Thiruchchikkaaran's Blog

“கீழ்படிஞ்சுடு.. இல்லேன்னா நரகம்…கேள்வியா கேக்குற” – மிரட்டல் மூலம் இந்தியர்களை மத வெறி வலையில் சிக்க வைக்க இயலுமா?

Posted on: March 5, 2011


உலகின் மிகப் பழமையான சமுதாயங்களுள் ஒன்று இந்தியா.  

உலகத்திற்கு அமைதியை, அஹிம்சையை , மத நல்லிணக்கத்தை … இப்படி பல  நல்ல கோட்பாடுகளை தொடர்ந்து வழங்கும் சமுதாயமாக இந்திய சமுதாயமும் , ஆன்மீகமும் உள்ளன. இந்தியாவின் விட்டுக் கொடுக்கும், சமரச , நல்லிணக்க போக்குடைய மக்களும் அவர்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த சித்தர்கள், முனிவர்கள், அரசர்கள் போன்றவர்களுமே இத்தகைய தத்துவங்களை உருவாக்கினர்.

பெரும்பான்மையான இந்திய மக்கள் மத சகிப்புத் தன்மை கொண்டவர்களாக உள்ளனர். இன்றைக்கு உலகிலே பிற மத வழிபாட்டுத் தளங்களுக்கு செல்லத் தயங்காத மக்களைக் கொண்டது இந்திய சமுதாயமே.

 

 வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா நடக்கும் போது அங்கே உள்ள பாதிரியார் பல  மதத்தை சேர்ந்தவர்களும் அந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள் என்று பெருமையோடு குறிப்பிடுகிறார். பல  மதத்தை சேர்ந்தவர்கள் என்றால் மேரி மாதாவை முக்கிய தெய்வமாக கருதும் கத்தோலிக்கரும், மற்றும் தங்கள் மத்தில் குறிப்படப் படாத தெய்வமானாலும் பிற மத த்தினரின் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கும் நாகரீகம் கொண்ட இந்துக்களுமே என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இப்படிப்பட்ட இந்திய மக்களின் மனோபாவம் உலகில் உள்ள மற்ற மக்களுக்கும் எடுத்து செல்லப் பட வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்.

ஆனால் சிலர் உலகின் பிற பகுதிகளில்  நிலவும் மத  வெறியை, சகிப்புத் தன்மை இல்லாத மன நிலையை இந்தியாவில் புகுத்த விரும்புகின்றனர். அதற்க்கு அவர்கள் போடும் ரூட் என்னவென்றால் இந்திய மக்களை சிந்திக்க விடாமல் முடக்கி, கீழ்ப் படிதல் என்கிறதை காட்டி    இந்திய மக்கள கீழ்ப் படிதல் இல்லாதவர்கள், “கடவுளை” எதிர்த்து பேசக் கூடியவர்கள், என்று சொல்லி, நரகத்துக்கு போகப் போறாங்க என்று மிரட்டுவது.

மத வெறி நிலை நிறுத்தளின் முக்கிய காரணிகளாக உள்ளது கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று ஒத்துக் கொள்ளச் சொல்வது, அதற்குப் பிறகு அவர் பேரால் என்ன செய்தாலும் கீழ்ப் படிய வேண்டும் என்பது, அவர் பேரால் என்ன  சொல்லப் பட்டாலும் எதிர்த்துக் கேள்வியே கேட்க்கக் கூடாது என்று சொல்லி விடுவது. 

இந்த மூன்றுக்கும் ஒருவன் தயாராகி விட்டால், அவன் சிந்திக்க முடியாத அடிமையாக, எந்த ஒரு கொடுமையையும் , அநியாயத்தையும், அநீதியையும், அக்கிரமத்தையும் எதிர்க் கேள்வி இன்றி ஒத்துக் கொள்ளும் மன நிலைக்கு அவனை கார்னர் செய்வதுதான் இவர்கள் வழி.

இன வெறியாளர்  கடவுள் ஒரு இனத்தை மட்டும் வாழ வைக்க, பல இனங்களை அழிக்க உத்தரவிடுபவர் என்று சொன்னால் அதையும்  மறு பேச்சின்றி ஒத்துக் கொள்ள வேண்டும், மத வெறியாளர் பிற மத்தினர் மீது போர் தொடுக்க கடவுள் சொன்னதாக சொன்னால் அதையும் கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்ள வேண்டும், பிற மதக் கடவுள்களை இகழ்ந்து அவர்களின் வழி பாட்டுத் தளங்களை இடிக்க வேண்டும் என்று கடவுள் விரும்பியதாக சொன்னால, அதையும் எதிர்த்துக் கேள்வி கேட்க்கக் கூடாது.

இப்படியாக அமைதியாக எந்த மதத்தையும் வெறுக்காமல் , எல்லா மத விழாக்களிலும் பங்கு கொள்ளும் சராசரி  இந்தியனை மத வெறிக் கொடூரனாக்க  முரட்டடிமை ஆக்க மேற்கொள்ளும் முயற்சிகள் தான், கீழ்ப் படிய வேண்டும், கீழ்ப் படியாமை தவறு, எதிர்த்துக் கேள்வி கேட்பது தவறு என்று எல்லாம் இவன் தேவ தூஷணம் சொன்னான் என்பது  போல சொல்கிறார்கள்!

எட்டாயிரம் வருடத்த்துக்கு மேலாக அமைதி வழியில், சகிப்புத் தன்மையை மனதில் வைத்து, நல்லிணக்கத்தை செயல படுத்தி வரும் சமுதாயம் இந்திய சமுதாயம். இங்கே மத வெறியை பரப்ப முடியும் என்று கனவு காண வேண்டாம்.

5 Responses to "“கீழ்படிஞ்சுடு.. இல்லேன்னா நரகம்…கேள்வியா கேக்குற” – மிரட்டல் மூலம் இந்தியர்களை மத வெறி வலையில் சிக்க வைக்க இயலுமா?"

சிந்திக்க முடியாத அடிமையாக, எந்த ஒரு கொடுமையையும் , அநியாயத்தையும், அநீதியையும், அக்கிரமத்தையும் எதிர்க் கேள்வி இன்றி ஒத்துக் கொள்ளும் மன நிலைக்கு அவனை கார்னர் செய்வதுதான் இவர்கள் வழி//

அதே..

நான் கிறுஸ்தவளானலும், எனக்கே பல கேள்விகளுண்டு மதத்தில்..

jmms அவர்களே,

உங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

சகிப்புத் தன்மை , நல்லிணக்கம், சமத்துவம், சமரசம் ஆகியவை மனிதத்தின் நல் வாழ்வுக்கு உதவும் முக்கிய கோட்பாடுகளாக உள்ளன என்பதை நாம் அறிவோம். .

இயேசு கிறிஸ்துவின் மெசேஜ் சரியாகப் புரிந்து கொள்ளப் படவில்லை என்பதை நான் வருத்தத்துடனேயே தெரிவித்துக் கொள்கிறேன்.

யூத இனத்தை வாழ வைக்க வேண்டிய இக்கட்டில் இருந்த மோசஸ், அவருக்கு இருந்த இக்கட்டின் காரணமாக மிகக் கடுமையான கோட்பாடுகளை, தேர்ந்தெடுத்துக் கொண்டது ஒரு வகையான துரதிர்ஷ்டமே. மத்தியக் கிழக்கு பகுதிகளில் அக்காலத்தில் வாழ்ந்து வந்த மக்களின் கடுமையான வாழ்க்கை சூழ்நிலை, கரடு முரடாக எதிர் கொள்ளும் போக்கு ஆகியவற்றை சமாளிக்க இன அழிப்பு, மத வெறி, உடன் படிக்கை செய்யாமல் தீர்த்துக் கட்டுதல், இரக்கம் காட்டாதே… போன்ற கோட்பாடுகளை அவர் வகுத்துக் கொண்டார்.

அவருக்கு பின் வந்த இயேசு கிறிஸ்துவோ, மோசசின் கோட்பாடுகளை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை சொல்லி அவற்றுக்கு மாறாக இரக்கம் காட்டுங்கள், ஒருவன் ஒரு மைல் வரச் சொல்லிக் கட்டாயப் படுத்தினால், இரண்டு மைல் போ… என்பது போன்ற விட்டுக் கொடுக்கும் , சமரசக் கருத்துக்களை பிரச்சாரம் செய்தார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அககருத்துக்களை விரும்பாத யூதர்கள் இயேசு கிறிஸ்துவை புறக்கணித்து விட்டனர்.

பிறகாலத்தில் அவர் பெயராலே புதிய மதத்தை உருவாக்கியதில் முன்னிலை வகித்தது ம் யூதர்கள் தான். அவர்கள் மோசசின் கருத்துக்களை முன்னிலைப் படுத்தி, இயேசு கிறிஸ்துவின் பேராலே புராதன யூத மதக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் குடுத்து புதிய மதத்தை உருவாக்கி விட்டனர். அதோடு இவர்களின் சொந்தக் கற்பனைகளையும் கலந்து விட்டனர். யூத மதத்தை நவீனப் படுத்த வந்த இய்சு கிறிஸ்துவின் முயற்சிகளை ஒரே அடியாக முறியடித்து விட்டனர். இதானலே இவ்வளவு பிரச்சினையும்.

உண்மையிலே இயேசு கிறிஸ்துவின் மெசேஜ் என்ன, அவரின் பெயரால் மதம் உருவாக்கப் பட வேண்டும் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் நாம் நம்முடைய தளத்தில் விரிவாக எழுதுவோம், நாம் சொல்வது உண்மையா அவை இயேசு கிறிஸ்துவின் உண்மையான எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளதா இல்லையா என்பதை பற்றி சிந்தித்துப் பார்க்கலாம்.

உங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மீண்டும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் JMMS ,
உங்களுக்கு கிறிஸ்த்துவத்தில் கேள்விகள் இருந்தால், வேதத்தை ஆராய்ந்து பாருங்கள். நல்ல ஒரு வேத பண்டிதரிடம் கேளுங்கள்.
உங்கள் தளத்தையும் அதில் கிறிஸ்துவத்தை பற்றி நீங்கள் எழுதியுள்ளதையும் பார்த்தேன். நீங்கள் வேதத்தை அதிகம் வாசித்ததில்லை என்பது தெளிவாக தெரிகிறது. தங்களை கிறிஸ்துவர்கள் என்று கூறிகொள்ளும் சிலரின் வாழ்க்கையிலிருந்து கிருஸ்துவத்தை அறிய நினைகிறீர்கள். அல்லது, திருச்சிக்காரன் போன்றோரின் தளத்தை கண்டு அறிய நினைகிறீர்கள். அப்படியானால், தேவன் வேதத்தை கொடுப்பறேன்? நமது திருச்சிக்காரனை ஒரு கட்டுரை எழுத சொல்லி அதன் மூலம் தன்னை அறிய செய்திருப்பாரே.

தாம்பத்தியம் என்ற அற்புதமான விஷயத்தை இன்றைய மக்கள் எவ்வளவு கீழ்த்தரமாக வேசித்தனம், pornography , ஓரினசேர்க்கை என்று அசிங்கப்படுத்தி இருக்கிறார்களோ, அதை காட்டிலும் கிறிஸ்துவத்தை அசிங்கப்படுத்தியுள்ளனர். உங்கள் தளத்தில் நீங்கள் கேள்விகளை வைத்தால் நான் பதில் அளிக்க தயாராய் இருக்கிறேன். மேலும் நான் ஒரு பெரிய வேத பண்டிதனல்ல. உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் எனக்கு பதில் கொடுக்க முடியுமா என்றும் தெரியாது (வாழ்க்கையில் எந்த துறையில்தான் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கிறது?). ஆனால், கிறிஸ்துவம் ஒரு மெய்யான பாதை என்று புரிந்துகொள்ளும் அளவுக்கு பதில்கள் உண்டு. காழ்ப்புணர்ச்சி இல்லாமல், திறந்த மனதுடன் உங்கள் கேள்விகளுக்கு நான் விடையளிக்கிறேன். இல்லாவிட்டால் என்னை போன்ற ஒரு தீவிர இந்து, கிறிஸ்துவத்தை பரிகசித்தவன், இன்று அருள் நாதர் இயேசுவின் அன்பில் திளைக்கிரவனாய் இருப்பேனோ?
பலர் வேத வசங்களை திரித்து தன் சுய நலனுக்காய் கிறிஸ்துவத்தை கீழாகவும், கிறிஸ்துவத்தை மேலாகவும் காட்டுகின்றனர், தவறான வெளிச்சத்தில் காட்டுகின்றனர். வேத விளிச்சத்தில் நீங்கள் தேவனை தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள். ஏனெனில் தேடுகிறவன் ஒவ்வொருவனும் கண்டடைகிறான்.
நன்றி,
அசோக்

உண்மைதான் நண்பரே.
காரணம் என்னவென்றால் குருட்டு நம்பிக்கையாளா்களாக மக்கள் இருந்தால்தான் அந்த மதம் பிழைக்க முடியும். இல்லாவி்ட்டால் அழிந்து விடும். மக்கள் சிந்தித்து எதிர் கேள்விகள் கேட்க ஆரம்பித்து வி்ட்டால் இவர்களால் சரியான பதில் சொல்லத் தெரியாது. பதில் சொல்ல முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறது. இது சாத்தானின் தூண்டுதல். அதனால்தான் இப்படி கேள்விகள் கேட்கிறார்கள் என்று சாத்தானின் மேல் பழிபோட்டு விடுவர். இந்து மதம் மட்டும்தான் தர்க்க ரீதியாக , தத்துவங்களுடன் எவ்வகையான கேள்விகளுக்கும் பதில் சொல்ல தயாராக இருக்கிறது.

ராஜா அவர்களே,

உங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி!

இந்து மதம் பற்றி கட்டுரை எழுதுபவர்களும் குருவுக்கு கோவம் வந்தால் கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது, பாம்பு வந்து பாடம் சொல்லிக் கொடுத்தது,என்பது போன்ற பில்ட் அப்புகளை கொடுத்து வருவது உங்களுக்கு தெரியுமா?

//”இந்து மதத்தில், குரு என்பவர் கடவுளுக்கும் மேலே. அதனால்தான் குருவுக்குப் பிறகே இறைவனை வைத்தார்கள் நமது முன்னோர்கள். கடவுள் கோபித்தால் குரு காப்பாற்றுவார். ஆனால் குரு கோபம் கொண்டால் யாராலும் காப்பாற்ற இயலாது”//

http://lksthoughts.blogspot.com/2011/01/9.html

//பலவிதமான பாடங்கள், பலவிதமான மாணவருக்கு ஒரே சமயத்தில் எடுக்கவேண்டும். யோசித்தார் பதஞ்சலி. மாணவர்களுக்கும் ,அவருக்கும் இடையே ஒரு திரைப் போட்டார். ஆதிசேஷனாக உருமாறி திரைக்குப் பின் தன்னை மறைத்துக் கொண்டு பாடங்கள் எடுக்கத் துவங்கினார்.

பாடம் எடுக்கத் துவங்கும் முன்பு இரண்டு நிபந்தனைகளை விதித்தார். அவர் பாடம் எடுக்கும் பொழுது யாரும் வெளியே போகக் கூடாது. மீறி சென்றால் பிரம்மராட்சசனாக மாறிவிடுவீர்கள் என்று ஒரு சாபம் முன்னாடியே சொல்லி விட்டார். இரண்டாவது நிபந்தனை ,யாரும் எந்த நேரத்திலும் திரையை விளக்கிப் பார்க்கக் கூடாது.

கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் அனைவரும் சம்மதித்தனர். பாடங்களும் துவங்கின. அனைவருக்கும் தனித் தனியாக வகுப்புகள் போகின்றன. இந்த சமயத்தில் கொஞ்சம் அதிகப் பிரசங்கி மாணவனுக்கு திரையை விலக்கி பார்க்க முற்பட்டான். அவ்வளவுதான் , ஆதிஷேசனின் நஞ்சு அங்கிருந்த அனைவரையும் சாம்பலானார்கள்.

http://lksthoughts.blogspot.com/2011/01/11.html

இவை எல்லாம் தர்க்க ரீதியான கோட்பாடுகளா?

க‌ட‌வுள் கோவித்துக் கொள்வார் என்றோ,அந்த‌க் கோவ‌த்தில் இருந்து குரு காப்பாற்றுவார் என்றோ, எந்த‌ வித‌மான‌ கோட்பாடும், இந்து ம‌த்தின் முக்கிய‌ நூல்க‌ளான‌ ஸ்ருதி போன்ற‌வ‌ற்றில் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை, ஆனால் மேலே சுட்டிக் காட்டிய‌து போல‌ எழுதித் த‌ள்ளுகிரார்க‌ள். இவ‌ற்றில் இருந்து இந்து ம‌தத்தைக் காப்ப‌து எப்ப‌டி என்கிற‌ அக்க‌றை உங்க‌ளுக்கு இருக்கிற‌தா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: