Thiruchchikkaaran's Blog

இந்துக் கடவுள்கள் பற்றி விளக்கம் தாருங்கள்!

Posted on: September 17, 2010


 

அன்புக்குரிய சகோதரர் திரு. அசோக் குமார் கணேசன் அவர்கள் கேட்ட படியே இந்துக்கள் வணங்கும்  பலவேறு தெய்வங்கள், அவர்களின் கோட்பாடுகள்,   வழி பாட்டு முறைகள ஆகியவை பற்றி  கட்டுரைகள் எழுத வேண்டிய பொறுப்பு நமக்கு வந்துள்ளது.

ஒவ்வொரு இந்து தெய்வத்துக்குமான கோட்பாடுகள், அவற்றை வணங்கும் இந்துவின் மனதில் தோன்றும் உணர்வுகள், அதனால் அவனுக்கும், அவன் குடும்பத்துக்கும் ஏற்ப்படும விளைவுகள், சமூகத்திற்கு  உருவாகும் விளைவுகள் பற்றி நம் கட்டுரைகள் விளக்கம் அளிக்கும்.

Advertisements

34 Responses to "இந்துக் கடவுள்கள் பற்றி விளக்கம் தாருங்கள்!"

There is No God, period, so all the rituals you do in the name of GOD is all waste of time, money and energy and at the end the comman man is cheated by the temple, periests and bogus saamees.

nowadays temples are the place where the dhiravida governments grab money from devotees. merely they are enjoying all the income from temple.
if practicing rituals are waste than what is the meaning of celebrating the birthday of useless leaders and offering flowers and decorating their square.
by their name releasing culprits, spending huge money to install their idol and pillars and memorial halls by wasting public money.
if the the dhiravida governments are really wants to stop all the wastage in the name of god, why dont they ban all temples and worshiping places in entire tamilnadu.
stupid leaders from the dhiravida parties are going to temple,performing and attending rituals.joining ifthar and praising the lord.
dhiravida party means ——– contradictions

being an indian is better than to be a thamilan. we dont want any diversity by the name of language, and religion.

in this blog discussion or debate is very usual between us and other religious brothers.but we are not separated.
we brothers having blood relation,dont try to play in between my dear brother.
by the name of party(mostly diravda) so many people are collecting many from platform vendor to industrialist. first this sick parties to be reformed.

திராவிடக் கட்சிகள் ரொம்ப நல்லவை என்று நான் சொல்லவில்லை. அவற்றைப் பற்றி மக்களுக்கே தெரியும். எல்லாக கட்சிகளையும் பற்றி மக்களுக்கு தெரியும். காங்கிரஸ் , பி.ஜே.பி கட்சிகள் நல்ல கட்சிகளா ?

நாம் அரசியல் பற்றி அதிகம் எழுதுவதில்லை, ஏனெனில் நம்முடைய வழி ஆன்மீக வழியே. உண்மையான ஆன்மீகம் ஒரு மனிதனை ஒழுக்கமுள்ளவனாக்கி, அவன் தன்னலத்தை விட்டு கடமையை செய்யுமாறு தூண்டும் என்பது நமது கருத்து.

ஆதி சங்கரர் அசோகரைக் குறை சொல்லிக் கொண்டு இருந்தாரா, சுவாமி விவேகாந்தர் ஆங்கிலேயரைக் குறை சொல்லிக் கொண்டு இருந்தாரா? மகேந்திர பல்லவன் அப்பரின் தலையில் யானையை மிதிக்கக் சொல்லி உத்தரவு போட்டாரே, யானை அருகில் வந்த போதும் “நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம் என அப்பர் பாடவில்லையா? உண்மையான் ஆன்மீக வாதி மக்களிடம் போவான். அவன் அரசியலில் கவனம் செலுத்த மாட்டான். . நீங்கள் திராவிட பார்ட்டிகளை குறை கூர்வதை விட உண்மையான ஆன்மீகத்தை மக்களிடம் எடுத்து சென்றாலே எல்லாம் சரியாகி விடும். முதலில் உண்மையான ஆன்மீகம் என்ன என்பதை உணர்ந்து கொண்டு அதில் பயிற்சி எடுக்க வேண்டும்.

இங்கே நான் குறிப்பிட வந்தது கடவுள் வழிபடு வீண் என்றால், அந்த கடவுள் பெயரால் கிடைக்கும் வருமானத்தை வெட்கமின்றி பெற்று கொண்டிருக்கும் திராவிட கட்சிகளின் செயலை பற்றி.
கடவுள் வழிபாடு வீண் அதற்காக தனிநபர் தன தகுதிக்கு செய்யும் செலவு வீண் ஆனால் இறந்து போன கட்சி தலைவர்களின் பிறந்த நாளன்று செய்யும் வழிபாடு மட்டும் பண விரயம் அல்ல என்பது எந்த வகையில் நியாயம்.
நானும் கட்சியை பற்றி சொல்வதற்காக எழுதவில்லை. மேலுள்ள கருத்தை கூறுபவர்கள் தங்களை பகுத்தறிவு வாதிகள் என்று கூறும் திராவிட கட்சிகளை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் அந்த கட்சிகளின் செயல்பாட்டை கூறவேண்டியதாயிற்று.

காங்கிரச்சோ.பிஜெ பி யோ நல்லகட்சி என்று நான் இங்கு கூற வரவில்லை. ஆன்மிக விசயத்தில் தலையிடும் கட்சிகளை பற்றி பேசியே ஆக வேண்டியுள்ளது. அரசியல் சாக்கடைக்குள் இருந்து கொண்டு ஆன்மிக விழாக்களை பற்றி கருத்து கூற வருபவர்களின் வேசத்தைதான் கூற முற்பட்டேன். கடவுளை தூற்றுபவர்கள்,ரெட்டை வேஷம் போடுபவர்கள் நிலைபாட்டை கூறி,வழிபாடு விசயங்களில் அவர்கள் நியாயமற்ற தவறான தலையீட்டை சுட்டிக்காட்டவே இதனை எழுதினேன்.

சதீஷ், நீங்க ரொம்ப பீல் பண்ணறீங்க.

உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்கா, அப்படியானால் முயற்சி செய்யுங்கள். மனக் குவிப்போ, தொண்டோ, தியாகமோ, செயல் திறனோ, பூஜையோ, வழிபாடோ…உங்களால் உங்கள் மனதிலே அமைதியை உணர முடிகிறதா? உங்கள் மனதில் பிறர் மனதில் அன்பும், நட்பும் , கருணையும் அதிகமாகி விட்டதா. அப்படியானால் அதற்க்கு மேல் நான் எதுவும் சொல்லத் தேவை இல்லை. உங்களால் பிறர் மனதிலும் ஆன்மீக முன்னேற்றத்தை உருவாகக் இயலும்.

எனவே ஆன்மீக வழியில் முயலுங்கள்.

அரசியல் என்றால் அது வேற பீல்டு.

ஷாப்பிங் மாலில் வாங்கும் பொருட்களுக்கு நாலாயிரம் ரூபாய் வரை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்றால் பெண்கள் ஓட்டு உறுதி. மாதம் இரண்டு திரைப்பட் டிக்கட்டுகள் இலவசமாக குடுத்தால் கல்லூரி மாணவர்கள் ஓட்டு உறுதி. வாரம் இரண்டு குவார்ட்டர் பிரீ என்றால் குடிமகன்கள ஓட்டு உறுதி.

இதையும் மீறி அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும் என்றால், காந்தி போன்ற அரசியல்வாதிகள் நாட்டில் இருக்க வேண்டும். இருக்கிறார்களா?

எனவே நீங்கள் தெம்பாக இருங்கள. ஒன்று ஜோதியில் கலந்து விடுங்கள். அதாவது இலவசங்களை அனுபவியுங்கள. அல்லது மக்களின் மனதை மற்றும் வகைக்கான ஆன்மீக முன்னேற்றத்தை பெற முயலுங்கள்.

நீங்கள் ஆதி சங்கரராகவோ, அப்பராகவோ, காந்தியாகவோ ஆக முடியாவிட்டாலும் வினோபா போல ஆக முயற்சி செய்யலாம்.

ஆதி சங்கரருக்கும் அப்பருக்கும் ஒப்பாக நாம் நம்மை நினைக்கமுடியாது.
தாக்குதல் வரும் பொது தகுந்த பதில் கொடுக்கத்தான் வேண்டும். ஏன் கடவுள் வழிபாட்டை ஏளனம் செய்யும் பிரிவு அதனை வைத்து அரசியல் செய்ய வேண்டும். கடவுளை வணங்குபவன் எவனும் எமக்கு ஆதரவு தரவேண்டாம்,இது நாத்திக நாடு என்று அறிவிக்க வேண்டியது தானே?
கடவுளே இல்லை எல்லா வழிபாட்டையும் தடை செய்வேன் என்பவனை நம்பலாம், ஆனால் தேவைப்பட்ட போது தேவையான இடத்தில் மட்டும் கடவுளை வணகுவது, அந்த வழிபாட்டில் கிடைக்கும் பண லாபத்தை மட்டும் வெட்கமின்றி பெறுவது என்ற கொள்கையுடைய கூட்டத்தை என்ன சொல்வது?
ஏன் திராவிட சிங்கங்கள் தமிழகத்தை முழுதாக கடவுள் தடை செய்யப்பட்ட மாநிலமாக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டியது தானே?
ஆட்சியையும் அதிகாரமும் அவர்கள் கையில் தானே அரை நூற்றாண்டுக்கும் மேல் உள்ளது.

நீங்களாக எடுத்துக் கொடுக்கிறீர்கள். அப்புறம் அவர்கள அதையே கேட்டு நிஜமாகவே நாத்தீக நாடு என்று அறிவித்தாலும் அறிவித்து விடுவார்கள். அப்புறம் இன்னும் ரொம்ப பீல் பண்ணுவீர்கள்.

அதை தான் நான் எதிர்பார்க்கிறேன்,அப்படி செய்தால் அவர்களின் ஆட்டத்திற்கு எல்லாம் நிச்சயம் ஒரு முடிவு வந்து விடும்.

நான் என் போக்கிலே இறையை தேடிக்கொண்டு தான் இருக்கிறேன் ஆனால் ஒரு சில சமுக அவலத்தை இது போன்ற சமயங்களில் விவரிக்கும் போது நமக்கு இந்த அவலத்தின் மீதான பிறரின் பார்வையும் நம் நிலைபாட்டின் தெளிவும் எல்லோர்க்கும் தெரியவரும் என்பதால் தான் நான் இவற்றை குறிப்பிட்டேன்.

சதீஷ் , ரொம்ப உணர்சிவசபடாதிங்க..திராவிட கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லாமலா ஆட்சியை பிடிகிறது. அத்தனை மக்களுமா காசு வாங்கிட்டு ஒட்டு போடுகிறார்கள். வடக்கே பார்த்தால் தெரியும் திராவிட கட்சிகளின் ஆட்சி எவ்வளவோ தேவலை என்று.

ஐயா,

தாராளமாக எழுதுங்கள். கிருஷ்ண பகவானைப் பற்றி எழுதும்போது மட்டும் அடல்ட்ஸ் ஒன்லி என்று தலைப்பில் சேர்த்துவிடுங்கள்.

Dear Mr. Asami,

I wont blame you as have asked to include adults only when we write about Krishna, because many people dont understand about the relation ship the Gopikas had with Krishna. To be frank, even I was also clueless as how the Philospical Guru Krishna had indulged in pranks with Gopikas- till I read what Swami Vivekaandha had deatailed about the same.

Following is the translation of Swami Vivekaanandhas speech in Chennai during 1898. You can go through the same and find it yourself.

ஸ்ரீராமருக்குப் பிறகு, ஆண் பெண் குழந்தைகள் முதலிய அனைவராலும் பல்வேறு விதங்களில் மிகுந்த அன்புடன் போற்றப் படும் ஸ்ரீகிருஷ்ணர் தோன்றுகிறார். ‘மற்ற அவதார புருஷர்கள் பகவானுடைய சில அம்சங்களின் தோற்றங்கள். ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் பகவானே அவதாரமாகி வந்தவர்’ என்று பாகவதத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. அவருடைய வாழ்க்கையின் பல திறப்பட்ட அம்சங்களைப் பார்த்தால், இவ்விதம் சொல்லியது ஆச்சரியமல்ல. அவர் முற்றுந்துறந்த துறவியாக இருந்தார். அதே சமயத்தில் அதி ஆச்சரியமான கிருஹஸ்தராகவும் இருந்தார். அவரிடம் ரஜோ குணத்தால் உண்டாக்கப் பெற்ற சக்தி அளவற்று இருந்தது, அத்துடன் பரம சாத்வீகம் பொருந்திய தியாகத்தின் மத்தியில் வாழ்ந்து வந்தார்.

நீங்கள் கீதையை புரிந்துகொள்ளாத வரை கிருஷ்ணனை அறிந்துகொள்ள முடியாது. அவர் தம்முடைய உபதேசங்களின் உயிர் பெற்ற உருவமாக இருந்தார். எல்லா அவதார புருஷர்களும் தாங்கள் உபதேசிக்க வந்த தத்துவங்களுக்கு லட்சியமாக விருந்தார்கள். ஸ்ரீ கிருஷ்ணரும் தாம் உபதேசித்த கீதையின் லட்சியமாய் விளங்கினர். பற்றின்றி வாழ்தல் என்ற கீதையின் முக்கிய உபதேசத்திற்கேற்ப அவர் வாழ்ந்து வந்தார். அவர் தம் ராஜ்ஜியத்தையும் பொருட்படுத்தாது விட்டு விடுகிறார்.

அரசர்கள் அனைவரும் அவரை வந்து வணங்கினார்கள். ஆனால் அவர் அரசராக விருக்க விரும்பவில்லை. கள்ளங் கபடற்ற சுபாவத்துடன் கோபிகளுடன் விளையாடுகிறார். <strong>அவருடைய அதி ஆச்சரியமான அந்த பிருந்தாவன லீலைகளை அர்த்தம் செய்து கொள்ளுவது மிகக் கடினம். ஒருவன் மிக உயர்ந்த, தூய்மையான தன்மையைப் பெற்றாலொழிய, அதைச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியாது, மிகப் புனிதமான அன்பைப் பருகித் திளைத்தவர்கள்தான் அந்த அதி அற்புதமான அன்புக் கதையை அறிந்துகொள்ள முடியும். எதையும் வேண்டாத, சுவர்க்கத்தையும் விரும்பாத, உலகப்பொருள்கள் அனைத்தையும், அத்துடன் மறுமையையும் நினைக்காத, அந்த கோபிகளின் உன்னதமான பேரன்பின் தன்மையை யாரே உணர வல்லார்!

என் சிநேகிதர்களே! ‘இக் கோபிகளுடைய அற்புதமான அன்பின் மூலம் ரூபக் கடவுள் அரூபக் கடவுள் என்ற பிரச்சனை தீருவதை காண்பீர்கள்.மனித வாழ்க்கையின் உயர்ந்த லட்சியம் அரூபக் கடவுள் என்பதை நாம் உணர்வோம். எல்லாவற்றிலும் உயிர்க் குயிராய் நின்றிலங்கும் அரூபக் கடவுளே தத்துவ விசாரத்தின் முடிவென்பதையும் நாம் அறிவோம். எனினும், நாம் வழிபாடு செய்வதற்கும் பக்தி செய்வதற்கும், நமது மனது கிரகிக்கக் கூடிய ஒரு வடிவத்தை நாடுகிறது. எனவே ரூபக்கடவுள் தான் மனிதன் நினைவுக்கு எட்டக் கூடிய உயர்ந்த லட்சியமாக இருக்கிறது. எனினும் புத்தியும் தர்க்க ஞானமும் அதற்கு விரோதமாக இருக்கின்றன.

பிரம்மசூத்திரங்களில் கேட்கப்பட்டிருக்கும் அப் பழைய கேள்வி மறுபடியும் கிளம்புகிறது. திரௌபதி யுதிஷ்டிரரிடம் கேட்கிறாள்: “சர்வ சக்தி வாய்ந்த ரூபக் கடவுள் ஒருவர் இருந்தால், நரகம் போன்ற இந்த உலகம் என் சிருஷ்டிக்கப் பட்டது? இது அவர் சிருஷ்டியாக விருப்பின், அவர் பாரபட்சமுடையவராகத் தானே இருக்க வேண்டும்?’ ஆதலால் ரூபக் கடவுள் என்ற கருத்து அறிவால் ஒப்புக்கொள்ளக் கூடியதாக வில்லை. அரூபக் கடவுளை கிரகிக்க முடிவதில்லை.

கடவுள் ரூபத்துடன் கூடியவரா அல்லது அரூபமானவரா என்ற இப்பிரச்சினையை கோபிகளுடைய ஒப்பற்ற அன்பின் மூலம்தான் தீர்க்க முடியும். அவர்கள் கிருஷ்ணனுடைய புகழைக் கேட்க விரும்பவில்லை. அவர் சகலத்தையும் சிருஷ்டி செய்தவர், சகல சக்தியும் வாய்ந்தவர், எதையும் சாதிக்க வல்லவர் என்றெல்லாம் அவர்கள் உணர விரும்பவில்லை. அவர்கள் அறிந்த ஒரே விஷயம் அவர் எல்லையற்ற கருணைக்கடல் என்பதுதான். தங்களுடன் பிருந்தாவனத்திலிருந்த இளம் கிருஷ்ணனைத்தான் அவர்கள் போற்றிவந்தார்கள். அனைவருக்கும் தலைவனாய் அரசர்க்கு அரசனாய் அமர்ந்திருந்த அவர், அவர்களுக்கு என்றும் கோபாலனாகவே இருந்தார். “உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், போர் வேண்டேன், கல்வியும் செல்வமும் யான் வேண்டேன், சுவர்க்கமும் சுகமும் எனக்கு வேண்டாம். ஏ பகவானே! உன்னைப் பக்தி செய்து தொழுவதற்காக அந்த அன்பை அனுபவிப்பதற்காக, கணக்கற்ற நற்பிறவிகளை எனக்கு அளிப்பாயாக” என்று அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

வேறு ஒரு நோக்கமும் இல்லாமல் அன்பு செய்வதற்காகவே அன்பு, பணியாற்றுவதற்காகவே பணி, சேவை செய்வதற்காகவே கடமை, என்ற கருத்து மனிதனுடைய மத வாழ்க்கையின் சரித்திரத்திலேயே ஓர் உன்னதமான இடத்தை குறிக்கின்றது. இது உலக சரித்திரத்தில் முதல் தடவையாக எல்லா அவதார புருஷர்களிலும் மேம்பட்டவரான ஸ்ரீ கிருஷ்ணருடைய திருவாயிலிருந்து, இந்திய மண்ணிடையே பிறந்தது.

அத்துடன் பயத்திற்காகவும் பொருட்களை இச்சித்தும் கடவுளைத் தொழுத காலம் ஒழிந்தது, அதற்குப் பதிலாக, அன்பு செய்வதற்காகவே அன்பு, பணியாற்றுவதற்காகவே பணி, சேவை செய்வதற்காகவே கடமை என்ற அதி உன்னதமான கருத்து தோன்றிற்று.

அந்த அன்புதான் எத்தகையது! அவர்கள் அன்பின் தன்மையைத் தெரிந்து கொள்வது மிகக் கடினம் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். இந்த அதி அற்புதமான அன்பைத் தப்பர்த்தம் செய்யும் மூடர்கள் நம்மிடமும் இல்லாமலில்லை. இதைக் கேவலமாக நினைக்கும் இழிந்த அறிவீனர் நம் ரத்தத்தில் பிறந்தவர்களுள்ளும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். முதலில் நீங்கள் உங்கள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். கோபிகளுடைய அன்பை வருணிக்கும் சரித்திராசிரியர் பிறவியிலேயே மிகப் புனிதமான சுகதேவர் என்பதையும் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

மனிதன் மனதில் சுயநலம் இருக்கும்வரை, கடவுளை உண்மையாக நேசிப்பது அசாத்தியம். அத்தகையவர்களின் அன்பு வெறும் வியாபாரமே யொழிய வேறல்ல. ‘”பகவானே! நான் உனக்கு ஒன்று தருகிறேன், அதற்குபதிலாக நீ வேறொன்று தா”” என்று உரைக்கின்றது அவர்கள் அன்பு. “நீ வழிபடாவிடில், நீ நரகத்திற்கு போவாய் அல்லது வேறுவிதமாக கஷ்டப்படுவாய்” என்று தெய்வம் உரைப்பதாக நம்பி சிலர் பயத்தின் காரணமாகத் தெய்வ வழிபாடு செய்கிறார்கள். இத்தகைய தாழ்ந்த எண்ணங்கள் இருக்கும் வரையில் ஒருவன் கோபிகளுடைய எல்லையற்ற அன்பை எங்ஙனம் உணர முடியும்? ” ஓ உன்னுடைய முத்தம் ஒன்று கொடுத்தருள்வாய். உன்னால் முத்தமிடப்பட்டவர்களுக்கு உன்மேலுள்ள அன்பு சதா தழல்விட் டெரிகிறது; அவர்கள் துன்பமெல்லாம் தொலைந்து, உன்னைத்தவிர மற்ற நினைவுகள் அனைத்தையும் மறக்கிறார்கள்” என்று அவர்கள் தெய்வீக அன்பால் உன்மத்தரானார்கள்.

முதலில் பொன், பெயர், புகழ் முதலிய இவ்வற்ப ஆசைகளை மறந்துவிடுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் கோபிகளுடைய அன்பின் தன்மையை உணர முடியும். அப்புனிதமான அன்பை பூரண மனப் பரிசுத்தமடையாதவர்களால் அறிய முடியாது. காமமும், லோபமும் மற்ற ஆசைகளும் நிறைந்த அற்ப மனிதர்களுக்கு கோபிகளின் மாசற்ற அன்பில் குறைசொல்லத் தைரியமிருக்கிறதா? இவ்வன்பு தான் ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தின் மகிமையாகும்.

கீதையின் உயர்ந்த தத்துவங்கள் கூடத் தன்னை முற்றிலும் மறந்த இவ்வன்புக்கு ஈடாகாது. ஆன்மிக லட்சியத்தைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் படிப்படியாக உயர்ந்துசெல்லும் மார்க்கம் கீதையில் உபதேசிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இங்கு, அன்பு மதுவுண்டு, பேரின்பத்தில் தன்னையும் மறந்து திளைத்து, குரு,சிஷ்யன், வேதங்கள், சுவர்க்கம், கடவுள் என்ற அத்தனையும் மறந்து, தாம் அன்புசெய்யும் கிருஷ்ணனைத் தவிர வேறு எதையும் பார்ப்பதில்லை. அன்பின் முதிர்ச்சியால் சகலமும் கிருஷ்ணமயமாகி, ஒவ்வொரு முகமும் கிருஷ்ணன் முகமாகத் தென்படுகிறது. தாங்களும் கிருஷ்ண மயமாகி விடுகிறார்கள். இது தான் அந்த அற்புதமான ஸ்ரீகிருஷ்ணனுடைய அன்பின் தன்மையாகும்.

வீண் விபரங்களைப் பற்றிப் பேசுவதில் உங்கள் பொழுதைப் போக்கவேண்டாம். அவருடைய வாழ்க்கைக்கு அடிப்படையாக விருக்கும் முக்கிய அம்சங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவருடைய வாழ்க்கையில் சரித்திர சம்பந்தமான முரண்பாடுகளிலிருக்கலாம். பிற்காலங்களில் அவர் வாழ்க்கையில் செருகப்பட்ட சம்பவங்களும் இருக்கலாம். எனினும், அதற்கு முன்னிராத உயர்ந்த கொள்கையை உபதேசித்த ஒரு மகானுடைய வாழ்க்கை இவைகளுக்கு அடிப்படையாக இருந்திருக்கவேண்டும்.

சாதாரணமாக தீர்க்கதரிசிகள் முன்னிருந்த கருத்துக்களைப் பூரணப்படுத்திக் கூறுகிறார்கள்; அல்லது தங்கள் காலத்திலே நிலவியிருந்த கருத்துக்களை உருவகப்படுத்திக் கூறுகிறார்கள் என்னலாம். அத்தகையவர்களைப் பற்றி அவர்கள் வாழ்க்கை உண்மையானதா, அல்லவா என்றூ சந்தேகிக்க இடமிருக்கிறது. ஆனால், எவ்வித பலனையும் எதிர்பாராமல் பணியாற்றுவதற்காகவே வேலை, அன்பு செய்வதற்காகவே அன்பு, சேவை செய்வதற்காகவே கடமை என்ற லட்சியங்கள் அவரால்தான் முதன்முதல் உபதேசிக்கப்பட்டன. அவர் காலத்திற்குமுன் அவை யிருந்தனவென்று சொல்லக் கூடியவர்களிருந்தால், அதை நிரூபிக்கும்படி அவர்களை அறைகூவி யழைக்கிறேன். இவைகளைப் போதித்த ஒருவர் இருந்திருக்கத்தான் வேண்டும். இக் கருத்துக்கள் வேறு எவரிடமிருந்தும் பெற்றிருக்க முடியாது; ஏனெனில், அவை அக்காலத்து வாயுமண்டலத்திலிருக்கவில்லை.

ஸ்ரீ கிருஷ்ணர்தான் இத் தத்துவங்களை முதன் முதலில் உபதேசம் செய்தருளினார். அவருடைய சிஷ்யரான வியாசர் அவைகளை உலகிற்கு எடுத்துரைத்தார். அவர் உபதேசங்கள் அனைத்திலும் உயர்ந்தது அவர் கோபிகளுக்குக் கொடுத்த இவ்வுன்னத அன்புதான். அன்பு உன்மத்தம் உங்கள் மனத்தில் புகுந்து கோபிகளுடைய அருட் பேரன்பின் தன்மையை உணர்ந்தால்தான், நீங்கள் உண்மையில் அன்பின் தன்மையை உணர்ந்தவர்களாவீர்கள். உலகத்தை மறந்து, சுயநலத்தைத் துறந்து, தூய்மையின் உருவமாகி, தத்துவார்த்தங்களின் ஆராய்ச்சியையும் மறந்து, அந்த அன்புப் பைத்தியத்திலே ஈடுபடும்போதுதான், அன்பு செய்வதற்காகவே அன்பு என்ற அந்த கோபிகளின் எல்லையற்ற அன்பின் மகிமையை அறிவீர்கள். அவ்வன்பே அனைத்திலும் உயர்ந்தது. அதைப் பெற்றால் அனைத்தும் பெற்றவர்களாவீர்கள்.

திரு திருச்சிக்காரர் அவர்களே,

///……ஒருவன் மிக உயர்ந்த, தூய்மையான தன்மையைப் பெற்றாலொழிய, அதைச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியாது,மிகப் புனிதமான அன்பைப் பருகித் திளைத்தவர்கள்தான் அந்த அதி அற்புதமான அன்புக் கதையை அறிந்துகொள்ள முடியும்…..

……..இதைக் கேவலமாக நினைக்கும் இழிந்த அறிவீனர் நம் ரத்தத்தில் பிறந்தவர்களுள்ளும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். முதலில் நீங்கள் உங்கள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்……..

……..முதலில் பொன், பெயர், புகழ் முதலிய இவ்வற்ப ஆசைகளை மறந்துவிடுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் கோபிகளுடைய அன்பின் தன்மையை உணர முடியும். அப்புனிதமான அன்பை பூரண மனப் பரிசுத்தமடையாதவர்களால் அறிய முடியாது………….

கோபியர்களின் அன்பு பற்றி விவேகானந்தர் பேசியதை மிகச் சரியாக குறிப்பிட்டீர்கள்.அருமையான வரிகள்.நன்றி அய்யா…..

ரொம்ப பகுத்தறிவோட இருக்கு விவேகானந்தர் விளக்கம். நித்தி, தேவநாதன் , வகையறாக்களிடம் கூட ரஞ்சிதா, ஸ்வர்ணமாலியா போன்றோர் அன்பில் தான் திளைத்து இருந்தனர்.
//கள்ளங் கபடற்ற சுபாவத்துடன் கோபிகளுடன் விளையாடுகிறார்.// – நித்தி கூட அப்படிதான் விளயாடுனார்.

கிரிஷ்ணருடன் கோபிகைகள ஆடிப் பாடி மகிழ்ந்தது வெட்ட வெளியிலே, சோலைகளிலே, பூங்காவிலே .

இந்த அன்பு அடிப்படையிலான பிரியத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

நாம் நம் அக்கா மகள், அண்ணன் மகளுடன் விளையாடுவதில்லை. நமது அண்ணன் மகள் நமக்கு முத்தம் கொடுத்தது இல்லையா? எண்ணத்தில் இருக்கிறது.

அண்ணன் பொண்ணு அக்கா பொண்ணு கூட விளையாடுவதை யாரும் காதல் என்றோ அவர்கள் நம்மீது மயங்கினார்கள் என்றோ இருக்காது. வயதுக்கு வந்த பொண்ணுங்க கூட இவரு ஓடி யாடி வெறும் விளையாட்டுதான் விளயாண்டாராம். என்ன விளையாட்டுன்னு அப்படியே சொல்லிடுங்க..

இளம் பெண்ணாக இருந்தாலும் , சிறுமியாக இருந்தாலும் அன்பு செலுத்துவது என்பது வேறு, காம உணர்வுடன் நோக்குவது என்பது வேறு. அது அவரவர்களின் மன நிலையைப் பொறுத்தது.

நான் படித்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை நான் கோ- எடுகேசன் பள்ளியில் தான் படித்தேன்.கேம்ஸ் டீச்சரும் ஒரு வகுப்பில் உள்ள ஆண் பெண்கள் எல்லோரையும் ஒன்றாகத் தான் விளையாட விடுவார். நொண்டி விளையாட்டு கூட விளையாடி இருக்கிறோம். கேம்ஸ் டீச்சரும் பெண்தான்.

சில பெண்கள் வேகமாக நொண்டியடித்து வந்து பையன்களை பிடித்து விடுவார்க்ள. நான் கூட அப்படி பிடிக்கப் பட்டு இருக்கிறேன். ஆட்டத்தில் இருந்து அவுட் ஆகி விட்டோமே என்கிற ஒரு வகையான தோல்வி உணர்வுதான் நெஞ்சில் இருக்குமே தவிர , பெண் நம்மை வந்து தொட்டது எனற பாலுணர்ச்சி கோணத்தில் சிந்தித்தது இல்லை.

கேம்ஸ் டீச்சரும் எங்களைப் பார்த்து, “”பொம்பளை பிள்ளை கிட்ட அவுட் ஆகி விட்டாயாடா” என்று கிண்டல் அடிப்பார். தலையை தொங்கப் போட்டுக் கொள்வோம்.

இப்போது கூட அலுவலகத்தில் குடும்பமாக நண்பர்கள் அருவியில் குளிக்க செல்கிறோம், தீம் பார்க் செல்கிறோம், நண்பர்களின் மனைவிகளும், பெண் பிள்ளைகளும், நீச்சல் உடை அணிந்து வாட்டர் பார்க்கில் விளையாடி மகிழ்கின்றனர்.

அவர்களை தவறான பார்வையிலே நோக்குவதில்லை. அப்படி நோக்கினால் நாம் மனிதனில்லை.

உங்க பகுத்தறிவு புல்லரிக்க வைக்குதுங்க …இந்த மாதிரி எந்த அசிங்கத்தை வேணும் என்றாலும் நியாய படுத்தி கொள்ளலாம்.

ஒரு ஆணும் பெண்ணும் பழகினாலே அது பாலுணர்வு சம்பந்தப் பட்டதாகத்தான் இருக்கும் என்கிற படியான சிந்தனைக் கோட்பாட்டிலே பழகிப் போனால் எல்லாமே அசிங்கமாகத் தான் தெரியும்.

கண்ணுங்களா, பெரிய ஆளுங்களைப் பத்தி எழுதும் போது கொஞ்சம் பார்த்து எழுதுங்கப்பா. கிரிஷ்ணரைப் பத்தி ஏதாவது சொன்னா கூட பதில் விளக்கம் கொடுத்துக்கலாம். மத்தவங்க விடயம் அப்படி இல்லைப்பா!

யோக்கியர் பெரியார் செய்த லீலைகளையும் ரெண்டாவது திருமணத்தையும் அடல்ட்ஸ் ஒன்லி என்று தான் எழுதவேண்டியுள்ளது.
அவருடைய பல செயல்கள் டுபாக்கூர் ஒன்லி யாக தான் உள்ளன.

பெரியாரை கடவுள் என்றோ, புனிதர் என்றோ யாரும் சொல்லவில்லை. பெரியாரும் தன்னைப் புனிதர் என்று சொல்லிக் கொள்ளவில்லை. எனவே நீங்கள் அவரைப் பற்றி இப்படி சொல்வது சத்தில்லா வாதமே. சி.டி. புகழ் புண்ணியவான்களோடு கம்பேர் செய்தால் பெரியார் பெட்டர். அட்லீஸ்ட் வெளிப்படையாக வாழ்ந்து இருக்கிறார்.

அதே நேரம் பெரியார் எந்த அளவுக்கு ஒரு பகுத்தறிவு வாதி என்று நீங்கள் கேட்டு இருந்தால் அது ஆராய்ச்சிக்கு உரிய ஒரு விடயமாக இருந்திருக்கும்.

இந்து மதத்தின் மேலே சில பல மூட நம்பிக்கைகளை குப்பையாகப் போட்டு விட்டனர். பெரியார் அவற்றை சுட்டிக் காட்டி எளிதாக பகுத்தறிவுவாதி என்று பெயர் எடுத்து விட்டார்.

உண்மையான பகுத்தறிவுவாதி மனித வாழ்க்கையின் போக்கு , அதன் காரணிகள் ஆகியவற்றை ஆராய்வான். மனிதர்கள் துன்பத்தில் இருந்து விடுபட அமைதியான் வாழ்க்கை வாழ அவனால் இயன்ற தீர்வை அளிப்பான்.

சிறந்த பகுத்தறிவு வாதிகளான புத்தர், சாக்ரடீஸ், இயேசு, ஆதி சங்கரர், படினத்தார் விவேகானந்தர் போன்றவர்கள அதைத்தான் செய்தனர்.

புத்தர் கூட கடவுளைப் பற்றிக் கவலைப் படாத, கடவுள் கோட்பாட்டை இக்னோர் செய்தவர்தான். ஆனால் அவர் மனிதர்களின் வாழ்க்கை இன்னல்கள் நிறைந்தது என்பதை உணர்ந்து கொண்டு, அதற்க்கு விடிவு தேட முயர்சியும் செய்து அதற்க்கு ஒரு சொல்யூசனையும் கொடுத்து இருக்கிறார். புத்தர் அதற்காக கடுமையாக உழைத்தார். தன்னுடைய சுகங்களையும் துறந்தார். சங்கரர் , சாக்ரடீஸ்… போன்றவர்களும் அப்படியே.

ஆனால் பெரியார் மனித வாழ்க்கையின் துன்பங்களுக்கு தீர்வு எதையும் காண முயலவில்லை. மனித உயிர் பற்றிய ஆராய்ச்சியையும் செய்யவில்லை. அப்படியே சொகுசாக காலம் கடத்தி விட்டார். கடவுள் இல்லை என்று சொல்வது எளிதான விடயம், யார் வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்கள் கூட சொல்ல முடியும். ஆனால் உண்மையில் மனிதன் ஏன் இவ்வளவு கஷ்டப் படுகிறான்? அதற்கு காரணம் என்ன? ஏன் ஒருவன் குருடனாகப் பிறக்க வேண்டும், ஏன் மற்றொருவன் எந்தக் குறையும் இல்லாமல் செல்வந்தர் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறான்?

பகுத்தறிவு என்பது பெரிய கடல். பெரியார் அதன் கரை ஓரமாக நின்று காலை மட்டும் நனைத்துக் கொண்டதோடு முடித்து விட்டார்.

உண்மையில் இந்து மதம் பகுத்தறிவு அடிப்படையிலான மதம். ஆனால் பலரும் நம்பிக்கை அடிப்படையிலான தாக இந்து மதத்தைக் காட்டுகின்றனர். எனவே பகுத்தறிவு என்றவுடனே சிலருக்கு ஜனனி வந்து விடுகிறது. நீங்கள் இந்து மதத்தை ப பற்றி விவேகானந்தர் , பாரதியார், ஆதி சங்கரர், கிருஷ்ணர் , ஆங்கிரசர், யான்க்வல்ங்க்கர், நசிகேதஸ்…. ஆகியோர் மூலமாகக் கற்றால் நீங்களும் பகுத்தறிவு அடிப்படியில் வாழ்க்கையை, இந்து மதத்தை அணுகுவீர்கள.

ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இன்றைக்கு சரியான குருக்கள் இந்து மத்தில் தென்படவில்லை. அதனால் பெரிய பிரச்சினை இல்லை, பழைய ஆசிரியர்களின் பாடங்களைப் படியுங்கள்.

என்னுடைய சிறிய கட்டுரையை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/16/rationalism/

சதீஸ்

நானூறு கோடி ரூபாய், தமிழகக்கோயில்களின் கும்பாபிசேசங்களுக்காக நீங்கள் சொல்லும் நாத்திக திராவிட அரசு ஒதுக்கி கும்பாபிசேகங்கள் நடந்து வருகின்றன. போன மாதம் குற்றாலநாதர் (சிவன் கோயில்களில் விசேசமானது) குற்றாலத்திலுள்ளது) கும்பாபிசேகம் நடந்த்து. நெல்லையப்பர் கோயிலில் நடந்துமுடிந்துவிட்டது.

இஃதெல்லாம் எவர் பணம்? மக்களின் வரிப்பணம். இசுலாமியரும் கிறுத்துவரும் சேர்ந்து கொடுத்த பணம்.

பிஜித் தீவிலுள்ள சிவசுப்பிரமணியர் கோயிலுக்கு காஞ்சி காமகோடி பீடம் ஒரு பைசா கொடுக்கவில்லை. தமிழக அரசு கொடுத்து, ஒரு பார்ப்பன பூஜாரியைய்ம் அனுப்பி வைத்தது.

திரு. பெர்னாண்டோ ,

நீங்கள் நடு நிலையான கண்ணோட்டத்துடன் அணுகினால் உங்களுக்கே பல விடயங்கள் புரியும்.

இந்துக் கோவில்களுக்கு சொந்தமாக பல நிலங்கள் உள்ளன. இந்துக் கோவில் வளாகங்களில் பல கடைகள் மூலம் வருமானம் வருகிறது. அது மட்டும் அல்லாமல் உண்டியல் மூலமாக வருவாய் வருகிறது. எனவே கோவில்களில் கிடைக்கும் வருமானம், அதற்க்கு செய்யப் படும் செலவை விட அதிகமாகவே இருந்தாலும் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை.

மேலும் அரசாங்கத்துக்கு கோவில் நடத்துவதில் நஷ்டம் இருந்தால் அதை மக்களிடமே கொடுத்து விடலாமே. டிரஸ்ட் மூலமாகவும் கோவில் நிர்வாகத்தை நடத்த முடியுமே. ஆனால் அரசாங்கங்கள் கோவில் நிரவாகத்தை தங்கள் பொறுப்பில் வைத்துக் கொள்வதில் ஈடுபாடு காட்டுகினறனவே.

எனவே மக்கள் வரிப் பணத்தில் இருந்து கோவிலுக்கு செலவு செய்யப் படுவது போல நீங்கள் எழுதுவது உண்மை அல்ல. , அய்யையோ கும்பாபிசேகம் நடத்துறாங்களே, இவ்வளவு செலவு செய்கிறார்களே என்று எழுதுவதும் நாகரீகம் அல்ல.

மக்கள் வரிப் பணத்தில் இருந்து கோவிலுக்கு செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. மக்களிடம் கொடுத்து விடுங்கள், அவர்கள பார்த்துக் கொள்வார்கள் . மொத்த மக்கள தொகையில் 80 சதவீதம் அளவுக்கு இந்துக்கள் இருக்கிரார்கள. அவர்கள் எல்லாம் வரியே கட்டாதது போலவும், பெரும்பான்மையான வரியை நீங்கள் கட்டுவது போலவும் எழுதுகிறீர்கள்.

அரசு இலட்சனையில் ‘ஆண்டாள்’ கோயில். மாற்றி, ஒரு எல்லாருக்கும் பொதுவான சின்னம் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை, இந்த மு.க நிராகரித்து விட்டார். இப்போது என்ன சொல்கிறீர்கள் சதீஸ்?

//பகுத்தறிவு என்பது பெரிய கடல். பெரியார் அதன் கரை ஓரமாக நின்று காலை மட்டும் நனைத்துக் கொண்டதோடு முடித்து விட்டார்.//

பெரியார் ஒன்றும் முற்றும் அறிந்தவர் அல்ல. ஆனால், சமூகத்தில் இழிந்த நிலையில் கிடந்தோரை முன்னேற்ற பாடுபட்டார். தீண்டாமையில் மூல காரணத்தை உடைக்க வேண்டுமென்றார். அவர் ஒரு கலகக்காரர். அந்த கலகத்திலே நியாயம் இருந்தது. இதை மறுக்க முடியாது.

எனக்கும் பெரியார் பேரில் ஒரு சாப்ட் கார்னர் உண்டு. அதே நேரம் உண்மை என்னவென்றால், அந்தக் காலத்தில் எல்லா தலைவர்களுமே சமூகத்தில் நலிந்த நிலையில் இருந்தவர்களை முன்னேற்ற பாடுபட்டவர்க்ளே. பெரியார் நலிந்த நிலையில் இருந்தவர்களை பற்றி அக்கறை பட்டதி விட பார்ப்பனர்களை சமூக , அரசியல் அதிகார பீடத்தில் இருந்து கீழே இழுப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார். அக்காலத்தில் தமிழ் நாட்டில் ஏற்ப்படவிருந்த சமூக ,அரசியல் அதிகார மாற்றத்தை தன்னுடைய வளர்ச்சிக்கு உபயோகப் படுத்தினார்.

நாளது வரையில் திராவிடர் கழகத்திற்கு தாழ்த்தப் பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் யாரும் தலைவராக வராதது ஏன்? தன் காலத்திலேயே அவர் தாழ்த்தப் பட்டவரை தலைவராக வர விடவில்லை. தனக்குப் பிறகாவது ஒரு தாழ்த்தப் பட்டவர் வர வழி செய்து இருக்கலாம். அதையும் செய்யவில்லை. உபதேசம் எல்லாம் வூருக்கு தான். சமூக நீதியை தன்னுடைய இயக்கத்தில் பெரியார் அமல் படுத்தாது ஏன்?

உத்தர் பிரத்சத்தில் தாழ்த்தப் பட்டவர் முதல் அமைச்சர் ஆகி விட்டார். ஆனால் தமிழ் நாட்டில் இது வரை யாரும் வர முடியாவில்லை. சமூக நீதி அடிப்படையில் ஒரு தாழ்த்தப் பட்டவரை முதல்வர் ஆக்கக் கூடாதா?

அய்யோ நீங்கள் நான் சொல்லவந்ததை புரிந்து கொள்ளவில்லை.அவரை யார் புனிதர் என்று சொன்னது ? அவர் பின்னால் ஒரு ஒளி வட்டம் உருவாக்க முயல்கிறார்கள் அவரின் வாரிசுகள். பகுத்தறிவு என்பது வெறுமனே பிடிக்காதவற்றை எதிர்ப்பது அல்ல. CD சாமியார்களை யார் நம்பினார்களோ அவர்களே பகுத்தறிவு இல்லாதவர்கள்.அவர் பகுத்தறிவும் ,நாத்திகமும் எந்த அளவு என்பதே என்னுடைய கேள்வி? அணுவை பகுத்து பகுத்து ப்ரோடான் ஐயும் ,நியூட்ரான் ஐயும்,ஏலேக்ட்ரோன் ஐயும் கண்டுபிடிப்பது பகுத்தறிவு.
நீண்ட அராய்ச்சி செய்து நான் இன்ன இன்ன வழிகளில் கடவுளை காண முயற்சி செய்தேன், அனால் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று தான் தேடிய வழிகளை சான்றுகளுடன் வெளியிட்டு சோதனையின் முடிவில் அப்படி ஒன்று இல்லை என்று கூறுவது உண்மை நாத்திகம்.
வெறுமனே கடவுள் இல்லை அதுவும் இந்து கடவுள் மட்டும் இல்லை மற்ற கடவுள் உண்டு என்று கூறுவது, பிள்ளையாரும்,ராமரும் பிறந்தது வட இந்தியாவில் அதனால் எதிர்க்கிறோம் என்பதும், வேறு நாட்டிலே பிறந்த மகான்கள் கண்ட மதத்தை மட்டும் ஒன்றும் சொல்லாமல் எதிர்க்காமல் நாதிகத்திலே பாரபட்சம் காட்டுவதும் எப்படிப்பட்ட நாத்திகம்.
எந்த தவறையும் வெளிப்படையாக செய்தால் அது சரி என்று ஆகிவிடாது.
இவரை தலைவர் இவர் கொள்கைகளே எங்கள் வாழ்க்கை என்று வாழும் நண்பர்கள் நம்மை நம் வழிபாட்டை இழித்துரைப்பதும் கேவலபடுத்துவதும் எந்த வகையில் நியாயம். அதுவும் இவர்கள் பின்பற்றும் தலைவரே சுய வாழ்வில் பல தவறுகளை செய்தவர்,பின்னர் ஏன் அவர் வால் பிடித்து அவரை தூக்கி நிறுத்திக்கொண்டு நம் கடவுள்களை வந்து சாடுகிறார்கள்?
பிற மதத்திற்கும் இந்துக்களுக்கும் மோதல் வர காரணமே இவர்கள் நம்மை கேவலமாக சித்தரிப்பதுதான்.
ஏன் பாரதியார்,விவேகானந்தர்,ராமானுஜர் எல்லாம் செய்யாத சீர்திருத்தமா? அவர்களுக்கு இல்லாத முற்போக்கு சிந்தனையா?
பெரியார் பிறக்காத மாநிலங்கள் எல்லாம் இன்னும் பகுத்தறிவு பெறாமல் உள்ளதா? தீண்டாமை என்பது கொடிய நோய் அதற்கு குரல் கொடுத்த பல பெரியவர்களுள் இவரும் ஒருவர் என்பதை தவிர வேறு எந்த சிறப்பும் தெரிய வில்லை அந்த பெரியவரிடம்.
தீண்டாமை மதத்தினால் வந்தது என்று ஒரு பொய்யுரையை பரப்பியது நியாமா? அதனை நீங்கள் ஏற்கிறீர்களா? நல்லவர்களும் கேட்டவர்களும் எல்லா இடத்திலும் உண்டு இங்கிருந்த சில தீயவர்களால் உண்டாக்கப்பட்ட சாதி கொடுமை பல முன்னோர்களால் சீர்திருத்தப்பட்டு கொண்டுதான் உள்ளது.
அவர்கள் யாரும் இருக்கும் நல்ல நம்பிக்கைகளை குறை கூற வில்லை, இந்து நம்பிக்கைகளை அடியோடு ஒழிக்கவில்லை தேவையான திருத்தங்களை மட்டுமே செய்தார்கள். இந்து மதமே பகுத்தறிவான மதம்தான்,இதனை நீங்கள் மறுக்கிறீர்களா? நாமும் இங்கே உள்ள தவறான விசயங்ககளுக்கு வக்காலத்து வாங்கவில்லை.
மனிதநேயமற்ற செயல்கள் எங்கு இருந்தாலும் நாம் அதனை எதிர்க்க வேண்டும். இவர்கள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவது மனித நேயமற்ற செயலாக உங்களுக்கு தெரியவில்லையா?
இன்றைக்கு சாதியை ஒழியவிடாமல் காப்பாற்றி வருவது இந்தகூட்டமும் அந்த சாதிகளின் தலைவர்களும் மட்டும்தான் என்றால் அது மிகையா?

உங்களின் சிந்தனைகள் வலுவாக இருந்தால், மக்களிடம் செல்லலாமே. பெரியார் பிரச்சாரம் செய்தாது போல நீங்களும் உங்கள் கருத்தை முன் வைக்கலாமே.

பெரியார் பெயரைக் கேட்டவுடன் சீறி எழுவது, வருந்துவது இது எல்லாம் எது வரை நடை பெறுகிறதோ, அது வரை அவர் செல்வாக்குடன் இருக்கிறார் என்றுதான் அர்த்தம்.

நீங்கள் உண்மையிலே இந்து மதத்தை சரியாகப் புரிந்து கொண்டு இருந்தால், நீங்கள் பெரியாரால் தமிழ் நாட்டில் ஏற்ப்பட்ட விளைவுகளை நினைத்து புலம்பாமல் உங்களின் பணியை ஆரம்பிப்பீர்கள். இப்போதுதான் பெரியார் கூட இல்லையே. நீங்கள் மக்களிடம் போகலாம் அல்லவா, அவர்களிடம் இந்து மதத்தின் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பலாம் அல்லவா, யார் தடுக்கிறார்கள்?

அதாவது பெரியார் சொன்னது மக்களிடம் எடு பட்டது, அவருடைய கருத்துக் மாறானவர்கள் சொன்னது மக்களிடம் எடுபடவில்லை என்றால் என்ன காரணம்? சிந்தித்துப் பாருங்கள். தைரியமும் நம்பிக்கையும் உடையவன் மலையைக் கூடப் பொருட் படுத்த மாட்டான் என்றார் விவேகானந்தர். இந்தக் காலத்தில் தங்களை குரு என சொல்லிக் கொள்ளும் சிலரோ சிலரோ, அரசியல் வாதிகள் சொலவதையே மக்கள கேட்கவில்லையே, ஆன்மீக வாதிகள் சொல்வதையா கேட்ப்பார்கள் என்று சொல்லுகின்றனர்.

//Jo Amalan Rayen Fernando, on September 19, 2010 at 22:31 Said:

சதீஸ்

நானூறு கோடி ரூபாய், தமிழகக்கோயில்களின் கும்பாபிசேசங்களுக்காக நீங்கள் சொல்லும் நாத்திக திராவிட அரசு ஒதுக்கி கும்பாபிசேகங்கள் நடந்து வருகின்றன. போன மாதம் குற்றாலநாதர் (சிவன் கோயில்களில் விசேசமானது) குற்றாலத்திலுள்ளது) கும்பாபிசேகம் நடந்த்து. நெல்லையப்பர் கோயிலில் நடந்துமுடிந்துவிட்டது.

இஃதெல்லாம் எவர் பணம்? மக்களின் வரிப்பணம். இசுலாமியரும் கிறுத்துவரும் சேர்ந்து கொடுத்த பணம்.

பிஜித் தீவிலுள்ள சிவசுப்பிரமணியர் கோயிலுக்கு காஞ்சி காமகோடி பீடம் ஒரு பைசா கொடுக்கவில்லை. தமிழக அரசு கொடுத்து, ஒரு பார்ப்பன பூஜாரியைய்ம் அனுப்பி வைத்தது.
Reply //

நண்பரே,
இங்கே கோவில்களில் கிடைக்கும் வருமானத்தில் எத்தனை சதவீதம் இந்த தொகை என்று உங்களுக்கு தெரியுமா? இவர்கள் ஒன்றும் வரிபனத்தில் இருந்து எடுத்து இந்து கோவில்களுக்கு எந்த செலவும் செய்யவில்லை.
ஏன் முடியாவிட்டால் விட்டு விட வேண்டியது தானே? கோவில்களிலிருந்து கிடைக்கும் வருமானம் தான் அரசாங்கத்துக்கு சென்று எல்லா தரப்பு மக்களுக்கும் செலவிட படுகிறது.
புதிதாக ஒரு பொய் கதையை கண்டுபிடித்து சொல்கிறீர்கள் நண்பரே.
கொஞ்சம் மனசாட்சியுடன் யோசித்து பேசுங்கள். கோவில்களிலே சிறப்பு தரிசனத்துக்கு கட்டணம் வசூலிப்பது இவர்கள் தான். கோவில்களின் வருமானமே இவர்கள் செய்யும் செலவை விட அதிகம்.

//கோவில்களிலே சிறப்பு தரிசனத்துக்கு கட்டணம் வசூலிப்பது இவர்கள் தான். கோவில்களின் வருமானமே இவர்கள் செய்யும் செலவை விட அதிகம்.//
Not every temple has that “SPECIAL DHARSHAN” stuff. And what is the base for your above statement. These are the places where the material evidence has to be given. Do you have any evidence that the temple income is more than itz expenditure?

Ashok

//Jo Amalan Rayen Fernando, on September 19, 2010 at 22:31 Said:

அரசு இலட்சனையில் ‘ஆண்டாள்’ கோயில். மாற்றி, ஒரு எல்லாருக்கும் பொதுவான சின்னம் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை, இந்த மு.க நிராகரித்து விட்டார். இப்போது என்ன சொல்கிறீர்கள் சதீஸ்?
Reply //
தேர்தல் முடிந்த பின் மீண்டும் என்ன செய்கிறார் பார்ப்போம்.
கோவில் இலச்சினையை மட்டும் வைத்து கொண்டு கோவில்களை சூறையாடுவதில் அதிக முனைப்பு காடும் அரசியல் அவர்.
நண்பரே.அப்படியே அவர் மாற்றினாலும் எங்களால் என்ன செய்ய முடியும். ஏன் அதை மாற்ற வில்லையே என்ற வருத்தம் உங்களுக்கு உள்ளதோ? அதனை அழிப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சியோ? அதை அவர் செய்யாமல் விட்டது தான் எனக்கு ஏமாற்றமாக உள்ளது.செய்திருந்தால் அதன் பலன் அவருக்கு சிறப்பாக வரும் ஆண்டு எதிரொலிக்கும்.தப்பி விட்டார்.
இது இந்துக்களுக்கு எதிரான நாத்திகர்களிடம் நாங்கள் போராடி எங்கள் உரிமைகளை நிலைநாட்ட எடுக்கும் முயற்சி. உங்களை இங்கு வம்பு யாரும் இழுக்கவில்லையே. இந்து மதத்தை குறை கூறுவதற்கு ஏன் நண்பரே இவ்வளவு ஆர்வம் உங்களுக்கு. எங்களை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்ற என்னமா?

//in this blog discussion or debate is very usual between us and other religious brothers.but we are not separated.
we brothers having blood relation,dont try to play in between my dear brother.//
இதுதான் இன்னும் என் நிலைப்பாடு.

எல்லோருக்கும் இலச்சினை பொதுவானதாக தான் இருக்கவேண்டும் நியாயமானதுதான். அதுபோல் சட்ட திட்டம் மற்ற அரசு சலுகைகள் எல்லாமே பொதுவானதாக மாற்றிவிடலாமா?
அதனை நீங்கள் ஏற்க தயார் என்றால் உங்கள் நடுநிலைமைக்கு நான் தலை வணங்குகிறேன் நண்பரே
உண்மையில் அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன என்பதற்காக தான் கேட்கிறேன்?.
உங்கள் நியாயமான உரிமையை நீங்கள் பெறுவதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. நீங்கள் எங்கள் உரிமையிலும் சுதந்திரத்திலும் தலையிடவேண்டாம்.எங்களுக்கெதிரான அடக்குமுறைகளுக்கு எதிரான எங்கள் போராட்டத்தில் நீங்கள் ஆதரவளிக்காவிட்டலும் எங்களுக்கு எதிராக செயல் பட வேண்டாம்.
இது ஒரு சகோதரனின் வேண்டுகோள்
//in this blog discussion or debate is very usual between us and other religious brothers.but we are not separated.
we brothers having blood relation,dont try to play in between my dear brother.//
இதுதான் இன்னும் என் நிலைப்பாடு.

இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே கோவில்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான். குறிப்பாக காஞ்சீபுரத்திலே மிக அதிக கோவில்கள் உண்டு. இராமேச்வரம், தஞ்சாவூர் பெரிய கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இவை அளவுக்கு பழமையான பெரிய கோவில்கள் இந்தியாவில் எங்கும் இல்லை. அதனாலே தான் கோவில் சின்னம் பொருத்தமாக கருதப் பட்டு வைக்கப் பட்டது.

“அதனாலே…”

தப்பு.

It was a decision based on heritage, not religion. In that sense, it is secular. I know that. Yet, to tease I wrote.

The emblem is not the temple proper. but only the gateway. Gopuram. It symbolises the unique architectural style of people living in Tamilland, which spread to other parts bordering Tamiland – in ancient times, except Kerala, where they have had their unique style. It is called Dravidian style. It stood firm, despite the efforts of Northern origin kings Pallavas to promote Northern Style. More on the subject, you may go to Ananda Kumarasamy’s book.

Wherever one is, and whoever he is, on seeing the gopuram, although it is the gate of a Hindu temple, he is reminded of his homeland Tamilnadu Thus, a Tamil muslim and christian do not object to the symbol if it is taken as the symbol of the heritage of Tamiland.

You may google the image of Siva Subramaniar Temple in Fiji Islands, to get the feeling.

It was a conscious decision of a congress CM then. When Nehru made the same comment I have made here, he was told (read here from my first para to the above para).

The hope of the CM was not belied: all Tamils irrespective of their religion, have accepted the emblem as their own.

But there are some mischief makers among Tamil Hindus who boast: “Tamilnadu means Hindu religion; behold our emplem.”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 37 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: