Thiruchchikkaaran's Blog

சங்கராச்சாரியார் நிறுவிய மடங்கள்!(சங்கராச்சாரியார் யார்? பகுதி- 3)

Posted on: December 28, 2010


சங்கராச்சாரியார் நான்கு மடங்களை ஸ்தாபித்தார் என்பதை வரலாற்றில் இருந்து அறிந்து கொள்கிறோம். அவற்றைப் பற்றிய விவரங்களை இந்தக் கட்டத்திலே கொடுப்பது அவசியம் என்று நினைக்கிறேம்.

சங்கராச்சாரியார் யார் என்கிற தொடரில் இரண்டு பாகங்களே வெளியிட்டு இருக்கிறோம். இன்னும் சங்கராச்சாரியாரின் கோட்பாடுகளை நாம் ஆராய வேண்டியது, அதில் அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது. சங்கராச்சாரியாரின்  பணியில்  அவர் மடங்களை ஸ்தாபனம்  செய்தது ஒரு பகுதியே.   அவர் தன் வாழ் நாளில்  பல்வேறு மக்களை சந்தித்து இருக்கிறார். பல்வேறு சமூகங்களை சந்தித்து இருக்கிறார். பலருடன் விவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். மீனவ சமுதாயங்களை, பலுசிஸ்தான்  பகுதி சமுதாயங்களை எல்லாம் அவர் பிராமண சமுதாயமாக மாற்றி இருப்பதாக கூட குறிப்புகளை நாம் காண்கிறோம்.

இளைங்கரான  அவர் பம்பரம் போல இந்தியா முழுவதும் கால் நடையாகவே சுற்றிப் பணி செய்து இருக்கிறார்.

File:Raja Ravi Varma - Sankaracharya.jpg

அவருடைய நேரடி சீடர்களான ஹஸ்தாகமலர், தோடாகாச்சாரியார் சுரேஸ்வாச்சாரியார் , பத்மபாதர் ஆகிய    நால்வரும் அவருடன் இருந்த போதும் அதற்குப் பிறகும் சிறப்பாக பணி செய்து இருப்பார்கள் என்றே நம்புகிறோம்.  ஆனால் அவர்களுக்கு பின் வந்தவர்கள் சங்கராச்சாரியார் போல சுற்றி சுழன்று பல மக்களையும் சந்தித்து ஆதி சங்கரரின் கோட்பாட்டை அனைவரும் அறியச் செய்தார்களா என்பது சந்தேகமே. இந்த வகையில் எனக்கு  இது ஒரு வகையான மன வருத்தமே. எனினும் இன்று நம்மைப் போன்றோர் சங்கராச்சாரியாரைப் பற்றி அறியவும், ஆராயவும் செய்யும் அளவுக்காவது அவருடைய நூல்களை பாதுகாத்து இன்றைக்கு நாம் அறியத் தந்தவர்கள என்ற வகையிலே அவர்களுக்கு நன்றி செலுத்துகிறோம்.

நான்கு மடங்கள் யாவை, எந்த எந்த மடத்துக்கு எந்த வேதம் முக்கிய வேதமாக தரப் பட்டது, அதன் முதல் பீடாதிபதி யார் என்கிற விவரங்ககளை  கீழே காணாலம். ஒவ்வொரு வேதத்திற்கும் முக்கிய கோட்பாடாக அமைந்த வாக்கியத்தையும் குறிப்பிட்டு இருக்கிறோம். அது முக்கியமானது. ஒவ்வொரு வாக்கியத்தையும்  நாம் பிறகு  ஆராய்வோம். சங்கராச்சாரியாரின் கோட்பாடுகள் அவற்றோடு பொருந்தி உள்ளன.
              File:Adi shankara.jpg
File:Kaladi shankarabirthplace.jpg

மடம் அமைக்கப் பட்ட திசை 

கிழக்கு 

தெற்கு 

மேற்கு 

வடக்கு 

பீடத்தின் பெயர் 

கோவர்த்தன மடம் 

சிருங்கேரி மடம் 

கலிக மடம் 

ஜ்யோதிர் மடம் 

மடம் அமைக்கப் பட்ட இடம் 

பூரி (ஒரிசா)

சிருங்கேரி (கர்நாடக)

துவாரகா (குஜராத்)

பத்ரிநாத் (உத்தராஞ்சல்)

நதிகள் 

மகாநதி 

துங்கபத்ரா 

கோமதி

அலகானந்

வேதம்

 ரிக்  வேதம்

 யஜுர்  வேதம்

 சாம வேதம்

 அதர்வண வேதம்

மஹாவாக்கியம்

प्रज्ञानं ब्रह्म
(Prajnanam Brahma)

ப்ரக் ஞானம் பிரம்மம்

अहं ब्रह्मास्मि
(Aham Brahmasmi)

அஹம் பிரம்மாஸ்மி

तत्त्वमसि
(Tattvamasi)

தத் துவம் அசி

अयमात्मा ब्रह्म
(Ayamatma Brahma)

அயம் ஆத்மா பிரம்மம்  

பீடத்தின் முதல் ஆச்சாரியார்

ஸ்ரீ ஹஸ்தாகமலாச்சாரியார்

ஸ்ரீ சுரேஸ்வாச்சாரியார் ,

ஸ்ரீ பத்மபாதாச்சாரியார்

ஸ்ரீ தோடாகாச்சாரியார்

    

 

Leave a comment

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 45 other subscribers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09