Thiruchchikkaaran's Blog

குடும்பமே கொத்தாக தூக்கில் தொங்கி அதிர்ச்சி மரணம் – மூட நம்பிக்கை காரணமா ?

Posted on: July 8, 2018


தலை நகர் டில்லி புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் ஒரே நேரத்தில் வீட்டில் கூரையில் உள்ள இரும்புக் கம்பியில் தூக்கிட்டு மரணம் எய்தி யுள்ளனர் . இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது இந்த சோக நிகழ்வு.

இந்த செய்தியைக் கேள்விப்பட்டவுடன் எதனால் இவர்கள் இப்படி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்? தாங்க முடியாத கடன் சுமையா? கந்து வட்டி மிரட்டலா? அல்லது ஆதாயத்துக்காகவோ விரோதத்தினாலோ யாராவது பலவந்தமாக தூக்கில் மாட்டி தொங்க விட்டு கொலை செய்தனரா என்ற எண்ணம் பலருக்கும் தோன்றியது. நடந்தது என்ன?

பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்திகள் வருமாறு:

தாயார் நாராயண தேவி , அவரது மகன்கள் லலித் பாட்டியா,  பவனேஸ் பாட்டியா, மகள் பிரதிபா மற்றும் இவர்களின் பிள்ளைகள் உட்பட 11 பேர் ஒன்றாக ஒரே வீட்டில் தலை நகர் டில்லி புராரி பகுதியில் வசித்து வந்தனர். வீடு முதல் தளத்தில் இருக்க, தரைத்தளத்தில் ஒரு மாளிகைக்கு கடையும், ஒரு பிளைவுட் கடையும் வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

இவர்களின் தந்தையும் , குடும்பத் தலைவருமான போபால் பாட்டியா 10 வருடங் களுக்கு முன் இறந்து விட்டார். அவரை இழந்து தடுமாறிய குடும்பம், வழிகாட்டுதலின்றி  பிரச்சனைகளை சந்தித்துள்ளது.

இந்த நேரத்தில் லலித் பாட்டியா பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி, இறந்த தந்தையுடன் ஆவியுடன் தொடர்பு கொள்வதாக சொல்லப் படும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். தந்தை தன்னுடன் பேசுவதாகவும் தனக்கு அறிவுரை தருவதாகவும் அவர் குடும்பத்தினர் அனைவரிடமும்  சொல்லி வந்து இருக்கிறார்

பொருளாதார பின்னடைவில் இருந்து விடுபட்டு இன்னும் அதிக கடைகள் என வியாபாரத்தில் முன்னேற்றம் எனக் குடும்பம் முன்னுக்கு வர, தான் தந்தையுடன் பேசியதால் அவர் அறிரையின் பேரில் செயல் பட்டதால் தான் வாழ்க்கையில் சிறப்பு வந்ததாக .குடும்பத்தின் அனைவரும் முழுமையாக நம்பம் நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறார்.

தன்னுடைய சடங்கு வழிபாட்டில் குடுமபத்தினர் அனைவரும் கலந்து கொள்ளும் நிலையை உருவாக்கினார். லலித் பாட்டியாவின் சகோதரி மகள் பிரியங்காவிற்கு ” செவ்வாய் தோஷம் ” இருந்ததால் திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைப்பதில் சிக்கல் இருந்தது. பிரியங்காவிற்கு மாப்பிள்ளை கிடைத்து நிச்ச்சயதார்த்தமும் நடந்தது.

தன்னுடைய சடங்கு வழிப்பாட்டினால் தான் பிரியங்காவிற்கு வரன் கிடைத்தது என்றும், நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆவிகளுக்கு ஆலமர விழுதுகள் வடிவில் தொங்கி நன்றி செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். அனைவரும் கையையும் வாயையும் கண்ணையும் கட்டி க் கொண்டு ஆலமர விழுதுகள் போல தூக்கில் தொங்க வேண்டும் என்றும்  என்றும் சடங்கு அமைக்கப் பட்டது.

ஆனால் தங்கள் மரணிப்போம் என்று அவர்கள் கருதவில்லை, தூக்கில் இட்டுக் கொண்டவுடன் கொண்டவுடன், ஆவிகள் வந்து தங்களைக் காப்பாற்றி, தங்கள் இன்னும் அதிக வலிமை உடையவர் ஆக்கப் படுவோம் என்று நம்பினார்.சடங்கு முடிந்தவுடன் ஒருவர் மற்றவரின் கைக் கட்டுகளை அவிழ்க்க உதவ வேண்டும் என்று குறிப்பு எழுதி உள்ளனர்.  மறுநாள் காலை உணவுக்கு பருப்பு வூரப் போட்டு வைத்திருந்தனர்.

மொத்தத்தில் நிரூபிக்கப் படாத ஒன்றின் மேல் நம்பிக்கை வைத்து தன் மொத்த குடும்பமும் தற்கொலை செய்யும் நிலையை உருவாக்கி விட்டார் , லலித் பாட்டியா

 

மத்திய மாநில அரசுகள் சரியான கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து சுய நம்பிக்கையை வளர்த்து, மூட நம்பிக்கையை மனதில் புகை விடாத கல்வியைத் தராத வரையில் இந்தியா வில் தாந்திரீக, மாந்திரீக இன்ன பிற occult practices நீங்குவது கடினமே.

 

 

https://www.hindustantimes.com/delhi-news/burari-diaries-what-happened-in-the-house-where-11-of-family-were-found-dead/story-kUa5qSZhyNXQotEzPApHeL.html

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 40 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: