Thiruchchikkaaran's Blog

கணவனுக்காக காத்திருக்கும்   அவள் ஒரு குடும்பக் குத்து விளக்கு.

 கண்ணியமும் ஒழுக்கமும் நிறைவாக உள்ள பெரிய பணக்கார பிரபுத்துவ குடும்ப
 சூழ்நிலையில் வளர்ந்த அழகுப் பதுமை அவள்.
(அதாங்க அரிஸ்டோகிராடிக் பேமிலி என்று எல்லாம் சொல்வார்களே …)! அந்தக் குடும்பத்துக்கு அறிமுகமாகிறான் ஒரு இளைஞன். கண்ணியமிக்க கணவானாக காட்சி தரும்  அவன் அந்தக் குடும்பத்து அங்கத்தினர்களின் குட் புக்ஸில் இடம் பிடிக்கிறான். அவனை எல்லோருக்கும் பிடித்துப் போகிறது. அவன்தான் சிறந்த மாப்பிள்ளையாக இருக்கிறான் என்று திருமணம் பேசி முடிக்கிறார்கள்.
இப்போது…  கணவனின் அன்புக்காக காத்திருக்கிறாள் அந்த பெண். … அறையில் நுழைவது யார்…அவளது கணவனா …இன்னொருவனா…ஆம் அவளது கணவன்  தான்….ஆனால் அவள் குடும்பத்தில் இது வரைக்கும் பழகி வந்த
 இளைங்கனா அவன். சுத்தமான பழக்க வழக்கங்கள் உள்ளவனாக காட்சி
அளித்த அவன் கையில் மதுக்கோப்பையுடன்
சாராய வாடை வீச  அறைக்குள் நுழைகிறான். உலகமே சுழலுவது
போல இருக்கிறது அவளுக்கு. மயக்கத்துடன் கையில் மதுக் கோப்பையை ஏந்தி வரும் அவனைக் கண்டு   மனைவி  அதிர்ச்சியிலும்  வேதனையிலும் கண்ணீர் வடிக்கும் நிலையில் அவளிடம் சென்று பாடுகிறான், “உன் அழகிய  உதடுகளில் நான் முத்தமிடலாமா, நான் கையில் ஏந்தி உள்ள கோப்பையில் உள்ளது …..இது பழரசமே….,  நம்மைக் காக்க இயற்கை இதை (மதுவை) தந்துள்ளது என்று பாடி , நான் மது அருந்துவதை தவறாக நினைக்காதே …இது  ஓக்கேதான் ”என்று தன் தரப்பு நியாயத்தை முன் வைக்கிறான்.
“சூ லேனே தோ நாசூக்கு ஹோட்டோன் கோ   ….” என்னும் ( உன் அழகிய உதடுகளில் நான் முத்தமிடலமா ….. என்னும் பொருளுடைய ) இந்தப் பாடல் “காஜல் (Kaajal)”  என்கிற இந்திப் படத்தில் வரும் பிரபலமான பாடல் ஆகும்.  மனைவி பாத்திரத்தில் நடித்தவர் மீரா குமாரி. தறுதலை மாப்பிள்ளை பாத்திரத்தை  கன கச்சிதமாக செய்தவர் ராஜ் குமார்.
என்னய்யா ஒருத்தன் தண்ணி அடிக்கிறான் என்பதால் அவன் கெட்டவன் எனக் கருதிக் கண்ணீர் வடிக்க வேண்டுமா என்ற எண்ணம் வரலாம். ஆனால் எந்த வித தேவையற்ற பழக்கங்களும் இல்லாத சுத்தமான இளைங்கனாக கருதப் பட்டவனின் உண்மை நிலை வேறு மாதிரி உள்ளதே என்பதை அறிந்தே அவள் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் வடிக்கிறாள். இன்னும் போகப்போக  பல உண்மைகள் வெளியாகின்றன. அவன் அடிக்கடி கோட்டே எனப்படும் நடனக் காட்சிளில் மதுவுடன்  நங்கைகளின் ஆட்டத்தை ரசிக்கும் பழக்கம் உடையவன், ஒண்ணுக்கும் உதவாத தறுதலை… திட்டமிட்டு தங்களை ஏமாற்றி  தங்கள் குடும்ப பெண்ணை திருமணம் செய்து இருக்கிறான், என்பதை அறிந்து அந்த குடும்பமே அதிர்ச்சி அடைகிறது.
அவனை குடும்பத்தை  விட்டு விலக்கவும் முடியாமல், அவனைப் பொறுக்கவும் முடியாமல் தடுமாறுகிறது அந்தக் குடும்பம். குடும்பத்தின் முக்கிய பொறுப்புகளை கவனித்து வரும் தர்மேந்திரா (மீனா குமாரியை தங்கையாக பாவிப்பவர் ) ராஜ் குமாரைக் கண்டித்து  அவரை நல் வழிக்கு கொண்டு வர முயலுகிறார் . இந்த நிலையில் ஒரு திருப்பமாக அந்த தறுதலை மாப்பிளையை வளர்த்து திட்டமிட்டு இந்தக் குடும்பத்தில் மாப்பிள்ளையாக்கிய வளர்ப்பு தந்தை வருகிறான்.
அவன்வேறு யாருமல்ல, அந்த பிரபுத்துவ குடுமபத்தில் காரியதரிசியாக
 பணியாற்றியவன் தான்.  எல்லோரும் பெரிய டைனிங் டேபிளில் அமர்ந்து
உணவருந்தும் போது அந்த வளர்ப்பு தந்தை ஒரு திடுக்கிடும் உண்மையை வெளியிடுகிறான் . அது என்னவென்றால் இந்த
குடிகார மாப்பிள்ளை, வேறு யாருமல்ல. அந்த அரண்மனையின் முக்கிய பிரபு குடும்பத்தின்
 ஒரே வாரிசு அவன்தான், (இப்போது தறுதலை மாப்பிள்ளையாக இருக்கும் ராஜ்குமார் தான்).  முன்பு அரண்மனையில் காரியதரிசியாக இருந்த அந்த வளர்ப்பு தந்தை செய்த தில்லு முல்லுகளை அறிந்த பிரபு, அவனை வேலையை விட்டு தூக்கி விடுகிறார். கோபத்தில் அரண்மனை வாரிசான குழந்தையை தூக்கி சென்று, அவனையும் தன்னைப் போல தறுதலையாக வளர்த்து அந்தக் குடும்பத்தை பழி வாங்கி விட்டதாக சொல்கிறான் அந்த வளர்ப்பு தந்தை. மீரா குமாரியின் வாழ்க்கையையும் நரகமாக்கி இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன் என்று சொல்கிறேன்.
 இதைக் கேட்டு அனைவரும் பெருத்த அதிர்ச்சி அடைகின்றனர்.  இதைக் கேட்டு கோவம் அடைந்த தறுதலை மாப்பிள்ளை ராஜ்குமார் கோவத்துடன் இதுகாறும் தன்னை வளர்த்து வந்த வளர்ப்பு தந்தையின் கன்னத்தில் விடுகிறான் பளார்… பளார்…!. தர்மேந்திராவைப் போல நானும் கண்ணியமான இளைங்கனாக வளர்ந்து இருப்பேனே. என்னை விபச்சார கோட்டேக்களில் வளர்த்து கெடுத்து விட்டாயே, இனி என் முகத்தில் முழிக்காதே என்று தன்னை வளரத்தவனை விரட்டுகிறான்.
 ராஜ்குமாரிடம் முழு அதிகாரமும் வருகிறது. தன்னுடன் மோதிய தர்மேந்திராவை முக்கிய பொறுப்புகளில்  இருந்து நீக்குகிறான். தர்மேந்திராவிடம், நீ நல்லவன், ஆனால் என்னை நீ ரொம்பவும் அவமானப் படுத்தி விட்டாய் என்கிறான்.  அடிக்கடி ராஜ்குமாரும், தர்மேந்திராவும் மோதுகின்றனர்.
ஒரு முறை ராஜ் குமார்   கோவத்தில் பெரிய துப்பாக்கியை  எடுத்து தரமேந்திராவை சுட முயலுகிறான்.  துப்பாக்கியை பிடித்து அவனை தடுக்கிறார் தர்மேந்திரா. மீரா குமாரியும்  அழுகையுடன் கணவனை தடுக்கிறார். இந்த கை கலப்பில் தவறுதலாக துப்பாக்கி வெடித்து மீரா குமாரியின் உடலில் குண்டு பாய்ந்து விடுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீனா குமாரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் படுகிறார். அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்த ராஜ்குமார் குதிரையின் மீதேறி கண் போன போக்கில் அதை ஓட்டுகிறான். உண்மையிலே  மீனாகுமாரியை மனப் பூர்வமாக நேசித்து இருக்கிறான் ராஜ்குமார். தன்னுடைய அன்பு மனைவியை தானே சுட்டு விட்டதை அறிந்து மிகவும் வருத்தத்துடன் குதிரையை ஓட்டுபவன், போலீசில் சரண் அடைய போலீஸ் ஸ்டேஷன் செல்கிறான்.
அங்கே போலீசார் மீனா குமாரி மரண வாக்குமூலம் அளித்ததாகவும், அதை தன்னுடைய அன்பு கணவர் ராஜ்குமார் மீது எந்த தவறும் இல்லை என்றும் தானே கை தவறுதலாக துப்பாக்கியை இயக்கி விட்டதாகவும், தன்னுடைய கணவர் மீது எந்த தவறும் இல்லை என்றும் அவரை கைது  செய்ய வேண்டாம் என்றும் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் பேசிக் கொள்வதை ஜன்னல் வழியே கேட்ட ராஜ்குமார், தன் அன்பு மனைவி தன் மேல் இவ்வளவு அன்பு உள்ளவள் என்பதை அறிந்து இன்னும் அதிக மனவருத்தம் அடைகிறான். தன்னுடைய மனைவியை  பார்க்க மருத்துவமனைக்கு விரைகிறான். அதிர்ஷ்ட வசமாக மீனா குமாரி பிழைத்து விடுகிறார். அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்க மனம் திருந்திய நல்லவனாக ராஜ்குமார் குடும்பத்தில் இணைத்து அன்பு மனைவியுடன் நல் வாழ்க்கைக்கு வருவது படத்தின் முடிவாகும்.
 தூய்மையும், அர்ப்பணிப்பும் உடைய ஒரு மனைவியால் திருத்தப் பட முடியாத கொடுமைக்கார கணவனே இல்லை என்கிற சுவாமி விவேகானந்தரின் கூற்றை விளக்கும் படியாக படம் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
1965ல் வெளியான இந்த ஹிந்தி திரைப் படம் ஒரு சூப்பர் ஹிட் படம். படத்தில் தர்மேந்திராவுக்கு ஜோடியாக நாட்டியப் பேரொளி பத்மினி நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் தர்மேந்திரா ஹீரோ, பத்மினி ஹீரோயின், ராஜ்குமார் வில்லன்  என்கிற ரீதியில்  படம் ஆரம்பித்தாலும் உண்மையில்    ராஜ்குமார் ஹீரோவாகவும், மீனா குமாரி ஹீரோயினாகவும் இருப்பதை அனைவரும் உணரலாம். மீனா குமாரியை அழகு ராணி என்பதை விட சோக (அழுகை) ராணி  என்பதாகவே அக்கால  பாலிவுட்டில் பிரபலமானவர். தமிழ்
சினிமா உலகில்  விஜயகுமாரி அழுது தள்ளியதைப் போல ஹிந்தியில் மீனா குமரியும்  லிட்டர் கணக்கில் கண்ணீர் விட்டு தியேட்டரையும் கண்ணீர் வெள்ளத்தில் மிதக்க விடுவதில் பிரபலமானவர்.
சூ லேனே தோ நாசூக்கு ஹோட்டோன் கோ   ….என்கிற  பாடல் ஹிந்திப் பட உலகின் முடி சூடா மன்னர் முகமது ரபி பாடியது. அன்று முதல் இன்று வரை இந்த பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும்.  இந்தப் பாடலில்  ”அச்சோன் கோ  புரா ஸாபித் கர்னா துனியாக்கி புராணி ஆதத் ஹை…” (நல்லவற்றை கூட கெட்டதாக சாதிப்பது உலகத்தில் பண்டு தொட்டு இருந்து வரும் பழக்கம் ஆகும்) என்று பாடுகிறார் ராஜ்குமார்.  இந்த வரி தான் மது அருந்துவதை நியாயப்ப படுத்தும் விதமாமா  இருந்தாலும், பொதுவாக இந்த வரி ஒரு ஆச்சரியத்தை தருவதாக உள்ளது.
எட்டாயிரம் வருடங்களுக்கு மேலான இந்திய சமுதாயத்தின் முக்கிய காரணிகளில் ஒன்று மனைவியானவள் தன் கணவனுக்காக தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தந்தும் தன கணவனைக் காக்க தயாராக இருக்கிறாள் என்பதே. சீதை, கண்ணகி, தமயந்தி, சாவித்திரி, நளாயினி, பார்வதி  .. உள்ளிட்ட கோடானு கோடி இந்திய மனைவிகளாலே ஒரு இந்தியன் காக்கப்பட்டு வந்திருக்கிறான். ஒரு இந்திய மனைவி எந்தக் காலத்தும் தன் கணவனைக் கைவிடுவதில்லை. இதையே ரிக் வேதமும் ”மம  ஜீவன ஹேதுனா (என்னுடைய வாழ்க்கைக்கு இன்றி  அமையாதவளே ), மாங்கல்யம் தந்துனானே, கண்டே பத்னாமி (இந்த மாங்கலயத்தை உன் கழுத்தை சுற்றி அணிவிக்கிறேன்) ,சுபாகே (நல்ல குணம் உள்ளவளே) த்வம், சஞ்சீவ சரத  சதம் (நீ நூறாண்டு காலம் வாழ்க ) என்று சொல்லுகிறது.
இதே கருத்தையே தமிழ் சினிமாவில்  ராஜ் கிரண் “ஆண்டவன் தான் படைச்ச எல்லா உயிரையும் தானே காப்பாத்த முடியாதுன்னு தான், தாயைப் படைச்சான்…. அந்த தாயும் கடைசி வரைக்கும் இருப்பதில்லை என்பதால் தான் தாரத்தைப் படைச்சான்… அதுனால என்னைப் பொருத்தவரையில ஆண்டவன், தாய், தாரம்
 எல்லாம் ஒண்ணுதான் …” . என்கிற ரீதியில் பேசி
மனைவியின் சிறப்பை விளக்கி இருக்கிறார்.
மாணவப் பருவத்தில்  நண்பர்கள்  இதே டயலாக்கை இன்னும் கொஞ்சம் கலக்கலாக
 ”….அந்த தாரமும் கடைசி வரைக்கும் ஒல்லியாக இருப்பதில்லை என்பதால் தான் சின்ன வீட்டை படைச்சான்” என்று கலாய்ப்பது உண்டு. ஆனாலும் அதே நண்பர்கள் திருமணம் ஆண் பின்
 மனைவியின் அருமையை உணர்ந்து  சின்ன வீடு தன் உயிரைக் கொடுத்தாகிலும் கணவனைக் காக்குமா …என்கிறதை சிந்தித்துப் பார்ப்பதும் உண்டு!

மனைவியை நேசிக்கிறவங்க …..

Posted by: thiruchchikkaaran on: November 27, 2011

மனைவியை மதிப்பது  அன்பு செய்வது - நாகரீகத்தின் முக்கிய காரணிகளுள் ஒன்று.   . மனைவியை மதிப்பது நாம் அவருக்கு காட்டும் சலுகையோ , உபகாரமோ இல்லை. உலகில் உள்ள எந்த ஒரு மனிதரையும் அவமதிக்க நமக்கு உரிமை இல்லை. எந்த மனிதரையும் மரியாதையுடன் அணுகுவது நடத்துவதே  நாகரீகமாகும். ஒரு மனிதர் பிறர்க்கு தீங்கு விளையும் வகையில் நடந்து கொண்டால் அன்றி அவரை விளக்குவதோ, மரியாதையை குறைப்பதோ கூடாது. இவாறு இருக்க நம்முடன் வாழும் மனைவியை மரியாதைக் குறைவாக நடத்துவது நாகரீகம் அல்ல.
நம்முடைய நாகரீக த்தை நாம் சந்திக்கும் நண்பர்கள், உறவினர்கள், சக பணியாளர்கள் இவர்களிடம் காட்டினால் மட்டும் போதாது. நம்முடைய நாகரீகத்தை நம்முடைய வீட்டிலே துவங்க வேண்டும். நம்முடன் வாழும், தினமும் நம்மை எதிர்கொள்ளும் , வாழ் நாள் முழுவதும் நமக்கு உறுதுணையாக இருந்து , நமக்கு உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த மனிவியிடம் நாம் நாகரீகமாக நடந்து கொள்கிறோமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
மனைவியை மரியாதையுடன் நடத்துவது  இருக்கட்டும் மனைவியைத் துன்புறுத்தாமல் இருக்கிறோமா என்று சிந்திக்க வேண்டும்
மனைவியை திட்டுவது, அடிப்பது, துன்புறுத்துவது…. கொடூரக்  காட்டு மிராண்டித்தனமே.
காட்டு மிராண்டியாக  கற்கால த்தில்  வாழ்ந்த மனிதன் நம்மை விட எவ்வளவோ மேலானவன். அவன் கல்வி பயின்றதில்லை, நூல்களைக் கற்றதில்லை.

ஆனாலும் தான்   தேர்ந்தெடுத்த  துணைவியை அன்பு செய்து

அரவணை க்கும் பண்பாட்டை வளர்த்து விட்டான். இன்றைக்கு இத்தனை கல்வி கற்று  நூல்கள் படித்தும் மனைவியை அன்பு செய்து மதித்து அவருக்கு துன்பம் தராமல் வாழும் பாங்கை நாம் கைக் கொள்ளுகிரோமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தன்னுடைய மனைவியின் முழு அன்பையும் பெற்று விட்ட ஒருவன்  வாழக்கையில் எல்லா செயல்களையும் செய்து முடித்தவன் ஆகிறான் என்கிறார் சுவாமி விவேகா னந்தர். தன்னுடைய மனைவியின் கண்ணிலிருந்து வடியும் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் அத்தனை வருடம் நரகத்தில் இருப்பான் என்கிறார் மகாசன்னிதானம் ஸ்ரீ வித்யா தீர்த்தர் ..  
நரகம் என்று ஒன்று இருக்கிறதா என்று நமக்கு தெரியாது. ஆனால் மனைவியை திட்டுவது, அடிப்பது, அவமதிப்பது… போன்ற செயல்களில் ஈடுபடுவோர் இங்கே பூலோகத்திலேயே தன்கள் மனைவியின் வாழ்க்கையை நரகமாக்கி தங்கள வாழ்க்கையையும் நரகமாக்கிக் கொள்ளுகின்றனர என்பதை நாம் பகுத்தரிவிலே அறிந்து கொள்ளலாம்.
அதே நேரம் காலம் விரைவாக மாறி வருகிறது!
காட்டுமிராண்டி செயலில் ஈடுபட்டு மனைவியை துன்புறுத்தும் கணவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டிய து காலத்தின் கட்டாயம். மனசாட்சி அடிப்படையில் நீ நாகரீகமாக நடந்து கொள்  அல்லது சட்ட பூர்வமாக உனக்கு காப்பு போடப்பட்டு ஆப்படிக்கப் படும் என்கிற நிலையை கொடுமைக்கார கணவனுக்கு உணர்த்த தைரியமுள்ள  நங்கைகள் தயாராகி விட்டனர்.
(தொடரும்)

ரா…… ரா…….

Posted by: thiruchchikkaaran on: September 14, 2011

ரா….. ரா ….என்று ஆரம்பித்தால் பதிலுக்கு நண்பர்கள் “சரசுக்கு ரா ரா” என்று முடிக்கும் அளவுக்கு தமிழ் நாட்டில் ரா … ரா…. பாப்புலராகி விட்டது என்றால் அதற்க்கு காரணம் சந்திரமுகி திரைப் படம் தான்.

ஆனால் இந்த ரா…. ரா….என்பது முன்பிலிருந்தே தெலுங்கு மொழியில் மிகப் பிரபலமான சொற்றொடர் ஆக இருந்தது, காரணம் சத்குரு தியாகராஜ சுவாமிகள் கீர்த்தனைகள்.  ரா … என்றால் “வா ..” என்று அர்த்தம் ரா…ரா என்றால், வா… வா… என்ற அழைப்பு. தியாகராஜ சுவாமிகள், இந்த ரா..ரா..வை உபயோகம் செய்தது இராமரை அழைப்பதற்கு!

 தியாகராஜரை பற்றி விளக்குவது என்றால், ஆயிரம் பதிவு போட்டாலும் என்னால் விளக்க இயலாது. அவர் ஒரு அபூர்வமான மனிதர். காசு பணம் வேண்டாம் என சொல்லி எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் !

பலரும் அவருடைய இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுகின்றனர். ஆனால் என்னுடைய பார்வையில் அவரை மிகச் சிறந்த ஆன்மீக வாதியாக அணுகுகிறேன்.  ஒலியை மின்சாரமாக  மாற்றி பிறகு கேரியர் (மின் காந்த அலைகள்) மூலம் செலுத்துகிறார்கள் அல்லவா? அதைப் போல தியாகராஜ சுவாமிகள் மிகச் சிறந்த அமைதியான ஆன்மீகத்தை இசையின் மேல் ஏற்றி இசையை கேரியர் ஆக்கி ஆன்மீகத்தை  பரப்பி இருக்கிறார். அவருடைய கீர்த்தனைகளால் ஒன்றான “யே லா நீ தய ரா காது ( ஏன் நீ தயை புரிந்து என்னை பார்க்க வரக் கூடாதா ) என்ற கீர்த்தனையை சலங்கை ஒலி படத்தில் கேட்டது நினைவிருக்கலாம்.

http://www.youtube.com/watch?v=RRCUUWzkdPg

இந்தப் படத்தில் கமலஹாசன் சமையல் பணியாளராக உள்ள ஏழை தாய்க்கு மகனாகப் பிறந்ததால் சிறந்த நடனத் திறமை இருந்தும் வாய்ப்பில்லாத நிலையில் இருப்பதை சித்தரிக்கும் பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். பாடல் காட்சியும் அதை உணர்த்தும் வண்ணம் இருக்கும். இந்த காட்சியிலும் தியாகராசரின் ஆன்மீகத்தை விட அவரது பாடலும் இசையுமே மக்களை சென்று அடைகின்றன.

தியாகராஜா சுவாமிகள், என்னைப் பார்க்க வர நேரம் இல்லையா (ஏலா சமயமு காது) என்று பாடி இராமரை பார்க்க விரும்பும் தன் தவிப்பை வெளிப்படுத்துகிறார்.

வா வா தேவாதி தேவா….வா வா மஹானுபாவா , வா ..வா … தாமரை போன்ற அழகிய விழிகளை உடையவனே என அழைக்கிறார்.

மேலும் சீதையை மீட்க கடலின் நடவில் பரிவாரங்களுடன் சென்று  கம்பீரமாகப் போர் புரிந்தவர் (பூர ஹிருதய பரிவார ஜலதிதம்  கம்பீர தனுஜதம் )  என்றும் இராமரை புகழந்து அப்படிப்பட்ட நீ என்னை பார்க்க வரவது இயலாத காரியமா என்கிறார்.

இராஜாதி இராஜர்களாலும்    முனிவர்களாலும்  பூஜிக்கப் படுபவனும், கவியரசர் களால் புகழப் படுபவனுமாகிய நீ தயவு செய்து எனைக் காண வர இயலாதா என அழைக்கிறார்.

இந்தப் பாட்டை  படத்தில் திருமதி S.ஜானகி பாடி இருப்பார். பலர் இந்தப் படலை பாடி உள்ளனர் , என்னைக் கவர்ந்தது கான கந்தர்வ செம்பை வைத்யநாத பாகவதரின் கம்பீரக் குரல். இணையத்தில் அந்த சுட்டி கிடைக்கவில்லை. அவரது சீடரான திரு.ஜேசுதாசின் பாடலின் சுட்டி கிடைத்தது.  சிறப்பாகப் பாடி இருக்கிறார் அவரது பாடலை இணைத்துள்ளேன்.

http://www.youtube.com/watch?v=PSh5bsL-cnk&feature=related

பெண்களை தெய்வமாக கருதும் சமூகம் இந்திய சமூகம்.

உலகின் மிக வெற்றிகரமான பெண் அரசியல் தலைவர்களை உருவாக்கிய நாடு இந்தியா. உலகிலே பெண் கடவுளர்கள் இந்தளவுக்கு வணங்கப் படுவது போல எந்த நாட்டிலும் வணங்கப் படுவதில்லை. இந்தியாவைப் போல அரசியல், விளையாட்டு, அரசுப் பணி, தனியார் பணி…என்று எல்லாவற்றிலும் பெண்கள் பிரகாசிப்பது போல வேறு எங்காவது பிராகாசிக்கிரார்களா என்பது ஐயமே.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு  என்ற கேட்ட காலம் போய் பெண்கள் ஒவ்வொரு துறையிலும் தடம் பதித்தனர். பெண்கள் போலீஸ் அதிகாரிகளாக வும் சிறப்பாக செயல் பட்டனர். பெண்கள் அதிகம் இல்லாத ஒரே துறையாக இருந்தது இந்திய இராணுவம். அந்த இராணுவத்தின் அதிகாரியாக இந்திய ஏர் போர்சில் பணியில் சேர்ந்தார் அஞ்சலி குப்தா  . ஆனால் வட்டமிடும் வல்லூறுகள் தன்னை சுற்றி வருவதாக புகார் சொன்னார்.

தன்னுடைய மேலதிகாரி தன்னிடம் பாலியல் சில்மிசங்களில் ஈடுபடுவதாக புகார் சொன்னார் அஞ்சலி குப்தா. இந்த விவகாரம் பத்திரிகைகளில் செய்தியாகி நாறியது. சம்பந்தப் பட்ட அதிகாரியை விசாரித்து தண்டித்த இராணுவ கோர்ட் அஞ்சலி குப்தாவையும்  கோர்ட் மார்சல் செய்து விசாரித்து அஞ்சலியை பணியை விட்டு  டிஸ்மிஸ் செய்தது.  இந்த செய்தி பத்திரிகைகளில் முக்கிய செய்தியாக வந்தது பலருக்கு  நினைவிக்க்லாம்.  பெண் வான் படை அதிகாரி என்ற சிறப்பில் இருந்து கோர்ட் மார்சல் செய்யப் பட்ட முதல் பெண் அதிகாரி என்ற பெயருடன் டிஸ்மிஸ் செய்யப் பட்டு மண்ணிலே தள்ளப் பட்டார் இந்த மங்கையர் திலகம். அவர் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கிறோம். மன உளைச்சலில் தவித்த அஞ்சலி குப்தா தற்கொலை செய்து கொண்டதாக செய்திகளின் மூலம் அறிகிறோம்.அவரது மறைவுக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறோம்.

சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் அமைவதே நம்முடைய நோக்கம். அது ஒரே நாளில் , ஒரே வருடத்தில் அமைந்து விடாது. மக்கள் பிறரை மதிக்கும் நாகரீகப்  போக்கும் , நிதானமும் , மன முதிர்ச்சியும் உடையவர்களாக உருவெடுத்தால் சமத்துவ சமுதாயம் விரைவில் அமையும்.

இந்த நிலையில் வெவ்வேறு சமுதாயத்தினரும் தங்களுக்காக போராடிய தலைவர்களுக்கு மரியாதை செய்வதும்  , குரு பூஜை நடத்துவதும் புரிந்து கொள்ளக் கூடியதே. அவற்றை  அரசு தடுக்க வேண்டியது இல்லை, குரு பூஜையை ஒட்டிக் கூட்டங்கள் நடத்தப் பட்டால் அவற்றில் வன்முறை தூண்டலோ, வெறுப்புணர்ச்சி கருத்துக்களோ இருக்கக் கூடாது என்கிற அண்டர் டேகிங்கை பெற்றுக் கொண்டு அந்த குரு பூஜைகளை, விழாக்களை நடத்த அனுமதிக்கலாம்.

தலித் சமுதாய மக்கள மிகவும் மதிக்கும் தலைவர் இமானுவல் சேகரன். இவர் தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி 1957  ம் வருடம்கொலை செய்யப் பட்ட தியாகி. அவரது சமாதி உள்ள பரமத்தி நகருக்கு ஜான் பாண்டியன் வந்து அஞ்சலி செலுத்துவதாக இருந்ததாம். இதில் கடைசி  நேரத்தில் ஜான் பாண்டியனுக்கு அனுமதி  மறுக்கப் பட்டு விட்டது.

இதிலே ஜான் பாண்டியனுக்கு அனுமதி மறுக்க வேண்டிய அவசியம் என்ன வென்று தெரியவில்லை. கலெக்டர் போன்ற அதிகாரிகள் ஜான் பாண்டியனிடம் பெர்சனலாகப் பேசி கொஞ்சம் பாத்து பேசுங்க சார் என்று கேட்டு விடயத்தை லைட்டாக முடித்திருக்கலாம்.

ஜான் பாண்டியனுக்கு அனுமதி மறுக்கப் பட்டு அவர் வராததால் கடுப்பாகிப் போன தலித் சமுதாயத்தினர் தங்கள் கோபத்தை வெளிக் காட்ட கலவரம் மூண்டிருக்கிறது. இது தேவை இல்லாதா ஒன்று. ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை (இந்தியா முழுவதிலும் ) மக்கள் தங்கள் கோபத்தை வெளிக் காட்ட கலவரத்தில் ஈடுபடுவது அவ்வப் போது நடந்து வருகிறது. இது நிதானமில்லாத, கட்டுப் பாடு இல்லாத போக்கே, இது கண்டிக்கத் தக்கதே !
இந்த போக்கை மாற்றி  மக்களை பொறுமையும் , பொறுப்பும் உள்ளவர்களாக்க நமக்கு இன்னும் பல புத்தர்களும், காந்திகளும், விவேகானந்தர்களும் தேவைப் படுகின்றனர்.

கணிசமான மக்கள் கலவரத்தில் ஈடுபடும் போது அதில் பொது சொத்துகளும், அங்கே கடை வைத்திருப்போர்கள் , வியாபாரம் செய்வோர்  பாதிப்படையும் அபாயம் உள்ளது.கலவரத்தை சாமாளிப்பது போலீசுக்கு எளிதான காரியம் அல்ல. அதிக அளவில் மக்கள் இருக்கும் போது தடியடி நடத்தி ஆவது இல்லை. எனவே கண்ணீர் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பாய்ச்சியும் தான் கூட்டத்தை விலக்க வேண்டும். துப்பாக்கி சூட்டில் ஈடுபடுவது உயிர்கள் பலியாக காரணமாகி விட்டது. துப்பாக்கி சூட்டை தவிர்க்க  வேண்டும்,  ரப்பர் குண்டுகளையாவது  உபயோகிக்க வேண்டும்.

ஒவ்வொரு உயிரும் மிக முக்கியமானதே. தந்தையை இழந்த மகன், கணவனை இழந்த மனைவி…..! கலவரத்தை தொடராமல் நிறுத்தி  முழு  அமைதி காக்க வேண்டுகிறோம் .

துப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு  அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் பிரிவால் வாடும் உறவினர் , நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்!இறந்தவர்களில் குடுமபத்துக்கு தாரளமாக இழப்பீடு வழங்கக் கோருகிறோம்.

அதிகாரிகள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருந்து, சமூக  தலைவரக்ளுடன் தொடர்பு கொண்டு அமைதிக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.  இனி வரும்  காலங்களில் யாருக்கு குரு பூசை  நடத்தப் பட்டாலும் சம்பந்தப் பட்ட தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளும் அவர்களுடன் சேர்ந்து கலந்து கொண்டு, மாலை மரியாதை  செய்து குரு பூஜை, விழா போனறவற்றை சுமூகமாக முடிப்பதுதான் பிரச்சினைகளை தீர்க்க சிறந்த வழி!

“கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லுவதோடு,  தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டுகிறார் புரோகிதர். சமிக்ஞை சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பலரும் அதே போல கையை உயர்த்தி  விரலை ஆட்டி “கெட்டி மேளம் , கெட்டி மேளம்” என்கின்றனர். அதோடு இருக்கைகளை விட்டு எழுந்து பூவும் அட்சதையும் போடத் தயாராகின்றனர்.

மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மேடையின் அருகாமைக்கு விரைகின்றனர். வீடியோகிராபரும், போட்டோகிராபரும் மணமக்களை சுற்றி சூழ்ந்து  இருக்கும் உறவினர் நண்பர்களிடம் ”சார் , கொஞ்சம் வியூ கொடுங்க” என்று கோருகின்றனர்.  இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையில் கெட்டி மேளம் முழங்க வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் தான் இருக்கும் பரபரப்பில் தாலியை மணப் பெண்ணின் கழுத்தில் கட்டுகிறார் மணமகன்!

மேல தாள ஓசை ஒருபுறம், உறவினர்  நண்பர்களின் உரையாடல்கள்… இப்படிப் பரபரப்புக்கு நடுவிலே கவனிக்கப் படாமல் போவது இந்திய சமுதாயத்தின் மிகச் சிறந்த நாகரிக சிந்தனையான இந்த செய்யுள்,

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”

புரோகிதரும் இந்த மந்திரத்தின் அர்த்தததையோ, அதன் முக்கியத்துவத்தையோ சொல்லிக் கொடுப்பதில்லை.  எல்லோரும் ஹாப்பியா ஒருத்தரை ஒருத்தர் கங்கிராஜுலேசன் பண்ணிண்டு இருக்கா, நாம ஏன் அர்த்தம் பொருள் எல்லாம் சொல்லி டிஸ்டர்ப் பண்ணனும், நாமளும்  ஜோதியிலே கலப்போம் என்கிற ரீதியில் எத்தனையோ சடங்குகளில் ஒன்றாக இந்த மந்திரத்தையும் சொல்கிறார்.

இந்த மந்திரம் எந்த ஒரு தேவனையோ, கடவுளையோ புகழ்ந்தோ, அவர்களிடம் விண்ணப்பமாக அமைந்ததோ இல்லை.  இந்த மந்திரம் மணமகன்  தன்னுடைய வாழ்க்கையில் மனைவி எந்த அளவுக்கு இன்றியமையாதவள் என்பதை உணர்ந்த நிலையை வெளிப்படுத்தும் விதமாக, மனைவியின் மேன்மையை போற்றி அவள் பல்லாண்டு வாழ வாழ்த்தும் பாவாக அமைந்துள்ளது.  இந்திய சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் கோட்பாட்டை இந்த மந்திரம் சொல்கிறது.

இந்திய சமுதாயத்தில்   ஒரு மனிதனுக்கு இன்றியமையாததாக உள்ளது எது என்றால் அது அவன் மனைவியே!மற்ற ஆட்சி, அதிகாரம்,  செல்வங்கள் , நில புலம், காடு , கழனி, வாய்க்கால் வரப்பு, தோட்டம் தொரவு… உள்ளிட்ட எல்லாவற்றியும் இழந்து அவன் நடுத் தெருவிற்கு  வந்தாலும் அவனை அன்பு செய்து அர்ப்பணித்த மனைவி அவன் அருகில் இருந்தால் அவன் கடைத்தேறி விடுவான்.

//சோழ நாட்டின் மிகப் பெரிய பணக்கார வணிகக்  குடும்பங்களில் ஒன்றில் பிறந்தவன் கோவலன்.

ஆசையின் பாதையில் மயங்கி விட்டதால் சொத்து பணம், தொழில், புகழ், நண்பர், உறவினர் அனைவரையும் இழந்து விட்டான். அந்தோ என்னும் கையறு நிலைக்கு வந்து விட்டான். யாருமே அவனுக்கு உதவி இல்லை. யாருமே அவனை நம்பவில்லை. அவனுக்கு கடன் கொடுத்தால் , உதவி செய்தால் … அந்தப் பணத்தையும் மாதவி போன்றவரிடம் கொடுத்து விடுவான் என்று பலரும் எண்ணி இருக்கக் கூடும். அதனால் நல்லவர்கள் கூட அவனை விட்டு விலகி விட்டனர்.

யாரையும் நெருங்கி உதவி கேட்கும் மன  நிலையிலும் அவன் இல்லை. உதவி கேட்கும் தகுதியைக் கூட தான் இழந்து விட்டதாக கருதி விட்டான். வாழ்க்கையே அவனுக்கு முடிந்து விட்டது, தொழில், பணம் , உற்றார் , நண்பர் அனைவரையும் இழந்து விட்டான், நம்பிக்கையை இழந்து விட்டான்.  உணமையிலே கோவலனின் நிலை பரிதாபமானது.

ஆனால் அந்த நிலையிலும் அவனைக்  கை விடவில்லை ஒருத்தி , அவனது கடந்த காலச் செயல்களால்  அதிகம் பாதிக்கப் பட்டவள். அவளைப் பார்த்து அவன் காதல் மொழி பேசவில்லை,அவளை உதறிச் சென்று வேறு பெண்ணிடம் காதல் செய்தவன், அவளை தனிமையில் வாட விட்டவன், அப்படிப் பட்ட கோவலன், எல்லாவற்றையும் இழந்து ஒன்றும் இல்லாமல் வந்த போது, அவனிடம் முழு அன்பைப் பொழிந்து, அவன் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நம்பிக்கை வூட்டி, அவனுக்கு பொருளீட்ட தன்னுடைய சிலம்பையும்  கொடுத்து அவன் வாழ்க்கையில் புதிய புத்துணர்ச்சியை அளித்திருக்கிறாள்.  உயிர் இருந்தும் உயிரற்ற நடை பிணமாக இருந்த கோவலனுக்கு உயிர் அளித்த உத்தமி கண்ணகி. கற்ப்புக்கரசி கண்ணகியே கோவலனின் தெய்வம். //

பார்வதி, சீதை, கண்ணகி, நளாயினி, சாவித்திரி …. இவர்கள் மட்டுமல்ல, இன்றைக்கு வாழும் தெய்வங்களாக உள்ள அன்பு மனைவியறாலே இந்திய சமுதாயம் வாழுகிறது!

திருமணத்தின் போது மணமகன்,  தன வாழ்வில் மனைவியின் முக்கியத்துவத்தை உணரந்தவனாக, இவ்வளவு சிறப்புகளுடைய  என வாழ்க்கை துணைவியே நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் என்பதை சொல்லும் மந்திரமே இந்த “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா…. !”

மம ஜீவன ஹேதுனாஎன்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி  இருப்பவளே

(மம -என்னுடைய, ஜீவன – வாழ்க்கையில், ஹேதுனா-  இன்றியமையாத(வளே)

மாங்கல்யம் தந்துனானேஇந்த மங்கல நானை 

கண்டே பத்னாமி -  உன்  கழுத்தை சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் )

சுபாகேமிகச் சிறந்த குண நலன்களை உடையவளே 

த்வம் சஞ்சீவ சரத சதம்”நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!

(த்வம் -நீ, சஞ்சீவ- வாழ்க , சரத – ஆண்டு ,  சதம் - நூறு) 

இந்த மந்திரம் மனித வாழ்க்கையின் அடிப்படையை உணர்த்தும் பகுத்தறிவு கோட்பாடாகும் .  இந்த மந்திரத்தை வெறுமனே சொல்வதோடு நில்லாமல், இந்த மந்திரத்தின் பொருளை தெரிந்து  கொள்வதோடு நிறுத்தாமல், இந்த மந்திரத்தின் உண்மையை மனதில் உணர்ந்தவன், தன் மனைவி தன் வாழ்க்கையில் எந்தளவுக்கு இன்றியமையாதவள் என்பதை அறிந்து கொண்டவனின் வாழ்க்கை ஓடம் சிக்கி சிதறாமல் காப்பாற்றப் படும். 

இந்த மந்திரத்தை கணவன்,  திருமண நாளன்று மட்டும் சொல்லாமல் ஒவ்வொரு நாளும், காலையில் எழுந்தவுடன்  தன் மனைவியிடம்  சொல்வது இன்னும் சிறப்பாகும்.

தன்னுடைய உடல் பொருள் ஆவி உள்ளிட்ட அனைத்தையும் தனக்கு வழங்கிய,   தன் வாழ்க்கையில் இன்றியமையாதவ்ளாகக் கிடைத்த மனைவியின் உறவைக் குறிக்கும் மாங்கலயத்தை தினமும் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டியது,  கணவன் செய்ய வேண்டிய செயலே என்றால் அது மிகையல்ல !

ஒருவர் பணம் கொடுத்து ஒரு பெண்ணிடம் சுகம் பெற சென்றால், அவர் தன்னை அறியாமலே பல அப்பாவி சிறுமிகளின் வாழ்க்கை சீரழிக்கப் பட்டு ,அவர்கள்  பூமியிலே நரக வாழ்க்கை கொடுமையை அனுபவிக்க காரணமாக இருக்கிறார் என்பதை முதலிலேயே சொல்லுகிறோம்.

“நான் எந்தப் பொண்ணையும் கற்பழிக்கவில்லை , எனக்கு இன்பம் அனுபவிக்க விருப்பம் இருக்கிறது, அந்தப் பெண்ணிடம் காசு கொடுத்து, அந்தப் பெண்ணின் முழு சம்மதத்துடன் நான் உறவு கொள்கிறேன், இது தப்பா” என்று ஒரு நான் எவ்வளவு நேர்மையானவன் பாரு, நான் ரொம்ப நல்லவன் என்கிற ரீதியில் சிலர் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். இது ஒரு மேலோட்டமான எண்ணமே. அவர் காசு கொடுத்து விபச்சாரத்துக்கு போவதால் சமுதாயத்துக்கு எத்தனை கடுமையான   கொடுமை உண்டாகிறது என்பதை ஆராய்வோம்.

எந்த ஒரு தொழிலுக்கும் ஆணிவேர் அதன் கஸ்டமர்கள் தான். கஸ்டமர்கள் இல்லாத தொழில் காணாமல் போகும். கஸ்டமர்கள் அதிகரிக்கும்  தொழில் இன்னும் செழித்து விளங்கும்.

உதாரணமாக முன்பெல்லாம் விவசாயத்திற்கு  ஏற்றம் இறைக்கும் சவலை எனப் படும் பெரிய இரும்புக் குடுவைகளை தயாரிப்பது தமிழ் நாட்டின் பேரூராட்சிகளில் முக்கிய தொழிலாக இருந்தது. இப்போது இலவச பம்ப் செட் , இலவச மின்சாரம் எல்லாம் கிடைத்த பின் யாரும் சவலை கட்டி நீர் இறைப்பதும் இல்லை.  அந்த சவலையை செய்யும் தொழிலும் மறந்து விட்டது.

எனவே எத்தனை  ஆண்கள் பணம் கொடுத்து பெண்ணிடம் இன்பம் அனுபவிக்க விரும்புகிறார்களோ, அந்த அளவுக்கு விபச்சாரத் தொழில் விரிவடையும், அதாவது அப்பாவி சிறுமிகளுக்கு இன்னும் ஆபத்து அதிகரிக்கிறது.

ஆனா, ஒவ்வொரு சிறுமிக்கும் ஒரு கனவு இருக்கிறது, அந்தப் பெண் வளர்ந்து ஒரு டாக்டராகவோ, ஒரு கன்னிப் பொறியாளராகவோ விரும்பலாம், அல்லது ஒரு நல்ல கணவனுடன் அன்பான அமைதியான வாழ்க்கையை நடத்தவே விரும்புவார்கள். எந்த ஒரு சிறுமியும் தான் ஒரு விபச்சார விடுதியில் அடைக்கப் படுவதையோ, ஒவ்வொரு தினமும்  எருமை மாடு போன்ற தடிப்  பயல்கள் பலர் மூச்சு  முட்டக் குடித்து தன் மேல் விழுந்து தான் சின்னா பின்னப் படுத்தப் படும் கொடும் தண்டனையில் -இது ஆயுள் தணடனையை விட, மரண தணடனையை விடக் கொடுமையானது – விழ விரும்ப மாட்டாள். 

விபச்சாரத் தொழிலின் ஆணை வேறாக திகழும் மாமா பயல்களும், மாமா காரிகளும் தங்களுடைய தொழிலை விரிவு படுத்த எந்த சிறுமி யை கடத்த தயங்க மாட்டார்கள். இதிலே எந்த ஒரு சிறுமியும் கடத்தப் படும் வாய்ப்பு உள்ளது. நாம் பணக்காரன், அரசியல் செல்வாக்கு உள்ளவன் அதனால என் வீட்டுப் பெண்களுக்கோ, சிறுமிகளுக்கோ ஆபத்து வராது… என்று சிலர் நினைக்கலாம்.

மிட்டா மிராசு ஆளுவோரின் வீட்டுப் பெண்கள் கூட வேறு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல நேரிட்டால், அங்கே தங்கள் குழுவை விட்டுப் பிரிந்து விட்டால் அவர்கள் நிலை ஆபத்தானது, இதிலே காமத் தரகு தொழிலை நடத்தும் பெண் மாமாக்கள் மிக பயங்கரமானவர்கள். அன்பாகப் பேசி அந்த சிறுமியை தங்கள் குடோனுக்கு அழைத்து சென்று விடுவார்கள். அங்கிருந்து மயக்க மருந்து குடுத்து பல இடங்களுக்கு கடத்தப் படலாம். பிறகு பட்டினி  போடப் பட்டு, பல் சித்திரவதை செய்யப் பட்டு பல முறை கற்பழிக்கப் பட்டு காண காணாத இடத்தில் விபச்சாரத் தொழிலிலி தள்ளப் படலாம்.

ஆனால் ஏழை எளிய, ஆதரவற்ற சிறுமிகள் காமத் தரகிகளின்  கையில் சிக்கும் வாய்ப்பு பல மடங்கு  அதிகமாக உள்ளது. எனவே தன்னை ஒரு நாகரிக மனிதன் என்று கருதிக் கொள்ளும் ஒருவன், மனதாபிமான உள்ள மனிதன் என்று கருதிக் கொள்ளும் ஒருவன் … விபச்சாரத்துக்கு போகவோ கூடாது.

காசு கொடுத்து விபச்சாரத்துக்கு போகும் ஒருவன் ஒரு அப்பாவி சிறுமி கற்பழிக்கப் பட்டு பலவந்தமாக விபச்சாரத் தொழிலில் தள்ளப் படுவதற்கு காரணமாக இருக்கிறான் என்பதை தெளிவாக சொல்லுகிறோம்!

(தொடரும்) 

கொலையும் செய்வாள் பத்தினி …..!

Posted by: thiruchchikkaaran on: September 10, 2011

என்னவோ மனிதன் தான் உயர்ந்த படைப்பு என்று எல்லாம் சொல்கிறார்கள். விலங்குகள் பசிக்காகவே இன்னொரு விலங்கைக் கொல்லுகின்றன. பசி எடுக்காத போது சிங்கமோ புலியோ மானையோ, காட்டெருமையை யோ கொல்வதில்லை. ஆனால் மனிதன் அப்படி இல்லை. தனக்கு அழகான மனைவி இருந்தாலும் இன்னொரு அழகிய பெண்ணைப் பார்த்தால் அடையத் துடிக்கிறான். இந்த மனிதக் குணம் சில சமயம் விலங்குகளையும் தொற்றிக் கொள்ளும் போல இருக்கிறது.

File:Tigers playing at Pilibhit Tiger Reserve area.jpg

டெக்சாஸ் எல் பாசோ விலங்கியல் பூங்கா வில் செரி என்னும் 3 வயது  பெண்புலியும்  வுசூய் என்னும் 6 வயது  ஆண் புலியும்   சேர்ந்து வாழ்ந்து வந்தன. ஆனால் zooக்கு புதியதாக வந்த மேலி என்னும் 15வயது பெண் புலிக்கு வுசூய் நூல் விட்டிருக்கிறது. இது விடயமாக செரிக்கும் மேலிக்கும் பிரச்சினை உண்டானதால் அதிகாரிகள் மேலியை வேறு செல்லுக்கு மாற்றி விட்டனர்.  தன்னுடைய துணைவன் தனக்கு துரோகம் இழைத்ததால்    வருத்தம் அடைந்த செரி வுசூயை தாக்கிக் கொன்று விட்டது. (வுசூய்  என்ன புலியோ… பெண் புலி தாக்கும் போது தன்னைக் காத்துக் கொள்ளக் கூட முயற்சி  செய்யவில்லை போல இருக்கிறது). மொத்தத்திலே விலங்காக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும் வாழ்க்கையில் துன்பம் வருவது தவிர்க்க இயலாது !

தன்னுடைய மனைவியை விட்டு இன்னொரு பெண்ணுக்கு நூல் விட விரும்புவோர் செரியின் உறுமலை நினைவு கொள்வது நல்லது.

http://news.yahoo.com/tiger-love-triangle-kills-mate-texas-zoo-222652586.html

ஏம்பா,  வீடியோ கேமிராவை வாங்கி மெட்ரோ நகர தெருக்களில் பொருத்தக் கூடாதா…

அந்த காமிராவில் பதிவாவதை காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கும் படி பல டி.வீ. க்களை காவல் நிலையத்தில் வைக்க முடியாதா?

கடந்த இருபத்து நாலு மணிநேர காட்சிகளை  மெமரியில் பதிவு செய்யும்படி வைக்க முடியாதா?

இதை எல்லாம் யாராவது வந்து சொல்லியா தர முடியும்?

இதை தில்லியிலே எவ்வளவு செலவு பண்ணி காமன் வெல்த் கேம்ஸ் நடத்தினீங்க…

அதுல எவ்வளவு அடிச்சீங்க…

அதை விட முக்கியமானது பாதுகாப்புனு தெரியாதா…

ஆட்சியில இருந்து என்னதான் பண்ணுறீங்க…

லாயக்கில்லாத அரசு….

Posted by: thiruchchikkaaran on: September 7, 2011

டில்லி ஹை கோர்ட் முன்னால பயங்கர வாதி குண்டை வெடிச்சிருக்கான், என்ன சொல்லுறது போங்க… இந்த அரசு சுத்த தண்டம்… இவங்க கிட்ட உளவுத் துறை னு ஒன்னு இருக்கா இல்லையா,  போலீஸ் இன்பார்மர்கள் என்று இருக்கிறாங்களா இல்லையா … என்னய்யா செய்யுறாங்க. இந்த மாண்பு மிகு ப. சிதம்பரம் தான் உள்துறை அமைச்சன்.

பயங்கரவாதிகளே,  அட இருப்பா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று, பயங்கரவாதியா ஒதுங்கினால் தான் குண்டு வெடிக்காமல் இருக்கும் போல இருக்கிறது.

போலீஸ், சி.ஐ. டி இவங்க எல்லாம் என்ன செய்யுறாங்க. அவங்களுக்கு கொடுக்கப் பட்ட வேலை எல்லாம் அண்ணா ஹசாரே , பாபா ராம்தேவ் … இவங்க எல்லாம் எங்க போறாங்க, எங்க தூங்கறாங்க … அவங்க மேல என்ன கேசைப் போடலாம் … இது போன்ற வேலைக்கு தான் சி.ஐ.டி ய யூஸ் பண்ணுறாங்க.

பயங்கரவாத்தை எதிர்க்க இந்த அரசு என்ன செஞ்சு கிழிச்சது?

இது பற்றி ” மாண்பு மிகு” பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கை என்ன?
“I just heard the sad news from Delhi about the bomb blast. I am told that 10 people have been killed. This is cowardly act of terrorist nature. We will deal with it. We will never succumb to the pressure of terrorism,”

(அதான் 11 பேர் பலியாகிட்டானே , இன்னும் 15பேர் ஆஸ்பத்திரில  இழுத்துக்கிட்டு கிடக்கிறான். We will never succumb என்றால் என்ன அர்த்தம்,   மீண்டும் அவங்களை உயிரோடு கொண்டு வர உங்களிடம் ஏதாவது திட்டம் இருக்க. இது என்ன நம்பிக்கை இல்லா தீர்மானமா, எளிதா சமாளிக்கரத்துக்கு)

“this is a long war in which all political parties, all the people of India have to stand united so that the scourge of terrorism is crushed.”

(அதாவது பயங்கரவாதியை கண்டு பிடித்து அவன் குண்டு வைக்கறதுக்கு முன்னாலையே அவனை பிடிக்க வேண்டியது பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கம்யூனிஸ்ட், ஜனதா தள் யுனைடெட்  பிஜு ஜனதா தள், தெலுகு தேசம் , பி.ஜே.பி….ஆகியோருங்க பொறுப்பு… எங்களை ஒன்னும் சொல்லாதீங்க)

நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதே தீவிரவாதிகளுக்கு நாம் தரும் சரியான பதிலடியாக இருக்க முடியும்.

(அதாவது என்ன நடந்தாலும் நீங்க காங்கிரசை எதிர்த்து போராட்டம் நடத்தக் கூடாது, ஒற்றுமையா இருந்து எங்களை எப்பவும் ஆட்சியில் இருக்க வைக்கணும்)

நாம ஆட்சியில  இருக்கணும், ஆட்சிக்கு தலைவலி வர மாதிரி போராட்டாம் நடக்காம இருக்கனும், கள்ளப் பணத்தை சுவிஸ் வங்கியில இருந்து மீட்டு கொண்டு வர சொல்லி போராட்டம் நடத்தினா அந்த ஆள் மேல கேஸ் போடணும், வூழ லுக்கு   எதிரா  குரல் கொடுத்தா அவன் மேல கேஸ் போடணும்…இந்த காங்கிரஸ் அரசு செய்யக் கூடியது இதைத்தான். பயங்கரவாத செயலை இண்டேலிஜென்ஸ் மூலம் கண்டு பிடிக்கவும் துப்பு இல்லை. குண்டு வெடிச்சு வருஷம் ஆனாலும் குண்டு வச்சவன் யாருன்னு கண்டு பிடிக்கவும் துப்பு இல்லை…


Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 25 other followers

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers