Thiruchchikkaaran's Blog


எந்த தொழிலை செய்தாலும் காசு வாங்காமல் செய்வதில்லை. அப்படி இருக்கும் போது ஆண்களின் காமத்தினால் உருவான விபச்சார தொழில் செய்வோரை மட்டும் குறி வைத்து இப்படி பாட்டு எழுதுவது ஏன்?

“சிரித்து பேசி தொண்டு செய்தாலும் அவர்கள் பெர்மெனென்ட் இல்லை…அவர்கள் மனைவி போல எப்போதும் கூட இருப்பார்கள் என்று கருதக் கூடாது” என்பதற்காக இப்படி எழுதினார்களா?

எப்படி இருந்தாலும் விபச்சார தொழில் பற்றிய பாடலை கர்நாடக சங்கீத அடானா ராகத்தில் பாடியது ஒரு நெருடலான விடயம். அதுவும் அக்காலத்தில் கர்நாடக சங்கீதத்தில் கொடி கட்டிப் பறந்த திருமதி . MLV எனப்படும் திருமதி. வசந்தகுமாரி அவர்கள்பாடியது ஒரு அதிர்ச்சியான விடயமாக இருந்தது.

MLV அவர்கள் இதே அடானா ராகத்தில் பிரபலமான “வருகிறாள் உன்னைத்தேடி” என்ற இன்னொரு பிரபலமான திரைப் படப் பாடலைப் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு நடனம் சிறப்பாக அமைக்கப் பட்டு இருந்தது. வருகிறாள் உன்னைத் தேடி பாடலை MLV அவர்களும்,திருமதி . சூலமங்கலம் ராஜ லக்ஸ்மி அவர்களும் இணைந்து பாடியதாகும். இதிலே இருவரின் குரலும் கிட்டத் தட்ட ஒத்து இருப்பதால் MLV ஸ்வரம் பாடும் போது அதிலே மிருதங்கத்துக்குப் பதில் உடுக்கை ஒலியை வைத்து இருப்பார்கள் -அது பாட்டுக்கு தனி சிறப்பை தரும்.

 

இதே ராகத்தில் அமைந்த பிரபல கீர்த்தனை அம்பா நீ இரங்கா எனில் புகல் ஏது? என்பதாகும்.

 

இந்த ராகத்தின் மிகப் பிரபலமான பாடல் சத்குரு சுவாமி தியாகராஜ சுவாமிகளின் ‘பால கனக மய’ பாடல்.

 

 

இந்த ராகத்தின் நேர்த்தியும், இனிமையும் சுவாமி தியாகராஜ சுவாமிகளின் இந்த ‘பால கனக மய” கீர்த்தனையாலே வெளிச்சம் போட்டுக் காட்டப் பட்டது.

 

Advertisements

அடே அப்பா …அவரால் முடியாத காரியம் எதுவும் இல்லை! விஷப் பால் கொடுக்க வந்த பூதகியை ஒரே உறிஞ்சா  உறிஞ்சி கொன்னுட்டார்…!…..தவழும் குழந்தையாக இருந்த போதே சூழ்ச்சி செய்து மரமாக இருந்த அரக்கர்களை உரலை நடுவிலே வச்சு இழுத்து கொன்னுட்டாரு…!

பாய்சனஸ் பாம்பு மேல டான்ஸ் ஆடுவாரு..

ரொம்ப மழை பெஞ்சா அலாக்கா மலையையே தூக்கி குடை மாறி பிடிப்பாறு …அல்லா சனமும் அடியில வந்து நனையாம இருந்துக்கலாம்…(தமிழ் சூப்பர் ஸ்டாருங்க யாரும் இந்த சீனை இன்னும் எந்த படத்துலயும் வக்கலையே..)….

எல்லாத்துக்கும் அப்பால …யாரு எந்த சாமியைக் கேட்டாலும் …நானு அந்த சாமி வழியாவே உதவி செய்வேன் ..என்று தாராள மனப்பான்மையுடன் நான்தான் விச்வேச்வரன்…எப்படி இருக்கேன் பாரு ..என்று மாஸ் காட்டி ..ஆனாலும் பயப்படாதீங்க …நீங்க பயம் இல்லாம இருக்கத்தான் நானே மனுச ரூவத்துல வந்து உங்க கூட விளாடிகினு கீரேன் ..அப்படின்னுட்டாரு …நம்ம கண்ணன், கிருஷ்ணன், மஹா பாரதத்தில் சொல்லியது போல பகவான் கிருஷ்ணன் …

ஆனா இவரோட க்ளோஸ் பிரண்ட்ஸ்ங்க பேஜாரான போதே ரொம்ப லேட்டாதான் வந்து ஹெல்ப் பண்ணிக்கிறாரு!

இந்த துச்சாசன் இருக்கிறான் பாருங்க ..அவன் திரோபதி தங்கி இருந்த இடத்துக்கு போயி..அது முடிய பிடிச்சு தர தரனு இஸ்த்துக்குனு வரான்……அந்தப் பொண்ணு தரையில விழுந்தாலும் முடியை பிடிச்சே இழுத்துக்குனு வாரான்…அது அழுது புலம்புது! அப்ப எல்லாம் உதவிக்கு வரலை நம்ப கண்ணன் …

நல்ல வேலை…புடவையை உருவும்போதாவது உதவிக்கு வந்தாரு …சரி இன்னும் பொறுத்து ஜட்டியை உருவும் போது அந்த நேரத்துல ஹெல்ப் பண்ணிக்கலாம் அப்படினு ஜட்டியை உருவர வரைக்கும்   வெயிட் பண்ணாம இருந்ததுக்கு நம்ப கண்ணன் அண்ணாத்தேக்கு டேன்க்ஸ் பா..

அதே போலத்தான் கண்ணன் இஸ்கூல்ல படிக்க கொள்ள ரொம்ப தோஸ்த்தா இருந்த ஆளு நம்ப குசேலன்..ஐயோ பாவம்…அவரு கஷ்டம் யாருக்கும் வரக் கூடாது…வத வதனு 32 புள்ளைங்கள பெத்துட்டாரு…இவரே உ ஞ்சி விருத்தி பிச்சை எடுத்து சாப்பிடறாரு…பிள்ளைங்க எல்லாம் பல நாள் பட்டினி கிடக்குது …குசேலனும் அவரு பொண்டாட்டி புள்ளைங்களும் ..உண்மையிலேயே நொந்து இளைச்சு நூலா பூட்டாங்க …இத்தனையும் கஷ்டப் பட நஷ்டப் பட விட்டு ஆற அமர அவலை வாங்கி வாயில போட்டு அவங்களை அப்பால வாழ வைக்கிறாராம்.

நெருங்கிய நண்பர்களுக்கே இவ்வளவு ஆற அமர உதவி செய்யும் கடவுள் உங்களுக்கும் எனக்கும் உடனே உதவி செய்வார் என்று எதிர்பார்க்க முடியுமா?

இந்திய தத்துவ வானின் இணையற்ற நட்சத்திரமான சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரில் உறை ஆற்றும் போது “கருணையே வடிவான கடவுளின் படைப்பில் எதற்கு ஒருவருக்கு கஷ்டம் வர வேண்டும்” என்று ஆணியடித்தார் போலக் கேட்கிறார்.

“இங்கே பூமியில்  வாழும் போது நாம்  கஷ்டப் படும் போது உதவிக்கு வராத கடவுள்…நாம் இறந்த பிறகு சொர்க்கம் தருவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?” என்று பன்ச் வைக்கிறார்.

கடவுளின் பெயரால் கலவரங்களை உருவாக்கும் கனவான்களே, பதில் சொல்லுங்கள்!

 

 

 


பெண்ணே உன் இடை இவ்வளவு மெலிதாக இருக்கிறதே …இது என்ன வசந்த காலக் கொடியா … இல்லை  பட்டு நூலா…உன் உடலை இந்த இடை தாங்குமா..அல்லது ஒடிந்து விழுந்து விடுமா…உன் இடை ஒடியுமோ என்று அஞ்சி என் மனம் ஒடிந்து விடுமோ...

 

பெண்களை ப் பாடாத கவி உண்டா … ஆனால் இந்த வர்ணனைகள் உண்மையா…?

கொடி இடை…நூல் இடை என்கிறார்களே…அப்படி உண்மையிலேயே நூல் போன்ற… கொடி போன்ற இடை இருக்கிறதா …

கொடியின் தன்மை என்ன,ஒரு பசுங் கொடியால் தன் சொந்த எடையை கூட தாங்கிப் பிடிக்க இயலாது, அவ்வளவு மெல்லியது…வலுவற்றது… எனவே தான் கொடிக்கு கம்பு ஒன்றைக் கட்டிப் படர விடுகிறோம் !

பெண்களின் இடுப்பு அப்படி இருக்கிறதா …இடுப்புக்கு மேலே உள்ள உடல் பகுதி 30 கிலோவுக்கும் மேலாக இருக்காதா .அவ்வளவு பெரிய எடையைத் தாங்கும் இடுப்பு, எப்படிக் கொடி இடையாகும்?…ஆனாலும் இவ்வளவு சிறிய இடுப்பு எடையைத் தாங்குமா ஓடியுமா என்றெல்லாம் ஓவராக புனைவு… அதாவது பொய்யை  நம் தலையிலே காட்டுகின்றனர் எல்லாப் புலவரும்.

ஒரு அடி டயா மீட்டர் ஸ்டீல் பைப் போல இருக்கிறது, அதைப் பார்த்துக் கூசாமல் கொடி என்று புனைய வேண்டுமா!

உண்மையைப் பாடும் புலவரான சுவாமி பட்டினத்தார் சுவாமிகள்…காதல் மயக்கத்தில் பலரும் புனைவதை (பிதற்றுவதை) சுட்டிக் கட்டி உண்மையைப் பாடுகிறார்.

//நெடுமுடல் தாங்கி நின்றிடு மிடையைத்
துடிபிடி யென்று சொல்லித் துதித்தும்//
 

கவிதைக்கு உண்மையிலேயே பொய் தான் அழகா? உண்மையைப் பாடுவது அவசியமில்லையா?

பெண்களின் அங்கங்களை உண்மைக்கு மாறாக புகழ்வது சரியா , அவசியமா?

பெண்களை எப்படிப் பார்க்கிறோம்…அவர்களுக்கு உண்டான கஷ்ட நஷ்டங்கள் என்ன என்பதை பார்க்கிறோமா ..அல்லது அவர்களின் அங்கங்களின் சிறப்பைப் பார்க்கிறோமா…

பெண்களை ப் பாடாத கவி உண்டா … ஆனால் இந்த வர்ணனைகள் உண்மையா…இந்த கவிதைகள் …சிறிது சிறிதாக காம உணர்வைத் தூண்டுகிறதா?

பெண்களின் அங்கங்களைப் புகழ்ந்து எழுதுவதுதான் சரியான கவித்துவமான? அதை படிப்பவர் நெஞ்சில் காம உணர்வு வராதா? தன் காம உணர்வை தடுக்க முடியாமல் தவிக்கும் ஒருவன் வடிகால் தேட மாட்டானா?அது குற்றமாக மாறாதா?

பெண்களுக்கு ப் பாதுகாப்பு புனைவுப் பாடல்கா? உண்மையைக் கூறி மயக்கத்தைத் தெளிவிக்கும் சுவாமி பட்டினத்தார் பாடல்களா?


காம எண்ணம் தலை தூக்கியவுடன் மனசாட்சி பின்னுக்குச் செல்ல, எப்படியாவது போகத்தில் ஈடுபட்டு இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்கிற நிலைக்குச் செல்கிறான்.

சிறுமியை பார்த்தவுடன் காம உணர்ச்சி தோன்றினால், யாரும் இல்லை என்றால் தூக்கிச் செல்கிறான். அருகிலே ஆள் நடமாட்டம் இருந்தால் நைச்சியமாகப் பேசி ஆள் அரவமற்ற இடத்துக்கு அழைத்து செல்கிறான்.

http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/apr/21/9-year-old-raped-killed-during-wedding-in-etah-up-2904749–1.html

ஆசை தணிகிறது, வெறி தீர்கிறது…அப்போதுதான் அவன் சுய நினைவுக்கு வருகிறான். அடுத்தது என்ன.. இந்த சிறுமி பெற்றோர்களிடம் போய் உண்மையை சொன்னால்  பெரிய தொல்லை வரலாம்..எவ்வளவு துரிதமாக சிறுமியை அனுபவிக்க என்று நினைத்தானோ அதே துரித கதியில் அவன் விபரீத புத்தி செயல் படுகிறது…

சிறுமி உயிரோடு இருந்தால் தானே விடயம் வெளியில் தெரியும்..சிறுமியைக்  கொன்று விட்டால் …உயிர் போன பின் நமக்கு தொல்லை இருக்காது என்று முடிவு கட்டி அந்த பண்பற்ற பாதகன் சிறுமியைக் கொன்று   விடுகிறான்.

இப்போது வர இருக்கும் புதிய சட்டம் என்ன சொல்லுகிறது…சிறுமியைக் கற்பழித்தாலே மரண தண்டனை என்கிறது…இந்த சட்டம் சிறுமியின் உயிரைக் காக்குமா?

சிறுமியைக் கற்பழித்ததற்க்கே மரண தண்டனை …அதாவது அந்த சிறுமி வெளியே போய் சொன்னால் தானே நமக்கு மரண தண்டனை ..அந்த சிறுமியைக் கொன்று விட்டால் …யாருக்கும் நம்மைத் தெரியாவிட்டால் …நாம் தப்பி விடலாம்.

எப்படி இருந்தாலும் சிறுமியைக் கற்பழித்தாலும் , மரண தண்டனை தான்…கற்பழித்துக் கொலை செய்தாலும் மரண தண்டனை தான்…சிறுமியைக் கொன்று தான் பார்ப்போமே…யாரும் அடையாளம் காணாத இடத்துச் சென்று தப்பிப்போம் என எண்ணும் படியான நிலையை உருவாக்கி விடுமோ   இந்தச் சட்டம் என்கிற அச்சத்தை நமக்கு உண்டாக்கி விடுகிறது இந்தச் சட்டம்.

புதிய சட்டம் எப்படி அமைய வேண்டும்?

1)சிறுமியைக் கற்பழித்தால் வாழ் நாள் முழுவதற்கும் கடும் சிறைத் தண்டனை

!2)கற்பழித்துக் கொலை செய்தால் மரண தண்டனை மட்டுமே ஒரே தீர்ப்பாக தரப்பட முடியும் (வேறு குறைவான தண்டனை தரப் படக் கூடாது) .சிறுமியைக் கற்பழித்திட் கொன்றவன் கருணை மனு போட முடியாது ..என்பதாக புதிய சட்டம் அமைய வேண்டும்.

இப்படியான சட்டமே சிறுமிகளின் உயிரைக் காக்க உதவக் கூடும்.

IMF தலைவி கிறிஸ்டின் லெகார்டே வாஷிங்டன் நகரத்தில் பேட்டி அளிக்குக்ம் போது இந்திய பிரதமர் மோடி தொடங்கி இந்திய அதிகாரவர்க்கங்கள் பெண்களின் நலன் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றதாக செய்திகள் உள்ளன .

 

https://www.ndtv.com/india-news/imf-chief-christine-lagarde-on-kathua-rape-says-pm-modi-needs-to-pay-more-attention-to-women-1840061

அதனால தானோ என்னவோ மோடியார் லண்டனில் இருந்து நாடு திரும்பியவுடன் அவசரக் கோலம் அள்ளித் தெளி என்கிற ரீதியில் ஒரு சட்டத்தை கொண்டு வருகிறது அமைச்சரவை.

ஆனால் இந்த சட்டம் பற்றாது, இதனால் சிறுமிகளுக்கு பாதுகாப்பை விட ஆபத்தே அதிகம் என்பதைக் கவலையுடன் சொல்லுகிறோம்.

 


ஒரு சிறுத்தையாவது மானை அடித்துக் கொன்று தின்றால்தான் தான் உயிர் வாழ முடியும் என்கிற நிலையில் வேட்டை ஆட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது!

சிறுத்தை மானைப் பிடித்துத் தூக்கிச் செல்வது போல சிறுமி ஆசிபாவை வழி மறித்துத் தூக்கிச் சென்று இருக்கிறார்கள். பல நாள் வேட்டையாடிக் கடைசியில் கொன்றும் இருக்கிறார்கள்

சிறுமி ஆசீபா கடத்திச் செல்லப் பட்டு, அடைத்து வைக்கப்பட்டு, கொடூரமாக கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளாக்கப்பட்டுக் கொலையும் செய்யப்பட்டு இருக்கிறார்.

அவர்கள் கடத்திச் சென்ற நேரம் முதல் சிறுமி ஆசிபா எவ்வளவு கொடூர வேதனையை அடைந்து இருப்பார்!

குற்றவாளிகளுக்குச் சரியான தண்டனையை ப் பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது!

நம்முடைய சமுதாயம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது!

 

 


“போட்டாக்களை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் 13 கோடி ரூபாய் தர வேண்டும் , மறுத்தால் அந்தரங்க வீடீயோ காட்சிகள் வெளியிடப் படும் என்றும் அழகி போனில் கூறினார். வெலவெலத்துப் போனவர் போலீசின் உதவியை நாடினார். போலீசின் அறிவுரையின் படி முதலில்  1 கோடி தருகிறேன் எனவும், குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறும் அழகியிடம் கூறினார். அழகி பணத்தை வாங்க வரும்போது மறைந்திருந்த போலீசார் வளைத்துப் பிடித்தனர். போலீசிடம் பிடிபட்ட அழகி தன்னை சூழ்ந்தவர்கள் தன்னை தாவறான பாதைக்கு இட்டுச் சென்று விட்டதாகக் கூறி கண்ணீர் விட்டார்..”

இது போன்ற செய்திகளை நாம் அவ்வப் போது படிக்கிறோம்.

http://www.thehindu.com/news/cities/bangalore/actor-nayana-krishna-surrenders-before-ccb/article6479132.ece

http://www.nandamurifans.com/forum/index.php?/topic/5151-hot-news-actress-padma-narayan-arrestedupated/

 

ஒரு பெண்ணைப் பார்க்கும் போது இந்தப் பெண்ணின் கண்ணில் மின்னலோ, காது பூவின் மடலோ, மூக்கு குங்கும சிமிழோ…இவ்வளவு அழகா! இந்தப் பெண்ணுடன் உல்லாசமாக கொஞ்ச நேரம் இன்பமாக இருக்கலாம், அழகியின் அங்கங்கள் நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எனஎண்ணம் வரக் கூடும் !

ஆனால் அழகியிடம் இருந்து மிரட்டல் போன் வரும் போது மனம்  துடிதுடித்து   கையறு நிலைக்கு சென்று,  அவமானப் படும் கஷ்ட நிலை- ஏன் உயிரோடு இருக்கிறோம் , உயிர் போய் விட்டால் கூட பரவாயில்லை என்று மனம் பதறுகிறது  !

அழகியும் ஏமாற்றிப் பணம் பெற்றுக் கொண்டு கம்பி நீட்ட சரியான இடம் வங்கிகள் என்கிற நிதர்சனத்தைப் புரிந்து கொள்ளாமல் மாட்டிக் கொண்டு கம்பியை என்னும் வேளையில் கண்ணீர் உகுக்கிறார்.

இது போன்ற செய்திகளை படிக்கும் போது ஸ்வாமி பட்டினத்தார் சுவாமிகள் கருத்து நினைவுக்கு வருகிறது

//காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென் றெண்ணாமற் ககமென்று நாடுமித் துர்ப்புத்தியை
ஏதென் றெடுத்துரைப்பேன்? இறைவா, கச்சியேகம்பனே.//

பட்டினத்தார் என்றால் அவர் அறிவுரைகள் துறவிகளுக்கு மட்டும் தான் என்ற ஒரு கருத்து சொல்லப் படுகிறது. துறவில் ஈடுபடாத சாதாரண மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அமைதியாக வாழவும் பட்டினத்தார் பாடல் உதவுகிறது. 

உன்னை பார்த்ததும் பட்டினத்தாரை மறந்தேன் என்று ஓலா காரில் செல்லும் போது காரில் போட்ட பாடல் நினைவுக்கு வருகிறது! ஒரு வேளை அந்தப் பாடல் ஒருவரை ஒருவர் உண்மையாக நேசிக்கும் காதலின் வெளிப்பாடாக இருக்கலாம்.

எப்படி இருந்தாலும் பட்டினத்தாரை மறந்தால் நஷ்டம் நமக்குத்தான், பட்டினத்தாருக்கு அல்ல!

 

 

 


காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து மாநில சார்பற்ற பொது நிர்வாகத்தின் கையில் அணைகளின் கட்டுப்பாடு வந்தால் மட்டுமே தண்ணீர் வரும்.

இது வாழ்வாதார , ஜீவாதார  , அடையாள, ஆதார பிரச்சினை.

காவிரி நீர் இல்லாவிட்டால் கரிகால சோழனார் , இராஜ இராஜ சோழனார் பட்ட பாடெல்லாம் வீணாகி தமிழினம் நாடோடி இனமாகி விடும்.

தமிழினமே, அமைதி வழியில் இணைந்து செயல்படுவோம்!

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements