Thiruchchikkaaran's Blog

ரமதான் நோன்பு அனுபவங்கள் – 1

Posted on: August 6, 2010


ரமதான் நோன்பு அனுபவங்கள்- 1:

எந்த ஒரு மதத்தையும் ஆக்க பூர்வமாக அணுகுவது, அவற்றின் கோட்பாட்டில் உள்ள சிறந்த கருத்துக்களை புரிந்து கொள்வது, அவற்றின் பழக்க வழக்கங்களுடன் கலந்து கொள்ளுவது ஆகியவை இந்த உலகத்திலே அமைதியை , நல்லிணக்கத்தை உருவாக்கும் என்பதே அறிங்கர் கருத்து. பெரும்பான்மையான இந்தியர்கள் ஆக்க பூர்வமாகவே சிந்திப்பவர்கள் என்றும் வெறுப்புணர்ச்சி இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் நான் கருதுகிறேன்.

பள்ளிப் பருவத்திலே, கல்லூரியிலே, அலுவலகத்திலே  பிற மார்க்கத்தவருடன் கலந்து பழகும் வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது. அதை சரியாக உபயோகப் படுத்தி நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும்.

கல்லூரியில் பயிலும் போது என்னுடன் படித்த எனது முக்கிய நண்பர்களும் ஒருவர் ஷாஜஹான். அவர் ரமதான் மாதம் நோன்பை அனுஷ்டிப்பதை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் அதிக விவரங்கள் அப்போது எனக்கு தெரியாது. பின்னாளில் பணியில் அமர்ந்ததும் எனக்கு மிர்சா , அப்துல் ஆகிய இரண்டு நண்பர்களின் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் இஸ்லாமிய பழக்க வழக்கங்களைப்  பற்றி நான் பல விடயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வேன். இப்படியான நேரத்திலே ரமதான் மாதம் வந்தது. ராமதானிலே நோன்பு எடுக்க எனது நண்பர்கள் தயாரானார்கள்.

ரமதான் மாதம் நோன்பு இருப்பது இஸ்லாத்தின் முக்கிய சமயக் கடமைகளில் ஒன்று. சூரியன் உதிக்கும் முன்னரே நோன்பு ஆரம்பித்து சூரியன் மறையும் வரை நோன்பு இருக்க வேண்டும்.. ஒவ்வொரு நாளும் எப்போது நோன்பு துவக்க வேண்டும், எப்போது முடிக்க வேண்டும் என்பது பற்றிய தகவல் உள்ள அச்சு பேப்பர்கள்  கிடைக்கின்றன.

இந்த நேரத்தில் எந்த உணவையும் உண்ணக் கூடாது.  தண்ணீர் உட்பட எந்த ஒரு திரவ உணவையும் பருகக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது.

ரமதான் நோன்பு என்பது இஸ்லாமியருக்கு  ஆன்மீக முன்னேற்றத்தை தரும் ஒரு விரதமாக உள்ளது.  ஒரு கட்டுப்பாட்டை மனதில் விதித்துக் கொண்டு   அந்தக் கட்டுப்பாட்டை மீறாமல் நடப்பது  ஒருவரின் மன வலிமையை உயர்த்தும் செயலாக அமைகிறது. இது ஒரு வகையில் ஒரு வகையான  துறவு போனறது, மேலும் இந்த நோன்பை அவர்கள கடவுளுக்காக , கடவுளின் விருப்பத்தின் பேரில் கடவுளுக்கு மகிழ்ச்சியை தரும் ஒரு செயலாக கருதி செய்கின்றனர். எனவே இந்த நோன்பானது இஸ்லாமியருக்கு நோன்பு இருப்பதற்கான முனைப்பை அதிக படுத்தி சிரத்தையை உருவாக்குகிறது.

(தொடரும்)

Advertisements

5 Responses to "ரமதான் நோன்பு அனுபவங்கள் – 1"

திரு திருச்சிக்காரர் அவர்களே,

///ரமதான் நோன்பு என்பது இஸ்லாமியருக்கு ஆன்மீக முன்னேற்றத்தை தரும் ஒரு விரதமாக உள்ளது. ஒரு கட்டுப்பாட்டை மனதில் விதித்துக் கொண்டு அந்தக் கட்டுப்பாட்டை மீறாமல் நடப்பது ஒருவரின் மன வலிமையை உயர்த்தும் செயலாக அமைகிறது. இது ஒரு வகையில் ஒரு வகையான துறவு போனறது,///

நல்ல அருமையான பதிவு.அனைத்து மதத்திலுள்ள நல்லவற்றை ஏற்றுக்கொள்வோம்.

இஸ்லாம் உருவான இடமான அரேபியப் பகுதி நீர் வளமற்ற பாலை நிலமாக இருப்பதால், விவசாயம் செய்யமுடியாத காரணத்தால், அவர்கள் உணவிற்காக ஒட்டகம் போன்ற விலங்குகளையே உணவாக உட்கொள்ள வேண்டிய நிலை இருந்தது.வருடம் முழுதும் அசைவ உணவையே உண்பதால் அவர்களின் செரிமான உறுப்புக்கள் அதிக சக்தியை செலவிடுகிறது. இந்த ரம்ஜான் விரதம் இருப்பதால் ஜீரண உறுப்புக்களுக்கு ஓய்வும்,சக்தியும் கிடைக்கிறது.அதனாலேயே இந்த விரதம் ஏற்ப்பட்டிருக்கும் என்பது என் கருத்து.

சரியான நேரத்தில் அருமையா ஆரம்பித்துள்ளீர்கள்.

தொடருங்கள்….

இப்போது மெயில் செய்வதே இல்லையே? ஏன்??? பாலே செய்யலாம் என்று பார்த்தாலும் இது பிலாக்கர் இல்லை.

Dear Masthanji,

Yes, Ramadan willl start in a weeks time.

Regrading the articles, I request you to make e- mail subscription , all the new articles will be informed to you automatically .

The provision for e- mail subscription is on the left column.

Kindly make an e- mail subscription for yourself.

ஆமாம் தனபால் சார், இருக்கலாம்…

இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள்: ரமலான் ஸ்பெஷல்

http://gullah.wordpress.com/2010/08/21/ramadan/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: