Thiruchchikkaaran's Blog

சங்க பரிவார அமைப்புகளால் இந்து மதத்திற்கு, இந்தியாவுக்கு, இந்துக்களுக்கு, இந்தியர்களுக்கு உதவியா, உபத்திரவமா? – பகுதி- 1

Posted on: September 16, 2010


சங்க பரிவார அமைப்புகளால் இந்து மதத்திற்கு, இந்தியாவுக்கு, இந்துக்களுக்கு, இந்தியர்களுக்கு உதவியா, உபத்திரவமா? – பகுதி- 1 

உலகின் மிகப் பழமையான மதம் இந்து மதம் . எட்டாயிரம் வருடமா, பதினையாயிரம்  வருடமா … அதற்கு மேலா என்று கணக்கிட முடியாத அளவுக்கு மிகவும் தொன்மை வாய்ந்தவையாக உள்ளன இந்து மதமும், இந்திய சமுதாயமும். இந்திய எல்லைகளைத் தாண்டி, பர்மா,  தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியப் பகுதி எங்கும் இந்து மதம் தன்னுடைய சிந்தாந்தத்தை பரப்பி இருக்கிறது. அதன் தாக்கம் இன்னும் அந்த நாடுகளில் உள்ளது.

அவ்வப் போது அந்த மதமானது பிற மத மற்றும் அரசியல் சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளானாலும், அவற்றை எல்லாம் சமாளித்து மீண்டும் தன்னைப் புதிப்பித்து கொண்டு இருக்கிறது. 

இந்து மதத்தை எந்த ஒரு தனிப் பட்ட மனிதரும் தோற்றுவிக்கவில்லை. இந்து மதம் எந்த ஒரு அமைப்பாலும் கட்டுப் படுத்தப் படவோ, பரப்பப் படவோ இல்லை. அது மக்களின் மதமாக இருக்கிறது. இந்து மதத்தில் யாரும்  (கடவுள்  உட்பட) எந்தக் கட்டளையும் போட புரோவிசன் இல்லை  .

உண்மையே இந்து மதத்தின் முக்கியக் குறிக்கோள்.

கடவுளே ஆனாலும் உண்மைக்கு மாறாக செயல் பட முடியாது. அதாவது உலகை கடவுளே படைத்து இருந்தாலும் , அது உருண்டை இல்லை, தட்டை தான் என்று அவரே கூட சொல் முடியாது.

உண்மை வெல்லப் பட முடியாததாக, அழியாததாக இருக்கிறது என்றும், அப்படியே அழியாமல் மாறாமல் எப்போதும் ஒன்றாக இருப்பதுதான் உண்மை எனவும், 

எல்லா ஜீவராசிகளின் உயிராக இருக்கும் சக்தியாக இருப்பது, மாறாத அழியாத வேறுபடாத ஒன்றாக  அந்த மாறாத அழியாத ஒன்றே கடவுள் எனவும், மாறுபவை, அழிபவை எல்லாம் வெறும் தோற்றங்கள் எனவும் இந்து தத்துவத்தின் முக்கிய பகுதி சொல்கிறது.   

உண்மையே வெல்லும் (சத்யம் ஏவ ஜெயதே – முண்டக உபநிசத்),

உண்மை அல்லாத நிலையில் இருந்து உண்மையை நோக்க (அசத்தொமோ சத்கமய) ஆகிய இதே போன்ற   இன்னும் பல முக்கிய குறிக்கோள்களை முன் வைத்து இந்து மதம் மனிதர்களை வழி நடத்தி செல்லுகிறது. 

அத்வேஷ்டா (வெறுப்பில்லாமல்),

சர்வ  பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடமும் சிநேகத்துடன்),

கருணா ஏவ ச (கருணையே உடையவனாக ) என்பது போன்ற பல நன்னெறிகளை அறிவுறுத்தும் மதமாக உள்ளது.

அதோடு மனித உயிர், அவற்றின் போக்கு, மனித வாழ்க்கை, அதன் தோற்றம், வளர்ச்சி, முடிவு, இறப்புக்குப் பிந்தைய நிலைமை இவ்வறைப் பற்றிய மிக ஆழமான தத்துவ ஆராய்ச்சியை தருவதாகவும் இந்து மதம் இருக்கிறது.

இந்து மதம் உண்மையை அடிப்படையாகக் கொண்டு இருப்பதால்  தத்துவ ஆராய்ச்சி, பகுத்தறிவு  சிந்தனை ஆகியவற்றுக்கு சுதந்திரம் அளிக்கப் பட்டு உள்ளது. தத்துவ ஆராய்சியாளர்களும், சிந்தனையாளர்களும் அவ்வப் போது ஆன்மீக  உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறிய வண்ணம் இருந்தனர்.

முக்காலத்திலும் சரி, சமீப காலத்திலும் சரி,  இடைக்காட்டு சித்தர், அருணகிரியார், ஆதி சங்கரர், அப்பர், இராமானுஜர், சைதன்யர், பட்டினத்தார், தியாகராஜர்,  விவேகானந்தர், காந்தி, பாரதியார் …..  உள்ளிட்ட பல அறிங்கர்கள் இந்து மதத்தின் பல உயரிய கருத்துக்களை மக்களுக்கு விளக்கி இந்து மதத்தை சரியான வழியில் செலுத்தி வந்தனர். 

ஆனால் இக்காலத்தில் அவர்களைப் போல அர்ப்பணிப்பும், செயல் திறனும், சுய நலம்  இல்லாத மனப் பக்குவமும், புலனடக்கமும், ஆன்மீக சக்தியும் உள்ள ஆன்மீக  வாதிகள் இல்லையா அல்லது அவர்களுக்கு ஏதாவது பிரச்சினையா அல்லது அவர்கள் மக்களுக்கு தெரியாத படிக்கு மறைக்கப் பட்டு விடும் சூழலா என்று தெளிவாக சொல்ல முடியவில்லை. 

ஆனாலும் ஆதி சங்கரர் போலவோ, சுவாமி விவேகானந்தர் போலவோ, ஆளுமையும் , அறிவாற்றலும், செயல் திறனும், தன்னலமற்ற செயல் பாடும் , குறுகிய எண்ணக்களை தவிர்த்த போக்கும் உள்ள ஆன்மீக வாதிகளை,

ஆன்மீகத்தில் முழுக் கவனம் செலுத்தி, ஆன்மீகத்தின் மூலம் மக்களின் மனதில் ,அமைதியும் , நம்பிக்கையும் , நட்பையும், கருணையையும், சமரசத்தையும், நல்லிணக்கத்தையும்  தூண்டக் கூடிய ஆன்மீக வாதிகள் இல்லையோ என்றே எண்ண வேண்டிய  நிலையே உள்ளது.

இந்த நிலையிலே நூறு கோடிக்கும்  மேற்பட்ட உலகளாவிய இந்துக்களின் மதமான இந்து மதத்தை வழி நடத்தி செல்வது சங்க   பரிவாரங்கள் என்று அழைக்கப் படும் இந்து இயக்கங்களின் கைக்கு சென்று விட்டதா, அவர்கள் எப்படி செயல் படுகிறார்கள் என்பது பற்றி நாம் தொடர்ந்து ஆராய்வோம்.

(To be continued)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: