Thiruchchikkaaran's Blog

கணபதியே வருவாய், அருள்வாய் !

Posted on: December 3, 2010


                         

   விநாயகர் வழிபாட்டை கிண்டல், நையாண்டி செய்வதும் எப்படியாவது விநாயகர் வழி பட்டை இகழ சான்ஸ் கிடைக்குமா என்று காத்திருந்து ,  அவ்வப் போது தாங்கள்  மத சகிப்புத தன்மையை இழந்ததால் உருவான மத வெறியை வெளிக்காட்ட விநாயகரை இகழ்வதை  தொடர்ந்து செய்து வருகின்றனர்.  
நம்மைப்  பொறுத்தவரையில் விநாயகரை வழி பாடு செய்பவர்கள் அமைதியான முறையில், பிறரை வெறுக்காமல் வழிபடும் வரை அதில் நாம் குறை கூற ஒன்றுமில்லை. எந்தக் கடவுளுக்கும் எந்த ஒரு சரி பார்க்கக் கூடிய நிரூபனத்தையோ, ஆதாரத்தையோ யாருமே தராததை வைத்து நோக்கும்  போது நம்மைப் பொறுத்தவரையில் விநாயகரை மட்டும் தனியாக கட்டம் கட்டி விநாயகர் வழிபாட்டின் மீதான சகிப்புத் தன்மை காரணமாக எழுந்த மத வெறியை நாம் ஆதரிக்க இயலாது. 

விநாயகர் வழிபாடு பற்றி நாம் முன்பே வெளியிட்டு இருந்த கட்டுரையை மீள் பதிவாக இங்கே வெளியிடுகிறோம்.:

இந்துக்கள் விநாயகரை தெய்வமாக வணங்குவதை பிற மதங்களை   சேர்ந்த  சிலர் ஆட்சேபிக்கின்றனர்.  எதற்க்காக ஆட்சேபிக்க வேண்டும்?
  
 கிறிஸ்தவர்கள் கர்த்தரை வணங்க்குவதையோ,  முஸ்லீம்கள் அல்லாஹ்வை வணங்குவதையோ இந்துக்களோ, சீக்கியர்களோ, சமணர்களோ, பவுத்தர்களோ, லாவோயிசத்தவரோ வெறுக்கவோ, ஆட்செபிக்கவோயில்லையே! அப்படி இருக்கும் போது இந்துக்கள் விநாயகரை தெய்வமாக வணங்குவதை எதற்க்காக ஆட்சேபிக்க வேண்டும்?
 
இந்துக்களின் வழி பாட்டில்  தேவை இல்லாமல் தலையிட்டு சகிப்புத் தன்மை இல்லாமல்,  நடந்து கொண்டு மோதலை உருவாக்குவது சரியா? இதனால் சமூக நல்லிணக்கமும்  அமைதியும்  கெடுகிறது.

முதலில் இந்த விநாயகர் என்று வணங்கப் படும் கடவுள் கான்செப்டை ஆராய்வோம்.  ஒருவர். ஒரு வேலையைத் துவங்கும்போது,  அதில் தடங்கல்கள் எதுவும் வராமல் இருக்க விநாயகர் உதவுவார் என்பதே, வழிபடுபவரின் நம்பிக்கை.

இதுவும் ஒரு நம்பிக்கை மாத்திரமே, இந்த நம்பிக்கைக்கு ஆதாரமோ, நிரூபணமோ இல்லை.

விநாயகரை வழிபாடும் நண்பர் ஒருவரை நான் சில மாதங்களுக்கு முன் சந்தித்தேன். 

“விநாயகர் என்று ஒருவர் இருப்பதை உங்களால் நிரூபிக்க  முடியுமா?” என்று கேட்டேன். 

“என்னால் நிரூபிக்க முடியாது”,  என்றார்.

“அப்படியானால் அவரை நீங்கள் ஏன் வழிபடுகிறீர்கள்” என்று கேட்டேன். 

“விநாயகர் கடவுள் என்று நான் நம்புகிறேன். அவர் எனக்கு வரும் தடங்கல்களை விலக்கக்  கூடியவர்  என்று நான் நம்புகிறேன், எனவே எனக்கு தடங்கல்கள் வராமல் இருக்க நான் அவரை வணங்குகிறேன்” என்றார்.  

“ஆனால்  மதங்களால் சமூகத்திற்கு பிரச்சினை வருகிறது ” என்று சொன்னேன்.

“விநாயகர் விடயத்தில்  நீங்கள் அப்படி சொல்ல முடியாது. விநாயகர் நன்மையை மட்டுமே தருபவர், விநாயகர் சுலோகங்களை நீங்கள் படித்துப் பாருங்கள். அதில் எந்த இடத்திலும், பிறருக்கு விரோதமாக எந்த ஒரு கருத்தும் இல்லை. தனக்கு நன்மையை வேண்டி மட்டுமே ஒரு பக்தன் விநாயகரைத்  தொழுகிறான். விநாயகரைத் தொழுபவன் பிற மதத்தவரின் தெய்வங்கள் மீது வெறுப்பு காட்டுவதோ, இகழ்வதோ இல்லை”  என்றார்.

ஆனால் விநாயகர் ஊர்வலத்தில்   செல்பவர்கள்,  மசூதிகள் இருக்கும் தெருக்கள் வழியாக செல்லும் போது வம்பு செய்வதாகவும், கற்களை மசூதிக்குள் எறிவதாகவும் செய்திகள் வருகின்றன  என்றேன்.

அது கண்டிக்கப் பட வேண்டிய தவறான செய்கை.  விநாயகர் ஊர்வலத்தில் சமூக விரோதிகள் கலந்து விடுகின்றனர். விநாயகர் ஊர்வலத்தில் செல்பவர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும், சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களை ஊர்வலத்தில் கலக்காமல் தவிர்க்க வேண்டும். அடாவடித் தனம் செய்வது விநாயகரின் தத்துவத்துக்கு எதிரான செயல்.  விநாயகர் ஊர்வலத்தை சாக்காக வைத்து அக்கிரமம் செய்வதை அனுமதிக்கக் கூடாது என்றார்.

“விநாயகர் தடங்கல்களை களைபவரே அன்றி, ஒரு போதும் தடங்கல் உருவாக்குபவர் அல்ல! ”  என்றார்.

“மும்பையில் நடை பெரும்  விநாயகர் வூர்வலங்களில் எல்லா பிரிவினரும் கலந்து கொள்கின்றனர். ஒரு பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியான   விழாவாக  ஒவ்வொரு வருடமும் நடை பெறுகிறது”,  என்றார்.

என்னைப் பொறுத்த அளவிலே எப்படி மற்ற கடவுள்கள் எல்லாம் நம்பிக்கை அடிப்படையில் வணங்கப்   படுகிறார்களோ,   அதைப் போலவே விநாயகர் வழி பாடும் நம்பிக்கையின் அடிப்படையிலே தான் நடத்தப் படுகிறது.  

விநாயகரை அமைதியாக வணங்குவதை, இழிவு படுத்த வேண்டிய அவசியமில்லை எனவே கருதுகிறேன்.

விநாயகரின் தலை யானை வடிவில் இருந்தால் இருந்து விட்டுப் போகட்டுமே. அதனால் என்ன?

 “மிருகத்தை எப்படிக் கடவுளாக வணங்க முடியும்?” என்றால்,

 ”மனிதன் , மிருகம் முதலிய எல்லா உயிர்களையும் படைத்தவர் கடவுள்” என்றுதானே நீங்கள் சொல்கிறீர்கள். அப்படி மிருகத்தையும், மனிதனையும் படைத்த கடவுள் ஏன் மிருகமும், மனிதனும் இணைந்த வடிவில் இருந்திருக்கக் கூடாது?

சுவாசமுள்ள எல்லாவற்றையும்  ஒன்று விடாமல் சங்கரிக்கச் சொல்லியதாக ஒரு கடவுள் கான்செப்டை உருவாக்கி வழிபடும் போது  , 

தீங்கு தரும் கருத்துக்கள் எதுவும்   இல்லாத வகையில் மிருகமும், மனிதனும் கலந்த வடிவில் கடவுள் இருப்பதாக கடவுள்  கான்செப்டை  உருவாக்கி வழிபடுவதில் இகழ்வதர்க்கு என்ன இருக்கிறது  ?

நான் சொல்கிற வகையில் தான் கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள், முதலில் கடவுள் இருப்பதற்க்கான நிரூபணத்தை கொடுங்கள். வானத்திலே நிலவு தொடர்ந்து முழு நிலவாக எல்லா நாட்களும் ஒளிரும்படி செய்து கட்டுங்கள்.  

அப்படி உங்களால் செய்ய முடியுமானால் உங்களின் கடவுளை நானும் ஒத்துக் கொண்டு,  வேறு வடிவில், வேறு பெயரில்  கடவுளை வழிபடக் கூடாதே என்று உங்களின் சார்பாக நானே பிரச்சாரம் செய்வேன்.

ஆனால் அப்படி நிரூபணம் எதுவும் இல்லாமல், யார் யாரோ உருவாக்கிய கற்பனைகளை வைத்துக் கொண்டு -அவைகள் வெறும் நம்பிக்கை மாத்திரமே –  பிறரின்  வழிபாட்டை இகழ்ந்து,    மனித சமுதாயத்தில் வெறுப்புக் கருத்துக்களை பரப்பி , அமைதியைக் கெடுத்து மனிதத்தை நிர்மூலம் ஆக்க வேண்டாம்.

 விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் மிகவும் கட்டுப் பாட்டுடனும், நாகரீகமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும்  நான் வலியுறுத்திக் கூறுகிறேன்.

இந்தக் கட்டுரையை நாம் எழுதியது பிற மதத்தவரின் தெய்வங்களை இழிவு படுத்தி , சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கக் கூடாது என்கிற கருத்தை சொல்லவே.  விநாயகர் என்பவர் கடவுள் என்று நான் சாட்சி கொடுத்ததாக அர்த்தம் இல்லை, எந்த கடவுளுக்கும் நான் சாட்சி கொடுக்கவில்லை, அமைதியான முறையில் நடைபெறும் எந்த வழிபாட்டையும் நான் எதிர்க்கவுமில்லை.

Title: கணபதியே வருவாய், அருள்வாய் !

Advertisements

4 Responses to "கணபதியே வருவாய், அருள்வாய் !"

//இந்தக் கட்டுரையை நாம் எழுதியது பிற மதத்தவரின் தெய்வங்களை இழிவு படுத்தி , சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கக் கூடாது என்கிற கருத்தை சொல்லவே. விநாயகர் என்பவர் கடவுள் என்று நான் சாட்சி கொடுத்ததாக அர்த்தம் இல்லை, எந்த கடவுளுக்கும் நான் சாட்சி கொடுக்கவில்லை, அமைதியான முறையில் நடைபெறும் எந்த வழிபாட்டையும் நான் எதிர்க்கவுமில்லை.//
நல்ல கருத்து தோழர்,
எல்லா மதங்களுமே நம்பிக்கை எனும் அடிப்படையில் மட்டுமே இயங்குகின்றன என்பதை புரிந்து கொண்டால் இந்த பிரச்சினை வராது.மதத்தில் உயர்ந்தது தாழ்ந்தது இருக்க முடியாது. ஊதுகிற சங்கை ஊதி வையுங்கள்.சொன்னால் எல்லாரும் கேட்டால் நல்லதுதான்.
வாழ்த்துகள்.
தனராஜ்

மிக்க நன்றி திரு. தனராஜ் அவர்களே,
கட்டுரையின் கருத்தை மிகச் சரியாகத் தெளிவு படுத்தி உள்ளீர்கள். மத சகிப்புத் தன்மைக்கான தங்களின் ஆதரவு என்னை வூக்குவிப்பையும் , உற்சாகத்தையும் தருகிறது.
மீண்டும் நன்றி.

‘வினாயகர் தமிழர் தெய்வம் இல்லை’ என்றும், ‘வடநாட்டிலிருந்து திணிக்கப்பட்டவர்’ என்றும் சிலர் சொல்லுகிறார்கள். ஆனால், தமிழ் மூதாட்டி அவ்வையார் வினாயகர் மேல் பாடல்கள் பாடியது எப்படி?

– சிமுலேஷன்

வருக திரு சிமுலசன் அவர்களே.

அவ்வையார் விநாயகரைப் பாடியுள்ளார் என்பது சங்க இலக்கிய ஆதாரமுள்ள உண்மையே.

விநாயகர் வழிபாடு தமிழகத்திலே தொன்று தொட்டே இருந்திருப்பதற்க்கான வாய்ப்புகளே அதிகம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: