Thiruchchikkaaran's Blog

Archive for the ‘Uncategorized’ Category


இரண்டு நாட்கள் முன்பு நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன். முற்றிய மாலை நேரத்தத்தில் சிறுவர் சிறுமியர் சேர்ந்து அடுக்கு மாடி குடியிருப்பின் முன்பிருந்த சிறிய பூங்கா போன்ற இடத்தில் மகிழ்வுடன் மத்தாப்பு கொளுத்தி விளையாடிக் கொண்டிருந்ததை கண்டேன்,  என் உள்ளம் என்னையும் அறியாமல் பூரித்ததது. சத்தம் போட்டு ஆடி ஓடி மத்தாப்பு , சாட்டை , சக்கரம் போன்ற பட்டாசுகளை கொளுத்தினர். மத்தாப்பு எரிந்தும் மீதியிருந்த கம்பியை தூக்கி வீசினான் ஒரு சிறுவன், இன்னொருவனோ டேய் கண்ணை மூடி தூக்கி வீசற, பாத்துடா என்றான்.

மத உணர்வு, நம்பிக்கை இவற்றுக்கெல்லாம் மேலான ஒரு குதூகலத்தை தீபாவளி தருகிறது. பல பண்டிகைகள் இருந்தாலும், தீபாவளி அன்று நண்பர்களை போனில் அழைத்து வாழ்த்து சொல்வது தவறுவதில்லை. இனிப்பு வகைகள் பரிமாற்றம் , புத்தாடை என கொண்டாட்டத்திற்கு குறைவில்லை.தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள் வேறு, பட்டி மன்றத்தில் வாங்கய்யயா …என்று அழைக்கிறார்கள். பட்டாசுகளும், இனிப்புகளும்  தீபாவளியின் எக்ஸ்ட்ரா மகிழ்ச்சி.

Deepavali 2017

இந்த தீபாவளி எதற்காக கொண்டாடுகிறோம் என்பதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்வார்கள். தென்னிந்தியாவில் நரகாசுரன் என்ற கொடிய அரக்கனை கிருஷ்ணர் போரில் கொன்றதாகவும், அப்போது அவ்வரக்கன் தான் இறந்த நாளை அனைவரும் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகவும் சொல்வார்கள்.

வட இந்தியாவில், இராமன் இராவணனை வென்று, தன்னுடைய வனவாச காலத்தையும் முடித்து மீண்டும் நாடு திரும்பி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நாள் என்பதாக சொல்லி கொண்டாடுகிறார்கள்.

இராமன், கிருஷ்ணர் இருந்தார்களா…இதெல்லாம் உண்மையா அல்லது கதையா என்பதையெல்லாம் மீறி, தீபாவளி புதிய பரிணாமம் பெற்று விட்டது என்பதாக நான் உணர்கிறேன்.

சிறுவர்கள் கலந்து பட்டாசு கொளுத்தி விளையாடுவது போலவே, வயது வந்தோரும், தங்கள் இன, மத, வர்க்க , சமூக பேதங்களை கடந்து மனிதர் மனிதனாக நட்பு பாராட்டி மகிழ்வதாக நான் உணர்கிறேன்.

நானும் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடுகிறேன்.

கிருஷ்ணர் இருந்தது கதையோ, உண்மையோ தெரியாது, ஆனால் “சர்வ பூதானம் மைத்ர” – “எல்லா உயிர்களுடனும் நட்பு பாராட்டுபவனாக” -என்கிற கீதையின் வார்த்தையை தீபாவளியை கொண்டாடும் மக்கள் செய்து காட்டுவதாக, “கிருஷ்ணா, நீ சும்மா சொன்ன, நாங்க செய்தே காட்டுறோம் பாரு!” என்று சொல்வதாக அமையும்.

எல்லோரும் மகிழ்ச்சியுடனும் நட்புடனும் பேதமற்று சிரித்து இணையும்போது, நான் மட்டும் வெறுப்புடன் திட்டிக் கொண்டு இருக்க என் மனசாட்சி ஒப்புக் கொள்ளவில்லை. அந்த நட்பின் மகிழ்ச்சியில் நானும் தீபாவளி கொண்டாடுகிறேன்.

 

 

Advertisements

என்கிற நிலைமைக்கு கிட்டத்தட்ட கொண்டு வந்து விட்டார்கள்!

பட்டினத்தார், வள்ளலார் , அப்பர் , நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள் , முனிவர்கள் ..பலரும் வாழ்க்கையின் தத்துவங்களை ஆராய்ந்து சொன்ன அற்புதமான கருத்துக்கள் உள்ளன. பசு வழிபாட்டுக்கு உரியது என்பதுதான் மிக முக்கிய கோட்பாடு என்பது போல ஒரே ஆரவாரம் தேவையா?

பசு ஒரு சாதுவான பிராணி என்பது உண்மையே. நான் சிறுவனாக இருந்தபோது,  பக்கத்து தெரு அக்கா அலுவலகம் செல்லும்  வழியில் பசு மாட்டை பார்த்தால் அதை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொள்வதை ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறேன்.

அவருடைய பக்தி உண்மையானது மட்டுமல்ல, பவ்யமானது, முக்கியமாக அடக்கமானது. அவர் மற்றவரும் பசுவை வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்க வில்லை. இதுதான் சிறப்பான பக்தி. இதை விட்டு மாட்டு மூத்திரம் நோய்களை குணப் படுத்தும், அதை குடிப்பது நல்லது என்ற வகையில் பிரச்சாரம் செய்வது எப்படி இருக்கிறது?

மாட்டு இறைச்சி சாப்பிடக் கூடாது, மாடுகளை இறைச்சிக்காக விற்கக் கூடாது என்கிறார்கள். மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடுக்ளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.

http://www.thehindu.com/news/national/india-on-top-in-exporting-beef/article7519487.ece

முமுக்கியமான ஏற்றுமதியாளர்கள் பலரும் இந்துக்கள் என்று பத்திரிகையில் செய்திகள் வருகின்றனவே…அவர்களுக்கு எல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை.

https://sabrangindia.in/article/who-making-millions-india-out-beef-export-muslims-think-again

அப்படியானால் என்ன அர்த்தம்? பல்லாயிரக் கணக்கான மாடுகளைக் கொன்று கோடி கோடியாக சம்பாரித்தால் சரி, ஒன்று இரண்டு மாடுகளைக் கொன்றால் அது பாவம் என்று இவர்கள சாஸ்திரத்தில் இருக்கிறதா?


இந்திய மக்களுக்கு மஹா அக்பரை பற்றி நன்றாக தெரியும்.

ஆனாலும் நாம் இங்கே கட்டுரை எழுத வேண்டிய விடயம் என்னவென்றால், தமிழ் ஹிந்து தளத்திலே அக்பரின் புகழின் மீது புழுதி வாரி இறைக்கும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. அதுவும் எப்படி? மூல நூலை எழுதிய புண்ணியவானாவது ” Who says Akbar is Great”  என்று கேள்வியை தலைப்பாக வைத்து இருக்கிறார்.

அதை மொழி பெயர்க்கும் நமது சகோதர தமிழ் கனவான்களின் மொழி பெயர்ப்பு எப்படி இருக்க வேண்டும் “யார் சொன்னது மஹா அக்பர் என்று?” என்றோ, அல்லது “மஹா அக்பர் என அழைப்பது சரியா?” என்றோ தலைப்பு வைத்திருந்தால் சரியான மொழி பெயர்ப்பாக இருந்திருக்கும்.

ஆனால் எப்படி வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். “அக்பர் என்னும் கயவன்” என்று !

http://www.tamilhindu.com/2017/09/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-1/

இதுவா இலக்கண நேர்மை? இதுவா இலக்கிய பண்பாடு ? முதல் வாக்கியமே இப்படி இருக்கிறதே, தமிழத்தில் வன்மம் நிறைந்த சிந்தனை தொடர்கதை யாகுமோ என்கிற ஆதங்கம் உங்களுக்கு எழுகிறதா?

அக்பரின் சிறப்புகளை நாம் தொடர்ந்து எழுதுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்!

 


Abu’l-Fath Jalal-ud-din Muhammad Akbar was one of the great Moghal emperor, who ruled India. Indian history has seen many great kings-leaders- politicians who prefers good principles and people’s welfare rather than allowing selfish desires occupy their hearts, e.g Ashoka the Great, Chathrapathi Shivaji, Mahathama Gandhi…etc

Akbar had a special position in Indian history- he was  at least ready to listen and understand the principles of other religions- this is more emphatic in the context that both his predecessors and successors did not practice this habit.

 

Akbar was from Islam religion, but he was interested to know about Hinduism, in this learning process, he himself established a new religion! This is the greatness! Two targets achieved in one shot- people of different religions can live together peacefully, at the same time, each and every person in the world has the right to establish their own religion to suit them.

This is also not tolerable to those “Gentlemen” who want to establish their religion as the only allowable religion, and who don’t want to keep any  small room any alternate!

Akbar the great Posthumously  became the target of many and the below referred article in Tamil language is one among them!

http://www.tamilhindu.com/2017/09/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-1/

We would explain the importance  of  the experiments of Akbar the great on Religious front!


It was not totally unexpected ever since BJP came to power in India by 2014,that it would follow the “principle”s of  RSS, and other Parivar groups( Read as “Hindutva Fundementalists” to make things clear for western readers)!

Mr. Modi got a fantastic election victory in 2014, mainly because the ambitious indian people expected and wished that Mr.Modi would spur the industrial, technological, economical growth and thus bring more prosperity to all Indians.

Mr. Modi also tries to woo the foreign investors, try to put ” make in india’ agenda..etc…

How much forward is made in this direction is a matter to be analysed …but his friends(mentors?) at the parivar groups are working overtime to take back the indian society to stone age, by promoting intolerence in the soceity!

In what way the restrictions made in selling of cows is going to provide growth for India and Indians?

 

 

 


There were unprecedented protests in Tamil nadu, a province in southern part of India. India is an unique nation in the world where 1.3 billions people speaking different languages, following varied cultures, of different ethnicity remain as a single nation, mainly due to their tolerant and absorbing attitude. However the ruling elite of the nation some times forget the rare and unique nature of this nation, and try to form some rules which is not acceptable to people of certain provinces. The so called NGO’s from western & other foreign nations push their own pseudo agendas.

An NGO called PETA of America made a case and the court banned a bull taming festival called ” Jallikattu (Original literary name is ” Eru Thazuvuthal), observed for more than 3 milleniums in the tamil nadu.

Any lady/ gentlemen viewing the following videos can see the Cruelty of killing the bulls in Spain and Latin American countries, and compare it to the ” Jallikattu”

 

The tamils of India never use any sharp weapons against the bulls, after just few seconds of wrestling with bare hands, the bulls are freely allowed to leave..no blood, no piercing with swords, no blood is oozing from the bulls, the bulls are never killed!

உலகுக்கே வழி காட்டக் கூடிய அளவுக்கு சிறந்த நாகரீகம் உள்ளதாக பீற்றப்படும் மேலை நாட்டு நாகரீகத்தின் ” தொட்டில்”களில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் Bull fighting என்ற பெயரில் காலை மாடுகளின் முதுகில் ஒவ்வொன்றாக கத்திகளை சொருகி அந்த காளை மாடுகளின் இரத்தைதை வடிய விடுகினறனர், அதை வலிமை இழக்க வைத்து கடைசியில் அந்த அப்பாவி மாடுகளின் மீது கடைசி கத்தியை பாய்ச்சி அதை கொடூரமாக கொன்று விட்டு போல் ஆர்ப்பரிக்கும் கொடூர குரூர க்ரூயல்டி

நம்முடைய ஜல்லிக்கட்டு எவ்வளவு மிதமான விளையாட்டு என்பது பீடாவே உங்கள் மனசாட்சிக்கு நனறாகத் தெரியும்!

However the provincial government of Tamilnadu, and Indian federal govt woke to the reality of solid but peaceful demonstration and enacted laws to allow this sport.

Long live the Cordial relationship between the humans and Bulls!

 

 


தமிழ் பத்திரிகை உலகின் ஜாம்பவான், பிதாமகர்…இப்படி பலபடியாக புகழப் படும் சோ மறைந்து விட்டார் . அவர் ஒரு பல்திற ன் கொண்ட திறமைசாலி என்பதில் ஐயமில்லை. நாங்கள் பள்ளியில் படிக்கும் போது அவரை ஒரு சினிமா நடிகராகவே அறிந்து இருந்தோம்.

இந்திரா காந்தி எமெர்ஜென்சி கொண்டு வந்த போது அதை தீவிரமாக எதிர்த்து எழுதியதன் மூலம், அவரும் துக்ளக் பத்திரிகையும் பிரபலம் ஆனார்கள். சோவுக்கு காமராஜருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதோடு கருணாநிதி , எம்.ஜி.ஆர் , சிவாஜி இவர்களுடன் சினிமா மூலமாக தொடர்பும் இருந்தது. பின்னாளில் இவர் மொரார்ஜி , சந்திர சேகர், வாஜ்பாய் , அத்வானி, ..இப்படியாக மோடி வரைக்கும் நட்பை விரிவு படுத்தினார்.

தமிழ் நாட்டில் பத்திரிக்கை படிப்பவர்கள் மத்தியில் துக்ளக் ..சோ…என்றால் லஞ்ச எதிர்ப்பு, நேர்மை, நீதி, தூய்மையான அரசியல்…என்கிற ரீதியில் எண்ணும் படியாக ஒரு மதிப்பு உருவானது. நாளடைவில் ஜூனியர் விகடன், ரிப்போர்ட்டர் …ஆந்தையார், குருவியார் இப்படி பலரும் பரபரப்பான செய்திகளை சுத்தி அதிக சர்குலேஷன் பெற்றாலும் துக்ளக்வாள் ஒரு ஸ்பெஷல் அந்தஸ்திலே இருந்தாள்.

இப்போது சோ மறைவுக்கு பின் வேறு யார் வருவார் என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது கனம் குருமூர்த்தி ஆசிரியாராகி இருக்காள். குருமூர்த்தி யாரும் லேசுப் பட்டவரல்ல ராஜீவ் காந்திக்கு எதிரான போபர்ஸ் குற்றச் சாட்டுகள்…மற்றும் ரிலையன்ஸ் ..இப்படியாக தேசிய அளவிலே பிரபலமானவர்.

ஆனால் சோ வைப் போல காங்கிரஸ் , பி.ஜேபி , ஜெயலலிதா, கருணாநிதி என எல்லோரிடமும் ப்ரண்ட்ஷிப் வைச்சுக் கொள்ளும் சாமர்த்தியம் குருமூர்த்திக்கு வருமா என்பது தெரியாது. மேலும் சோ வைப் போல காமராஜர் , மூப்பனார், …பழைய காங்கிரஸ் , ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா கட்சி, பி.ஜெ.பி ..என்றெல்லாம் சுத்தி வளைக்காமல் ஸ்ட்ராயிட்டாக ஆர்.எஸ் .எஸ் அனுதாபி என்று அறியப் படுபவர்.

ஆனாலும் ஒரு விசயத்துல இரண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை உண்டுண்ணா…அது என்னன்னா… இரண்டு பேரும் காஞ்சி ஸ்தாபனத்துக்கு அந்தியந்த சிஷியாள்!

வேற என்ன சொல்ல னும் ….
ஹர ஹர … ஜெய ஜெய …


Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09