Thiruchchikkaaran's Blog

சமண புத்த மதங்களை வேரோடு அழித்த பார்ப்பனீய சனாதனமே…

Posted on: July 16, 2023


சமண புத்த மதங்களை வேரோடு ம் வேரடி மண்ணோடும் அழித்த சனாதனமே” என்பது நாம் சமூக மற்றும் அரசியல் மேடைகளில் கேட்கும் பன்ச் டயலாக் ஆகும்.

இந்தியாவில் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி ஏழாம் நூற்றாண்டு வரை புத்த சமண மதங்கள் இந்தியாவில் பலராலும் பின்பற்றப் பட்டு வந்தன…

இவை சாதி பாகுபாட்டை மீறி சமத்துவ பாதையில் எல்லா மக்களுக்கும் ஆன்மீகத்தை வழங்கின

இந்த புத்த சமண மதங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தது எப்படி …

முதலில் இந்த கேசில் அடிப்படையிலே ஒரு பிழை உள்ளது…

சமண மதம் வேரடி மண்ணோடு பிடுங்கப் பட்டது என்று உரத்து சொல்பவர் யார் என்று பார்த்தால் அவர் தமிழ் நாட்டின் எல்லைக்குள்ளே மட்டும் இருப்பவரோ என்று ஐயம் வரும்

ஏனெனில் இந்தியாவில் சமண மதம் அழியவில்லை, சிறப்பாக பின்பற்றப் பட்டு வருகிறது

இந்தியாவின் மேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் – ராஜஸ்தான், குஜராத் , மத்திய பிரதேசம் , மஹாராஷ்ட்ரா – இவற்றில், குறிப்பாக நகரங்களில் சமண மதம் சிரத்தையுடன் பின்பற்றப் பட்டு வருகிறது .

அஹமதாபாத், இந்தோர் , புனே , மும்பை ஆகிய நகரங்களில் பல ஜெயின் கோவில்களை இன்றும் நாம் காண்கிறோம் .

இன்னும் சொல்லப் போனால் சமண மத திகம்ப ர சாமியார் பக்தர்கள் புடை சூழ நிர்வாணமாக வூர்வலம் செல்வதை நானே பார்த்திருக்கிறேன் – நிர்வாணமாக இருப்பதையோ , நிர்வாணமாக சாமியார்கள் வூர்வலம் செல்வதையோ நான் குறை சொல்லவோ, கொச்சை படுத்தவோ, கண்டிக்கவோ இல்லை நண்பர்களோ …

நிர்வாணமாக இருப்பது அவர்களுடைய மதம் சார்ந்த விடயம், அதை அவர்கள் பின்பற்றும் போது அதிலே நாம் தலையிட எதுவும் இல்லை. நிர்வாணமாக ஆண் சாமியார் முக்கிய வீதிகளில் நடந்து செல்வதை, அது அவர்கள் மத உரிமை என்ற புரிதல் நமக்கு உண்டு, அதை சகிக்கும் தன்மை நமக்கு உண்டு..

இதுதான் இந்து மதம் நமக்கு அளித்த சகிப்பு தன்மை …இந்து மதம் பெருவாரியாக உள்ள இடத்திலே , உள்ள வரைக்கும் இந்த சகிப்பு தன்மை இருக்கும்…

இதிலே இந்த பரிவார சங்க செயல் வீரர்கள் இந்து மதத்தின் சகிப்பு தன்மையை அழித்து, இந்து மதத்தையும் முரட்டு பிடிவாத மதமாக மாற்றுவதில் வெற்றி பெற்று விடுவார்களா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்…

ஆனால் இந்த ” சமண புத்த மதங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் சூழ்ச்சி செய்து அழித்த சநாதநமே, பார்ப்பனர்களே ” என்று முழங்குவதும், எழுதுவதும் ஜமுக்காலத்தில் வடி கட்டிய பொய்

அல்லது தமிழ் நாட்டை தாண்டாமல் கிணற்றிலே வாழ்வதால் உண்டானா தவறான புரிதல்

அதோடு இப்படி பேசுவது தேர்தல் அரசியலில் ஓட்டு வாங்க பேசும் ஒப்பனை அலங்கார ஜோடனை

என்பதை இங்கே தெளிவாக பதிவு செய்கிறோம்.

Leave a comment

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 45 other subscribers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09