன்றி.

“இஸ்லாமிய சகோதரர்கள் பிற மார்க்கங்களை இழிவு செய்கிறார்களோ இல்லையோ ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வெளிப்படை தானே?” – என்ற கேள்வியை மிக அழுத்தமாகப் பதிவு செய்து இருக்கிறீர்கள்.

எனது பதிவுகளை நீங்கள் சற்று நிதானமாக படிக்கவேண்டும். நான் சொல்லவந்ததன் மையக் கருத்தை இங்கு பலரும் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எங்கள் மார்க்கங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நாங்கள் முதலில் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் மட்டும் என்று அல்ல.. நீங்களும் கூடவே தான்.. எங்கள் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று நாங்கள் நானும், அருமைச் சகோதரர் திருச்சிக்காரன் அவர்களும் என்றுமே நினைத்ததில்லை.

ஆனால்.. ஹிந்து மதம், இஸ்லாம், கிறித்துவம், சீக்கியம், பவுத்தம், ஜைனம், என்று இருக்கும் அனைத்து மார்க்கங்களுமே “ஒருவனே தேவன்” என்பதை தான் சொல்கின்றன. ஆனால் அவர் அவர் கண்ட அனுபவங்களின் முறையில் தெரிவிக்கின்றன. எல்லாம் செய்ய வல்லவன் இறைவன். அவன் எந்த உருவிலும் வர முடியும். அவனால் ஆகாதது ஒன்றுமே இல்லை என்பதை நாம் அனைவருமே சொல்லி வருகிறோம். அவனால் ராமனாக, கண்ணனாக மட்டும் தான் வர முடியும் என்பது இல்லை. அவனால் யேசுவாகவும் வர முடியும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் “நீங்களோ ஏசுவாக மட்டும் தான் அவனால் வர முடியும்” – என்று சர்வ வல்லமை பொருந்திய ஆண்டவனை அவனது வல்லமையை குறுகிய வட்டத்துக்குள் அடைக்கிறீர்களே அதை தான் நாங்கள் தவறு என்று சொல்கிறோம்.

உங்கள் தவறை நியாயப் படுத்த இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் என்று உருவ வழிபாடு இல்லாத மற்றவர்களையும் அவர்களும் தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று உங்களுடன் சேர்த்துக்கொண்டு விடுகிறீர்கள்.

“ஏண்டா இந்த பரீட்சையிலே கணக்குலே மார்க் குறைஞ்சு இருக்கு?” என்று கேட்கும் அப்பாவிடம் “பக்கத்து வீட்டு ரத்தினம் கூட கம்மியா தான் மார்க் எடுத்து இருக்கானப்பா” என்று சொல்லி தப்பிக்க பார்க்கும் சிறுவனின் மனோபாவம் தான் உங்கள் கருத்தில் தெரிகிறது.

சகோதரி : நாங்கள் ஒன்று தனி தீவாக இருந்து விடவில்லை. நானும் கிறித்தவர்களுடன் சேர்ந்து தான் வாழ்ந்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய நண்பர்களும் எனக்கு இருக்கிறார்கள். என் மகள் படித்ததே கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் தான்.
இஸ்லாமிய சகோதரர்கள் எங்கள் மதத்தை ஏற்றுக்கொள்கிறார்களா என்று கேட்டிருக்கிறீர்கள். எங்களுக்கு இருக்கும் நம்பிக்கைகளை அவர்கள் மதிக்கிறார்கள்.
தீபாவளி பண்டிகை கொண்டாட கையில் பணம் இல்லாமல் இருந்த நேரத்தில் நான் கேட்காமலே என் வீடு தேடி வந்து “தீபாவளி உங்களுக்கு ஒரு முக்கியமான பண்டிகை இல்லையா? பணம் இல்லை என்று கொண்டாடாம இருக்காதீங்க மணி.” என்று சொல்லி பண்டிகைக்கு முதல் நாள் இரவு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவிய எனது இஸ்லாமிய நண்பரின் அடுத்தவர்
மத உணர்வுகளை மதிக்கும் மனோபாவத்தை நான் இன்று வரை மறக்கவே இல்லை. எங்களுடன் பழகிய கிறிஸ்தவ நண்பர்களும் அப்படியே.
சிறுபான்மை சமூகத்திலும் பெரும்பான்மையோர் இத்தகைய மனோபாவத்துடன் தான் இருந்து வருகிறார்கள். (உடனே நீங்க உங்க பண்டிகை எல்லாம்… என்று ஆரம்பித்துவிடாதீர்கள்..)

அது என்ன சகோதரி “இழிவு செய்கிறார்களோ இல்லையோ ..” என்று ஆரம்பித்து விட்டு அடுத்த வரியிலேயே அடைப்புக்குறிக்குள் “நாற்ற வாயால் ஊதிக் கொள்வதற்கு…” என்று மந்திரிக்கும் சடங்கை செய்யும் இஸ்லாமிய சகோதரர்களை இழிவு செய்திருக்கிறீர்களே…? ஐந்து வேலை தொழுகையை நாள் தவறாமல் செய்யும் சகோதர்களை, வைகறைத் துயிலெழுந்து எல்லாம் வல்ல ஆண்டவரிடம் அனைவரும் வாழ பிரார்த்தனை வைக்கும் சகோதர்களை இப்படி இழிவு செய்வது தவறாகப் படவில்லையா உங்களுக்கு?

இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் எங்களைப் பொறுத்தவரை மறுப்புக்குழுக்கள் அல்ல. ஏன் .. உங்களைக் கூட நாங்கள் மறுப்புக் குழுக்களாகக் கருதவில்லை. இந்த நாட்டில் உள்ள சாதரணமான வாழ்க்கை நடத்தும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய சமூகத்தவர் எங்களை மதித்து தான் வருகிறார்கள். உங்களைப் போன்ற மதப் பிரச்சாரகர்கள் தான் அவர்கள் மனங்களில் வெறுப்பு என்னும் விஷ வித்தை விதைக்கிறீர்கள். (அதன் பலன்.. ஒரிசாவிலும், பீகாரிலும் கிட்டும்போது… அலறுகிறீர்கள்..)

//என்னைப் பொருத்தவரை ஒரு இந்து தெய்வத்துக்குத் தொண்டாற்றி பெயர் புகழடைவதே எளிதானது;இங்கே போட்டி பொறாமை எதுவுமில்லை//” – இதன் மூலம் எங்கள் மார்க்கம் எளிதானது. போட்டி பொறாமை இல்லாதது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

//பரந்து விரிந்த இந்தியாவில் பெரும்பான்மை சமூகத்தில் இருப்பதால் தாழ்த்தப்பட்டவர் என்ற அங்கீகாரத்தை எளிதில் பெற்று கல்வி வேலைவாய்ப்பு சலுகைகளையும் இனிதே பெற்று அனுபவிக்கலாம்;// –

ஓஹோ.. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு இருபதுக்கும் மேற்பட்ட வருடங்களாக காத்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான படித்த ஆண்கள் மற்றும் பெண்களில் பெரும்பான்மை சமூகத்தவர் ஒருவர் கூட இல்லையா? அனைவரும் கிறிஸ்தவர்கள் தானா? சரி..சரி.. உங்களுக்கு தெரிந்த இந்த உண்மை அவர்களுக்கு இதுவரை தெரியாமல் போய்விட்டதே!. வேலை வாய்ப்பு பெற இப்படி ஒரு எளிதான வழி (அதாவது “பெரும்பான்மை சமூகத்தில் இருப்பது”) இருப்பதே தெரியாமல் நாட்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்களே..அவர்கள் எல்லாம் இந்த வழியை பின்பற்றி வேலை வாய்ப்படையக் கடவதாக…!

ஒரு பெண்ணாக நீங்கள் அனுபவித்த கஷ்டங்களை சொல்லவிரும்பவில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். சொந்தங்களை, ஊராரைப் பகைத்துக்கொண்டு வந்ததாக சொல்கிறீர்கள். அவற்றை கேட்கவோ அல்லது விமர்சிக்கவோ நான் விரும்பவில்லை.. ஏனென்றால் அது உங்கள் சொந்த விஷயம்.

நாங்கள் “அப்பாவி”களை மட்டுமே சந்தித்திருப்பதாகவும் நீங்களோ “அடப்பாவி”களையும்
“படுபாவி”களையும் சந்தித்திருப்பதாகச் சொல்லி இருக்கிறீர்கள். சகோதரி.. நீங்கள் சொல்லக்கூடியவர்கள் எங்கும் இருக்கிறார்கள். ஏன்.. நீங்கள் இப்போது வந்து சேர்ந்திருக்கும் இடத்திலும் அவர்கள்
இருக்கிறார்கள். நீங்கள் சார்ந்திருக்கும் மத நம்பிக்கையாளர்கள் பெரும்பான்மையாக இருக்கும் மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கான வன்கொடுமைகள் இதை விட அதிகம். அதை சுட்டிக்காட்டி அவர்களை எங்கள் மதங்களுக்கு நாங்கள் மாற்றம் செய்யலாமா? தவறு சகோதரி. கள்வர் பயம் அதிகமாக இருக்கிறது என்றால் நாம் தான் நம் வீட்டை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். அதற்காக வீட்டை மாற்றிக்கொண்டேவா இருக்கமுடியும்.
இந்தப் பிரச்சினை மிகவும் சென்சிடிவான ஒன்று என்பதால் இதற்கு மேல் இதில் கருத்து சொல்ல நான் விரும்பவில்லை.

திருவல்லிக்கேணி பேட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அர்த்தஜாம பூஜைக்கான கட்டளை இஸ்லாமிய சகோதரரால் இன்றும் நடத்தப் பட்டு வருகிறது..இது தர்ம காரியம் அல்ல. மத நல்லிணக்கம்.

மன்றோ துரை அவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கைங்கரியம் செய்தது தர்மத்துக்காக அல்ல. அவரது உயிரை
சிறுமி உருவில் வந்து அன்னை மீனாட்சி காப்பாற்றியதால் ஏற்பட்ட நன்றிப் பெருக்கால். அவருக்கு அவர் வணங்கும் மாதா அன்னை மீனாட்சியாக தெரிந்ததால். அதுபோலவே தான் …

இந்த மண்ணில் இருந்த முந்தைய ஆட்சியாளர்கள் காலத்தில் ஒவ்வொருவரும்
பிற மதத்தவரை ஏளனம் செய்யாமல் அவரவர் நம்பிக்கைகளை மதித்து “இணக்கம் அறிந்து இணங்கியதால்” தான் இவற்றை எல்லாம் செய்தனர்.

நீங்கள் சொல்வது போல தர்ம காரியமாக செய்வது என்றால் எத்தனயோ வழிகள் இருக்கின்றன. அதை எல்லாம் விடுத்து ஆலயங்களுக்கு செய்யவேண்டும் என்று தலை எழுத்தா என்ன?

ஜெயலலிதா மட்டுமா ரம்ஜான் கஞ்சி குடிக்கிறார். கலைஞர், ஸ்டாலின் போன்றவர்களும் குடிக்கத்தான் செய்கிறார்கள். சகோதரி அவர்களும் ஹிந்துக்கள் தானே. தயவு செய்து ஒரு விண்ணப்பம் .. நாம் இங்கு இறைவனை பற்றிய கருத்துக்களை தான் பகிர்ந்து கொள்ளவந்திருக்கிறோம். இங்கு அரசியல் வேண்டாம்.

//சார்,இதேபோன்ற தரும காரியங்களை ஆங்கிலேயரும் செய்தனர்;அப்படியானால் அவர்களெல்லாரும் புனிதர்களா?
ஒரு குறிப்பிட்ட இனத்தை ஆக்கிரமித்து ஆளுவதே பாவமென்றால் “அண்டை வீட்டு நெய்யாம்,என் பொண்டாட்டி கையாம்” என்பது போல நம்மிடமே பறித்து நமக்கே கொடுத்தால் அதை வாங்கியது எத்தனை கேவலம்..?
இதைப் போய் வெட்கமில்லாமல் பெருமையாகக் குறிப்பிடுகிறீர்களே..!// – மேடம். உங்களையும் அறியாமல் என்னைத் தாக்குவதாக நினைத்துக்கொண்டு நீகளே ஆங்கிலேயர் விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறீர்கள்.
நீங்கள் சொல்வது போல நம்மிடம் இருந்தே பறித்து நமக்கே கொடுப்பதை வாங்குவதே கேவலம் என்றால்…

அப்படிப்பட்டவர்கள் கொண்டு வந்து பரப்பிய மதத்துக்கு மாறுவது மட்டும் என்ன புனிதமோ..?(ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்துக்கு முன்பு கிறிஸ்தவம் இந்த நாட்டிலேயே இல்லையே. அதனால் தான் கேட்கிறேன்.)

//திருப்பதியில் முறைப்படி ஏலத்தில் லட்டு காண்டிராக்ட் எடுத்தவர் மீது மோசடி புகார் எழுந்ததே;அப்போது எங்கே போனது உங்கள் மத நல்லிணக்கம்? அவர் கிறித்தவர் மோசடியாக லட்டு காண்டிராக்ட் பெற்றுவிட்டார்; இந்து மாத்திரம் நேர்மையாக அனைத்தையும் செய்கிறாரா? ஏன், பூஜாரிகளே திருட்டுப் புகாரில் சிக்கவில்லையா?// –
திருட்டு புகாரில் சிக்கும் பூசாரி தண்டிக்கப் படக்கூடாது என்று நாங்களே கூறமாட்டோம். மோசடி யார் செய்தாலும் மோசடி தான். அவர் மட்டும் செய்யவில்லையா இவர் செய்தால் என்ன? என்று கேட்கிறீர்களே. மோசடி மட்டும் பாவம் இல்லையா.. அதை செய்யும் செய்பவர்கள் பாவிகளாக உங்கள் மதத்தில் கருதப் படுவதில்லையா? இதில் ஹிந்து என்ன? கிறித்தவர் என்ன? “உங்க வீட்டுப் பையன் என் வீட்டு கண்ணாடியை கல்லெறிந்து உடைத்துவிட்டான்.” என்று ஒருவர் என்னிடம் வந்து சொன்னால் நான் என் மகனைக் கண்டித்துத்தான் ஆகவேண்டும். அவனது தவறுக்கு தண்டித்துத் தான் தீரவேண்டும். அதை விடுத்து “போனவாரம் உங்க பையன் கூடத் தான் அடுத்த வீட்டு சுவர்லே அசிங்கப் படுத்தினான்?” என்றா நான் சொல்வது.
இன்னும் சொல்லட்டுமா? அந்த காண்ட்ராக்டர் செய்த மோசடியை கண்டிக்கும் நாங்கள் எங்கள் “தேவநாதன்”களையும் அதை விட தீவிரமாக கண்டிக்கிறோம். சட்டபூர்வமாக அவர் தண்டிக்கப் படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடம் இல்லாமல் இருக்கிறோம்.

ஆனால் நீங்கள் தான் ஹிந்து செய்தால் அது மட்டுமே தவறு. கிறிஸ்தவர் செய்தால் அதை கண்டுகொள்ளக் கூடாது என்பது போல
“சிறுபான்மையினருக்கு” பாதுகாப்பில்லை என்று கூச்சல் போடுவதால் தான் எங்கள் மனதில் வெறுப்பையே தூண்டுகிறீர்கள்.

கடைசியாக “வீரத்துக்கும் உழைப்புக்கும் நேர்மைக்கும் தேசபக்திக்கும் அவனுக்கு (சீக்கியருக்கு) இணை யாருமில்லை” என்று அடித்துச் சொல்லி இருக்கிறீர்கள். (சகோதரர் ஜோசப் அவர்கள் கவனிக்க: நீங்கள் என்னடாவென்றால் “எங்கள் தேசபக்தி யாருக்கும் குறைந்தது அல்ல” என்று சொல்லி இருக்கிறீர்கள்!)

இன்றும் சரி மனித சேவைக்கு நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தவர் ஆற்றி வரும் பங்கு மகத்தானது. அதை நாங்கள் மதித்துப் போற்றுகிறோம். உங்கள் சேவையை போற்றி உயர்வாகவே மதித்து வருகிறோம் நாங்கள்.

நீங்கள் நல்லது செய்யும் போது பாராட்டும் எங்களுக்கு நீங்கள் தவறு செய்யும் போது கண்டிக்கும் உரிமையும் உண்டு.

ஆகவே எங்களை விமர்சிக்கும் முன்னால் உங்களையே ஒருமுறை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

அன்புடன்: அன்புச் சகோதரன் மணியன்

திருச்சிக்காரனுக்கு ஒன்றை நினைப்பூட்ட விரும்புகிறேன். இங்கே நமது தலைப்பு, “இறைவன் இருக்கிறானா” என்பதே. இறைவனுடன் கலப்பதை பற்றி பேசினாலும் பரவாயில்லை. மனிதர் கலப்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். தலைப்பில் கவனம் செலுத்துங்கள் ஐயா.
தமிழன்

//திருச்சிக்காரனுக்கு ஒன்றை நினைப்பூட்ட விரும்புகிறேன். இங்கே நமது தலைப்பு, “இறைவன் இருக்கிறானா” என்பதே//

ப‌குத்த‌றிவை விட்டு வில‌கி விட்டால்,

இறைவ‌ன் இருக்கிறான் என்று நம்பிக்கை அடிப்படையில் மாத்திரம் செயல்பட்டால்,

அதை அடிப்ப‌டையாக‌ வைத்து எவ்வ‌ள‌வு தூர‌ம் காட்டு மிராண்டி, வெறுப்புக் க‌ருத்துக்க‌ளுக்கு அடிமையாக்க‌ப் ப‌ட்டு விடும் வாய்ப்பு உள்ளது என்ப‌தைக் காட்டவே இந்த‌க் க‌ட்டுரை.

அடடா… நண்பர் அசோக் கோபித்துக்கொண்டு போய்விட்டார் போல் அல்லவா தெரிகிறது. நண்பரே, நீங்கள் திரும்பவும் இங்கே எழுத ஆசை படுகிறேன். சிறிது தடாலடியாக எழுதினாலும், பல நல்ல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
நண்பர் மணியன்,
அப்போ தியாகராஜர் 9600 கோடி முறை மந்திரம் சொன்னாரா இல்லையா? ஒரு ஆராய்ச்சியாலனை போல நேரான பதிலோடு வாருங்கள்.
//உங்கள் ஆத்மாவிடம் அந்த தேவன்,”எங்கும் நிறைந்திருக்கும் என்னை ஒரு குறிப்பிட்ட வடிவத்துக்குள் மட்டுமே குறுக்கி விட்டாயே.//
ஆகா, தேவன் இருப்பதாக, அதுவும் எங்கும் இருப்பதாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள்….
தேவன் எங்கும் இருப்பானானால், பச்சை குழந்தைகளையும் கற்பழிக்கும் காமந்தகர்களிடமும் இருக்கிறானா?

கேள்விகள் தொடரும்,
தமிழன்

தமிழன் அவர்களே..

நண்பர் திருச்சிக்காரன் அவர்கள் இறைவன் இருக்கின்றானா? என்ற தலைப்பில் பதிவுகளை எதிர் பார்த்தார்.

ஆனால். பாவம் அவர் என்ன செய்வார்? இங்கு பதிவு செய்பவர்கள் இறைவன் இருக்கின்றான் என்ற கருத்தை ஒன்று ஒட்டி பேசவேண்டும். அல்லது மறுத்து பதிவு செய்யவேண்டும். ஆனால் இறைவன் இருக்கின்றான் என்று சொல்ல வரும் கிறிஸ்தவ பதிவாளர்கள் அனைவருமே பிற மத தெய்வங்களையும் நம்பிக்கைகளையும் இகழ்ந்து என்னவோ இங்கு வருபவர்களை மதமாற்றம் செய்ய வேண்டும் என்பது போல பதிவு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

அதற்கு அவர் மறுப்பு கொடுக்க – அவர்கள் தங்கள் அதிமேதாவித் தனத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆரம்பித்து இன்னும் தீவிரமாக எதிர்க்க –
இதில் நான் ஏதாவது பேசினால் தங்களையே தடைக்கற்கள் என்று சொல்கிறோம் என்று போய்விடுகிறார்கள்.

இங்கு பதிவு செய்ய வருபவர்களுள் இரு பிரிவுகள் தான் இருக்க முடியும். ஒன்று இறைவன் இருக்கிறான் என்பவர்கள். மற்றது அவர் இருப்புக்கு ஆதாரம் கேட்பவர்கள். ஆதாரம் கொடுக்கவேண்டியவர்களே உன் தெய்வம், என் தெய்வம் என்று அடித்துக்கொண்டிருந்தால்….

இப்போது எனக்கு நான் குறிப்பிட்ட கண்ணதாசன் பாடலின் அடுத்த சரணம் தான் நினைவுக்கு வருகிறது…

“மனிதன் இருக்கின்றானா? இறைவன் கேட்கிறான்.. அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்..?

– மணியன்.

ஹ்ம்ம்… தலைப்பு ஒன்னு செயல் ஒன்னு. அருமை.
தொடரட்டும் உங்கள் பணி.
தமிழன்

நண்பர் தமிழன் அவர்களுக்கு…

பச்சைக் குழந்தைகளைக் கற்பழிக்கும் காமாந்தகர்களிடமும் இறைவன் இருக்கின்றானா? என்று கேட்டிருக்கிறீர்கள்.

இறைவன் எங்கும் இருக்கிறான். எனக்குள்ளும் இருக்கிறான். உனக்குள்ளும் இருக்கிறான் என்று அவனது இருப்பை நாம் உணர்ந்து தவறான பாதையில் செல்லாமல் பாவங்களை செய்யாமல் இருக்கவேண்டும்.

நம்மிடம் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது என்றால் அதை எப்படி பாதுகாப்பாக பாதுகாப்போம்?..
கற்றையாகச் சுருட்டி பத்திரமாக பீரோவுக்குள் லாக்கருக்குள் வைத்து ஒன்றுக்கு இரண்டாகப் பூட்டி வைப்போம். ஏன்?. அதன் அருமையை நாம் உணர்ந்து இருப்பதால் தான். தொலைந்து போனால் மீண்டும் சம்பாதிப்பது கஷ்டம் என்பதால் தான்.

விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக இறைவன் நம்முள்ளும் இருக்கிறான். இறை தன்மை நமக்குள்ளும் குடிகொண்டிருக்கிறது என்பதை நாம் உணர்ந்து இருந்தால் பச்சைக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு கொடுமை செய்யும் எண்ணமே வராது.

நாம் நல்லவர்.. நல்ல எண்ணங்கள் கொண்டவர் என்று நினைத்துப் பாருங்கள். நமக்குள்ளே எவ்வளவு பெருமை பொங்கும். அதுபோல எல்லாம் வல்ல இறைவன் நமக்குள்ளும் இருக்கிறான் என்ற நினைப்பும் நம்மை இன்னும் பெருமிதம் கொள்ளவும் நல்லதை செய்யவும் அல்லதை விலக்கவும் வைக்கும்.

நம்மை இன்னும் செம்மைப் படுத்தும். இறை இருப்பை தன்னுள் உணராத போது.. நீங்கள் சொல்வது போன்ற நபர்கள் உருவாவது தவிர்க்க முடியாது. அதற்காக இறைவனை மறுப்பவர்கள் அனைவருமே தவறு செய்பவர்கள் என்று நான் சொல்வதாக அர்த்தம் அல்ல.

பொதுவாக தவறு செய்ய மனிதன் கூச்சம் கொள்பவன் தான். ஆனால் மனித மனம் எல்லோருக்கும் ஒன்று போல இருப்பதில்லையே. அதன் விளைவு தான் சில மனங்களில் வக்கிர உணர்வுகள் அதிகரிக்கின்றன.

இறை நம்பிக்கை என்பது நம்மை வையத்துள் வாழ்வாங்கு வாழ வழி சொல்லிக் கொடுப்பது. மனிதன் என்ற நிலையில் இருந்து நாமும் தெய்வத்தன்மை பெற்று உயர்வடைய வழி வகுப்பது என்பதை உணர்ந்து நாம் வாழ்ந்து வந்தால் இங்கு எல்லோரும் நல்லவரே. தொழத் தகுந்தவரே.

-அன்புடன் மணியன்.

மணியன்:
// விவேகம்..? நிதானம்..?
மன்னிக்கவேண்டும் சகோதரி,அது எங்கே போயிற்றென்று தெரியவில்லை //

ஆம்,உங்களிடம் நிறைய கற்றுக் கொள்ளவேண்டும்;எனது கருத்துக்களையும் மதித்து அதன் மறுபக்கத்தை விளக்கியதற்கு நன்றி சகோதரரே..!

நான் எழுதுவது பேசுவது போலிருப்பதால் அதில் நாகரீகம் சற்று குறைவாக இருக்கலாம்; எனக்கென்று எந்த போலியான மத அடையாளமுமில்லாததால் எதைக் குறித்தும் கவலைப்படாமல் எழுதிக்கொண்டே போகிறேன்; தயவுசெய்து என்னைப் பிரித்துப் பேசாதீர்கள்,நான் இன்னும் மதம் மாறவில்லை;

ஆனால் மறைமுகமாகக் குறிப்பிட விரும்பியது இந்துக்களை எதிர்த்து கலகம் செய்வோரை விட்டு விட்டு தவறான திசையில் கல்லெறிந்துக் கொண்டிருக்கிறீர்களே அதை தங்கள் மேலான கவனத்துக் கொண்டு வர விரும்புகிறேன்;

நாம் மனிதராக ஒருவரையொருவர் கட்டாயத்தின் பேரில் ஒத்துப்போவது பெரிய விஷயமல்ல; அதை வலியுறுத்தும் “ரோஜா” மற்றும் “பம்பாய்” போன்ற படங்கள் வெளிவந்ததால் யார் யாரோ கோடீஸ்வரனாகிப் புகழ் பெற்றாரே தவிர மதத் தீவிரவாதம் சற்றும் குறையவில்லையே;

சீக்கியருடைய கலவரத்தை அடக்க முடிந்த நமக்கு காஷ்மீரில் ஒன்றும் செய்யமுடியாத காரணமென்ன? இரண்டுமே பாகிஸ்தான் எல்லையில் தான் இருக்கிறது;அப்படியானால் இங்கே மதத் தீவிரவாதம் பெரும்பங்காகிறது;

சீக்கியரிடத்தில் மதவெறியைவிட தேசபக்தி அதிகமிருந்ததாலேயே அங்கே அமைதி திரும்பியது; ஆனால் பால் தாக்கரே,ராஜ் தாக்கரே போன்றவர்களின் வெறி எந்தவகையான வெறியோ ? அதனால் இரத்த ஆறு ஓடவில்லையா? அவர்கள் வெறுப்புக் கருத்துக்களைப் பரப்பவில்லையா?

கடவுள் யாராக வந்தார் என்பதை விடுங்கள்;அப்படி கடவுள் அவதாரமெடுத்து வந்தவர்கள் செய்தது என்ன என்பதிலேயே அவரவருடைய தரம் விளங்கும்;

ராமன் காட்டுக்குச் சென்றதால் நான் அடைந்த பலன் என்ன?
அது நான் சுடுகாட்டுக்குச் செல்லாமல் தடுக்க வகைசெய்யுமா என்ன?

கண்ணன் வெண்ணையைத் திருடியும் இளம்பெண்களின் உள்ளாடைகளை ஒளித்து வைத்தும் லீலைகள் செய்ததால்
என் பிள்ளைகள் அடைந்த பலன் என்ன?

ஒரு பக்கம் இறைவாக்கு உரைத்துக் கொண்டே மறுபக்கம் மருமகள் முதல் பேத்தி வயது வரையுள்ள எண்ணற்ற பெண்களைத் திருமணம் செய்து துன்மார்க்கமாய் வாழ்ந்த இறை தூதரால் என் ஆன்மா எப்படி ஈடேறும்?

// நாங்கள் ஒன்றும் தனி தீவாக இருந்து விடவில்லை; நானும் கிறித்தவர்களுடன் சேர்ந்து தான் வாழ்ந்து வந்திருக்கிறேன் //

இதற்கு நம்முடைய தேசத்தின் கட்டமைப்பே காரணம்,அன்பரே; நீங்களோ நானோ சேர்ந்து எடுத்த முடிவல்ல இது; இந்தியா தன்னை ஒரு இந்து நாடாக அறிவித்திருந்தால் இந்த வார்த்தைக்கு அவசியமிருந்திராது;

ஆனால் இந்தியா அறிவிக்கப்படாத இந்து நாடாகவே விளங்குகிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்;இதற்கு பல உதாரணங்களைச் சொல்லமுடியும்;

இஸ்லாமியரும் கிறித்தவரும் நமக்கு உதவி செய்து தங்கள் ந்ல்லெண்ணத்தைக் காட்டியது அவர்கள் மனிதத்தன்மையையே காட்டுகிறது, மார்க்கத்தையல்ல;

// “இழிவு செய்கிறார்களோ இல்லையோ ..” என்று ஆரம்பித்து விட்டு அடுத்த வரியிலேயே அடைப்புக்குறிக்குள் “நாற்ற வாயால் ஊதிக் கொள்வதற்கு…” என்று மந்திரிக்கும் சடங்கை செய்யும் இஸ்லாமிய சகோதரர்களை இழிவு செய்திருக்கிறீர்களே…? //

மன்னிக்கவும்;எனது தேசத்தின் நிர்ப்பந்தமான நிலையைத் தெரிவிக்க வந்த வேகத்தில் எழும்பிய வைராக்கிய உணர்வினால் வந்து விழுந்த வரிகள் அவை; என் சகோதரனும் சகோதரியும் தனக்கென்று ஒரு தெளிவான பாதையை வகுத்துக் கொள்ளாமல் வெளுத்ததெல்லாம் பால் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள்;அப்போதைக்கு பிரச்சினை தீர்ந்தால் போதுமென்றே எண்ணுகிறார்கள்;அதற்காக எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள்; இதுபோன்ற நிலையற்ற மனப்பான்மையுள்ளவர்களால் தான் மதமாற்றக் குற்றச்சாட்டு எழுகிறது;

மனிதன் வெளிவிடும் காற்று விஷக்காற்று என்பது மருத்துவ உண்மையாகும்;அதை ஒரு குழந்தை இரவில் அலறி அலறி அழுகிறது என்பதற்காக ஓதுமிடத்தில் சென்று ஊதச் செய்தால் சரியாகிவிடும் என்பது மூடநம்பிக்கையல்லவா? இதற்கும் வேப்பிலை அடிப்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம்?

அப்படியானால் நான் இதுவரை வழிபட்டு வந்த தெய்வத்தால் அடையும் பலன் என்ன?என்னிடம் பால் குடிக்க மறுக்கும் எனது குழந்தை அடுத்தவளிடம் குடித்து வளர்ந்துவிடுமா என்ன? இப்படி மூடநம்பிக்கைகளைச் சுற்றி சுற்றி வளர்ந்த மார்க்கமே இந்து மார்க்கம்; அது ரொம்ப பெரிதாக இருப்பதால் ரொம்ப சிறந்தது என்று சொல்லமுடியாது;

தவறான பாதையில் செல்பவனை, இவனுக்குச் சொன்னாலும் புரியாது ஒரு முதியவர்கள் கடந்துச்சென்றால் அதற்குப் பெயர் சகிப்புத்தன்மை எனலாம்;

உதாரணமாக இஸ்லாமிய நண்பர்களிடமிருந்து ஒரு காரியத்தைச் சொல்லுகிறேன்; அவர்கள் தொழும்போது ஒரு விரலை மட்டும் ஆட்டிக்கொண்டே இருப்பார்களாம்; ஏன்,அப்படி விரலை ஆட்டாவிட்டால் இறைவன் அந்த தொழுகையை ஏற்றுக்கொள்ளமாட்டாரா என்று கேட்பவன் வெறுப்புக் கருத்துக்களைப் பரப்பி காழ்ப்புணர்ச்சியை விதைப்பவன் என்று எனது அன்பு சகோதரர் திருச்சிக்காரன் சொல்வாரானால் பகுத்தறிவு என்பதன் அர்த்தம்தான் என்ன?

வருடம் முழுவதும் துஷ்டத்தனமாக வாழ்ந்து விட்டு ஒரு முரடன் ஐயப்பனுக்கு விரதமிருந்து சென்று வந்து ஒரு மனமாற்றமுமில்லாமல் மீண்டும் அதே வாழ்க்கையை வாழ்ந்தால் என்ன அர்த்தம்?இப்படி ஒவ்வொரு மார்க்கத்தைக் குறித்தும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்;

// இந்த நாட்டில் உள்ள சாதரணமான வாழ்க்கை நடத்தும் கிறிஸ்தவ, இஸ்லாமிய,சீக்கிய சமூகத்தவர் எங்களை மதித்து தான் வருகிறார்கள் //

மீண்டும் சொல்லுகிறேன்,இதற்கு எந்த மார்க்க அமைப்பும் காரணமில்லை; நம்முடைய தேசத்தின் கலாச்சாரமே காரணம்;நம்முடைய தேசத்துக்கு வாய்த்த முற்பிதாக்களே காரணம்;”பாரதவிலாஸ்” போன்ற படங்களே காரணம்;”திருவிளையாடல்” போன்ற படங்களோ “இராமாயணம்” “மகாபாரதம்” ஆகிய டிவி சீரியல்களோ காரணமல்ல்;

பெரியவர்கள் செந்நீரையும் கண்ணீரையும் சிந்தி வளர்த்த ஒற்றுமையுணர்வை குலைத்து “மசூதி”யை இடித்தாவது (கோவிலைக் கட்டினாலும் சந்தோஷ்ப்பட்டிருக்கலாம்..!) ஆட்சியைப் பிடிப்ப‌தற்கு இந்த சீரியல்களே காரணம்; இது ஒரு கூட்டு சதியல்லவா? அதன் விளைவையே இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கிறது;

// உங்களைப் போன்ற மதப் பிரச்சாரகர்கள் தான் அவர்கள் மனங்களில் வெறுப்பு என்னும் விஷ வித்தை விதைக்கிறீர்கள்;(அதன் பலன்.. ஒரிசாவிலும், பீகாரிலும் கிட்டும்போது… அலறுகிறீர்கள்..)//

என்னண்ணே என்னை மத போதகராக்கி விட்டீர்களே;நான் சாதாரண வாசகி;சில ஆயிரங்களுக்காக மாதமுழுவ‌தும் ஓடி ஓடி உழைப்பவள்;

தயவுசெய்து ஒரிஸ்ஸாவைக் குறித்தும் பீகாரைக் குறித்தும் எதுவும் சொல்லாதீர்கள்;அது மிகவும் கொடுமையானது;சொந்த மாநிலத்திலேயே ஏழை கிராம் மக்கள் அகதிகளாகி காடுகளில் உயிர் தப்ப ஓடியது உங்களுக்கு அத்தனை சாதாரண காரியமா?

உங்களுக்கு ஆட்சேபணையில்லையானால் மிஷினரி பயிற்சி களத்துக்குச் சென்று சர்வே பண்ணிப்பாருங்கள்;அவர்களது நோக்கம் என்னைப் பொருத்தவரையில் மத மாற்றமல்ல;

அவர்களுக்கு எந்த கெடுபிடி டார்கெட்டும் கிடையாது;அவர்களுக்குக் கொடுக்கப்படும் முதலாவது பணியே மக்களுடன் ஒன்றித்துப் பழகுவதுதான்;அடுத்து மருத்துவ சுகாதார அடிப்படை வசதிகளைத் தரும் தன்னார்வ நிறுவனங்களை அழைத்து அவர்களுடையத் தேவைகளைச் சொல்லுவது; இதை எந்த ஒரு அரசாங்கமோ அல்லது எந்த ஒரு தன்னார்வ மத சார்பற்ற அமைப்போ கூட செய்யமுடியும்;

ஆனாலும் தங்கள் தேவைகளைக் கூடச் சொல்லத் தெரியாத மலை வாழ் மக்களை சந்தித்து விசாரிக்க யாருமில்லை என்பதே உண்மை; தங்கள் தேவைகள் சந்திக்கப்பட்டு அந்த ஏழை மக்கள் சற்று நிமிர்ந்து நடக்கத் துவங்கினால் அதுவரை அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆதிக்க சாதியினருக்கு கோபம் வருகிறது; இதற்கெல்லாம் காரணமான சமூக சேவையாளர் மீது அவர்கள் கோபம் திரும்பி அவர்களைக் கொலை செய்கிறார்கள்;

அண்மையில் கூட ஒரிஸ்ஸாவில் பல போதகர்களைக் கொலை செய்துவிட்டதாகச் செய்தி வந்து அவர்களுடைய குடும்பத்தார் இங்கே துடித்துக் கொண்டிருக்கிறார்கள்;வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலிருக்கிறது,உங்கள் கருத்து;

பாதிரியாரையும் குழந்தைகளையும் கொளுத்தினார்களே, அவர் செய்தது மதப்பிரச்சாரமல்ல,தொழுநோயாளிகளின் புண்களைக் கழுவியதே அவர் செய்த பாவம்..!

குடிப்பழக்கம் எத்தனை தீமையானது என்பதை நான் அறிந்திருந்தாலும் அதனை சாராயம் காய்ச்சுமிடத்துக்கே சென்று வெளிப்படையாகக் கண்டிப்பது என் உயிருக்கு ஆபத்தானதல்லவா? அதுபோல யாரும் செய்வதில்லை;

// மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கான வன்கொடுமைகள் இதை விட அதிகம்;அதை சுட்டிக்காட்டி அவர்களை எங்கள் மதங்களுக்கு நாங்கள் மாற்றம் செய்யலாமா? //

// “உங்க வீட்டுப் பையன் என் வீட்டு கண்ணாடியை கல்லெறிந்து உடைத்துவிட்டான்.” என்று ஒருவர் என்னிடம் வந்து சொன்னால் நான் என் மகனைக் கண்டித்துத்தான் ஆகவேண்டும். அவனது தவறுக்கு தண்டித்துத் தான் தீரவேண்டும். அதை விடுத்து “போனவாரம் உங்க பையன் கூடத் தான் அடுத்த வீட்டு சுவர்லே அசிங்கப் படுத்தினான்?” என்றா நான் சொல்வது //

மேற்கண்ட இரண்டும் உங்கள் கருத்து தான்; எனக்கு எதிரான வாதத்தில் ஒப்பிடக்கூடாது என்று சொல்லும் நீஙகளே அதன் இறுதிப்பகுதியில் ஒப்பிடலாமா?

பெண்களை தெய்வமாகத் தொழும் இந்த நாட்டில்தான் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகம் என்கிறேன்,நான்; மேலைநாட்டில் கல்வியறிவு காரணமாக அவை குற்றங்களாகப் பதிவாகிறது;

இங்கோ கலாச்சாரக் கட்டுப்பாடு காரணமாகவும் சட்ட அமைப்புகளின் மோசடிகளின் காரணமாக்வும் 90% பதிவாகிறதே இல்லை; கழுவிக் குளித்துவிட்டுப் போய்க் கொண்டே இருக்கிறார்கள்; தைரியசாலிகள் தற்கொலை செய்துக் கொள்ளுகிறார்கள்; கோழைகளோ வாழ்ந்து தொலைக்கிறார்கள்;

// ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்துக்கு முன்பு கிறிஸ்தவம் இந்த நாட்டிலேயே இல்லையே;அதனால் தான் கேட்கிறேன் //
இது அடிப்படையில்லாத உண்மைக்கு மாறான கூற்றாகும்..!

நான் ஆங்கிலேயரிடத்திலிருந்து கிறித்தவ மார்க்கத்தினை ஏற்கவில்லை;காந்திஜியிடமிருந்தும் விவேகானந்தரிடமிருந்தும் வள்ளலாரிடமிருந்துமே இதனைப் பெற்றேன்; நான் மதம் மாறவில்லை; உணர்வையடைந்தேன்,சிந்தித்தேன்,சித்தி பெற்றேன்;

// மோசடி மட்டும் பாவம் இல்லையா.. அதை செய்யும் செய்பவர்கள் பாவிகளாக உங்கள் மதத்தில் கருதப் படுவதில்லையா? //

தயவுசெய்து என்மீது எந்த முத்திரையும் குத்தவேண்டாம்;நானும் கூட மிக எச்சரிக்கையாக மதம் என்று குறிப்பிடாமல் மார்க்கம் என்றே குறிப்பிட்டு வருகிறேன்;அப்ப‌டியே நான் குறிப்பிட்டாலும் திருத்தி வாசிக்கவும்;

தவறு செய்யும் வாய்ப்பு எங்கே அதிகம் என்று பாருங்கள்;அடுத்தவன் நான் வீட்டில் திருடுவதற்கும் என் வீட்டில் அடுத்தவன் வந்து திருடுவதற்கும் வித்தியாசமுண்டல்லவா? இதற்காகவே “வேலியே பயிரை மேய்வதா” என்ற பழமொழி சொல்லப்பட்டது;

// “உங்க வீட்டுப் பையன் என் வீட்டு கண்ணாடியை கல்லெறிந்து உடைத்துவிட்டான்.” என்று ஒருவர் என்னிடம் வந்து சொன்னால் நான் என் மகனைக் கண்டித்துத்தான் ஆகவேண்டும் //

உங்களது இந்த உதாரணத்தைப் படித்தபோது நான் இன்று வாசித்த என் மனதை மிகவும் பாதித்த ஒரு செய்தி நினைவுக்கு வந்தது;அதுவே இந்த தேசத்தின் மொத்த நிலைமைக்கும் பிரச்சினைக்கும் உதாரணமாக இருக்கும்;

இது கரூர் மாவட்டத்தில் நடத்த உண்மை நிகழ்ச்சி; சைக்கிளில் சென்ற ஒருவன் திடீரென தெருவின் குறுக்கே வந்த மூன்றே வயது சிறுமியைக் கண்டு தடுமாறி நின்றான்;அதே நேரம் அங்கு வந்த அந்த சிறுமியின் தகப்பனோ சைக்கிளில் வந்தவனை கெட்டவார்த்தைகளால் அர்ச்சிக்க- அமைதியாகப் போய்விட்டான்;

அடுத்த நாளும் அதே போல அந்த குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருக்க முந்தின நாளின் நிகழ்ச்சியினால் பாதிக்கப்பட்டிருந்த அந்த சைக்கிள்காரன் நேரே வீட்டுக்குச் சென்று கரும்பு வெட்டும் அரிவாளால் அந்த குழந்தையின் கழுத்தை வெறியுடன் அறுத்துப்போட்டான்;

குழந்தையின் தந்தை ஆட்டுக்கறிக்கடை வைத்துள்ள‌ ஒரு இஸ்லாமியர்;கொலைக்காரன் ஒரு இந்து; இதற்கு மதமா காரணம்? சொல்லுங்கள். கொலைக்காரன் சொல்லும் காரணம்,அந்த தந்தை குழந்தையைக் கண்டிக்காமல் அவனைக் கண்டித்ததாலேயே குழ‌ந்தையைக் கொலை செய்தானாம்;

நீங்களும் அப்படியே உங்கள் கிறிஸ்தவ மார்க்கம் ரொம்ப யோக்கியமா என்கிறீர்கள்;எனது தாய் மதம் சரியாக இருந்திருந்தால் நான் ஏன் வெளியேறிச் சென்று அத்வானத்தில் நிற்கவேண்டும்?

பொறுமையாக இதுவரை படித்ததற்கு நன்றி…அன்புடன்: அன்புச் சகோதரன் மணியன் அவர்களே..!

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=33589255

மணியன் அவர்களே. மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள். பிண்ணிப் பெடலெடுக்கிறீர்கள். ஆனால் படித்து முடிப்பதற்குள் கண்கள் மங்கி விடுகிறது. ரொம்ப பெரிசா இருக்கு. உங்கள் உழைப்பிற்கு நன்றி வாழ்த்துக்கள். தொடருங்கள்.

//இறைவன் எங்கும் இருக்கிறான். எனக்குள்ளும் இருக்கிறான். உனக்குள்ளும் இருக்கிறான் என்று அவனது இருப்பை நாம் உணர்ந்து தவறான பாதையில் செல்லாமல் பாவங்களை செய்யாமல் இருக்கவேண்டும்.//
Mr.Manian, by profession I am a Scientist. Usually we tend to be very straight forward. We always, like to be on the point. When I ask a question the answer is expected for that and not an advise or preaching. For a closed question like this, the answer can be either YES or NO. Sometimes, we can say that we do not know. By your answer, can I infer that GOD is everywhere?

//ஆனால். பாவம் அவர் என்ன செய்வார்? இங்கு பதிவு செய்பவர்கள் இறைவன் இருக்கின்றான் என்ற கருத்தை ஒன்று ஒட்டி பேசவேண்டும். அல்லது மறுத்து பதிவு செய்யவேண்டும்.//
Being the person who started, Thiruchchikkaaran should be able to lead the conversation in the right direction and remind the bloggers about the agenda whenever something is side tracking. But, he himself is going out of the topic all the time. His recent comment is indicating that his intension is different from “Finding GOD”. More over, the way he blasts (indirectly) is also doesn’t sound good. I could see that all the bloggers here are decent and responsible people. They will be ready to play their roles and will not side track, if someone indicates that they are going out of track.
I am not trying to Boss over here. But, every research project deserves some guidelines. And research has to be with all the possible OPEN questions which are related to the topic? I brought such questions only in my previous comments. But, no one wanted to say anything about it or say anything close to the topic that is taken.
I am verrrry sorry, if I am rude. But, this is how research folks will behave if someone just going out of the scope.
Thanks,
Thamizhan

பின்னூட்டங்கள் சரியான திசையிலே தான் செல்லுகின்றன.

நம்முடைய கட்டுரையிலே நாம் எழுதியது சரி என்பதை நிரூபிக்கும் வகையிலே தான் எல்லோரும் எழுதுகிறார்கள் .

ப‌குத்த‌றிவை விட்டு வில‌கி விட்டால்

இறைவ‌ன் இருக்கிறான் என்று “ந‌ம்பி” விட்டால்,

அதை அடிப்ப‌டையாக‌ வைத்து எவ்வ‌ள‌வு தூர‌ம் காட்டு மிராண்டி, வெறுப்புக் க‌ருத்துக்க‌ளுக்கு அடிமையாக்க‌ப் ப‌ட்டு விடும் வாய்ப்பு உள்ளது என்ப‌தைக் காட்டவே இந்த‌க் க‌ட்டுரை – Thiruchchikkaaran

சகோதரி கிளாடி அவர்களுக்கு.

எனக்கு நன்றி தெரிவித்து உங்கள் பதிலை ஆரம்பித்து இருக்கிறீர்கள். எனது கருத்துக்களை படித்தமைக்கு நன்றி. அவற்றை எவ்வளவு தூரம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியாது. ஆனாலும் புரிந்து கொள்ள ஓரளவேனும் முயற்சி எடுத்தமைக்கு எனது மனமார்ந்த நன்றி.

எந்தப் போலியான மத அடையாளமும் இல்லாதவர் என்பதே தங்கள் வேகத்துக்கு காரணம் என்று சொல்லி இருக்கிறீர்கள். எதைப் பற்றியும் கவலைப் படாமல் எழுதுவதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அதே நேரத்தில் மிகவும் கவலைப் பட்டிருக்கிறீர்கள். மத நல்லிணக்கம் படும் பாட்டை குறித்து கவலைப் பட்டிருக்கிறீர்கள்.

“இந்துக்களை எதிர்த்து கலகம் செய்வோரை விட்டுவிட்டு தவறான திசையில் கல்லெறிந்து கொண்டிருக்கிறீர்களே” என்று ஆதங்கப் பட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

ஒரு சிறு திருத்தம். நாங்கள் ஹிந்துக்களை எதிர்ப்போருக்காக பேசவில்லை. மதத்தின் பெயரால் கலகம் செய்பவர்களுக்காக – அவர் யாராக இருந்தாலும் சரி – ஹிந்துவாக இருந்தாலும் சரி – கிறித்துவராக இருந்தாலும் சரி – இஸ்லாமியராக இருந்தாலும் சரி – யாராக இருந்தாலும் அவர்களை எதிர்த்தே தான் வந்திருக்கிறோம்.

நண்பர் திருச்சிக்காரன் அவர்கள் இறை நம்பிக்கையாளர்கள் இன்னும் அதிக அதிகாரம் எடுத்துக்கொள்கின்றனர். பிற மார்க்கத்தவர் வணங்கும் தெய்வங்களை இழிவு படுத்துகின்றனர். என்று தான் குறிப்பிட்டு வந்திருக்கிறார்.

ஒரு குறிப்பட்ட மார்கத்தினரின் நடவடிக்கைகளை மட்டுமே அவர் சாடவில்லை. அவர் குறிப்பிடும் நபர்கள் கிறிஸ்துவை பின்பற்றுபவர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்பது கட்டாயம் இல்லையே. இஸ்லாமியர்களாக கூட இருக்கலாம். ஏன்.. அவர் சார்ந்திருக்கும் ஹிந்து மதத்தவராகக் கூட இருக்கக் கூடாதா? ஹிந்து மதத்திலும் பிற மதத்தவர் நம்பிக்கையையும், தெய்வத்தையும் இகழ்ந்து பேசுபவர்கள் இருக்கலாம்,. இருக்கலாம் என்ன? இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்கும் அவர் சொல்வது பொருந்துமே. இதைப் படிக்கும் அப்படிப்பட்டவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள உதவலாமே. அவர் அதை ஆரம்பத்தில் சொன்னாலும் சொன்னார். “நீங்கள் என்னைத்தான் சொல்கிறீர்கள்.” என்று இங்கு பதிவு செய்யும் கிறித்தவ அன்பர்கள் அனைவரும் வரிந்து கட்டிக்கொண்டு வருவது “என் அப்பன் குதிருக்குள் இல்லை” என்று சொல்வதைப் போல அவர்கள் நடவடிக்கைகளை அவர்களே இன்னும் பகிரங்கமாக வெளிச்சம் போட்டு காட்டிக்கொள்கிறார்கள். (உங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.)

வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் நாம் செயல்படும்போது அந்த நம்பிக்கையை அழுத்தி திணித்து மோதல் இல்லாமல் அமைதியாக வழிபடுங்கள் என்று தானே அவர் சொல்கிறார். இதை ஏற்றுக்கொள்வதில் நமக்கு என்ன கஷ்டம். “நீங்கள் சொல்வது சரிதான். நன்றி திருச்சிக்காரன் அவர்களே” என்று சொல்வதை விட்டு வீராவேசமாக பொங்கி எழுந்து அனல் பறக்கும் படி பிற மத துவேஷத்தில் ஈடுபட்டு வருவது யார் என்பதை நீங்களே சற்று நிதானமாக படித்து பார்த்தீர்கள் என்றால் விளங்கும்.
உங்களுக்கு நேரம் இல்லாவிட்டால் நானே சிலரின் கருத்துக்களை இங்கு தருகிறேன்”

1. “கருப்பண்ண சாமி என்று புகழப்படும் தீயசக்தி”யை கோபப்படுத்தினால் அது செய்யும் துஷ்டத் தனங்களை பலர் அனுபவித்ததை நேரில் கண்டிருக்கிறேன்” – நண்பர் சில்சாம்.

2. “எங்கள் ஆராய்ச்சியின் முடிவுதான் மேற்கூறிய “பேய் பிசாசு” விஷயமெல்லாம்…” – இது நண்பர் அசோக்.

3. “மதத்தை தேடுவதில் இறைவனை மறந்துவிடுகிறோம்… உண்மையில் அதுதான் எங்கும் நடந்து கொண்டுள்ளது… – நண்பர் மஸ்தான் அவர்கள்

4 “இந்தியாவுக்கு நாகரீகமும் செழிப்பும் வரக் காரணமே கிறித்தவ துறவிகளின் தியாகம் தான்” – சில்சாம் மறுபடியும்.

5. “நாம் அனைவரும் மதத்தால் வேறுபட்டிருக்கிறோம். ஆனால் இனத்தால் மனிதர்கள்.தேசத்தால் இந்தியர்கள். அன்பு செலுத்துவதிலோ அல்லது நாட்டுப்பற்றிலோ நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.” – இது சகோதரர்கள் சில்சாம் மற்றும் அசோக்குக்கு எனது பதில்.

மேற்கூறிய கருத்துக்களை நடுநிலையாக இருந்து நீங்கள் சொல்கிறீர்களே விருப்பு வெறுப்பற்ற நிலை என்று அந்த நிலையில் இருந்து நீங்களே சீர்தூக்கி பாருங்கள். இவற்றில் நடுநிலையான வாசகம் யாரிடம் இருக்கிறது என்று புரியும்.

(நண்பர் ராம் அவர்கள் நான் வெகு நீளமாக பதிவுகள் செய்வதாக கூறி இருக்கிறார். ஆகவே அனைவரும் படிக்கும் வகையில் உங்களுக்கான விடைகளை தொடர் பதிவுகளாகத் தருகிறேன். மற்றவை – அடுத்த பதிவில்.)

இவ்வளவு ஏன் – உங்கள் கருத்தில் கூட ராமனையும், கண்ணனையும் இழிவு படுத்தி பதிவு செய்திருக்கிறீர்கள். இஸ்லாமிய அன்பர்கள் தொழுகை செய்யும் போது விரலை ஆட்டுவதையும், சபரிமலை யாத்திரையையும் கேலி செய்து பதிவூட்டம் செய்கிறீர்கள்.

விரலை ஆட்டாமல் தொழுகை செய்தால் இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டாரா என்று “நீங்கள்” கேட்கவேண்டிய அவசியம் – அதனை எள்ளி நகையாட வேண்டிய அவசியம் – என்ன வந்தது? அவர் விரல். அவர் தொழுகை. அவர் வணங்கும் தெய்வம் உங்களிடம் வந்து அதை பற்றி புகார் படித்ததா என்ன? – இப்படி அனாவசியமாக வாயைக் கொடுக்கவேண்டியது. வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியது. அதன் “குய்யோ முறையோ” என்று அலறவேண்டியது. தேவைதானா சகோதரி.

உங்களுக்கு நம்பிக்கை இல்லாத “ராமன் காடு போனதைப் பற்றியும்” “கண்ணன் வெண்ணை உண்டதைப் பற்றியும்” நீங்கள் கேலிபேச வேண்டிய அவசியம் என்ன? உங்கள் தெய்வத்தின் பெருமையை சொல்லும் போது, “எங்க அப்பா நல்ல அப்பா” என்று சொல்லுங்கள். ஒத்துக்கொள்கிறோம். அது நியாயம் என்று ஏற்றுக்கொள்கிறோம். முடிந்தால் நாங்களும் வந்து மண்டியிட்டு தொழுது விட்டுப் போகிறோம்.
அதற்க்கு மாறாக, “”எங்க அப்பா ஆபீசர். அவர்தான் அப்பா மட்டும் தான் நல்ல அப்பா. உங்க அப்பா எல்லாம் என்ன வேலை பாக்குறாரு. அவர் மட்டம். அதனாலே எங்க அப்பா தான் உனக்கும் அப்பா” – என்று பையனிடம் சொன்னால் அடிக்கத்தான் செய்வான். தாங்கிக்கொள்ளத் தான் வேண்டும். (அதிலும் இந்தக் காலத்து பசங்கள் ரொம்ப வேகம்.)

திருவிளையாடல் படத்தையும், ராமாயணம் மகாபாரதம் சீரியல்களையும் பார்க்கிறவர்கள் பார்க்கட்டுமே.
உங்களுக்கு பிடிக்காவிட்டால் நீங்க “இயேசு அழைக்கிறார்” சேனல் பார்த்துவிட்டுப் போங்களேன். யார் தடுக்கிறார்கள்.

இந்த நாட்டில் சாதாரமாக வாழும் கிறிஸ்தவ இஸ்லாமிய சீக்கிய சமூகத்தவர் எங்களை மதித்து தான் வருகிறார்கள் என்றால் அதற்க்கு இந்த தேசத்தின் கலாசாரம் தான் காரணம். நமக்கு வாய்த்த முற்பிதாக்கள் தான் காரணம் என்று சொல்லி இருக்கிறீர்களே. நற்பண்புகளை வளர்க்கும் இந்திய கலாசாரத்தின் மீது உங்களுக்கு ஏன் இந்த ஆதங்கம்?.

“பாரத விலாஸ்” – படம் தேசிய ஒருமைப்பாட்டை நமக்கு கற்றுக்கொடுக்கவில்லை. நம் நாட்டில் நிலவி வும் ஒற்றுமை உணர்வை பெருமிதமாக வெளிப்படுத்தியது. “எல்லா மதமும் என் மதமே. எதுவும் எனக்கு சம்மதமே” என்று இந்த நாட்டில் கோடான கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்களே. அந்த ஒற்றுமை உணர்வை பெருமையுடன் வெளிப்படுத்திக்கொண்டது அந்த திரைப்படம்.

(அடுத்த பதிவிலும் பதில் தொடரும்..)

“பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்” மேலை நாட்டில் கல்வி அறிவு காரணமாக குற்றங்களாகப் பதிவாகிறது என்று சொல்லி இருக்கிறீர்கள். அதனால் அந்த விகிதம் குறைந்து விடவில்லையே. உலகிலே குற்றங்கள் மிகுந்த மாநிலம் – பாலியல் வன்முறை மிகுந்த மாநிலம் – என்ற பெருமை “சான் பிரான்சிஸ்கோ”வுக்குத் தானே கிடைத்திருக்கிறது. அப்படி இருக்க அவை பதிவானால் தான் என்ன? பதிவாகாவிட்டால் தான் என்ன?

“இங்கோ கலாச்சாரக் கட்டுப்பாடு காரணமாகவும் சட்ட அமைப்புகளின் மோசடிகளின் காரணமாக்வும் 90% பதிவாகிறதே இல்லை; கழுவிக் குளித்துவிட்டுப் போய்க் கொண்டே இருக்கிறார்கள்; தைரியசாலிகள் தற்கொலை செய்துக் கொள்ளுகிறார்கள்; கோழைகளோ வாழ்ந்து தொலைக்கிறார்கள்” – உங்கள் ஆதகம் புரிகிறது சகோதரி. ஆனால் இந்தக் குற்றங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தவர் மட்டுமே ஈடுபடுகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. தனி மனித ஒழுக்கம் என்பது எல்லா இனத்தவருக்கும், எல்லா மதத்தவருக்கும் பொது. அதனை மீறுபவர்கள் எந்த மார்கத்தவராக இருந்தாலும் கண்டிக்கப் படவேண்டியவர்களே. தண்டிக்க பட வேண்டியவர்களே. அதற்கு அவர்கள் சேர்த்திருக்கும் மார்க்கத்தின் மீது ஒட்டுமொத்தமாக பழி சுமத்த முடியாது.

கரூர் சம்பவத்தை உதாரணமாக சுட்டிக்காட்டி இஸ்லாமிய குழந்தையை இந்து கொலை செய்தமைக்கு மார்க்கமா காரணம்? என்று நீங்களே கேட்டு அறிந்தோ அறியாமலோ ஒருவர் செய்யும் தவறுக்கு அவரது மார்க்கம் காரணமே அல்ல என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

“உங்க கிறிஸ்தவ மதம் யோக்கியமா” – என்று நாங்கள் எப்போதும் கேட்கவே இல்லை. நீங்கள் இந்து மார்க்கத்தையும், பிற மார்க்கங்களையும் எள்ளி நகையாடி கேள்விகள் கேட்கும் போது எங்கள் தரப்பை நாங்கள் எவ்வளவு நிதானத்தை கடைப் பிடிக்க முடியுமோ அவ்வளவு நிதானமாகவே எடுத்து சொல்லி இருக்கிறோம். நீங்கள் தான் பிற மார்க்கங்களை கேலி செய்தே தீரவேண்டும் என்பது போல பேசுகிறீர்கள்.

“மிஷினரி பயிற்சி களத்துக்குச் சென்று சர்வே செய்து பார்க்க சொல்லி இருக்கிறீர்கள்” – அவர்களை பற்றி உயர்ந்த அபிப்ராயம் கொண்டிருக்கும் உங்கள் பதிவுகளைப் பார்த்தாலே அவை விளங்குகிறதே.

சமீபத்தில் கோவையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் சென்னையில் இருந்து சுற்றுலாவுக்கு அழைத்து வந்த கிறித்துவப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கையில் நோட்டீஸ்களை கொடுத்து விநியோகம் செய்யவைத்தது அந்தப் பள்ளி நிர்வாகம். அதில் “ஹிந்து மத தெய்வங்களை இகழ்ந்து கேவலமாகச் சித்தரித்து கிறிஸ்தவத்துக்கு மாறும்படி அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது.” அந்த பள்ளியின் தாளாலரோ-நிர்வாகியோ இதற்காக கைது செய்யப்பட்ட விவகாரம் பத்திரிக்கைகளில் வெளிவந்ததே. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது போல .. இதை வைத்தே நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று எதிர்பார்கிறேன்.

“உங்கள் தாய் மதம் சரியாக இருந்தால் நீங்கள் ஏன் வெளியேறிச்சென்று அத்வானத்தில் நிற்கவேண்டும்?” – என்று கேட்டிருக்கிறீர்கள்.

மனிதர்கள் செய்யும் தவறுக்கு மார்க்கங்கள் தான் காரணம் என்றால் அப்புறம் இந்த உலகில் எந்த மார்க்கமும் இருக்கவே முடியாது சகோதரி.

மார்க்கங்களை கடைப்பிடிப்பவர்கள் அனைவருமே சாதாரண மனிதர்கள் தான். நல்லவை, தீயவை
அனைத்தும் கலந்த கலவைகள் தான் அவர்கள்.

ஆனால் மார்க்கங்கள் அனைத்துமே நாம் கடைத்தேற வழி காட்டுகின்றன. அவரவருக்கு விருப்பமான மார்க்கங்களை அவர் அவர் கடைப்பிடித்துக்கொள்ள சுதந்திரம் இருக்கிறது. அந்த வகையில் உங்கள் மனதுக்கு பிடித்த மார்க்கத்தை தேர்ந்தெடுத்திருக்கும் நீங்கள் மன உளைச்சல்கள் நீங்கி நிம்மதியாக வாழ –

இந்த ஹிந்து மார்க்கத்து சகோதரனின் பிரார்த்தனைகள் என்றும் உங்களுக்கு உண்டு.

அன்புடன் – மணியன்.

Dear tiruchikar,
I am a person who believe in
God. But I cannot show you god as a science experiment. So i recommend you to follow atheism and I can prove you atheism is right.
If you are true to yourself you should follow atheism because it is already proved. But i think you want to run a show and don’t want to take any attitude even it is proved. Be true to yourself and follow atheism. Dont go to any religious temples to run a show.

Dear Sandhosh,

Aetheism holds Ground, still we keep the research to go on. Why are you so up set? Why do you have so many assumptions and become so despair ? We are not doing this for show. Any person with neutral approach can understand that we have a meaningful discussion, and we are trying to shape a civilised soceity by liberating the humanity from the clutches of barabaric dogmas.

You can have your belief, we only request all the belivers not to show bigotry for other beliefs! Is this request a mere show? Dont you see our Genuine concern in this?

I HAVE REPRODUCED THE COMMENT WHICH WAS SENT BY MR. KADAMABAN. HE SENT THAT COMMENT UNDER THE ANOTHER TITLE. THAT COMMENT IS TO BE POSTED UNDER THIS HEADING.

MR. KADAMBAN says:

பிற தேவி தேவதைகளை வணங்கவேண்டிய தேவையில்லை. ஏனெனில்: கீழே வரும் எண்கள் பகவத்கீதையில் உள்ளபடி

9.23 தேவர்களுக்கு எவற்றையெல்லாம் யாகங்களாக ஒரு மனிதன் படைக்கின்றானோ அவையும் உண்மையில் கிருஷ்ணருக்கானவையே ஆனால் உண்மையான முழு அறிவின்றி அவை படைக்கப்படுகின்றன(அது அவிதிபூர்வகம் ஆகும் இதன் பொருள் சாஸ்திரத்திற்கு புறம்பானது) 9.24 யாகத்தின் ஒரே நோக்கமும் அனுபவிப்பாளனும் கிருஷ்ணரே.. கிருஷ்ணரது உண்மையான தெய்வீக இயற்கையை மதிக்காதவர் இழிகின்றனர். 9.25 தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களிடையே பிறப்பார்கள். பேய்களையும் பூதங்களையும் வழிபடுபவர்கள் அத்தகையவரிடையே பிறப்பார்கள் முன்னோர்களை வழிபடுபவர்கள் முன்னோர்களிடையே பிறப்பர் கிருஷ்ணரை வழிபடுபவரோ கிருஷ்ணருடன் வாழ்வர்.
தேவர்களின் உலகம் இந்த பௌதீக உலகிலேயே உள்ளது. இவ்வுலகம் அழியும் போது தேவர்களின் உலகமும் அழிந்துவிடும்.

15. 19-20 யாராயினும் ஐயமின்றி கிருஷ்ணரை முழுமுதற்கடவுளாக அறிகின்றானோ அவன் எல்லாம் அறிந்தவனாக அறிவாயாக. அவன் முழு இறையன்புத்தொண்டில் ஈடுபடுகிறான். இதுவே வேதத்தின் ரகசியமான பகுதி இதை புரிந்தவன் அறிஞரே. அவன் முயற்சியில் பக்குவமடைவான். 11.53 வேதகல்வி,தவம், தானத்தால் கிருஷ்ணரை அறியமுடியாது. 11.54 பக்தித்தொண்டால் மட்டுமே கிருஷ்ணரை அறியமுடியும். 18.55 பக்தித்தொண்டால் மட்டுமே கிருஷ்ணரை அறிந்துகொள்ள முடியும். கிருஷ்ணர் இருப்பதை அறிந்து கொண்டபின் அவன் கிருஷ்ணரின் நாட்டிற்குள் நுழையமுடியும். 18.56 எல்லாவிதமான செயல்களிலும் ஈடுபட்டவனாய் இருந்தாலும் கிருஷ்ணரின் பாதுகாப்பின் கீழ், கிருஷ்ணரின் பக்தன் கிருஷ்ணரின் கருணையால் அழிவற்ற நித்யமான தலத்தை சென்றடைவான்.

== அபக்தன்(பக்தனல்லாதவன்) யார் எப்படி இருப்பான் என கிருஷ்ணர் கூறுகிறார் ==
7.15 சற்றும் அறிவற்ற மூடர்களும், மனிதரில் கடைநிலையோரும், மாயையால் அறிவு கவரப்பட்டவர்களும், அசுரரின் நாத்திக தன்மையை ஏற்றவரும் என நான்கு விதமான தீயார் கிருஷ்ணரைச் சரணடைவதில்லை. 7.20 ஜட ஆசைகளால் அலைக்கழிக்கப்பட்ட மனத்தை உடையவர்கள் தேவர்களுக்குச் சரணடைந்து, தங்களது இயற்கைக்கேற்ற வழிபாட்டு முறைகளையும், விதிகளையும் பின்பற்றுகின்றனர்.

7.21 எல்லோர் இதயத்திலும் கிருஷ்ணர் பரமாத்மாவாக இருக்கிறார். தேவர்களை வழிபட வேண்டுமென ஒருவன் ஆசைப்படும்போது குறிப்பிட்ட தேவதையிடம் பக்தி செய்யுமாறு அவனது நம்பிக்கையை கிருஷ்ணரே உறுதிப்படுத்துகிறார். 7.22 அத்தகு நம்பிக்கையில் உறுதிப்பட்டவனாய் குறிப்பிட்ட தேவதையிடமிருந்து பலன்களை நாடி தனது ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறான் ஒருவன்: ஆனால் உண்மையில் இந்த நன்மைகளெல்லாம் கிருஷ்ணரால் மட்டுமே அளிக்கப்படுவனவாகும்.
7.23 சிறுமதி படைத்த மனிதர் தேவர்களை வழிபடுவர். அவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகளும் தாற்காலிகமானவையும் ஒரு எல்லைக்கு உட்பட்டவையுமே: தேவர்களை வழிபடுவோர் தேவ உலகங்களை அடைவர். கிருஷ்ண பக்தர்களோ நிச்சயமாக இறுதியில் கிருஷ்ணரது உன்னத உலகையே அடைகின்றனர்.

7.24 கிருஷ்ணரை அறியாத அறிவற்றவர் சிலர் கிருஷ்ணர் இந்தத் தனித்தன்மையையும், உருவத்தையும் ஏற்றிருப்பதாக எண்ணுகின்றனர். அறிவின் சிறுதன்மையால் அழிவற்றதும் உன்னதமுமான கிருஷ்ணரது உயர் இயற்கையை அவர்கள் உணராதவர்களாக இருக்கின்றனர். 7.25 சிறுமதிகொண்டோருக்கும் அறிவீனருக்கும் கிருஷ்ணர் தோன்றுவதேயில்லை: கிருஷ்ணரது அந்தரங்க சக்தியான யோக மாயையால் அவர்களுக்கு தான் மறைக்கப் பட்டிருக்கிறேன் என்கிறார். எனவே பிறப்பும் முடிவும் அற்ற கிருஷ்ணரை மயங்கிய இவ்வுலகு அறிவதில்லை. 7.26 முழுமுதற்கடவுளான கிருஷ்ணரை கடந்த காலத்தில் நடந்தவை, இப்போது நடப்பவை, இனி நடக்கப்போகுபவை எல்லாவற்றையும் அறிவார்.. எல்லா ஜீவாத்மாக்களையும் கிருஷ்ணர் அறிவார்;. ஆனால் கிருஷ்ணரை யாருமறியார்.

9.11 மனித உருவில் கிருஷ்ணர் தோன்றும் போது கிருஷ்ணரை மூடர்கள் ஏளனம் செய்கின்றனர். கிருஷ்ணரது உயர் இயற்கையையும் எல்லாவற்றின் மீதுமான அவரது ஆட்சியையும் அவா;கள் அறியார்கள். 9.20 சுவர்க்க உலகங்களை நாடி வேதங்களைப் பயின்று ஸோம ரஸத்தை அருந்துபவர்களும் கிருஷ்ணரையே மறைமுகமாக வழிபடுகின்றார்கள். அவர்கள் இந்திரனின் உலகத்தில் பிறவியெடுத்து தேவர்களின் இன்பத்தை சுகிக்கிறார்கள். 9.21 இவ்விதமாக ஸ்வர்க்கப் புலனின்பங்களை சுகித்த பிறகு அவர்கள் மீண்டும் நித்யமற்ற இவ்வுலகிற்குத் திரும்புகின்றனர். இவ்வாறாய் வைதிகக் கொள்கைகளின் மூலமாக சபல சுகத்தையே அவர்கள் அடைகின்றனர்.

16.19 மனிதர்களில் கடைத்தரமானவர்களும், அழுக்காறும், குறும்புத்தனமும் கொண்டவர்களுமானவர், ஜட இருப்பின் கடலிலே பல்வேறு அசுர வாழ்வினங்களுக்குள் கிருஷ்ணரால் தள்ளப்படுகின்றனர். 16.20 அசுரத்தனமான வாழ்வினங்களில் மீண்டும் மீண்டும் பிறவி பெற்று கிருஷ்ணரை அடைய முடியாதவராகின்றனர். படிப்படியாக வாழ்வின் மிக மோசமான கடைத்தரங்களில் மூழ்குகின்றனர். 16.21 நரகத்தின் மூன்று கதவுகளான காமம், கோபம்,பேராசை இவற்றால் கிருஷ்ணரை அடைய முடியாது. 16.23 எவனாயினும் சாஸ்த்ரத்தின் நெறிகளை புறக்கணித்து காமத்தில் மனம்போனபோக்கில் செயல்பட்டு இருப்பவன் எவனோ அவன் பக்குவம், சுகம், பரமகதியை அடையமுடியாது. 16.24 சாஸ்த்ரவிதிகளில் எது கடமை எது கடமையல்ல என்பதை உணர்ந்து இத்தகு சட்டத்திட்டங்களை அறிந்து படிப்படியாக உயர்ச்சி பெற ஏற்ற முறையில் செயல்படவேண்டும்.

அசுர மற்றும் நாத்திகத்தின் கருத்து: 16.8 இவ்வுலகம் பொய் ஆதாரமேதுமில்லை. அனைத்தும் காமத்தினாலே உண்டாகிறது. கடவுள் இல்லை என்பர். 16. 11-12 நாத்திகனுக்கு வாழ்வு முடியும் வரை புலன்திருப்தியே தேவை என்பான். புலன்திருப்திக்காக அநியாயமாக செல்வம் சேர்கிறான். 16-13,14,15 அசுரத்தன்மையுள்ளவன் எண்ணுகின்றான்: இன்று நான் இவ்வளவு செல்வமுடையவனாக உள்ளேன். எனது திட்டத்தின்படி மேலும் செல்வத்தை அடையபோகிறேன். எதிர்காலத்தில் இது மேலும் மேலும் மிகும். அவன் என்னுடைய எதிரி அவனை நான் தீர்த்துவிட்டேன். என்னுடைய மற்ற எதிரியும் கொள்ளப்படுவான். எல்லாவற்றின் இறைவன் நானே. நானே சுகிப்பவன். நானே பக்குவமானவன். பலமுடையவனும் மகிழ்பவனுமாக இருக்கிறேன். என்னைபோன்று பலமுடையவனும் மகிழ்பவனும் வேறு எவனுமில்லை. நானே. யாகம் தானம் செய்வேன் இவ்வாறு இன்புறுவேன்.

2.63,64,65 மனிதன் புலன்விசயங்கள் எண்ணுவதால் புலன் விசயங்களில் பற்று உண்டாகிறது. பற்றால் சினம் உண்டாகிறது. சினத்தினால் முழுமயக்கம் உண்டாகிறது. மயக்கத்திலிருந்து நினைவின் நிலை இழப்பு உண்டாகிறது. நினைவிழப்புக்குபின் அறிவிழப்பும், அறிவிழப்பால் இழிவு உண்டாகிறது.

== நமது சாஸ்த்ரவிதிகளை எப்படி புரிந்து கொள்வது : ==

நாம் வாழும் இந்த காலம் கலியுகமாகும். சண்டையும் சச்சரவும் நிறைந்ததாகவே இருக்கும் என்பதே இதன் அறிகுறிகள். சண்டையம் சச்சரவும் வரக்காரணமாக உள்ள அடிப்படைத் தவறுகள் 1.போதை வஸ்து பயன்படுத்துதல், 2.மாமிசம் உண்ணுதல், 3.சூது செய்தல், 4.முறையற்ற உடலுறவு செய்தல். இந்த நான்கு இடங்களில் தான் கலிபுருஷனை அர்ஜுனின் பேரனான பரிக்ஷித்ராஜா இருக்க அனுமதித்தார். இதை 5000 வருடங்களுக்கு முன் வேத சாஸ்த்ரங்களை தொகுத்த வியாசர் பாகவதபுராணத்தில் கூறியூள்ளார்.

போதை வஸ்து பயன்படுத்துதல் என்பது தவம். கட்டுப்பாடு இல்லாததாலே செய்கிறார்கள். மாமிசம் உண்ணுதல் என்பது கருணை இல்லாததாலே செய்கிறார்கள். முறையற்ற உடலுறவு செய்தல் என்பது தூய்மை, ஒழுக்கம் இல்லாததாலே செய்கிறார்கள. சூது செய்தல் என்பது உண்மை இல்லாததாலே செய்கிறார்கள். சரியாக பயன்படுத்தாத காலம்,பணம்,மனம் மற்றும் பல நல்ல விசயங்களை வீண்ணடிப்பதும் சூது ஆகும். உதாரணமாக லாட்டரிக்கு செலவு செய்தல் பணவிரயம் ஆனால் சினிமா,டிவி பார்ப்பது பணம்,மனம்,புத்தியிம் மொத்த விரயமாகும். மாமிசம் உண்ண கூடாது என சநாதன தர்மம் (இந்துமதம்), புத்தமதம்,ஜைனமதத்தில் கூறுகிறது. மாமிசம் உண்பதால் அதிகமாக வியாதிகள் வருகின்றது என விஞ்ஞானம் கூறுகிறது. சினிமாயிலும்,டிவியிலும் இந்த 4 வித கட்டுப்பாடுகள் இல்லாத விசயங்களையே அதிகமாக காட்டுகிறார்கள்.

உதாரணமாக நாம் நமது குழந்தை மற்றும் தாய்தந்தைவுடன் தெருவில் நடக்கும்போது ஒரு ஆணும் பெண்ணும் அந்தரங்களில் செய்யும் கட்டிதழுவுதல் முத்தமிடுதல் செயலைக்கண்டால் எந்த அளவு முகம்,மனம் சுழிப்போம். அதுபோல் ஓரு பெண் தனது மாராப்போ நகன்றுவிடுதல் அல்லது கணுக்காலோ தொடையோ தெரியும்படி ஆனால் எத்தனை முறை சரிசெய்து கொள்கிறார்கள். ஆனால் சினிமா,டிவியிலும் பெண்கள் உள்ளுறுப்புகள் தெரியும்படி ஆபாசமாக நடிக்கிறார்கள். இதை தவறு என்று தெரியாமல் பணம் கொடுத்து நாம் நமது குழந்தை மற்றும் தாய்தந்தையுடன் பார்கின்றோம், மற்றும் பார்க்க அனுமதிக்கின்றோம். இது சரியா என சிந்திக்கவும்.

இந்த 4 வித கட்டுப்பாடுகள் சராசரி மனிதனின் நற்குணங்களாகும். இக்கட்டுபாடுகள் இருந்தாலே கலியூக பாவங்களில் இருந்து விடுதலை பெறமுடியும். அறிவுள்ள மனிதன் இதை அப்படியே புரிந்துகொண்டு மேற்சொன்னபடி நடப்பான். அறிவில் குறைவுடையவன் எதிர்மறையான கேள்வி கேட்டு தான்தோன்றி தனமாக வாழ ஆசைப்பட்டு மிருகம் போல் வாழ்வான் என சாஸ்த்ரங்கள் கூறுகின்றது. கலியுகத்தில் யாருடைய மனதில் பாவம் செய்ய எண்ணங்கள் உள்ளதோ அவர்கள் சாஸ்த்ரத்தையும் குருவையும் நம்பமாட்டார்கள்.

ஒரு தாய்தந்தை தனது குழந்தையையோ அல்லது தானோ டாக்டர், இஞ்சினியர், வக்கில், பொரியபதவியோ, பணக்காரனாகவோ முயற்சி செய்யலாம். இதில் ஏதாவது ஒன்று உறுதியாக ஆகலாம் அல்லது ஆகாமலும் போகலாம். ஆனால் ஒன்று உண்டு அது ஆகலாம் அல்லது ஆகாமல் போகலாம் என்று கூறமுடியாது. ஏனெனில் அது உறுதியாகவும், கண்டிப்பாகவும் ஆகியே தீரும். அது தான் மரணம் மற்றும் மரணத்திற்கு பின் வரும் மறுபிறப்பு. ஒன்று ஆகலாம் அல்லது ஆகாமல் போகலாம் என்ற விசயத்திற்கே எவ்வளவு முயற்சி செய்யும்போது ஒன்று உறுதியாகவும், கண்டிப்பாகவும் ஆகியே தீரும் எனில் எந்தளவு முயற்சி செய்யவேண்டும்.

உலகம் முழுவதும் இந்த 4 வித கட்டுப்பாடுகள் இன்றியே வாழ்கின்றனர். மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசமே பக்தி செய்வதும், கட்டுப்பாடாக வாழ்வதும் தான். ஆனால் மனிதன் மிருக நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறான்.

பைபிளில் யோவான் 3.12ல் இவ்வுலக விஷயங்களைப்பற்றி நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை என்ற நிலையில் ஆன்மீக விஷயங்களைப்பற்றி நான் சொன்னால் நீங்கள் நம்ப போகிறீர்களா? என ஏசு சொல்வதாக உள்ளது. எண்ணிலடங்காத ஆன்மீக விஷயங்கள் இந்துமதத்தில் உள்ளது. கடவுள் ஒளிவடிவில் தான் பிற மதங்களில் வணங்குகின்றனர். ஆனால் கடவுளை பரிபூரணமானவர் என்கின்றனர். கடவுள் பரிபூரணமானவர் என்றால் ஒரு குறையும் அற்றவர் என்று அர்த்தம். ஒரு குறையும் அற்றவர் எனில் உருவமில்லாதது ஒரு குறையாகிவிடும்.

கடவளை ப்ரம்மன், பரமாத்மா,பகவான் என்ற மூன்று நிலையில் காணலாம். கிருஷ்ணரின் உடலிலிருந்து வெளிப்படும் ஒளியே ப்ரம்மன் இதையே பிற மதங்களில் வணங்குகின்றனர். விஷ்ணு தான் பரமாத்மா ரூபத்தில் எங்கும் நிறைந்திருப்பவர் ஆவார். பகவான் என்றால் கிருஷ்ணர் மட்டுமே ஆவார். பகவத்கீதையில் கிருஷ்ணர் கூறுவது போல் பைபிளிலும் குரானிலும் பிற தேவர்களை வணங்கத் தேவையில்லை என கூறுகிறது. அனைத்து ஆன்மீக நூல்களிலும் கடவுள் ஒருவரே என்று கூறுகிறது. அவரே பிரபஞ்சம் முழுவதும் படைத்தார் என்கிறது. அப்படியானால் ஒரு உலகை பல கடவுள்கள் படைத்திருக்க முடியாது.

== கிருஷ்ணர்,ஏசுகிருஷ்து, அல்லா, புத்தர் இந்த பெயர்கள் ஒருவரை குறிக்கும். ==

கிருஷ்ணர்,ஏசுகிருஷ்து, அல்லா, புத்தர் இந்த பெயர்கள் ஒருவரை குறிக்கும். உதாரணம் சூரியன் ஒவ்வொரு நாட்டில் வேவ்வேறு பெயர்களில் அழைப்பதால் வெவ்வேறானவர் என ஆகாது அதுபோல கிருஷ்ணரைப்பற்றியே அனைத்து ஆன்மீக நூல்களும் கூறகின்றது. ஏசு, நபிநாயகம்,புத்தரை பற்றிய தகவல்கள் மஹாபவிஷ்ய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் புத்தரை பற்றி பத்மபுராணம், பாகவத புராணத்தில் கூறுகிறது. நபிநாயகம் பற்றிய அதர்வண வேதத்தில் இரண்டு இடங்களில் கூறுகிறது. குரானில் ஈஷாநபி என்று ஏசுவை கூறுகிறது. அவர் அல்லா பற்றிதான் கூறவந்தார் என உள்ளது.

பத்மபுராணத்தில் ராமானுஜர் மத்வாச்சாரியார், நிம்பக்கர், விஷ்ணுசாமி போன்ற ஆசாரியர்கள் கலியுகத்தில் வந்து கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் என்று நிருபிப்பார்கள் என பத்மபுராணத்தில் உள்ளது. ஆன்மீக நூல்கள் கூறுகிறது கிருஷ்ணர் பரமபதத்தில் இருப்பதாகவும், ஏசு, அல்லா பரலோகத்தில் இருப்பதாகவும் கூறுகிறது. கிருஷ்ணரை பரமபுருஷர் எனவும், பிற நூல்களில் பரமபிதா எனவும் கூறுகிறது. கிருஷ்ணர் நானே எல்லா வேதங்களிலும் அறியப்பட வேண்டியவன் அனைத்திற்கும் ஆதிமூலம் விதையளிக்கும் தந்தை எனவும் எனது மேற்பார்வையின் கீழே இயற்கை இயங்குகிறது எனவூம் கிருஷ்ணர் கூறுகிறார். கடவுளுக்கு உருவமில்லை என்பது தவறு என உணர சில உதாரணங்கள். பைபிளில் யாகோவாவுக்கும் மஹா விஷ்ணுவுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. பறவையில் வருவார் என்கிறது அது கருடனை குறிக்கும். எதிரியை அழிக்க நெருப்பை அனுப்புவார் அது சுதர்சனசக்கரம் ஆகும்.. குச்சி,தடி வைத்திருப்பார் அது புல்லாங்குழல், கதையே. கேடயம் வைத்திருப்பார் கிரீடம் அணிந்திருப்பார் இடிபோன்ற குரலை உடையவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார் எல்லாவற்றையும் எரிக்கும் நெருப்பாகவும் வர்ணிக்கப்படுகின்றார்.

கடவுளுக்கு நிச்சயமாக உருவம் உண்டு அது பொதிகமானது அல்ல ஆன்மீகமானதே ஆகும். குறையுடைய பௌதீகப் பார்வையால் கடவுளின் உருவத்தை காண ஏற்பட்டதே உருவ,விக்ரஹ வழிபாடு. ஆத்மாவாகிய நாம் தான்தோன்றிதனமாக வாழ ஆசைபடும் போது ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டதும் பௌதீகமாக சபிக்கப்பட்டதும் தான் 14 பௌதீக உலகங்கள் 84 லட்சம் உயிரினங்கள் என ப்ரஹ்ம வைவர்த்த புராணம், பத்மபுராணத்தில் உள்ளது.

அவை நீர்வாழ்வன(ஜலஜா நவலக்ஷானி) 9 லட்சம், பயிர்.மரம்,செடி(தாவரலக்ஷவிம்ஷதி) 20 லட்சம், பூச்சிகள் (க்ருமயாருத்ரலங்க்யாக) 11 லட்சம், பறவைகள் (பக்ஷினாம் தஷலக்ஷானி) 10 லட்சம், பிராணிகள் (பஸவஸ் த்ரும்ஷத்லக்ஷானி) 30 லட்சம், மனிதன்(சதுர்லக்ஷானி மானுஷயம்) 4 லட்சங்கள் உள்ளது. இதில் மனிதன் மாமிசம் உண்டுவந்தால் அடுத்த பிறவி சிங்கம், புலியாக பிறப்பான். நிர்வாணமாக இருக்கவிரும்புபவன் மரம் செடியாக பிறப்பான். அதிக காமுகனாக இருந்தால் நாய் பன்றியாக பிறப்பான் என்கிறது. நமது பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப 14 உலகங்களில் பிறவி எடுப்போம். பூமி,புவ, ஸ்வர்க, மஹ, ஜன,தப,சத்ய என மேலே 7 சுவர்க உலகங்கள் உள்ளன. அதள, விதள, சுதள, மஹாதள, ரஸாதள, தளாதள, பாதாள என கீழே 7 நரக உலகங்கள் உள்ளன. எல்லா உலகங்களுக்கும் மேலே அழியாத நித்யமான ஆனந்தமயமான ஆன்மீக உலகம் உண்டு. அது தான் கிருஷ்ணரின் கோலோக ப்ருந்தாவனம். மற்றும் விஷ்ணுவின் விரிவங்கங்களுக்கு ஏற்ப எண்ணற்ற வைகுண்ட உலகங்கள் உள்ளன. இந்த ஆன்மீக உலகங்கள் சென்றபின் மீண்டும் இந்த துன்பமயான இவ்வுலகில் பிறப்பதேயில்லை.

== யுகங்கள் ==
சத்யயுகம் 17,28,000 வருடம் திரேதாயுகம் 1296000 வருடம்; துவாபரயுகம் 864000 வருடம் கலியுகம் 432000 வருடம்; இந்த நான்கையும் கூட்டினால் 4320000 வருடம். இதுபோல 1000 வருடம் சேர்ந்தால் பிரம்மாவின் ஒரு பகல். இதுபோல் ஒரு இரவு. இவ்வாறாக பிரம்மாவிற்கு 100 வருடம் மட்டுமே வாழ்வார். பிரம்மாவின் கணக்குப்படி நாம் க்ஷணநேரத்தில் தோன்றிமறைபவர்கள். நமது கணக்குப்படி ஒரு பாக்டீரியா ஒரு க்ஷணத்தில் பிறந்து வளர்ந்து இனப்பெருக்கம் செய்து சிறிதுகாலம் வாழ்ந்து தேய்ந்து மறைந்து போவதுபோல் நாமும் ஆகிறோம். மற்றும் அனைத்து உயிரினத்திற்கும் ஏற்படும்.

சராசரி மனிதனுக்கு 4 குறைபாடுகள் உண்டு. அவை நிச்சயாக தவறு செய்பவன், பெரும்பாலும் மதிமயங்கியவன், மற்றவரை ஏய்க்கும் குணம் உடையவன், பக்குவமற்ற புலன்களை உடையவன் கலியுகத்தில் நாம் அமைதியும் ஆனந்தத்தையும் தேடுகிறோம் ஆனால் சரியான வழி தெரியாததால் தவறு செய்கிறோம். எளிதாக மனதையும் புலன்களையும் வழிபடுத்தவும் கட்டுப்படுத்தவும் ஒரே வழி கிருஷ்ணரின் நாமம் தான். வேதம், உபநிஷத், பகவத்கீதை, புராணம், பாகவதமும் சொன்னபடி நடந்தால் கலியின் கேட்டிற்கு வேறு வைத்தியமும் மருந்தும் தேவையில்லை. ஒரு மரத்தின் கீழே நின்று கை தட்டினால் பறவைகள் பறந்துவிடும். அதுபோல நமது மனதில் உள்ள பாவப்பறவைகள் பறக்க ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் போதும். எத்தனை 108 முறை உச்சரிக்கின்மோ அந்தளவு மனதில் அமைதியும் ஆனந்தமும் வந்து சேரும்.

மேற்சொல்லப்பட்ட விசயங்களும் இதுவரை கேட்டுவந்த விசயங்களும் வேறுபாடு தோன்றலாம். காரணம் நமது சாஸ்த்ரங்களை படிக்காமல் வெளியில் கிடைக்கும் புத்தகங்களை மட்டும் படித்ததால் ஏற்பட்ட குழப்பமே தவிர வேறு ஒன்றுமில்லை. நமது சாஸ்த்ரங்களை தொகுத்த வியாசர் கூறுவதை மட்டும் கேட்டு நடந்தால் நிச்சயமாக மதம் மாறமாட்டார்கள்,மாற தேவையில்லை. பல பேர்கள் ஆன்மீக விசயத்தை வயதான பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள். உண்மையில் எந்த வயது வரை வாழ்வோம் என முதலில் தெரியாது. மற்றொன்று எப்படி வாழ வேண்டும் எப்படி வாழ கூடாது என்பது வாழ்ந்து முடிந்த பிறகு தெரிந்து என்ன லாபம் இதை படிப்பவர்கள் யோசிக்கவும்.

== கலியுத்தில் ஏற்படும் கேடுகளும் அதன் விளைவுகளும் (பாகவதம் 12.2.1 முதல்) ==
தர்மம், சத்யம், தூய்மை, பொறுமை, கருணை, ஆயூள், தேகபலம், ஞாபகசக்தி நாளுக்கு நாள் குறையும். செல்வம் மட்டும் நற்பிறப்புடையவன் எனவும் சரியான நடத்தையுள்ளவன் எனவும் சிறந்த குணமுடையவன் என்பர். சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரமே அடிப்படைச் செயலாகும். புறக்கவர்ச்சிக்காகவே ஆண் பெண் இணைந்து வாழ்வர். பெண்மையும் ஆண்மையும் உடலுறவுத் திறமைக்கேற்பவே சேர்ந்து வாழ்வர். வியாபாரத்தில் வஞ்சமே அடிப்படையாகும்.

பூணூல் அணிவது மட்டுமே பிராமணனின் செயலாகும் கட்டுப்பாடுகள் இருக்காது. ஆன்மீகநிலை வெறும் புற அடையாளங்களே. அதிக பொருள் சம்பாதிக்கவில்லை எனில் அவன் தகுதி கடுமையாக விமர்சிக்கப்படும். பொருளில்லை எனில் புனிதமற்றவன் என்பர். கபடநாடகம் சீரிய பண்பாகும். வெறும் பேச்சளவு ஒப்பந்தத்திலே திருமணமாகும். தூரத்திலுள்ள நீர் தேக்கமே புண்ணிய ஸ்தலமாகும். அழகு என்பது ஒருவரின் சிகையலங்காரத்தை பொறுத்தே என்பர். குடும்பத்தை பராமரிப்பவனே சிறந்த நிபுணன். நற்பெயருக்காக மதக்கொள்கை அனுஷ்டிப்பர். சமூகப்பிரிவில் தன்னை அனைவரிலும் வலிமையுள்ளவனே அரசியல் அதிகாரி. தலைவரிடம் மக்கள் உடைமை இழந்து மலைநோக்கி செல்வர். பஞ்சமும் அதிகவரிவிதிப்பாலும் பாதிக்கப்படுவர். குளிர்,காற்று,வெப்பம்,மழை,பனியால் துன்புறுவர். சண்டை, சச்சரவு, பசி,தாகம்,நோய் கடும் மனக் கவலையால் சித்ரவதை செய்யப்படுவர். அதிகம் 50 வயதே வாழ்வர். சரீர அளவு குறையும். வர்ணாஸ்ரம சமயக் கோட்பாடும் வேதமார்கமும் அழியும். பெயரளவே மதம் அனுஷ்டிப்பர். அதிகமாக நாஸ்திகமே ஆவர். அரசர் பெறும்பாலும் திருடர்கள் ஆவர். கொள்ளையடித்தல் பொய் சொல்லுதல் வேண்டாத முரட்டுத்தனம் இதுவே தொழிலாகும். ஆஸ்ரமம் இல்லங்கள் ஆகும். திருமணத்திற்கப்பால் உறவுமுறைகள் விரிவடையாது. மூலிகை செடி சிறுத்துவிடும் வீடுகளில் பக்தியற்றதாக இருக்கும். இவ்வாறாக மனிதன் கழுதை போல் ஆவான். பேராசை, துர்நடத்தை, இரக்கமற்ற சுபாவம், காரணமற்ற சண்டையிடுவர். துரதிஷ்டசாலிகளாகவும், பௌதீக ஆசை பீடிக்கப் பட்டவர்களாக இருப்பர். பொய்யுரைத்தல், ஏமாற்றுதல், சோம்பல், உறக்கம், இம்சை, கவலை, துக்கம், குழப்பம், பயம், வறுமை இருக்கும். குறுகியநோக்கமும், துரதிஷ்டசாலிகளாகவும், உண்டிப்பிரியராகவும், காமுகராகவும் இருப்பர்.

பெண்கள் கற்பிழப்பர் சுதந்திரமாக ஒருவனைவிட்டு மற்றொருவரை தேடிச்செல்வர். வேதங்கள் நாஸ்திகரின் கற்பனைக்கேற்ப விளக்கமளிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். புரோகிதர்கள் வயிறு நிறப்பவும் பாலுறுப்புக்காகவும் வாழ்வர். பிரம்மச்சாரி விரதம் நிறைவேற்றமாட்டார்கள் அதாவது விந்துவிடுதல்இ விபச்சாரம் செய்தல், திருமணத்திற்கு முன் உடலுறவு செய்தல் செய்வர். குடும்பஸ்தர் பிச்சையெடுப்பர். வனப்ரஸ்தன் கிராமத்தில் வாழ்வான். சந்யாசி பொருளில் பேராசை பிடித்தலைவான். பெண்கள் அளவில் சிறியவர்கள் ஆவார்கள். அளவுக்கதிகமாக உண்பர். பராமரிக்க முடியாத அளவு குழந்தை பெறுவர். வெட்கத்தை அறவே இழந்துவிடுவர். கடுமையாக பேசுவர் ,திருட்டு, வஞ்சனை குணமிருக்கும். கட்டுப்படுத்த முடியாத தைரியமிருக்கும். பசு பால் தராது பால் தராததால் அழிப்பர்.

ஆண்கள் இழிவடைவர், பெண்களால் ஆளப்படுவர் ஆண்களின் தாய், தந்தை, சகோதரருடன் வாழ்வதை விட்டுவிட்டு மனைவின் தாய், தந்தை, சகோதரருடன் வாழ்வர். பேய்,பிசாசு பீடிக்கப்பட்டவர் போல் ஜீவன்கள் காணப்படுவர். காசுக்காக வெறுப்புணர்ச்சி வளர்த்துக் கொள்வர். காசுக்காக தன்னுயிரையும் இழப்பர், குடும்பத்தினரையும் கொல்வர். தன் வயதான பெற்றோரையும் நற்குழந்தையையும், நற்மனைவியையும் காப்பாற்றமாட்டார்கள். கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்யமாட்டார்கள். நாஸ்திகத்தால் திசை திருப்பப்படும். மரணதருவாயில் பரமபுருஷரான கிருஷ்ணரை நினைக்கவோ, அவரை வழிபடு செய்யவே மாட்டார்கள்.

== [பத்ம புராணத்தில் : கலியுகத்தில் மனிதர்களுக்கு விமோசனம் தருவது எது?] ==
பூலோகத்தில் ஹரியின் கதையில் விருப்பம் உண்டாவதில்லை. சிலர் அக்கதையை பொய் என்று கூறுவார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் சரித்திர புத்தகம் எந்த வீட்டில் உள்ளதோ அந்த வீட்டுப்பக்கம் துன்பங்கள் அணுகுவதில்லை. எமராஜனும் நெருங்க அஞ்சுவான். வைஷ்ணவர்களின் பாதங்களைக் கழுவிய நீரை யாரொருவன் தன் தலையில் தரிக்கின்றானோ, அவன் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் மூழ்கிய பலனை அடைகிறான். ஒரு வைஷ்ணவனிடம் ஒரு கணம் அல்லது அரைகணம் கழித்தாலும் அவன் செய்த பாவங்கள் ஒழிந்துவிடும். குலத்தில் ஒருவன் வைஷ்ணவனாக இருந்தால் போதும், அந்தக்குலம் முழுவதுமே பாவங்களிலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடையும். காமம்,கோபம், லோபம், மோகம், மதம்,மாச்சர்யம் இவற்றினின்று விடுபட்டவனே உண்மையான வைஷ்ணவன்.

யார் ஏகாதசி விரதம் இருக்கிறானோ, எந்நேரமும் ஹரி நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டிருக்கிறானோ துளசி மாலையை கழுத்தில் அணிந்திருக்கின்றானோ, யாருடைய வீட்டில் சாளக்கிராமசிலை பூஜிக்கப்படுகிறதோ அவனே உண்மையான வைஷ்ணவன். பகவான் கிருஷ்ணருக்கு சமர்பித்த பிரசாதத்தை அமிர்தமாக கருதி உண்கிறானோ மற்றும் துளசி வளர்ப்பவன், வேதசாஸ்திரங்களை மனதில் சதா காலமும் சிந்திக்கின்றானோ ராதா அஷ்டமி அன்று விரதமிருக்கின்றானோ அவனே உண்மையான வைஷ்ணவன்.

இந்த பூலோகத்தில் ஹரி பக்தியை விட உயர்ந்ததோ ஈடு இணையானதோ சிறப்பை தருவதோ எதுவுமில்லை. ஹரி பக்தி செய்யவில்லை எனில் மனித ஜன்மம் எடுத்ததே வீண். பிரம்மாதி தேவரும் ஹரியை சந்தோஷப்படுத்தவே தவம் செய்கிறார்கள். ஹரி பக்தரின் குடும்பத்தவர் நரக வேதனை அனுபவிக்க தேவையில்லை. ஹரி நாமத்தை உச்சரித்தவன் பிற மந்திரங்களை உச்சரிக்க வேண்டியதில்லை. ஹரியின் பாதகமலதீர்த்தத்தை தன் சிரம்மேல் தாங்குபவன் பிற புண்ணியதீர்த்தங்களில் நீராட வேண்டியதில்லை. மற்றும் யாகம்,தானம், தவம் ஆகியவற்றை செய்தபலன் கிட்டும் மற்றும் மீண்டும் இவ்வூலகில் மறுபிறப்பு எடுக்கவேண்டியது கிடையாது.

ஹரியின் ஆலயத்தில் சேவை செய்பவர் பிற அனுகூலமான சேவை அவசியமில்லை. பூலோகத்தில் பெண்ணாசை என்னும் காமத்தை விடுவது கடினம், மூவுலக தேவராலும் முடியாதது, ஹரி பக்தரால் மட்டுமே முடியும். குரு பக்தியாலே மட்டுமே மனதில் பிற சலனம் ஏற்படுவதில்லை. பகவான் கிருஷ்ணரை பூஜிப்பவர்கள் மற்றவர்களால் தொழும் நிலைக்கு உயர்ந்து விடுவார்கள் அதுதான் ஹரி பக்தியின் மகிமை. வைஷ்ணவம் என்றால் விஷ்ணுவின் மதமாகும். வைஷ்ணவனை தூஷிப்பவர்கள் மஹாபாவம் செய்தவர்களாவார்கள். அவர்கள் நாய்,நரி பிறவி எடுப்பர் மற்றும் பூத பிசாசு பீடைகளால் துன்புறுவார்கள். கஸ்தூரி மானிடமுள்ள கஸ்தூரி வாசனையும் புனுகு பூனையிடமுள்ள வாசைனை திரவியமும், கற்பூரம் எரிதவன் அதனதன் மகிமையை அறிவதில்லை. அதே போல ஹரி பக்தர்கள் அவர்களின் சிறப்பை அறிவதில்லை. அறிந்திருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில்லை.

ஐயா, கடம்பன் என்ற பெயரில் எழுதும் நண்பரே, ,

Showing respect to Gods worshipped by others – Its similar to great others with a smile. Geethaas meaning has to be understood in clear way. நீங்கள் அமைதியாக கிருட்டினரைக் கடவுளாக நம்பி வழிபட்டால் அதை நாங்கள் தடுக்கவில்லை, குறை சொல்லவில்லை. அலப்பறை செய்வதை விடுங்கள்.

மத நல்லிணக்கத்துக்கு நாங்கள் முயலும் போது, மதவெறியை அப்படியே மென்மையான வார்த்தைகளில் திணிக்க முயலாதீர்கள்.

நீங்கள் கீதையை அர்த்தம் காட்டுவீர்கள். இன்னொருவர் பைபிளில் உதாரணம் காட்டுவார். இன்னொருவர் குரானில் சொல்யதை உதாரணம் காட்டுவார். இப்படி ஆளாளுக்கு என் கடவுள் தான் பெரிய கடவுள் என்று (நிரூபிக்காமலேயே), வலியிறுத்தி மத அடிப்படை வாத, மத வெறியில் மனிதத்தை சிதைய விடக் கூடாது என்றுதான் இந்தக் கட்டுரையே எழுதி இருக்கிறோம்.

கீதையை , உங்களின் மத வெறிக்காக எவ்வளவு உபயோகப் படுத்த முடியுமோ அவ்வளவு உபயோகப் படுத்தி இருக்கிறீர்கள். கீதையின் சுலோகங்களின் சரியான கருத்து பற்றி பல கட்டுரைகளை வெளியிடுவோம். திருந்த முடியுமானால் திருந்துங்கள்.

என் தெய்வம் மட்டுமே உண்மை, மற்றவை எல்லாம் பொய்// என்ற கருத்தாக்கம் எந்த அளவுக்கு அமைதியைக் கெடுத்து ஆபத்தை உருவாக்குகிறதோ, அதே போல

//என் தெய்வம் தான் உயர்ந்த தெய்வம் மற்றவைகள் கொஞ்சம் குறைஞ்ச தெய்வம்// என்று நினைப்பதுவும் அபாயமான காட்டு மிராண்டித் தன்மை தான்.

இதை கொஞ்சம் நீங்கள் சிந்திக்க வேண்டும்.

கலந்து பழகுவது, பிற மத விழாக்களில் கலந்து கொள்வது, வெறுப்பிலாமல் (அத்வேஷ்டா) இருப்பது, இவை நாகரீகத்தின் அடிப்படை பண்புகள். பிற மதக் கடவுள்களை மரியாதை செய்வதும், நல்லிணக்க அடிப்படையில் வழி பாடு செய்வதும், நாகரீக சமுதாயம் அமைக்க உதவும், நான் முன்பு முரட்டு சிந்தனை கூடாது என்பதை விளக்கி எழுதிய பின்னூட்டத்தை இங்கே மீள் பதிவு செய்கிறோம்.

//The belief that one’s own God is true and others are false – is not, according to me, condemnable. If a religion believes so, and practices such a dogma without harming others, why do you feel that they should not believe so? //

இந்தக் கருத்து, மேலோட்டமாகப் பார்த்தால் இதில் என்ன தவறு என்பது போல தோன்றும். உண்மையில் இந்தக் கருத்தை உடைய பலரும் அமைதியான வாழ்க்கையை நடத்தக் கூடும். அவர்கள் வாழ்க்கை முழுவதும், அமைதியாகவே வாழ்ந்து முடிக்கக் கூடும்.

அனால் இந்தக் கருத்தை அவர்கள் பிறருக்கு அறிமுகப் படுத்தி விட்டுப் போகிறார்கள்.

நூறு வருடம் கழித்து இந்தக் கருத்தைப் படிக்கும் ஒருவர், அந்தக் கருத்தை ஆழமாக நம்பும் ஒருவர், பிற மதத்தவர் வணங்கும் தெய்வங்களை இகழ்சியிடன் நோக்க ஆரம்பிப்பார். அது வார்த்தையிலும் வெளி வரும். சகிப்புத் தன்மை இல்லாமல் போய் வெறுப்பு உணர்வு அதிகரிக்கும். அதனால் மோதல், சண்டைகள், இரத்த வெறி உருவாகும்.

//The belief that one’s own God is true and others are false – is not, according to me, condemnable. If a religion believes so, and practices such a dogma without harming others, why do you feel that they should not believe so? //

இந்தக் கருத்து ஒரு உறங்கும் எரிமலை ( Dormant Volcano )போன்றது. எப்போது நெருப்புக் குழம்பை கக்கும் என்று சொல்ல முடியாது. இந்தக் கருத்து பாம்பின் முட்டையை போனறது. வெளியே பார்த்தால் உள்ளே இருக்கும் விஷம் தெரியாது.

நான் இப்படி எழுதுவது சிலருக்கு மன வருத்தத்தை உண்டு பண்ணக் கூடும். ஆனால் மனிதத்தின் நலம் கருதி இந்த விளக்கத்தை அளிக்க வேண்டி உள்ளோம்.

//The belief that one’s own God is true and others are false – is not, according to me, condemnable. If a religion believes so, and practices such a dogma without harming others, why do you feel that they should not believe so? //

இந்தக் கருத்தை எந்த பிரிவினர் பின்பற்றினாலும் அது மனிதத்துக்கு கெடுதலே.

மனிதத்தின் புனிதம் கருதி நான் பரம சிவன், உமை, விநாயகர், இராமர், seethai, இலக்குவன், அனுமன், குகன், ஜடாயு….. உள்ளிட்ட இந்துக்கள் கடவுளாக கருதுபவர்களையும், அவர்களோடு சேர்த்து கிறிஸ்தவர்கள் கடவுளாக கருதும் இயேசு கிறிஸ்து, மேரி மாதா அகியவரியும் மனப் பூர்வமாக மரியாதை செய்ய தயார். அதைப் போல இசுலாமியரோடு தொழவும் , நோன்பு இருக்கவும் தயார்.

அதே நேரம் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற ஆராய்ச்சி செய்யும் உரிமையையும் தர வேண்டும், இதைக் கூறுவது அடுத்தவரைப் புண்படுத்த அல்ல. உண்மையை அறியும் பாதையை அடைக்காதீர்கள் என்று சொல்ல.

அப்படி என் கடவுள் மட்டும் தான் உண்மையான கடவுள் என்று அடாவடி செய்பவர்கள், முதலில் உங்கள் கடவுள் இருப்பதை நிரூபணம் செய்யுங்கள். நிரூபணம் இல்லை – வெறும் நம்பிக்கைதான்- என்றால்
அமைதியாக வழிபட வேண்டும்.

யார் சார் இந்தக் கடம்பன்.?
ஒரு வழியாக இந்த சர்ச்சை ஓய்ந்தது என்று நினைத்து இருந்தால் புதிசாக மீண்டும் ஆரம்பித்து விடுவார் போல இருக்கிறதே.

நண்பர் திருச்சிக்காரர் அவர்களுக்கு…

மதவெறியைத் தூண்டும் இந்த மாதிரி கருத்துக்களை நீங்கள் மறுபதிவு செய்யவேண்டுமா என்ன?

சரியான ஆளய்யா நீர். குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலையை நன்றாகவே செய்கிறீர்..

சகோதரர் கடம்பன் எழுதிய கருத்துக்களில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை; அவை 100% இக்காலத்துக்குத் தேவையான கருத்துக்களே;
அவர் சொல்வதை எதிர்ப்போர் ஏக இறைவனுடைய ஒழுங்குகளுக்குத் தங்களைக் கீழ்ப்படுத்திக் கொள்ளாமல் சுயம் போன வாழ்க்கையினை வாழ விரும்புவோர்; அவர்களுக்கு இவை எதுவுமே ஒத்துவராது; கடினமாகவே இருக்கும்;

அவர் சொன்னதில் ஆராயவேண்டிய ஒரே ஒரு காரியம்,”கடவுள் பரிபூரணமானவர் என்றால் ஒரு குறையும் அற்றவர் என்று அர்த்தம். ஒரு குறையும் அற்றவர் எனில் உருவமில்லாதது ஒரு குறையாகிவிடும்.” என்பது மாத்திரமே.

உருவமில்லாதவர் என்று வேதங்கள் சொல்லவில்லை;அதரிசனமானவர் என்றே சொல்லுகிறது; அப்படியானால் அவரைப் பார்க்கும் தன்மையை மனிதன் இழந்தான்; ஆனால் உணரும் தன்மையுண்டு; உதாரணத்துக்கு மிருகங்கள் பெரும்பாலும் இரவில் மிகத் தெளிவாக எந்த பொருளையும் பார்க்கின்றன; ஆனால் இது மனிதனின் இது பெரிய குறையல்லவா?

எனவே மனிதன் தான் முன்னிருந்த நிலையை உணர்ந்தால் தன் ஆவியில் அல்லது ஆன்மாவில் இறைவனை தரிசிக்கமுடியும்; அவர் சொல்வதைக் கேட்கவும் முடியும்;தீமைக்கு விலகியிருக்கவும் முடியும்; கடம்பன் சொன்ன அனைத்து நீதிநெறிகளைக் கடைபிடிக்கவும் முடியும்; ஆனால் நாம் ஆரம்பத்திலிருந்தே இறைவனைத் தொழுவது பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம்; அவரது நீதிநியாயங்களைக் கடைபிடிப்பது எப்படி என்றோ, அவற்றைக் கடைபிடிக்கமுடியாத பெலவீனம் என்னவென்பதைக் குறித்தோ பேசவே இல்லை;

ஆனால் கடம்பன் அவர்கள் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று போட்டுத் தாக்கியது மட்டும் வலிக்கிறதோ..?

திரு . சில் சாம் அவர்களே,

//ஏக இறைவனுடைய ஒழுங்குகளுக்குத் தங்களைக் கீழ்ப்படுத்திக் கொள்ளாமல் சுயம் போன வாழ்க்கையினை வாழ விரும்புவோர்; அவர்களுக்கு இவை எதுவுமே ஒத்துவராது; கடினமாகவே இருக்கும்;//

கடவுள் இருக்கிறார் என்று நம்புபவர்கள் எவ்வளவு கட்டுப்பாடு உடையவர்களோ, அதற்க்குக் குறையாத கட்டுப்பாடும், ஒழுக்கமும் உடையவர்களாக பகுத்தறிவு வாதிகள் இருக்க இயலும், இருக்கிறோம்.

சபாஷ்… அற்புதம்… திருச்சிக்காரனின் விதண்டாவாதத்திற்கு நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று ஒவ்வொருவரும் போய்விட்டார்கள். அரசியல்வாதிகளுக்கு கலவரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு திருச்சிக்காரனுக்கு வலையுலகில் வாக்குவாதம் முக்கியம்.அதனால்தான் எங்கேயோ யாரோ எழுதியதை இவர் தளத்தில் போட்டு, மீண்டும் வாதத்தை வளர்க்க விரும்புகிறார். He just wants to make a show.
இதற்க்கு ஆராய்ச்சி என்று ஒரு பெயர் வேறு. நல்லது கேட்டது எல்லாமே இவர்க்குதான் தெரியும் என்று நினைப்பு வேறு. கீதையையோ பைபிளையோ எழுதியவர்களைவிட, இவர் பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள விரும்புகிறார். ஏதாவது ஒரு பரபரப்பை உருவாக்கி அதில் தன மேதாவித்தனத்தை காட்டி குளிர்காய்பவர்களில் இவரும் ஒருவர். இரவு தூக்கம் வராமல் அடுத்தவர்களை எப்படி குற்றப்படுதலாம், எப்படி விதண்டாவாதம் செய்யலாம் என்று யோசிக்கும் இவர்தளத்தில் செலவிடும் நேரம், விரையமே.

நன்றி,
தமிழன்

தமிழன் அவர்களே,
வேறு தளத்தில் எழுதியது அல்ல.

திரு. கடம்பனின் பின்னூட்டம் நமது தளத்திற்கு அனுப்பப் பட்டதுதான்.

ஆனால் இதே தளத்திலே வேறு ஒரு கட்டுரையின் கீழ் அந்த பின்னூட்டத்தை பதிவே சித்து இருக்கிறார்.

இங்கே show நடக்கவில்லை . உண்மையைத் தேடும் ஆராய்ச்சி தான் இங்கே நடக்கிறது.

சகோதரர் கடம்பன் கடவுளை காட்ட முடியுமானால், அல்லது நிரூபிக்க முடியுமானால், ஆதாரம் முடியுமானால்,well, We welcome him!

நண்பர்கள் பலருக்கும் நம் மேல் ஆத்திரம் காட்டுகின்றனர். அதற்கான காரணம் என்னவாக இருக்க கூடும்?

நாம் எந்த மதத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சி காட்டவில்லை. ஒவ்வொரு மார்க்கத்திலும் கூறப்பட்டுள்ள நல்ல கருத்துக்களை பாராட்டி வரவேற்கிறோம். அமைதியாக வழிபாடு செய்வதை நாம் குறை கூற வில்லை. நாமும் அவர்களுடன் சேர்ந்து நல்லிணக்க அடிப்படையில் வழிபடத் தயார் என்றும் சொல்லி விட்டோம். இப்படிப் பட்ட நிலைப்பாட்டிலே நம் மீது இவ்வளவு கோவம் வர வேண்டிய அவசியம் என்ன?

வெவ்வேறு மார்க்கங்களைப் பின்பற்றுபவர்களிடம் நல்லிணக்கத்தை உருவாக்கும் வகைக்கான முயற்ச்சிகளை நாம் எடுக்கிறோம். ஆனால் தன் மார்க்கம் மட்டுமே உண்மையானது, பிற மார்க்கத்தினர் கடவுளாக வணங்க்குபவரை இழிவு செய்வோம், அதனால் சண்டை வந்தாலும் பரவாயில்லை என்கிற கோட்பாட்டு சிலரின் மனதிலே திணிக்கப் பட்டு விட்டது – அந்த கோட்பாட்டுக்கு இடையூறாக நம்முடைய சமரசக் கருத்துக்கள் மக்களிடையே நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்தினால், வெறுப்புக் கருத்துக்களை மக்கள் ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவே நம் மீது ஆத்திரம் வருவதாகவே நாம் கருத வேண்டியுள்ளது. நான் என்னை மேதாவி எனக் கருதவில்லை. நான் சாதாரணமானவன் தான்.

அதே நேரம் நம் அனைவருக்கும் சிந்திக்கும் திறன் உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறேன். உங்களின் சிந்தனையைத் தூண்டுவதே என் நோக்கம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: