Thiruchchikkaaran's Blog

பாம்பை வைத்து பிரச்சாரம் செய்த அமேரிக்க பாஸ்டர் பரிதாப சாவு

Posted on: June 5, 2012


அமெரிக்காவில் உள்ள மேற்கு வெர்ஜினியா பகுதியை சேர்ந்த பைபிளிகல் பிரச்சாரகர் திரு. மாக் ரண்டால் உல்போர்ட் . இவர் மே மாதம் 27 ம் தேதி சர்வீஸ் நடத்தி இருக்கிறார் அந்த சர்வீ ஸ் ஒரு சிறப்பான நிகழ்வாக இருக்குமென்றும் அவர் தன்னுடைய பேஸ் புக்கில் முன்னே எழுதி இருக்கிறார். எல்லோரும் காணும்படியாக பூங்காவிலே சர்வீஸ் (மத பிரச்சாரம்) நடத்திய மாக் உல்போர்ட் சர்வீசின் போது பாம்பை கையாண்டு இருக்கிறார்.

ஏன் பாம்பைக் கையாள வேண்டும்?
பைபிள் (மாற்கு, அதிகாரம் 16 )
//9. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.

10. அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடே கூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள்.

11. அவர் உயிரோடிருக்கிறார் என்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை.

12. அதன்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்.

13. அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.

14. அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும், அவர்களைக் கடிந்துகொண்டார்.

15. பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

16. விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.

17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

19. இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.

20. அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.//

இப்படி பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வசனத்தை உறுதிப் படுத்த முயன்ற இந்த அப்பாவி அமேரிக்க சகோதரர் பாம்பு கடித்து பரிதாபமாக இறந்து விட்டார். ரேட்டில் ஸ்நேக் எனப்படும் பாம்பு அமெரிக்காவின் நேட்டிவ் பாம்பு ஆகும். வால் பகுதியில் சுருளான ஸ்ப்ரிங் போன்ற அமைப்பு உள்ள இந்த பாம்பு வாலை ஆட்டும் போது கிலுகிலுப்பை போன்ற சப்தம் வரும் , அதனால் ரேட்டில் ஸ்நேக் என பெயர். கடுமையான விஷம் உடையது இந்த பாம்பு.

சர்வீசின் போது இந்த பாம்பை தரையில் விட்டு அதன் அருகில் மாக் உல்போர்ட் உட்கார்ந்து இருக்கிறார். பாம்பு தொடையிலே போட்டு விட்டது. என்ன ஒரு கோராமை என்று நெஞ்சு விம்மும்படியான சம்பவமாக உள்ளது. இத்தனைக்கும் மாக் உல்போர்ட்டின் தந்தையும் முன்பு இதே போன்ற சம்பவத்தில் இறந்து இருக்கிறார். அப்போது மார்க் உல்போர்டுக்கு வயது 15 . இவருடையே கண்ணெதிரிலே இவர் தந்தை இறந்ததைப் பார்த்தும் இப்படி ஒரு சம்பவத்தில் இவர் இறங்கியது சோகமான நிகழ்வு.

மெரிக்க சகோதரர் திரு. மாக் ரண்டால் உல்போர்ட் . இறந்ததற்கு நம்முடைய மனப் பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தயவு செய்து சகோதரர்கள் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

http://news.yahoo.com/serpent-handling-west-virginia-pastor-dies-snake-bite-173406645–abc-news-topstories.html

http://www.wsbtv.com/news/news/national/flamboyant-serpent-handling-pastor-dies-rattlesnak/nPHKY/

Advertisements

2 Responses to "பாம்பை வைத்து பிரச்சாரம் செய்த அமேரிக்க பாஸ்டர் பரிதாப சாவு"

பாம்பைக் கையில் பிடிப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது.
இந்த வசனம் பொய் என்பதை மேற்படி சம்பவம் நிரூபிக்கிறது. நம் ஊர் பாம்பாட்டிகள் எல்லா பாம்புகளையும் சர்வ சாதாரணமாக பிடிக்கின்றனர். அவர்களை அவர்கள் வணங்கும் குலதெய்வம் காப்பாற்றுகிறது. சித்தர்கள் பாம்புக்கடிக்கு அற்புத மருந்துகளைக் கண்டு பிடித்துள்ளனர். பாவம் மாக் ரண்டால். அவரை கர்த்தர் கைவிட்டு விட்டார். நானும் விஷத்தைக் குடித்துக் காட்டக்கூடிய பாதிரியாரை பார்த்ததில்லை. மோகன்சி லாசரஸ், தினகரன் செய்து காட்டுவார்களா?

ரொம்ப நாள் கழிச்சி எழுதறீங்க. அடிக்கடி வாங்க சார்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: