Thiruchchikkaaran's Blog

என் டி டி வி பிரணாய் ராய் மக்களின் ஊழல் எதிர்ப்பு உணர்வை மழுங்க அடிக்க முயல்கிறாரா ?

Posted on: May 15, 2011


நாங்கள் கல்லூரியில் படித்த காலத்திலே பிரணாய் ராய் போன்றவர்கள் தேர்தல் நிலவரங்களை அலசுவதை தொலைக் காட்சியில் முதல் முறையாக பார்த்தோம்.

அழகான ஆங்கிலத்தில் நிதானமாக தேர்தல் முடிவுகளை அவர்கள் அலசும் போது,  இந்த கோட்டு சூட்டு அணிந்த கனவானகள்  எல்லாம் ரொம்ப நடுநிலையான அறிவாளிகள் என்கிற தோற்றத்தை உருவாக்கும் வண்ணம் அவர்கள் பேச்சு இருக்கும்.

பல  வருடங்கள் கழித்து என் டி டி வி யை தொடர்ந்து காணும் போது , NDTV யின் பெரும்பாலான புரோகிராம்கள் அதிகார வர்க்க அரசியல் வாதிக்ளின் பிரசினைகள  , மேல் தட்டு கனவான்களின் பிரச்சினைகள், பாலிவுட் நடிக நடிகையரின் ஸ்டைல்கள், நடபடிகள் இவற்றையே அதிகம் கவர் செய்து இருப்பதாக உணர்ந்தோம். கிராமத்து மக்களின் பிரச்சினைகள் பற்றி இவர்களின் தினசரி செய்திகளில் காண்பது மிகவும் அரிதான ஒன்றே.

இதில் கல்ட் பிம்பமாக மிக வேகமாக வளர்ந்தவர் சகோ. பர்கா தத் ! புதுமைப் பெண், புரட்சிப் பெண், பெண் புலி … இந்த ரேஞ்சுக்கு அவர் முன்னிலைப் படுத்தப் பட்டார். சில மாதங்களுக்கு முன்னால் சகோ. நீரா ராடியா பிரபல தொழில் அதிபர்கள், அரசியல் புள்ளிகள் இவரக்ளோடு நடத்திய அதிகாரத் தரகு பேச்சுக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி ன!

அதிலே சகோ.  நீரா ராடியாவோடு , சகோ. பர்கா தத்தும் பேசிய பேச்சுக்கள்… இவர் அமைச்சர் ஆவார். இவர் இந்த அமைச்சரவையை கேட்கிறாரே, … அந்த அமைச்சரவை கொடுப்பது கஷ்டமாயிற்றே என்ற ரீதியிலே இருவரும் பேசிக் கொண்டது டேப்பிலே இருந்ததாக சொல்லப் பட்டது.

ஆனால் எல்லோரயும் குமுறி நொங்கு எடுக்கும் வூடகங்கள் பர்கா தத் பற்றி பேசினாலே தேவ தூஷணம் என்கிற ரேஞ்சிலே நடந்து கொண்டு அப்படியே “கவர் அப்” செய்து விட்டனர்.

இந்த இலட்சணத்திலே சமீபத்திலே நடந்த தேர்தல் முடிவுகள் பற்றி அலசி ஆராய்ந்து காயப் போட்டுக் கொண்டு இருந்தது. தமிழ் நாட்டில்  இருந்து அதிமுக சார்பில்  மைத்ரேயனும் திமுக சார்பில் குஷ்புவும் பிரணாய் ராயுடன் தேர்தல் முடிவு பற்றி விவாதித்தனர். அப்போது மைத்ரேயன் இந்த ஐந்து ஆண்டுகளில் நடை பெற்ற முறைகேடுகளுக்கு திமுக பொறுப்பேற்க வேண்டும் என்கிற ரீதியில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார். அதுதான் மக்களின் விருப்பம். இந்த நிறத்தில் இடையிலே பாய்ந்த பிரணாய் ராய் என்ன மைத்ரேயன்  நீங்க ரொம்ப டூ மச்சா சொல்லுறேங்க. அஞ்சு வருசத்துக்கு ஒரு முறை ஆட்சியை மாத்துறது தான் தமிழ் நாட்டில வழக்கம். அதனா ல தான் இப்படி ரிசல்ட் வந்திருக்கு, கரப்சன்  பத்தி எல்லாம் மக்கள் பெரிசா கவலைப் படலை, அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்கிற ரீதியில் மைத்ரேயனுக்கு செக் வைத்தார்.

இந்த தேர்தலில் அலைக் கற்றை விவாகாரம் முக்கிய மாக இருந்த நிலையில், அதை பின்னுக்கு தள்ள கனவான் பிரணாய் ராய் முயலக் காரணம் என்ன?

Title: என் டி டி வி பிரணாய் ராய் மக்களின் ஊழல் எதிர்ப்பு உணர்வை மழுங்க அடிக்க முயல்கிறாரா ?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: