Thiruchchikkaaran's Blog

தமிழர் தலை மகனார் தொல்காப்பியரைப் போற்றுவோம்!

Posted on: July 6, 2010


தலைப்பு: தமிழர் தலை மகனார்  தொல்காப்பியரைப்  போற்றுவோம்.

தமிழ் மொழியும் தமிழர் நாகரீகமும் தொன்மை வாய்ந்தவை ஆகும். உலகின் மிகப் பழமையான மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.

மிகப் பழமையான இலக்கியங்கள் தமிழிலே உண்டு. இப்போது நமக்கு கிடைத்து இருக்கும் தமிழ் நூல்களில்   எல்லாம் மிகப் பழமையானது தொல்காப்பியமே.  தொல்காப்பியத்துக்கே முன்னரே பல இலக்கியங்கள் இருந்திருக்கக் கூடும் என்பதே சான்றோர் கருத்து.  ஏனெனில்  பொதுவாக இலக்கண் நூல்கள் எழுதப் படுவது பல இலக்கியங்கள் உண்டான பிறகு, அவற்றின் அடிப்படையிலே இலக்கணம் வகுக்கப் படும். ஆயினும் தமிழ் மொழியின் இலக்கணத்தை, தமிழ் சமுதாய வாழ்க்கை முறையை நமக்கு எல்லாம் அறிமுகப் படுத்தியவர் என்ற முறையிலே நமது மூத்தோர் , நல்லாசிரியரான  தொல்காப்பியருக்கு   நன்றி செலுத்துவதில், போற்றுவதில், வணங்குவதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

தொல்காப்பியாய்த்தின் காலம் கி.மு. 500 க்கு முற்ப்பட்டது என்று என்று  அறிஞர்கள் ஆராய்ந்து அறிவித்துள்ளனர்.

தொல்காப்பியத்திலே எழுத்ததிகாரம் , சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்கள் உள்ளன.

தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல்.  இலக்கண நூல் என்றவுடன் அனைவர்க்கும் சிறிது வியப்போடு அச்சமும் வரும்.  பள்ளியில் பயிலும் போது தமிழாக இருந்தாலும் சரி, ஆங்கிலமாக இருந்தாலும் சரி, இலக்கணம் என்றால் நமக்கு கொஞ்சம் அப்படி இப்படி  தான். ஏனெனில் கட்டுரையாக இருந்தால் நாம் ஏதாவது  கதை விட்டாலும் பாதி மதிப்பெண்ணா வது கிடைக்கும். ஆனால் இலக்கணக்   கேள்வியில் தவறு செய்தால் மதிப்பெண் கிடைக்காது.

ஆனால்  அச்சத்திற்கு இடமின்றி தொல்காப்பியத்தை எளிதாக வடிவமைத்து உள்ளார் தொல்காப்பியர்.

உண்மையில்  தொல் காப்பியம் மிக எளிமையான நூல். நாம் ஒன்றாம் வகுப்பு தமிழ் பாடத்திலே படித்தது உண்மையிலேயே தொல்காப்பியம் தான். ஏனெனில்  நாம் ஒன்றாம் வகுப்பில் படித்த அ, ஆ, இ , ஈ …. என்பதில் இருந்து ஆரம்பித்து, அதாவது அடிப்படையில் இருந்து தொடங்கி இருக்கிறார்.

1.எழுத்து எனப் படுப

அகரம் முதல்

னகர இறுவாய் . முப்பது என்ப-

சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே

3.அவற்றுள் அ, இ, உ, எ, ஒ என்னும் அப்பால் ஐந்தும் ஓரளபு இசைக்கும் குற்றெழுத்து   என்ப

4. ஆ, ஈ , ஊ , ஏ, ஐ ,  ஓ, ஔ என்னும்

அப்பால் ஏழும்

ஈர் அளபு இசைக்கும். நெட்டெழுத்து என்ப

இதற்க்கு உரையே தேவை இல்லை என்று சொல்லும் அளவுக்கு  படிக்கும் யாவரும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம் என்னும் படிக்கு மிக  எளிதாக இலக்கண விதிகளை நமக்கு புரியும் வகையில் வழங்கி இருக்கிறார் தொல்காப்பியர்.

மூவாயிரம் ஆண்டுக்கு முன்னர் தொல்காப்பியன் தமிழ் இலக்கணத்தை எங்கே ஆரம்பித்தானோ அங்கே தான் நாமும் ஆரம்பிக்கிறோம்.

ஆனால் ஆனால் எங்கே போய் முடிக்கிறோம்? அன்று

“கற்க கசடற கற்பவை  கற்ற பின்

நிற்க அதற்க்கு தக”,  என்று எதுகையும் மோனையும் கருத்தும் சிறந்து இருந்த பாடல்கள் வெளி வந்தன. இன்றோ லூசுப் பெண்ணே, லூசுப் பெண்ணே போன்ற தமிழ் முழக்கமே தெருவெங்கும்  ஒலிக்கிறது.

தமிழ் செய்யுள்கள் மிகச் சிறப்பானவை. செய்யுளை அசை, சீர் , தளை, அடி தொடை என்று பிரித்து எழுத சொல்வார்கள். எந்த செய்யுளை எடுத்து பிரித்தாலும் சுருதி சுத்தமாக  இருக்கும். இது எப்படி கணினி போல கச்சிதமாக எழுதி இருக்கிறார்களே என்று தோன்றும். எதுகையும் மோனையும் விளையாடும். கருத்தும் சிறப்பாக இருக்கும். இவை எல்லாம் இலக்கண சுத்தமாக எழுதப் பட்ட பாடல்கள். பாரதியார், நாமக்கல் கவிஞர், பாரதிதாசன் வரை சரியான செய்யுள் வடிவில் கவிதை  எழுதி இருக்கின்றனர்.

இப்போது வரும் பாடல்களில் ஒரு இலக்கணமோ, எதுகையோ ஆசையோ, சீரோ, தளையோ, தொடையோ எதுவுமே இல்லை. நாம் இப்படி எழுதினால் நம்மைத் திட்டுவார்கள். ஏம்பா உனக்கு கண்ணு தெரியலை. படத்தை நல்லா பாருப்பா , உனக்கு தொடை தெரியவில்லையா என்று. அவர்கள் சொல்வது திரைப் படத்தில் ஆடும் அழகிகளின் தொடையை, நாம் சொல் வந்தது இலக்கணத்தை.

தொல்காப்பியன் வழி வந்த தமிழ் சமுதாயத்தின் இன்றைய சிறுவர்களும் , சிறுமியர்களும் அறிந்த பாடல்கள் பலவும் ”சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா , மேஸ்திரிக்கு சின்ன வீடு பிடிக்குமா? ” என்ற வகையிலேயே இருக்கிறது  எனவே தொல்காப்பியன் தொடங்கி பாரதி தாசன் வரை எல்லா தமிழ்ப் புலவர்களையும் இக்கால சிறுவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

Advertisements

2 Responses to "தமிழர் தலை மகனார் தொல்காப்பியரைப் போற்றுவோம்!"

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

நல்ல கட்டுரை.தமிழ் மொழிக்கு தொல்காப்பியரின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது.

///தொல்காப்பியன் தொடங்கி பாரதி தாசன் வரை எல்லா தமிழ்ப் புலவர்களையும் இக்கால சிறுவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது///

மெட்ரிகுலேசன் பள்ளியில் ஆங்கிலத்தை அர்த்தம் புரிந்தும், தமிழை அர்த்தம் புரியாமலும் படிக்கும் சிறுவர்களை நினைத்தால் தான் வேதனையாக உள்ளது.

விஜய் டிவியில் “அழகிய தமிழ்மகன்” என்று ஒரு நிகழ்ச்சி வருகிறது.அதில் பங்கு பெரும் ஒருவரிடம் ” tea “என்பதை எப்படி தமிழில் அழைப்பது என்று கேட்கிறார்கள் .அந்த அழகிய தமிழ் மகனுக்கு!!! தெரியவில்லை.தேநீர் என்ற வார்த்தை கூட தெரியாத அந்த பையன் அழகிய தமிழ் மகனாம்.!!!! இப்படிப்பட்ட இளைஞன் எப்படி நல்ல கவித்துவமிக்க தமிழ் பாடலை ரசிப்பான்.???

///தொல்காப்பியன் தொடங்கி பாரதி தாசன் வரை எல்லா தமிழ்ப் புலவர்களையும் இக்கால சிறுவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது///

மிகச் சரிதான்.இதற்க்கு அரசின் பங்கு இன்றியமையாதது.

சகோ.திரு திருச்சிக்காரர் அவர்களே,

///தமிழ் மொழியும் தமிழர் நாகரீகமும் தொன்மை வாய்ந்தவை ஆகும். உலகின் மிகப் பழமையான மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை///

கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழி என்று கூறுகின்றனர்.உண்மையிலேயே தமிழ் மொழி தான் உலகில் முதன் முதலில் தோன்றிய மொழியா?

ஆப்பிரிக்காவில் உள்ள கறுப்பர் இனமே முதன் முதலில் தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.அப்படி என்றால் அவர்கள் பேசிய மொழி தானே முதலில் தோன்றியிருக்க முடியும்.?

எப்படி இருந்தாலும் தமிழ் மொழி, மிகப் பழமையான மொழிகளில் சிறந்த இலக்கியங்களைக் கொண்டதும், இப்பொழுது இருக்கும் மொழிகளில் தொன்மையும்,சிறப்பும் வாய்ந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: