Thiruchchikkaaran's Blog

அடக் கடவுளே…!

Posted on: March 4, 2011


கடவுள் இருப்பதற்கான நிரூபணத்தை யாரும் தரவில்லை. ஆனாலும்  கடவுள் இருப்பதாக் கருதிக் கொண்டு அமைதியான முறையிலேவழிபடுவதை நாம் ஆட்சேபிக்கவில்லை. தடுக்கவுமில்லை.

ஆனால் அடுத்தவனிடம் போய் உன் கடவுள் பொய் , என் கடவுள் மட்டும் தான் உண்மை என்று வம்பு வழக்கு செய்ய வேண்டாம் , அது பெரிய பிரச்சினையில் சண்டையில் முடிகிறது  என்பதை சொல்லுகிறோம்.

அதே போல கடவுளின் பெயரால் கோட்பாடுகளை சொல்லும் போது போது நல்ல கோட்பாடுகளை சொல்லுங்கள், வன்முறைக் கோட்பாடுகளை சொல்ல வேண்டாம் என்றும் சொல்லுகிறோம். ஆனாலும், வெட்டுவேன், குத்துவேன், கடவுள் சொன்னாரு என்று சொல்லி , அதை நீ ஆட்சேபிக்கக் கூடாது என்று சொன்னால் எப்படி ஆட்சேபிக்காமல் இருக்க முடியும்?

நீ அமைதியா கும்பிட்டுக்க, நான் ஒன்னும் சொல்லலை , ஆனால் அடுத்தவனை வெட்டுவேன், அவன் நிலத்தைப் புடுங்குவேன், அவனை அவமானப் படுத்தி வரி கட்டச் சொலுவேன் என்று எல்லாம் சொல்லுவது நியாயமல்ல, சரியல்ல.

எனவே கடவுள் பெயரால் நல்ல கோட்பாடுகளை சொல்லுங்கள், அதிலே விம்ரசிக்க என்ன இருக்கிறது, அதை எல்லோரும் வரவேற்பார்கள்.

ஆனால் நூல்களில் எழுதப் பட்டுள்ள  கடவு ள் கோட்பாடு / கோட்பாடுகள்  என்ன என்பதை முதலில் சரியாகப் புரிந்து கொண்டார்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். விவிலியம் என அழைக்கப் படும் பைபிளில் உள்ள கடவுள் கோட்பாடுகள் எத்தனை, அந்தக் கோட்பாடுகள் ஒரே போல இருக்கிறதா, இல்லை முரணாக இருக்கிறதா என்பதை பார்ப்போம்.

1)பழம் பறித்து சாப்பிட்டதற்காக தோட்டத்தை விட்டு விரட்டிய கடவுள் கோட்பாடு.

File:Tizian 091.jpg

ஆதம், ஏவாள் ஆகியோர் முதலில் நிர்வாணியாக இருந்து, பிறகு உடை அணிய ஆரம்பித்தனர் என்றும், லார்ட் அனுமதில் இல்லாமல் பழத்தை பறித்து சாப்பிட்டு விட்டனர் என்றும் சொல்லி, அதனால் கோவப் பட்ட லார்ட் அவர்களை தோட்டத்தில் இருந்து விரட்டிய, கடவுளை  கண்டிப்புக்காரராக காட்டும் கடவுள் கோட்பாடு!

2) கடவுளை பொறாமைக் காராராக சிததரிக்கும் கடவுள் கோட்பாடு:

என்னை மட்டுமே, வழி பட வேண்டும், நான் பொறாமைக்கார கடவுள் , பிறர் வழி பாட்டுத் தலங்களை அடித்து உடைக்கலாம்,  யூதர்கள் வாழ  வாழ பிற இனங்களை அழிக்கலாம்,  இரக்கம் காட்டதே, உடன் படிக்கை செய்யாதே  … போன்ற கோட்பாடுகளை உள்ளடக்கி மோசஸ் உருவாக்கிய சமரச மறுப்பு, பொறாமைக்கார கடவுள் கோட்பாடு!

File:Rembrandt Harmensz. van Rijn 079.jpg

3) ஒருவன் தவறே செய்தாலும் ,அவனுக்கு எந்த வித நிபந்தனையும் விதிக்காமல் அவன் திரும்பி வருவதை விரும்பி காத்திருக்கும் கடவுள் கோட்பாடு:

முந்தைய கோட்பாடுகளுக்கு மாறாக விட்டுக் கொடுக்கும், இரக்கம் காட்டும் கோட்பாடுகளை, ஒருவன் தவறே செய்தாலும் கடவுள் விரட்டி அ டிக்க மாட்டார், அவன் திருபி வந்தால் போதும் எனக் காத்திருப்பார் என – தோட்டத்தில் இருந்து விரட்டிய கடவுள் கோட்பாடு, உடன் படிக்கை செய்யாமல் தீர்த்துக் கட்டு என்ற இன அழிப்புக் கட்டளை கடவுள் கோட்பாடு இந்த இரண்டுக்கும் முற்றிலும் மாறான கோட்பாட்டை இயேசு முன் வைக்கிறார்.

File:L Spada Regreso del hijo pródigo Museo del Louvre.jpg

4) பல முரணான கோட்பாடுகளை கலந்து உருவாக்கிய கோட்பாடு :

புதிய ஒயினை புதிய துருத்தியில் வையுங்கள், பழையதுடன் கலக்க வேண்டாம் என்று இயேசு சொல்லி இருந்தும், மோசசின் பல கோட்பாடுகளுக்கு எதிரான கோட்பாடுகளை இயேசு சொல்லி இருந்தும், இயேசு சிலுவையில்  அறியப் பட்டதால் உருவான அனுதாபத்தை உபயோகப் படுத்திக் கொள்ளும் விதாமாக இயேசுவின் பேராலே மோசசின் பொறாமைக் கார கடவுள் கோட்பாடு, தோட்டத்தில் இருந்து விரட்டும் கோட்பாடு எல்லாவற்றையும் மிக்ஸ் பண்ணி அப்போஸ்தலர்கள் முரண்பாடுகள் உள்ள கோட்பாடுகளை மக்களிடம் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.

இப்படி பல முரண்பாடான கோட்பாடுகளை ஒன்றாக்கி மக்களின் தலையிலே கட்டியவர்கள், “அப்படியே ஒத்துக்க போ” என்று சொல்லி விட்டனர்.

(தொடரும்)

81 Responses to "அடக் கடவுளே…!"

//இப்படி பல முரண்பாடான கோட்பாடுகளை ஒன்றாக்கி மக்களின் தலையிலே கட்டியவர்கள், “அப்படியே ஒத்துக்க போ” என்று சொல்லி விட்டனர்//

அருமை .இன்னும்

1. தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள்

2.பாவம் போக்க பலி கொடுத்தல்

3.சடங்குகள்,சம்பிரதாயங்கள்

போன்றவறை பற்றியும் கூறுங்கள்.

வாங்க சங்கர் சார்,
உங்களுடைய வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பல கட்டுரைகள் வர இருக்கின்றன.

தாங்கள் சொல்வது போல் பைபிள் கோட்பாடுகள் முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளன. கொலை செய்யாதிருப்பாயாக என்று ஒரு இடத்தில் சொல்லும். இன்னொரு இடத்தில் பிற இனத்தவர்களை உனக்கு ஒப்புக்கொடுத்தேன் அவர்களை கொல். அவர்களுடைய சொத்துக்களை பங்கு போட்டுக்கொள் என்று சொல்லும். மோசேக்கு கர்த்தர் போட்ட அபத்தமான கட்டளை வசனங்களை இந்தியர்களுக்கு இயேசு சொன்னது போல் விளம்பரம் செய்வார்கள். ஆனால் ஆழ்ந்து படித்தால் சம்பந்தமே இருக்காது. உதாரணமாக என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்ற வரிகள் இஸ்ரவேலா்களை மோசே பாலும் தேனும் ஓடும் நாட்டுக்கு கூட்டிச் செல்வதாக கர்த்தா் மோசேயிடம் கூறிய வார்த்தைகள். இதை தங்கள் வாகனங்களிலும் வீட்டிலும் எழுதி விளம்பரம் செய்கின்றனா்.
வசனங்களை தங்கள் வசதிக்கு தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொண்டு வயிறு பிழைக்கிறார்கள். பொய் சொ்லலாதிருப்பாயாகா என்று ஒரு வசனம். மற்றொன்று கிறிஸ்துவை பிரசங்கம் செய்வதற்காக பொய் சொல்லலாம் என்று. இதை மட்டும் எல்லா பாதிரிகளும் தவறாமல் செய்கிறார்கள்.

பைபிளின்படி ஆதாம் ஏவாளின் எழுபத்தி ஆறாவது தலைமுறையில் இயேசு பிறக்கிறார். இதைக் கணக்கிட்டால் ஆதாம் ஏவாள் தோன்றி பத்தாயிரம் ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் உலகம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டன என்று விஞ்ஞானம் கூறுகிறது. இந்த ஒரு விஷயத்திலேயே பைபிள் முழுக்க கற்பனை என்ற முடிவுக்கு வந்து விடலாம். ஆனால் இன்னும் இதேகதையைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். பைபிளின் அபத்தங்களை http://www.evilbible.com என்ற தளத்தில் பாருங்கள்.

ஐயா,

வெறும் அபத்தம் மட்டும் அல்ல, மனிதத்துக்கு ஆபத்தும் கூட. அப்பட்டமான மத சகிப்புத் தன்மை இன்மையை, மத வெறியை , இனவாத இனவெறியை, பிற மதங்களைக் கண்டித்து அழிக்க வேண்டும் என்கிற ஆவேசத்தை வெளிப் படுத்தும் கருத்துக்கள் உள்ளன.

விவிலியத்தில் உள்ள, இனவாத இனவெறி , மதவாத மத வெறி வெறும் அபத்தம் மட்டும் அல்ல, ஆபத்தும் கூட.

அதே நேரம் நாம் எந்த ஒருமதத்தையும் ஆக்க பூர்வமாக அணுகுகிறோம்.

விவிலியத்ததில் சொல்லப் பட்டுள்ள கருத்து ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்க்கிறோம். பெரும்பாலான கருத்துக்கள், மத சகிப்புத் தன்மையை அழித்து, மத வெறியை பரப்பும் வகையிலும், இனப் படுகொலையை புனிதப் படுத்தும் வகையிலும் உள்ளன. அவற்றை சுட்டிக் காட்டி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். அவற்றில் இயேசு கிறிஸ்து சொன்னதா க உள்ள சில நல்ல கருத்துக்களும் உள்ளன. அவற்றை முன்னிலைப் படுத்தி அவர்கள் மனதில் மத சகிப்புத் தன்மை மேம்படுமபடி செய்து கிறிஸ்தவர்களை நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு வருவதே நமது நோக்கம்.

//உதாரணமாக என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்ற வரிகள் இஸ்ரவேலா்களை மோசே பாலும் தேனும் ஓடும் நாட்டுக்கு கூட்டிச் செல்வதாக கர்த்தா் மோசேயிடம் கூறிய வார்த்தைகள். இதை தங்கள் வாகனங்களிலும் வீட்டிலும் எழுதி விளம்பரம் செய்கின்றனா்.//
அப்படியென்றால், கீதை என்பது முழுக்க முழுக்க போர்களத்தில் நின்ற அர்ஜுனனுக்கு மட்டும்தானோ?

நல்ல வேலை திருச்சிக்காரன், நீங்கள் அரசு தரப்பு வழக்கறின்ஞராக இல்லை. இருந்திருந்தால் எத்தனையோ அப்பாவிகளை குற்றம் சாட்டி, பல அப்பாவிகளை தண்டித்திருப்பீர்கள், உமக்கு வேண்டிய ஆட்களை புனிதர்களாக காட்டி இருப்பீர்கள்.

“லார்ட்” என்று எழுதி இருப்பது நக்கலடிக்கதானே? சரி, போகட்டும் நீங்கள் ஒத்துக்கொள்ளமாட்டீர்கள்.

//ஆதம், ஏவாள் ஆகியோர் முதலில் நிர்வாணியாக இருந்து, பிறகு உடை அணிய ஆரம்பித்தனர் //

இதில் என்ன பிரச்னை, நம் குழந்தைகளும் அவ்வாறே.

//லார்ட் அனுமதில் இல்லாமல் பழத்தை பறித்து சாப்பிட்டு விட்டனர் என்றும் சொல்லி, அதனால் கோவப் பட்ட லார்ட் அவர்களை தோட்டத்தில் இருந்து விரட்டிய, கடவுளை கண்டிப்புக்காரராக காட்டும் கடவுள் கோட்பாடு!//

கண்டிப்பில்லாத தகப்பன் ஏது? மேலும், பழம் தின்றது சாதாரண காரியம் தானே என்று காட்ட துடிக்கும் உங்கள் புத்திசாலித்தனம் தெரிகிறது (அத்தகைய புத்திசாலித்தனம் எங்கிருந்து வரும் என்றும் தெரியும்). ஆனால், எந்த ஒரு குற்றத்திற்கும் அதன் நோக்கத்தை வைத்தே அது ஆராயப்படவேண்டும்.

//என்னை மட்டுமே, வழி பட வேண்டும்//

தன் மனைவி தன்னிடம் மாத்திரமே மனைவியாக இருக்கவேண்டும் என்றும், தன் பிள்ளைகள் தன்னையே தகப்பனாக அறிக்கை செய்யவேண்டும் என்றும் இருப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்.

//பிற இனங்களை அழிக்கலாம்//

பாவத்தை பற்றி நீர் அறிந்திருக்க வில்லை. மனிதனை தேவனித்தளிருந்து பிரித்து வைக்ககூடிய வல்லமை பாவத்திற்கு மாத்திரமே உண்டு. அத்தகைய பாவம் மக்கள் மத்தியில் பெருக்கெடுக்கும் போது, பாவத்தை அழிக்க, அந்த பாவம் பெருகியுள்ள மக்களில் ஒரு கூட்டமும் அழிக்கப்படும் (காலில் நோயுற்ற மனிதனை காக்க, அந்த நோய்தீர்க்க மருந்தில்லாத பட்சத்தில், அவன் காலை மருத்துவர் நீக்குவதில்லையா?). இப்பொழுது பாவத்தின் பரிகாரியான கிறிஸ்துவின் ரத்தம் பாவத்தை போக்கும் அருமருந்தாக உள்ளது. அதனால், கிறிஸ்துவின் மரணத்தின் பொருட்டு பாவத்தை போக்க யாரும் அழிக்கப்பட தேவை இல்லை.

உமது மற்ற கேள்விகளுக்கும் பதில் வரும். இப்பொழுது நேரமில்லை.

அசோக்

//“லார்ட்” என்று எழுதி இருப்பது நக்கலடிக்கதானே? சரி, போகட்டும் நீங்கள் ஒத்துக்கொள்ளமாட்டீர்கள்.//

இது வேற இப்ப, இது சம்பந்தமாக இப்போது இணையத்திலே பெரிய சச்சரவு நடக்கிறது.

பைபிளில் ஆதாமை விரட்டியவரை லார்ட் என எழுதி உள்ளனர், வேறு பெயர் இல்லை.

மோசசுக்கு இன அழிப்பு திட்டம் தந்தவர் பெயர் ஜெஹோவா எனக் குறிப்பிட்டுள்ளனர்!

இயேசு கடவுளாக குறிப்பிட்டு அழைத்த பெயர்கள் பிதா மற்றுள் எலீ ஆகியவை.

அப்புறம் இயேசுவே கடவுள் என்றும், கடவுளின் மகன் என்றும் மகனாக வந்த கடவுள் என்றும் பல்வேறு வகையில் சொல்கின்றனர். இது விடயமாக இணையங்களில் பெரிய தகராறு நடக்கிறது, பிசாசின் தூதுவன், கெர்சிக்கிற பிசாசின் தூதுவன், என்று ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்கின்றனர். இதிலே நாம் என்ன சொல்ல இருக்கிறது , நமக்கு மத வெறியும் இல்லை, தகராறிலும் விருப்பம் இல்லை. நாம் யாரையும் திட்டவும் இல்லை. என்னை ஜோக்கர் என்றும், ஜோக்கர் இல்லை முட்டாள் என்றும் .. மனம் குளிர திட்டித் தீர்த்தத் போதும், நாம் பதிலுக்கு பதில் ஈடுபடவில்லை. உள்ளதை உள்ளபடி எழுதுகிறோம், உள்ளதை உள்ளது என்றும், இல்லாததை இல்லாதது என்றும் சொல்கிறோம். இது உங்களுக்கு நக்கலாக உள்ளது

//பைபிளில் ஆதாமை விரட்டியவரை லார்ட் என எழுதி உள்ளனர், வேறு பெயர் இல்லை//

நன்றாக பூசி மொழுகுகிறீர்கள்.எதற்காக இந்த பொய் உமக்கு?
கர்த்தர் என்று அழகான தமிழில் உள்ளதே. தமிழில் உள்ள வேதத்தில் “லார்ட்” என்று எழுதப்படவில்லை. நீங்கள் தமிழில் எழுதும்போது “லார்ட்” என்ற சொல்லாடல் அங்கு தேவையுமில்லை.

//நாம் யாரையும் திட்டவும் இல்லை. என்னை ஜோக்கர் என்றும், ஜோக்கர் இல்லை முட்டாள் என்றும் .. மனம் குளிர திட்டித் தீர்த்தத் போதும், நாம் பதிலுக்கு பதில் ஈடுபடவில்லை. உள்ளதை உள்ளபடி எழுதுகிறோம், உள்ளதை உள்ளது என்றும், இல்லாததை இல்லாதது என்றும் சொல்கிறோம். இது உங்களுக்கு நக்கலாக உள்ளது//

வடிவேலுவை காமெடியன் என்று சொல்லுவது, அவரை திட்டுவதாகுமா? அதே போல்தான் இதுவும். உங்கள் எழுத்துக்களை பார்க்கும்போது உங்களை மேதை (அ) சிந்தனாவாதி என்றா சொல்லத்தோன்றும்? நான் உள்ளதை உள்ளபடிதான் சொல்லுகிறேன்.

அப்பட்டமான் பொய் சொல்லுவது யார் ,

மூல பைபிளில் ஒவ்வொருவருக்கும் தனித் தனி பெயர் தெளிவாக் உள்ளது,

லார்ட், ஜெஹோவா, பாதர் , எலீ என்று மூல பைபிளில் போட்டதை தமிழில் மொழி பெயர்க்கும் போது எல்லோருக்கும் ஒரே பெயராகப் போட்டு தவறான மொழி மாற்றத்தை வேண்டும் என்றே செய்து இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தியாவில். தமிழ் நாட்டில் இருப்பவர்களை ஏமாற்றி விடலாம் என்று நினைத்து அப்பட்டமான பொய்யை உண்மை போலக் காட்டினால் நடக்குமா?

அசோக், இப்படி எல்லோருக்கும் கர்த்தர் என்று பொதுப் பெயர் போட்டு பூசி மொளுகியத்தை நீங்கள் வெள்ளை அடித்துக் கொடுக்கிறீர்கள்

அதை நான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன்.

வெள்ளை அடிக்கப் பட்ட கல்லறையின் உள்ளே உள்ள எலும்புகளை மக்கள் அறிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர்

இது கலிகாலம் சாமி,
தெரியாமலா நம் முன்னோர்கள் இந்த கலியை வகுத்துள்ளனர். கலி தன வேலையை செய்கிறது.

//என்னை மட்டுமே, வழி பட வேண்டும்//

தன் மனைவி தன்னிடம் மாத்திரமே மனைவியாக இருக்கவேண்டும் என்றும், தன் பிள்ளைகள் தன்னையே தகப்பனாக அறிக்கை செய்யவேண்டும் என்றும் இருப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்.//////

நண்பர் அசோக்குக்கு,
யார் கணவன்? ஆதியிலே இருந்து உள்ளவனா? பாதியில் வந்து நான் தான் உன் கணவன் என்று சொல்பவரா?
யார் தகப்பன் நினைவு தெரிந்த நாள் முதல் தகப்பனாக உள்ளவனா?
இடையிலே வந்து நான்தான் உன் தகப்பன் என்று கூரிகொல்பவரா?

பாவிகள் என்று யாரும் இங்கு இல்லை, ஒருவரை பாவி என்று கூற அடுத்தவர்க்கு எந்த உரிமையும் இல்லை.
பாவி என்பது ஒருவன் தான் செய்யும் செயலால் மட்டுமே.எதுவுமே செய்யாதவனுக்கு எங்கிருந்து பாவம் வரும்.
ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்று ( பாவம்) எப்படி வரும்.
கடவுளை பணியாத ஒருவன் எப்படி பாவி ஆவான்? தன்னை கண்டுக்காமல் அவன் போக்கில் யாருக்கும் எந்த தொந்தரவும் இன்றி போகும் ஒருவனை உள்ளூர் தாதா வலிய வம்பிழுத்து அடிப்பது போன்றது தான் தன்னை பணியாத மனிதனை நரகில் தள்ளும் கடவுளின் செயலும்.அப்படி செய்யும் கடவுள் கடவுளே அல்ல,தாதா.
ஒருவன் என்றோ எதோ ஒன்று செய்திருந்தால் அதனுடைய எதிர்வினை அந்த ஒருவனை என்றாவது ஒருநாள் வந்தடைய வாய்ப்பு உண்டு,அல்லது எதுவும் எப்போதும் செய்யாமல் இருக்கும் போது பாவம் என்ற ஒன்று எப்டி வரும்?

நண்பர் சிவனடியான்,
நியாயமான கேள்வி. பரிசுத்த வேதம் கூறுகிறது, மனிதகுலம் முழுமையும் வழிதப்பி போயிற்றுடென்று. மக்கள் அனைவரும் தாங்கள் யாருடைய பிள்ளைகள் என்பதை மறந்து/ மறுத்து, எண்ணம் போல் வாழ்கிறார்கள். தாங்கள் யாரிடத்தில் சுகமாய் இருப்பதாய் நம்புகிறார்களோ, அவ்விடத்தின் அதிபதியை தன் தகப்பன் என்று அழைக்க துவங்கிவிட்டார்கள். தேவன் இயேசு மூலமாய் அவர்களை மன்னித்து, தன் பிள்ளைகளாய், தன்னிடம் சேர்த்துக்கொண்டு, நித்திய காலமும் தன்னுடன் வாழ அழைக்கிறார்.
மேலும், இந்த தந்தை மகன், மணவாளன் மணவாட்டி, போன்றவை நம் புரிதலுக்காக, நம் வாழ்க்கை முறையிலிருந்து எடுக்கப்பட்டதே. (படைத்தவனுக்கு பெண்டேது பிள்ளயேது என்ற பாடலை கேட்டிப்பீர்கள்). So, please dont take things literally.
இது அழைப்பு மட்டுமே, கட்டாயம் அல்ல. நரகத்தை பற்றிய உபதேசம் எச்சரிப்பு மட்டுமே, பயமுறுத்தல் அல்ல. இது உங்களுக்கு வேறு விதமாய் தோன்றினால், நாங்கள் பொறுப்பல்ல. மேலும் கேள்விகளை எதிர்பார்க்கிறோம்.
நன்றி,
அசோக்

முதலில் நாம் “பாவி”க்கான விளக்கத்தை பார்போம்.
உங்கள் விளக்கத்தின் படி “ஒருவன் பாவம் செய்வதால் பாவி ஆகிறான்”.
வேதம் கூறும் விளக்கத்தின்படி “ஒருவன் பாவியாய் இருப்பதால் பாவம் செய்கிறான்”. என் இந்த கேள்விக்கு நீங்கள் பதில் தாருங்கள். ஒரு மரம் வாழைமரமாய் இருப்பதால் வாழைக்கனி தருகிறதா? அல்லது வாழைக்கனி தருவதால் அது வாழைமரமா? உங்களுடைய விளக்கத்தின் படி “வாழைப்பழம் தருவதால் அது வாழைமரம் என்கிறீர்கள்”.
மேலும் நீங்கள் சொர்க்கம்(அ) வீடுபேறு என்பதை ஒரு “வெற்றிகொப்பை” போல கருதுகிறீர்கள். நல்லபடியாய் வாழ்ந்தவன் அந்த கோப்பையை அடைவான் என்று நினைக்கிறீர்கள். உண்மையில் அது ஆண்டவனுடைய வீடு. தனக்கு பிரியமான பிள்ளைகளை, தன்னுடன் நல்லுறவில் உள்ள பிள்ளைகளை அவர் தன் வீட்டில் அனுமதிக்கிறார். கிறிஸ்துவத்தில் வீடுபேறு என்பது ஆண்டவரிடம் நாம் கொண்டுள்ள உறவை சார்ந்துள்ளது. No one deserves HEAVEN. அவரது கிருபையால் மாத்திரமே நாம் அதை அடையமுடியும். Do you think that you deserve HEAVEN? Your mind knows the truth irrespecitive of the answer that you give in this forum.

மன்னிக்கவும்,சொர்க்கம் என்ற ஒரு தனியான நகரத்தில் எனெக்கு நம்பிக்கை இல்லை.வீடு பேரு அல்லது முக்தி நிலை என்பது என் இலக்கு என்று நீங்களாக நினைத்து கொள்ள வேண்டாம்.
வீடு பேறு என்பது ஆத்மாவின் இயல்பான நிலை. இப்போது இங்கு வாழ்வது எல்லாம் தற்காலிக நிலை இங்கு செய்யும் செயல்களுக்கு விளைவுகளை தீரும் வரை இங்கு இருக்க வேண்டியது ஆன்மாவின் இயல்பு.
தன்னை தான் உணர்ந்தவன் இயல்பான தன்னிலையை அடைகிறான்.தனியான ஒரு நகரம் அதனை அடைவதற்கு முயற்சி எல்லாம் கிடையாது. அது உங்கள் வழக்கத்தில் தான்,என்ன செயல் என்ன குற்றம் செய்திருந்தாலும் இறைவனை பணிந்து பணிந்த ஒரே காரணத்தால் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு (equal and opposite reaction ஐ பொய்யாக்கி) அவன் தயவால் மட்டுமே அந்த நகரத்தை சென்று அடைவது என்பது..
இங்கே வினை விதைத்தவனுக்கு வினை,திணை விதைத்தவனுக்கு திணை
உப்பு குடித்தால் தண்ணீர் குடித்தே தீர்க்க வேண்டும்.
இட்டார்க்கு இட்ட பலன் சேர்ந்தே தீரும்

////வேதம் கூறும் விளக்கத்தின்படி “ஒருவன் பாவியாய் இருப்பதால் பாவம் செய்கிறான்/////
அப்படி ஒருவன் எதனால் பாவியாய் இருக்கிறான்? அல்லது படைக்கபடுகிறான்.
படைக்கும் போதே ஒருவனை பாவமற்றவனாய் படைக்க உங்களின் வேதம் காட்டும் கடவுளால் இயலாதா

//மன்னிக்கவும்,சொர்க்கம் என்ற ஒரு தனியான நகரத்தில் எனெக்கு நம்பிக்கை இல்லை.//

சிவனடியான், நாம் நம்புவதாலோ / நம்பாததாலோ ஏதாவது மாறிவிடுமா என்ன? மேலும் உங்கள் கேள்விகளை, உங்கள் கேள்வி கேட்கும் பாங்கினை நான் பாராட்டுகிறேன்.

//இப்போது இங்கு வாழ்வது எல்லாம் தற்காலிக நிலை இங்கு செய்யும் செயல்களுக்கு விளைவுகளை தீரும் வரை இங்கு இருக்க வேண்டியது ஆன்மாவின் இயல்பு.//

அப்போ முதல் முறை, இங்கு எப்படி வந்தோம்?

//தன்னை தான் உணர்ந்தவன் இயல்பான தன்னிலையை அடைகிறான்.//

அதைதான் நானும் சொல்கிறேன். நீங்கள் யாருடைய பிள்ளை, அல்லது யாருடைய மணவாட்டி என்பதையும், நீங்கள் ஏன் இந்த நிலையில் இருக்கிறீர்கள் என்றும், நீங்கள் உண்மையில் அறிந்தால், நீங்கள் சொல்லும் அந்த ஆன்மாவின் இயல்பான தன்னிலையை, வீடுபேரை அடையலாம்.

//தனியான ஒரு நகரம் அதனை அடைவதற்கு முயற்சி எல்லாம் கிடையாது. அது உங்கள் வழக்கத்தில் தான்//

கிரியையால் நாம் வீடுபேறு அடியமுடியாது என்றே வேதம் கூறுகிறது.

//என்ன செயல் என்ன குற்றம் செய்திருந்தாலும் இறைவனை பணிந்து பணிந்த ஒரே காரணத்தால் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு (equal and opposite reaction ஐ பொய்யாக்கி) அவன் தயவால் மட்டுமே அந்த நகரத்தை சென்று அடைவது என்பது..

இங்கே வினை விதைத்தவனுக்கு வினை,திணை விதைத்தவனுக்கு திணை
உப்பு குடித்தால் தண்ணீர் குடித்தே தீர்க்க வேண்டும்.
இட்டார்க்கு இட்ட பலன் சேர்ந்தே தீரும்//

குற்றங்கள் பல புரிந்து, பின்பு ஆண்டவன் கருணையால் மனம் திருந்தி இறைசேவை செய்தவர்கள் கதைகள் இந்துத்துவத்தில் இல்லாதது போல பேசுகிறீர்கள்.

//அப்படி ஒருவன் எதனால் பாவியாய் இருக்கிறான்? அல்லது படைக்கபடுகிறான்.
படைக்கும் போதே ஒருவனை பாவமற்றவனாய் படைக்க உங்களின் வேதம் காட்டும் கடவுளால் இயலாதா//

மனிதர்களுள் தேவன் “படைத்தது” ஆதாமை மாத்திரமே. அவன் பாவமின்றி படைக்கபட்டான். மீதி அனைவரும், அவனில் இருந்து தோன்றியவர்கள். ஆதாம் செய்த மீறுதலின் நிமித்தம், பாவம் இந்த உலகில் நுழைந்தது. பிறகு அவனில் இருந்து தொன்றிவர்களுக்கு பாவமே இயல்பான குணமாகியது. மனிதன் பாவமற்றவனாக மாறவே இயேசு இந்த உலகிற்கு அனுப்ப பட்டார்.

கேள்விகள் வரவேற்க்கப்படுகிறது,

அசோக்

LORD MACAYLUS ADDRESS TO THE BRITISH PARLIMENT 1835 FEB

I HAVE TRAVELLED ACROSS THE LENGTH AND BREATH OF INDIA AND HAVE NOT SEEN ONE PERSON WHO IS A BEGGER, WHO IS A THIEF,SUCH A WEALTH I HAVE SEEN IN THIS COUNTRY,SUCH HIGH MORAL VALUES, PEOPLE OF SUCH CALIBER, THAT I DO NOT THINK WE WOULD EVER CONQUER THIS COUNTRY,UNLESS WE BREAK THE VERY BACK BONE OF THIS NATION WHICH IS HER SPIRITUAL AND CULTURAL HERITAGE,AND THEREFORE,I PROPOSETHAT WE REPLACE HER OLD AND ANCIENT SYSTEM,HER CULTURE, FOR IF THE INDIANS THINK THAT ALL THAT IS FORIEGN AND ENGLISH IS GOOD AND GREATER THAN THEIR OWN,THEY WILL LOSE THEIR SELF ESTEEM,THEIR NATIVE CULTURE AND THEY WILL BECOME WHAT WE WANT THEM, A TRULY DOMINATED NATION.
அன்புள்ள நண்பர் அசோக்,
நீங்கள் இப்போது இப்படி பேசுவதற்கும் இடையில் வந்தவரை கணவன் என்று கூறுவதற்கும் காரணமான இந்த அறிக்கையை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
உண்மையை உணர முயலுங்கள்,யோசியுங்கள் நண்பரே.
அயல் நாட்டவர் சதியினால் அவர்களுக்கு அடிமைப்பட்டிருபதே உங்களின் உண்மை நிலை.சதி வலையில் வீழ்ந்து சுயத்தை இழந்து விட்டீர்களே

நண்பர் சிவனடியான்,

நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த கடிதம், 19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக தெரிகிறது. ஆனால் வறுமை என்பது நம் நாட்டிற்கு அதுவரை வரவே இல்லையா? இந்த விஷயத்தில் வெள்ளைக்காரனின் எழுத்தை நம்பும் நீங்கள் நம் நாட்டவரின் எழுத்துக்களை நம்பவில்லையா? நம் நாட்டில் பிச்சைக்காரரும் கொள்ளைக்காரரும் வெள்ளைக்காரன் வரும்வரை இல்லவே இல்லை என்று நம்புகிறீரா?

கிறிஸ்துவம் இந்தியாவிற்கு, ஏதோ சமீப காலத்தில் வந்ததை போல் பேசுகிறீர். அது முதல் நூற்றாண்டில் இருந்து இந்தியாவில் உள்ளது.

அதேபோல் கிறிஸ்துவம் நாடு பிடிக்கும் சூத்திரம் போல யாரோ உங்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். அதுவும் தவறு. கிறிஸ்துவிக்காய் இன்றும், மக்கள் நம் இந்தியாவிலும், இஸ்லாமிய நாடுகளிலும் உயிரைக்கூட கொடுக்கிறார்கள். அதுவும் சாத்வீக முறையில். எதிரியையும் நேசித்து.

நன்றி,

அசோக்

///////கண்டிப்பில்லாத தகப்பன் ஏது? மேலும், பழம் தின்றது சாதாரண காரியம் தானே என்று காட்ட துடிக்கும் உங்கள் புத்திசாலித்தனம் தெரிகிறது (அத்தகைய புத்திசாலித்தனம் எங்கிருந்து வரும் என்றும் தெரியும்). ஆனால், எந்த ஒரு குற்றத்திற்கும் அதன் நோக்கத்தை வைத்தே அது ஆராயப்படவேண்டும்//////
நண்பரே இதற்கு எதற்கு புத்திசாலி தனம் எல்லாம்? சாதாராண பழம் தின்ற விசயத்தை தண்டனை கொடுப்பது குற்றம் என்று சொல்வதற்கு.

நீங்கள் உங்கள் குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு ஒரு ஆப்பிள் சரி வேண்டாம் கொஞ்சம் சாக்லேட் ஐ தனியாக ஓரிடத்தில் வைத்து விட்டு இதை மட்டும் சாப்பிட கூடாது வீட்டில் உள்ள மற்ற எந்த உணவை வேண்டுமானாலும் சாப்பிட்டு கொள்ளுங்கள் என்று விவரம் அறியாத பிஞ்சு அன்பு குழந்தைகளிடம் சொல்லிவிட்டு வெளியே செல்கிறீர்கள்.
நீங்கள் திரும்பி வரும் போது உங்களின் அன்பு குழந்தைகள் அவற்றை தின்று விட்டன (மனதில் அவற்றை தின்ன வேண்டும் என்ற ஆவல் மேலிட்டதாலும் கைக்கெட்டும் வகையில் அந்த சாக்லேட் இருந்ததாலும்)

நீங்கள் என்ன செய்வீர்கள் ஏதும் அறியாத அவர்களை தண்டிப்பீர்களா சாபமும் பாவமும் கொடுப்பீர்களா? தண்டனை தருவீர்களா? இங்கே தவறு செய்தது நீங்கள் தான் என்பதை உணர்ந்து கொள்வீர்களா?

மனிதர்களாகிய நமக்கே இந்த விசயத்தில் நம் குழந்தை மேல் கோபம் வராது,பின் எப்படி அன்பே உருவான உங்கள் கடவுள் மட்டும் கோபப்படுவார். அப்படி கோபப்பட்டால் அவர் அன்பானவரா? இல்லை இதயமற்ற சர்வாதிகாரியா?

அடகடவுளே

அன்பு நண்பரே,
ஆரோக்யமான விவாதத்திற்கு நன்றி.

///ஆதாம் செய்த மீறுதலின் நிமித்தம், பாவம் இந்த உலகில் நுழைந்தது. பிறகு அவனில் இருந்து தொன்றிவர்களுக்கு பாவமே இயல்பான குணமாகியது///
தந்தை செய்த குற்றத்திற்கு நான் தண்டனை ஏற்க வேண்டும் என்பது எவ்வளவு கொடுமை. பின் எப்படி பல தலைமுறைக்கு முன் ஒரு முதாதையர் செய்த தவறுக்கு நான் பாவி ஆக முடியும்.முதலில் ஒரு பழத்தை தன தந்தையின் தோட்டத்தில் இருந்து பறித்து உண்பது பாவம் என்பதே ஒத்துகொள்ள முடியாத கருத்து. முந்தைய என் பின்னுட்டதிலே அதனை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.

//////மனிதன் பாவமற்றவனாக மாறவே இயேசு இந்த உலகிற்கு அனுப்ப பட்டார்.////////
அவர் தான் வந்து மனிதனை பாவமற்றவனாக மற்ற தன்னை தியாகம் செய்து விட்டு திரும்பி விட்டார் என்கிறீர்களே, பின் ஏன் இன்னும் உங்கள் மேல் பாவம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தால் நெருப்பு பிடிக்காமல் எப்படி இருக்கும்?
உணவையும் உண்பவனையும் அருகில் வைத்து உன்ன வேண்டும் என்ற ஆவலையும் படைத்து விட்டு உண்ணக்கூடாது என்று சட்டம் போடுவது என்ன நியாயம்?
ஆணையும் பெண்ணையும் படைத்து அருகருகில் வைத்து விட்டு அவர்களுக்கு காம உணர்வும் கொடுத்து விட்டு அவர்கள் ஒருவரை ஒருவர் தொடக்கூடாது என்று கண்டிப்பது எப்படி.

அதே போன்றதே apple ம அதனை உண்ண தூண்டும் பாம்பும் உண்ணக்கூடாது என்ற கட்டளையும்.

.////குற்றங்கள் பல புரிந்து, பின்பு ஆண்டவன் கருணையால் மனம் திருந்தி இறைசேவை செய்தவர்கள் கதைகள் இந்துத்துவத்தில் இல்லாதது போல பேசுகிறீர்கள்//////
இல்லை என்று யார் சொன்னது?இறை சேவை நிச்சயம் செய்யலாம். அனால் மனம் திருந்திய காரணத்தால் அல்லது கடவுளை பணிந்துவிட்ட காரணத்தால் மட்டும் அவர் மோட்சம் அடைந்து விட முடியாது, இதுநாள் வரை செய்த வினைகளின் விளைவுகளை அடைந்து தீர்ந்த பிறகே (தின்ற உப்பிற்கு தண்ணீர் குடித்த பிறகே ) பிறவி சுழலில் இருந்து விடு படமுடியும்.குறிப்பாக இதற்கு மேலும் தவறு செய்யாதிருக்க வேண்டும்.
உங்கள் ஸ்டைலில் பாவமன்னிப்பு கேட்டவுடன் எல்லாம் உடனே விடுதலை கிடையாது.
மனம் திருந்தல் மேலும் தவரிழைக்கதிருத்தல் ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும். என்ன இறை சேவை செய்தாலும் அது நம் வினையின் விளைவுகளை கடக்க உதவுமே அல்லாது பணிந்த காரணத்தால் செய்த வினைகளின் விளைவுகளை தப்பித்து விடமுடியாது.

அசோக் ,

இந்தக் கட்டுரையின் முக்கிய பொருளை விட்டு வழக்கம் போல உங்களின் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறீர்கள்.

நீங்கள் பிறரின் மத வழிபாட்டை , நம்பிக்கையை இழிவு படுத்தி மோதல் போக்கைக் கடைபிடிக்காமல், அமைதியாக உங்கள் மத வழிபாட்டை நடத்திக் கொள்ளலாம் என்பதைப் பல முறை சொல்லி விட்டோம்.யாருடைய வழி பாட்டு முறையையும் வெறுக்க சொல்லவில்லை- அவை பிறருக்கு, சமூகத்துக்கு வூறு செய்யாத வரையில் என்றும் சொல்லி வருகிறோம்.

கிறிஸ்துவம் என்ற பெயரில் உலகம் எங்கும் பிற மதங்களுக்கு எதிரான சகிப்புத் தன்மை இன்மையை பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். அதையே நீங்களும் செய்கிறீர்கள். 2 வருடங்களுக்கு முன்பே நான் சொல்லி இருக்கிறேன். அண்ணா நகர் புளூ ஸ்டார் சர்ச்சில் பிரார்த்தனையில் கலந்து கொண்டு, பக்கத்திலே உள்ள ஐயப்பன் கோவில் ஆரத்தியிலும் பங்கெடுக்க நான் தயார் என்று. நீங்கள் கலந்து கொள்ள விரும்பினால் கலந்து கொள்ளுங்கள். விரும்பாவிட்டால் இங்கே யாரும் கட்டாயப் படுத்தவில்லை. நீங்கள் கலந்து கொள்ளவில்லையே என்று உங்களை வெறுக்கவும் இல்லை.

ஆனால் யூத மதத்தின் மத சகிப்புத் தன்மை அழிப்பு கோட்பாடுகளை, இன அழிப்பை புனிதப் படுத்துவதை, பிற மதங்களை எல்லாம் வெறுத்து அவர்கள் தெய்வங்களை இழிவுபடுத்தும் மோதல் போக்கை, இயேசு கிறிஸ்துவின் பெயரால் இந்தியாவில் பரப்புவதில் வெற்றி பெற இயலாது.

இயேசு கிறித்துவின் கோட்பாடு, மோசசின் கோட்பாட்டுக்கு மாறானது, தோட்டத்தில் இருந்து விரட்டிய லார்ட் கோட்பாட்டுக்கும் மாறானது.

யூத மதத்தின் மத வெறி, இனவெறிக் கருத்துக்களுக்கு மாறான விட்டுக் கொடுக்கும், சமரசக் கோட்பாடை இயேசு கிறிஸ்து சொன்னார்
என்பதை விளக்கும் விதமாக தொடர்ந்து பல கட்டுரைகள் வெளியாகும்.

நீங்கள் உங்களுக்காக எந்த ஒரு கோட்பாட்டையும்- பொறாமையுள்ள கடவுள், தன்னை வழி படாதவரை தண்டிக்கும் கடவுள், நரகம், எரி நரகம், பாவம், பாவி, இரட்சிப்பு …- நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் அடுத்தவரிடம் போய், நீ எரி நரகத்தில் தள்ளப் படப் போற என்று சொல்லி விட்டு அது பயமுறுத்தல் இல்லை எச்சரிக்கை என்று சொன்னால் தெருவில் மாமூல் வாங்குவோர் கூட மிரட்டி விட்டு, புரியுதா எச்சரிக்கை பண்றேன், கடையைக் காலி பண்ணிடு இல்லேனா என்று சொல்லி விட்டுப் போகிறார்கள். அதுவும் எச்சரிக்கை தான். அடித்தான் என்பதை தட்டினார் என்று சொல்வது போலத்தான்.

இந்தக் கட்டுரையின் முக்கியக் கருத்து விவிலியம் என்னும் நூலில் பல்வேறு கால கட்டங்களில் பலவேறு நபர்கள் உருவாக்கிய கடவுள் கோட்பாடுகள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது என்பதே.

அதற்க்கு பதில் அளிப்பதை விட்டு விட்டு எதை எதையோ எழுதுகிறீர்கள்.

//இந்தக் கட்டுரையின் முக்கிய பொருளை விட்டு வழக்கம் போல உங்களின் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறீர்கள். //

ஹலோ திருச்சியாரே,
நான் தலைப்பை விட்டு வழிவிலகி போகவில்லை. நீங்கள் முரண்பாடு என்று குற்றம் சாட்டியுள்ளதை , அது முரண்பாடல்ல என்று விளக்கிவருகிறேன். மேலும், நண்பர் சிவனடியானின் கேள்விகளுக்கு விடையளித்து வருகிறேன். எங்கள் இருவருக்குள்ளும் ஒரு ஆரோக்கியமான விவாதமே நட்பு ரீதியில் நடந்து வருகிறது. இதை நண்பர் சிவனடியானும் ஒத்துக்கொள்ளுவார் என்று நம்புகிறேன்.
நீங்கள், “என்னடா இவன் உண்மைகளை விளக்கமாக எடுத்து வைக்கிறான்” என்று பதட்டப்படுவதாகவே தொன்றுகிறது.
நீங்கள் எங்கு வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் வழிபடலாம். ஒருவன் தெருவில் தண்ணியடித்து நிர்வாணியாய் கிடக்கலாம், இன்னொருவன் ஏழைகளுக்கு அன்னதானம் தரலாம், எவர்கள் யாருடைய செயலிலும் நான் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இவர்களு எல்லாருடைய செயலுக்கும் எனக்கொரு கருத்திருக்கும் (ஆண்டவருக்கும் ஒரு கருத்திருக்கும்), நான் என் கருத்தினை வெளிப்படுத்துகிறேன். எப்படி உங்கள் கருத்தை வெளிப்படுத்த (சீதை கடவுளை விட மேம்பட்டவர் என்று ஒரு கருத்தை வெளிப்படுத்திநீரே, நினைவுள்ளதா?) உரிமை உடையவராய் இருக்கிறீரோ, அதே போல் எனக்கும் உரிமையுண்டேன்பதை மறக்க / மறுக்க வேண்டாம்.
அசோக் குமார் கணேசனாகிய நான், யாருடைய வழிபாட்டு தளத்தையும் உடைக்கவோ, யாரையும் அவர்கள் நம்பிக்கையின் நிமித்தம் துன்புறுத்தவோ இல்லை. உங்கள் தளத்தில், உங்கள் எழுத்துகளை குறித்து என் கருத்துகளை முன்வைக்கிறேன். அவ்வளவே. மேலும் என் கருத்தை குறித்த நண்பர்களின் கேள்விகளுக்கு இங்கு பதிலளிக்காமல் எங்கு பதிலளிப்பது? உங்களுக்கு விருப்பமில்லைஎன்றால் நீங்கள் என் எழுத்துக்களை தடை செய்து கொள்ளலாம். அது உங்கள் உரிமை. உங்கள் உரிமையில் நான் எப்போதும் தலையிட மாட்டேன்.
நன்றி,
அசோக்

எப்படி முரண்பாடு இல்லாமல் இருக்கிறது?

ஜெஹோவா உடன் படிக்கை செய்யாதே, இரக்கம் காட்டதே என்று சொன்னதாக மோசஸ் சொல்கிறார் . இயேசு இரக்கம் காட்டு, விட்டுக் கொடு என்கிறார்.

மோசஸ் கல்லெறி என்கிறார். ஜீசஸ் கல்லெறிய வேண்டாம் என்கிறார்.

லார்ட் என்பவர் அனுமதி இல்லாமலா பழம் பறித்த ஆதாமை தோட்டத்தில் இருந்து விரட்டியதாக சொல்லி உள்ளனர். இயேசுவோ, சண்டை போட்டு சொத்தில் பகுதியை வாங்கி சென்ற மகன் திரும்பி வருவானா , அவன் வந்தால் போதும் என்று அவனுக்கு எந்த வித நிபந்தனையும் விதிக்காமல் காத்து இருந்து அவனை வாரி அனைத்து வீட்டில் சேர்த்து விருந்து வைக்கிறார்.

பலத்தை பறித்த தற்காக தோட்டத்தில் இருந்து விரட்டிய கடவுள் கோட்பாடு, தந்தையின் சொல்லுக்கு கீழ்படியாமல் சொத்தை வாங்கி சூதாடி விற்ற போதும் அவனை நிபனதனையின்ரி வரவேற்கும் கடவுள் கோட்பாடு இவற்றுக்கு இடையே உள்ள முரண்பாட்டை எத்தனை முறை எழுத வேண்டும். முரண்பாடு இருக்கிறது , அதற்க்கு விளக்கம் உங்களிடம் இல்லை, அதனால் முரண்பாடு இல்லை என்று எழுதுகிறீர்கள்!

//ஜெஹோவா உடன் படிக்கை செய்யாதே, இரக்கம் காட்டதே என்று சொன்னதாக மோசஸ் சொல்கிறார் . இயேசு இரக்கம் காட்டு, விட்டுக் கொடு என்கிறார்.//

பாவத்தின் பரிகாரியான இயேசு வந்த பிறகு, பாவதிர்க்காய் யாரும் மரிக்க தேவையில்லை என்ற நிலை வந்த பிறகே இயேசு அப்படி சொல்கிறார். ஜெஹோவவும், மிகுந்த இறக்கம் காட்டிய பின்பே, இனியும் இந்த மக்கள் திருந்தமாட்டார்கள் என்ற நிலையில் தான் சில கூட்டங்களை அழிக்க கட்டளை கொடுத்தார் (சர்வமும் அறிந்த கர்த்தருக்கு, ஒருவன் இனிமேல் திருந்துவானா அல்லது திருந்த மாட்டானா என்று தெரியாதா என்ன? ).

//மோசஸ் கல்லெறி என்கிறார். ஜீசஸ் கல்லெறிய வேண்டாம் என்கிறார். //

பரிசேயர் யேசுவிடம் செய்த அதே தந்திரமா என்னிடமும்? இயேசு, கல்லெறிய வேண்டான் என்று சொன்னதற்கு ஆதாரன வசனமுண்டா? அவர் கல்லெறிய வேண்டாம் என்று சொல்லவில்லை. யார் கல்லெறியலாம் என்றே சொல்லியுள்ளார்.

//லார்ட் என்பவர் அனுமதி இல்லாமலா பழம் பறித்த ஆதாமை தோட்டத்தில் இருந்து விரட்டியதாக சொல்லி உள்ளனர். இயேசுவோ, சண்டை போட்டு சொத்தில் பகுதியை வாங்கி சென்ற மகன் திரும்பி வருவானா , அவன் வந்தால் போதும் என்று அவனுக்கு எந்த வித நிபந்தனையும் விதிக்காமல் காத்து இருந்து அவனை வாரி அனைத்து வீட்டில் சேர்த்து விருந்து வைக்கிறார்.

பலத்தை பறித்த தற்காக தோட்டத்தில் இருந்து விரட்டிய கடவுள் கோட்பாடு, தந்தையின் சொல்லுக்கு கீழ்படியாமல் சொத்தை வாங்கி சூதாடி விற்ற போதும் அவனை நிபனதனையின்ரி வரவேற்கும் கடவுள் கோட்பாடு இவற்றுக்கு இடையே உள்ள முரண்பாட்டை எத்தனை முறை எழுத வேண்டும். முரண்பாடு இருக்கிறது , அதற்க்கு விளக்கம் உங்களிடம் இல்லை, அதனால் முரண்பாடு இல்லை என்று//

இதற்க்கு விளக்கம் வந்து கொண்டே இருக்கிறது. இதற்க்கு இவனிடம் விளக்கம் இருக்க கூடாதே என்று நீங்கள் தவிப்பது நன்றாக தெரிகிறது திருச்சியாரே.

சற்றே நீண்ட விளக்கமாக இருப்பதால் நேரம் எடுத்துகொள்ள வேண்டியுள்ளது. மேலும் நீங்கள் தேர்ந்த விதண்டாவாதியாக உள்ளதால், வார்த்தைகளை ஆராய்ந்து போட நேரம் தேவை.

ஜெஹோவா, இரக்கம் காட்டாதே, கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்று சொன்னதாக மோசஸ் சொல்லுகிறார்.

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்று சொல்லப் படத்தைக் கேட்டு இருப்பீர்கள், ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்கிறார் இயேசு. இந்த இரண்டு கோட்பாடுகளும் முரண்பாடான கோட்பாடுகள் என்பது படிக்கிற எல்லோருக்கும் தெரியும்.

இன்னொரு இனத்தவர் வாழ்ந்த இடங்களைப் பிடுங்கவும், அவர்கள் திரும்ப வந்து இடத்தைப் பெற முயற்சி கூடாதே என்பதற்காக சுவாசமுள்ள எல்லாவற்றையும் வெட்டி கொன்று இன அழிப்பு சங்கரிப்பு செய்து இருக்கிறார்கள். இதை புனிதமாகக் காட்ட கடவுள் பேரால் கோட்பாடுகள். கன்னிப் பெண்களை மட்டும் கொல்லாமல் ரவுண்ட் அப் செய்து தூக்கி சென்று கற்பழிக்க வைத்துக் கொள்ள சொன்னதாகவும் உள்ளதா இல்லையா. இந்தக் கொடுமைகளுக்கு வெள்ளை அடிக்கும் விதமாக நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவோம், மத வெறியில் இருந்தும், இன வெறியில் இருந்தும் இந்தியாவை காப்போம், உலக மக்கள் அனைவரும் வெறியை புரிந்து கொண்டு விலக்கி அமைதியான வழி பாட்டில் ஈடு பட நல்ல கருத்துக்களை முன் வைப்போம்.

/மோசஸ் கல்லெறி என்கிறார். ஜீசஸ் கல்லெறிய வேண்டாம் என்கிறார். //

பரிசேயர் யேசுவிடம் செய்த அதே தந்திரமா என்னிடமும்? இயேசு, கல்லெறிய வேண்டான் என்று சொன்னதற்கு ஆதாரன வசனமுண்டா? அவர் கல்லெறிய வேண்டாம் என்று சொல்லவில்லை. யார் கல்லெறியலாம் என்றே சொல்லியுள்ளார்//

கல்லெறிய வேண்டாம் என்று இயேசு கிறிஸ்து சொல்லவில்லை, அதாவது உங்கள் விளக்கப் படி தகுதியான ஆள் இல்லாத காரணத்தால் கல்லெறிய வேண்டாம் என்று இயேசு சொல்லி விட்டார். தகுதியான ஆள் இருந்திருந்தால் கல்லெறிய இயேசு அனுமதித்து இருப்பார் என்பதுதான் உங்கள் கருத்து.

இயேசு காலத்தில் கல்லெறிய தகுதியான ஆட்கள் இல்லை, ஆனால் மோசஸ் காலத்தில் கல்லெறிய தகுதியான ஆட்கள் இருந்தனர். ஆனாலும் மோசசுக்கு கட்டளை இடும் போது தகுதியான ஆட்கள் தான் கல்லெறிய வேண்டும் என்று கட்டளை இட வில்லை. பின்னாளில் இந்த தகுதி clause பற்றிய சேர்க்கப் பட்டு விட்டது.

இதை எல்லாம் பைபிள் மதத்தைப் பின்பற்றுபவர்களின் பார்வைக்கு வக்கிறேன். அவர்கள் முதலில் இது சரியா, தகுதியான் ஆள் இருந்தால் இயேசு கல்லெறிய சம்மதித்து இருப்பாரா , மோசஸ் காலத்தில் தகுதியான் ஆட்கள் இருந்தனரா என்று எல்லாம் சிந்தித்து அவர்கள் முதலி உங்களின் விளக்கம் பொருத்தமாக உள்ளது என்று நினைக்கிறார்களா என்று பார்ப்போம்.

ஆதாம் ஏவாள் விரட்டப் பட்ட கோட்பாடு , இயேசுவின் காத்திருக்கும் தந்தை கோட்பாட்டுக்கு எதிரானது என்பதையும், உடன் படிக்கை செய்யாமல் இன அழிப்பு க்கு கட்டளை இட்ட கடவுள் கோட்பாடும் இரக்கம் காட்டும் கோட்பாட்டுக்கு எதிரானது என்பதையும் விளக்கி தனிக் கட்டுரைகள் வர உள்ளன.

//இதற்க்கு இவனிடம் விளக்கம் இருக்க கூடாதே என்று நீங்கள் தவிப்பது நன்றாக தெரிகிறது திருச்சியாரே//

எனக்கு ஒரு தவிப்பும் இல்லை, மத வெறி, இன வெறி கோட்பாடுகளில் இந்திய மக்கள் அவ்வளவு எளிதாக சிக்கி விட மாட்டார்கள், மிரட்டல் கோட்பாடுகளுக்கு பயந்து விட மாட்டார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

தேவையான நேரம் எடுத்துக் கொள்ளுங்கள், தேவைப் பட்டால் இன்று முழுதும் எடுத்துக் கொள்ளுங்கள், இன்று போய் நாளை வாருங்கள். ஆனால் எப்போது வந்தாலும் நல்ல கருத்துக்களோடு, நல்லிணக்க கருத்துக்களோடு சமரச கர்த்துக்க்ளோடு வந்தால் தான் இந்திய மக்களிடம் வரவேற்ப்பு கிடைக்கும்.

//பாவத்தின் பரிகாரியான இயேசு வந்த பிறகு, பாவதிர்க்காய் யாரும் மரிக்க தேவையில்லை என்ற நிலை வந்த பிறகே இயேசு அப்படி சொல்கிறார்//

உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால கண்ணை பிடுங்கி விடு, கண்ணுடன் நரகத்துக்கு போவதை விட கண்ணில்லாமல் இருக்கலாம் என்று இயேசு சொன்னாரா இல்லையா? அதாவது பாவத்துக்கு நிச்சயம் தண்டனை உண்டு என்பதுதான் இயேசுவின் கருத்து. அவரிடம் மன்னிப்பு பெற்றுக் கொண்டு தப்பித்து விடலாம், என்ற கோட்பாட்டை அவர் சொல்லவில்லை. அப்படி அவரிடம் மன்னிப்பு பெற்று தப்பிக்கலாம் என்றால், கண்ணை நொண்டிக் கொள்ளவோ, கையைத் தரித்துக் கொள்ளவோ தேவை இல்லையே.

இப்படி இயேசு இரத்தத்தைக் குடித்து பாவம் எல்லாம் போக்கிக் கொள்ளாலாம் என்கிற- பாவம் செய்யாம இருக்க முடியாது, நீ ஏற்க்கனவே பாவி, மொத்தமா மன்னிப்பு வாங்கிக்கலாம்- என்கிற பாவ பிரச்சாரத்தினால் , இன்றைக்கு பைபிள் மார்க்கத்தைப் பின்பற்றிய நாடுகளில் மனமுறிவும், முறையற்ற உறவும் , தனி வாழ்வுமாக பூமியிலே தனிமை நரகத்தில் வாழ்கின்றனர். இங்கே பூமியையும், சமுத்திரத்தையும் சுற்றிக் கொண்டு வந்து இந்தியர்களையும் பாவிகள் ஆக்க தவிக்கிறார்கள், துடிக்கிறார்கள்.

இது வரை யாருமே காணாத கடவுளை இருக்கிறார் என்று நீங்கள் சொல்லும் போது – அப்படி ஒருவர் இருக்கிறார் என்று ஒரு assumption ஐ வைத்துக் கொண்டால் அவர்தான் மனிதரைப் படைத்தார் என்றால், எதற்கு ஒரு மனிதனைக் குருடனாகவோ, ஏழையாகவோ படைத்து கஷ்டப் பட வைக்க வேண்டும்? எதற்கு ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் எண்ணற்ற துன்பஙகள் நிகழ வேண்டும். இவ்வளவையும் நிகழ விட்டு அந்தக் கடவுள் மேலே இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்றால்- அப்போது கூட அவரை நாங்கள் இகழவில்லை- ஆனால் சீதை போனறவர்கள் இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதருக்கும் துன்பம் தராதவர், தான் குற்றமே செய்யாத போதும் , தனக்கு இழைக்கப் பட்ட அநீதியை , அதனால் ஏற்பட்ட துன்பத்தை மவுனமாக ஏற்றவர். அவரை கடவுளுக்குமேலானவராகவே கருதுவது அவரவர்களின் செயல் பாட்டை ஆராய்ந்து அவரவர் செயலை, சிந்தனைகளை, அவரவர்கள் செய்த நன்மை தீமையை வைத்தே !

நான் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கடவுளாகக் கருதி அமைதியான முறையிலே வணங்கிக் கொள்ளலாம் என்று சொல்லுகிறோம், எந்த தெய்வத்தையும் நாம் இகழவில்லை, அந்த தெய்வங்களின் பேரால் சொல்லப் பட்ட இன வெறிக் கருத்துக்கள், இனப் படுகொலைக் கருத்துக்கள் , மத வெறிக் கருத்துக்கள் மனித சமுதயாத்தை சீரழித்து வருவதை எடுத்துக் காட்டுகிறோம், அதை அனைவரும் அறிந்தே இருக்கின்றனர். நம்முடைய விளக்கங்கள் நல்ல கோட்பாடுகளுக்கு ஆதரவாகவும், மதவெறி, இன வெறிக் கோட்பாடுகளை மட்டுப் படுத்தும் படியாகவுமே உள்ளன. நீங்கள் பிற மதத்தினர் அவர்கள் விரும்பும் தெய்வத்தை வழி படுவது கூடாது, நரகத்துக்கு போவார்கள், உங்கள் மதத்தை தவற பிற மதங்கள் பொய்யானவை என்று மத சகிப்புத் தன்மையை அளிக்கும் மத வெறிக் கருத்துக்களை சொல்லுகிறீர்கள். மத வெறியை தூண்டுவதை சமூகமும் விரும்பவில்லை, சட்டமும் அங்கீகரிக்கவில்லை, மக்களும் விரும்பவில்லை.

மத வெறியைத் தூண்டுவதை, மத சகிப்புத் தன்மையை அழிப்பதை, வெவேறு மதங்களை பின்பற்றுவோருக்கு இடையிலான மோதலை உருவாக்குவதை உரிமையாக சொல்ல முடியாது.

நீங்கள் சொல்லுவது எதை போல் இருக்கிறது என்றால் (கொச்சையாக சொன்னால்) அடுத்தவர்க்கு துன்பம் கொடுக்காமல் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம், உன் கணவன் அல்லது உன் மனைவியிடம் மாத்திரம் கொள், என்று சொல்வது சமூகத்தில் பிரச்சனையை வளர்க்கும் என்கிறீர்கள். வேசித்தனம் செய்பவர்கள் அடுத்தவர்க்கு தொல்லை தராததால், அவர்கள் செய்வது தவறில்லை என்பீர்கள் போலும். நாங்கள் இத்தனைக்கும் வேசித்தனம் செய்பர்களை கல்லெறியவில்லை, அவர்களை அன்புடனும், கருணையுடனும் நல்வழிப்படுங்கள் என்கிறோம் (ஆனால் அது உங்களுக்கு பொறுக்கவில்லை).
உங்களை பொறுத்தவரை, ஒரு தப்பு அடுத்தவருக்கு தொந்தரவு தாராதவரை பிரச்னை இல்லை. எங்களை பொறுத்தவரை தப்பு என்றைக்குமே தப்புதான் (ஆனால் வருந்தி திருந்துபவர்கள் ஏசுவினால் மன்னிப்படைவார்கள்
).

அன்புக்குரிய நண்பரே,

வேசித் தனம் வேண்டாம் , கணவன் மனைவி நேர்மையாக வாழ்வதே சிறப்பு என்பதை எல்லாம் பற்றி இதே தளத்தில் பல முறை விவாதித்து இருக்கிறோம். ஓழுக்கம் விழுப்பம் தரலான் என்ற வள்ளுவரின் வாய் மொழியை அனைவரும் அறிவோம். இந்திய சமுதாயம் நேர்மையான குடும்ப உறவு சமுதாயமாக உள்ளது. அதற்காக இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களும் அப்படி இருக்கிறார்களா என்று கேட்டால், இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள எப்படி வாழ்கிறார்கள் என்று பாருங்கள்.

இந்தியாவில் கணவனோ, மனைவியோ நேர்மையாக வாழ்வது , ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்ப் படும் என்பதாலும், மனைவியின் மீதோ, கணவனின் மீதோ உள்ள அன்பால் பிணைப்புண்டு அவர்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம் என்றும் தான். கல்லெறிக்கு பயந்து அல்ல.

நான் எழுதியது என்னவென்றால், ஜெஹோவா சொன்னதாக மோசஸ் சொன்னது கல்லெறிய சொல்லி, அது ஒரு கோட்பாடு. கல்லெறிய வேண்டாம் என்றார் இயேசு அது ஒரு கோட்பாடு.

மேலை நாடுகளில் வரை முறையற்ற வரம்ப மீறலும், கணக்கற்ற மன முறிவுகளும் குடும்பமில்லா தனிமை வாழ்வுமாக உள்ளது. அந்த நாடுகளில் எல்லாம் பாவப் பிரச்சாரங்கள் அவர்களை பாவியாகி விட்டன.

திருச்சிக்காரன்,

நானும் நண்பர் சிவனடியானும், நேர் எதிர் கருத்துக்களை கொண்டிருந்தாலும், எவ்வளவு நல்ல முறையில், சபை நாகரீகத்துடனும், நட்புடனும் வாதங்களை எடுத்து வைக்கிறோம். ஆனால் நீங்கள் ஏன் இவ்வளவு மட்டமாக, கீழ்த்தரமாக சண்டை போடுகிறீர்கள்?

சிந்தனை திறனும் இல்லை, நாகரிகமும் இல்லை உங்களிடம். இந்த உண்மையை சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது.

அசோக்

//சிந்தனை திறனும் இல்லை, நாகரிகமும் இல்லை உங்களிடம். இந்த உண்மையை சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது//

//நீங்கள் ஏன் இவ்வளவு மட்டமாக, கீழ்த்தரமாக சண்டை போடுகிறீர்கள்?//

நண்பரே, மத சகிப்புத் தன்மை அழிப்பு வேலையை மத வெறி பரப்பு பிரச்சாரத்தை நான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன் என்பதுதான் உண்மை.

அன்று மதல் இன்று வரை கடவுள் பேரால், நூலின் பேரால் இன அழிப்பு செய்து வருவது , மக்கள சாவது நாகரீகமா? மத வெறி யில் மனிதர்கள் அழிவது நாகரீகமா? சண்டை வேண்டாம் இணக்கமாக அமைதியாக இருப்போம் என்று சொல்வது கீழ்த்தரமான, மட்டமான அநாகரீகமான செயலா?

மத சகிப்புத் தன்மையை அழிக்கும் வகையில் மத வெறி யை பரப்பும் வகையில் செயல் படுவது மனித சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்பதையே சொல்லுகிறோம்.

ஏன் இப்படி போகிறது?
நமக்கு தெரிந்ததை நாம் பகிர்ந்து கொள்கிறோம், நமக்குள் எழும் சந்தேகங்களை நம்முள் எழுப்பி மற்றவரிடம் உள்ள விளக்கத்தை பெறுகிறோம்.
ஆனால் இத்துடன் இந்த கட்டுரைக்கான மறுமொழிகளை நிறுத்திக்கொண்டு மீண்டும் அடுத்த கட்டுரையில் தொடரலாம் என நினைக்கிறேன்.
யார் மீதும் யாருக்கும் வெறுப்போ கோபமோ கிடையாது என்று நினைக்கிறேன்.நம்புகிறேன் விரும்புகிறேன்.
ஏதோ தவறான புரிதலால் விவாதம் இப்படி போய் கொண்டிருக்கிறது. நேரம் சரியில்லை போலும்.
எனக்கு யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை
சகோ திருச்சி எல்லோருடைய கருத்தையும் வெளியிடுவதகவே தெரிகிறது.
அவர் கேட்கும் கேள்விகளுக்கும் நீங்கள் பதில் தர வேண்டியதுதானே நண்பர் கணேசன் அவர்களே.
ஏன் உங்களுக்கு கோபம்? நீங்கள் தரும் பதிலில் எனக்கு மற்று கருத்து இருந்தாலும் உங்கள் மீது எனக்கு கோபம் கிடையாது,
சகோ திருச்சிக்கும் எந்த துவேசமும் இல்லாததால்தான் உங்கள் கருத்துகளையும் அவர் வெளியிடுகிறார்.இல்லாவிட்டால் அவர் உங்கள் கருத்தை வெளியிட மாட்டாரே?இதையும் நீங்கள் கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
அவரும் அவருடைய கருத்துகளை வெளியிட உரிமை கொண்டவர்தானே?
என்னுடனான உங்கள் விவாதத்தில் நிச்சயம் நல்ல விதமாகத்தான் உணர்ந்தேன்.(கருத்துகளில் நாம் வேறுபடுவது தனி விஷயம்.)
அனால் நீங்கள் அதனை போலவே அவருடைய கேள்விக்கும் பதில் கருத்து அளிக்காமல் ஏன் கோபம் கொள்கிறீர்கள்?
எனக்கு அவர் கேட்கும் கேள்வில்லாம் தெரியாது பைபிள் பற்றி ஏதும் எனக்கு தெரியாது.
அவர் கேட்கும் கேள்விக்கு நீங்கள் விளக்கமளித்தால் அது பற்றி தெரியாத என் போன்றோருக்கு பைபிள் பற்றிய ஒரு விளக்கமாகவும் ஆகும்.

நேரில் பார்த்து கொள்ளாவிட்டாலும் நாம் ஒருவருக்கொருவர் எதிரெதிர் கருத்து கொண்டிருந்தாலும் நாம் சகோதரர்களே. வாய்ப்பிருந்தால் அவன் அருள் இருந்தால் நான் உங்கள் இருவரையுமே சந்திக்க விரும்புகிறேன்.

அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்
அன்புடன் உங்கள்
சிவனடியான்

சிவனடியான் அவர்களே,

நீங்கள் பின்னூட்டம் இடுவதை தொடரலாமே. அசோக்கோ, வேறு யாரோ, உங்களைப் பாராட்டினால் அது நல்லதுதான். என்னை விமரிசித்தாலும் அதைப் பற்றி நீங்கள் ஒர்ரி பண்ண வேண்டாம்.

யார் என்ன திட்டினாலும், மத சகிப்புத் தன்மையை அழித்து மத வெறியைப் பரப்பும் கோட்பாடுகளை எடுத்துக் காட்டி , அவற்றினால் இது வரை விளைந்த ஆபத்து, அது தொடரக் கூடிய அபாயம் ஆகியவற்றை மக்களுக்கு விளக்கி, சமரச நல்லிணக்க நாகரிக சமுதாயம் அமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம்.

இந்தக் கட்டுரையின் முக்கியக் கருத்து என்னவென்றால் விவிலியத்தில் கடவுளைப் பற்றியும், மனிதர் வாழ வேண்டிய முறை பற்றியும் ஒன்றுக் கொன்று எதிரான கோட்பாடுகள் , வெவேறு கால கட்டத்தில் வாழ்ந்த வெவ்வேறு பேரால் சொல்லப் பட்டு உள்ளன என்பதும்,

இதிலே இயேசு எந்தக் கருத்தை முக்கியப் படுத்தினாரோ அந்தக் கருத்தைப் பின்னுக்கு தள்ளி விட்டு, அவர் எந்த பழக்க வழக்கங்களைக் கோட்பாடுகளை மறுத்தாரோ அவற்றை இயேசுவின் பெயரால் பரப்பி வருகின்றனர் என்பதும். அதை ஒட்டி விவாதிப்பது பொருத்தமானது. வீடு பேரு பற்றி எல்லாம் தனிக் கட்டுரை, தேவைப் பட்டால் பல கட்டுரைகள் வெளி இட்டு விவாதித்துக் கொள்ளலாம்.

அன்பு சகோ திருச்சி,
இங்கு கூறப்பட்டுள்ள பைபிளின் விளக்கங்கள் எனக்கு தெரியாது. அவற்றை நீங்கள் எடுத்து எழுதி இருப்பதை படித்து தெரிந்து கொள்கிறேன்.

வேசித்தனம் போன்ற கடுமையான சொற்பிரயோகங்களை பார்த்ததுமே எனக்கு போதும் என்று தோன்றி விட்டது.
எப்படியோ பின்னுட்டங்கள் தலைப்பு மாறி வீடுபேறு பற்றி போய்விட்டது, ஒன்றுடன் ஒன்று பின்னி பின்னி எங்கோ சென்றுவிட்டது.

இவ்வளவு காரமான விவாதங்கள் ஏன் ?

ஓரிறை கொள்கை கொண்ட நண்பர் அசோகன் பிற வழிபாடுகளை தவறு என்றும் தம் வழிபாடு மட்டுமே சிறப்பு என்றும் கூறுகிறார். சொந்த கருத்துகளை கூறலாம் ஆனால் உவமைகளில் மோசமான வார்த்தைகள் வெடித்து வருகின்றன.
என்னால் இன்னும் விளக்க முடியும் ஆனால் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் அந்த கோட்டை தாண்டி நீங்களும் வரப்படாது நானும் வரமாட்டேன்குற ரேஞ்சிலதான் இன்னமே சொல்லனும்போல உள்ளது.

சிறந்த வைணவ பெரியவர் வைணவ சுடராழி திரு ஜோசெப் அவர்கள் எழுதிய சில கிறித்தவபற்றிய செய்திகள் என்னிடம் உள்ளன,

கிறித்தவம் இதியாவுக்குள் பரவிய செய்திகளும் கட்டுரை வடிவில் படித்திருக்கிறேன். இப்போது பரவும் விதமும் பரப்புபவர்கள் செய்யும் வேலையால் மதம் மாறியவர்களின் இந்து மத எதிர்ப்புகளையும் நேரடியாக பார்த்து வருகிறேன்.
பிற மதத்தவரை எதிரியாக பார்க்கும் அளவு இந்து கடவுளர்களையும் வழிப்பாட்டையும் வெறுப்புடன் பார்க்குமளவு அவர்கள் மனதை மாற்றுகிறார்கள்.
தெரியாமல் கேட்கிறேன், இந்துக்கள் இங்கு இருக்கவே கூடாது என்பது போன்ற பாவனையே தெரிகிறது. இந்துக்கள் எல்லோரையும் அழித்து கிறித்தவத்தை நிலை நாட்ட முற்படுவது போன்றே தெரிகிறது. கிட்டத்தட்ட ஓர் இனத்தை அழித்து இங்கு கிறித்தவத்தை நிலை நாட்ட நினைப்பது போலே படுகிறது.இங்கேயும் கர்த்தரை பணியாத மனிதர்கள் நிறைய இருப்பதால் எல்லோரையும் சங்காரம் பண்ண ஆரம்பித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இவர்களின் கை ஓங்கினால் இது நிச்சயம் நடக்கும். எல்லோர்க்கும் பொதுவானதே இவ்வுலகம்.அயல் நாட்டில் தோன்றிய சட்டங்களே சரியானவை அதனை பின்பற்றமளிருப்பது பெருங்குற்றம், நங்கள் அயல் நாட்டுக்கு அடிமையாயிருப்பதோடன்றி அனைவரையும் அயல் நாட்டுக்கு பணிய வைப்பதே எங்கள் இலக்கு என்ற தோணி விளங்குகிறது. இன்னும் kartthukkal உள்ளன., ஆனால் இதையே யோசித்து யோசித்து எழுதுகிறேன்.
என்ன சொன்னாலும் அந்நிய மோகம் கொண்டவர்கள் தாய் நாட்டையும் கலாச்சாரத்தையும் அதன் மதிப்பையும் உணர போவதில்லை.
உணர்வுடையோர் யாரும் பிறந்த மன்னிர்கேதிரான எந்த விசயத்தையும் ஏற்க போவதில்லை.
பல யுகங்களாக வாழும் இவ்வுலகினை வெறும் பத்தாயிரம் ஆண்டுக்கு முன்னே படைக்க பட்டது என்றும் அன்று படைத்தவனே கடவுள் என்றும் அவனே தந்தை என்றும் அவனே கணவன் என்றும் கூறுவது பொருத்தமின்றி இருப்பது அறிந்திருந்தும் ஏனோ அதனையே கூரிகொண்டுள்ளனர்.
அறிவியலின் பரிணாம கொள்கைக்கும் முரண்பட்ட இறையியலை நம்புபவர்களின் அறியாமையை என்ன சொல்வது.
தட்டையானது உலகம் என்று நம்பிகொண்டிருந்தவர்களை உருண்டை என்று நிருபித்த கலிலியோவுக்கு தண்டனை அளித்த பாரம்பரியத்தில் வந்தவர்கள் தானே.

இனியும் கண்யகுறைவான,கோபமான வார்த்தைகள் வந்தால் அது நல்லதாக தெரியவில்லை. வேண்டாமே,சற்று கருத்தில் கொள்ளவும்

சிவனடியான், உங்களுக்காவது நான் “வேசித்தனம்” என்று கூறியது ஒரு உவமைக்கு என்று புரிந்ததா? ஆனால், பல விஷயங்கள் திருச்சிக்காரனின் புத்திக்கு ஏன் எட்டவில்லை என்று தெரியமாட்டேன்கிறது. அவர் என்னமோ, இந்தியர்களை கற்பில்லாதவர்கள் என்று நான் கூறிவிட்டதுபோல குதிக்கிறார்.
அதேபோல, வேசித்தனத்தை, தேவதாசி முறை, இன்னும் பலவிதங்களில் கோயிலில் வைத்து அரங்கேற்றியது நம் தேசம். ஆனால், வாயால் அதை பற்றி பேசுவது குற்றம் என்று ஒதுங்கிவிடுகிறோம். பண்பாடு என்ற போர்வையில், நாம் பலவிஷயங்களை பற்றி பேசாமளிருப்பதினால்தான், நிறைய சீர்திருத்தங்கள் நம் நாட்டில் நடைபெறுவதில்லை.
தி.கவினரால் எழுதப்பட்ட புத்தகத்தை வைத்து நான் இந்துத்துவத்தை கற்றுக்கொல்வதுபோல்தான் உள்ளது, நீங்கள் திரு.ஜோசெபின் வார்த்தைகள் மூலம் கிறிஸ்துவத்தை கற்றுக்கொள்ள நினைப்பது. இந்துத்துவத்தை கற்க, நால்வேதமும், கீதையும், இதிகாசங்களையும் நான் கற்க்கவேண்டும் (ஆனால் எத்தனை இந்துக்கள் இதை செய்கிறார்கள்?). இங்கே இந்துக்கள் என்று கூறிகொல்பவர்களின் வாழ்க்கையை வைத்து நான் கற்க முடியாது, ஏன் எனில், இந்தியாவில் எத்தனை இந்துக்களுக்கு இந்துத்துவம் தெரியும்? அவர்கள் தங்கள் மனதிற்கு சரி எனப்பட்டதை, தன் வசதிக்கேற்றவட்ட்ரை, எங்கேயோ கேள்விப்பட்டதை பின்பற்றி வாழ்கிறார்கள் (ஆனால் அப்படி வாழ்வதுதான் இந்துத்துவம் என்று திருச்சிக்காரன் சாமியாடுவார்).
அதே போல், நீங்கள் கிறிஸ்துவம் பற்றி பேச வேண்டுமென்றால், அதை அறியவேண்டுமென்றால், பைபிளை (திறந்த மனதுடன்) படியுங்கள். புரியும்.

திருச்சிக்காரன்,
ஆரோக்கியமாய் போய்கொண்டிருந்த விவாதத்தை கலைத்துவிட்டீர் சந்தோசமா? யாரும், சத்தியத்தை அறிந்துவிட கூடாது, திட்டம் அது தானே? நடத்தும்…

அசோக்,

இந்துதுத்துவத்தைக் கற்க நீங்கள் அதிக கஷ்டப் பட வேண்டியதில்லை, முதலில் நீங்கள் மத சகிப்புத் தன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து , பிற மதங்களோடு இணைந்து வாழ முனைந்தால் அதுவே முதல் படியாகும்.

நீங்கள் “சத்தியம்” என்று சொல்வததிதானே தானே அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மேற்கோள் காட்டி எழுதுகிறோம்.

ஆரோக்கியமான விவாதமா, நீங்கள் சொல்ல வரும் மார்க்கத்தை தவிர வேறு எல்லா மார்க்கமும் பொய், நீங்கள் வழிபடும் கடவுளைத் தவிர பிற மதத்தினர் வழிபடும் கடவுளாக பொய்- இந்தக் கோட்பாட்டை விட்டு, அமைதியான ஆன்மீகப் பாதிக்கு வந்து இருக்கிரீர்காலா, அப்புறம் என்ன ஆக்க பூர்வமான விவாதம். யூதர்களுக்கு எங்கே நிலம் பிடுங்க வேண்டுமோ, அந்த நிலத்தில் இருக்கும் மக்கள், தேவை இல்லாத வெட்டி எறியப் பட வேண்டிய உருபை போனரவரகுள் என்று சொல்லி அகடவுள் இன அழிப்பு செய்ய சொல்லியது சரியே என்று தானே சொல்கிறீர்கள். இனங்களை படுகொலை செய்து அழிப்பது, மத வெறியை பரப்புவது ஆக்க பூர்வமா? இல் நான் என்ன கெடுத்து விட்டேன்? நீங்கள் எழுதுவதை மட்டுறுத்தாமல் அப்படியே போடுகிறோம்.

தேவதாசி என்பது ஆன்மீக கலைத் தொண்டில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டோர்க்கு வழங்கப் பட்ட பெயர். வசதி படைத்தவர்கள், அதிகாரம் உள்ளவர்கள் அந்த தொண்டாற்றியவர்களை தங்களுக்கு அடிமையாக்கி விட்டனர். அதற்க்கு இந்து மதமோ, இந்துக்களோ காரணம் அல்ல. இப்போது தேவதாசி முறை இல்லை, இனி இருக்கப் போவதும் இல்லை, கோவில்களில் கூட்டத்துக்கும் குறைவு இல்லை. இப்போதும் கோவில்களில் சங்கீத உறசவம், நடனம் ஆகியவை நடை பெறுகின்றன. இப்படி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்துபவர்களை ஆண்கள், பணக்காரர் வீட்டுப் பெண்கள், , ஏழை வீட்டுப் பெண்கள் உட்பட எல்லோரும் ஈடுபடகினறனர். தேவதாசி முறை யை உருவாக்க சொல்லி இந்து மதம் சொல்லவில்லை. அந்த முறையால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு என் இதயத்தில் இருந்து இறக்கப் படுகிறேன். நல்ல வேளைக்கு இப்போது அந்தப் பழக்கமும் இல்லை.

இந்து மதத்தை மட்டுமல்ல, யூத மதத்தை தவிர எந்த ஒரு மதத்தையும் இந்த உலகில் இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதுதான் இன்றைக்கு பலரின் ஆசையாகவும், தவிப்பாகவும் இன்னும் சொன்னப் போனால் வெறியாகவும் உள்ளது. இந்து மதம் மட்டும் அல்லாமல் பவுத்த, இஸ்லாம் மதங்களையும் … எல்லா மதங்களையும் மறுத்து தங்கள் மதம் மட்டுமே உண்மை என்று அவர்களை ஒத்துக் கொள்ளச் செய்ய முயல்கிறார்கள். பிற மதத்தினர் இவர்களை எதிர் கொள்ளும் முறையே வேறு. இப்போது கடந்த ஒரு வாரமாக எகிப்தில் பெரிய மதக் கலவரம் மூண்டுள்ளது. இவர்கள் இஸ்லாமியரிடம் போய் என் கடவுள் மட்டுமே உண்மை என்று சொல்ல முடியுமா? ஆனாலும் சொல்வார்கள், அவர்கள் செமத்தியாக குடுப்பார்கள். இவர்கள் வாங்கிக் கட்டிக் கொண்டு திரும்பவும் சண்டை போடுவார்கள். இரண்டு உலகப் போர்களிலும் இறந்தவர்களை விட அதிகமான பேர்கள் குருசெடு போர்களில் இறந்துள்ளனர். இராக் போர் குரு சேடு போர் என புஷ் போப்பிடம் சொல்லி உள்ளார். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மத வெறி சண்டைகளை ஆரம்பிப் பார்கள்.

ஆனால் இது இந்தியாவில் நடக்காது என்பது நமக்கு தெரியும். இந்துக்கள் அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை என இருக்க வேண்டும் என்பதே நமது கோட்பாடு. இந்தியாவில் உருவான மதங்கள் அது இந்து மதமோ, புத்தாமோ, சமணமோ, மதக் காரணக்களுக்காக சண்டையை, வன்முறையை உபயோகிக்க சொல்லவேயில்லை. அந்தப் பின்னணியில் வளர்ந்த இந்திய சமுதாயமும் அவ்வாறே உள்ளது.

ஆனால் நம்மிடம் பகுத்தறிவு சிந்தனையும், சமரசமும், நல்லிணக்கமும் காப்பாக உள்ளது. வேசித் தனம் என்று எல்லாம் எழுதினால் யாரும் பயந்து , அமைதி வழியை கைவிட்டு, மதவெறி வலையில் சிக்கி விட மாட்டோம். எழுதுவோர் எழுதட்டும். அவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதை எல்லோரும் படித்து தெரிந்து கொள்ளட்டும்.

//இனியும் கண்யகுறைவான,கோபமான வார்த்தைகள் வந்தால் அது நல்லதாக தெரியவில்லை. வேண்டாமே,சற்று கருத்தில் கொள்ளவும்//

நான் எதுவும் கண்ணியக் குறைவாக எழுதவில்லை என நினைக்கிறேன்.

//////இந்துத்துவத்தை கற்க, நால்வேதமும், கீதையும், இதிகாசங்களையும் நான் கற்க்கவேண்டும் (ஆனால் எத்தனை இந்துக்கள் இதை செய்கிறார்கள்?)////
நண்பரே,
சைவ வேதமாக தொகுக்கப்பட்ட சைவ திருமுறைகளும், வைணவ வேதமாக மங்களா சாசனம் செய்யப்பட்ட நாலாயிர திவ்ய பிரபந்தமும்,
வள்ளலார் வழங்கிய ஆறு திருமுறைகளும் அருணகிரி நாதர் அருளிய திருப்புகழும் இன்னும் பலவும் தமிழ் வேதமாக இருக்க எதற்காக நன்கு செங்கிருத வேதங்களும் பகவத் கீதையும்.
அந்த மொழியை கற்று அதிலுள்ளவற்றை பின்பற்றுவதே இந்துத்துவம் என்று யார் சொன்னார்கள்? அதனை படிக்காதவர்கள் இந்துக்கள் அல்ல என்று சொல்லமுடியாது.
எனக்கு எந்த செங்கிருத அறிவும் கிடையாது கீதையை தமிழ் வழியில் கேட்டிருக்கிறேன். ஆனால் அதில் பெரிய அறிவெல்லாம் கிடையாது. நால் வேதங்களிலும் என்ன உள்ளது என்பது பற்றியெல்லாம் எனக்கு கவலையும் கிடையாது.என்றாவது தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால் தெரிந்து கொள்ளும் எண்ணம் உண்டு இனி அவசியம் முயற்சி எடுப்பேன் அவை தமிழ் வழியில் கிடைத்தால் . .அதனால் நான் இந்து அல்ல என்று சொல்ல முடியுமா?

இங்கே வேதத்தை விட ஆழ்ந்த நம்பிக்கையும் உள்ளார்ந்த பக்தியும் தான் முக்கியம். மக்கள் சேவையும் மகேசன் சேவை இதிலும் நம்பிக்கை உண்டு முடிந்தவரை ஈடுபடுகிறேன்.
ஆன்மிகத்தில் எனக்கு என் சிவனை தவிர சிவ புராணத்தை தவிர வேறு ஒன்றிலும் ஈடுபாடு கிடையாது. மற்றவெல்லாம் தெரிந்து கொள்வதற்க்கான படிப்பே அன்றி வேறில்லை

///////வேசித்தனத்தை, தேவதாசி முறை, இன்னும் பலவிதங்களில் கோயிலில் வைத்து அரங்கேற்றியது நம் தேசம். ஆனால், வாயால் அதை பற்றி பேசுவது குற்றம் என்று ஒதுங்கிவிடுகிறோம்//////
நண்பரே மீண்டும் சொல்கிறேன் மதத்தின் பெயரால் தவறு செய்யும் தர்தலைகள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள்.அது மதத்தின் தவறு அல்ல மனிதனின் தவறு.
இது ஒன்றும் இந்து மதத்தில் ஒரு அங்கம் அல்ல.ஒரு காலத்தில் தன்னை இறைவனுக்கு அர்ப்பணித்து இறைசேவை செய்த பெண்ணினத்தை தன சுயநலத்திற்கு உபயோகபடுத்த ஆரம்பித்த கயவர்களால் புகுத்தப்பட்ட வழக்கம் அது. ஒழிக்கப்பட வேண்டியது.அவன் அருளால் ஒழிக்கபட்டும் விட்டடது.
அதனை செய்வதுதான் குற்றம். அந்த குற்றத்தை தவறு என கூறுவது குற்றம் அல்ல.மேலும் அந்த குற்றம் நடவாமல் இருக்க அந்த குற்றத்தை தவறு என பேசித்தான் ஆகவேண்டும்.

/////அதே போல், நீங்கள் கிறிஸ்துவம் பற்றி பேச வேண்டுமென்றால், அதை அறியவேண்டுமென்றால், பைபிளை (திறந்த மனதுடன்) படியுங்கள். புரியும்/////இனி நிச்சயம் திறந்த மனதுடன் அறிந்து கொள்வதாற்காகபடிப்பேன்.
நீங்கள் இந்துத்துவம் பற்றி விரிவாக திறந்த மனதுடன் படித்து விட்டுதான் இந்துத்துவம் பற்றி பேசுகிறீர்களா?என்ன என்னவற்றை படித்துவிட்டு பேசுகிறீர்கள்?

////தி.கவினரால் எழுதப்பட்ட புத்தகத்தை வைத்து நான் இந்துத்துவத்தை கற்றுக்கொல்வதுபோல்தான் உள்ளது, நீங்கள் திரு.ஜோசெபின் வார்த்தைகள் மூலம் கிறிஸ்துவத்தை கற்றுக்கொள்ள நினைப்பது/////
திகாவினரையும் அவர்கள் இந்து மதத்தின் மீதான அவர்களின் விமர்சனங்களையும் இப்போதெல்லாம் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. அவர்கள் கொள்கைக்கு அவர்கள் செயல்படுகிறார்கள்.

ஆனால் அவர்களைப்போல அல்ல ஜோசெப் அவர்கள் மிகவும் மென்மையானவர்,நாகரிகமான போக்கு உள்ளவர். அவரை பற்றிய மேலும் அறிய அவர் வலைதளத்தை சென்று பார்வை இடுங்கள் அவர் கட்டுரைகளை நீங்கள் படிக்கலாம்.என்னால் அவரை நீங்கள் தவறாக புரிந்து கொள்ளவேண்டாம்.திக வுடன் அவரை ஒப்பிடவேண்டாம்

அசோக்,

// அத்தகைய பாவம் மக்கள் மத்தியில் பெருக்கெடுக்கும் போது, பாவத்தை அழிக்க, அந்த பாவம் பெருகியுள்ள மக்களில் ஒரு கூட்டமும் அழிக்கப்படும் (காலில் நோயுற்ற மனிதனை காக்க, அந்த நோய்தீர்க்க மருந்தில்லாத பட்சத்தில், அவன் காலை மருத்துவர் நீக்குவதில்லையா?). //

நன்றாக இருக்கிறது இந்த உபன்னியாசம். நிறைய கேட்டிருக்கிறோம். ஆனால், பைபிளில் இப்படி எல்லாம் இல்லை. இதோ ஏன் அமலேகைத்தியரை சிசுக்களைக் கருத்தர் அழித்தார் என்று தெளிவாக இருக்கிறது:

“2 Thus says the Lord of hosts, ‘I have noted what Amalek did to Israel in opposing them on the way when they came up out of Egypt. 3 Now go and strike Amalek and devote to destruction all that they have. Do not spare them, but kill both man and woman, and infant, ox and sheep, camel and donkey.” (1 Sam. 15:2-3).

அதாவது, நானூறு வருடங்களுக்கு முன் ஒரு சந்ததியினரின் முன்னோர்கள் செய்த குற்றத்திற்காக, இப்பொழுது அச் சந்ததியில் உள்ள சிசுக்களை எல்லாம் அழிக்க வேண்டுமாம். நன்றாக இருக்கிறது.

இது பற்றி முன்னமே நாம் விவாதித்திருக்கிறோம். என்னைப் போல வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பதில் எழுத தெரியாதவர்களிடம் அதே நிராகரிக்கப் பட வேண்டிய விளக்கங்களை இங்கு அளித்து வருகிறீர்கள். சென்ற முறை வேறிடத்தில் விவாதித்த பொழுது அமலேகைத்திய சிசுக்களை “கட்டுவிரியன் குட்டிகளைப் போன்றவர்கள்” என்று அப்பட்டமான இனவாதத்தை முன்வைத்தீர்கள். எந்தக் குழந்தையும் அப்பாவி இல்லையாம், இயேசு ஒருவர் தான் அப்பாவியாம். அறிவாளிகள் ஏற்கக்கூடியதா இது?

அது தவிர, எல்லாம் வல்ல இறைவனுக்கு காலில் உள்ள நோயைக் குணப்படுத்த முடியுமே? அதே போல யாரையும் அழிக்காமல் பாவத்தை மாத்திரம் அழிக்கலாமே? ஆக, உண்மையில் கிறீத்தவத்தில் எல்லாம் வல்லவர் சாத்தான் தான் என்று தெரிகிறது.

முதல் பாவம் என்ற கோட்பாடே அபத்தமானது என்பதைத் தமிழ் ஹிந்துவில் கோபால் அவர்கள் நிரூபித்துள்ளார். It is logically impossible to have only one single life, original sin, and an all-loving benevolent ’லார்டு’ at the same time.

// இப்பொழுது பாவத்தின் பரிகாரியான கிறிஸ்துவின் ரத்தம் பாவத்தை போக்கும் அருமருந்தாக உள்ளது. அதனால், கிறிஸ்துவின் மரணத்தின் பொருட்டு பாவத்தை போக்க யாரும் அழிக்கப்பட தேவை இல்லை. //

அதாவது கிறித்தவக் கடவுளுக்கு mood change வந்தது என்கிறீர்கள். இது மானுடர்களின் லட்சணம், கடவுளுடைய இலக்கணத்திற்கு mood change ஒத்து வராது. அதுவும் 4000 வருடங்கள் கழித்து… சில்லரை விஷயம் அல்ல, மனித இனம் முழுவதையும் வெறுத்துவிட்டு பல அல்லல்களுக்கும் படுகொலைகளுக்கும் உட்படுத்தி சாவகாசமாக மாறுவது எல்லாம் ஒத்து வராது.

திரு. கந்தர்வன் அவர்களே,

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி. எத்தூசியர் , எபூசியர் , கானானியர் உள்ளிட்ட பல இனத்தவர்கள் இஸ்ரவேலருக்கு எந்தக் கொடுமையும் செய்யவில்லை, யாருக்கும் எந்தக் கொடுமையும் செய்யவில்லை. ஆனால் இஸ்ரவேலர் வாழ இடம் தேவைப்பட்டதால், பல இனங்களை படுகொலை செய்து அழித்து விட்டு , எங்க கடவுள் சொன்னாரு என்று கோட்ப்பட்டை உருவாக்கி உள்ளனர் என்றே பல அறிங்கர்கள் கருதுகின்றனர்.

உலகத்தைப் படைத்த கடவுளுக்கு யூதர்களுக்கு என்று புதியதாக ஒரு நிலத்தை படைத்துக் கொடுக்க இயலாதா, இன்னொரு இனத்தை அழித்து அந்த நிலத்தைப் பிடுங்கி கொடுக்க வேண்டுமா?

திரு. கந்தர்வன் அவர்களே ,

இப்போது அசோக் உள்ளிட்ட பலரும் கடவுள் தண்டனை குடுக்க இன அழிப்புக் கட்டளை போட்டார் என்ற ரீதியில் சொல்லுகின்றனர் அல்லவா. அப்படியானால ஒசாமா உள்ளிட்டோர், கடவுளின் கட்டளயின் படியே கடவுளுக்கு கீழ் படிய மறுக்கும் காபிர் களுக்கு எதிராக போராடுகிறோம் என்று சொல்லுகிறார்களே ,அது சரி என்று ஒத்துக் கொள்ள அசோக் போன்றோர் தயாரா?

அசோக் ஏன் முகமது (ஸல்) அவர்கள் உருவாக்கிய மார்க்கத்துக்கு , நூலுக்கு கீழ்ப் படிய மறுக்கிறார்?

கேள்வி கேட்காமல் கீழ்ப் படிதல் எனவே இனப் படுகொலைகளை புனிதப் படுத்துதல், மத வெறியை நியாயப் படுத்தி தொடர்ந்து பரப்புதல் ஆகியவற்றில் ஈடு பட வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப் படுகிறார்கள்.

திருச்சிக்காரர் அவர்களே,

அசோக் போன்றோர் “people in glasshouses should not throw stones at others” என்ற பழமொழியின் பொருளைப் புரிந்துக்கொள்வதில்லை. மற்ற மதங்களை மாறி மாறிக் கேள்வி கேட்கும் இவர்கள் தம் மதத்தில் உள்ள அடிப்படையான அபத்தங்களைப் பற்றி யோசிப்பதே இல்லை. “விவிலிய ஆதாரத்துடன் பேசுகிறேன்” என்று கூறியதால் விவிலியத்திலிருந்தே நான் மேற்கோள் காட்டினேன். உண்மையிலேயே இஸ்ரேலியர்களுக்கு மற்ற பழங்குடியினர் தீங்கு விளைத்து வந்தனர் என்பதை விவிலியக் கதைகளைத் தவிர வேறெந்த ஆதாரமும் இன்றி நான் நம்பப்போவதில்லை.

பிரச்சனை ஒழுக்காறு சம்பந்தப்பட்டது மட்டும் அன்று. கிறித்தவத்தில் தர்க்க ரீதியிலான பல பிழைகள் உள்ளன.

முதல் பாவம் தான் பாவம் செய்யும் குணத்தை ஏற்படுத்தியது என்றால், ஆதியில் முதல் பாவம் இல்லாத பொழுது ஏவாள் ஏன் பாவம் செய்தாள்?

ஆதாம் செய்த பாவத்துக்காக இன்றைக்குப் பிறக்கும் குழந்தையைப் பாவியாகப் படைப்பானேன்? முப்பாட்டன் செய்த தவறுக்குக் கொள்ளு பேரனைத் தண்டிப்பதா?

இப்படி அபத்தங்கள் நீட்டிக் கொண்டே போகும் என்று காண்பித்து இவர்களை வாயடைக்கச் செய்யலாம்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். என்னைப் பொறுத்த வரையில், materialism and other vices பரவியுள்ள இந்நாளில் “கடவுள் என்று ஒருவர் இருக்கிறார், அவர் நம்மை நேசிக்கிறார், அனைவருக்கும் கருணையையும் அன்பையும் போதிக்கிறார்” என்று நம்புபவர்கள் எம்மதத்தவராகிலும் கொண்டாடத்தக்கவர்களே. அது தவிர, “அவரவர் தமதமது அறிவறி வகை வகை” எந்த அபத்தக் கொள்கையை வேண்டுமானாலும் பற்றட்டும் (அடிப்படையில் நாட்டு சட்டத்தை மீறாமல் இருந்தால்). ஆனால் அதே சமயம் தர்க்கத்திலும் நூல்வழியும் வரலாற்று ரீதியிலும் ஒழுங்கான பிராமாண்யம் (evidence) இன்றி, அபத்தக் கொள்கைகளைப் பிறர் மேல் திணித்தும் சனாதன தருமத்தை இழித்துரைத்தும் காலம் கழிப்பவர்களுக்கு வாதப் போரில் பதிலடி தருவது தான் தக்க மருந்து.

மற்றபடி தங்கள் வரவேற்புக்கு நன்றி. பல மாதங்களாக உங்கள் தளத்தை அவ்வப்போது படித்து வருகிறேன். கிறித்தவ மதப் பிரச்சாரகர்களின் பித்தலாட்டத்தையும் போலித்தனத்தையும் நேர்மையின்மையையும் நீங்கள் திடமாக எதிர்த்து வருவதை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.

அன்புக்குரிய திரு.கந்தர்வன் அவாகளே,

நீங்கள் சொனது போல பைபிளைத் தவிர வேறு எந்த குறிப்போ ஆதாரமோ இந்த இனப் படுகொலைகளுக்கு இல்லை.

ஆனால் பைபிளில் சொல்லி இருப்பதைக் காட்டி இன்றைக்கும் மத்தியக் கிழக்கில் பாலஸ்தீனிய பகுதிகளை ஆக்கிரமிக்கிறார்கள்.

மத வெறிக் கோட்பாடுகளின் அடிப்படையில் பிற மதங்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்கிற உணரவில் மத சகிப்புத் தன்மை அழிப்புக் கோட்பாடுகளை இந்தியாவில் பரப்புகிரார்கள்.

நான் முன்பே பலமுறை சொன்னது என்னவென்றால், நாம் யூதர்களை வெறுக்கவில்லை, ஒவ்வொரு யூதரும் காப்பற்றப் பட வேண்டும், மரியாதையுடன் நடத்தப் பட வேண்டும் என்கிறோம்.

ஆனால் முந்தைய யூதர்களால் உருவாக்கப் பட்ட, சமரச மறுப்பு, மத சகிப்புத் தன்மை அழிப்பு, பிற மதங்களின் மீதான வெறுப்புணர்ச்சி, மத வெறி ஆகியவற்றைக் கை விட்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

//materialism and other vices பரவியுள்ள இந்நாளில் “கடவுள் என்று ஒருவர் இருக்கிறார், அவர் நம்மை நேசிக்கிறார், அனைவருக்கும் கருணையையும் அன்பையும் போதிக்கிறார்” என்று நம்புபவர்கள் எம்மதத்தவராகிலும் கொண்டாடத்தக்கவர்களே. அது தவிர, “அவரவர் தமதமது அறிவறி வகை வகை” எந்த அபத்தக் கொள்கையை வேண்டுமானாலும் பற்றட்டும்//

கடவுள் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டோ, அவர் அனபான்வர் என்று எண்ணிக் கொண்டோ, யார் வேண்டுமானாலும் அமைதியாக யாரை வேணுமானாலும் வழி பட்டுக் கொள்ளலாம் , அமைதியான வழிபாட்டை நாம் குறை சொல் ஒன்றுமில்லை. ஆனால் கடவுள் பெயரால் வெறுப்புனர்ச்ச்யை, சகிப்புத் தன்மை இன்மையை பரப்புவது ஆபத்தானது. வெறுப்பில்லாத மன நிலையுடன் , எல்லோரையும் நட்புடன் அணுகுவதும், அனபுடையவனாக இருப்பதுமே முக்கியம் என சொல்கிறோம்.

வெறுப்பை மத வெறியை உருவாக்கும் கடவுள் நம்பிக்கை ஆபத்தானதே. அமைதியாக கும்பிட்டுக் கொள்கிறோம், பிற மதங்களை வெறுத்து வம்பிழுக்காமல் இருக்கிறோம் என்று சொல்பவர்களுக்காக நான் கல் மண் எடுத்துக் கொடுத்து அவர்கள் வழி பாட்டுத் தளத்தைக் கட்டிக் கொள்ள உதவி செய்யத் தயார், அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் சரி- ஆனால் சகிப்புத் தன்மையை பரப்ப வேண்டும், மத வெறியை பரப்ப கூடாது.

மனதிலே வெறுப்பிருந்தால் நட்பு, அன்பு எப்படி வரும். நீ இதைக் கும்பிடாதே, அதைக் கும்பிடாதே என்று சொல்லிக் கொண்டு பிற மதங்களின் வழிபாடுகளைப் பார்க்கும் போது மனதில் வெறுப்புக் குமுற ஆவேசப் படுகிறார்கள்.

நம்முடைய தளம் நாகரீகம், சமத்துவம், சமரசம், மத நல்லிணக்கம்,பகுத்தறிவு ஆகிய கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்யும் தளமாக உள்ளது.

வெறுப்புணர்ச்சி வேண்டாம், எந்த ஒரு கோட்பாட்டையும் காரணமின்றி வெறுக்க வேண்டாம், என்கிற உலக அமைதிக்கு , மனிதத்துக்கு உதவக் கூடிய மிகச் சிறந்த கோட்பாடுகள் இந்திய தத்துவங்களில் உள்ளன.

அவற்றை நீங்கள் சிறந்த புலமை பெற்று இருக்கிறீர்கள். அவ்வகையில் நீங்கள் உங்கள் கட்டுரைகளை நம்முடைய தளத்துக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேம். நாம் அவற்றைப் பதிவிடுவோம்.

நீங்கள் நம்முடைய தளத்தின் கட்டுரைகளைப் படிப்பது எங்களுக்கு பெருமைக்குரிய விடயமாகும்.

மீண்டும் உங்களுக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அபாரம் நண்பர்களே,
கந்தர்வன் வந்தவுடனே செருப்பாலடித்துவிட்டார். நன்றி. உங்கள் யாரையும் நான் வாதத்தில் வெல்ல இங்கு வரவில்லை. நான் வந்தது சேதி சொல்ல, ஒரு தபால்காரனை போல. சில வேளைகளில் தபால்காரன், கடிதத்தை படித்தும் காண்பிப்பான். அதே போலதான் நானும். நான் கொண்டுவந்த சேதிக்கு என் அறிவுக்கெட்டிய விளக்கங்களை கொடுத்துள்ளேன். ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும், உங்கள் விருப்பம். சில காலம் கழித்து மீதும் வரலாம்.
நன்றி,
அசோக்

அசோக் அவர்களே, நீங்கள் இவ்வளவு வருத்தப் படுகிறீர்களே, உண்மையில் வருத்தப் பட வேண்டியது யார்?

நாங்கள் உங்கள் வழிபாட்டை வெறுத்து இகழ்கிறோமா? நான் உங்களுடன் சேர்ந்து நீங்கள் விரும்பும் சர்ச்சில் வழிபாடு நடத்த தயார் என்று சொல்லி இருக்கிறேன். என்னுடன் கூட மிகுந்த கடவுள் நம்பிக்கை உள்ள , இந்து மத தெய்வங்களை பக்தியுடன் வழி படும் பல இந்துக்களையும் வழிபாட்டில் கலந்து கொள்ள அழைத்து வரத் தயார் என்பதையும் சொல்லுகிறோம். இவ்வளவு தூரம் நாங்கள் சமரசப் போக்கைக் கடைப் பிடிக்கும் போதும் நீங்கள் வருத்தமடையக் காரணம் என்ன?

நீங்கள் எங்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? உங்களைப் போலவே ஆகி விட வேண்டும் என்றா? அதாவது நீங்கள் சொல்லும் கோட்பாடுகள் எல்லாவற்றையும் மறு பேச்சின்றி ஒத்துக் கொள்ள வேண்டும், இஸ்ரேலியர் தேர்ந்தெடுக்கப் பட்ட இனம், உங்கள் மார்க்கத்தை தவிர பிற மார்க்கங்கள் எல்லாம் பொய்யானவை, நீங்கள் கடவுளாக சொல்லுபவர் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், மற்ற மதத்தினர் வழிபாட்டு முறைகளை கண்டிக்க வேண்டும்….மதவெறிக் கோட்பாடுகளை எதிர்த்த்க் கேட்டால் நரகத்துக்கு போக வேண்டும் … இப்படியாக உங்களை மகிழ்ச்சி அடைய செய்ய எங்கள் மனதில் உள்ள மத சகிப்புத் தன்மையை அழித்து விட்டு, மத வெறியைக் கைக் கொள்ள வேண்டும்… இப்படி எல்லாம் செய்தால் உங்களுக்கு வருத்தம் இருக்காது ! ஆனால் நாங்கள் நியாயத்தின் பாதையில் கருணையின் பாதையில், சிநேகப் பாதையில் , நல்லிணக்க, சமரச பாதையிலேயே செல் ல விரும்புகிறோம்.

அசோக்,

நீங்கள் மாத்திரம் வேசித்தனம் என்றெல்லாம் பேசலாம், நான் ‘செருப்படி’ என்பதை ஒரு உவமையாகக் கூறியதற்கு ஆதங்கப்படுகிறீர். நியாயமா?

வேத தெய்வங்களை அவதூறு செய்யும் நீங்கள் பைபிளில் உள்ள அபத்தமான, கோரமான, அறிவுக்கு ஒவ்வாத விஷயங்களுக்கு மாத்திரம் செம்மயாகச் சப்பைக்கட்டுவது வேடிக்கை.

//உங்கள் யாரையும் நான் வாதத்தில் வெல்ல இங்கு வரவில்லை.//

வாதம் என்பது கேட்கப்படும் கேள்விகளுக்குத் தகுந்த பதில் அளிப்பதாகும். நீங்கள் அதைத் தான் செய்யப்போகிறேன் என்று சொன்னீர்கள். ஆனால் நாம் கேட்கும் கேள்விக்கு பதிலையே காணாமல் திணறி விட்டீர்கள்.

// நான் வந்தது சேதி சொல்ல, ஒரு தபால்காரனை போல. சில வேளைகளில் தபால்காரன், கடிதத்தை படித்தும் காண்பிப்பான். //

நீங்கள் கொண்டு வரும் ’சேதிக்கு’ spam email பொருத்தமான உவமையாகும். தபால் காரன் வேஷத்துடன் ஒருவன் தபால் பெட்டியில் குப்பையை அள்ளிப் போட்டால் அவன் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது தான். அத்தகைய நடவடிக்கை தான் நாம் உங்களிடம் கேள்வி கேட்பதும் விவாதிப்பதும். நீங்கள் சும்மா உங்கள் குடும்பத்தோடு உங்கள் இல்லத்தில் ஏதோ ஒரு மதத்தைப் பற்றிக்கொண்டு இருப்பீர்களானால் எந்த இந்துவும் வம்புக்கு இழுக்கப் போவதில்லை, பைபிளைப் பற்றி கேள்வி கேட்கவும் போவதில்லை. அதை விட்டு மற்றவர்கள் மத நம்பிக்கை மீது கல் எறியும் காரியத்தைச் செய்வீர்களானால் திரும்பக் கேள்வி கேட்டு வாதம் என்னும் பாராங்கல்லை உங்கள் பக்கம் உருட்டி விடுவோம்.

I do not care for any debates or arguments with anyone when I am not provoked. I have very good friends who are staunchly Christian by faith at my work place. However, they do not talk ill about Hinduism or India. But seeing your response here by mentioning the Gita and your comments elsewhere, I thought it was appropriate that you get a fitting response.

நண்பர்களே,
நான் வருத்தப்படுவது உங்கள் வார்த்தைகளுக்கல்ல. என்னால் உங்களுக்கு உண்மையை புரியவைக்க முடியவில்லையே என்றே. நீங்கள், என்னை நேரில் செருப்பிலடித்தாலும் நான் வருந்துவதில்லை.
அசோக்

அசோக்,

நாங்கள் இரக்கம் காட்டாமல் , உடன் படிக்கை செய்யாமல் இனங்களை அழித்துப் போடும் கொடூர செயல்களை புனிதப் படுத்தவோ, மத சகிப்புத் தன்மை இல்லாமல் பிற மதங்ககளின் வழி பாட்டு முறைகளை இகழ்ந்து, தன் மதம் மட்டுமே எல்லோராலும் பின்பற்றப் படவேண்டும் என்பதற்காக மத வெறியுடன் செயல் பட்டு பிற மதங்களை அளிக்கும் போக்கை யும், அதனால் பூசல் , சண்டை வந்து இரத்த ஆறு ஓடினாலும் பரவாயில்லை என செயல்படவோ இயலாது.

அசோக் அவர்களே, நீங்கள் இவ்வளவு வருத்தப் படுகிறீர்களே, உண்மையில் வருத்தப் பட வேண்டியது யார்?

நாங்கள் உங்கள் வழிபாட்டை வெறுத்து இகழ்கிறோமா? நான் உங்களுடன் சேர்ந்து நீங்கள் விரும்பும் சர்ச்சில் வழிபாடு நடத்த தயார் என்று சொல்லி இருக்கிறேன். என்னுடன் கூட மிகுந்த கடவுள் நம்பிக்கை உள்ள , இந்து மத தெய்வங்களை பக்தியுடன் வழி படும் பல இந்துக்களையும் வழிபாட்டில் கலந்து கொள்ள அழைத்து வரத் தயார் என்பதையும் சொல்லுகிறோம். இவ்வளவு தூரம் நாங்கள் சமரசப் போக்கைக் கடைப் பிடிக்கும் போதும் நீங்கள் வருத்தமடையக் காரணம் என்ன?

நீங்கள் எங்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? உங்களைப் போலவே ஆகி விட வேண்டும் என்றா? அதாவது நீங்கள் சொல்லும் கோட்பாடுகள் எல்லாவற்றையும் மறு பேச்சின்றி ஒத்துக் கொள்ள வேண்டும், இஸ்ரேலியர் தேர்ந்தெடுக்கப் பட்ட இனம், உங்கள் மார்க்கத்தை தவிர பிற மார்க்கங்கள் எல்லாம் பொய்யானவை, நீங்கள் கடவுளாக சொல்லுபவர் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், மற்ற மதத்தினர் வழிபாட்டு முறைகளை கண்டிக்க வேண்டும்….மதவெறிக் கோட்பாடுகளை எதிர்த்த்க் கேட்டால் நரகத்துக்கு போக வேண்டும் … இப்படியாக உங்களை மகிழ்ச்சி அடைய செய்ய எங்கள் மனதில் உள்ள மத சகிப்புத் தன்மையை அழித்து விட்டு, மத வெறியைக் கைக் கொள்ள வேண்டும்… இப்படி எல்லாம் செய்தால் உங்களுக்கு வருத்தம் இருக்காது ! ஆனால் நாங்கள் நியாயத்தின் பாதையில் கருணையின் பாதையில், சிநேகப் பாதையில் , நல்லிணக்க, சமரச பாதையிலேயே செல் ல விரும்புகிறோம்.

அசோக்,

உன்னையெல்லாம் திருத்த முடியாது போல இருக்கிறது. இன்று சில்சாம் தளத்தில் நீ இட்டிருப்பது இதோ:

// தொன்மையான மதம், வேத மதமென்று வேடமிட்டு வந்த இந்த மதத்தின் முகத்திரை இனி நிறைய கிழிக்கப்படும். நண்பர்கள், இந்த தலைப்பை அடிக்கடி பார்வையிட ஊக்குவிக்க படுகிறார்கள். ஏனெனில் காமெடிக்கும் இந்துத்துவத்தில் பஞ்சம் கிடையாது. மாயமானகிய இந்துத்துவத்தின் பின்னால் ஓடும் இந்த ராமன்களையும், சீதைகளையும் வழிநடத்த உங்களுக்கு இந்த தொடர் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன், அவர்கள் கருத்துக்களை குறித்து சிந்திக்கவும் (சிலசமயம் சிரிக்கவும்) வைக்க முயல்கிறேன். //

திருச்சியாருக்கு வினவு கண்டிப்பு! கொள்கையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாதே!

உன் குருட்டுக் கண்களுக்கு ஒன்று புலனாகவில்லை என்று தெரிகிறது… வேதாந்த மதத்திற்கு எதிராகப் பல தரப்புகளிலிருந்தும் பல கேள்விகள் எழுப்பப்பட்டன (சாருவாகம், பௌத்தம், ஜைனம் முதலான). அவைகளுக்கு கிட்டத் தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆச்சாரியார்கள் மிகத் தெளிவாக ஆட்சேபங்களுக்கு பதில் கூறியுள்ளனர்.

கொழுந்து விட்டெரியும் அக்கினியை மினிமினிப்போச்சி அருகில் சென்று துப்பி அணைக்க முயன்றதாம். அது போல இருக்கிறது உன் முயற்சி.

இப்படிக் கிறித்தவ மதம் வரலாற்றில் ஒரு முறை கூட ஆட்சேபங்களுக்கு பதில் அளித்ததில்லை. சர்ச்சுக்கு எதிராகக் கேள்வி கேட்டால் தூக்கில் இடுவார்கள். இத்தகைய வரலாற்றைக் கொண்ட மதம் ஒன்றை நீ பற்றியிருப்பது உன் தலைவிதி.

இப்படிப் பழி வாங்கும் எண்ணத்துடன் கல் எறியும் பழக்கத்தை நிறுத்தினாலன்றி எவரும் உம்மை சீரியஸாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை.

அசோக்,

இதில் இன்னொரு காமெடி என்னவென்றால், இங்கு பைபிளில் உள்ளவற்றைப் பற்றிய நம் கேள்விகளுக்கு மறுமொழி இட்டு விவாதம் செய்ய வீரமில்லாமல், கோழைத்தனமாகக் வெறி பிடித்த கூட்டத்தின் நடுவில் இந்து மதத்தைக் கேலி செய்து திருப்தி அடைய முயல்கிறாய். அந்தோ!

திரு. கந்தர்வன் அவர்களே,

இந்திய மக்களின் மத சகிப்புத் தன்மையை அழித்து மத வெறியை புகுத்தும் முயற்சியில் பெரிய வெற்றி பெற முடியாது என்று அனேகமாக திரு. அசோக் தெரிந்து கொண்டு இருப்பார். அதனால் பெரும்பாலான இந்தியர்கள் பின்பற்றும் மதமான இந்து மதத்தை நெம்பிப் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு, இந்து மதத்தை பற்றிய குழப்பத்தை உருவாக்கி விட்டால் , இந்தியரகளை மத வெறிப் பாதைக்கு கொண்டு வரலாம் என்பது இவர் கணக்காக இருக்கக் கூடும். ஆனால் நீங்கள் இப்படி ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் என்ன?

இந்திரன் என்பது ஒரு பதவி, அந்தப் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் சொல்லப் பட்டுள்ளது. எப்படி மனிதர்கள் பிறந்து இறக்கிறார்களோ, அப்படியே தேவர்கள் எனப் படுபவர்களும் முடிந்து போக்கக் கூடியவர்களே என்பதாகவே இந்து மத கோட்பாடு சொல்லுகிறது, இந்த தேவர்கள் பற்றி பல சம்பவங்ககுள் சொல்லப் பட்டுள்ளன.

இனப் படுகொலை, மத வெறி போன்றவற்றை இந்த தேவர்கள் செய்யாவிட்டலும், அவ்வப் போது சில பல சில்மிசங்க்களை இந்திரன் போன்றோர் செய்துள்ளனர் என்றே புராண ங்கள் சொல்லுகின்றன. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சாமரசம் வீசி ஓகே ஓக்கே என்று தலையாட்டாமல்அவர்களைக் கண்டித்து திருத்துவதே இந்து மத கோட்பாடு. அவ்வகையில் ஆசை வலையில் சிக்கிய இந்திரன் பதவி மக்களிடம் மதிப்பை இழந்து விட்டது.

இந்து மதத்தின் முக்கிய பிரச்சாரகர்கள் ஆன சித்த முனிவர்கள், சங்கராச்சாரியார் , இராமனுஜாசாரியார், மத்வாச்சாரியார், துளசிதாசர், தியாகராஜர், சுவாமி விவேகானந்தர் ஆகியோர் இந்திரன் … போன்றவர்களை முக்கியமாக கருதியதோ, புகழ்ந்ததோ இல்லை என்பது உங்களுக்கே தெரியும். சொர்க்கத்தை முக்கிய நோக்கமாக வைத்துக் கொள்ள சொல்லி இவர்கள் யாரும் சொன்னதும் இல்லை.

திருச்சிக்காரரே,

நான் இந்திர பதவியைப் பெரிதாகச் சித்தரிக்க வேண்டும் என்று கூறவில்லை. இந்திர பதவியும் சுவர்க்க வாசமும் தற்காலிகமானதே, இந்தியாவை விட்டு சிறிது நாள் அமெரிக்காவோ கானடாவோ போவது போன்றதே என்பதை மறுக்கவில்லை. பக்குவமற்ற ஆன்மாக்களும் மெல்ல மெல்ல உயர்கதி அடைய வேண்டுமே எனக் கருதி இந்திர பதவி போன்ற மிகத் தாழ்ந்த பலன்களில் ஈடுபடவைத்து அவர்களையும் நன்மை செய்ய வைத்து, கர்ம வினைகளைச் சிறிது தீர்க்க வைக்கிறது வேத மதம், எப்படி என்றால் இந்திர பதவி அடைவதற்கும் பல தரும காரியங்களைச் செய்ய வேண்டும்.

நான் சொல்ல வருவது என்னவென்றால், அசோக் போன்றோர் வேண்டுமென்றே தவறாக நம்மைச் சித்தரிக்கிறார்கள். நம் குழந்தைகளுக்கு இராமாயணமும் பாரதமும் தான் சொல்லிக் கொடுக்கிறோம். இந்திர லோகம் பற்றிச் சொல்லித் தருவதில்லை. Strawman argument பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதாவது இல்லாத ஒன்றையோ அல்லது இருப்பதைத் தவறாகவோ சித்தரித்து அதைத் தாக்கி பாமரர்களை மயக்குவது. அதைத் தான் அசோக் செய்கிறார். எப்படி என்றால் இந்திர லோகத்தை மோக்ஷ லோகம் போலச் சித்தரிக்கிறார், தம்முடைய மதத்தில் உள்ள paradise-உடன் ஒப்பிடுகிறார். இது எவ்வளவு அப்பட்டமான, நேர்மையற்ற ஒப்பீடு என்பது உங்களுக்குத் தெரியும். அதைத் தான் கண்டிக்கிறேன்.

இவர்களுடைய கபட நாடகத்தை நன்றாகப் புரிந்து தான் பதில் இட்டேன். தவறாக ரியாக்ட் செய்யவில்லை.

நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் கை விரித்து விட்டு, வேறு இடத்தில் தம் சக களுடன் சேர்ந்து நம்மைப் பற்றி எள்ளி நகைக்கிறார் என்றால் பாருங்கள்.

நரகம் சொர்க்கம் எல்லாம் உண்டு என்று நம்பும் நீங்கள் கருட புராணத்தையும் இந்துக்கள் சொல்லும் நரக சொர்கத்தை மட்டும் கிண்டலடிப்பது நகைப்பாக உள்ளது/
உண்டு ஆனால் நீங்கள் சொல்வது போல்தான் உண்டு என்றால் என்ன அர்த்தம்.
இப்போது சகோ திருச்சியின் வாதமே சிறந்தது. பார்க்காத கடவுளுக்கும் சொர்க்க நரகத்துக்கும் சாட்சி கொடுப்பதை விட அவரவர் வழியில் சென்று நேரில் உணர முற்படுவதே சிறந்தது.
அதனை விடுத்து உங்களிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் பலமுறை விளக்கமளிக்கப்பட்ட அல்ப குற்றச்சாட்டுகளை இந்து மதத்தின் மேல் போட்டு சந்தோசப்பட்டு கொண்டு. அடாவடியாக நீங்கள் பிரர்கடிமை செய்ததோடல்லாமல் அந்த கூட்டத்திற்கு ஆள் பிடிக்கும் பொருட்டு இன வெறி கோட்பாடுகளை (அடுத்தவர் தாழ்ந்தவர் என்று சொல்லும் இடத்தில் தான் ஆதிக்க மனோபாவமும் தீண்டாமையின் இரண்டாம் பரிணாமும் உருவாக ஆரம்பிக்கிறது) பரப்ப துடிக்கும்.ஆர்மேனிய மொழி வாசகங்களை மொழிபெயர்த்து நம்பிகொண்டிருக்கும் நீங்கள் உங்களை உணர கடவுளை நான் பிரார்த்திக்கிறேன்.

யாக்கோபு
5 அதிகாரம்
14. உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.
Is any sick among you? let him call for the elders of the church; and let them pray over him, anointing him with oil in the name of the Lord:
15. அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
And the prayer of faith shall save the sick, and the Lord shall raise him up; and if he have committed sins, they shall be forgiven him.
16. நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
Confess your faults one to another, and pray one for another, that ye may be healed. The effectual fervent prayer of a righteous man availeth much.
கிறிஸ்தவ ம‌த‌ குருக்க‌ள் நோயுற்ற‌வ‌ன் உட‌ம்பில் ஜெபித்த‌ எண்ணை த‌ட‌வியே எப்பிணியையும் தீர்க்க‌ முடியும்.
உலகில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் இடித்துவிட்டு த‌குதி பெற்ற‌ அனைத்து ம‌ருத்துவ‌ர்க‌ளும் ஸ்டெதஸ்கோப், ம‌ருந்து, மாத்திரை, மருத்துவ உபகரணங்கள் முத‌லிய‌வைக‌ளை தூக்கி எறிந்து விட்டு சர்ச்சின் மூப்பர்க‌ளாக‌ மாறி ச‌ர்வ‌ பிணிக‌ளையும் தீர்க்க‌லாம் தானே?.

கிறிஸ்த‌வ‌ மிஷ‌ன‌ரிக‌ள் ம‌ருத்துவ‌மனை‌க‌ள் நிறுவி வ‌ருவ‌த‌ன் மூல‌ம் பைபிளுக்கு எதிராக‌ செய‌ல்படுகிறார்க‌ளா?

any body answer please?

ஏசுநாதர் முடவர்களை நடக்க வைத்து, குருடர்களைப் பார்க்க வைத்து, தொழுநோயாளிகளைக் குணப்படுத்தி, அப்பங்களைப் பல்லாயிரமாகப் பெருக வைத்து அற்புதங்களைச் செய்தார் என்பதுதான் இன்றும் கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கையாக இருக்கின்றது. உண்மையில் ஏசுநாதர் அவர் காலத்தில் இப்படி சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் மேல் அன்பு காட்டினார் என்பதைத் தாண்டி அவர் எந்த அற்புதங்களும் செய்யவில்லை. அப்படி யாரும் செய்யவும் முடியாது. இன்றைக்கு கிறித்தவ நற்செய்திக் கூட்டங்களில் அந்த அற்புதங்களுக்கான சாட்சிகள் செட்டப் செய்யப்பட்டு மேடையேற்றப்படுகின்றனர்.

இப்படித்தான் மதத்தின் மூடநம்பிக்கை நசிந்து போகாமல் காப்பாற்றப்படுகின்றது. அந்த அற்புதங்கள் உண்மை என்றால் இன்று கிறித்தவ மிசினரிகள் நடத்தும் எண்ணிலடங்கா மருத்துவமனைகளுக்கு என்ன காரணம்? அதற்குப்பதில் தேவ செய்தியாளர்களை வைத்து எல்லா நோயாளிகளையும் சடுதியில் குணமாக்கி விடலாமே? மேலும் ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்புப் போரினால் உறுப்புக்களை இழக்கும் ஈராக், ஆப்கான் நாடுகளைச் சேர்ந்த அப்பாவிகளுக்கும் அந்த உறுப்புக்களை மீண்டும் தருவிக்கலாமே

அன்புக்குரிய சிவனடியான் அவர்களே, உங்களின் மேலான் வருகைக்கும் , பங்கெடுப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள். உங்களின் கருத்துக்கள் மிகச் சிறப்பாக உள்ளன. இதிலே இயேசு நாதரின் அற்புதங்களை முன்னிலைப் படுத்துவதோடு மட்டுமல்லாமல் இவர்களும் முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள், நாங்களும் அற்புதம் செய்கிறோம், என்று பிரபலப் படுத்துவதோடு, பலரும் தங்களை தீர்க்கதரிசி என சொல்லிக் கொள்ளுகின்றனர்.

அதே நேரம் இயேசு நாதரை கோட்பாட்டு ரீதியிலே அணுகுவதுதான் இந்திய சிந்தனையாளர்களின் அணுகு முறை. சமரசம், விட்டுக் கொடுத்தல், நேர்மையான குடும்ப வாழ்க்கை, அடுத்தவரின் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளுதல் போன்ற இந்திய சமுதாயப் பண்புகளியே இயேசு பிரான் பிரச்சாரம் செய்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டுபவன் இந்தியனே. நம்முடைய நண்பர் சில்சாம் போன்றோரே இதைப் புரிந்து கொண்டு விட்டனர்.

எனவே அவர்கள் இந்துக கடவுள்களை இகழ்வார்கள், அவர்கள் மாறக்கத்தில் சொல்லப் பட்டுள்ள கடவுளகளை தவிர பிற மாறக்கத்தினரைன் கடவுள்களை எல்லாம் இகழ்வார்கள்.

ஆனால் நாம் இயேசு கிறிஸ்துவின் கோட்பாடுகளுக்கு முன்னிலை கொடுத்து அவரை சிறப்பு செய்யுவோம். உலகம் முழுவது மத நல்லிணக்கத்தை பரப்புவதில் நாம் இயேசு கிறிஸ்துவை முக்கிய சமரசக் கோட்பாட்டுக் காரராக முன்னிறுத்துவோம். எந்த இயேசு பிரானின் நாமத்தால் பிற மதங்களை எல்லாம் கண்டித்து , பிற மத தெய்வங்களை உலகம் முழுவது மத சகிப்புத் தன்மையை அழித்து , மத வெறியை விதைக்கிராரகளோ, அதே இயேசு கிறிஸ்துவின் உணமையான நோக்கம் சமரசமே என்பதை நாம் விளக்கி மத நல்லிணக்கத்தைப் பரப்புவோம்.

உலகில் உள்ள எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களை, உண்மையான ஆன்மீகத்தை விளக்கி எல்லா மதங்ககளையும் நல்லிணக்கத்தில் இணைப்பதே நம் பணி.

அவர்கள் பிற மத தெய்வங்களை இகழ்வார்கள். நாம் எல்லா மத தெய்வங்களையும் மகிமைப் படுத்துவோம்.

உபகாமம் என்பது என்ன? அதனை நம் கிறித்தவ நண்பர்கள் பின்பற்றுகிறார்களா?
அதில் 13 ல் இருந்து 21 வரை உள்ள வாசகங்கள் ஒரு பெண்ணை கன்னித்தன்மையை கணவன் சோதிக்கவும் அப்படி கன்னித்தன்மை இல்லை எனில் அவளை கொலைசெய்யவும் அதிகாரம் தருகிறதே.
இதையா நண்பர்கள் பொக்கிஷம் என்கிறார்கள்? அவர்களுக்கு இருக்கும் ஒரே வேதம் பைபிளில் தானே இது இருக்கிறது?
இதற்கு பதில் தரமுடியுமா?

என்ன பதிலே காணோம்?
இன்னும் மோசமானதும் படிக்கமுடிந்தது உங்கள் பைபிளில் பெண்களின் மாதவிலக்குக்கு ரெண்டு புறாக்களை சர்ச்சிலே பலியிட வேண்டுமாமே?

ரொம்ப அபத்தமா இருக்குங்க அந்த புத்தகம்

யாத்திராகமம்
35 அதிகாரம்
2. நீங்கள் ஆறுநாள் வேலைசெய்ய வேண்டும், ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்.

Six days shall work be done, but on the seventh day there shall be to you an holy day, a sabbath of rest to the LORD: whosoever doeth work therein shall be put to death.

என்ன இது இதுவா உங்கள் பொக்கிஷம்? ஐயோ ஐயோ

புதிய ஏற்பாடு உரோமையர் அதிகாரம் 1
25 அவர்கள் கடவுளை பற்றிய உண்மைக்கு பதிலாக பொய்யை ஏற்றுக்கொண்டார்கள், படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்கு பணி செய்தனர், படைத்தவரை மறந்தார்கள்,அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர்,ஆமென்.

26 ஆகையால் கட்டுகடங்காத இழிவான பாலுணர்வு கொள்ள அவர்களை விட்டு விட்டார், அதன் விளைவாக இயல்பான இன்பமுறைக்கு பதிலாக இயல்புக்கு மாறான முறையில் நடந்துகொண்டனர்,

27 அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேர்ந்து இன்பம் பெரும் இயல்பான முறையை விட்டு தங்களிடையே ஒருவர்மீது ஒருவர் வேட்கை கொண்டு காமத்தீயால் பற்றி எரிந்தார்கள்,ஆண்களுடன் ஆண்கள் வெட்கத்திற்குரிய செயல்களை செய்து தாங்கள் நெறி தவறியதற்கான கூலியை தங்கள் உடலில் பெற்றுகொண்டனர்

28 கடவுளை அறிந்து கொள்ளும் தகுதியை அவர்கள் இழந்து விட்டதால் சீர்கெட்ட சிந்தனையின் விளைவாக தகாத செயல்களை செய்யுமாறு கடவுள் அவர்களை விட்டு விட்டார்.

எல்லாம் எதனாலாம்? படைப்புகளை வணங்கியதாலாம், என்ன கடவுளோ?
குமட்டுதப்பா உங்கள் கடவுளின் செயலும் அந்த பைபிள் புத்தக வசனங்களும்.

என்னது இது?

நண்பர் திருச்சிக்காரனுக்கு வாழ்த்துக்கள்; தங்களுடைய தளத்தில் பல நாட்களாக கருத்துக்களைப் பகிர்ந்துவந்த நண்பர் அசோக்குமார் கணேசன் அவர்கள் தற்போது இந்து மார்க்கத்தின் முக்கியமான சர்ச்சைக்குரிய முரண்பாடுகளை ஆராயும் கட்டுரைகளை வழங்கி வருகிறார்; நீங்களும் விவாதங்களில் பங்கேற்கவும் பொதுவான கட்டுரைகளைப் பதிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.

About

அன்புக்குரிய சகோதரர் திரு. சில்சாம் அவர்களே ,

உங்களின் வருக்கைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி. நான் விரைவிலே உங்கள் தளத்திலே என்னுடைய கருத்துக்களை கட்டுரையாக நிச்சயம் பதிப்பேன். பணிப்பளு காரணமாக அதிகம் எழுத இயலவில்லை. உங்களுக்கு நம்முடைய தளத்தைப் பற்றி நன்கு தெரியும். பிற மதத்தினர் கடவுளாக வழிபடுபவர்களை நாம் இகழ்வதில்லை, இகழ்வதை வூக்குவிப்பதும் இல்லை.

நம்முடைய தளம் மத சகிப்புத் தன்மையை வளர்க்கும் தளமாகவும், பிற மதங்களின் மீதான வெறுப்புணர்ச்சி தேவை இல்லாதது அபாயகரமானது என்பதை விளக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்தை முன்னிலைப் படுத்தியும் எழுதி வருகிறோம்.

எல்லா மதங்களையும் ஆக்க பூர்வமாக அணுகி அவற்றில் உள்ள நல்ல கருத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம். இயேசு பிரான் கூறிய நல்ல கருத்துக்களை சுட்டிக் காட்டி , அவருடைய உண்மையான கோட்பாடுகளை முன்னிலைப் படுத்துகிறோம். அதே நேரம் மத சகிப்புத் தன்மையை அழிக்கும் கருத்துக்கள் , மற்றும் வெறுப்புணர்ச்சியை தூண்டும் கருத்துக்கள் எந்த மதத்தை சார்ந்த நூல்களில் இருந்தாலும் அவை வேண்டாம் , அவை மோதலை உருவாக்கும் என்பதை சொல்லும் கடமையில் நாம் பின் வாங்குவதில்லை.

மத சகிப்புத் தன்மையை அழிப்பதால், தான் சொல்லும் கோட்பாட்டையே உலகில் எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்கிற ஆவேசத்தால் பிற மதங்களை எப்படியாவது இல்லாமல் செய்ய வேண்டும் என்கிற உணர்வானது எந்த அளவுக்கு கொண்டு போய் விடும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

மத சகிப்புத் தன்மையை அழித்து, மத வெறியைப் பரப்பும் நோக்கில் செய்யப் படும் செயல்களை பெரும்பாலான இந்தியர்கள் ரசிப்பதோ, ஆதரிப்பதோ, பங்கெடுக்க விரும்புவதோ இல்லை.

நம்முடைய தளமானது எல்லா மதங்களையும் இணைக்கும் தளமாக உள்ளது, எந்த ஒரு மதத்தையும் நாம் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கவில்லை, அவை இல்லாமல் போக வேண்டும் என்ற நோக்கில் செயல் படவும் இல்லை. எனவே இந்து மதத்தில் முரண்பாடு இருப்பதாக நீங்களோ, வேறு யாரோ கருதினால், அதைப் பற்றி நடு நிலையுடன் விவாதிக்க சரியான் தளம் நமது தளமே! அதை நம்முடைய தளத்தில் பதிவிடலாம். அவற்றை நாமும் ஆராய்வோம். நம்முடைய தளத்தில் எல்லா கருத்துக்களும் பதிவு செய்யப் படுவது உங்களுக்கே தெரியும். தனி மனித தாக்குதல், சாதி வெறிக் கருத்துக்கள் … போன்றவற்றை உள்ளடக்கிய வார்த்தைகளை மட்டுமே மட்டுறுத்துகிறோம்.

எனவே எந்த ஒரு சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணமும் இல்லாத நிலையிலம், நான் சொல்லுகிறதை தான் சத்தியம் என்று ஒத்துக் கொள்ள வேண்டும், பிற மதங்களை எல்லாம் வெறுத்து இல்லாமல் செய்யவேண்டும் என்கிற நோக்கில் வெறுப்புணர்ச்சியால் எழுதப் படுவதில் நாம் பங்கெடுக்க என்ன இருக்கிறது?

ஒரு மதத்தை மட்டுமே உண்மை என்று கருதிக் கொண்டு, பிற மதங்களை வெறுப்புணர்ச்சியோடு நோக்கும் கோட்பாடுகளை முன் வைக்கும் எந்த தளத்தையும் நடுநிலை தளமாக மக்கள் கருத மாட்டார்கள்.

உங்கள் தளத்தை மத நல்லிணக்கத் தளமாக அமைத்தால் பலரும் அதில் பங்கெடுப்பார்கள்.

இந்து மதத்தின் மீதான விமரிசனங்களை ஆராய்ந்து பல கட்டுரைகளை வெளி இட்டு இருக்கிறோம், இன்னும் தொடர்ந்து வெளியிடுவோம்.

//////கையும் மெய்யுமாக பிடிபட்டு, ஊரே சேர்ந்து கல்லால் அடிக்க இருந்த ஒரு வேசியை, நம் அருள்நாதர் இயேசு ரட்சித்து, அவள் வாழ வழி செய்தார்.
எவனோ ஒருவன் குற்றம் சொன்னான் என்ற காரணத்திற்காக, கற்புக்கரசியான, தனக்காக வனத்திலும், பின்பு அசோக வனத்திலும் கஷ்டபட்ட சொந்த மனைவியை, காட்டுக்கு விரட்டியவன் ராமன்.
இந்த இருவரும் ஒரே கொள்கை உடையவர் என்று யாரோ ஒரு நண்பர் திருச்சியில் புலம்புகிறார்./////

நண்பர் அசோக்கின் ஒப்பாரி

/////கதையின் கருத்து:

திறந்த மனதுடன் பார்த்தால், ஒரு வீரமான, பலசாலியான, அரசனின் வாழ்க்கையை, சற்றே ஆணாதிக்க மனோபாவத்தோடு எழுதப்பட்டுள்ளது. இதில் நன்னெறி கருத்தாக எடுத்துக்கொள்ள எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதீத கற்பனை நயத்தோடு சுவையாகவும், மனதை தொடும்படியாக எழுதப்பட்டுள்ளதை பாராட்டலாம்.///////

திறந்த மனதுடன் பார்த்தால் ஆணாதிக்கம் என்பது விவிலியத்தில் கடவுளின் கட்டளையாகவே வருகிறது

பைபிள்:.உபாகமம் BIBLE: Deuteronomy 22
22 அதிகாரம்

13. ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணின ஒருவன் அவளிடத்தில் பிரவேசித்த (உடலுறவு கொண்ட) பின்பு அவளை வெறுத்து:
13.If any man take a wife, and go in unto her, and hate her,

14. நான் இந்த ஸ்திரீயை விவாகம் பண்ணி, அவளிடத்தில் சேர்ந்தபோது கன்னிமையைக் காணவில்லை என்று அவள் மேல் ஆவலாதியான விசேஷங்களைச் சாற்றி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்;
14.And give occasions of speech against her, and bring up an evil name upon her, and say, I took this woman, and when I came to her, I found her not a maid:

15. அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.
15.Then shall the father of the damsel, and her mother, take and bring forth the tokens of the damsel’s virginity unto the elders of the city in the gate:

16. அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,
16.And the damsel’s father shall say unto the elders, I gave my daughter unto this man to wife, and he hateth her;

17. நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.

17.And, lo, he hath given occasions of speech against her, saying, I found not thy daughter a maid; and yet these are the tokens of my daughter’s virginity. And they shall spread the cloth before the elders of the city.

18. அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,
18.And the elders of that city shall take that man and chastise him;

19. அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறு பண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக்கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.
19.And they shall amerce him in an hundred shekels of silver, and give them unto the father of the damsel, because he hath brought up an evil name upon a virgin of Israel: and she shall be his wife; he may not put her away all his days.

20. அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லையென்னும் சங்கதி மெய்ப்பட்டதேயானால்,
20.But if this thing be true, and the tokens of virginity be not found for the damsel:

21. அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம் பண்ணினபடியினாலே, அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
21.Then they shall bring out the damsel to the door of her father’s house, and the men of her city shall stone her with stones that she die: because she hath wrought folly in Israel, to play the whore in her father’s house: so shalt thou put evil away from among you.

மீண்டும் வருவேன்

வேசியை காப்பாற்றும் நல்ல பண்பு கொண்டவர்,ஆனால் கன்னித்தன்மை போய்விட்ட பெண்ணை (அது மருத்துவரிடம் நிரூபிப்பதல்ல,இவர்களுக்கு தெரிந்த முறைப்படி சோதனை) கல்லெறிந்து கொள்வதனை இவர் அனுமதிக்கிறார்.
என்னே ஒரு உயர்குணம்,உண்மையிலேயே ரொம்ப நல்லவர்தான்.?????????

இவ்வளவு மோசமான விசயங்களை கொண்டுள்ள பைபிளை நம்பும் அன்பர்களே யோசியுங்கள், பென்னடிமைக்கும் ஆணாதிக்கத்திற்கும் சப்போர்ட் செய்யும் ஒரு கூட்டத்தை ஏற்கமுடிகிறதா? , மேலும் அங்கு இனவெறி கருத்துகளும்,இன அழிப்பு கருத்துகளும் மண்டி கிடக்கின்றன அவை பல கட்டுரைகள் மூலம் இங்கே நம் தளத்திலேயே விளக்கப்பட்டுள்ளன.
சிந்திக்கவும்

/////இது இந்துக்களின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்று. அதைவிட முக்கியம், இன்று இந்தியாவில் ரத்த ஆறு ஓடுவதற்கான மிகபெரிய காரணங்களில் ஒன்று.
இது உண்மை நிகழ்வா, அல்லது கற்பனையா என்று பெரும் சர்ச்சை நிகழ்ந்து வருகிறது. சொல்லப்பட்ட நிகழ்வுகளின் மூலமும், அகழ்வாராய்ச்சி மூலமும், ஆவணபடுத்தப்பட்ட முறை மூலமும் பார்த்தால் இது கற்பனை என்றே தோன்றுகிறது//////

உங்கள் இயேசு என்ற கதாபாத்திரமும் கற்பனைதான் என்றே எங்களுக்கும் தோன்றுகிறது. உங்கள் கதாநாயகர் பிறந்ததாக கூறப்படும் இடத்தில் உள்ள கட்டிடத்தை இடித்து அங்கு வேறு யாரோ ஒருவர் தங்கள் மத கட்டிடத்தை கட்டியிருந்தால் நீங்கள் இங்கிருந்தே ஜெருசேலம் புனித தளத்திற்காக என்னென்ன சப்போர்ட் செய்வீர்கள்? அங்குள்ள நம்பிக்கையாளர்கள் என்னென்ன செய்வார்கள்?நீங்கள் சும்மா இருப்பீர்களா? உங்களுக்கு வந்தால் மட்டும் ரத்தம் எனகளுக்கு வந்தால் வெறும் சிவப்பு வியர்வையா என்ன?
அதனை வைத்து செய்யப்படும் அரசியலை பற்றி நான் பேசவில்லை, அதனை புனிதத்தலமாக நம்புபவருக்கு தான் மனதில் அதன் வலி தெரியும்.

உங்கள் அல்ப சந்தோசத்தை வெளியிட்டு மகிழ்ந்து கொள்வது தெரிகிறது.

உங்கள் கடவுளே தன்னை பணியாத பல மக்களை கொன்று குவிக்க சொல்லி இருக்கிறாரே அதுவும் உங்கள் புனித நூலிலேயே (?) ஆவணபடுத்தபட்டிருக்கிறதே.

///////தங்கள் தங்கைக்கும், மகளுக்கும் ராமனை போல வரன் தேடுபவர்களே, உங்களிடம் சில கேள்விகள்:

பெற்றோர் பேச்சை கேட்டுக்கொண்டு, கட்டிய மனைவியை (உங்கள் மகளை, சகோதரியை) கொடுமை படுத்திய மருமகன்களுக்கும் (மற்றும் மச்சான்களுக்கும்), இந்த ராமனுக்கும் என்ன வித்தியாசம்? அனைவரும் தன்னை நம்பி வந்த தன் மனைவியின் நலன் கருதாமல், தங்கள் பெற்றோரின் வாக்கை குருட்டுத்தனமாக ஏற்றுக்கொண்டு செயல் பட்டவர்களே. பார்த்து பார்த்து கட்டிகொடுத்த பெண், பரதேசியாய் கானகம் போவதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? சீதா, விரும்பியே கானகம் போனார் என சப்பைக்கட்டு காட்டுபவர்களே, எந்த பெண்தான் அப்படி போகமாட்டாள்? அவளுக்கு கொடுக்கப்பட்ட வைப்பேன்ன? ஒன்று வாழாவெட்டியாய் இருப்பது, அல்லது, கணவனோடு கானகம் செல்வது. நடப்பது அநீதி என்று தெரிந்தும், பாதிக்கபடப்போவது தன் மனைவி என்று தெரிந்தும், (தன் தகப்பன், அப்படி போக தேவையில்லை என்று தனிமையில் தெரிவித்தும்) தன் பெயருக்காக, புகழுக்காக கானகம் போனவனை என்னவென்று சொல்லுவது. இதில் (கடவுளாக கருதப்பட்ட) ராமன், யாரை திருப்தி படுத்தினான்? கூனியால் ஏமாற்றப்பட்ட, பொறாமைக்காரியான தன் சிற்றன்னையை திருப்தி படுத்தினான் (ஆனால் அதுவே அவள் விதவை ஆவதற்கும் காரணமானது)/////////

உங்களின் மனதில் வரட்டுத்தன இந்திய பண்பாட்டுக்கு எதிரான ஆபிரகாமிய துவேசம் நன்கு தெரிகிறது.
கணவனுக்கு திடீரென தொழிலில் நட்டம் தன்னிடம் உள்ள சொத்து எல்லாவற்றையும் இழந்து விட்டு குடிசைக்கு வரும் நிலை அப்போது கட்டிய மனைவி என்ன செய்ய வேண்டும்?
ஓர் மன்னன் போரில் தோற்று நாட்டை இழந்து காட்டில் பிழைக்க வேண்டிய சூழ்நிலை அப்போது அந்த மனைவி என்ன செய்யவேண்டும்? அதனைத்தான் சீதை செய்தால்,

அன்பிற்பாற்பட்டு ஒரு மனைவி கணவனுடன் வாழ்வது உங்களுக்கு,உங்கள் கூட்டத்துக்கு குதர்க்கமாகத்தன் தெரியும் ஏனென்றால்,_____________

do you think , joining with new partner like western culture is best practice? sorry this thought is full of abrahaamic ,you cannot expect such a thing from an indian.

சத்தியம் என்பதும் சத்தியவாக்கு என்பதும் வெறும் பைபிளில் எழுத்து வடிவில் பார்ப்பவர் தான் நீங்கள், பின் எப்படி தன தந்தை செய்த சத்தியத்தை காக்க கானகம் செல்ல துணிந்த அந்த சத்தியபுத்திரனின் சத்யமான செயல் உங்களுக்கு புரியபோகிறது?
ஐயா சத்தியம் என்பதை வெறும் வார்த்தையிலே எழுத்திலே இல்லாமல் செயலிலே செய்து காட்டியவன் ஐயா ராமன்.
சிற்றன்னையை திருப்திபடுத்த அல்ல சத்தியத்தை சத்தியமாக வாழவைக்க நீதி நேர்மையை திருப்திபடுத்த.

////கடவுளாக வழிபடும் அளவில் இவர் என்ன செய்தார் என்று யாரவது தெளிவாக எடுத்துரைத்தால் மகிழ்வேன். /////

he no need to do any miracle (as your jesus did in your stories) and record for accepting him as a god, because according to hindus (vaishnavaas) he is god and born as a human being to teach morals.he is the universe for vaishnavaas.

he is not accepted as a god for his amanushya jobs.

அன்புக்குரிய‌ திரு. சிவ‌ன‌டியான் அவ‌ர்க‌ளே,

நாம் முன்பே ப‌ல‌முறை குறிப்பிட்ட‌து போல‌ பெரும்பாலான‌ இந்திய‌ர்க‌ளை அமைதியான‌ வ‌ழியில் இருந்து மாற்றி, மோத‌ல் பாதைக்கு இழுப்ப‌துதான் ம‌த‌ வெறிப் பிர‌ச்சார‌க‌ர்க‌ளின் குறிக்கோள். என‌வே க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ வேண்டும்.

இராம‌ரின் வாழ்க்கை புனைவா, உண்மையா என்ப‌தைப் ப‌ற்றி த‌னியாக‌ க‌ட்டுரையே வெளி இட்டு உள்ளோம்.

ந‌ள சேது என‌ப் ப‌டும் இந்த‌ பால‌ அமைப்பை அக‌ழ்வாராய்ச்சி செய்ய‌ வேண்டும் என‌ சென்னை உய‌ர் நீதி ம‌ன்ற‌ம் சொல்லி உள்ள‌து. அதை உச்ச நீதி ம‌ன்ற‌மும் சுட்டிக் காட்டி ய‌து. ஆனாலும் இந்தியாவில் ம‌த‌ ச‌கிப்புத் தன்மையை அழித்து, ம‌த‌ வெறியை ப‌ர‌ப்பும் பிர‌ச்சார‌ திட்ட‌த்துக்கு க‌முக்க‌ ஆத‌ர‌வு கொடுக்கும் சில‌ வ‌லிமை வாய்ந்த‌ ச‌க்திக‌ள் ஆராய்ச்சிக‌ள் ந‌டை பெற‌ முட்டுக் க‌ட்டை போடுவ‌தாக‌ ம‌க்க‌ள் க‌ருதுகின்ற்ன‌ர்.

எனவே இராம‌ர் வாழ்க்கை உண்மையில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வாக‌ இருக்க‌ வ‌லுவான வாய்ப்புக‌ள் உள்ள‌ன என்றே நான் க‌ருதுகிறேன்.

/////மேலும் ராவண வதம் கூட, மக்கள் நல்வாழ்வுக்கென்றில்லாமல், தன் மனைவியை காப்பாற்றவே ராமன் செய்தார்./////

பின்னே என்ன ஒரு மனைவியை கவர்ந்தவனுக்கு பெருந்தன்மையுடன் இன்னொரு மனைவியை திருமணம் செய்து கொண்டு அவளையும் கொடுக்க வேண்டுமா?
ஆண்மகன் போரில் அவனை கொன்று தன மனையாளை காப்பாற்றத்தான் வேண்டும் அதைத்தான் அவன் செய்தான்.
ராவணன் சிறந்த சிவபக்தன் சாமகானத்தில் எக்ஸ்பெர்ட்டாம்,சதுர் வேதி, ராஜஸ்தானிலுள்ள மாலி பிராமணர்கள் அவனுடிய வம்சாவளியினராக கூறிக்கொள்கிறார்கள். சிவபக்தியில் இன்றுல்லோருக்கேல்லாம் முன்னோடி, அனால் ராஜ்யத்தை பெற்றதே அண்ணன் குபேரனை அடித்து துரத்திவிட்டுதான். அனால் அவன் பிறன் மனையை கவர்ந்த குற்றத்திற்காக தன வலிமைகளையும் சக்திகளையும் இழந்து தர்மத்தினால் கொல்லபட்டான். இங்கு எவ்வளவு பெரிய பக்தனாக இருந்தாலும் பாவம் செய்பவன் நேர்மையற்றவன் நிலை இப்படித்தான் நடக்கும்

/////சிவன் பிரம்மாவின் சாபத்தினால் பூவுலகில் பிச்சையெடுக்கும் தமிழ் படங்கள் கூட அக்காலகட்டங்களில் வெளிவந்திருந்தன. தொலைக்காட்சியில் கூட சமீபத்தில் ஒளிபரப்பினார்கள். சிவனுக்கு பார்வதி, கங்கா என இருமனைவிகள். சிவன், விஷ்ணு, பிரம்மா, இவர்களிடையே எப்போதும் குரோதமும் போட்டியும் உண்டு/////
எங்கே எப்போது கோபமும் குரோதமும் வந்தது? சங்கர நாராயணர் வழிபாடு இங்கு உண்டு, ஐயப்பன் வழிபாடே சைவ வைணவ இணைப்பு வழிபாடே, ஏன் இந்த புத்தி உங்களுக்கு அசோக்கு?
எங்காவது ஒரு சிவனும் வைணவனும் சண்டையிட்டு பார்த்ததுண்டா? ரோமன் கத்தோலிக் பிரிவினரை வம்பிழுக்கும் ப்ராட்டச்டண்டுகளை எனக்கு தெரியும்.
பிரதோஷ சிவா வழிபாடும்,ஏகாதசி பெருமாள் வழிபாடும் உள்ளவர்கள் தான் இந்துக்கள், விநாயகர் சதுர்த்தியும் (காணபத்தியம்) சரஸ்வதி பூஜையும் (சாக்தம்) தீபாவளியும் (வைணவம்) சிவராத்திரியும் (சைவம்) கந்தர்சச்டியும், கார்த்திகையும் (கௌமாரம்) , பொங்கலன்றும்,சிலர் தினந்தோறும் சூரிய பூஜையும் எல்லா இந்துக்களுக்கும் பொதுவானதாக இருக்கும் போது ஏன் இப்படி பிரித்தால நினைக்கும் சூது எண்ணம் உங்களுக்கு?
உங்களுக்கு தான் இந்து மதத்தின் மீது பொறாமையும் கோபமும் குரோதமும்

////////இறைவனை கூட நம்பாதே, நீ உன்னையே நம்பு என்பதே இந்துக்களின் ஆன்மீகமாயிற்று. இதில் சிரிப்பிற்குரிய காரியமென்னவென்றால் நக்கீரன் ஒரு மொழி பண்டிதன், மருத்துவனோ அல்லது கூந்தல் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு தொழிலை உடையவனோ அல்ல. தனக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தில், தான் யூகித்ததே சரி என்று எல்லாம் வல்ல இறைவனிடம் (?) சண்டையிடுவதை ஊக்குவிக்கிறது இந்து மத ஆன்மிகம்///////
வள்ளுவர் என்ன மருத்துவரா? அவர் எப்படி நோய் என்ற அதிகாரத்தை எழுதினர்? குழந்தை பெறாத அவர் மக்கட்செல்வம் பற்றி எழுதினார்?
அரசனா? அரசாட்சி பற்றி எழுதினார்? அவர் என்ன பல்துறை வித்தகரா? எப்படி எல்லா தலையப்பிலும் எழுதினார்?
சர்வாதிகார கடவுளை யாம் ஏற்பதில்லை, அனால் அவருக்கு உருவம் எடுக்க உரிமை இல்லை என்றும் நாம் பத்த்வா போடுவதில்லை.பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று மணத்தை அப்படி படைக்காத இறைவன் திருவிளையாடலாக செய்ததுதானே தவிர அதற்காக ஒரு பாவத்தை அந்த வம்சத்துக்கே கொடுக்கவில்லை

32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவான் 8 :32 sathyam eanna vendru poriyamal pesuvathu nallathu alla

Leave a comment

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 45 other subscribers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09