Thiruchchikkaaran's Blog

உலகத்தைப் படைத்த கடவுளுக்கு யூதர்களுக்கு என்று புதியதாக ஒரு நிலத்தை படைத்துக் கொடுக்க இயலாதா, இன்னொரு இனத்தை அழித்து அந்த நிலத்தைப் பிடுங்கி கொடுக்க வேண்டுமா?

Posted on: February 25, 2011


கடவுள் வானத்தையும், பூமியையும் படைத்து பிறகு வெளிச்சத்தைப் படைத்தார், பிறகு புல் பூண்டுகளைப் படைத்தார் … இப்படியாக ஆறே நாட்களில் எல்லவாற்றையும் படைத்து ஏழாவது நாள் கடவுள் ரெஸ்ட் எடுத்து விட்டார் என்று எழுதி உள்ளனர். இவ்வளவு வல்லமை உள்ள கடவுளிடம் மோசஸ் சென்று யூதர்கள் பிழைக்க என்ன வழி என்று கேட்கிறார்.

சரி கவலைப் படாதே இதோ உங்களுக்காக ஒரு புதிய நிலப் பரப்பை உருவாக்கித் தருகிறேன்.அங்கே ஆறுகள் பாயும் சமவெளிகள் இருக்குமாறு படைப்பேன், நீங்கள் போய் அங்கே வாழ்ந்து கொள்ளுங்கள் என்றுசொல்லி இருந்தால் , அடக் கடவுள் என்றால் இப்படி இருக்க வேண்டும் எனப் போற்றலாம். ஆனால் ஏற்க்கனவே பல இனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்தை பிடித்துக் கொள்ள  சொல்லி, அந்த இனங்களை சுத்தமாக அழித்து விடச் சொல்லிப் பிளான் போட்டு கொடுத்து இருக்கிறார்.

யூதர்கள் எகிப்து நாட்டில் எகிப்தியரிடம் அடிமையாக இருந்தார்களாம். நாம் அறிந்த வரையில் இதற்கான குறிப்பு எதுவும் எகிப்திய வரலாறில் இல்லை. மொத்தத்தில் யூதர்கள் செங்கட லை ஒட்டிய  ஏரியாவிலே அங்கும் இங்கும் அலைந்த வண்ணம் இருந்திருக்கின்றனர் எனக் கருதலாம்.

யூதர்களும் வாழ வேண்டியவர்கள் தானே, அவர்கள் தங்களுக்கு இடம் தேடியதில் தவறு இல்லை. யாரும் குடி ஏறாத ஒரு நிலப் பரப்பில் அவர்கள் போய் உழுது பிரிடோ, பல தொழில்களை  செய்தோ வாழ்ந்தால் நல்லதுதானே.

லார்ட் ஆப் இஸ்ரேல் எனப்படுபவரிடம் மோசஸ் யூதர்கள் பற்றிதெரிவித்து இருக்கிறார். கடவுள் ஒன்றன் பின் ஒன்றாக பல இனங்களை  அழிக்க உதவி செய்ததாக விவிலியம் சொல்லுகிறது.

    4. கர்த்தர் மோசேயை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவன் ஜனங்கள் எல்லாரையும், அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே வாசமாயிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தபடியே இவனுக்கும் செய்வாய் என்றார். 

    35. அப்படியே ஒருவரும் உயிருடன் மீதியாயிராதபடிக்கு அவனையும், அவன் குமாரரையும், அவனுடைய சகல ஜனங்களையும் வெட்டிப்போட்டு, அவன் தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்.

    Numbers 21
    அப்படியும் இவர்கள் பிடித்தவை எல்லாம் பாலைவனப் பகுதிகள், அங்கே பாலும் தேனும் ஓடுவது அப்புறம் இருக்கட்டும். முதலில் தண்ணிக்கே ததிங்கினத்தோம்!

உண்மையிலேயே கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் சர்வ வல்லமை உடையவர் என்றால் , அவர் பூம்புனல் பொங்கிப் பாயும் ஆறுகள் ஓடும் செழிப்பான  பகுதியை புதியதாக உருவாக்கித் தர முடியாதா? முன்பு படைத்தார் என்று சொல்கிறார்களே, அந்த படைக்கும் சக்தி அப்போதே முடிந்து விட்டாதா? மறுபடியும் படைக்க இயலாதா? இப்படி பாலைவனப் பகுதியை அடித்துப் பிடுங்கித் தர வேண்டுமா என்று எல்லாம் சிந்தனையாளர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். உண்மையிலே மோசஸ் சந்தித்து கடவுளையா, அல்லது யூத இனத்தின் நன்மையில் மட்டும் அக்கறை உடைய மற்ற இனங்களை அழித்தாலும் பரவாயில்லை என்று எண்ணுகிற யூத இனத்தின் மூப்பரையா என்றும் வினாக்களை எழுப்புகின்றனர்.


இன்றைக்கும் அதே பாலைவனப் பகுதியில் இதே விவிலியத்தை ஆதரமாகக் காட்டி இந்த நிலம் எங்களுக்கு சொந்தம் என்று சொல்லி சிறுகச் சிறுக பாலஸ்தீனியர்களின்  நிலத்தை ஆக்கிரமித்து வருகின்றனர்!


ஹிட்லர்  இன அழிப்பு செய்தது மன்னிக்க முடியாத கொடூரக் குற்றம். ஹிட்லராவது தன்னுடைய நிலத்தில் குடி புகுந்த இன்னொரு இனத்தை இன அழிப்பு செய்தான்.  ஆனால் இந்தக் “கடவுளோ” இன்னொருவர் இடத்திலே புகுந்து இன அழிப்பு செய்யச் சொன்னதாக நாம் சொல்லவில்லை- நூல்கள் சொல்லுகின்றன.

ஆமையா, கடவுள் சொன்னார், யூதர்கள் இன அழிப்பு செய்யலாம், என்று இங்கே இருந்து வக்காலத்து வாங்குகின்றனர்.


ஹிட்லரையும், , ராஜ பக்ஷேவையும், பிரேமதாச, லலித் அதுலத் முதலி…. இவர்களை எல்லாம் நாம் வன்மையாக கண்டிக்கிறோம். அவர்கள் செய்த கொடூரத்தை நியாயப் படுத்தவோ, ஆதரிக்கவோ இல்லை. ஆனால் மோசஸ் , தொடங்கி ஜோஷுவா… வழியாக் இன்று வரை நடை பெரும் இன அழிப்பு மட்டும் புனிதமாக சொல்லி, இன அழிப்பு கோட்பாடு ஆதரவுப் பிரச்சாரம் நடக்கிறது. இதுதான் மோசசின் அதிரடி பிளான். அதாவது என்ன கொலை செய்தாலும், கன்னிப் பெண்களை தூக்கிப் போய் அனுபவிக்க வைத்துக் கொண்டாலும், தான் கடவுளைப் பார்த்தாக சொல்லி, தன்னை தூதன் என்று சொல்லி விட்டால் அதைப் புனிதமாக காட்டி விடலாம், என்பதாக ஆராய்ச்சியாளர்கள்  கருதுகின்றனர்.!

(தொடரும்)

Advertisements

12 Responses to "உலகத்தைப் படைத்த கடவுளுக்கு யூதர்களுக்கு என்று புதியதாக ஒரு நிலத்தை படைத்துக் கொடுக்க இயலாதா, இன்னொரு இனத்தை அழித்து அந்த நிலத்தைப் பிடுங்கி கொடுக்க வேண்டுமா?"

சபாஷ், நல்ல நியாயமான கேள்விகள் இவற்றுக்கு எப்போதும் நேரடியான பதில் கிடைக்கபோவதில்லை சகோ,இதெல்லாம் இந்த பைபிளில் உள்ளவையா? இந்த நூல் இனி அவசியம் படிக்கவேண்டும் என்று தோன்றுகிறது. பகுத்தறிவாளர்கள் இதையெல்லாம் கேள்வி கேட்கமாட்டார்கள்.

Dear Bro Sivanadiyaan, we find all these from Bible.

எப்படித்தான் உங்களுக்கு கடவுளை அடிமையாக பார்க்கவேண்டி ஆசை வருகிறதோ தெரியவில்லை. இங்கே உள்ள ஆண்ட சராசரமும் ஆண்டவன் சொத்துதான். அவரே சர்வத்திற்கும் அதிகாரம் உடையவர் (உடனே நீங்கள் சர்வாதிகாரி என்று ஆரம்பிப்பீர்கள்). கர்த்தர் தன்னுடைய பொருளை தான் யாருக்கு கொடுக்க விரும்புகிறாரோ அவருக்கு கொடுப்பார். அதைக்கேட்க்க எனக்கும் அதிகாரமில்லை, உமக்கும் அதிகாரமில்லை. நீர் சொல்லும்படி, உம் விருப்பபடி வேலைகள் செய்ய கடவுள் ஒன்றும் அலாவுதீன் பூதமல்ல.
மனிதன் கடவுளுக்கு கீழ்ப்படியவேண்டுமா?
கடவுளுக்கு மனிதன் கீழ்ப்படியவேண்டுமா?
சாதாரண மனிதர்களை, கற்பனை கதாபாத்திரங்களை (உமது என்னவோட்டதிர்க்கு ஒத்துப்போகும் ஒரே காரணத்தால்) கடவுள் என்று துதிக்கும் உமக்கு மெய்யான தேவனை புரிந்துகொள்ளமுடியாதது பெரியவிஷயமில்லை.
நிறைய எழுதுங்கள், தேவனை அறியாத ஒரு மனிதனது நிலை (மனநிலை, ஆன்மீக நிலை) எவ்வளவு தாழ்ந்து போகும் என்று உம்மை பார்த்து உலகம் தெரிந்து கொள்ளும். மொத்தத்தில் உங்கள் எழுத்துக்கள் எனக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. உங்ககிட்ட நிறைய எதிர்பார்கிறேன்.
நன்றி,
அசோக்

கானானியர், எத்தூசியர் , எபூசியர் தொடங்கி, இன்று பாலஸ்தீனியர் வரை பல இன அழிப்புகள், போர்கள் கடவுள் பெயரால் நடத்தப் பட்டு விட்டன. அதை எல்லாம் புனிதம் போலக் காட்ட அன்றைக்கு யூதர்கள் போட்ட திட்டம்,
இன்று வரை பல பேர் வக்காலத்து வாங்கி, கடவுள் தான்யா, யூதர்கள் இனப் படுகொலை செய்யலாம் என்று வாழ்த்து படுவதற்கு சாட்சியாக் இருக்கிறது உங்கள் பின்னூட்டம். மொத்தத்திலே இனப் படுகொலையில் துடித்து சாகும் அப்பாவிக்கு திண்டாட்டம், இனவெறி, மதவெறியை தூண்டும் கும்பலுக்கு கொண்டாட்டம்.

//கானானியர், எத்தூசியர் , எபூசியர் தொடங்கி, இன்று பாலஸ்தீனியர் வரை பல இன அழிப்புகள், போர்கள் கடவுள் பெயரால் நடத்தப் பட்டு விட்டன. அதை எல்லாம் புனிதம் போலக் காட்ட அன்றைக்கு யூதர்கள் போட்ட திட்டம்//

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நீங்கள் இதை யூதர்கள் போட்ட திட்டம், தேவ கட்டளை அல்ல என்று சொல்கிறீர்கள்?

தேவகட்டளை என்ற பெயரால், இன அழிப்பு செய்து அந்த இடங்களை ஆக்கிரமிப்பது நடந்து இருக்கிறது.

இன்றைக்கும் கல்லூரியில் படிக்கும் இஸ்ரேலிய மாணவி கூட, எங்களிடம் இல்லாத அந்த நிலப் பகுதியும் எங்களுக்கு சொந்தமானது, அதனால் நாங்கள் அந்த இடத்திலே புதிய குடி இருப்புகளை உருவாக்குவோம் என்று பி.பி.சி.யில் பேட்டி கொடுக்கிறார். எப்படி அந்த இடம் உங்களுக்கு சொந்தமாகும் என்றால், பைபிளில் சொல்லி இருக்கிறது என்கிறார்.

எனவே அன்று முதல் இன்று வரை இன அழிப்புகளை செய்து இடங்களைப் பிடிக்கிறார்கள், கேட்டால் தேவ கட்டளை , கடவுள் வாக்கு தத்தம் செய்தார் , பிராமிஸ்டு லேண்டு என்று சொல்லிக் கொண்டே ஏவுகணைகளை செலுத்தி இரத்த வெள்ளத்தை உருவாக்குகிறார்கள். இந்த ஆதாரம் தான் கண் முன்னே பார்க்கிறோமே.

இந்த அடாவடிக் கற்கால காட்டு மிராண்டிக் கோட்பாட்டுக்கு நீங்கள் ஆதரவு தரும் அளவுக்கு உங்களை மூளை சலவை செய்வதில் வெற்றி பெற்று விட்டனர்.

கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் எல்லாம் வல்லவராக இருந்தால், அவர் ஏன் தனியாக ஒரு புதிய நிலப் பகுதியை புதிதாகப் படைத்து தரவில்லை. அப்படி புதியதாக படைக்க முடியவில்லை, ஏனென்றால் கடவுளும் இல்லை, தேவனும் இல்லை, ஆனால் கடவுள் பெயரால் சொல்லிச் சமாளித்துக் கொள்ளலாம் என்று இவர்களைக் கொன்று விட்டு அந்த நிலத்தைப் பிடித்துக் கொள் என்று சொல்லி விட்டார் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதை தெளிவு படுத்தித்தான் இந்தக் கட்டுரை முழுவதும் எழுதி இருக்கிறோம். கட்டுரையை முழுவதும் படித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். இன்னும் பல கருத்துக்கள் தனித் தனி கட்டுரைகளாக வர உள்ளன.

//ஆனால் கடவுள் பெயரால் சொல்லிச் சமாளித்துக் கொள்ளலாம் என்று இவர்களைக் கொன்று விட்டு அந்த நிலத்தைப் பிடித்துக் கொள் என்று சொல்லி விட்டார் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.//
மட்டமான லாஜிக்.
மனிதன் நினைத்தமாதிரி கடவுள் ஆடவில்லை என்பதால், கடவுளே இல்லை என்பது முட்டாள் தனம்.
மேலும் அரைகுறையாக நாலைந்து வாக்கியங்களை போட்டுவிட்டு அதை கட்டுரை என்று கூறிக்கொள்வது சிறுபிள்ளை தனத்தைவிட தரம் தாழ்ந்தது. ஒரு 8 ஆம் வகுப்பு மாணவன் உங்களைவிட நல்ல கட்டுரைகள் எழுதுவான். மெய்யான தேவனை நிராகரிக்கும் போது ஒரு மனிதனின் ஞானம் எவ்வளவு மங்கி போகிறது என்பதற்கு நீங்கள் உதாரணமாக இருக்கிறீர்கள்.

// Ashok kumar Ganesan //

ஏஞ்சாமி நம்ம விரதமெல்லாம் அவ்ளோ தானா..?
என்ன இருந்தாலும் நம்ம திருச்சிக்காரன அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியுமா?நம்மள விட்டா அவருக்குப் பேச்சு துணைக்கு யாரு இருக்கா..?

வாங்க சில்சாம், அது என்ன விரதம்?

என்ன பண்ணறது நண்பர் சில்சாம், அடுத்தவர் அழிவை காண மனம்வரவில்லை. இவர்கள் தப்ப ஏதாவது வழி கிடைக்காதா என்றே பார்கிறேன்.

சகோ திருச்சி,
உங்களையும் கர்த்தர் நரகத்தில் தள்ளபோகிறார் அவர்செய்வது பற்றி பைபிளில் உள்ளது பற்றி கேள்வி எல்லாம் கேட்க கூடாது அப்படியே ஏத்துக்கணும்
அண்ணன் பேச்சு ஒன்வே புரியுதா?
அவர் சர்வாதிகாரி அல்ல, அனால் அவரை பணிந்தவர்க்கு எதாவது வேண்டுமென்றால் அவர் இஷ்டப்படி அடுத்தவரிடம் குறிப்பை அவரை வணங்காதவரிடம் பிடுங்கி தான் தருவார் அது அவர் இஷ்ட்டம். அவர் எவ்வளவு பெரிய கடவுள் அவரால் ஒரு புது நிலத்தை உருவாக கூடிய சக்தி இருந்தும். தனக்கு எதிரானவர்களிடம் அடித்து பிடுங்கி தான் தருவார் அதெல்லாம் போயி நீங்க சர்வாதிகாரம்னு சொன்னா உங்களுக்கும் நரகம் தான்.
பிரகாசமான ஞானம் உள்ளவர்கள் எப்போதும் அந்த வழிப்பறி போன்ற செயல்களையும் கொலைகளையும் புனிதபோராகத்தான் போற்றுவார்கள்.
சர்வாதிகாரி அல்லாத????? தன்னிசைக்கேற்ப செயல்படும்,நியாமற்ற அந்த ……….{இங்கே தெய்வம் என்று டைப் செய்ய மனம் வரவில்லை}உடைய அடியார்கள்.
கொள்ளை அடித்ததையும் கொலை செய்ததையும் தெய்வத்தின் பெயர் சொல்லி {அதுவும் அவர் மெய்யான தேவனாம் }நியாயபடுத்த என்ன ஒரு மனம்.

ஒ அதுதான் அவர்கள் தேவன் என்ற அளவிலேயே வார்த்தையை உபயோகிக்கிறார்களா? தேவன் என்றால் தேவர்கள் போலனவர்களா சகோ?

நம் கணக்குப்படி தேவர்களுக்கு மேல் தெய்வம் அதற்கு மேல் இறைவன் ,கடவுள்,பரப்ரம்மம்
சரிதான் ஒரு தேவன் {தெய்வத்திற்கு ஒரு ஸ்டெப் கிழே} இப்படி எல்லாம் செய்வார் தான் அவர் நல்லதேவனாக இல்லாத பட்சத்தில்.

// ஆனால் சங்கராச்சாரியார் போன்றவர்கள பகுத்தறிவு அடிப்படையில் ஆன்மீகத்தை அணுகியவர்கள். சரியான இந்து மதத்தை கொண்டு வர முயற்சி செய்தவர்கள் //

திருச்சியில் எந்த ஊரு நீங்க !!! ஸ்ரீரங்கமோ ? சங்கராச்சாரியரை பகுத்தறிவாதிகாப் பார்க்கத்தெரிந்த உங்களுக்கு ஆபிரகாமிய கடவுளை ஒரு விஞ்ஞஆனியாகப் பார்க்கத் தெரியவில்லையே ஐயகோ !!! என்னே பகுத்தறிவு !!! இதில் தலைப்பில் //Religious Harmony, Religious tolerance, Equality, Human rights, Civilisation, Spiritualism // ஒன்றுமே புரியவில்லை உங்களின் நிலை……….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: