Thiruchchikkaaran's Blog

ஈச்சை மரத்து இன்பச் சோலை – பகுதி 2

Posted on: December 29, 2010


 முந்தைய கட்டுரை- ஈச்சை மரத்து இன்பச் சோலை – பகுதி 1-,  இல் இஸ்லாம் உருவாகும் முன்பு மத்தியக் கிழக்கு ஆசிய, மற்றும் மத்திய தரைக் கடல் பகுதியில் நிலவி வந்த சமூக, அரசியல், சமய நிலைமைகளை விளக்கி இருந்தோம்.

https://thiruchchikkaaran.wordpress.com/2010/05/02/islaam-part-1/

// கர்த்தர் என்றும், ஜெஹோவா என்றும் கூறப் படும்  கடவுள் யூதர்களைக் காப்பவர், அவரை மட்டுமே யூதர்கள் வணங்க வேண்டும் எனக் கூறி யூதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு  மதத்தையும்,  சமுதாயத்தையும், சட்டங்களையும், நாட்டையும்  மோசஸ் உருவாக்கினார் என நம்பப் படுகிறது. 

 யூத மதமானது தன்னுடைய கடுமையான மதக் கொள்கைகளோடு,   யூதர்களின் இனவாதக் கொள்கையை நியாயப்படுத்தும் வகையிலே அமைக்கப் பட்டு இருந்தது. அவற்றை சீர்திருத்த இயேசு கிறிஸ்து முயன்றார். இயேசு கிறிஸ்துவின் பெயரால் உருவாக்கப் பட்டது கிறிஸ்துவ மதம்.

 நான்காம் நூற்றாண்டிலேயே மத்தியத்ததரைக் கடல் பகுதியில் அமைந்துள்ள ரோம் உள்ளிட்ட பெரும்பாலான  நாடுகள் கிறிஸ்தவ மதத்தை தழுவின.   

……அரேபியப் பாலைவனப்   பகுதியில் வாழ்ந்து வந்த  மத்தியக் கிழக்கு ஆசியாவின் முக்கிய இனமான அரேபியர்கள் பைடூன்கள் எனப் படும் நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர்.  அவர்களை ஒன்றிணைத்து ஒரு  மத,  சமூக, அரசியல் அமைப்பை கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்தது. இந்த சூழலிலே இஸ்லாம் தோற்றுவிக்கப் பட்டது.//

ஈச்சை மரத்து இன்பச் சோலை – பகுதி 2

                            File:Aziz efendi-muhammad alayhi s-salam.jpg

இஸ்லாத்தை நிறுவியவர் முகமது (ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் ) நபி ஆவார்.

முகமது (ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் )க்கு கடவுள் (அல்லாஹ்) அருளியது திரு  குர் ஆன், அவற்றில் கூறப்  பட்டவற்றை அப்படியே கடைப் பிடிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை.

முகமது (SAAW) இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்கிய போது அவர்களுக்கு  வாழ்வியல்,  சமய, சமூக, அரசியல், பொருளாதார, இராணுவ கோட்பாடுகளை மொத்தமாக உருவாக்கி தந்து இருக்கிறார். இது கிட்டத்தட்ட மோசஸ் யூத சமூகத்தை உருவாக்கியது போல உள்ளது. ஆனால் மோசஸ் யூதருக்கு மட்டுமான மதத்தை உருவாக்கினார். முகமது (SAAW)   யார் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளக் கூடிய வகையிலே இஸ்லாத்தை உருவாக்கினார்.

சமயக் கோட்பாடு :

இஸ்லாத்தின் மிக முக்கிய அங்கம் கடவுள் கோட்பாடே.  பள்ளியிலே உலக வரலாறின் ஒரு பகுதியாக இஸ்லாத்தைப் பற்றியும் படிக்கிறோம், அதிலே அதிலே இஸ்லாத்தின் முக்கியக் கோட்பாடு எனக் குறிப்பிட்டு “கடவுள் ஒருவரே, அவரே அல்லா” என  எழுதி இருப்பார்கள். இது பள்ளியில் (school) வரலாற்று பாடத்தில் நாம் படித்தது.

இதன் மூல அரேபிய வசனம்,

لا إله إلا الله محمد رسول الله

“லா இலாஹா இல்லல்லாஹ்

முஹம்மது ரசூல் அல்லாஹ்” என்பதாகும் 

“இல்லை ஒரு கடவுள் அல்லாஹ்வினைத் தவிர ,

முகமது அவரது தூதர்” என்பதே இதன் அர்த்தம்.

கடவுள் மறுப்புக் கொள்கையை இஸ்லாம்  அனுமதிக்கவில்லை.

கடவுளை எப்படி வழிபட வேண்டும் என்பதற்கான வழி முறைகள் தொகுக்கப் பட்டு உள்ளன. அதன் படியே தொழுகை நடத்தப்பட வேண்டும். வேறு வழிகளில் தொழுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

(தொடரும்)

Advertisements

5 Responses to "ஈச்சை மரத்து இன்பச் சோலை – பகுதி 2"

//கடவுள் மறுப்புக் கொள்கையை இஸ்லாம் அனுமதிக்கவில்லை// என் கடவுளைத் தவிற வேறு கடவுளர் இல்லை என்பதும் ஒரு ஸெமி கடவுள் மறுப்பு தான்.

ஒ கடவுளில் கூட உன் கடவுள் என்கடவுள் இருக்கா இது தெரியாம போச்சே.

“லா இலாஹா இல்லல்லாஹ்

முஹம்மது ரசூல் அல்லாஹ்” என்பதாகும்

“இல்லை ஒரு கடவுள் அல்லாஹ்வினைத் தவிர ,

முகமது அவரது தூதர்” என்பதே இதன் அர்த்தம்.

என்று சொல்லும் முட்டாலே..முதலில் விடயம் தெறியும் என்றாத்தான் அதைப் பற்றி பேச வேண்டும்..
நீ சொல்வது இதன் கருத்து இல்ல..இதன் உன்மையான கருத்தானது
“لا إله إلا الله -அல்லஹ்வே இறைவன்.,
محمد رسول الل-அவனது தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள்.பேச வந்துட்டாங்க எல்லாம் தெரிந்தவன் போல..

அன்புக்குரிய நண்பர் திரு. உண்மை அவர்களே,
அஸ்ஸலாம் அலைக்கும். தளத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

/“லா இலாஹா இல்லல்லாஹ்

முஹம்மது ரசூல் அல்லாஹ்” என்பதாகும்

“இல்லை ஒரு கடவுள் அல்லாஹ்வினைத் தவிர ,

முகமது அவரது தூதர்” என்பதே இதன் அர்த்தம்.//

இது மிகச் சரியான கருத்து.

நீங்கள் அரபு மொழி நன்றாக அறிந்த இஸ்லாமிய அறிஞர்களிடம் விசாரியுங்கள். அவர்கள் உங்களுக்கு சொல்லிக் குடுப்பார்கள். அதைக் கேட்டு விட்டு பிறகு எழுதவும்.

பொருள் அறியாமல் எழுதியது நீதான். இதிலே வாய்க் கொழுப்பெடுத்து வார்த்தையைப் பாரு.

உன்னுடைய வெறித்தனத்துக்கு , அடாவடி மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சுபவன் அல்ல நான். புரியுதா. இது சிந்தனைகளை பற்றி ஆராயும் தளம்.

அவசரமாக வந்து அதட்டல் மிரட்டல் போட்டு உளறுவதை விட்டு விட்டு , முதலில் சரியாகப் படித்து ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் என்ன என்று தெரிந்து கொள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: