Thiruchchikkaaran's Blog

ஒவ்வொரு தொழிற்சாலையாக மூடுங்கள்… நாங்கள் பிச்சை எடுக்கப் போகிறோம்….

Posted on: May 29, 2018


குடிக்கக் கஞ்சி இல்லாமல் குழந்தைகள் அழுகையில், கையில் முகத்தைப் புதைத்து நிலை குலைந்திருப்பான் அப்பாவி ஏழை..அவனைக் காணும் போது உள்ளத்தில் அப்படி ஒரு உணர்ச்சி பொங்கி அந்த ஏழையின் துயர் துடைக்க வேண்டும் என்று எண்ணுவான் பாருங்கள் –  அவன்தான் சரியான கம்யூனிஸ்ட்!

நாங்கள் மாணவராக இருந்தபோது “கம்யூனிஸ்ட் என்றால் ஆட்குறைப்பு , ஆலை மூடலை எதிர்த்து போராடுவது” என்பதுதான் அறியப் பட்டது.

கல்லூரி முடித்து பணியில் சேர்ந்தோம். நான் ப்ராஜெக்டில் பணியில் இருந்ததால் இயந்திரத்தின் ஒரு பகுதியை வாங்க ஆலைக்கு சென்று இருந்தேன். தொழிற்சாலையை சுற்றி வேடிக்கை பார்த்தேன் சிலர் வேலை செய்யாமல் பேசிக் கொண்டே நின்றனர் . சிறுது நேரம் ஆயிற்று . ஒரு பெரியவர் வந்தார். அங்கே வந்து மேலாளர்களைப் பார்த்து பேசி விட்டு வெளியே வந்தார். பேசிக் கொண்டிருந்தவர்களைக் கூப்பிட்டார் , “இன்னுமா பேசிக்கிட்டே இருக்கீங்க, வேலையை பாருங்கப்பா ..இந்த வேலையை விட்டா உங்க குடும்பத்தை யாரு காப்பாத்துவாங்க” என்றார். அவர் தான் தோழர்  திரு V P சிந்தன். இதில் வருத்தம் என்னவென்றால் அந்த ஆலை நஷ்டத்தை தாங்காமல் மூடி விட்டது. அவர் சொன்ன மாதிரியே வேலையற்று தவிக்கும் நிலை உருவானது. ஆனால் தோழர்  திரு சிந்தன் அந்த நேரத்தில் மறைந்து விட்டார்.

தொழிற்சாலை இல்லாவிட்டால் எங்களுக்கு வாழ்வு ஏது ?

பள்ளிக்கு அடுத்த இரண்டாம் வீடு எங்களுக்கு தொழிற்சாலைதான். ஆலையின் சங்கு எங்கள் செவிக்கு இனிய நாதம்! ஆலையின் இயந்திரங்கள் , அதில் இருக்கும் மரங்கள் , எப்போதும் மாறாமல் மூலையில் இருக்கும் டிரம், தொழிற்சாலையின் ஒவ்வொரு இன்ச்சும் எங்களுக்கு அத்துப்படியான ஸ்நேகிதங்கள். அந்த ஆலையை மூடினால், எங்கள் வாழ்க்கையும் முடியதுதான்.

கழிவுகளை சுத்திகரித்து வெளியேற்று என்றால் நியாயம். ஆலையையே மூடு என்றால், இதில் உள்(ள )நோக்கம் என்ன? 

கம்யூனிசத்தை சரியாகப் புரிந்த கொண்டவர் எவரும் ஆலையை மூடு என்ற வார்த்தைக்கு கேட்டவுடன் வெகுண்டெழுந்து ஆலையை நடத்து என்று சொல்வாறாயல்லாமல் தாங்களும் சேர்ந்து ஆலையை மூடு என சொல்ல மாட்டார்கள் .

 

 

 

 

 

 

 

Advertisements

1 Response to "ஒவ்வொரு தொழிற்சாலையாக மூடுங்கள்… நாங்கள் பிச்சை எடுக்கப் போகிறோம்…."

பொதுவா பார்க்காமல் கள நிலவரபடி பாருங்கள், இந்த ஆலைக்கு முதலில்லிருந்தே எதிர்ப்பு மிகுதி, பாதிப்பும் மிகுதி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 41 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: