Thiruchchikkaaran's Blog

சிவ குமார் தலைமையில் நடை பெற்ற தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கருத்தரங்கம்.

Posted on: June 29, 2010


கோவையில் நடை பெற்ற தமிழ் செம்மொழி மாநாட்டிலே, திரு.சிவகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற   கருத்தரங்கம் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றாக அமைந்து இருந்தது.

வித்தாக விளங்கும் மொழி என்ற தலைப்பில் நடை பெற்ற கருத்தரங்கிலே ஜெகத் கஸ்பர், பர்வீன் சுல்தானா, கம்பம் செல்வேந்திரன் உள்ளிட்ட பலரும் … கலந்து கொண்டு சிறப்பாகப் பேசினார்கள். அந்த கருத்தரங்கத்திலே சிவகுமாரின் உரை மிகச் சிறப்பாக அமைந்து இருந்தது. .  சாதி அடிப்படையிலான உயர்வு தாழ்வு தவறானது என்பதை முக்கியப் பொருளாக வைத்து மிகச் சிறப்பாகப் பேசினார் சிவகுமார்.

சிறந்த நடிகராக விளங்கிய சிவகுமார் ஒரு சிறந்த தமிழ் இலக்கிய வாதியாகப் பரிணமித்து வருகிறார் என்றே சொல்லலாம். கடந்த சில வருடங்களாகவே அவர் பங்கு பெரும் நிகழ்ச்சிகளில் எல்லாம் தமிழ் இலக்கியப் பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டியும் விளக்கியும் சிறப்பாக பேசி வருகிறார்.

கழிவு நீர்க் குழாயில் அடைப்பு ஏற்ப்படும் போது, ஓடிப் போய் வாங்கய்யா என்று கூப்பிடுகிரோமே, அவர் உயிரைப் பணயம் வைத்து பாதாள சாக்கடையில் இறங்கி அடைப்பை நீக்குகிறாரே,  அவரை எப்படி சாதாரமான வராக கருத முடியும், அவர் வராவிட்டால் நம் நிலைமை என்ன ஆகும் என்கிற உணமியைக் குறிப்பிட்டு உருக்கமாகப் பேசினார். அவர்களை தாழ்ச்சியாக கருதக் கூடாது என்று  தன்னுடைய குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே சொல்லிக் கொடுத்து வருவதாக குறிப்பிட்டார்.அடுத்து சிவலிங்கத்தை உருவாக்கிய சிற்பிகள், அந்தக் கோவிலைக் கட்டிய பணியாட்கள் அந்தக் கோவிலுக்கு வரக் கூடாது என்று சொல்வது சரியா, என்று கேட்டார்.

திருப்பதி கோவிலுக்கு நடந்தே செல்லும் சாதாரண  பக்தன் மூன்று நாட்கள் பொறுமையுடன் இருந்தே சாமி தரிசனம் செய்ய முடிகிறது, ஆனால் பணக்காரர்கள்  எளிதாக சாமி தரிசனம் செய்கின்றனர் என்பதைக் குறிப்பிட்டார்.  தனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளவன் தான் என்றும், வீட்டிலேயே சாமி கும்பிடுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்து மதத்தில் சாதி இல்லை என திட்ட வட்டமாக குறிப்பிட்டார். காந்தி தீண்டாமையை எதிர்த்து உண்ணாவிரதம்  இருந்ததாகவும்,  இந்து மத்தில் தீண்டாமை இருக்கிறது என்று சொன்னால், தான் அந்த மதத்தை எதிர்ப்பேன் என்று சொன்னதாகவும் குறிப்பிட்டார். காந்தி உண்ணா விரதம் இருப்பதைக் கேள்விப்பட்ட ஜவஹர்லாலின் அன்னை சொரூப ராணி , காஷ்மீரத்துப் பண்டிதர் சமூகத்தை சேர்ந்த அவர், தன்னுடைய வீட்டி சுத்தம் செய்பவரை உணவு சமைக்க சொல்லி அதனை அவர் சாப்பிட்டு ,  தான் அவ்வாறு செய்ததாகவும் உண்ணா விரதத்தைக்  கைவிட வேண்டும் என்று காந்திக்கு  சொல்லி அனுப்பியதாகவும் சொன்னார்.

முத்தாய்ப்பாக கம்பனை மேற்கோள் காட்டி, இராமன் குகனை சகோதரனாக ஏற்றத்தையும்,  பின்னர் சுக்ரீவனையும் சகோதரனாக கொண்டதோடு அரக்கர் குல வீபிடணனை சகோதரனாக ஏற்று உம்மோடு எழுவரானோம் என்று கூறிய இராமன் என்று விளக்கி,

எல்லா பிரிவினரையும் கட்டித் தழுவி தனது சகோதரனாக ஏற்ற இராமனை தெய்வமாக கொண்ட இந்து மதம் எப்படி பிறப்பு அடிப்படையில்  சிலரை தாழ்ச்சியாக  கருதியதாக  சொல்ல  முடியும்  என்கிறதை மக்கள் உணரும் வகையில் பேசி,   சாதி அடிப்படையில் யாரையும் தாழ்வாகக் கருதக் கூடாது என்று சமத்துவ பாதைக்கு வலு சேர்த்தார்.

.

எல்லோரும் அதிசயக்கும் வகையிலே புறநானூறு, கமபராமாயணம் என்று மேற்கோள் காட்டி தமிழ் பேராசிரியரைப் போல உரை நிகழ்த்தினார் சிவகுமார் .

10 Responses to "சிவ குமார் தலைமையில் நடை பெற்ற தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கருத்தரங்கம்."

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் சிவகுமார் மிகவும் அருமையாகப் பேசினார்.பாராட்டும்படி இருந்தது.

///ஜெகத் கஸ்பர், பர்வீன் சுல்தானா, கம்பம் செல்வேந்திரன் உள்ளிட்ட பலரும் … கலந்து கொண்டு சிறப்பாகப் பேசினார்கள்.///

சிவக்குமார் உள்பட பலர் அருமையாகப் பேசினாலும் சிலருடைய பேச்சு ரசிக்கும்படியாக இல்லை.உதாரணமாக கம்பம் செல்வேந்திரன் தவிர அதே பெயர்கொண்ட திருச்சி செல்வேந்திரன் என்பவர் (அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து) என்ற தலைப்பில் பேசினார்.அவர் தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாமல் தேவையில்லாமல் வெறும் ஆபாசத்தையே மையமாகக் கொண்டு பேசினார். அவர் பேச்சு எந்தவகையிலும் தமிழ் மொழியையோ,தமிழர் கலாச்சாரத்தையோ, பக்தி இலக்கியத்தையோ சிறப்பித்ததாகத் தெரியவில்லை.அவர் பேச்சை யாரும் குறிப்பாக பெண்கள் ரசிக்கவோ,விரும்பவோ இல்லை என்பதை அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு வீடியோவைப் பார்க்கும் போது தெரிந்தது.

சைடு கேப்புல ராமன கடவுளா கொண்ட இந்து மதம் என்று கதை விடுகிறீர்களே

//எல்லா பிரிவினரையும் கட்டித் தழுவி தனது சகோதரனாக ஏற்ற இராமனை தெய்வமாக கொண்ட இந்து மதம் எப்படி பிறப்பு அடிப்படையில் சிலரை தாழ்ச்சியாக கருதியதாக சொல்ல முடியும் என்கிறதை மக்கள் உணரும் வகையில் பேசி, சாதி அடிப்படையில் யாரையும் தாழ்வாகக் கருதக் கூடாது என்று சமத்துவ பாதைக்கு வலு சேர்த்தார்//

இப்ப திருப்தியா தல, இந்து மதத்தின் மிக முக்கிய தெய்வங்களில் இராமனும் ஒருவர், அவரே அப்படி சாதி வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் நண்பராக ஏற்று இருக்கிறாரே அப்ப நமக்கு என்ன, என்பதைக் காட்டத்தான் அவர் அப்படி பேசி இருக்கிறார்.

மக்கள் தெய்வங்களாக வணக்குபவர்களை முகாந்திரம் இல்லாமல் இகழும் பின்னூட்டங்களை வெளியிட வேண்டாம் என்று முடிவு எடுத்து இருக்கிறோம் தல. எனவே, இயேசு, விநாயகர், உட்பட யாரயும் இகழும் வகையில எழுதப் படும் கருத்துக்களை வெளியிடுவது இல்லை தல. உங்களைப் போனார அன்பு நெஞ்சங்கள் கொஞ்சம் கனிவான வார்த்தைகளை எழுதி கோ ஆபரேட் பண்ணுங்க தல.

.

சிவக்குமார் ஒரு மகத்தான மனிதர்.அவர் ஒழுக்கத்திலும் சிறந்தவர்.யோகா, பிராணாயாமம் போன்றவற்றை தவறாமல் செய்து வருபவர்.டீ,காப்பியைக் கூட அருந்துவதை நிறுத்தி 50 வருடங்களுக்கு மேல் ஆகியதாகக் கூறியிருக்கிறார்.அவருடைய சிந்தனைகளும் உயர்வாகவானதாகவே இருக்கிறது.உண்மையிலேயே அவர் உயர்வானவர் தான்.

செம்மொழி மாநாட்டில் ஆபாசமாகப் பேசிய திருச்சி செல்வேந்திரன் முன்பு திருச்சி மாவட்ட பெரியார் திராவிட கழக தலைவராக இருந்திருக்கிறார்.அதனாலேயே அந்த மாநாட்டில் அவர் தமிழ் பக்தி இலக்கியங்களைப் பற்றி ஆபாசமாகப் பேசியிருக்கிறார் என்பதை இன்று தான் எனக்குத் தெரிந்தது.

dear friends
what our brother pradeep is trying to say? I confused.
Rama is not a god of hindu religion?
where is the side gap?
If i am not wrong,from thredha yugam onwards he is the god of hindus.

Satheesh,

Sivakumar elaborated long about Rama, that considered Kuha, Veebidanan, … as brothers, he quoted from Kamba Rammayana. But I dont remeber exactly whethe he told the word ராமன கடவுளா கொண்ட இந்து மதம் , which I used. But it is obvious that Sivakumar meant to say that only, that Rama is the God, he himself is against caste system…

So I clarified that m,atter.

Probably Mr. Pradeep try to point out that.

However when many people make false probaganda as if Rama is a man who created the caste system, Caste system was there even before Rama born, Now Sivakumar had clarified the truth that Rama broke the Varna system and united all the people. In fact he mingled with Vanaras and created a team , who are still in the evolution satge from monkey to Homo sepian (man)!

Even Thalaivar was left to listen to the truth!

dear thiruchi sir,
thanks for your explanation,now i understood the intension of our bro.
but first I shocked that some one is trying to taken out sri raman from hindus and add him to some other religion (like our scriptures).better we should try to get pattern for all our prayers,scriptures,gods(o’ god) and all things related to prayer.
raman enga sami,enga sami,enga sami
(enga -all humans those who have faith on him).

jai sri ram

தயவு செய்து நண்பர்கள் ஒரே பெயரிலே எழுதவும். பல பெயர்களில் எழுத வேண்டிய அவசியம் இல்லை. அப்படி எழுதும் நேரத்திலே மட்டுறுத்துவது தவிர்க்க இயலாதது.

அவர் கூறிய தீண்டாமையை இல்லாது செய்ய அல்லது குறைந்த பக்ஷம் இன்றைய நிலையில் இருந்து குறைக்கும் அதிகாரம் கொண்ட அதிகார வர்க்கம் எதிரில் அமர்ந்து இருக்க பிரச்னை எங்கோ இருப்பது போல் பொதுப்படையாக பேசியது சரியில்லை.

எனது எதிர் வினை
http://www.virutcham.com/tag/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/

Leave a comment

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 45 other subscribers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09