Thiruchchikkaaran's Blog


“தானா சேர்ந்த கூட்டம்”  படம் கொஞ்சம் ஜென்டில் மேன், சத்யா,  நாயகன்…காட்சிகளை நினைவூட்டுவதாக பலரும் எழுதி வருகிறார்கள். ஏன் இவ்வளவு கஷ்டப் படனும்?

இந்தப் படம்  அனுபம் கேர், அக்ஷய் கன்னா, மனோஜ் பாஜ்பாய், ஜிம்மி ஷெர்கில் , திவ்யா தத்தா, காஜல் அகர்வால்…உள்ளிட்ட பலரும் நடித்த “ஸ்பெஷல் 26” என்னும் இந்தி திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

சூரியா ஓரளவுக்கு அக்ஷய் கன்னாவுக்கு ஈடு கொடுத்து (?)நடித்திருக்கிறார். ஆனால் அனுபம் கேர் ரோலை ரம்யா கிருஷ்ணனுக்கு கொடுத்து விட்டார்கள், அனுபம் கேர் தன அட்டகாசமான நடிப்பால் ஹீரோவே  அவர்தான் என்னும் ரேஞ்சுக்கு செய்திருந்தார். ஆனால் ரம்யா கிருஷ்ணன் நடிப்பு அனுபம் கேர் நடிப்பின் அருகில் கூட செல்ல முடியவில்லை.

பாலிவூட்டின் லாங் டயம் ஆக்ஷன் ஹீரோவாக இருந்தும் அக்ஷய் குமாருக்காக கிளைமாக்சில் சண்டை காட்சி வைக்காமல் நேச்சுரலாக வைத்திருந்தனர்.

ஆனால் சூர்யாவுக்காக கிளைமாக்சில் பைட் சீன், பழி வாங்கும் சீன் எல்லாமே வைத்து ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரை இழு இழு வென இழுத்து விட்டனர்.

இந்த இந்தி திரைப்படம் மும்பையில் 1987 ம் ஆண்டு நடை பெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையில் எடுக்கப் பட்டது. 1987ம் வருடம், மார்ச் 17ம் தேதி டயம்ஸ் ஆப் இண்டியா இதழில் சி,பி.ஐ ஆபீசர் பணிக்கு ஆள் எடுப்பதாகவும், விண்ணப்பிக்க விரும்புவோர் தாஜ் ஹோட்டலில் நேரில் வருமாறும் அழைத்து இருந்தனர்.

https://blogs.economictimes.indiatimes.com/onmyplate/the-story-of-the-unsolved-opera-house-burglary-in-mumbai/

https://en.wikipedia.org/wiki/1987_Opera_House_heist

மொத்தத்தில் ஏமாற்றும் சம்பவங்களுக்கும் ஏமாறும் நிகழ்ச்சிகளுக்கும் இந்தியாவில் எப்போதும் பஞ்சமே இல்லை!

 

 

Advertisements

கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா, அவர் தான் உலகத்தை படைத்தவரா, அவர் சர்வ வல்லமை வாய்ந்தவரா, என்றெல்லாம் கேள்விகள் சிந்திக்கும் பலருக்கும் எழுவதுண்டு! அதை அவர்கள் சொல்லவும் செய்கிறார்கள்.

அதே நேரம் பலகோடி மக்கள் பல்வேறு கடவுள்களை கும்பிட்டு அவர் நம்மைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை நடத்துகின்றனர். ஏதாவது துன்பம் வரும் போது அந்தக் கடவுளை வேண்டுகின்றனர் , துன்பம் தீர்ந்தால் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். தோல்வி வந்தாலும் நமக்கு இதுதான் கொடுப்பினை என்று எண்ணி கடவுள் நம்பிக்கையை விடாதவர் பலப் பலர்.

இப்படி நம்பிக்கையை விடாத பலர் வாழும் இடத்தில், உண்மையான பகுத்தறிவாளன் பொதுவாக கடவுளை நான் பார்க்கவில்லை, கடவுளுக்கான நிருபிக்கக் கூடிய ஆதாரம் இல்லை என்று தன்னுடைய பகுத்தறிவு நிலைப்பாட்டை எடுத்து விளக்குவானேயானேல் அது சரியான பகுத்தறிவு பிரச்சாரம் ஆகும்.

அதை விடுத்து பல்லாயிரம் மக்கள் மதிப்பும் மரியாதையும் வைத்து தங்கள் உயிராகக் கருதும் ஓவ்வொரு கடவுளின் பெயரையும் சொல்லி , இந்தக் கடவுள் சக்தியில்லாதவர் …இந்த கடவுளுக்கு அதிக பணம் சேருகிறது என்றெல்லாம் சொல்லி, அவர்களின் மனதைப் புண் படுத்துவைத்து சரியா , இது அவசியமா ?

இந்து கடவுள்களை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏன் என்று மக்கள் கேட்கிறார்கள்.

ஒரு வேளை இந்துக்கள் வணங்கும் கடவுள்களை பிடிக்காதவர்கள் தங்களை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணமா ? இந்து மதத்தை அழித்தால் தான் நமக்கு களம் கிடைக்கும் என்று எண்ணுவோரின் ஆதரவு தமக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணமா ?

ஒவ்வொரு நம்பிக்கையாளனும் (நாத்தீக நம்பிக்கையாளர் உட்பட)தான் தன் கடவுள் மீது எப்படி நம்பிக்கை, மரியாதை வைத்திருக்கிறானோ, மற்றவனும் அவன் கடவுள் மீது நம்பிக்கையம் மரியாதையும் வைத்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டால் எந்த கடவுளையும் யாரும் அவமதிக்க மாட்டார்கள். நீ மற்றவனின் கடவுளுக்கு மதிப்பு குடுப்பது இருக்கட்டும், அவனும் சக மனிதன் , நம்மைப் போல உணர்ச்சியும் , சோதனையும் , துன்பமும் வலியும் உடையவன் என்பதை உணர்ந்தால் நல்லெண்ணம் பூக்கும்!

வம்பை வளர்த்து, வெறுப்புணர்ச்சி நெருப்பை மூட்டி அதில் குளிர் காயலாம் என உண்மையான பகுத்தறிவு வாதி எண்ண மாட்டான்.

உண்மையான பகுத்தறிவு வாதி , கடவுள் இருக்கிறாரா என்று உண்மையிலேயே ஆராய முற்படுவான். கடவுள் நம்பிக்கையின் பேரால் நடைபெறும் பூசல்களை தீர்க்கும் நல்லிணக்க கருத்துக்களை வெளியுடுவான்.

சரி கேள்விக்கு என்ன பதில் என்கிறீர்களா ? எந்த ஒரு கடவுளும் தன்னுடைய வழி பாட்டுத் தளங்களை காத்துக் கொள்வது பற்றி கவலைப் படவில்லை போலத் தோன்றுகிறது . அப்ப பாலாஜியை மட்டும் சொல்லி அடுத்தவர் மனதை புண்படுத்தும் அநாகரீக செயல் சரியா? எனபதுதான் பதில்.

 


” நீங்கள் என்னை இழிவு படுத்துகிறீர்கள், எனக்கு அநியாயம் செய்கிறீர்கள், என்னை மிருகத்தை விட கேவலமாக நடத்துகிறீர்கள் …ஆனாலும் நான்  பதிலுக்கு உங்களை அவமதிக்கவோ , உங்களைத் தாக்கவோ, கேவலப் படுத்தவோ மாட்டேன்…அமைதியான முறையில் என்னுடைய போராட்டத்தை நடத்துவேன், என்னுடைய போராட்டம் உங்களின் உடலோடு அல்ல , மன சாட்சியோடு…’

இந்திய மக்களின், மஹாத்மா காந்தியின், இந்த சிறந்த அஹிம்சைப் போராட்ட கோட்பாட்டை அமெரிக்காவில் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய மாவீரன் திரு. மார்ட்டின் லூதர் கிங் அவர்கள்.

அன்னாரின் பிறந்த நாளில் (15th January) அவரின் புகழைப் பாடுவதில் பெருமை அடைகிறோம்.

 

 

 

 

 

 


 

மற்ற நாடுகளில் எல்லாம் புது வகை ஸ்மார்ட் போன், புது வகை மகிழுந்துகள், …இவற்றை  வெளியிடுவது பத்திரிகையில் முக்கிய செய்தியாக வரும். வணிகம், வர்த்தகம், தொழில் நுட்பம் , அறிவியல்  முன்னேற்றம் அடைவதின் வெளிப்பாடாக அவை அமையும்! 

அந்த தயாரிப்புகளின் சிறப்பு என்ன, நிறை குறை என்ன … நுகர்வோருக்கு புதியதாகக் கிடைக்கும் வசதிகள் என்ன என்பனவற்றை பட்டியல் இடுவார்கள். ஒரு நிகழ்ச்சி நடக்கும், புதிய கண்டு பிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு வெளியிடப் படும். நுகர்வோரும் அப் பொருட்களை பற்றி கருத்து தெரிவிப்பார்கள்.

நாமோ எந்தெந்த நடிகரின் திரைப் படம் வெளியானது, அவர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகையர் யார்…இந்த ஜோடி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுமா? எந்தெந்த தியேட்டரில் எவ்வளவு பெரிய கட்  அவுட், பாலபிஷேகம் எத்தனை குடம், ரசிகர்களுக்குள் தகராறு வந்ததா என்பதை முக்கிய செய்திகளில்/நிகழ்ச்சிகளில் ஒன்றாக வெளியிட்டு, பிறகு நேரடியாக தியேட்டருக்கு சென்று படம் பார்த்து விட்டு வருபவர்களிடம் மைக்கை நீட்டி படம் எப்படி என்று கேட்போம்.

ஆயிரம் ஐ.ஐ.டி வந்தாலும் இதே நிலைமைதான் நீடிக்குமா? அமெரிக்காவில் ஆப்பிள் ஸ்மார்ட் போன் வெளியிட்டு பொருளாதாரத்தை முன்னுக்கு கொண்டு வருகிறார்கள், உலகெங்கும் ஆப்பிள் ஐ போன் சக்கை போடு போடுகிறது.

நம் சிந்தனை முன்னேற்றம் எல்லாம் கட் அவுட்டும், அதற்கு பாலாபிஷேகமும் தான? வூடகங்களே , கலக்குங்க!


சுய மரியாதை மிக முக்கியம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

வர்க்க, நிற, மத, மொழி, சாதீய , பிராந்திய …அடிப்படியில் மனிதர்கள் அவமானப் படுத்தப்படுவது, கட்டம் கட்டப்படுவது, ஒதுக்கப்படுவது, ஒடுக்கப்படுவது அன்று முதல் இன்று வரை நடை பெற்றுக் கொண்டே இருக்கிறது.

பிறரை அவமானப் படுத்துவது சிறுமையானது மட்டுமல்ல, அதில் அறிந்தோ அறியாமலோ ஒரு குரூர சைக்கோ இன்பத்தையும் பாவிக்கிறார்கள். எந்த ஒருவரையும் அணுகும் போது அவரின் சிறப்புகள் என்ன என்பதை நோக்குவதே நாகரீகம். குறையே இல்லாத மனிதர் எத்தனை பேர்?

இனிய உளவாக இன்னாத கூறல்

கனி இருப்பக் காய் கவர்ந்தற்று

என்கிறார் திருவள்ளுவப் பெருந்தகையார்.

அடுத்தவரைத் திட்டி அவதூறு சொல்லி அவமானப்படுத்துவது தமிழ் நாட்டில் புகழ் அடைவதற்கு எளிய வழிகளில் ஒன்றாக ஆகி விட்டது.

தேர்தல் நேரங்களில் எப்படி திட்டுவார்கள், சொல்ல நாக்கூசும், எழுத கை கூசும், தன்னுடைய தலைமையிடம் பேர் வாங்க மாற்றுத் தலைமையை அப்படித் திட்டுவார்கள். தெருவிலே போவோரும், பேருந்தில் பயணிப்போரும் அவற்றைக் கேட்டு, அந்த ஆபாச அவதூறை ஏற்றி இறக்கி பேசுவதைக் கேட்டு சிரிப்பது வேடிக்கையான வேதனை.

நாளடைவில் தமிழ் நாட்டில்  வருடம் முழுவதும் நடைபெறும் ஒரு கலையாகவே இன்னும் சொன்னால் வியாபாரமாக கூட ஆகி விட்டதோ எனக் கருதும் நிலை வந்து விட்டது, கேட்டால் எங்களுக்கு எழுத்து சுதந்திரம் இல்லையா, பேச்சு சுதந்திரம் இல்லையா என்பார்கள்!

யார் வேண்டுமானாலும் என்ன போஸ்டர் வேண்டுமானாலும் அடித்து தெருவெங்கும் ஒட்டலாம். ரொம்ப பிரச்சினை வரும் போல இருந்தால் அந்த நேரத்தில் போலீஸ் வந்து சுவரில் இருப்பதைக் கிழிப்பார்கள். நான் போஸ்டரில் பார்த்தேன் ..போஸ்டரில் அப்படி எழுதி வைத்திருந்தார்கள் என்று பேசினால் அது சரியா?

யாகாவா ராயினும் நாகாக்க என்கிறார் வள்ளுவர். காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்று முடிப்பார்.

அழகாய் வள்ளுவர் சொன்னதைக் கேட்டு நிற்க அதற்குத் தக என நாம் செயல் பட வேண்டியது அவசியம் ஆகிறது.

வெறுப்பையும், குத்தலையும், பகைமையையும் வெளிப்படுத்தும் மனம், இவ்வெண்ணங்களில் அலைந்து களைத்து அலுத்து விடுகிறது. அமைதியும் நன்மையும் இல்லாது போனதற்க்கான காரணத்தை உணர்ந்த அதே மனம் தன் அடி ஆழத்தில் இருக்கும் நட்பையும், நல்லிணக்கத்தையும், அன்பையும் காட்டத் துவங்குகிறது.

சர்ச்சைகளும், பூசலும் முடிந்து நல்லிணக்கமும், நட்பும் பொங்கும் நாளாக தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அமையட்டும் .

உங்கள் மனதில் அன்பும், இன்பமும் அமைதியும் பொங்க , வீட்டிலே பாலும் வெல்லமும் அரிசியோடு பொங்கட்டும். பொங்கலோ பொங்கல் என உங்கள் அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்தினை அன்புடன் வெளிப்படுத்துகிறேன்.

 


மற்றும் அவ்வப்போது பிற நாட்டவர் உங்களுக்கு அறிமுகப் படுத்திய தேவர்களிடத்தும் நீங்கள் நம்பிக்கை வைத்து, ஆனால் உங்கள் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் எந்தப் பயனும் இல்லை.

நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை ….உங்கள் மேல் நம்பிக்கை, கடவுள் மேல் நம்பிக்கை – இதுதான் வெற்றிக்கு வழி!

உங்களுடைய முப்பத்து முக்கோடி தேவர்களிடத்தும் மற்றும் அவ்வப்போது பிற நாட்டவர் உங்களுக்கு அறிமுகப் படுத்திய தேவர்களிடத்தும் நீங்கள் நம்பிக்கை வைத்து, ஆனால்  உங்கள் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் எந்தப் பயனும் இல்லை.

 

 

 

(Swami Vivekanadha’s birth day-  12th January)


செய்யாதன செய்யோம்,  தீக்குறளைச்  சென்று ஓதோம்நல்ல வழியில் செல்வோம், தீய வழியில் செல்ல மாட்டோம் என்று அறிவித்த தமிழ்ப் புலவர் ஆண்டாள் அம்மா!

//வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
     செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
     நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
     செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
     உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்.//

அடடா… என்ன அருமையான தமிழ்ச் செய்யுள் ! எதுகை எப்படித் துள்ளி வருகிறது! என்ன அருமையான கருத்து!

இதுவல்லவோ தமிழ் , இதுவல்லவோ தமிழகத்தின் பண்பாடு, வரலாறு!

வாழ்க ஆண்டாள் அம்மையார் புகழ்!

தங்கச் சிலை மேல் கந்தைத் துணியைச் சுற்றி மறைத்தாலும், தங்கத்தின் மதிப்பு மாறுமா , அது தக தக வென மின்னுவது மாறுமா?

ஆண்டாள் அம்மையாரின் அடக்கத்திற்கும் , ஒழுக்கத்திற்கும் , பக்திக்கும், புலமைக்கும், தமிழுக்கும் உறை போடக் காணுமா என் எழுத்து ?

 

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements