Thiruchchikkaaran's Blog

அஸ்லி பிஜ்லி சர வெடி!

Posted on: December 26, 2010


அனுமனைப் பற்றி சிறுவனாக இருக்கும் போதே நாம் அறிந்து இருக்கிறோம். அவர்   சிறுவனாக இருந்த போது துடிப்புடன் இருந்தவர், பின்னாளில் அவர் இராமருக்கு பல உதவிகள் செய்து இருக்கிறார் என்பதை எல்லாம் கதை  கேட்டு, புத்தகம் படித்து தெரிந்து இருக்கிறோம். சிறுவனாக இருந்த போது அன்னையுடன்  கோவிலுக்கு போன போது அனுமனை  வணங்கியும்   இருக்கிறோம்.

ஆனால் அப்போதெல்லாம் நான் உணராத ஒரு பிரமிப்பை, பின்னாளில்  எல்லாவற்றையும் பகுத்தறிவு அடிப்படையிலே , சிந்தனையின்  கோணத்திலே அணுகும்  காலத்திலே, அனுமனையும்   பகுத்தறிவு கோணத்திலே   அணுகிய போது,

 அவருடைய  அநியாயத்தை தட்டிக் கேட்கும் துணிவு,  அர்ப்பணிப்பு, சுயநலமின்மை, நியாயத்துக்காக போராடும் உறுதி, எந்த நிலையிலும் கலங்காத மன உறுதி…. ஆகியவற்றை ஆராயும்போது மிக்க பிரமிப்பு அடைந்தேன்

                    

தொண்டன் என்றால் அதற்க்கு மிகச் சரியான உதாரணம் அனுமனே. அனுமனைப் பொறுத்தவரையில் – இராமர் கடவுளா, கடவுளே மனித உருவில் வந்ததா, என்பது எல்லாம் அவருக்கு தெரியாது ( ஜடாயு, குகன், சுமேந்திரர், சுக்ரீவன், நீலன், நலன், விபீடணன் …. உள்ளிட்ட பலரும் அப்படியே  என்பதையும் இங்கே குறிப்பிடுகிறோம்).

அனுமனைப் பொறுத்தவரையில் அவர் இராமரைக் காட்டிலே சந்திக்கிறார்.  இராமர் காட்டுக்கு வந்ததற்கான காரணம்  என்ன என்று கேட்கிறார்.  தன்னுடைய தாயின் விருப்பத்தை நிறைவேற்ற ,  தந்தையின் சொல்லைக் காக்க, பதவி என்பதை தோளில்  போடும் துண்டு போலவும், கொள்கையை இடுப்பில் அணியும் வேட்டி போலவும் கருதி காடு வந்தவர் இராமர் என்பதை அறிந்து  கொள்கிறார். 

 அட இப்படியும் இருக்கிறாங்களா என்று வியப்படைகிறார்.  அந்த அளவுக்கு தியாகம் செய்த நல்லவனைக்  காட்டில கூட நிம்மதியா இருக்க விடாத படிக்கு அவர் மனைவியை தூக்கி சென்று விட்டானே என்று எண்ணி பார்க்கிறார். 

அநியாயத்தை தட்டிக் கேட்கும் மன உறுதி கொண்ட அனுமன், தான் தலைவனாக ஏற்க தகுதியான கொள்கையும், செயல் பாடும் உடையவர் இராமர் என்பதை புரிந்து கொள்கிறார். 

எந்தப் பதவியையோ சொத்து சுகத்தையோ எதிர்பார்த்து இந்த பணியில் அவர் இறங்கவில்லை. ஒரு நல்லவர், இவ்வளவு கஷ்டப்படுகிறாரே என்கிற நல்லெண்ணத்திலே இதை செய்திருக்கிறார்.

சுக போகங்களை நாடவில்லை, காட்டிலே இருக்கும் கனிகளையும் கிழங்கையும் மட்டுமே உண்டு, எந்த பிரதிபலனும் பாராமல் வியக்கத் தக்க ஒரு செயலை செய்திருக்கின்றனர் அனுமனும் அவரது குழுவினரும்.

“போய்யா, பார்த்த வரைக்கும் பார்த்தாச்சு, அந்தப் பொம்பளை செத்துப் போச்சுன்னு  சொல்லி விடலாம்” என்று முடிவெடுத்து,  “ஐயா, அந்த அம்மாவை    காட்டுல புலி அடிச்சு சாப்பிட்டு  விட்டது,  அந்த இராவணன் பய ஓடிட்டான் ” என்று  ஏதாவது ஒரு எலும்புக் கூடை கொண்டு போய் காட்டி  “இது தாங்க அது”,  என்று விறைப்பாக ஒரு சல்யூட்டை அடைத்து விட்டு, கேசை மூடும் சிரிப்பு போலீசு போல அவர்கள் செயல்படவில்லை.

எல்லோருக்கும் எடுத்துக் காட்டாக விளங்கும் வண்ணம் நான்கு திசையிலும்  மூலை முடுக்கெல்லாம் சென்று துப்பு துலக்கி உள்ளனர்.  

அனுமனின் மனதில் உள்ள நற்குணங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக பரிணமித்து முழுமை பெற்றது, அவன் சீதையை இலங்கையில் அசோக வனத்தில் சந்திக்கும் போதுதான்.  எப்படிப் பட்ட பெண்ணரசி இவர்,  “”காட்டுக்கு நீ போனா போயிக்கோ” என்று சொல்லி விட்டு அயோத்தி அரண்மனையிலே தங்காமல், கணவனின் சுகத்திலும் துக்கத்திலும் பங்கெடுக்க வனம் சென்றவர்,

சர்வாதிகார கொடுங்கோலன், காம கொடூரன் இராவணனின் உருட்டல் மிரட்டலுக்கும் அஞ்சாமல் இருப்பவர்! இராமரின் சிறப்பைக் கூட   கூட அக்கணம் மறந்து இருப்பார் அனுமன், சீதை எவ்வளவு சிறந்தவர், இந்த உத்தமிக்கு இவ்வளவு துயர் தந்த இராவணின் இடுப்பொடித்து இவரின் இன்னலை தீர்ப்பது என்று முடிவெடுத்து விட்டார் அனுமன்.

இன்றைய தினம் உலகெங்கும் உள்ள இந்துக்களால் அதிகம் வழிபடும் கடவுள் யார் என்று ஆராய்ந்தால் அதிலே முன்னணியில் இருப்பது அனுமனாகவோ, வினாயகராகவோ இருந்க்க கூடும் என்றே நான் கருதுகிறேன். 

                              

குறிப்பாக பெண்கள் அனுமனை, – சங்கடம் தீர்ப்பவர்,  கட்டுப்பாடு தவறாமல் ஒழுக்கம் காக்கும் உத்தம சீலர்,  பொறுக்கி பசங்களை தூக்கிப் போட்டு பெண்டு எடுப்பவர், …இன்னோரன்ன காரணங்களுக்காக அவரை வணங்கி வழி படுகின்றனர்.

இந்தியா  முழுவது அனுமன் வழிபாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இன்னும் சொல்லப் போனால் இராமரை விட அதிகமாக அனுமனுக்கு கோவில்களும் வழிபாடுகளும் பெருகிக் கொண்டே செல்கின்றன. இன்று இராமர் இருந்திருந்தால் அவர் இதைக் கண்டு மகிழ்ச்சியே அடைந்து இருப்பார்.

நண்பர்களே இராமரைப் பற்றிக் கூட என்னால் ஓரளவுக்கு விவரிக்க இயலும்.  ஆனால்  அனுமனின் சுருசுறுப்பையோ, வீரத்தையோ, சாதுரியத்தையோ, சிறப்பையோ, தியாகத்தையோ, அர்ப்பணிப்பையோ, அறிவுக் கூர்மையையோ, பேச்சாற்றலையோ   என்னால் முழுமையாக விவரிக்க இயலாது. இப்போதைக்கு இதோடு முடிக்கிறேன்.

குறிப்பு:  “அஸ்லி பிஜ்லி சர வெடி” என்றால் அசலான எலெக்ட்ரிக் சர வெடி என்று அர்த்தம். தீபாவளி அன்று வெடிக்கப் படும் வெடிகளில் சர வெடி தனி ஸ்பெஸலானது.  தொடர்ச்சியாக அதே நேரம் ஏற்ற இறக்கங்களுடன் தொடர்ந்து வெடிக்கும் சர வெடி பிரமிப்பை உண்டு பண்ணுவதாகும்.

 அனுமனைப் பற்றிய கட்டுரைக்கு,  “அஸ்லி பிஜ்லி சர வெடி” என்று தலைப்பு வைத்தால் அனுமனின் செயல்பாட்டிற்கு அது பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தே இந்த தலைப்பை வைத்தேன்.   
Advertisements

2 Responses to "அஸ்லி பிஜ்லி சர வெடி!"

ஹ்னுமார் என்ற மக்கள் வழிப்படும் தெய்வத்தின் குணாதிசயங்கள் நன்றாக அல‌சப்பட்டிருக்கிறது. நாம் ஹனுமரை வெறும் நமது தேவைக்கு வழிபடும் தெய்வமாக மட்டும் பார்க்காமல் அவரின் உண்மையான் எடுத்துக்காட்டான குணாதிசயங்களை நம் வாழ்க்கையில் எடுத்துக்கொண்டும் பின்பற்றும்படியாக ஒரு உதாரணப்புருசனாக நம் வாழ்க்கையின் பாதையை செப்பனிடுவதற்க்காக எடுத்துக்கொள்ளலாமே.

எத்தனை இளைஞர்கள் பாதை தவறி செல்கிறார்கள். இதில் ஹனுமரின்…வீரம்….அதுவும் அநியாயத்திற்க்கெதிராக போராடப்படுகிறது…முக்கியமாக அவரின் ஒழுக்கம்…வணங்கும் நாம் இதையெல்லாம் உணர்கிறோமா..

இப்படியான புராணங்களில் வரும் நற்க்குணங்களை நாம்/மனிதன் தனது வாழ்வியலில் ஒட்டிப்பார்க்கவேண்டும். கொஞ்சமாவது நினத்துப்பார்த்தால் தீமை ஏது. பிறரை துன்புருத்துதலாவது குறையுமே. பிறரை தன்னைப்போல நேசிக்கவேண்டும் என்று உறைக்கப்படிடிருக்கிறது…இது ஒன்றே போதுமே.

பொது வாழ்வில் மனிதன் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதற்க்காகத்தான் புராணங்கள்…

அன்புக்குரிய சகோதரர் திரு. பொன் அவர்களே, தளத்திற்கு வருகை தந்தற்கும், கருத்தைப் பதிவு இட்டதற்கும் மிக்க நன்றி. உங்களுடைய கருத்து கட்டுரையை விட சிறப்பாக இருக்கிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும். மிக முக்கியமாக ஒழுக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளீர்கள். ஒழுக்கம் இல்லாதவன் வீரனாக இருப்பதால் மக்களுக்கு ஆபத்தே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: