Thiruchchikkaaran's Blog

அப்ப, இஸ்லாமிய சகோதரர் “வந்தே மாதரம்” பாடித்தான் ஆகனும்னு கட்டாயப் படுத்தக் கூடாது, சரியா ராஜா ஜி?

Posted on: January 28, 2018


//நிற்க , இப்ப நம்ப விஜெயேந்திராள், தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது, அவாளும் சேர்ந்து பாடாம கண்ணை மூடிண்டு உட்கார்ந்து இருந்துட்டா. அது தியானம் என்று  மடம் அபீசியலா டிக்ளேர் பண்ண ,  அதுதான் மிகச் சிறந்த மரியாதை என்றும் பல பரிவார எழுத்தாளர்கள் சொல்ல- அப்ப அதே ரூல் தான் இஸ்லாமிய சகோதரருக்கும் அப்ளை ஆகும்//

வந்தே மாதரம்”  இந்தப் பாடலைக் கேட்கும்போதே,   முழு நிலவு தன்னொளி வீச, நறுமண மலர் பூத்த சோலையில்  நடந்து செல்லும் அமைதி உண்டாகும். ஒரே நேரத்தில் இனிமையையும் நம்பிக்கை உணர்வையும் மனதில் அள்ளித் தெளிக்கும் பாடல் இது, நம் நாட்டின் மீதான பெருமிதத்தை வெளிப்படுத்தும்.

இது என்னுடைய அனுபவம் . இதே எண்ணம் எல்லாருக்கும் வரும் என நான் எதிர்பார்க்க முடியாது. இந்தப் பாடலை எல்லோரும் பாடித்தான் ஆக வேண்டும் என நான் சொன்னால் அது   நாகரீகமாக எனக்குப் படவில்லை. இந்தப் பாடலைப் பாடுவதற்கு இஸ்லாமிய சகோதரர்களில் பலருக்கோ சிலருக்கோ சங்கடங்கள் இருக்கலாம்.

அதை இந்துவாக இருந்து நான் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். இஸ்லாமிய சிந்தனைகளில் மனம் ஆழமாக செல்லும் போதுதான் அதை என்னால் உணர முடியும்.

இஸ்லாமின் மிக முக்கிய கோட்பாடு “வேறு கடவுள் இல்லை, அல்லா ஒருவர்   மட்டுமே கடவுள்” என்பதாகும். “முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) கடவுளின் கடைசி தூதுவர்” என்பதும் அவர்களின் முக்கிய கோட்பாடாகும்.

இந்திய ஆன்மீக வாதிகள் எந்த ஒரு பொருளை எடுத்துக் கொண்டாலும்,  அது நிலையானதா, நிலையற்றதா (அநிக்கா, நிக்கா – அநித்யா, நித்யா) என்று இந்த இரண்டில் எந்த ஒன்று என்று பிரித்துப் பார்ப்பார்கள்.

ஆனால் இஸ்லாத்தில் இரண்டாகப் பிரிப்பது- படைத்தவன் – படைப்பு- என்பதாகும். எல்லாவற்றையும் படைத்தவன் ஒருவனே, அவனைத் தவிர மிச்ச எல்லாம் வெறும் படைப்புகளே என்று பிரித்துப் பார்ப்பார்கள். அப்படி எண்ணும் போது படைத்தவன் மீது அவர்களுக்கு மனதில் அந்த அளவு ஒரு அன்பும் மரியாதையும் , பக்தியும், மட்டுமல்ல அச்சமும் வரும். இவ்வளவு சிறப்புகளை உடைய படைத்தவன் ஒருவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவனாவான்.

மற்ற எதற்கும் வணக்கம் செலுத்துவது அவசியமில்லாதது, தகுதியில்லாதது, தவறானது, குற்றம், மிகப் பெரும் பாவம் என்பது இஸ்லாமியர்கள் உறுதியாக நம்பும் கோட்பாடு

அது மட்டும் அல்ல, ஏக இறைவனான அல்லவைத் தவிர மற்றொருவரை வணங்கினால் இறைவனுக்கு இணை வைத்த ஷிர்க் குற்றம் செய்தவர் ஆவர்.

அதற்க்கு தண்டனை என்னவென்றால் மறுமையில் நரகத்தில் அவர்கள் தோல்கள் கருக்கப் படும். புதிய தோல்கள் தரப்பட்டு அந்த தோலும் கருக்கப் படும்.மறுமையில் நரகத்தில் இருக்கும் நெருப்பானது, இங்கே இருக்கும் நெருப்பை போல அறுபது மடங்கு கொதிப்பாக இருக்கும். இதை எல்லாம் அப்படியே அப்பட்டமான உண்மையாக கருதி இறைவனுக்கு அஞ்சி வாழ்வது இஸ்லாம் ஆகும். 

இந்த வாழ்க்கை கொஞ்ச வருடம் , மறுமை வாழ்க்கை முடிவில்லாததது அப்ப முடிவில்லாதா நரக நெருப்பில் உடல் தினமும் கருகுமோ என்று அஞ்சிக் கொண்டு இருப்பவர்கள் பலர். என்னிடத்தில் வந்து உன்னை  நெருப்பில் கருக விட மாட்டேன் என்று அவர்கள் சொல்லும் போது , எனக்கே ஒரு வேளை இவங்க சொல்றது உண்மையா இருந்துட்டா என்ன ஆகும் என்கிற அச்சம் கண நேரம் தோன்றியது என்றால் அவர்களுக்கு எப்படி இருக்கும்?

இவர்களிடம்  போய் வந்தே மாதரம் பாடச் சொல்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இஸ்லாமியரின் மன நிலை என்ன என்று தெரியவில்லை என்றுதான் அர்த்தம். அப்படி அவர்களை கட்டாய படுத்தி வேறு வழியில்லாமல் பாட வைப்பதால் இவர்கள் அடைவது என்ன?

அதற்கு பதில் “நாம எப்படி அல்லாஹுத்த  ஆலாவை  மதிக்கிறோமோ அப்படித்தான் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவையும், பரமபிதாவையும், (கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மேரி மாதாவையும்) , இந்துக்கள் முருகன், சிவன், விஷ்ணு …உள்ளிட்ட பல கடவுள்களை மதிக்கிறார்கள். இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் தான் நம்பும் நம்பிக்கையின் படி நடக்க விடுவதுதான் நாகரீகம், பிற மதக் கடவுள் வழிபாட்டை வெறுக்காமல் மதிக்க வேண்டும்என்கிற நல்லிணக்க மனநிலையை இஸ்லாமிய சிந்தனையாளர்கள் பெற்று அதை பிரச்சாரம் செய்தால் அனைவரும் அவர்களை ஆரத் தழுவுவர். இந்த பிரச்சாரத்தை இந்திய இஸ்லாமிய சிந்தனையாளர்கள் மற்ற நாட்டுக்கும் பரப்பினால் உலகம் முழுமைக்கும் நல்லது. இதற்கான கல்வித் திட்டத்தை உருவாக்க வேண்டும். பள்ளிகளில் எல்லா மதத்தினரின் வழி பாட்டுத் தலங்களையும் சிறிய அளவிலாவது கட்டுங்கள். பெரியாரின் சிலையும் வைத்து கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் இடம் கொடுங்கள். இது நாகரீகம், பண்பாட்டை உருவாக்கும்.   மத, இன , மொழி, வர்க்க, சாதி பேதங்களை விட்ட நட்பை உருவாக்கும்.

இதைச் செய்யாமல், வந்தே மாதரம் பாடுங்கள் என்று கட்டாயப்படுத்தி என்ன பலன்? அவர்கள் “படைத்தவனை வணங்குங்கள் , படைப்புகளை வணங்காதீர்கள்” என்று அவர்களுக்கு தெரிந்ததை பேனராக எழுதி வைத்துக் கொண்டு இருப்பார்கள். அது மட்டும் அல்ல, இவன் என்ன சொல்றது, நாம என்ன கேட்கிறது, இவன் என்ன கடவுளின் தூதுவனா என்கிற ஆவேசமும் அவர்களுக்கு வரக் கூடும்!

நிற்க , இப்ப நம்ப விஜெயேந்திராள், தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது அவாளும் சேர்ந்து பாடாமல் கண்ணை மூடிண்டு உட்கார்ந்து இருந்துட்டா. அது தியானம் என்று  மடம் அபீசியலா டிக்ளேர் பண்ண  , அதுதான் மிகச் சிறந்த மரியாதை என்றும் பல பரிவார எழுத்தாளர்கள் சொல்ல, நம்ப அஞ்சா நெஞ்சன் அடலேறு ராஜா ஜி யும் அதையே சொல்லிட்டார். அப்ப அதே ரூல் தான் இஸ்லாமிய சகோதரருக்கும்  அப்ளை ஆகும்.

அதனால நம்ப ராஜா உடனடியாக பரிவார இயக்கங்கள் அனைவரிடமும் சொல்லி இனிமேல் வந்தே மாதரம் பாடச் சொல்லி யாரையும் கட்டாய படுத்தக் கூடாது என்று பரிவாரங்களின் கட்டப் பஞ்சாயத்து கெஜட்டில் வெளியிட வேண்டும்.

இன்றைக்கு விஜேயேந்திராள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிக்காமல் கண்ணை மூடி உட்கார்ந்து இருந்ததும், அதற்க்கு மடம் கொடுத்த விளக்கமும் எல்லாருக்கும் செல்லும் அண்ணா !

 

 

Advertisements

3 Responses to "அப்ப, இஸ்லாமிய சகோதரர் “வந்தே மாதரம்” பாடித்தான் ஆகனும்னு கட்டாயப் படுத்தக் கூடாது, சரியா ராஜா ஜி?"

மறுமை , கருக்கல் எல்லாம் இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் மட்டும் தான் காட்டுவார்கள்
.
ஆனால் இஸ்லாமிய நாடுகளில் தேசிய கீதம் இசைக்கும் போது அந்நாட்டு மக்களும் , இந்தியாவில் இருந்து வேலைக்கு போன இஸ்லாமியர்களும் எழுந்து நின்று மரியாதையை செய்வார்கள்
.
இதே இஸ்லாமியர்கள் ஸ்ரீலங்கா , சிங்கப்பூர் போனால் அதே எழுந்து நிப்பது நடக்கும்
.
இந்தியாவில் தான் இந்த மத நம்பிக்கையை காரணம் காட்டுவார்கள் ..
உண்மையில் அவர்களுக்கு இருப்பது இந்திய வெறுப்பு / காழ்ப்பு மட்டுமே

எங்கள் பகுதியில் இப்போது நடந்த குடி அரசு தின விழாவிற்கு வந்திருந்த பல இஸ்லாமியர்கள் தேசிய கீதம் பாடும் போது எழுந்து நின்றார்கள்!

//உண்மையில் அவர்களுக்கு இருப்பது இந்திய வெறுப்பு / காழ்ப்பு மட்டுமே// இது மிகத் தவறான கருத்து. அபாயமான விஷக் கருத்துக்களை உங்கள் மனதில் யாரோ புகுத்தியிருக்கிறார்கள்.

என்னுடைய கமெண்ட் உங்களுக்கு தவறான கருத்தை புகுத்தி இருக்க வேண்டும்
அனைத்து இஸ்லாமியர்களும் தேசிய கீதத்தை அவமதிக்கின்றார்கள் என்று கூறவில்லை
ஆனால் இன்று தேசிய கீதத்தை மதிக்க தேவையில்லை என்று உறுதியாக கூறும் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது
காரணம் தவ்ஹீத் ஜமாஅத் போன்ற தீவிர வாத கருத்துக்களை பரப்பும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் எண்ணிக்கையும் , அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதே
.
மத நம்பிக்கைக்காக செய்கின்றார்கள் என்றால் அவர்கள் இஸ்லாமிய நாடுகளிலும் அந்த கொள்கையை பின்பற்றி இருக்க வேண்டும்
.
சரி ஸ்ரீலங்காவிலாவது அதை பின்பற்றி இருக்க வேண்டும் … அங்கேயும் நடப்பதில்லை
ஆனால் இந்தியாவில் தேசிய கீதத்தை மதிக்க முடியாதது என்று கூறும் இஸ்லாமிய எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 43 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: