Thiruchchikkaaran's Blog

விநாயகனே, வினை தீர்ப்பவனே! வேழ முகத்தோனே, ஞான முதல்வனே!

Posted on: May 6, 2010


நம்முடைய தளங்களுக்கு வரும் பின்னூட்டங்கள் மூலமாகவே நாம் பலவேறு மக்களின் கருத்தை அறிந்து கொள்கிறோம்.

அன்பு சகோதரர் சில்சாம் அவர்கள் நம்முடைய தளத்திலே   பின்னூட்டங்களை இட்டு கருத்துப் பரிமாற்றம் நடத்தியவர். அவர் நம்முடைய தளத்திலே சில் நாட்களுக்கு முன் இட்ட கீழ்க்காணும் பின்னூட்டமே, இந்தக் கட்டுரையை எழுத வேண்டிய சிந்தனையை நமக்கு உருவாக்கியது.

சகோதரர் சில்சாமின்  பின்னூட்டம் வருமாறு:

//ஒரு காலத்தில் நானே கடவுளாக வணங்கியதை பேய்,பிசாசு என்று சொல்வேனா?அதுபோல ஒருபோதும் சொல்வதில்லை;

ஆனால் உண்மை தெய்வத்தைவிட்டு திசைதிருப்பி சாதாரணமான கல்லையும் காவிய நாயகர்களையும் மிருகத்தின் சொரூபங்களையும் வணங்கச் செய்தவையே பிசாசின் சக்திகள்;

என்னைப் படைத்த தேவனை விட்டு நானே படைத்த தேவர்களை வணங்கச் செய்பவையே பேய்கள்..!

இந்த பேய்கள் படைத்த பரம்பொருளான தேவனை வணங்கினால் மட்டுமே கிடைக்கக்கூடிய மனநிம்மதிக்கு மாற்றாக மனம்போனபோக்கில் வாழும் துஷ்டத்தனமான வாழ்க்கை முறையினை அனுமதிக்கிறதினாலேயே சமுதாயத்தில் இத்தனை பிரிவினைகள்;

சாராயம் விற்பவனும் அதனைக் குடிப்பவனும் ஒரே சாமியை வணங்குகிறான்;அந்த கொடூரத்தை அந்த சாமி தடுக்கிறதில்லை;குறைந்தபட்சம் குற்ற உணர்வைக்கூட தருகிறதில்லை;காரணம் அவற்றுக்கு ஜீவனும் இல்லை;அவை தன்னை நாடி வந்திருக்கும் ஆத்மாவை படைக்கவுமில்லை; அவனுக்காக ஜீவனைத் தரவும் இல்லை;

இதுபோலவே கலைச்சேவை என்ற பெயரில் விபச்சாரத்தொழில் செய்யும் சினிமாக்காரனும் அதே யானை முகத்தோனை வணங்கியே தன் தொழிலைத் துவங்குகிறான்;

இந்த பயங்கரங்களுக்கெல்லாம் மூலக்காரணத்தையறிந்ததாலேயே மிருகத்தைத் தொழும் மனிதனை எச்சரிக்கிறோம்;எச்சரிப்போம்..!//

இந்துக்கள் விநாயகரை தெய்வமாக வணங்குவதை பிற மதங்களை   சேர்ந்த  சிலர் ஆட்சேபிக்கின்றனர்.  எதற்க்காக ஆட்சேபிக்க வேண்டும்?
கிறிஸ்தவர்கள் கர்த்தரை வணங்க்குவதையோ,  முஸ்லீம்கள் அல்லாஹ்வை வணங்குவதையோ இந்துக்களோ, சீக்கியர்களோ, சமணர்களோ, பவுத்தர்களோ, லாவோயிசத்தவரோ வெறுக்கவோ, ஆட்செபிக்கவோயில்லையே! அப்படி இருக்கும் போது இந்துக்கள் விநாயகரை தெய்வமாக வணங்குவதை எதற்க்காக ஆட்சேபிக்க வேண்டும்?
இந்துக்களின் வழி பாட்டில்  தேவை இல்லாமல் தலையிட்டு சகிப்புத் தன்மை இல்லாமல்,  நடந்து கொண்டு மோதலை உருவாக்குவது சரியா? இதனால் சமூக நல்லிணக்கமும்  அமைதியும்  கெடுகிறது.

முதலில் இந்த விநாயகர் என்று வணங்கப் படும் கடவுள் கான்செப்டை ஆராய்வோம்.  ஒருவர். ஒரு வேலையைத் துவங்கும்போது,  அதில் தடங்கல்கள் எதுவும் வராமல் இருக்க விநாயகர் உதவுவார் என்பதே, வழிபடுபவரின் நம்பிக்கை.

இதுவும் ஒரு நம்பிக்கை மாத்திரமே, இந்த நம்பிக்கைக்கு ஆதாரமோ, நிரூபணமோ இல்லை.

விநாயகரை வழிபாடும் நண்பர் ஒருவரை நான் சில மாதங்களுக்கு முன் சந்தித்தேன்.

“விநாயகர் என்று ஒருவர் இருப்பதை உங்களால் நிரூபிக்க  முடியுமா?” என்று கேட்டேன்.

“என்னால் நிரூபிக்க முடியாது”,  என்றார்.

“அப்படியானால் அவரை நீங்கள் ஏன் வழிபடுகிறீர்கள்” என்று கேட்டேன்.

“விநாயகர் கடவுள் என்று நான் நம்புகிறேன். அவர் எனக்கு வரும் தடங்கல்களை விலக்கக்  கூடியவர்  என்று நான் நம்புகிறேன், எனவே எனக்கு தடங்கல்கள் வராமல் இருக்க நான் அவரை வணங்குகிறேன்” என்றார்.

“ஆனால்  மதங்களால் சமூகத்திற்கு பிரச்சினை வருகிறது ” என்று சொன்னேன்.

“விநாயகர் விடயத்தில்  நீங்கள் அப்படி சொல்ல முடியாது. விநாயகர் நன்மையை மட்டுமே தருபவர், விநாயகர் சுலோகங்களை நீங்கள் படித்துப் பாருங்கள். அதில் எந்த இடத்திலும், பிறருக்கு விரோதமாக எந்த ஒரு கருத்தும் இல்லை. தனக்கு நன்மையை வேண்டி மட்டுமே ஒரு பக்தன் விநாயகரைத்  தொழுகிறான். விநாயகரைத் தொழுபவன் பிற மதத்தவரின் தெய்வங்கள் மீது வெறுப்பு காட்டுவதோ, இகழ்வதோ இல்லை”  என்றார்.

ஆனால் விநாயகர் ஊர்வலத்தில்   செல்பவர்கள்,  மசூதிகள் இருக்கும் தெருக்கள் வழியாக செல்லும் போது வம்பு செய்வதாகவும், கற்களை மசூதிக்குள் எறிவதாகவும் செய்திகள் வருகின்றன  என்றேன்.

அது கண்டிக்கப் பட வேண்டிய தவறான செய்கை.  விநாயகர் ஊர்வலத்தில் சமூக விரோதிகள் கலந்து விடுகின்றனர். விநாயகர் ஊர்வலத்தில் செல்பவர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும், சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களை ஊர்வலத்தில் கலக்காமல் தவிர்க்க வேண்டும். அடாவடித் தனம் செய்வது விநாயகரின் தத்துவத்துக்கு எதிரான செயல்.  விநாயகர் ஊர்வலத்தை சாக்காக வைத்து அக்கிரமம் செய்வதை அனுமதிக்கக் கூடாது என்றார்.

“விநாயகர் தடங்கல்களை களைபவரே அன்றி, ஒரு போதும் தடங்கல் உருவாக்குபவர் அல்ல! ”  என்றார்.

“மும்பையில் நடை பெரும்  விநாயகர் வூர்வலங்களில் எல்லா பிரிவினரும் கலந்து கொள்கின்றனர். ஒரு பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியான   விழாவாக  ஒவ்வொரு வருடமும் நடை பெறுகிறது”,  என்றார்.

என்னைப் பொறுத்த அளவிலே எப்படி மற்ற கடவுள்கள் எல்லாம் நம்பிக்கை அடிப்படையில் வணங்கப்   படுகிறார்களோ,   அதைப் போலவே விநாயகர் வழி பாடும் நம்பிக்கை யின் அடிப்படையிலே தான் நடத்தப் படுகிறது.

விநாயகரை அமைதியாக வணங்குவதை இழிவு படுத்த வேண்டிய அவசியமில்லை எனவே கருதுகிறேன்.

விநாயகரின் தலை யானை வடிவில் இருந்தால் இருந்து விட்டுப் போகட்டுமே. அதனால் என்ன? “மிருகத்தை எப்படிக் கடவுளாக வணங்க முடியும்?” என்றால்,

“மனிதன் , மிருகம் முதலிய எல்லா உயிர்களையும் படைத்தவர் கடவுள்” என்றுதானே நீங்கள் சொல்கிறீர்கள். அப்படி மிருகத்தையும், மனிதனையும் படைத்த கடவுள் ஏன் மிருகமும், மனிதனும் இணைந்த வடிவில் இருந்திருக்கக் கூடாது?

சுவாசமுள்ள எல்லாவற்றையும்  ஒன்று விடாமல் சங்கரிக்கச் சொல்லியதாக ஒரு கடவுள் கான்செப்டை உருவாக்கி வழிபடும் போது  ,

தீங்கு தரும் கருத்துக்கள் எதுவும்   இல்லாத வகையில் மிருகமும், மனிதனும் கலந்த வடிவில் கடவுள் இருப்பதாக கடவுள்  கான்செப்டை  உருவாக்கி வழிபடுவதில் இகழ்வதர்க்கு என்ன இருக்கிறது  ?

நான் சொல்கிற வகையில் தான் கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள், முதலில் கடவுள் இருப்பதற்க்கான நிரூபணத்தை கொடுங்கள். வானத்திலே நிலவு தொடர்ந்து முழு நிலவாக எல்லா நாட்களும் ஒளிரும்படி செய்து கட்டுங்கள்.

அப்படி உங்களால் செய்ய முடியுமானால் உங்களின் கடவுளை நானும் ஒத்துக் கொண்டு,  வேறு வடிவில், வேறு பெயரில்  கடவுளை வழிபடக் கூடாதே என்று உங்களின் சார்பாக நானே பிரச்சாரம் செய்வேன்.

ஆனால் அப்படி நிரூபணம் எதுவும் இல்லாமல், யார் யாரோ உருவாக்கிய கற்பனைகளை வைத்துக் கொண்டு -அவைகள் வெறும் நம்பிக்கை மாத்திரமே –  பிறரின்  வழிபாட்டை இகழ்ந்து,    மனித சமுதாயத்தில் வெறுப்புக் கருத்துக்களை பரப்பி , அமைதியைக் கெடுத்து மனிதத்தை நிர்மூலம் ஆக்க வேண்டாம்.

விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் மிகவும் கட்டுப் பாட்டுடனும், நாகரீகமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும்  நான் வலியுறுத்திக் கூறுகிறேன்.

இந்தக் கட்டுரையை நாம் எழுதியது பிற மதத்தவரின் தெய்வங்களை இழிவு படுத்தி , சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கக் கூடாது என்கிற கருத்தை சொல்லவே.  விநாயகர் என்பவர் கடவுள் என்று நான் சாட்சி கொடுத்ததாக அர்த்தம் இல்லை, எந்த கடவுளுக்கும் நான் சாட்சி கொடுக்கவில்லை, அமைதியான முறையில் நடைபெறும் எந்த வழிபாட்டையும் நான் எதிர்க்கவுமில்லை.

Advertisements

13 Responses to "விநாயகனே, வினை தீர்ப்பவனே! வேழ முகத்தோனே, ஞான முதல்வனே!"

//விநாயகர் ஊர்வலத்தில் சமூக விரோதிகள் கலந்து விடுகின்றனர். விநாயகர் ஊர்வலத்தில் செல்பவர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும், சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களை ஊர்வலத்தில் கலக்காமல் தவிர்க்க வேண்டும். அடாவடித் தனம் செய்வது விநாயகரின் தத்துவத்துக்கு எதிரான செயல். விநாயகர் ஊர்வலத்தை சாக்காக வைத்து அக்கிரமம் செய்வதை அனுமதிக்கக் கூடாது என்றார்.//
அவரு யாரு ராமகோபாலனா? விநாயகர் ஊர்வலமே தமிழகத்துக்கு புதிய பழக்கம். இது உருவாக்கப்பட்டதே BJP இங்கு வட இந்தியா போல் கலவரத்தை தூண்டி ஆட்சியை பிடிக்கவே. ஆனால் இங்கு பாச்சா பலிக்கவில்லை.

அன்புக்குரிய சகோதரர் திரு. பிரதீப் அவர்களே,

கட்டுரையைப் படித்து கருத்து தெரிவித்தற்கு நன்றி.

என்னா தல, தமிழ் நாட்டிலே இராம கோபாலன் மட்டும் தான் விநாயகரை வழிபடுபவரா? விநாயகர் வூர்வலம் எப்போதில் இருந்து இருக்கிறது என்று தெரியவில்லை.

ஆனால் விநாயகர் வழிபாடு பல்லாயிரக்க்கணக்கான ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்திருக்கிறது. அவ்வையார், விநாயகர் அகவல் எழுதி இருக்கிறார்.

மற்றபடி இந்தக் கட்டுரை மக்கள் தெய்வங்களாக வணங்குபவர்களை , எந்த அடிப்படையும் இல்லாமல் இகழ்ந்து பேசி, சமூக அமைதியைக் கெடுப்பது தவறு என்பதை சுட்டிக் காட்டவே.

மக்களின் ஆன்மீக தேடலை, யாரும் தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்துவதை நான் ஆதரிக்கவில்லை.

எனது கருத்துக்களின் அடிப்படையில் வரையப்பட்டிருக்கும் கட்டுரையில் என்னுடைய நியாயமான வாதங்களுக்கு எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை;மாறாக விதண்டாவாதம் கொப்பளிக்கிறது..!

சில்சாம் அண்ணா,
//;மாறாக விதண்டாவாதம் கொப்பளிக்கிறது//
இந்த பிலாகே அதுக்குத்தானே நம்ம திருச்சி நடத்தறார். எதையாவது ஒழுங்கா விவாதிக்கிறாங்களா? சினிமால கோர்ட் சீன் மாதிரி டயலாக் மாத்திரம் பேசுவாங்க. ஆனா அதுல அர்த்தம் ஒண்ணுமே இருக்காது. எதையாவது சொன்னாலும் புரிஞ்சுக்க மறுக்கிறாங்க. தூங்கறவனை எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது.
Hard Truth

சகோதரர் திரு. HARD TRUTH அவர்களே

தூங்குவது போல நடிப்பது, நீங்கதான்!

விநாயகரின் தத்துவம், தடங்கல்களை நீக்குவதாக இருக்கிறதேயல்லாமல், எந்த ஒரு வெறுப்புக் கருத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை கட்டுரையில் தெளிவாக சொல்லி இருக்கிறேன். அப்படிப்பட்ட நிலையிலே விநாயகர் வழி பாட்டை இகழ்வது அவசியம் இல்லாதது , தவறு என்பதை கட்டுரையில் தெளிவாக சொல்லி இருக்கிறேன்.

இவ்வளவு தெளிவாக சொல்லியும் விதண்டாவாதம் செய்கிறார் என்று சகோதரர் சில்சாம் சொல்லியதற்கு காரணம் நாம் தெரிவித்த கருத்துக்கு சரியான பதில் அவரிடம் இல்லை என்பதே.

இதில் உள்ள நியாயமும் , உண்மையும் சகோதர் சில்சாமுக்கு புரிந்த போதிலும், அவராலும், உங்களாலும் அதை ஒத்துக் கொள்ள இயலவில்லை. ஏனெனில் ஒத்துக் கொண்டால், அதற்குப் பின் பிற மதத்தினர் வணங்கும் தெய்வங்களை, எந்த வித காரணமும் இல்லாமல் இகழ்வதை நிறுத்த வேண்டும். அதற்க்கு உங்களுக்கோ, சில்சாமுக்கோ விருப்பமில்லை.

அதனால் விதண்டாவாதம், தூங்குவது போல நடிக்கிறான் என்று என் மீது பொய்க் குற்றச் சாட்டுகளை எழுப்பி நடிப்பது நீங்கள்தான்.

நீங்கள் எந்த நியாயமான கருத்தை சொல்லி நான் அதை ஒத்துக் கொள்ள மறுத்தேன்?

நீங்கள் சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்ள வேண்டும், அதற்க்கு கீழ்ப் படிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இனப் படுகொலையை கடவுள் செய்யச் சொன்னதாக கூறி செய்திருக்கிறார்களே என்றால், கடவுள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிறீர்கள். மேலை நாடுகளிலேயே இப்படிப்பட்ட இனவாதக் கருத்துக்களை, வன்மையாகக் கண்டிக்கிறார்கள், பைபிளில் எழுதி இருந்தாலும் கண்டிக்கப் பட வேண்டியதுதான் என்கிறார்கள். நீங்கள் எங்களிடம் வந்து கற்கால கருத்துக்களை ஒத்துக் கொள்ளச் சொல்லி, பிற்போக்கு பிரச்சாரம் செய்கிறீர்கள்.

நாங்கள் பிற மதத்தவரின் – அது எந்த மதமாக இருந்தாலும் சரி- காரணமில்லாமல் அவர்கள் தெய்வங்களாக வணக்குவதை இகழக் கூடாது என்றே சொல்கிறோம். இயேசு கிறிஸ்துவையோ, மேரி மாதாவையோ அல்லாஹ்வையும் கூட இகழக் கூடாது என்றே நாம் சொல்கிறோம். கிறிஸ்துவையோ, மேரி மாதாவையோ யாராவது இந்த தளத்தில் இகழ்ச்சியாகப் பேசி இருக்கிறார்களா? அதோடு மத நல்லிணக்க அடிப்படையிலே சர்ச்சுக்கு வந்து பிரேயரில் கலந்து கொள்ளவும் தயார் என்று சொல்லி இருக்கிறேன்.

இவ்வாறாக நாம் இந்த தளத்தை நடத்துவது நாகரிக, சமத்துவ, சமரச நல்லிணக்க சமுதாயத்தை உருவாக்கவே. அதற்க்கு இடையூறாக இருக்கும் வெறுப்புக் கருத்துக்களை அடையாளம் காட்டி , அன்புக் கருத்துக்களை பரப்பவே முயல்கிறோம்.

உங்களுக்கு இந்தக் கருத்துக்கள் பிடிக்கவில்லை. எனவே தான் விதண்டாவாதம், நடிக்கிறான் என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக் கொள்கிறீர்கள். சுதந்திரமான பகுத்தறிவு சிந்தனைகளை , மக்களுக்கு நன்மை தரும் அமைதிக் கருத்துக்களை நீங்கள் சொல்லுங்கள் , எல்லோரும் உங்களைப் பாராட்டி பின்பற்றுவார்கள்.

// உங்களுக்கு இந்தக் கருத்துக்கள் பிடிக்கவில்லை. எனவே தான் விதண்டாவாதம், நடிக்கிறான் என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக் கொள்கிறீர்கள். சுதந்திரமான பகுத்தறிவு சிந்தனைகளை , மக்களுக்கு நன்மை தரும் அமைதிக் கருத்துக்களை நீங்கள் சொல்லுங்கள் , எல்லோரும் உங்களைப் பாராட்டி பின்பற்றுவார்கள். //

சகோதரரே நீங்கள் சொந்தத்திலிருந்து எடுத்துப் பேசுகிறீர்கள்; நானோ சர்வ வல்ல தேவனும் சிருஷ்டி கர்த்தாவுமான பரம்பொருளிடத்தினின்று வந்ததைக் கொண்டு பேசுகிறேன்;

ஏற்கனவே ஆழ்மனதில் பதிக்கப்பட்டதொரு பாதிப்பினால் ஒருவனுக்கு அம்மன் தரிசனமாகிறாள்;தான் மிகவும் உக்கிரமாக இருப்பதாகக் (சாமியாடி..)கூறி ஊருக்குப் பொதுவான இடத்தில் கோவில் கட்டி வழிபடச் சொல்கிறாள்;

அதன்பிறகு நடக்கும் நன்மையோ தீமையோ அதற்கு அந்த அம்மன் விக்ரஹம் தானே பொறுப்பாகும்?

அதுபோல அம்மன் போன்ற விக்ரஹ பூஜைகளால் குறிப்பிட்ட ஊரார் அடைந்த நன்மைகளாக ஏதேனும் கூறமுடியுமா?

கொலை,கொள்ளை,கற்பழிப்பு முதலான அனைத்தும் அன்றாட நிகழ்வாக இல்லையா?

மனிதன் தன் பெலவீனங்களுக்கேற்ற தெய்வங்களை அவனே உருவாக்கிக் கொண்டு சுயமாகத் தேர்ந்தெடுத்து அதற்கு பயந்து நடப்பதுபோல பாவனை செய்கிறான்;

ஆனால் அவனை ஆளவோ நல்வழிப்படுத்தவோ எந்த தெய்வத்துக்கும் உரிமையில்லை;காரணம்,அவன் வணங்கும் தெய்வத்தை இவனே உருவாக்கினவன் அல்லது வாங்கியவன்; எனவே தான் விரும்பினால் வணங்குகிறான்,இல்லாவிட்டால் வேறு வழி நடக்கிறான்;

ஆனால் தாந்தோன்றியும் சுயம்புமான சிருஷ்டி கர்த்தாவோ நிலையான மாறாத கட்டளைக கொடுத்து சிருஷ்டி கர்த்தர் என்ற உரிமையுடன் சமாதான சுகவாழ்வுக்கு அழைக்கிறார்;ஆனால் கீழ்ப்படிய மனமில்லாத மனிதனோ தொடர்ந்து “திருச்சிக்காரன்” போல விதண்டாவாதம் செய்கிறான்..!

dear trichykarar sir
no body can”t bent dog”s tail . so don” waste your time with that christian peoples

திருச்சிக்காரனின் பிரச்சனையே கீழ்படியாமைதான். இது அவருடைய வார்த்தைகளிலேயே புலனாகிறது. உதாரணதிற்கு, இவர் இயேசுவை கைவிடமாடாராம். ஏதோ இவர் தயவில் இயேசு இருப்பது போன்ற தலைகனம்.
மேலும் இவர் கிருஸ்துவர்கள் எல்லாம் வெறுப்பு கருத்துக்களை பரப்புகிறார்கள் என்று வேறு சாடுகிறார். இங்குள்ள பின்னூட்டங்களை எல்லாம் பார்த்தல் நன்றாகவே தெரியும் யாருடைய வார்த்தைகளில் வெறுப்பு தெறிக்கிறது என்று.
ராமுடைய வார்த்தைகளில் அன்பு விளையாடுகிறதா? முருகன் என்ற பெயரில் எழுதுபவரின் வார்த்தைகள் அன்பானவையா? திருச்சிக்காரனின் வார்த்தைகளில் முக்கால்வாசி, “காழ்புணர்ச்சி”, “வெறுப்பு”, “அலப்பறை”, இன்னும் என்னவெல்லாம் வெறுப்பான வார்த்தைகள் உள்ளனவோ அனைத்தும் காணலாம். ஏதோ தனபால் ஒரு விதிவிலக்காக இப்போதுவரை இருக்கிறார்.
ஆனால், வெறுப்பு கருத்து கூறுவோர் என்று திருச்சிக்காரனால் கூறப்படுபவர்கள், யாரும் பிற “மனிதரின்” மீது வெறுப்பாக இருப்பதாக தெரியவில்லை. சிந்தியுங்கள் நண்பர்களே.
அன்புடன்,
அசோக்

காழ்ப்புணர்ச்சி செய்யாதீர்கள், வெறுப்புக் கருத்துக்களை விட்டு விடுங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன். கொலை செய்யாதே என்று சொன்னால் அதில் உள்ள கொலையை மட்டும் எடுத்துப் போட்டு “கொலை என்று எழுதி இருக்கிறார் என்று சொல்வது போல இருக்கிறது. கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கான நிரூபணம் எதுவும் இல்லை. ஆனால் அவர் பெயரால் பிற மதத்தவரின் வழிபாடுகளை இகழ்ந்து பூசலை உருவாக்குகிறார்கள். . நிரூபணம் இல்லாத ஒன்றின் பேரால் அடாவடியாகப் பேசுவது அலப்பறை தானே. இனப் படுகொலைக் கருத்துக்களுக் கீழ்ப் படி என்று சொல்வது சரியா என சிந்திக்க வேண்டும்.

அசோக் குமார் அவர்களே, உங்களின் கருத்துக்கள் எல்லாவற்றுக்கும் நாம் பகுத்தறிவின் அடிப்படையிலே தான் பதிலளித்து வருகிறோம். எனக்கு எந்த வெறுப்புணர்ச்சியும் இல்லை. இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும், பாதுக்காக்கப் பட வேண்டும், சம வாய்ப்பு , உரிமை வழங்கப் பட வேண்டும் என்றே சொல்லி வருகிறேன்.

One has commented (or asked a question) that does an Amman Temple established in a village protects the people from all sort of crime. Poor fellow! I wonder how the ignorance could take such an immense form like this person bears. He has completely forgot that the Christian world’s crime rates. Could his Bible-created God protect the accidents, serial killings, natural disasters, robberies, kidnaps, etc etc. in the Christian countries? Appallingly dreadful arguments.

Hey dude, grow up! You have forgotten that you are not from Jerusalem but you are deliberately manipulated by the Nazi mission, the Vatican. They sent some priests and had succeeded in proselytizing the Indians (you and your so-called Christian friends). Now you are leading the Nazi job without any guilty consciousness. It’s like watching an ‘Alien’ movie where an alien came from a far-away planet (?) intoxicate the inhabitants and the infected will do the rest of the destruction 😛

// Poor fellow! I wonder how the ignorance could take such an immense form like this person bears. He has completely forgot that the Christian world’s crime rates. Could his Bible-created God protect the accidents, serial killings, natural disasters, robberies, kidnaps, etc etc. in the Christian countries? Appallingly dreadful arguments.//

எம்ப்பா,ரிச் பெல்லோ…அந்த கர்மாந்தரத்த வணங்குறதால ஒரு ப்ரயோஜனமும் இல்லன்னா எதுக்கு எல்லா ஓட்டையிலும் எதையாவது குத்திக்குனு கவுந்துக்கணும்..?

உங்க வேல் கம்பு ஈட்டியெல்லாம் அங்கே போன பிறகே உலகில் வன்முறை அதிகமாகியிருக்கிறது;

நீங்க கிறிஸ்தவ நாடுன்னு பெரிசா நினைக்கிற எதுவும் கிறித்தவ நாடல்ல;இல்லாவிட்டால் இஸ்லாமிய தீவிரவாதிகள் இடித்துத்தள்ளிய இரட்டை கோபுரத்துக்கு அருகிலேயே மாபெரும் மசூதி அமைய அனுமதிப்பார்களா?‌

நண்பர் திருச்சிக்காரனுக்கு ஒரு வேண்டுகோள்,இதுபோல தனிப்பட்ட விதத்தில் தாக்குவோருக்கு சாமரம் வீசும் போக்கு தொடர்ந்தால் மற்றொரு இந்து தளத்திலிருந்து வெளியேறியது போலவே இங்கிருந்தும் வெளியேறுவோம்;

நட்பு ரீதியில் பெயரைக் குறிப்பிட்டு அமைதியான முறையில் தனது கருத்தைச் சொல்லத் (தெரியாதவனுடைய கருத்தினால் யாருக்கு இலாபம்..?) தெரியாதவர்களை வைத்துக்கொண்டு எப்படி நாகரீக சமுதாயத்தை உருவாக்கப்போகிறீர்கள்..?

இந்து மார்க்கத்தைப் பற்றி எதாவது எழுதினால் அடிப்படை அறிவில்லாமல் எழுதுவதாகக் கூறும் நீங்கள் சகட்டுமேனிக்கு கிறித்தவ மார்க்கத்தவ்ரைக் குறிவைத்து தாக்கி புண்படுத்தினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்..!

இங்கே யாருக்கும் அடுத்தவன் கருத்தை பரிசீலிக்கிற பொறுமை இல்லை;எல்லோரும் புத்திசாலி என்ற நினைப்பிலிருக்கிறோம்;இங்கு நேரத்தை வீணாக்குவதைவிட அறிவு விருத்திக்கு உதவும் உபயோகமான எதையாவது செய்யலாமே என்று தோன்றுகிறது;

நீங்களெல்லாம் சந்தோஷமா எதையாவது பேசிண்டிருங்க..!

1.விவிலியத்தின் படி உலகம் படைக்கப் பட்டடது(?) சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன்புதான்.ஆனால் ஆராய்ச்சி முடிவுகள் மறுக்கின்றன.

2.இப்பொது இயேசு என்பவர் வாழ்ந்தாரா இல்லையா என்பதே விவாதப் பொருளாக மாறி வரும் போது இன்னும் பழைய சரக்கையே விற்காதீர்கள்.

3.விவிலியத்தின் படி ரோமன் கத்தோலிக்க மதம்,போப்,வாடிகன் எல்லாம் ஏற்றுக் கொல்லப் பட தக்க்கது அல்ல.பின் ஏன் அந்த மதம் சுமார் 1000 வருடம் ஐரோப்பா சாம்ராஜ்யத்தை ஆள உஙக் கர்த்தர் அனுமதித்தார்?

4.விவிலியத்தில் வரும் எல்ல ஆசாமிகளுமே அரேபியா ,பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் உள்ள்வர்களாகவே இருக்காஙக?.அவங பிரச்சனை மட்டுமே கடவுள் கன்டுக்கிறார்?வெறு பகுதியில் மக்கள் இருந்தது கடவுளுக்கு தெரியுமா?
முத்லில் இந்த மாதிரி வினாககளுக்கு விடை அளிக்கவும்.நாளை மீண்டும் சந்திப்போமா?
சந்தானம்

//1.விவிலியத்தின் படி உலகம் படைக்கப் பட்டடது(?) சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன்புதான்.ஆனால் ஆராய்ச்சி முடிவுகள் மறுக்கின்றன//
யார் அந்த ஆராய்ச்சியாளர்? அல்லது யார் தலைமையில் அந்த ஆராய்ச்சி குழு இயங்கியது? அந்த ஆராய்ச்சி ஆவணம் இருக்கிறதா? சும்மா TV பார்த்துட்டு வந்து கதை அடிக்க கூடாது.

//2.இப்பொது இயேசு என்பவர் வாழ்ந்தாரா இல்லையா என்பதே விவாதப் பொருளாக மாறி வரும் போது இன்னும் பழைய சரக்கையே விற்காதீர்கள்.//
யாராவது நாலு பேர் ஏதாவது விவாதம் செய்வதால் இயேசு என்பவர் இல்லை என்று ஆகிவிடுமா? யாரும் உங்களிடம் எதையும் விற்கவில்லை. உண்மையை கூறுகிறோம் நம்பினால் நம்புங்கள்.

//3.விவிலியத்தின் படி ரோமன் கத்தோலிக்க மதம்,போப்,வாடிகன் எல்லாம் ஏற்றுக் கொல்லப் பட தக்க்கது அல்ல.பின் ஏன் அந்த மதம் சுமார் 1000 வருடம் ஐரோப்பா சாம்ராஜ்யத்தை ஆள உஙக் கர்த்தர் அனுமதித்தார்?//
இந்த கேள்விக்கு பதில் கொடுங்கள். சீதையை ராவணன் தூக்கி சென்றபோது, உங்கள் கண்ணபிரான் ஏன் காக்க வரவில்லை? அப்போது அவர் ராமனாக இருந்தார் என்று சிறுபிள்ளை தனமாக பதில் சொல்லவேண்டாம். அந்து இன்னும் பல கேள்விகளுக்கு வழிவகுக்கும். சீதையை இராவணன் தூக்கி செல்வது செய்வசித்தமா?

//4.விவிலியத்தில் வரும் எல்ல ஆசாமிகளுமே அரேபியா ,பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் உள்ள்வர்களாகவே இருக்காஙக?.அவங பிரச்சனை மட்டுமே கடவுள் கன்டுக்கிறார்?வெறு பகுதியில் மக்கள் இருந்தது கடவுளுக்கு தெரியுமா?//
விஷ்ணு எதற்கு, எல்லா அவதாரங்களையும் இந்தியாவிலேயே எடுத்தார். மற்ற பிரதேசங்களில் மக்கள் இருப்பது அவருக்கு தெரியாதா? அல்லது இந்தியாவில் மட்டுமே நிறைய அநீதிகள் நடந்ததா?
விவிலியத்தில் இரண்டு இடங்களில் இந்தியாவின் பெயர் வந்துள்ளது. மற்றபடி, விவிலியத்தில் குறிப்பிடும்படி யாரும் இல்லாத காரணத்தால் அவர்கள் பெயர் இடம்பெறவில்லை.
ஆனால் இந்துக்களின் புனித புத்தகங்களில் இந்தியாவை (இலங்கையையும் சேர்த்துக்கொள்ளலாம்), தவிர
எதையும் குறிப்படவில்லை.
சந்திப்போம்,
Hard Truth

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: