Thiruchchikkaaran's Blog

குருவுக்கு பாத சேவை, பெர்சனல் சேவை செய்ய வேண்டியது அவசியமா?

Posted on: August 2, 2012


குருவுக்கு பாத சேவை, பெர்சனல் சேவை செய்ய வேண்டியது அவசியமா?

 

குரு என்ன காட்டுக்குப் போய் மரம்  வெட்டி கட்டு  கட்டாக தூக்கி வந்து  போட்டாரா? இரும்பு கர்டர்களை தூக்கி பொருத்தினாரா? ஜல்லியிலும் தாரிலும்  நின்று ரோடு போட்டாரா? என்ன வெட்டி முறித்து இவர்களுக்கு கால் வலி வந்து  விட்டது, கால் பிடித்து விட்டு பாத சேவை செய்ய வேண்டிய அளவுக்கு?

 

இருநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த குரு மார்கள் தங்கள் சீடர்களுடன்  கால்நடையாகவே சுற்றி வந்தனர்.அந்தக் கால கட்டத்தில் மோட்டார் காரோ,  விமானமோ கிடையாது. அரசர்களும் பிரபுக்களும் குதிரைகளை உபயோகப்  படுத்துவார்கள். கிராமத்திலே பண்ணையார் கூட மாட்டு வண்டி தான்.

சாமானியர்கள் கால் நடைதான். குடும்பஸ்தரே இப்படி என்றால் துறவி கால் நடை  தான்.  எனவே வயதான குரு கால் வலி இருக்குமோ என்றெண்ணி அவர் உறங்கும் முன்  அவரது சீடர் கால் பிடித்து விட்டு இருக்கக் கூடும்.

 

இன்றைய கால கட்டத்தில்  “குருமார்கள்” “சுவாமிகள்” “ஜீவன் முக்தர்கள்”  பலருக்கு  லேக்சஸ் / மெர்சடிஸ் கார்கள் எல்லாம் சர்வ சாதாரணம் .  விலை  உயர்ந்த  லக்சுரி காரிலே வந்து இறங்குகிறார்கள். வெல்வெட்  பஞ்சு வைத்த

உயர்ந்த சிம்மாசன சேரில் உட்கார்ந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்கள்.

 

இவர்களுக்கு எதற்கு கால் பிடித்து விட வேண்டும் என்று எதிர்க் கேள்வி  கேட்க கூட முடியாத மன நிலைக்கு ஒருவர் வரும்படி செய்ய    குரு தான்  தெய்வம், அவருக்கு சேவை செய்வது நமக்கு கிடைக்கும் பாக்கியம், அவருக்கு பாத சேவை செய்யும் வாய்ப்பு  கிடைப்பது நாம் பூர்வ ஜென்ம த்தில் செய்த  புண்ணியம் என்ற ரீதியில் ஓவர் பில்டப்பை கூச்சமில்லாமல் அவிழ்த்து  விடுகிறது ஜால்ரா கோஷ்டி.

 

சில பல குடும்பங்களில் பெற்றோரே தங்கள் குழந்தைகளிடம் சிறு வயதிலேயே இந்த

மாக்த்மியத்தை ஆரம்பித்து வைக்கின்றனர்.பத்திரிகைகள் யாரையாவது புகழ்ந்து

எழுதினால், அதை அப்படியே நம்பி, காலில் விழ தயார் ஆகி விடுவார்கள். இவர்

அப்படி , இப்படி என்று இன்னும் அதிகமாக பில்டப் கொடுப்பார்கள். இதிலே

முன்னணியில் நிற்பது அவாள் தான்.  சுவாமி, குரு என்ற பெயரில் காவி

கட்டிக் கொண்டு யார் வந்தாலும் அங்க வஸ்திரத்தை அவிழ்த்து இடுப்பில்

கட்டிக் கொண்டு, நேடுஞ்சான் கிடையாக காலில் விழுகின்றனர்.

 

பத்திரிகைகள் யாரையாவது புகழ்ந்து எழுதினால், அதை அப்படியே நம்பி, காலில்

விழ தயார் ஆகி விடுவார்கள். இவர் அப்படி , இப்படி என்று இன்னும் அதிகமாக

பில்டப் கொடுப்பார்கள். இதிலே முன்னணியில் நிற்பது அவாள் தான்.

இவர்களிடம் எஞ்சி நிற்கும் ஆன்மிகம், காலில் விழுவது, குரு என்ற

பாவனையில்  ஒருவரையாவது, பலரையாவது தேர்ந்து  கொண்டு, அவர்கள் எது

செய்தாலும் சரியாகத் தான் இருக்கும் என்று வாதாடி சப்போர்ட் செய்வது…

இது போன்றதுதான். கணினி கல்வி, அறிவியல், பைனான்ஸ், இசை,

நாட்டியம்..இப்படி பல  துறைகளையும் நன்கு கற்று தங்கள் திறமையை

வெளிப்படுத்தும் இளைங்கர்களும், யுவதிகளும் ஆன்மீகம் என்றால் என்ன என்று

தெரியாமல் வளர்க்கப் படுகின்றனர். பணம் சம்பாரிக்க வேண்டும் என்கிற

உணர்வை பெற்றோர்கள் வூட்டுகின்றன்றே அல்லாமல் சரியான ஆன்மீகத்தை

பிள்ளைகளுக்கு  சொல்லித் தருவதில்லை- சில  பல பெற்றோர்களுக்கே    தெரியாத

நிலை.

 

இந்த அறியாமையை புரிந்து கொண்ட சிலர் தங்களை ஆன்மீக வாதிகளாக

சித்தரித்துக் கொள்வதில் வெற்றி பெறுகின்றனர். தன்னை சந்திக்க வரும்

ஒருவர் தன்னிடம் எந்த அளவுக்கு பணிந்து போவான் என்று கணிக்கின்றனர். தான்

எது சொன்னாலும் அப்படியே நம்பி, தான் இடும் கட்டளையை நிறைவேற்றத் தயங்காத

அளவுக்கு அவரை  ஆன்மீகத்தின் பேரால்  . தன்னையே கடவுளாக கருதக் கூடிய

நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.

 

இந்த நேரத்தில் நான் சுவாமி, குரு என்னைப் பற்றி பலரிடமும் எடுத்து

சொல்லி பலருக்கும் நீ நன்மை செய்ய வேண்டும் என்று ஆக்குகின்றனர். அவாளும்

பலரிடமும் சென்று இவர்தான் கலியுகக் கடவுள், கண் கண்ட தெய்வம், நமக்கு

முக்தி கிடைக்கும் என்று சொல்லி உண்டியலையும் குலுக்குகின்றனர்.

 

இந்த நிலையில் பகுத்தறிவு சிந்தனை சிறிதாவது இருக்கக் கூடியவரகா

இருந்தால் எந்த அடிப்படையில் இதை சொல்கிறீர்கள் என்று எதிர்க் கேவி

கேட்பார். ஆனால் பலர் அப்படி எதிர்க் கேள்வி கேட்பது இல்லை. ஏனெனில்

இப்படி குரு/ சுவாமிகளின் புகழை பிரச்சாரம் செய்பவர் பெரும்பாலும்

அவருடன்  பணியாற்றும் சக வூழியராகவோ, நண்பராகவோ இருப்பார். தன்னுடைய சக

வூழியர் / நண்பர் ஒருவரை உயர்வாக சொல்லும்போது அவரை எதிர்த்துக் கேள்வி

கேட்பது நண்பரைப் புண்படுத்தக்  கூடும் என்ற எண்ணத்தில் சிரித்துக்

கொண்டே அவர்கள் சொல்வதைக் கேட்கின்றனர். நீ சொல்லுறதை பார்த்தா இந்த ஆள்

டுபாக்கூர் மாதிரி இல்லை இருக்குது … என்று சொல்லத் தயங்குகின்றனர்.

 

(தொடரும்)

Advertisements

2 Responses to "குருவுக்கு பாத சேவை, பெர்சனல் சேவை செய்ய வேண்டியது அவசியமா?"

திருச்சிக்கார நண்பா,
எதைக் கற்பதாக இருந்தாலும் ஒரு குரு வேண்டும். தகுதியான குருவை தேடுவது அவரவர் பொறுப்பு. உங்களுக்கு சன்யாசிகளுடன் பழகி பழக்கம் இல்லை என்று நினைக்கிறேன். ஆன்மீகத்துக்கு வழிகாட்ட சுவாமி விவேகானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரை குருவாக ஏற்றுக்கொண்டார். பத்திரகிரியார் பட்டினத்தாரை ஏற்றுக்கொண்டார். இல்லற வாசிகள் தவறான போலி சன்யாசிகளிடம் ஏமாறக்கூடாது என்று சொல்லலாமே தவிர குருவாக ஏற்றுக்கொண்டவரை புஜிப்பது தவறு என்று சொல்லக்கூடாது. மாதா, பிதா, குரு தெய்வம் என்று சொல்லப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட சாமியார்களை மனதில் வைத்துக்கொண்டு இப்படி கட்டுரை போடாதீர்கள்.

என்ன நண்பா,
என் கருத்தை வெளியிடவில்லை. உண்மை சுட்டுவிட்டதா? விவேக் பாணியில் ஓவராக நையாண்டி செய்யாதீர்கள். குரு சிஷ்ய உறவு முறையில் அதுவும் ஆன்மீகத்தில் சில விஷயங்களை தகுதியில்லாத சிஷ்யர்களுக்கு சொல்லிக்கொடுக்கக்கூடாது. அதாவது மாந்திரீகம் போன்றவைகளை. குருவுக்கு பணிவிடை சிஷ்யன் செய்யும்பொது அவனுடைய மனநிலை, பணிவு எல்லாவற்றையும் அறிந்து அவனுடைய தகுதிக்குரியதை அவனுக்கு சொல்லிக்கொடுப்பார். திருக்குறுங்குடி சிவாசாமி அவர்களிடம் நான் அடிக்கடி செல்வேன். அவரிடம் ஒரு சிஷ்யர் இருந்து தொண்டு செய்தார். ஆனால் சிஷ்யரின் நோக்கம் மாந்திரீகங்களை கற்றுக்கொள்வது. ஒரு சிறு சோதனையில் அந்த சிஷ்யர் மாந்திரீகத்தை பிறரைக் கெடுப்பதற்காக செய்வார் என்று அறிந்தவுடன் அவர் அந்த சிஷ்யருக்கு சொல்லிக்கொடுப்பதை நிறுத்திவிட்டார். அந்த சிஷ்யரும் அதன் பிறகு விலகிச் சென்றுவிட்டார். இதை நேரடியாக அறிவேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: