Thiruchchikkaaran's Blog

Posts Tagged ‘Hindu


File:Ramanujacharya Idol in a temple.jpg

இந்திய‌ ச‌முதாய‌ம் மிக‌ பழ‌மையான‌ ச‌முதாய‌ம். அந்த‌ ச‌முதாய‌ம் வாழ்ந்த‌ நில‌ப் ப‌குதியும் மிக‌ப் பெரிய‌ ச‌ம‌வெளி நில‌ப் ப‌குதியே. ம‌ற்ற‌ ஆற்ற‌ங்க‌ரை நாக‌ரீக‌ங்க‌ளில் எல்லாம் குறுகிய‌ நில‌ப் ப‌ர‌ப்பிலே  வாழ்ந்த‌ன‌ர்.

எகிப்தை எடுத்தக் கொண்டால் அங்கே நைல் நதியை ஒட்டி கரையின் இரு மருங்கிலும் ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே மக்களின் வாழும் பகுதி அமைந்து இருந்தது. மற்றவை பாலைவனங்களாகவோ  , புறம்போக்கு தரிசாகவோ இருந்தது.

சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, கோதாவரி , கிருஷ்ணா, காவிரி, நர்மதை உள்ளிட்ட பல்வேறு நதிகளையும், சமவெளிகளையும் கொண்டிருந்த இந்தியா மக்கள் தொகை பெருகவும், வளரவும், வாய்ப்பாக இருந்தது. எனவே பல்வேறு தொழில்களும், கலைகளும் உருவாகவும், சிறக்கவும் செய்தன.

வெவ்வேறு தொழில்களை மேற்கொண்ட மக்கள் தாங்கள் தங்கள்  தொழிலை ஒட்டிய பகுதிகளில் வாழவும், குழுவாக அமையவும் செய்தனர். தங்கள் குழுக்களுக்குள்ளேயே திருமண உறவுகளை செய்து கொள்ள ஆரம்பித்தனர். தங்கள் தொழிலை வளப்படுத்தவும், மேம்படுத்தவும் அது உதவியாக இருந்தது. குடும்பத்தில் பிறக்கும் மகனுக்கு தங்களின் தொழிலை அதன் சிறப்புகளை கற்றுத் தேர்ச்சி பெற வைத்தனர். தச்சு  தொழில் செய்தவர் தன மகனுக்கு தச்சு  வேலை கற்றுக் கொடுத்தார்,  குயவர்  தன்   மகனுக்கு மண் பாண்ட வேலையை சொல்லிக் கொடுத்தார்.   இவ்வாறாக ஒருவர் பிறக்கும் போதே அவருடைய வேலை வாய்ப்பு உறுதி செய்யப் பாட்டாலும் , இந்த முறை இறுக்கமான சாதீய அமைப்புகள் உருவாகும் முறையிலே அமைந்து விட்டன.

முதலிலே எல்லோரும் ஒன்றாக இருந்தனர் என்றும், பிறகு பல் வேறு தொழிலை செய்ய வேண்டிய காரணத்தினால் அவர்கள் பிரிந்தனர் என்றும் சுவாமி விவேகானந்தர் சொல்கின்றார். முன்பு எல்லோரும் பிராமணர்கள் ஆகவே இருந்தனர் என்கிறார். இப்படி  இருந்திருப்பதற்க்கான வாய்ப்புகள் வலுவாக உள்ளன.

பத்து மகன் உள்ள ஒரு குடும்பத்திலே, எல்லா மைந்தர்களும் காலையிலும் மாலையிலும் பூசனை, சந்தியாவந்தனம் போனறவற்றை செய்து கொண்டு இருந்திருக்கக் கூடும்.

குடுமபப் பொறுப்புகளை எல்லோரும் பிரித்துக் கொள்ளும் போது மாடுகளை மேய்க்கும் பணியை இரு மைந்தர்கள் பார்த்துக் கொள்ளும்படி இருந்து இருக்கலாம். காலையிலே மாடுகளை ஓட்டி சென்று, மாலையில் பொழுது சாயும் போது களைப்புடன் வீடு திருப்பும் மைந்தர்களுக்கு  பூசனைகளில் ஈடுபட நேரம் இருந்திருக்காது. எனவே அவர்கள் தினமும்  பூசனை செய்ய வேண்டியதில்லை என குடும்பத் தலைவரான தந்தை எக்செம்ப்சன் கொடுத்திருக்கலாம். இவ்வாறாக குடும்பங்கள் விரிவடைவது, பெருகுவதும் பல்வேறு தொழில்களில் ஈடுபடுவது மாக சமூக  அமைப்பு முறை விரிவடைந்து இருக்கிறது.

சாதீய சமூகம் உருவான போது ஒரு வகையில் பலரும் அதை தங்களுக்கு பாது காப்பாக கருதினார்கள். உதாரணமாக ஒரு பிராமண சிறுவன்  ஒரு பொற் கொல்லரிடம் போய் அந்த தொழிலை தனக்கு கற்று தரக் கோரினால் அக்ககாலத்திலே அவ்வாறு கற்றுத் தர சம்மதித்து இருக்க மாட்டார்.

ஒரு சாதியை சேர்ந்தவர்கள், பிற சாதியை சேர்ந்தவர்களை மதிப்புடனும்

கவ்ரவத்துடனும்  மனிதனுக்கு மனிதன் என்ற வகையிலே அணுகி இருந்தால் சாதி அமைப்பு என்றைக்குமே ஒரு தொழில் ரீதியான பிரிவாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால் சாதி என்பது ஒரு பெருமைக்குரிய விடயமாக கருதப் பட்டு, மனிதம் பின்னுக்குத் தள்ளப் பட்டு விட்டது. தன்னுடைய சாதியை உயர்ந்த சாதியாக நிலை நிறுத்தினால், தான் ஆட்டமேடிக்காக உயர்ந்தவனாக கருதப் படுவேன் என்கிற ரூட்டை பாலோ செய்ய ஆரம்பித்தனர்.

ஆனால் ஆன்மீக வாதிகளோ, மனிதன் மனிதனாக வாழ வேண்டும், உயரிய மன  நிலைக்கு தன்னை  உயர்த்தி எல்லா மனிதர்களையும் அன்புடன் நோக்க வேண்டும் என்கிற கோட்பாட்டை வைத்து இருந்தனர். இதற்க்கு ஆன்மீகத்தையே ஒரு கருவியாக பயன் படுத்தினார்.

அவ்வகையிலே குறிப்பிட்டு சொல்லக் கூடியவர் மகான் இராமனுஜாச்சாரியார். இன்றைக்கு  21 ஆம் நூற்றாண்டிலேயே பலர் ஒப்புக்கு சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று மேடையிலே முழங்கி விட்டு, இறங்கி வந்து சாதிக் கணக்கு போட்டு செயல் படுவதைக் காணும் போது,

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த இராமானுஜரின் மனப் பூர்வமான சமத்துவம்  இணையற்றதாக உள்ளது.

உண்மையான ஆன்மீகம் மனிதர்களின் மனநிலையை உயர்த்தி அவர்களை சமத்துவத்தில் இணைக்கக் கூடியது என்பதை செய்து காட்டியவர் இராமானுஜர். அவர் அதை உணர்ந்து இருந்தார், உண்மையான பக்தியின் வலிமையை, சிறப்பை அவர் புரிந்து இருந்தார்.

 இத்தனைக்கும் கண்டிப்புக் காட்டியோ, கட்டளைகளைப் போட்டோ இராமானுஜர் தன்னுடைய கொள்கைகளை புகுத்தவில்லை. அமைதியான வழியிலே, அன்பு வழியிலே, அஹிம்சை வழியிலே  பூக்கள் மலர்வது போல மக்களின் மனங்களை மலர வைத்தவர் இராமானுஜ ஆச்சாரியார்.

(தொடரும்)

Title: இராம‌னுஜாச்சாரியார் ‍ ஆன்மீக‌த்தின் மூல‌ம் ச‌மத்துவ‌த்தை உருவாக்கிய‌ மாவீர‌ர் .


காயத்ரி மந்திரம் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு செய்யுள். இந்த காயத்ரி மந்திரமானது தற்போது பல்வேறு பாடகர்களால் பாடப்பட்டு காசெட்டுகளாகவும், சி.டிக்களாகவும் இந்தியா முழுவதும் , உலகம் முழுவதும் பல்வேறு வீடுகளில் கேட்கப் பட்டு வருகிறது.

இந்த மந்திரத்தின் பொருள் என்ன, அதன் பின்னணியில் உள்ள தத்துவம் என்ன என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் விளக்குகிறோம். இந்த கட்டுரையை “எல்லோரும் பூணூல்  அணியலாம்” என்கிற கட்டுரையின் இரண்டாவது பகுதியாக வெளியிடுகிறோம் என்பதைக் குறிப்பிடுகிறோம். ஏனெனில் பூணூல் அணிந்த பின், ஆன்மீக முயற்சிக்கு உதவும் முறைகளில் காயத்ரி மந்திரம் முக்கியமாக கருதப்படுகிறது.

ஆன்மீகம் என்பது மனிதன், விடுதலை  அடைந்த நிலையை, துன்பம், இன்பம் இரண்டையும் கடந்த அமைதி நிலையை அடைவது என்பதாக முன்பே சொல்லி இருக்கிறோம். நாம் இப்போதைய நிலையில் சூழ்நிலையின் தாக்கத்தால் இயற்கையின் விதியால் கட்டுண்டு இருக்கிறோம். என்ன முயற்சி செய்தாலும் அவ்வப்போது அடி வாங்கி , இறுதியில் மாபெரும் அடியை- மரண  அடியை பெறுகிறோம்.   எந்தக் கோமானாக இருந்தாலும் இதற்க்கு  விதிவிலக்கல்ல.

முதலில் சிறு குழந்தையாக இருக்கிறோம், பிறகு சிறுவனாக, பிறகு வாலிபனாக, பிறகு முதியவனாக …இப்படி எல்லாம் மாறிக் கொண்டே இருக்கும் நான் யார்?  சாகும் போது உடலுடன் சேர்ந்து நானும் அழிகிறேனா, அல்லது உயிர் என்ற ஒன்று தொடர்ந்து உயிர் வாழ்கிறதா?இதற்க்கு விடை என்ன? உண்மை என்ன?  இனி என்ன நடக்கப் போகிறது, இன்னும் எத்தனை கஷ்டங்கள், வரவுகள், செலவுகள், எதுவுமே தெரியாமல் இருட்டாக இருக்கிறதே. எதுவுமே தெரியவில்லை. கும்மிருட்டு. 

எந்த ஒரு கருத்தானது இத்தகைய இருளில் இருந்து ஒளிக்கு இட்டு செல்லக்  கூடுமோ,  எந்த ஒரு நிலையானது   அழியும் நிலையில் இருந்து அழியாத  நிலைக்கு இட்டு செல்லுமோ, அந்த உண்மையை ஒருவன் தானே உணரும்போது, அவன் விடுதலை  பெறுகிறான். அந்த ஒளி யை அடைவதே என் குறிக்கோள், அந்த ஒளியை நான் வாழ்த்துகிறேன், எந்த ஒளி எல்லா உண்மைகளையும் தன்னகத்தே உடையதாக இருக்கிறதோ அந்த ஒளி என் அறிவை தூண்டி என்னை உண்மையை அறிந்த நிலைக்கு உயர்த்தட்டும் என்பதுதான் காயத்ரி மந்திரத்தின் பொருள் சாரம் எல்லாம்.

எவ்வளவு உயர்ந்த நோக்கம்! உண்மையை உணரும் வகையில் என் அறிவு விரிவடையட்டும் என விழைவது- எவ்வளவு சிறப்பான பகுத்தறிவு ! 

“ஓம் பூர் புவ ஸ்வஹா தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ  யோ ந பிரசோதயாத்” 

ஓம்:

பூர் :  எல்லா சக்திகளின் ஆதர சக்தியாக 

 புவ : துன்பங்களை அழிப்பதாக, 

ஸ்வஹா :நிலையான ஆனந்தத்தை தருவதாக   உள்ள

 தத் :அந்த

ஸவிதுர் : ஒளி

வரேண்யம் : மிகச் சிறந்த (ஒளியானது)

 பர்கோ : கவலையை அழிப்பதுமான

தேவஸ்ய: மேலான (ஒளியை)

 தீமஹி: தியானிக்கிறேன்

 தியோ: அறிவை

 யோ : எது

ந : நமது

பிரசோதயாத் :   தூண்டுகிறதோ,   உண்மையை உணரச்செய்கிறதோ 

“நமது அறிவைத் தூண்டி உண்மையை அறிய செய்யும் மேலான ஒளியை நான் உணருமாறு தியானிக்கிறேன்”

 உண்மையை உணர்த்தும் படிக்கான   அறிவைத் தூண்டும் ஒளியைஅடைய விரும்பி, தன்னுடைய சொத்து, பத்து, புகழ், கவலை, லாப, நஷ்டம் எல்லாவற்றையும் பற்றிய கவலையை விட்டு, முழு விடுதலையை  நோக்கமாக கொண்டு அந்த நோக்கத்தையே செய்யுளாக்கி மனக் குவிப்பு செய்து தியானப் பயற்சியில் ஈடுபடுவதுதான், காயத்ரி மந்திரம் சொல்லும் முறையாகும். 

அமைதியான இடத்திலே தனிமையிலே மனத்தைக் குவித்து உண்மையை நோக்கிய பயணத்தை துவக்குகிறான், காயத்ரி உபாசகன்.

ஒளி என்பது பற்றி ஜனகரும் ,  யான்க்வல்ஞரும் செய்த விவாதத்தை இங்கே தருகிறேன்.

எப்போதும் ஒருவனுக்கு ஒளி தரக் கூடியது எது?

சூரியன் …

ஆனால் சூரியன் இரவில் இல்லை.

அப்படியானால் விளக்கு , அது எப்போதும் ஒளி தரும், …

ஆனால் விளக்கு எண்ணெய்  இருக்கும் வரைதான் ஒளி தரும்…

அப்படியானால் ஒருவனுக்கு எப்போது ஒளி தரக் கூடியது எது?

ஒருவனின்  அறிவை  ஒளி பெறச் செய்யும் ஒளியே எப்போதும் அவனுக்கு உதவும் மேலாம் ஒளி!

இருளில் வாழும் உலக மக்கள் அனைவரின் அறிவிலும் ஒளியை பெற வேண்டும் என்கிற சிந்தனையை உருவாக்கி அவர்களை ஒளியை நோக்கி இட்டு செல்லும் மிக சிறந்த சிந்தனையாக  காயத்ரி மந்திரம் உள்ளது.   இது உலக மக்கள் அனைவருக்கும் உரிய து.  இதை அவசரம் அவசரமாக ஒப்புக்குப் பாடாமல் , அதிகாலையில் அமைதியான நேரத்தில் பொறுமையாக கவலை எல்லாம் விட்டு முழுமையான மனக் குவிப்புடன் உண்மையை அறிந்து விடுதலை பெற வேண்டும்  என்கிற தீவிரமான நோக்குடன் பயிற்சி செய்வது, ஒருவரின் மன நிலையை, மனக் கட்டுப்பாட்டை உயர்த்தினால் அதில் ஆச்சரியம் இல்லை!

Title; அறிவை தரும் ஒளியைக்  கோரும் காயத்ரி மந்திரம்! (எல்லோரும்  பூணூல் அணியலாம் – பகுதி 2)


                         

   விநாயகர் வழிபாட்டை கிண்டல், நையாண்டி செய்வதும் எப்படியாவது விநாயகர் வழி பட்டை இகழ சான்ஸ் கிடைக்குமா என்று காத்திருந்து ,  அவ்வப் போது தாங்கள்  மத சகிப்புத தன்மையை இழந்ததால் உருவான மத வெறியை வெளிக்காட்ட விநாயகரை இகழ்வதை  தொடர்ந்து செய்து வருகின்றனர்.  
நம்மைப்  பொறுத்தவரையில் விநாயகரை வழி பாடு செய்பவர்கள் அமைதியான முறையில், பிறரை வெறுக்காமல் வழிபடும் வரை அதில் நாம் குறை கூற ஒன்றுமில்லை. எந்தக் கடவுளுக்கும் எந்த ஒரு சரி பார்க்கக் கூடிய நிரூபனத்தையோ, ஆதாரத்தையோ யாருமே தராததை வைத்து நோக்கும்  போது நம்மைப் பொறுத்தவரையில் விநாயகரை மட்டும் தனியாக கட்டம் கட்டி விநாயகர் வழிபாட்டின் மீதான சகிப்புத் தன்மை காரணமாக எழுந்த மத வெறியை நாம் ஆதரிக்க இயலாது. 

விநாயகர் வழிபாடு பற்றி நாம் முன்பே வெளியிட்டு இருந்த கட்டுரையை மீள் பதிவாக இங்கே வெளியிடுகிறோம்.:

இந்துக்கள் விநாயகரை தெய்வமாக வணங்குவதை பிற மதங்களை   சேர்ந்த  சிலர் ஆட்சேபிக்கின்றனர்.  எதற்க்காக ஆட்சேபிக்க வேண்டும்?
  
 கிறிஸ்தவர்கள் கர்த்தரை வணங்க்குவதையோ,  முஸ்லீம்கள் அல்லாஹ்வை வணங்குவதையோ இந்துக்களோ, சீக்கியர்களோ, சமணர்களோ, பவுத்தர்களோ, லாவோயிசத்தவரோ வெறுக்கவோ, ஆட்செபிக்கவோயில்லையே! அப்படி இருக்கும் போது இந்துக்கள் விநாயகரை தெய்வமாக வணங்குவதை எதற்க்காக ஆட்சேபிக்க வேண்டும்?
 
இந்துக்களின் வழி பாட்டில்  தேவை இல்லாமல் தலையிட்டு சகிப்புத் தன்மை இல்லாமல்,  நடந்து கொண்டு மோதலை உருவாக்குவது சரியா? இதனால் சமூக நல்லிணக்கமும்  அமைதியும்  கெடுகிறது.

முதலில் இந்த விநாயகர் என்று வணங்கப் படும் கடவுள் கான்செப்டை ஆராய்வோம்.  ஒருவர். ஒரு வேலையைத் துவங்கும்போது,  அதில் தடங்கல்கள் எதுவும் வராமல் இருக்க விநாயகர் உதவுவார் என்பதே, வழிபடுபவரின் நம்பிக்கை.

இதுவும் ஒரு நம்பிக்கை மாத்திரமே, இந்த நம்பிக்கைக்கு ஆதாரமோ, நிரூபணமோ இல்லை.

விநாயகரை வழிபாடும் நண்பர் ஒருவரை நான் சில மாதங்களுக்கு முன் சந்தித்தேன். 

“விநாயகர் என்று ஒருவர் இருப்பதை உங்களால் நிரூபிக்க  முடியுமா?” என்று கேட்டேன். 

“என்னால் நிரூபிக்க முடியாது”,  என்றார்.

“அப்படியானால் அவரை நீங்கள் ஏன் வழிபடுகிறீர்கள்” என்று கேட்டேன். 

“விநாயகர் கடவுள் என்று நான் நம்புகிறேன். அவர் எனக்கு வரும் தடங்கல்களை விலக்கக்  கூடியவர்  என்று நான் நம்புகிறேன், எனவே எனக்கு தடங்கல்கள் வராமல் இருக்க நான் அவரை வணங்குகிறேன்” என்றார்.  

“ஆனால்  மதங்களால் சமூகத்திற்கு பிரச்சினை வருகிறது ” என்று சொன்னேன்.

“விநாயகர் விடயத்தில்  நீங்கள் அப்படி சொல்ல முடியாது. விநாயகர் நன்மையை மட்டுமே தருபவர், விநாயகர் சுலோகங்களை நீங்கள் படித்துப் பாருங்கள். அதில் எந்த இடத்திலும், பிறருக்கு விரோதமாக எந்த ஒரு கருத்தும் இல்லை. தனக்கு நன்மையை வேண்டி மட்டுமே ஒரு பக்தன் விநாயகரைத்  தொழுகிறான். விநாயகரைத் தொழுபவன் பிற மதத்தவரின் தெய்வங்கள் மீது வெறுப்பு காட்டுவதோ, இகழ்வதோ இல்லை”  என்றார்.

ஆனால் விநாயகர் ஊர்வலத்தில்   செல்பவர்கள்,  மசூதிகள் இருக்கும் தெருக்கள் வழியாக செல்லும் போது வம்பு செய்வதாகவும், கற்களை மசூதிக்குள் எறிவதாகவும் செய்திகள் வருகின்றன  என்றேன்.

அது கண்டிக்கப் பட வேண்டிய தவறான செய்கை.  விநாயகர் ஊர்வலத்தில் சமூக விரோதிகள் கலந்து விடுகின்றனர். விநாயகர் ஊர்வலத்தில் செல்பவர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும், சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களை ஊர்வலத்தில் கலக்காமல் தவிர்க்க வேண்டும். அடாவடித் தனம் செய்வது விநாயகரின் தத்துவத்துக்கு எதிரான செயல்.  விநாயகர் ஊர்வலத்தை சாக்காக வைத்து அக்கிரமம் செய்வதை அனுமதிக்கக் கூடாது என்றார்.

“விநாயகர் தடங்கல்களை களைபவரே அன்றி, ஒரு போதும் தடங்கல் உருவாக்குபவர் அல்ல! ”  என்றார்.

“மும்பையில் நடை பெரும்  விநாயகர் வூர்வலங்களில் எல்லா பிரிவினரும் கலந்து கொள்கின்றனர். ஒரு பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியான   விழாவாக  ஒவ்வொரு வருடமும் நடை பெறுகிறது”,  என்றார்.

என்னைப் பொறுத்த அளவிலே எப்படி மற்ற கடவுள்கள் எல்லாம் நம்பிக்கை அடிப்படையில் வணங்கப்   படுகிறார்களோ,   அதைப் போலவே விநாயகர் வழி பாடும் நம்பிக்கையின் அடிப்படையிலே தான் நடத்தப் படுகிறது.  

விநாயகரை அமைதியாக வணங்குவதை, இழிவு படுத்த வேண்டிய அவசியமில்லை எனவே கருதுகிறேன்.

விநாயகரின் தலை யானை வடிவில் இருந்தால் இருந்து விட்டுப் போகட்டுமே. அதனால் என்ன?

 “மிருகத்தை எப்படிக் கடவுளாக வணங்க முடியும்?” என்றால்,

 ”மனிதன் , மிருகம் முதலிய எல்லா உயிர்களையும் படைத்தவர் கடவுள்” என்றுதானே நீங்கள் சொல்கிறீர்கள். அப்படி மிருகத்தையும், மனிதனையும் படைத்த கடவுள் ஏன் மிருகமும், மனிதனும் இணைந்த வடிவில் இருந்திருக்கக் கூடாது?

சுவாசமுள்ள எல்லாவற்றையும்  ஒன்று விடாமல் சங்கரிக்கச் சொல்லியதாக ஒரு கடவுள் கான்செப்டை உருவாக்கி வழிபடும் போது  , 

தீங்கு தரும் கருத்துக்கள் எதுவும்   இல்லாத வகையில் மிருகமும், மனிதனும் கலந்த வடிவில் கடவுள் இருப்பதாக கடவுள்  கான்செப்டை  உருவாக்கி வழிபடுவதில் இகழ்வதர்க்கு என்ன இருக்கிறது  ?

நான் சொல்கிற வகையில் தான் கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள், முதலில் கடவுள் இருப்பதற்க்கான நிரூபணத்தை கொடுங்கள். வானத்திலே நிலவு தொடர்ந்து முழு நிலவாக எல்லா நாட்களும் ஒளிரும்படி செய்து கட்டுங்கள்.  

அப்படி உங்களால் செய்ய முடியுமானால் உங்களின் கடவுளை நானும் ஒத்துக் கொண்டு,  வேறு வடிவில், வேறு பெயரில்  கடவுளை வழிபடக் கூடாதே என்று உங்களின் சார்பாக நானே பிரச்சாரம் செய்வேன்.

ஆனால் அப்படி நிரூபணம் எதுவும் இல்லாமல், யார் யாரோ உருவாக்கிய கற்பனைகளை வைத்துக் கொண்டு -அவைகள் வெறும் நம்பிக்கை மாத்திரமே –  பிறரின்  வழிபாட்டை இகழ்ந்து,    மனித சமுதாயத்தில் வெறுப்புக் கருத்துக்களை பரப்பி , அமைதியைக் கெடுத்து மனிதத்தை நிர்மூலம் ஆக்க வேண்டாம்.

 விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் மிகவும் கட்டுப் பாட்டுடனும், நாகரீகமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும்  நான் வலியுறுத்திக் கூறுகிறேன்.

இந்தக் கட்டுரையை நாம் எழுதியது பிற மதத்தவரின் தெய்வங்களை இழிவு படுத்தி , சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கக் கூடாது என்கிற கருத்தை சொல்லவே.  விநாயகர் என்பவர் கடவுள் என்று நான் சாட்சி கொடுத்ததாக அர்த்தம் இல்லை, எந்த கடவுளுக்கும் நான் சாட்சி கொடுக்கவில்லை, அமைதியான முறையில் நடைபெறும் எந்த வழிபாட்டையும் நான் எதிர்க்கவுமில்லை.

Title: கணபதியே வருவாய், அருள்வாய் !


Share this blog

Facebook Twitter More...

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 45 other subscribers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09