Thiruchchikkaaran's Blog

தலைப்பில் Religious Harmony, Religious tolerance, Equality, Human rights, Civilisation, ஒன்றுமே புரியவில்லை உங்களின் நிலை….

Posted on: March 2, 2011


மத நல்லிணக்கம், மத சகிப்புத்தன்மை, நாகரீகம், மக்கள்  உரிமை,  என்று போடுகிறீர்கள், ஆனால் யூதர்களின் கடவுள் இனப் படுகொலைக்கு திட்டம் தீட்டி செயல் படுத்தியதாக சொல்லப் பட்டுள்ள கோட்பாட்டோடு இணக்கம் காட்டாதது ஏன் என  என்று வியக்கிறார் நமது நண்பர்.

-உலகத்தைப் படைத்த கடவுளுக்கு யூதர்களுக்கு என்று புதியதாக ஒரு நிலத்தை படைத்துக் கொடுக்க இயலாதா, இன்னொரு இனத்தை அழித்து அந்த நிலத்தைப் பிடுங்கி கொடுக்க வேண்டுமா?- என்ற நமது முந்தைய கட்டுரைக்கு நண்பர் இக்பால் செல்வன் இந்தப் பின்னூட்டத்தை அனுப்பி இருக்கிறார்

// திருச்சியில் எந்த ஊரு நீங்க !!! ஸ்ரீரங்கமோ ? சங்கராச்சாரியரை பகுத்தறிவாதிகாப் பார்க்கத்தெரிந்த உங்களுக்கு ஆபிரகாமிய கடவுளை ஒரு விஞ்ஞஆனியாகப் பார்க்கத் தெரியவில்லையே ஐயகோ !!! என்னே பகுத்தறிவு !!! இதில் தலைப்பில் //Religious Harmony, Religious tolerance, Equality, Human rights, Civilisation, Spiritualism // ஒன்றுமே புரியவில்லை உங்களின் நிலை……….//

எந்த ஒரு மதத்தையும் நாம் வெறுக்கவில்லை, 

எல்லா  மதங்களையும் ஆக்க பூர்வமாக அணுகி அவற்றில் இருக்கும் நல்ல கோட்பாடுகளைப் பாராட்டுகிறோம்.

இஸ்லாத்தில் ஏழைகளுக்கு உதவுவது, குடிக்கக் கூடாது, சூதாடக் கூடாது … போன்ற சிறந்த கோட்பாடுகள் உள்ளன. அவற்றைப் பாராட்டுகிறோம். அவர்கள் தொழும்போது அவர்களின் அர்ப்பணிப்பை உணர்கிறோம், அவர்களின் தொழுகையை வெறுக்கவில்லை, பாராட்டுகிறோம். இது நம்முடைய நிலைப் பாடு மட்டும் அல்ல , காந்தி, விவேகானந்தர் முதல் எட்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக வாழும் இந்திய சமுதாயத்தின் மனப் போக்கு.

ஆனால்  காபிர்கள் மீது போர் தொடுக்க வேண்டும், அவர்களை திம்மிகள் ஆக்க வேண்டும்,  கட்டாய மத வரி விதிக்க  வேண்டும், என்பதை எல்லாம் மத நல்லிணக்கம் என்ற பெயரில் ஒத்துக் கொள்ள இயலாது. பிடரிகளை வெட்டுங்கள், விரல் நுனிகளை வெட்டுங்கள் என்று எல்லாம் பின்னூட்டங்களில்  தலங்களில்  எழுதி உள்ளனர். மனைவியை விவாகரத்து செய்து  வீட்டை விட்டு விரட்டுவது, குழந்தைகளை விட்டு விட்டு அவள் போக  வேண்டும்- இதை எல்லாம் எப்படி ஆமாம் சாமி போட்டு தலை ஆட்ட முடியும்?

அதே போல இயேசு கிறிஸ்துவின் சமரச விட்டுக் கொடுக்கும் கருத்துக்கள் உள்ளிட்ட பல கருத்துக்களை பாராட்டுகிறோம், அவரை எந்தப் பிரிவினருடனும் சேர்ந்து அவர்கள் முறையிலே வணங்க தயார் என்று பல முறை எழுதி விட்டோம்.

உலகில் எல்லோரும் கிறிஸ்துமஸ், ஈத் திருநாள், தீபாவளி  கொண்டாடுவது நல்லது,  என்று எழுதி இருக்கிறோம்.

ஆனால் யூதர்கள்  மட்டும்  இன அழிப்பு செய்யலாம், அவர்களுக்கு இன அழிப்பு செய்து அடுத்தவர் நிலத்தைப் பிடுங்கிக் கொள்ள கடவுள்தான் திட்டம் போட்டுக் கொடுத்து உதவி செய்தார் என்று சொல்லும் கோட்பாட்டை ஒத்துக் கொள்வது அபாயகரமான அக்கிரமத்துக்கு  அடி பணிதல் ஆகும்.

இன்றைக்கு உலகில் இருக்கும் மத ரீதியிலான வெறி, பிற மத வழிபாட்டு முறைகளின் மீதான வெறுப்புணர்ச்சி  பிற மதங்களின் வழி  பாட்டுத் தளங்களை இடிப்பது, பிற மதங்களைஇருக்க விடாமல் செய்ய வேண்டும் என்கிற துடிப்பு, ஆகியவற்றை எல்லாம் உலகிலே  முதலில் உருவாக்கியது யூதர்களே என்பதைத் தானே இன்று அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர். 

அவர்களின் அதே கோட்பாட்டை தான் கத்தோலிக்கரும், புராடஸ்டந்து மற்றும் இஸ்லாமியரும் பின்பற்றினர்!

 யூதர்கள் தங்கள் இன நன்மைக்காக பிற இனங்களை எல்லாம் வெட்டி வீழ்த்த உருவாக்கிய இன அழிப்புக் கோட்பாடு பூமராங் போல அவர்களையே வந்து தாக்கியது. 

இதை இன்னும் நியாயப் படுத்தி, அப்படித்தான் ஒத்துக்கோ என்றால் -இது இரத்த ஆறு ஓட விடும்   கோட்பாடு. 

இஸ்லாமியருக்கு ஏன் அமேரிக்கா மீது கடுப்பு , அவர்கள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை ஆதரிப்பதால் தானே?  

இன்னும் சொல்லப் போனால் இஸ்ரேலிய சிந்தனையாளர்களில் ஒரு பிரிவினரே, இன அழிப்பு எல்லாம் தப்பு, ஜோஷுவா செஞ்சது சரி இல்லை, அதைப் படிக்கும் போது மனசுக்கு கஷ்டமா இருக்கு  என்று எழுதுகின்றனர்.

இப்படி எழுதுபவர்களில் ஒருவர் நோபெல்  பரிசு பெற்ற  யூதர். இன்னும் சில யூதர்கள், ஜோஷுவா, மோசஸ், இன அழிப்பு எல்லாமே சும்மாங்க, எதுக்குமே ஆதாரம் இல்லை, நாங்கக் ரொம்ப நல்லவங்க என்று ஒட்டு மொத்தமாக கை கழுவுகின்றனர். இப்படியாக இந்த இடம் எங்களுக்கு சொந்தம், கடவுள் கானானியரைக் கொன்னுட்டு இந்த எடத்தை எடுத்துக்கச் சொன்னாரு, சாமியைப் போய்க் கேளு என்ற ரீத்யிலே ஒரு பக்கமும்… அதெல்லாம் இல்லைங்க, யாரோ எழுதி வைச்சது என்று இன்னொரு பக்கமுமாக இரட்டை விளையாட்டு நடக்கிறது.

ஆனால் யூதர்களை கட்டம் கட்ட வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. ஒவ்வொரு யூதக் குழந்தையையும் பார்க்கும் போது என மனதில் அன்பே வருகிறது , யூதர்களை நாம் வெறுக்கவில்லை, ஆனால் அவர்கள் உருவாக்கிய மத வெறி, இன வெறி இன்றைக்கும் உலகம் முழுவதிலும் மதப் பூசலை , சமூக  மோதலை உருவாக்கி விட்டது என்பதையே எடுத்துக் காட்டி, அந்தக் கொளகைகளை புனிதப் படுத்தி நியாயப் படுத்துவதை நாகரிக சமுதாயம் ஏற்காது என்றே சொல்கிறோம்.

என் மதம் மட்டுமே இருக்க வேண்டும், பிற மதங்கள்  அழிக்கப்  பட வேண்டும்  என்கிற வெறி உணர்ச்சி ஒருவர்  மனதில் இருந்தால் எப்படி மத சகிப்புத் தன்மை , மத நல்லிணக்கம் இவற்றுக்கு எல்லாம் மனதில் இடம் இருக்கும்? உன் மதத்தின் மீது உனக்கு எப்படிப் பற்று இருக்கிறதோ, அப்படித் தான் இன்னொருவனுக்கும். நான் மட்டும் அவன் வழிபடும் கடவுளைத் திட்டுவேன் என்றால், அவனும் பதிலுக்கு அதையே திருப்பி செய்தான். உலகிலே கோடிக்  கணக்கானவர் மாண்டது சகிப்புத் தன்மை இன்மையால்  தான்.

முதலில் மனிதர்களைப் புரிந்து கொள்ளுங்கள், அப்புறம் உங்கள் மதத்தைப் பற்றி உபதேசம் செய்ய வாருங்கள்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: