Thiruchchikkaaran's Blog

குருபிரம்மா, குருவிஷ்ணு…..குரு..தேவோ…மஹேஷ்வரஹ்

Posted on: July 20, 2012


பல பெண்களுடன் காம சுகம் அனுபவிக்கவும், பல்லாயிரம்  கோடிகளை குவிக்கவும்  விரும்பவோர், தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற சந்நியாசி போல வேடமிடுவது தொன்று தொட்டு நடந்து வந்தாலும் இன்றைய கால கட்டத்தில் கொஞ்சம் ஓவராகவே நடை பெறுகிறது.

இத்தகைய போலி  சந்நியாசிகள்  பெண்களை தங்கள் காம இச்சைக்கு உடன்பட செய்யுமாறு வற்புறுத்த உபயோகப் படுத்தும் டெக்னிக்களுள்  ஒன்றா    ” குரு சொல்வதை  தட்டாமல் கேட்டு நடக்க வேண்டும்”   என்கிற கோட்பாடாக இருக்கிறத

 இந்திய சமுதாயத்தில் ஆசிரியருக்கு எப்போதும் அதிக மதிப்பு உண்டு. வாழும் வகையை , முறையை ஆசிரியர் பயிற்றுவிக்கிறார். எண்ணென்ப எனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்றார்.   எனவே எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று சொன்னார்கள். அன்று எழுத்தறிவித்தவர் கண்ணியத்துடனும், மாணவனின் நலம் கருதி வாழபவராகவும் இருந்தனர். 

அதிலும் ஆன்மீக  குரு ிகவும் மரியாதையுடனும் வணக்கத்துடனும் நடத்தப் பட்டனர்.  எந்த ஒரு உண்மையை அறிந்தவுடன் எல்லா ஐயங்களும் தீருகிறதோ அந்த ஒரு மகத்தான உண்மையை உணரச் செய்பவராக குரு கருதப்பட்டார்.

எந்த ஒரு உண்மையை அறிந்தவுடன் எல்லா ஐயங்களும் தீருகிறதோ அந்த ஒரு மகத்தான உண்மையை உணரச் செய்பவராக கு ரு  கருதப்பட்டார் . எந்த ஒரு உறவோ தொடர்போ இல்லாத ஒரு மாணவனுக்கு இவ்வவளவு சிறப்பான கல்வி தரும் கு ரு  உண்மையிலே எ மதிப்புக்கும், மரியாதைக்கும், வணக்கத்துக்கும் உரியவர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் கு ரு போல வேடம் இடுபவர் இந்த  வணக்கத்தை தவறாக பயன் படுத்தி விடுகின்றனர். 

ஒரு பொழுது உணவை மட்டும் பெற்றுக் கொண்டு இந்தியாவில் துறவிகள் மிகச் சிறந்த ஆன்மீக அறிவை வழங்குகின்றனர் என்றார் சுவாமி விவேகானந்தர் . ஆனால் இன்றைக்கு தங்களை ஆன்மீக வாதிகள்லாக சொல்லிக் கொள்ளும பலர் “ஆன்மீக”  செல்வாக்கின்  மூலம் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆகி விடுகின்றனர் 

இந்து மத்தில் குருவுக்கு வழங்கப் படும் அளவுக்கு மற்ற மார்க்கங்களில் இல்லை. இஸ்லாத்தில் இறைவனும் , இறைவனின் தூதரும், அவர் மூலமாக இறைவன் தந்த திரு   குர் ஆன்  இவையே முக்கியம். யாரும் நான் தான்  குரு  என்று தனக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொள்ள இயலாது. 

ஆனால் இந்தியாவில் கு ரு கான்செப்ட் முக்கிய இடம் பிடித்த்து விட்டது.  இதை உணர்ந்த சிலர் இதை தங்களுக்கு வாய்ப்பாக உபயோகப் படுத்திக் கொள்கின்றனர். உபநிடதங்கள் , கீதை போன்ற தத்துவ நூல்களை படித்து விட்டு,  அவறறில் கூறப் பட்டுள்ளவற்றை மக்களுக்கு சொல்லுகின்றனர், அதோடு நில்லாமல் மிக உயர்ந்த ஆன்மீக நிலையை தாங்கள் அடைந்து விட்டதாக எடுத்து விடுகின்றனர். கூட்டம் கூடுகிறது, பணம் குவிக்கிறது.

இந்த நிலையில் பணமும் செல்வாக்கும் இருக்கும் நிலையில் ஆனால் மனத்திலே காம ஆசை குறையாத  நிலையில் பல்வேறு கவலைகளுடனும் ,பக்தியுடனும் தன்னிடம் வரும் பெண் கலை காணும் போ து, துறவி வேடமிட்ட ஆன்மீக வாதி ஆவேசம் அடைகிறான், காம வெறி தலைக்கு ஏறுகிறது, தன்னிடம் இருக்கும் பணத்தின் மூலம் பெண்களை தன் இச்சைக்கு இணங்க வைக்க முயல்கிறான். “மாபெரும்” துறவியிடம் இப்படி காம தாக்குதலை எதிர்பாராத பெண்கள் எதிர்ப்பு காட்டும் போது, நான் சொல்ற படி நடந்தால்தான் ஆன்மீக உயர்வு கிடைக்கும் என்று சொல்லி அவர்கள் அதிர்ச்சியிலும் குழப்ப  வைத்து தன விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறான். 

இதில் இருந்து பெண்களை  காப்பது  எப்படி  ?

போலி சாமியாராக வாழ்ந்து  பில்லியன் கணக்கில் பணம் குவிப்போருக்கு புகழ் பாடும் துதி பாடிகளின் ஜால்ராவுக்கு எதிராக பகுத்தறிவு பிரச்சாரத்தை முடுக்கி விடுவது சிந்தனையாளர்களின் முக்கிய கடமை ஆகும்.

குரு தான் எல்லாம். குரு  இல்லாவிட்டால் ஆன்மீக உயர்வு அடையவே முடியாது என்று சொல்பவர்களிடம்   – அப்படி எதுவும் கீதை போன்ற நூல்களில் இருக்கிறதா என்று கேட்க வேண்டும்.

 

குரு பக்திதான்  முக்கியம், குரு காலில் விழுவதுதான் ஆன்மீக உயர்வுக்கு மிக முக்கிய வழி என்று மூளையை அடகு வைத்து விட்டு நோகாமல் நோன்பு நோற்க நினைப்போருக்கு எதிராக சிந்தனை விரிவாக்க பிரச்சாரத்தை செய்ய வேண்டும் !

Advertisements

7 Responses to "குருபிரம்மா, குருவிஷ்ணு…..குரு..தேவோ…மஹேஷ்வரஹ்"

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

வணக்கம் நலமா? நல்ல பதிவு. காலத்திற்கு ஏற்ற பதிவு.

Dear sir,
how are you?happy to read ur new article. we are expecting from you to write more.

குரு பக்திதான் முக்கியம், குரு காலில் விழுவதுதான் ஆன்மீக உயர்வுக்கு மிக முக்கிய வழி என்று மூளையை அடகு வைத்து விட்டு நோகாமல் நோன்பு நோற்க நினைப்போருக்கு எதிராக சிந்தனை விரிவாக்க பிரச்சாரத்தை செய்ய வேண்டும்

this is correct,agree with you. but only for this corporate gurus. still importance of real guru is ther, but one have to choose it in right way. always this corpoarte samiyars are to be neglected. as mundaga upanishad says one should approach a guru with handfull of darpa grass to learn from him. and that gurus will not ask money or any other material things from the student. but he will test the student about his interest on learning.

Thanks, Sivandiyan Sir!
//that gurus will not ask money or any other material things from the student. but he will test the student about his interest on learning.//

PLEASE CORRECT THE SPELLINGNG.I AM NOT SIVANADAIYAN BUT sivanadiyaan

//இதில் இருந்து பெண்களை காப்பது எப்படி?//
அதனால் தான் சாஸ்திரங்கள் பெண்ணுக்கு கணவன் தான் குரு என்று கூறுகின்றன.
குரு என்பது ஆண்களுக்கு மட்டும்தான். மந்திர உபதேசம் தரும் போது கூட குரு கணவனுக்கு மட்டுமே நேரடியாகத் தருவார். மனைவி கணவன் மூலமாகவே உபதேசங்களைப் பெற வேண்டுமேயன்றி நேரடியாக குருமுகமாகப் பெறுவது சரியன்று.
கணவனது குருவை அல்லது வேறு மஹான்களை தரிசிக்கச் செல்லும் போது கூட பெண்கள் கணவனோடு சேர்ந்தே செல்ல வேண்டும். தனித்துச் சென்றால் தரிசன பலன் கிடையாது என்கிறது சாஸ்திரம்.
ஒன்று சாஸ்திரத்தில் முழு நம்பிக்கையுடன் கணவனே குரு என்றிருக்க வேண்டும். அது அடிமைத்தனம் என்று நினைத்தால் மதத்தையே ஒதுக்கி விட்டு/ குருவே வேண்டாம் என்று முழுக்க சொந்த பலத்தில் ஆன்மீகத் தேடலில் இறங்க வேண்டும். இந்த இரண்டு விதமான தெளிவுமற்ற இரண்டும் கெட்டான் பெண்கள் தான் நித்தியிடம் மாட்டிக் கொள்கிற ஆர்த்திகள். சாஸ்திரம், பகுத்தறிவ் இரண்டையுமே மீறியபின் வருந்துவதில் அர்த்தம் கிடையாது. விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும்.

மக்களின் அறியாமையை இவர்கள் நன்கு பயன்படுத்தி கொள்கின்றனர். மக்களின் அறியாமை விலகாத வரை இதற்கு முற்று புள்ளி வைப்பது கடினம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: