Thiruchchikkaaran's Blog

அன்பு நண்பர்களே !

Posted on: August 7, 2010


அன்புள்ள நண்பர்களே,
இந்த தளம் நம் அனைவரின் தளம். 
 என்னுடைய கருத்துக்களைப் போலவே, இங்கே எழுதும் ஒவ்வொருவரின் கருத்தும் முக்கியமானது. என்னைப் போலவே இங்கே தளத்தைப் பார்வை இடும், கருத்து தெரிவிக்கும் நண்பர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களே. மக்களை இணைக்கும் வகையிலே சமரச , சமத்துவ, நாகரிக, பகுத்தறிவுக் கருத்துக்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளை நண்பர்கள் யார் வேண்டுமானாலும் அனுப்பலாம். அவற்றை நாம் ஆராய்ந்து வெளியிடுவோம். ஆனால் சில நண்பர்கள் பின்னூட்டம் இடும் போது  வெறுப்புக் கருத்துக்களை எழுதி விடுகின்றனர்.

 

அன்புக்குரிய நண்பர்களுக்கு நான் வேண்டிக் கொள்வது என்ன வென்றால்,  நீங்கள் பின்னூட்டம் இடும் போது   தயவு செய்து காழ்ப்புணர்ச்சி கருத்துக்களை,  மத வெறிக் கருத்துக்களைத் தவிர்த்து விடுங்கள் என்பதுதான். 

 
எந்த ஒரு மதத்தையும் பாராட்டினாலும் சரி, விமரிசித்தாலும் சரி,  அதற்க்கான காரணத்தை எடுத்து சொல்லி, இந்த கருத்து இந்த மதத்தின் பேரால் சொல்லப் பட்டு உள்ளது, இந்தக் கருத்தை ஒப்ப இயலாது என்பதற்கான எங்கள் காரணம் இது, இதை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறோம், என்று பகுத்தறிவின் அடிப்படையிலே எழுதுவதே சரி.
அதை  விட்டு விட்டு எந்த விதக் காரணமும் இல்லாமல் வெறுமனே காழ்ப்புணர்ச்சி அடிப்படியில் மனதில் உள்ள வெறுப்பை வெளிப்படுத்த வேண்டாம்.  எல்லோரின் கருத்தையும் வெளியிட வேண்டும் என்று தான் நாம் விரும்புகிறோம். ஆனால் பிற மதங்களை காரணமின்றி இகழ்ந்து ஒரு சாரார் கருத்து வெளியிட்டால்   இன்னொரு சாரார் பதிலுக்கு எழுதுகிறார்கள. இது தொடர்ந்து செயின் ரியாக்ஸனாக நடக்கிறது. 
எனவே அடிப்படையே இல்லாமல் வெறுப்பின் அடிப்படையிலே இகழ்ச்சிப் பிரச்சாரம் நடத்த வேண்டாம் என்று முன்பே கோரிக்கை விடுத்தோம். தாங்கள் பிறர் வணங்கும் கடவுள்களை திட்டி எழுதினால்,  பதிலுக்கு தாங்கள்   வழிபடும் கடவுள்களும் திட்டப் படுவார்கள என்பது தெரிந்தும், பரவாயில்லை, அதை அப்புறம் பார்த்துக்கலாம, முதலில் பிற மதக் கடவுள்களை இழிவு செய்வோம் என்று செயல் படும் அளவுக்கு மத வெறிக்கு மனதில் இடம் குடுத்து விட்டனர்.
 
நம்முடைய தளம் மத நல்லிணக்கத் தளமாக உள்ளது.  பிற மதத்தின் பேரில் வெறுப்பு பாராட்ட வேண்டாம் என்பதயும், எல்லா மதங்களிலும்  நல்ல கருத்துக்கள உள்ளன என்பதையும் சுட்டிக் காட்டுவதோடு, பிற மார்க்கங்களின்  விழாக்களில் , வழிபாட்டிலே கலந்து கொள்வதை வூக்குவிக்கும் , ஆதரிக்கும் தளமாக  உள்ளது.
 
எனவே நண்பர்கள் தயவு செய்து நியாமான வகையிலே தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன். அடிப்படை இல்லாமல் எழுதப் படும், காழ்ப்புணர்ச்சிக்  கருத்துக்களை மட்டுறுத்தல் செய்து வருவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
 
நண்பர்கள் இதை  உணர்ந்து ஒத்துழைப்பு தருமாறு கோருகிறோம்.

38 Responses to "அன்பு நண்பர்களே !"

(உண்மையான) நாத்திகர்கள் எல்லா மதங்களையும் விமர்சன‌ம் செய்ககிறார்கள் . ஒரு குறிப்பிட்ட மதத்தில் நம்பிக்கை உள்ள ஆத்திகர்கள் ம‌ற்ற மதத்தினரை விமர்சிக்கின்றனர். இதில் என்ன நல்ல காரியம் என்றால் எல்ல மதத்தினரின் வேத புத்தகங்களும் நன்றாக படிக்கப் பட்டு ஆராயப் படுகின்றன. அதனால் எல்லா மதங்களின் வரலாறு,கொள்கைகள் மற்றும் உண்மைகள் அனைவரும் அறிகின்றனர்.
ஆனால் விமர்சன‌ங்களின் போது தனி நபர் அல்லது அவரது வாழ்க்கை சார்ந்த விவரங்களை தவிர்ப்பது நலம். நல்ல கருத்து.ந‌ன்றி

//எந்த ஒரு மதத்தையும் பாராட்டினாலும் சரி, விமரிசித்தாலும் சரி, அதற்க்கான காரணத்தை எடுத்து சொல்லி, இந்த கருத்து இந்த மதத்தின் பேரால் சொல்லப் பட்டு உள்ளது, இந்தக் கருத்தை ஒப்ப இயலாது என்பதற்கான எங்கள் காரணம் இது, இதை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறோம்//

ஐயா, இந்து மதத்தை மட்டும் விமர்சிக்காதது ஏன்?

நன்றி, திரு. ஆசாமி அவர்களே, இந்து மதம் தொடர்பாக பல கட்டுரைகளை, விமரிசனங்களை நாம் இதே தளத்திலே வெளியிட்டு இருக்கிறோம். நாம் இறைவன் இருக்கின்றானா என்ற ஆராய்ச்சியில் குறிப்பிட்டது இந்துக் கடவுள்களுக்கும் பொருந்தும். இந்து மதம் உட்பட எந்த மதத்தையும் நாம் ஆக்க பூர்வமாகவே அணுகி அவற்றின் கருத்துக்களை ஆராய்ச்சி செய்து, அவற்றில் உள்ள மக்களுக்கு முன வலிமையை தரக் கூடிய ஆன்மீகக் கருத்துக்களை முன் வைக்கிறோம், எல்லா மதங்க்ளைளும் உள்ள இணக்கத்துக்கான கருத்துக்களை கொண்டு வந்து மத நல்லிணக்கத்தை எடுத்து செல்வதே நமது நோக்கமாக உள்ளது.

ஐயா,

இந்து மதத்தில் இருக்கும் வெறுப்புக் கருத்துகள் எதைப் பற்றியும் தாங்கள் எழுதியதாகத் தெரியவில்லையே.
வேதங்கள் தொடக்கி மனு சாஸ்திரம் வரை ஏராளமான வெறுப்புக் கருத்துகள் இருப்பதாக சொல்லப்படுகிறதே.
முதலில் நம் வீட்டில் இருக்கும் அழுக்கை சுத்தப்படுத்துவோம் ஐயா. அப்புறம் அடுத்த வீட்டுக்குள் மூக்கை நுழைப்போம்.

ஐயா ,

இந்து மத்தில் வெறுப்புக் கருத்துக்கள் புகுத்தப் படுவதை எதிர்த்து பல கட்டுரைகளை எழுதி இருக்கிறோம். இனியும் பல கட்டுரைகளை வெளியிடுவோம். ஒருவன் எந்தளவுக்கு வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக இருக்கிறானோ அந் ளவுக்கு அவன் இந்து மதத்தை பின்பற்றுபவனாக இருக்கிறான்.

எந்த அளவுக்கு ஒருவன் மனதில் வெறுப்புக் கருத்துக்களுக்கு இடம் கொடுக்கிறானோ அந்த அளவுக்கு அவன் இந்து மதத்தை விட்டு விலகி செல்கிறான் என்பதி நான் திண்ணமாகக் கூறுவேன்.

இந்து மதத்தின் அடிப்படைக் கருத்துக்களில் ஒன்றான கீழ்க்காணும் கருத்தை பலமுறை நாம் எழுதி இருக்கிறோம்.

/அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)

நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )

ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

ஸ ந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

யோகி (யோக நெறியில் நிற்பவன்)

யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)

த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்).//

இந்த‌ க‌ருத்துக்க‌ளை எந்த‌ அளவுக்கு ஒருவ‌ன் பின்ப‌ற்றுகிறானோ அவ‌ன் அந்த‌ அள‌வுக்கு சிற‌ந்த‌ இந்து என‌க் க‌ருத‌ப்ப‌ட‌லாம், என்ப‌தை ஆரம்ப‌க் க‌ருத்தாக‌ இங்கே சொல்கிறோம்!

வேதங்களில் வெறுப்புக் கருத்துக்கள் இருபபதாக தெரியவில்லை. முடிந்த வரையில் வேதங்களின் கருத்துக்களை தேடி படித்துதான் வருகிறோம்.

உங்களுக்குத் தெரிந்து வேதங்களில் வெறுப்புக் கருத்துக்கள் இருந்தால் அதை எங்களுக்குத் தெரியப் படுங்கள, அவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்.

வெறுப்புக் கருத்துக்கள் இந்து மதத்தில் சொல்லி இருந்தால் பரவாயில்லை, மற்ற மதங்களில் சொல்லி இருந்தால் அதை மட்டும் கண்டிப்போம் என்று நாம் செயல் படவில்லை.

வெறுப்புக் கருத்துக்களினாலேயே உலகில் இத்தனை கொடுமைகள் நடை பெற்று வருகின்றன என்பதை பலரும் புரிந்து வருகிறார்கள். வெறுப்புக் கருத்துக்களை விலக்கி அன்பை , சமரசத்தை , சமத்துவத்தை நல்லிணக்கத்தை, நாகரீகத்தை, பகுத்தறிவை முன்னிலைப் படுத்துவதே நமது நோக்கம்.

மனு என்பவர் ஒரு அரசர். அவர் இந்து மத அறிங்கரோ, இந்து மதத்தை இந்து மதத்தை ஸ்தாபித்தவரோ இல்லை. அவர் இந்தியாவை ஆண்ட ஒரு அரசர் என்ற வகையிலே அவர் காலத்திலேயே அவர் தன்னுடைய ஆட்சிக்கு உருவாக்கிய சட்டங்களே மனு நூலாக இருக்கிறது. அரசாங்க சட்டங்கள் அவ்வப் போது மாறும். மதம் என்பது மனிதனின் மன நிலையை, உயர்த்தும் ஆன்மீக முயற்ச்சிக்கு உதவியாக இருக்கிறதே அல்லாமல் அதற்கும் அரசாங்க சட்டங்களுக்கும் தொடர்பு இல்லை.

மனுவிற்கு முன்னும் இந்து மதம் உள்ளது. மனுவுக்குப் பின்னும் இந்து மதம் உள்ளது. மனுவைப் பற் 99றி சதவீதம் இந்துக்களுக்கு தெரியவே தெரியாது. மனுவைப் பற்றை யாரும் கவலைப் பாடவும் இல்லை. நீங்கலாக இப்போது சொல்லி அவரை நினைவு படுத்துவதால் அவரைப் பற்றி நினைவு கூர்கிறோம். மனுவைப் பற்றி தனிக் கட்டுரை நம்முடைய தளத்திலே வெளியாகும்.

மூக்கை நுழைப்பது யார், என்பதை முதலில் கேட்க விரும்புகிறோம்.

மத சகிப்புத் தன்மையும் , மத நல்லிணக்கமுமே இந்தியர்களின் முக்கிய குணங்களாக உள்ளன.

எல்லா மதங்களையும் ஆக்க பூர்வமாக அணுகி நல்லிணக்கமாக வாழ்வதே இந்தியாவில் தொன்று தொட்டு நிலவும் பண்பு. இங்கே வந்து பிற மதங்களை எல்லாம் இகழ்ந்து, பிற மதங்களின் கடவுள்களை கண்டித்து மத வெறிக் கலாச்சாரத்தை மூக்கை நுழைக்க விடுவது ஏன் என்ற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல முடியுமா?

நான் சொல்லும் கடவுள் மட்டும் தான் உண்மை , மற்ற கடவுள்கள் ஜீவன் இல் ல்லாதவைகள் என்றும், தான் சொல்லுபவர்களை மட்டுமே இறை தூதர் எனக் கருத வேண்டும் என்றும், பிற மதத்தினர் இறைத் தூதராக சொல்பவரை இகழ்ந்தும் வெறுப்புக் கருத்துக்களைப் பரப்பி சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து, மத வெறிக் கலாச்சாரத்தை இங்கே மூக்கை நுழைக்க செய்வதை உங்களுக்கு இனிக்கிறதா?

நாங்கள் எந்த ஒரு மதத்தையும் காரணமின்றி, இகழவோ, வெறுப்பு பாராட்டவோ இல்லை. அல்லாஹ், இயேசு கிறிஸ்து , புத்தர் உள்ளிட்ட அனைவரையும் நாங்கள் மரியாதை செய்யவும், வழிபடவும் நாங்கள் தயார் என்றும், எல்லா மதத்தினரின் வழி பாட்டிலும் கலந்து கொள்வோம் என்றும், எல்லா மதத்திலும் உள்ள நல்ல கருத்துக்களை பாராட்டுவோம் என்றும் நாங்கள் செயல் பட்டு வருகிறோம்.

இங்கே நம் வீட்டில் வந்து ஒரு மதம் மட்டுமே உண்மை என்றும், மத்த மதங்கள் எல்லாம் பொய்யானவை என்றும் இந்தியாவில் மூக்கை நுழைத்து இந்தியாவை பாலஸ்தீன் ஆக்க மூக்கை நுழைப்பது யார் என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்

“க்ளிக்” செய்து படியுங்கள்.

http://bibleunmaikal.blogspot.com/2010/08/blog-post_04.html

ஹலோ…எதிராக எழுதுவோர் எதிரிகள்…ஆதரவாக எழுதுவோர் நண்பர்கள் எனக் கொள்க‌…முதலில் தலைப்பை மாற்றும்..!

நமக்குள் பொய்வேடமிடவேண்டாம்…
நீங்கள் எம்மை நண்பராக பாவித்தால் எமது புனித நூலான பைபிளைக் குறித்த அவதூறான கருத்துக்களை நீக்கிவிட்டு வாரும்…

அதை எழுதுவதற்கென்றே நீர் பயிற்சி பெற்றிருப்பதுபோலவே உமக்கு சவால் விட நாங்கள் பயிற்சி பெற்றுள்ளோம்;

அரசியல்,பொருளாதாரம்,மொழி,கலாச்சாரம் என்று ஒரு சமூகம் ஒன்றுபட்டு வாழ்வதற்கு பல்வேறு காரணிகள் இருக்க நீர் என்னவோ கிறித்தவமும் யூதமுமே உலகத்திலுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்பது போல பசப்பிக்கொண்டிருக்கிறீரே…

இங்கே இருக்கிற சாதாரண‌ ராமர் கோவில் பிரச்சினையைத் தீர்த்துவைக்க முடியாத உங்கள் மதநல்லிணக்க உணர்வு எங்களுக்கு எங்கிருந்து வரும்..?

ஒரு பாரம்பரிய சின்னத்தை இடித்துவிட்டே மற்றொன்றை எழுப்பவேண்டும் என்பதையே மிஸ்டர் விவேக் சொல்லிக்கொடுத்தாரா..?

ஐயா நாங்களும் உங்க ஊரு தண்ணியக் குடிச்சி இங்க விளையற அரிசியத்தான் (காசுகொடுத்து…) வாங்கி சாப்பிடுறோம்…அதாவது உங்களப்போலவே நாங்களும் யோசிப்போம்’ணேன்..!

நான் என்ன அவதூறாக எழுதுகிறேன்? எழுதி இருப்பதை அப்படியே தானே மேற்கோள் காட்டுகிறேன். சுவாசமுள்ள ஒரு ஜீவனையும் வீட்டு வைக்காமல் சங்கரித்தார்கள் என்று இனப் படுகொலை செய்ததாக நானாக இட்டுக் கட்டி எழுதுகிறேனா? எனக்கு கற்பனையில் கூட இவ்வளவு கொடூரம் தோன்றவில்லையே. இரக்கமற்ற இனப் படுகொலைகளை , புனிதமாக கருதும் மன நிலைக்கு நீங்கள் சென்றது ஏன்?

இனப் படுகொலைகளை செய்து விட்டு, அதை கடவுளே செய்ததாக சொல்லி அதைப் புனிதப் படுத்தி, இத்தனை காலமும் நல்ல பெயரும் எடுத்து விட்டனர். அவர்களின் வழி வந்தவர்களே இன்று உண்மைகளை உணர்ந்து விட்டனர். எந்த இனப் படுகொலைகளை தங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தினார்களோ ,, அதே இனப் படுகொலை தங்கள் இனத்தையே அழித்து விட்டதை அவர்களே உணர்ந்து வருகின்றனர்

thiruchchikkaaran, on August 7, 2010 at 22:31 Said:

நான் என்ன அவதூறாக எழுதுகிறேன்? எழுதி இருப்பதை அப்படியே தானே மேற்கோள் காட்டுகிறேன். சுவாசமுள்ள ஒரு ஜீவனையும் வீட்டு வைக்காமல் சங்கரித்தார்கள் என்று இனப் படுகொலை செய்ததாக நானாக இட்டுக் கட்டி எழுதுகிறேனா? எனக்கு கற்பனையில் கூட இவ்வளவு கொடூரம் தோன்றவில்லையே. இரக்கமற்ற இனப் படுகொலைகளை , புனிதமாக கருதும் மன நிலைக்கு நீங்கள் சென்றது ஏன்?

இனப் படுகொலைகளை செய்து விட்டு, அதை கடவுளே செய்ததாக சொல்லி அதைப் புனிதப் படுத்தி, இத்தனை காலமும் நல்ல பெயரும் எடுத்து விட்டனர். அவர்களின் வழி வந்தவர்களே இன்று உண்மைகளை உணர்ந்து விட்டனர். எந்த இனப் படுகொலைகளை தங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தினார்களோ ,, அதே இனப் படுகொலை தங்கள் இனத்தையே அழித்து விட்டதை அவர்களே உணர்ந்து வருகின்றனர்

ஏனய்யா இதே லாஜிக்கல் தின்க்கிங் ராம ராவணனுக்கும் கிருஷ்ண கர்ணனுக்கும் பொருந்தாதோ…சைவத் துறவியரைக் கழுவேற்றியதும் இதே புனிதர்கள்தானே..?

அதெல்லாம் உங்கள் தெய்வத்தின் திருவிளையாடல்கள்…இஸ்ரவேலர் செய்தது தெய்வத்தின் பெயரால் நடந்த இனப் படுகொலையா..?

என்னுடைய முக்கியமான வாதங்களுக்கு பதில் கூறாமல் நிறக் குருடனைப் போல மேலோட்டமாகவே எழுதுகிறீர்களே..!

ஹிட்லர் முதல் சதாம் ஹுசேன் வரை ஏன் ராஜ்பக்க்ஷே வரை செய்ததும் செய்துவருவதும் பொதுவாகவே வடக்கு தெற்கை நசுக்குவதும் ஆக்கிரமிக்க வடக்கு நோக்கி நகருவதும் எந்த தெய்வத்தின் கட்டளையால் நடந்தது, நடக்கிறது..?

வேதத்திலுள்ள யுத்தங்கள் சமமான எதிரிகளுக்குள் நடைபெறவில்லை… நீங்கள் வரலாற்றை ஆராய்ந்தால் இஸ்ரவேலர் பெரிய பராக்கிரமசாலிகளோ யுத்தவீரர்களோ அல்ல;பெரிய படைபலமும் அவர்களிடம் இருந்ததில்லை; அவர்கள் யுத்தங்களை அவர்களுடைய தேவனே நடத்தினார்;அவர்கள் அவருக்கு விரோதமாகப் போனபோது அவர்களுடைய எதிரிகளிடம் அவரே ஒப்புக்கொடுத்தார்;

இதிலுள்ள மனித ஞானத்துக்குப் புலப்படாத தேவதிட்டமானது, இஸ்ரவேலர் வழியாக உலகமுழுவதையும் தமது பொதுவான திட்டத்துக்குள் கொண்டுவருவதே;

ஏனெனில் யெகோவா தேவன் இஸ்ரவேலரை அழைத்திருக்காவிட்டாலும் அவர்கள் வேறு ஏதோ ஒரு அமைப்பில் இந்துக்களைப் போல இருந்திருப்பர்;யுத்தங்கள் வரும்,மரணம் வரும்,நன்மை தீமை எல்லாம் அவரவர் விதிப்படி நடந்தே தீரும்;

ஆனால் “கெட்ட போரிடும் பூமியை வேரொடு சாய்ப்போம்” என்ற பாரதியின் வாக்குப்படி நவீன -சமாதான -சமதர்ம சமுதாயத்தை ஸ்தாபிக்கவே இஸ்ரவேலரை தேவன் அழைத்தார்;அவர்கள் மூலமே இன்று உலகம் நவீனப்ப‌டுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது;அவர்களே இன்றைய உலகின் போக்குகளை நிர்ணயிக்கும் உன்னத பீடத்தில் இருக்கின்றார்கள்;அதனை யாரும் மறுக்கவோ தடுக்கவோ இயலாது;

எனவே பைபிளை நிதானமாகப் பகுத்துப் படித்தாலே இறைவனின் அழகிய- அன்பான இருதயம் தங்களுக்குத் தெரியவரும்;

பைபிள் கருத்துப் பெட்டகமாகவும் வரலாற்று பொக்கிஷமாகவும் மனுக்குல விளக்காகவும் விளங்குகிறது;

அதனை மறுத்துப் பேசுவோரும் மறைமுகமாக இரசித்து படிக்கும் புத்தகமாகவே அது விளங்குகிறது;

வேதத்தின் நிறைவாக இயேசுகிறித்து விளங்குகிறார்;பழைய ஏற்பாட்டில் யுத்தம் செய்தவரும் அவரே,புதிய ஏற்பாட்டில் மீட்பின் திட்டத்தை செயல்படுத்தியவரும் அவரே,வரப்போகும் உலகின் நியாயாதிபதியும் அவரே;

வரப்போகும் உலகின் உபத்திரவங்களின் போதும் உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் இறைவன் அனுப்பும் வாதைகளைப் பார்த்து மனந்திரும்பாமல் இன்னும் அவரை தூஷிப்பார்களாம்;அதுவும் இந்த பைபிளில் தான் எழுதியிருக்கிறது;

எனவே நீங்கள் சரியான இறையியல் கொள்கைகளைக் கற்று அதனடிப்படையில் பைபிளைப் படித்தாலே அதன் மேன்மை விளங்கும்;தவறான இறையியல் கொள்கையில் பழகியவர்கள் அந்த கொள்கையுடன் ஒத்துவராத எதையும் எதிர்த்தே பேசுவர்;உதாரணத்துக்கு கம்யூனிஸம் மற்றும் பரிணாமக் கொள்கையில் ஊறியவர்களிடம் இதெல்லாம் எடுபடாது;ஏனெனில் அவரவர் பார்வையில் அவரவர் ஞானியாக இருக்கிறார்;

ஆனால் கிறித்தவ இறையியல் கொள்கையானது இயேசுவானவரை மையமாகக் கொண்டது;அவரை உற்று கவனித்து பின்பற்றினால் அவருக்குள் அவருக்கு முன்வந்து சென்ற (புத்தர் முதலாக‌…) அத்துணை பேரின் பாதிப்பும் அடங்கும்;எந்த ஒரு மகானும் துறவியும் சாதுவும் எட்டாத உச்சங்களை அவர் எட்டிவிட்டார்;இந்த உலகில் வந்து தனது உயிர்த்தெழுந்த சரீரத்துடன் பரமேறிச் சென்றவர் அவர்மட்டுமே;அவர் சமாதியாகவில்லை;காணாமற்போகவில்லை;அனைவர் கண்முன்பாகவும் விண்ணேறிச் சென்றார்;எனவே அவரே மெய்யான தெய்வம் என்கிறோம்;

உங்களால் விமர்சிக்கப்படும் பழைய ஏற்பாட்டின் தெய்வத்தையே அவர் மனதார தொழுது அவரையே தனது பிதா என்கிறார்;இன்னும் என்ன சொல்ல‌..?

பைபிளைக் குறைத்து மதிப்பிடுவதை நிறுத்துங்கள்…
பைபிளில் நல்ல கருத்துக்களும் இருக்கிறது என்றோ நல்ல கருத்துக்கள் நிரம்பிய அருமையான பைபிளில் சில தேவையில்லாத கருத்துக்களும் கலந்துவிட்டது என்றோ சொல்லவருவது கண்டனத்துக்குரியது;பைபிள் முழுமையானது இன்னும் ஆராயப்படாதது, ஆராயப்படுகிறது; ஆராயப்படுகிறது; எனவே அவசரப்பட்டு கருத்து சொல்லவேண்டாம்.

இறுதியாக ஒரு உண்மையைக் கண்டுபிடித்தேன்; நீங்கள் எங்களை சீண்டாமல் பிரபலமாக முடியாது; எம்மைப் பற்றி பேசாவிட்டால் சீக்கிரமே மறக்கப்படுவீர்கள்; எனவே நான் வேறு ஆக்கப்பூர்வமான வேலைகளைப் பார்க்காதபடி உங்களைத் தொடரும் வண்ணமாக தொடர்ந்து சீண்டிக்கொண்டேயிருக்கிறீர்கள்; ஆனாலும் எனக்கு பிரச்சினையில்லை;எந்த ஒரு வினைக்கும் எதிர்வினையுண்டு;அது நன்மையாகவே முடியும்..!

http://chillsam.activeboard.com/index.spark#comment-37515653

// இனப் படுகொலைகளை செய்து விட்டு, அதை கடவுளே செய்ததாக சொல்லி அதைப் புனிதப் படுத்தி, இத்தனை காலமும் நல்ல பெயரும் எடுத்து விட்டனர். அவர்களின் வழி வந்தவர்களே இன்று உண்மைகளை உணர்ந்து விட்டனர். எந்த இனப் படுகொலைகளை தங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தினார்களோ ,, அதே இனப் படுகொலை தங்கள் இனத்தையே அழித்து விட்டதை அவர்களே உணர்ந்து வருகின்றனர் //

அற்புதம்…அருமை…அபாரம்…!
ஆம், இந்த ஒவ்வொரு வரியும் ஏழை இந்திய பாமரனைக் கூறுபோட்டு இரத்தம் குடித்த – பல்வேறு யுத்தங்களுக்கும் சேதாரங்களுக்கும் காரணமாக இருந்த பார்ப்பனர்களுக்கே பொருந்தும்; அவனுக்கு வால் பிடித்தவனும் அதே அதோ கதியினையடைவான்..!

ஆக்கிரமிப்பு என்பது நவீன காலத்தில் அரசியல்ரீதியாக அல்லாமல் பொருளாதாரரீதியில் நடந்துக்கொண்டிருக்கிறது; இனஅழிப்பு என்பது நேரடியாக நடவாமல் கலாச்சாரரீதியில் நடந்துக்கொண்டிருக்கிறது;

உதாரணத்துக்கு புத்திசாலிகள் என்று கூறப்பட்ட பிராமணர்களுடைய ஞானமே அவர்கள் அடையாளத்தை இழக்க காரணமாகிவிட்டது;அந்த இனம் தனது தனித்தன்மைகளைத் தொலைத்துவிட்டு மெள்ள அழிந்துவருகிறது… இன்றைய பார்ப்பனீயமானது முதியோர் இல்லத்தில் புகையிலை மென்று கொண்டிருக்கிறது..!

முதலில் நீங்கள் தயவு செய்து //புத்திசாலிகள் என்று கூறப்பட்ட பிராமணர்களுடைய ஞானமே// என்று எழுத வேண்டாம் . உலகத்தில் யாரும் தனியாக புத்திசாலிகள் என்று சொல்லப் படுவது சரியல்ல.

உலகில் உள்ள எல்லோரும் சமம் என்றும், எல்லோரிடமும் நற்பண்புகளும், புத்திசாலித்தனமும் , நேர்மையும், இரக்கமும், அன்பும் உள்ளன என்பதுமே உண்மையாகும். அந்த நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதில் முனைப்புக் காட்டி தன்னை இன்னும் மிகச் சிறந்தவராக ஆக்கிக் கொள்வது அவரவரின் கையிலேயே உள்ளது. அவரவர்கள் கேட்கும் கருத்துக்கள், ஆவரவரி சுற்றி நடை பெரும் செயல்கள், அவர்கள படிக்கும் நூல்கள் ஆகியவை ஒரு மனிதனின் உருவாக்குவதில் பங்கு வகிக்கின்றன.

எனவே புத்திசாலித் தனம் என்பது இந்த உலகத்தில் எந்த ஒரு இனத்தினருக்கோ, பகுதியினருக்கோ, பிரிவினருக்கோ, சமூகத்தினருக்கோ சொந்தமானது அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இனப் படுகொலைகளை புனிதப் படுத்தி வரும் கொடுமையை மறைக்க முயன்றாலும்
முழுப் பூசணிக்காயை சோற்றிலே மறைக்கப் பார்த்தாலும் இரக்கம் காட்டாமல், உடன் படிக்கை செய்யா இடம் தராமல் சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்கரித்த இனப் படுகொலைகளை புனிதப் படுத்த இயலாது. அன்று தொட்டு இன்று வரை இனப் படுகொலைக் கருத்துக்களை வகுத்து திட்டம் தீட்டி, நிறைவேற்றி தானும் அந்தக் கருத்துக்களினால பாதிக்கப் பட்ட மக்களையும் நாகரயைக் நல்லிணக்கப் பாதையில் சகோதரராக அவர் முழுப் பாதுக்கப்புடன் வாழ் வேண்டும் என்பதே இந்தியர்களின் எண்ணம்.

மற்றபடி இந்தியர்கள என்றுமே இனப் படுகொலையில் ஈடுபட்டதோ, அதை பற்றி நினைத்துப் பார்த்தோ கூட கிடையாது. இந்தியாவை ஆண்ட அரசர்களிலேயே இந்திய துணைக் கண்டத்தை தாண்டிப் படை எடுத்துச் சென்ற ஒரே அரசன் , பேரரசன் இராசேந்திர சோழனே. அவன் ஆக்கிரமிப்பு செய்யவோ, ஆதிக்க வெறியிலோ , இடம் பிடிக்கவோ, கொள்ளை அடிக்கவோ படை எடுக்கவில்லை. இன்றைய மலேசிய , இந்தோனிசிய பகுதிகள் அன்றைக்கு கடாரம் என அழைக்கப் பட்டு வந்தன. சோழ நாட்டு வணிகக் கப்பல்கள் அப்பகுதியில் உள்ள கடற்கொள்ளையர்களால் கொள்ளை அடிக்கப் பட்டு வந்தன. அப்பகுதியை ஆண்ட ஸ்ரீ விஜய அரசு தமிழரின் கப்பல்கள் கொள்ளை அடைக்கப் படுவதை வேடிக்கை பார்த்து வந்ததோடு, கொள்ளையருக்கு நடத்துங்கப்பா என்ற ரீதயில் ஆதரவும் அளித்தது. இந்த அக்கிரமத்தை தட்டி கேட்கவே இராசேந்திர சோழன் கடாரம் மீது படை எடுத்தான். ஏழு முறை படை எடுத்து சென்ற சோழக் கடற்படையானது ஸ்ரீ விஜய பேரரசை முழுமையாக முறியடித்த போதும், அப்பாவிக் குடி மக்களுக்கு இன்னல் எதுவும் தரவும் இல்லை. அப்பகுதியை தாங்களே ஆள வேண்டும் என்று நினைக்கவும் இல்லை. தகுதியான ஒருவருக்கு முடி சூட்டி விட்டு வந்து விட்டனர். அப்படி பட்ட நல்லவர்களைப் பார்த்து நாக்கூசாமல் பழி சொல்லுகிறீர்கள். தாங்கள் வாழ இடம் வேண்டும் என்பதற்காக அப்பாவை மக்களைக் கொன்று குவித்து இனப் படுகொலையாளர்களை புனிதர்கள் என்று சொல்லுகிறீர்கள். மனிதர்களின் மனதில் மத வெறியைத் திணித்து சொந்த சகோதரர்கள நல்லவர்களாக இருந்த போதும் அவர்களை இகழவும், இனவாத கொடூரங்களை போற்றவும் செய்யும் படிக்கு அன்று அவர்கள தீட்டிய திட்டம் இன்று வரை பலிக்கிறது. ஆனால் மக்கள விழிப்புணர்ச்சி அடைகிறார்கள்.

//இன்றைய பார்ப்பனீயமானது முதியோர் இல்லத்தில் புகையிலை மென்று கொண்டிருக்கிறது..!//

பார்ப்பனர்கள் என்று சொல்லப் படும் பலரும் சோத்துக்கு கஷ்டப் படுபவர்களாக இருந்தது அனைவரும் அறிந்ததே. ஆன்மீகத்தில் அதிக ஈடு பாடு உடையவர்களை எளிய வாழ்க்கை வாழ்வதே இயலும். அப்படி வாழ்ந்தவர்களை உயர் சாதி என்று பட்டம் கட்டி அதே நேரம் சொத்துக்கும் , துணிக்கும் பிச்சை எடுக்கும் நிலையே இருந்தது. இன்றைக்கு அவர்கள பலரும் அந்த நிலையில் இருந்து விடுபட்டு எல்லோரையும் போல பொருள் ஈட்டும் வாழ்க்கையில் ஈடு பட்டு வருகின்றனர். நீங்கள் சொல்வது போல பார்ப்பனீயம் முதியோர் இல்லத்தில் புகையிலை மென்றாலும் அதுவும் நல்லதே. மத நல்லிணக்க பணியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்து மதம் முழு ஜனநாயக மதமாக எல்லா மக்களும் பங்கு பெரும், தலைமை ஏற்று நடத்தும் வகையில் மேகத்தின் மறைப்பில் இருந்து விடுபட்டு ஒளிக் கிரகணங்களை எல்லோர் மீதும் பாய்ச்சி வருகிறது. இந்திய சமுதாயம் சமத்துவ சமுதாயமாக வேகமாக உருப் பெற்று வருகிறது. சாதிப் பிரிவினைகளை வளர்த்தி , குட்டையைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் வியாபாரிகளின் வியாபாரம் படுத்து விடும்.

இந்திய சமுதாயம் சமத்துவ சமுதாயமாக வேகமாக உருப் பெற்று வருகிறது. சாதிப் பிரிவினைகளை வளர்த்தி , குட்டையைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் வியாபாரிகளின் வியாபாரம் படுத்து விடும். அய்யோ, சாதிகளை வைத்துக் கங்க அய்யா, அதை காட்டி தானே நாங்கள் பிழைப்பு நடத்த முடியும், அதை வைத்து தானே எங்களின் ஆள் பிடிப்பு வியாபராத்தை செய்ய முடியும் என்று கதறும் நிலைக்கு பலரும் வந்து விட்டனர். ஆனால் தடைகளைத் தகர்த்து சமரச, சமத்துவ, நாகரிக சமுதாயம் உருவாகி வருகிறது.

இன்றைக்கு திருப்பதி கோவிலுக்கோ, சபரி மலை கோவிலுக்கோ யாராவது சென்றால் அவர்கள் எந்த சாதி , எந்த மதம் என்று யாரும் கேட்பதும் இல்லை, அதை பற்று நினைப்பதும் இல்லை. பேதங்கள் எல்லாம ஜருகண்டி, ஜருகண்டி என ஒதுக்கப்பட்டு சமத்துவ நல்லிணக்கம் பேணப் படுகிறது.

சாதிகளைக் காட்டி நம்முடைய ஆள் பிடிக்கும் வியாபாரத்தை நடத்தி கல்லா கட்டலாம், மில்லியனேர் ஆகலாம் என மனப் பால் குடிக்கும் காசுக் காரர்களின் நெற்றியிலே பட்டை நாமம் என்னும் நிலை உருவாக்கி வருகிறது.

நீங்கள் கவலையே பாடதீர்கள். சமத்துவ சமுதாயத்தை நாம் உருவாக்குவோம். பார்ப்பனீயம் புகையிலை மெல்லட்டும்.

தங்களுக்குரிய சரியான பதில் விரிவான கட்டுரையாக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது;அதனிடையே பைபிளைக் குறித்த அவதூறான வெறுப்புப் பிரச்சாரத்தை உடனே நிறுத்திவிட வேண்டுகிறேன்;குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக பைபிள் ஆகிவிட அனுமதிக்காதிருங்கள்…!

Please follow the link:

திருச்சியாருக்கு வினவு கண்டிப்பு! கொள்கையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாதே!

நாரத கான சபாவில் புஷ்பவனம் குப்புசாமி கச்சேரி பண்ணுகிறார்;
காஞ்சி மடத்தில் பங்காரு அடிகளாருக்கு பூரண கும்ப மரியாதை;
காலம் மாறிப் போச்சு சாமி…
எல்லாம் திருச்சிக்காரன் புண்ணியம்..!

நாரத கான சபாவில் மட்டும் அல்ல, கர்நாடக சங்கீதத்தில் மகா ராணியாக விளங்கிய திருமதி எம். எஸ். சுப்பு லட்சுமி அவர்கள் மிகவும் பிறபடுத்தப் பட்ட பிரிவை சேர்ந்தவர் தான். சங்கீதத்தில் ஈடு பாடு உடைய அனைவரும் அவருடைய திறமையை, பண்பை, இரக்க சிந்தனையை கண்டு வியந்து, அவருடைய குரலை தெய்வீகக் குரலாகவே போற்றினர்.

சீர்காழி கோவிந்தராஜன், ஜேசுதாஸ் உள்ளிட்ட பலர் பல சபாக்களில் பாடி உள்ளனர்.

ஜேசுதாஸ் வருடம் தவறாமல் தியாகராசர் ஆராதனை விழாவில் கலந்து கொண்டு , அவருடைய நினைவிடத்தில் மரியாதை செய்து, வழிபட்டு வருகிறார். இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு நல்லிணக்கப் பாதைக்கு வர அனைவரும் முயல வேண்டும்.

ஆன்மீகம் என்பது ஒருவரின் மன உறுதியை , வலிமையை உயர்த்தி அவர் மனதிலே அன்புக் கருத்துக்களை நிலை நிறுத்த உதவும் பயிற்ச்சியே. இங்கேயும் வந்து பூரண கும்ப மரியாதை யை எதற்கு எதிர்ப்பார்க்கிறீர்கள. அவர்கள ஆடைகளில் தொங்கல்களையும், சபைகளில் வந்தனங்களையும் விரும்புகிறார்கள என்பதை நினைவு படுத்து கிறது உங்களின் மரியாதை எதிர்பார்ப்புக்கள்

// சாதிப் பிரிவினைகளை வளர்த்தி , குட்டையைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் வியாபாரிகளின் வியாபாரம் படுத்து விடும்…//

சாதிப்பிரிவினைகளுக்கு எதிராக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்; எனக்குத் தெரிந்த ஒரு வன்னிய இனப் பெண் மதம் மாறியபிறகும் அவளது தாயாருக்கு அந்த உணர்வு இன்னும் இருப்பதால் அவளை பெண்கேட்டு வந்து கை நனைத்த பிறகு மாப்பிள்ளை தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதையறிந்து பெண்தர மறுத்துவிட்டார்கள்;இதற்கு என்ன சொல்வீரய்யா..?

யாரய்யா சாதி வியாபாரிகள்..?
யாரையா சாதிய தீயில் எண்ணை வார்த்தது..?
மனசாட்சியை பிட்டுக்கு விற்றுப் பேசாதிரும்..!

பிராமண சமூகம் என்று சொல்லப் படும் சமூககத்தை சார்ந்த பெண்கள பலர் பிற சாதி ஆண்களை , குறிப்பாக நசுக்கப் பட்ட பிரிவு ஆண்களை திருமணம் செய்வது நடை பெற்று வருகிறது. சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் ஒரே நாளில் உருவாகி விடும் என்று சொல்லவில்லை. இந்திய சமுதாயம் வேகமாக சாதிகளை உதறி மேலெழுகிறது.

// பிராமண சமூகம் என்று சொல்லப் படும் சமூககத்தை சார்ந்த பெண்கள பலர் பிற சாதி ஆண்களை , குறிப்பாக நசுக்கப் பட்ட பிரிவு ஆண்களை திருமணம் செய்வது நடை பெற்று வருகிறது. //

இதற்கு அந்த சமுதாயம் எந்த வகையிலும் பெருமைபட்டுக் கொள்ளமுடியாது;”தள்ளிவைப்பது” முதலாக அனைத்தும் நடந்துக்கொண்டு தானிருக்கிறது;நீங்கள் ரஜினிகாந்தை மனதில் வைத்து சொல்லியிருந்தால் அது ஒன்றும் பெரிய சாதனையல்ல‌;

பூரண கும்ப மரியாதையினை எனக்கு கேட்கவில்லை;தாழ்த்தப்பட்டோரின் ஆன்மிகத் தலைவரை உங்கள் பீடங்கள் ஏற்றுக்கொண்டதா என்பதே எனது கேள்வி;நான் நமது மார்க்கத்தைப் பற்றிய ஒரு ஐயத்தை முன்வைக்கும் போது நீங்கள் வேறொரு மார்க்கத்தின் காரியத்தை உள்ளே நுழைப்பது நல்ல மரபல்ல‌;

அன்புக்குரிய நண்பரே,

உங்கள் எண்ணத்தில் நிற்பது எல்லாம் ரஜினியைப் போன்ற பெரிய மனிதர்கள் போலும். நான் குறிப்பிட்டது சாமானிய மக்களை. நான் சந்திக்கும் நட்பாக இருக்கும் சாமானிய (பிராமண என சொல்லப்படும்) குடும்பத்தை சேர்ந்த பல பெண்கள் , பிற சமூகத்தை சேர்ந்த சாதாரண நிலையில் இருக்கும் ஆண்களை திருமணம் செய்து வருவது சர்வ சாதரணமாக நடந்து வருகிறது.

யாரும் யாரையும் ஒதுக்கி வைப்பது இல்லை. எல்லோரும் பேருந்திலே பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்து செல்கிறோம். அருகருகே அமர்ந்து உண்ணுகிறோம். நசுக்கப் பட்ட சமுதாயத்தை சேர்ந்த முதியவரின் காலில் விழுந்து மரியாதை செய்யும் படிக்கு முற்போக்கு மனநிலையிலேயே பலர் உள்ளனர். கிராமங்களில் சாதி வேறுபாடு முற்றாக நீங்கவில்லை. ஆனாலும் வேறுபாடுகள் நீங்குவதும் , மக்கள இணைவதும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

உங்களுடைய பீடம் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெளிவாக சொல்ல முடியுமா? உங்களுடைய் முந்தைய பின்னூட்டத்தை வைத்துப் பார்த்தால் அனேகமாக நீங்கள் காஞ்சி பீடத்தை என்னுடைய பீடமாக கருதுகிறீர்கள் என நினைக்கிறேன். எனக்கு என்று எந்த பீடமும் கிடையாது. இந்த உலகத்தில் உள்ள எல்லா ஆன்மீக நிலையங்களையும் அவைகளின் கொள்கைகள் மற்றும் செயல் பாட்டின் அடைப்பட்டின் அடிப்படையிலே அணுகி நம்முடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறோம். என்னைப் பொறுத்தவரையிலே எனக்கு எல்லாப் பீடமும் ஒன்றுதான்.

காஞ்சி பீடத்தின் பல செயல் பாடுகளை , நிலைப்பாட்டை, வழிகளை நான் பல முறை விமரிசித்து பல தளங்களில் கருத்து தெரிவித்து இருக்கிறேன். உங்களுக்கு நினவு இல்லையோ என நினைக்கிறேன். ஒரு தளத்தில், ஒரு கட்டுரையில் நான் அதைப் பற்றி பல பின்னூட்டங்களை இட்டு கடைசியில் அந்தக் கட்டுரையையே அந்த தளத்தில் இருந்து எடுத்து விட்டனர்.

ஏதாவது ஒரு பீடத்தையோ , கருத்துக்களையோ தலைமையாக ஏற்றுக் கொண்டு விட்டு, அதை எப்படியாவது எல்லோரும் ஒத்துக் கொள்ளச் செய்ய வேண்டுமே என்ற ஆதங்கத்திலே செயல் பட வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. நான் ஒரு சுதந்திரமான சிந்தனையாளன் என்பது நம்முடைய தளத்தைப் படிக்கும் யாருக்கும் தெரியும்.

நீங்கள் நினைப்பது போல எல்லோரும் தங்களுக்கு கூறப்பட்டு போதனைகளை அப்படியே ஏற்று , ”இது புனிதம் தான்யா. அதைப் புனிதம் இல்லை என்று சொல்லாதீங்க …அது கடவுள் சொல்லி செஞ்சது, அவர்கள் கடவுளின் பிரதி நிதி” என்று எல்லாம் செயல் பட மாட்டார்கள்.

கடவுள் என்று ஒருவர் இருந்தாலும் அவரே தவறு செய்தாலும் அதையும் சுட்டிக் காட்டுவோம். தட்டிக் கேட்போம். அது எந்தக் கடவுளாக இருந்தாலும் சரி.
யாராக இருந்தாலும் நியாயமாக நடக்க வேண்டும்.

”ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.”

இந்தப் பாட்டைக் கேட்டு இருக்கிறீர்களா நண்பரே.

நீங்கள் சொல்லும் பீடங்களைப் பற்றிய கட்டுரைகள் விரைவில் வெளியாகும்.

பார்பன பெண்கள் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களை திருமணம் செய்ய காரணம் பணமே, பசை எங்கு இருக்குதோ அங்கு போகவேண்டிய தானே …இது ஊரறிஞ்ச உண்மை..

இது உண்மைக்கு மாறான கருத்து. நான் குறிப்பிட்ட பெண்கள் (அதாவது பிராமண சமூகம் என்று சொல்லப் படுபவர் ) தாங்கள் எந்த பொருளாதார நிலையிலே இருக்கிரார்க்லாவ் , அதே நிலையில் இருப்பவரைத் தான் திருமணம் செய்து கொண்டு உள்ளனர். நீங்கள் சொல்வது போல பணக்காரரரைத் தேடி செல்லவில்லை. தாங்கள் பணி
புரியும் அலுவலகத்தில் தாங்கள் எந்த வேலையை செய்கிறோமோ, அதே வேலையை செய்பவர்களை திருமணம் செய்து கொண்டு உள்ளனர்.

ஏதாவது காரணம் காட்டி சமூக இணைப்பை மறுப்பதிலும், சாதி வேறுபாட்டை ஒழிப்பதிலும் , சமத்துவம் உருவாவதற்கு முட்டுக் கட்டை போடுவதிலும் முனைப்பு காட்ட பலர் முயலுகின்றனர்.

சாமானியர் சாமானியருக்கு பெண் தருகிறார்கள் .

பணக்காரர் பணக்காரருக்கு பெண் தருகிறார்கள்.

திருமண உறவுகளை நிர்ணயிப்பது பொருளாதாரமே என காரல் மார்க்ஸ் சொல்லி இருக்கிறார் அல்லவா ?

பணக்கரருக்குத் தான் குடுப்பார்கள் என சொல்பவர்கள், சீர்திருத்தவாதி போல பேசும் யாராவது
யாராவது தங்கள் வீட்டுப் பெண்ணை ஒரு கூலித் தொழிலாளி அன்றாடங்க் காய்ச்சி , பிளாட் பாரத்திலே குடியிருப்பவருக்கு மனம் முடித்து தருகிறார்களா என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்!

வர்க்க வேறுபாடுகளுக்கு எதிராகவும் நாம் போராடுகிறோம்.

பிராமண சமூகத்தவர் என சொல்லப்படும் பெண் தன்னுடன் பணி புரியும் பிற சமூகத்தவரை மணம் புரிவது சர்வ சாதரணமாக நடக்கிறது.

மில் முதாளியின் மகள், தொழில் அதிபரின் மகள், பில்லியநேர் அரசியல் வாதியின் மகள் ஒரு சாதாரண தொழிலாளியை மனது கொள்வது எம்.ஜி. ஆர் படத்திலும், ரஜினி படத்திலும், விஜய் படத்திலும், மொத்திலே சினிமாவிலே தான் சாத்தியமாக உள்ளது.

ஒரு ஆபாசமான விஷயத்தை எப்படி புனிதமாக பார்க்கமுடியும்? உடலுறவு ஒரு புனிதமான விஷயம் (திருமனபந்ததிற்க்குள்), ஆனால் இந்த கற்பழிப்புகள், முறையற்ற உடலுறவு, கட்டுப்பாடற்ற உடலுறவு, ஆணோடு ஆண் புணர்தல், இவை எப்படி புனிதமாக கருதப்படும். ..

If you trust Jewish Tradition Mary was raped by a Roman Soldier and that is how she concieved.

Which Mary do you believe- Mary from Nazareth who was bedrothed for Joseph son of Heli AND 56TH Generation from Abraham
or
Mary who was married to Bethlehem Joseph son of Jacob and 40th Generation from Abraham

As per Josephus John the Baptist was killed C.E.-37 And

As per Christian Mythologies Jesus died in 27 or 29 or 30 or 33 CE. I can quote various books for it.

How can you trust then New Testament.
Jesus Cried lastly before Dying:>

My God! Why you abandoned me?

He also said
Why do you call me Good? only God is Good?

Jesus was never God or Son of God as per Gospels in its original Greek especially you look with oldest Manuscripts.

LORD or Jehovah is not a god but a small diety of Israel, why should that (edited) diety is brought out?

-As for your Apologetics they are meaningless and rejected by Theologians and as Devapriyaji quoted a renowned Biblical Scholar of repute.

Current Position of Biblical Theologians summarised by American Scholar
Professor John Hick, sums up the current position of Theological research as follows:
Quote:
“The weight and extent of the strain under which Christian Belief has come can be indicated by listing aspects of Traditional Theology which are, which are in the opinion of many Theologians today [including myself], either untenable ot open to Serious Doubts.
1. There are divinely revealed truths [such as the doctrines of Trinity or the two natures of Christ]
2. God Created the physical Universe out of nothing “n’ years ago.
3. Man was created originally brought into the existence as a finitely perfect being, but rebelled against God, and the human condition has ever since been that of creatures who have fallen from grace.
4. Christ come to rescue man from his fallen plight, buying man’ [or some men’s] restoration to grace by his death on the cross.
5. Jesus was born of a Virgin mother, without human Patenity.
6. He performed miracles in which the regularities of the natural order were suspended by Divine Power.
7. His Dead Body rose from the Grave and Returned to Earthy Life.
8. All men must respond to God through Jesus Christ in order to be saved.
9. AT Death a person’s relationship to God is irrevocably fixed.
10. There are two human destinies, traditionally referred to under the symbols of Heaven and Hell. “
“God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.
கிறிஸ்துவ மத நம்பிக்கைகள் பெருமளவில் சிக்கலைடந்துள்ளது என்பதை பழைமைவாதிளின் அடிபடை மத உணர்வுகள் பெரும்பாலும், இன்றைய பைபிளியல் அறிஞர்கள் ஆய்வுக்குப்பின் ஏற்கமுடியாதது, சந்தேகத்துக்கு உரியவை என நான் உட்பட பெருமளவு பைபிளியல் அறிஞர்கள் சொலவதை பட்டியல் இடுவோம்.
1. ஏதோ தெய்வீக உண்மைகள் அடிப்படையில் இருந்தது-அதாவது மூன்று கடவுள்; மூன்றும் ஒன்றே மற்றும் ஏசு மனிதன் – தெய்வம் என்னும் கற்பனைகள்.
2. கடவுள் இத்தனை ஆண்டுகட்கு முன் வெறுமையிலுருந்து இவ்வுலகைப் படைத்தார்.
3. மனிதன் முதலில் இறப்பே இன்றி தொடர்ந்து வாழ படைக்கப்பட்டு, பின்னர் கடவுள் சொல்லை மீறியதற்காக மனிதன் அதன்பின் இந்நிலைக்கு வந்து ம்ரணமடைகிறான்.
4. கிறிஸ்து மனிடர்களின் பாவத்தை மீட்க வந்தார், தன் சிலுவை மரணம் மூலம் மனிதர்களை (அல்லது சில மனிதர்களை) மீட்டார்.
5. இயேசு ஒரு கன்னிப் பெண்ணிடம், மனித உடலுறவின்றி பிறந்தார்.
6. இயேசு பல மேஜிக்குகள் செய்தார் என்றும் அதில் இயற்கையின் ஆற்றலை இறை சக்தியில் கட்டுப் படுத்தினார்.
7. இயேசுவின் மரணத்திற்குப்பின் இயேசுவுடைய பிணவுடல் சவக்குழியிலிருந்து மீண்டும் உயிர் பெற்று வந்தது.
8. உலக மாந்தர்கள் அனைவரும் தாங்கள் காப்பாற்றப்பட இயேசு கிறிஸ்து மூலமே ஆகும்.
9. ஒரு மனிதன் மரணத்தில் அவனுக்கும் கடவுளிற்கும் ஆன உறவு மாற்றமுடியாதபடி இறுதியாகிறது.
10. மனிதன் பெரும் இரு முடிவுகள், எனகூறப்படும் சொற்கம்-நரகம் என்பவை எனகடவுளும் உலகின் மத நம்பிக்கைகளும் என இன்கிலாந்து பினிங்காம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கூறுகிறார். “God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.

பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.
நாம் காணும் பைபிள்-(விவிலியம்) 16ம் நூற்றாண்டு வரை ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ சர்ச்சினால் சிறைப் படுத்தப் பட்டுயிருந்த்தது, பைபிள் நூலைப் பதிப்பித்த பலர் மதத்திலுரிந்து வெளியேற்றம் ம்ற்றும் மரணதண்டனை என கொலையும் சர்ச்சினால் செய்யப்பட்டனர். மறுப்பியல் (ப்ரோட்டஸ்டண்ட்) அணியினரின் கிளர்ச்சியினால் அதிலும் புத்தகங்கள் மட்டுமே (sola scripture) என்ற கோரிக்கையினால் பைபிள்-(விவிலியம்) சுதந்திரம் பெற்றது.

The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.

For every of your questions on Hinduism there are well answered.
The problem is you misquote doe frauds and Forgeries.

Biblical Scholars agree that Old Testament has influences from Mahabaratham

Mr.Trichikkaaran,
In what way the comment of SaintThomalFables is related to this article? And doesn’t it look completely against what you said in this article? Why such a Hypocrasy from you? What are the proofs given by the one who submitted this comment?

Mr. SaintThomasFables,
In what way this Prof.Reginald H.F Fuller, prooves that the new testament is not written by the eyewitnesses?
Who are those Bible Scholars (???) those are agreeing that Old Testament has influences of Mahabaratham?
Most of these questions are nothing but pervertness of the questioner.

Ashok

If jesus is known to all the gospel writers why confusions as said in this Encyclopedia

http://en.wikipedia.org/wiki/Chronology_of_Jesus
There were many speculations in the 2nd century about the date of Jesus’ birth. Clement of Alexandria, towards its close, mentions several such, and condemns them as superstitions. Some chronologists, he says, alleged the birth to have occurred in the twenty-eighth year of Augustus, on the 25th of Pachon, the Egyptian month (May 20). These were probably the Basilideans. Others set it on the 24th or 25th of Pharmuthi (19th or 20 April). Clement himself sets it on November 17, 3 BC.

Jesus’ ministry lasted around one year, according to the Synoptic Gospels,[citation needed] or three years according to the Gospel of John;[4]

As per Mark except last few days from Late Tuesday evening to Friday when Jesus was executed for Jesus’ Sins he was in Judea, otherwise he was only in Galilee. Fourth Gospel says last 8 months Jesus was is Judea?

Fourth Gospel never tells of any Miracle with Goasts -Why?

Which IS True?

When TWO Do not MATCH- Either One is telling lie or both could be wrong?

Now pleaSE Clarify.

The Birth Stories of Moses has lot of resemblances of Karna, and it is widely accepted.

You want to trust all (edited) fiction but not truths.

திரு saintthomesfables அவர்களே,

///அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.///

இது எனக்கு புதிய செய்தியாக உள்ளது. இயேசு கிறிஸ்துவுடன் இருந்த சீடர்கள் தான் பைபிளை(புதிய ஏற்ப்பாட்டை) எழுதினார்கள் என்று இதுநாள் வரை நான் நினைத்திருந்தேன்.

நண்பரே எந்தவொரு கருத்துக்கும் எதிர்கருத்தினை உருவாக்குவது மனித இயல்பாகும்;ஆனாலும் உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை;

கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அகழ்வாராய்ச்சிகள் மூலம் பைபிள் மட்டுமே இன்றைக்கும் அதிகமாக ரூபிக்கப்பட்டு வருகிறது;வேறெந்த மதப்புத்தகத்துக்கும் இதுபோன்ற சிறப்பு கிட்ட‌வில்லை;

புதிய ஏற்பாட்டைப் பொருத்தவரை எந்தவித ஐயத்துக்கும் இடமில்லாமல் அதன் கையெழுத்துப் பிரதிகள் ஆயிரக்கணக்கில் தேவைக்கும் அதிகமாக உள்ளன;அதனை மிக எளிமையாக இங்கே இணையதளத்திலேயே நீங்கள் கண்டு இன்புறலாம்.

திரு CHILLSAM அவர்களே,

///புதிய ஏற்பாட்டைப் பொருத்தவரை எந்தவித ஐயத்துக்கும் இடமில்லாமல் அதன் கையெழுத்துப் பிரதிகள் ஆயிரக்கணக்கில் தேவைக்கும் அதிகமாக உள்ளன;///

///அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.///—என்று திரு saintthomesfables கூறுகிறார்.

இது பொய் என்று நிருபிக்கும் ஆதாரங்கள் இருந்தால் தெரிவிக்கவும்.அதாவது புதிய ஏற்ப்பாட்டை எழுதியவர்கள் யேசுவுடன் வாழ்ந்தவர்கள் தானா???

ஆம் நண்பரே, அதையே கையெழுத்துப் பிரதிகள் என்று குறிப்பிட்டிருக்கிறேன்; புதிய ஏற்பாட்டின் கடைசி நூலான வெளிப்படுத்தின விசேஷமே கடைசி புத்தகமாகும்; இது இயேசுகிறித்துவின் அன்புக்குரிய சீஷனான யோவான் என்பார் நாடு கடத்தப்பட்ட நிலையில் ஒரு தீவில் தனிமையிலிருந்த போது அடைந்த விண்ணக அனுபவங்களின் நேரடி பதிமானமாகும்; இது கிபி 90 முதல் 96 க்குள் எழுதப்பட்டிருக்கலாம்;இவரே கடைசியாக மரணித்தவர்; இப்படியாக புதிய ஏற்பாட்டின் எந்த ஒரு புத்தகமும் முதல் நூற்றாண்டுக்குப் பிறகு எழுதப்படவில்லை என்பதை ஆதாரப்பூர்வமாக நம்புகிறோம்; அது தன்னலமோ சுயநலமோ உள்நோக்கமோ இல்லாத மார்க்க அறிஞர்களால் உறுதிசெய்யப்பட்டுவிட்ட ஒரு காரியமாகும்; பெரும்பான்மையோர் நம்பும் ஒரு உண்மையை பொய் என்று நிரூபிக்கும் பொறுப்பு குற்றஞ்சாட்டுபவரையே சாரும்;அதை ஏற்கனவே உண்மை என்று நம்புவோர் அதனை உண்மை என்று நிருபிக்கவோ கூறப்படும் குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கவோ அவசியமில்லை.

Dear Mr. Devapriya Ji

With reference to your commet

”எகிப்தில் அந்த நாட்டு அப்பாவி சிறு குழந்தைகளை மட்டும் கொன்றதற்கு நன்றி சொல்ல, கர்த்தர் இருக்கும் ஒரே ஆலயமான ஜெருசலேம் வந்த போது ரோம் படைவீரர்களால் கைது செய்யப்பட்டு ரோமன் தண்டனை முறையில் மரண தண்டனையில் இறந்தார் என முடிகிறது.”‘

Can you clarify this in detail? Because to the best of my knowledge, I did not herad about that ”எகிப்தில் அந்த நாட்டு அப்பாவி சிறு குழந்தைகளை மட்டும் கொன்றதற்கு நன்றி சொல்ல, கர்த்தர் இருக்கும் ஒரே ஆலயமான ஜெருசலேம் வந்த போது”‘ so far.

I think that you have better knowledge about the earlier versions of the bible. So if you can provide the details, every body can know.

திரு CHILLSAM அவர்களே,

///புதிய ஏற்பாட்டின் கடைசி நூலான வெளிப்படுத்தின விசேஷமே கடைசி புத்தகமாகும்; இது இயேசுகிறித்துவின் அன்புக்குரிய சீஷனான யோவான் என்பார் நாடு கடத்தப்பட்ட நிலையில் ஒரு தீவில் தனிமையிலிருந்த போது அடைந்த விண்ணக அனுபவங்களின் நேரடி பதிமானமாகும்; இது கிபி 90 முதல் 96 க்குள் எழுதப்பட்டிருக்கலாம்;///

புதிய ஏற்பாட்டின் கடைசி நூலான வெளிப்படுத்தின விசேஷம் யோவான் என்பவரால் கிபி.90 முதல் 96 க்குள் எழுதப்பட்டது என்பதை நீங்களே உறுதியாகக் கூறவில்லையே./// எழுதப்பட்டிருக்கலாம்/// என்று உறுதியில்லாமல் தானே கூறுகிறீர்கள்.ஏன் ???

///இப்படியாக புதிய ஏற்பாட்டின் எந்த ஒரு புத்தகமும் முதல் நூற்றாண்டுக்குப் பிறகு எழுதப்படவில்லை என்பதை ஆதாரப்பூர்வமாக நம்புகிறோம்; அது தன்னலமோ சுயநலமோ உள்நோக்கமோ இல்லாத மார்க்க அறிஞர்களால் உறுதிசெய்யப்பட்டுவிட்ட ஒரு காரியமாகும்;///

///ஆதாரப்பூர்வமாக நம்புகிறோம்;///

இந்த இரண்டு வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது.ஆதாரப்பூர்வமாக கூறுகிறோம் என்று கூறலாம் ஆனால் அதற்க்கு ஆதாரங்களைக் காட்டவேண்டி வரும்.ஆதாரங்கள் இல்லாத பட்ச்சத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் நம்புகிறோம் என்று கூறலாம்.///ஆதாரப்பூர்வமாக நம்புகிறோம்;/// என்ற இரு வார்த்தைகள் அடுத்தடுத்து வராது என்றே கருதுகிறேன்.

திரு தனபால், அவர்களே,

மிகத் தெளிவாக நமக்கு நடுநிலை பைபிளியல் அறிஞர்கள் பைபிள் ஆராய்ச்சிக்குப் பின் கூறியதைத்தான் தோமோவழி நண்பர் கூறியிருந்தார்.

ரோமன் ஆட்சிக்கு எதிரான ஆயுதக் கலகக்காரரான இறந்த மனிதன் இயேசு, மரணம் 30 வாக்கில், பவுல் என்பவர் எழுதிய சில கடிதஙள் 50-60 வாக்கில் வரையப்பட்டவை. சுவிசேஷங்களில் மாற்கு 70-75 வாக்கில் புனையப்பட்டது. இந்த சுவிசேஷப் புனையலை அப்படியே பின்பற்றி சில போதனை சேர்த்துத் தருபவை மத்தேயுவும் லூக்காவின் சுவிசெஷப் புனையல்களும்.

இந்த மூன்று சுவிகளும், இயேசு பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற ஜெருசலேம் வந்தார், பின்பு முழுமையாக கலிலேயோவில் இயங்கினார், பின்னர் பஸ்கா பண்டிகைக்கு, இஸ்ரேலின் சிறு தெய்வமான கர்த்தர்- எகிப்தில் அந்த நாட்டு அப்பாவி சிறு குழந்தைகளை மட்டும் கொன்றதற்கு நன்றி சொல்ல, கர்த்தர் இருக்கும் ஒரே ஆலயமான ஜெருசலேம் வந்த போது ரோம் படைவீரர்களால் கைது செய்யப்பட்டு ரோமன் தண்டனை முறையில் மரண தண்டனையில் இறந்தார் என முடிகிறது.

அதாவது இயேசு சீடர்களுடன் இயங்கிய காலம் ஒரு வருடத்திற்கும் குறைவானது-முழுமையாக கலிலேயோவில் தான், கடைசி வாரம் செவ்வாய் அன்று ஜெருசலேமில் நுழைய வெள்ளியன்று மரணம் என முடிகின்றது.
ஆனால் 4வது சுவியோ மூன்று பஸ்கா பண்டிகைகளுக்கு யேசு ஜெருசலேம் வந்ததாகவும், அதிலும் கடைசி வருடம், அவர்து கடைசி 7 மாதங்கள் கழித்தாகவும் காட்டுகின்றார்.

வேண்டுமென்று போய் சொன்னார்களா மாற்கு-மத்தேயு-லூக்கா சுவிசேஷக் கதாசிரியர்கள்.

4ம் நூற்றாண்டிலிருந்து பல பிரதிகள் உள்ளன; ஆனால் பழைய ஏற்பாடகட்டும்- புதிய ஏற்பாடகட்டும் அதில் உள்ள ஒரு சொல்லிற்குக் கூட மாற்று சொற்கள் இல்லாத நிலை இல்லை. வெவ்வேறு படிகளிலும் பலவை திருத்தப்பட்டுள்ளன.

அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைக்கும் ஆதாரங்கள் பெரும்பாலும் பைபிளிற்கு எதிராகவே கிடத்க்டுள்ளது பெரும்பாலும். ஆனாலும் அகழ்வுபொருட்கள் எனத் போலிகளைத் தயாரித்து விற்க மட்டுமே இன்றைக்கும் இஸ்ரேலில் பெரும் தொழில் நடைபெருகிறது.

ஜெருசலேம் BCE. 8-9m நூற்றாண்டில் தான் வளர்ச்சியைப் பெற்றது- தாவீது, சாலமன் கதைகள் வெறும் புனையலகள் என இஸ்ரேலின் டெல்-அவிவ் பலகலைக் கஅக அகழ்வாராய்ச்சிகள் மூலம் நுருபிக்கப் பட்டுள்ளன.

திரு தேவப்பிரியாஜி அவர்களே,

///ரோமன் ஆட்சிக்கு எதிரான ஆயுதக் கலகக்காரரான இறந்த மனிதன் இயேசு///

இயேசு கிறிஸ்து ஆயுதக்கலகக்காரரா???

///இஸ்ரேலின் சிறு தெய்வமான கர்த்தர்///

கர்த்தர் என்பவர் சிறு தெய்வமா??? நம் ஊரில் சிறுதெய்வம் என்றால் உருவ சிலையோ,வேறு அடையாளமோ இருக்கும். அதுபோல் கர்த்தருக்கு உருவ சிலையோ,அடையாளமோ இருந்ததா ???

நான் இதுவரை இந்து மதத்தில் அத்வைதத்தில் கூறப்படும் பரப்ப்ரம்மத்துடன் கர்த்தரை ஒப்பிட்டிருந்தேன்.இதை கிருஸ்தவ நண்பர்களே ஏற்றுக்கொள்ளவில்லை.

///அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைக்கும் ஆதாரங்கள் பெரும்பாலும் பைபிளிற்கு எதிராகவே கிடத்க்டுள்ளது பெரும்பாலும்.///

இந்த அகழ்வாராச்சி துருக்கி பகுதியில் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா?

தேவப்பிரியாஜி அவர்களே,

திருச்சிக்காரன் அவர்களுக்கு மற்ற மதங்களுக்கு விரோதமாக வெறுப்புக் கருத்துகளை பரப்புவது பிடிக்காது. எனவே தயவு செய்து இங்கே உங்கள் விஷக் கருத்துகளை விதைக்காதீர்கள்.

திரு .ஆசாமி கூறுவது போல பிற மதங்களுக்கு எதிரான வெறுப்புக் கருத்துக்களை நமது தளம் ஆதரிக்கவில்லை. பல முறை அவற்றை மட்டுறுத்தியும் இருக்கிறோம். ஆனால் இந்த இடத்தில் திரு. தேவபிரியாஜி யின் பின்னூட்டம் ஒரு ஆராய்ச்சி கருத்து போல அமைந்து இருக்கிறது என்றே கருதலாம், அப்படி வெறுப்புக் கருத்து என்று சொல்லப் படுமபடியாக எதையும் எழுதவில்லை என நினைக்கிறேம்.

வரலாற்று அடிப்படையில் அவர் சில கருத்துக்களை முன் வைக்கிறார், அவற்றுக்கான ஆதாரங்கள் இருக்கிறதா என்பதை நானே கேட்டு இருக்கிறேன். அவற்றைத் தருகிறாரா என்று பார்க்கலாம்.

இதே தளத்தில் இராமர், கிருஷ்ணர் ஆகியோர் இருந்ததற்கான ஆதாரம் என்ன என்று சில நண்பர்கள கேள்வி எழுப்பிய போது, அதையும் நாம் வெளி இட்டு இருக்கிறோம், என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்!

பைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்?
Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8

இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல்.
இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.
1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.
2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.
3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.
4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.
5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.
6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.
7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.

வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:

Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-
The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.
Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.
சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.
கிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது.

There is no Jehovah in Hebrew Bible at all it is yhwh- origin or meaning or just speculated.

The Great Majority of readers take for Granted that Some Word Equivalent to “LORD” is in the Hebrew Text, but it is not. The Word-“Lod” is a title, not name;and not Name; and Putting it in Capital Letters does nothing to change this fact. But where the Bible Specifically has the personal name, translators should not take it upon themselves to make a substitution. The use of “Lord” instead of “Yahweh” effectively Depersonalises the Deity, turns Him into a kind of Vaugue abstaraction and rejects the repeated Emphasis in the Bible on his Unique personal relationship with Israel. It also disguises the fact tat YAHWEH is a Character in the Biblical Drama, with entrances and exis and a role to play, all assigned by the Writers.”
-Page 313 -Bible As Literature, Oxford University Press,
written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.

//”எகிப்தில் அந்த நாட்டு அப்பாவி சிறு குழந்தைகளை மட்டும் கொன்றதற்கு நன்றி சொல்ல, கர்த்தர் இருக்கும் ஒரே ஆலயமான ஜெருசலேம் வந்த போது ரோம் படைவீரர்களால் கைது செய்யப்பட்டு ரோமன் தண்டனை முறையில் மரண தண்டனையில் இறந்தார் என முடிகிறது.”‘
Can you clarify this in detail? Because to the best of my knowledge, I did not herad about that ”எகிப்தில் அந்த நாட்டு அப்பாவி சிறு குழந்தைகளை மட்டும் கொன்றதற்கு நன்றி சொல்ல, கர்த்தர் இருக்கும் ஒரே ஆலயமான ஜெருசலேம் வந்த போது”‘ so far.//

The Killing Of the Passover Lambs ranked as a Sacrifice, and the Only Place in the World where the Sacrifices could be offered according to current Jewish Law, was the Temple of Jerusalem.
Page-81, The Real Jesus F.F.Bruce

லுூக்கா: 2
.41. அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள்.42. அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப்போய்,43. பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பி வருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்
மாற்கு: 11:1. அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான
மாற்கு: 14: 1. இரண்டு நாளைக்குப் பின்பு புளிப்பில்லா அப்பஞ்சாப்பிடுகிற பஸ்கா பண்டிகை வந்தது

Leave a reply to Ashok kumar Ganesan Cancel reply

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 45 other subscribers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09