Thiruchchikkaaran's Blog

இசைஞானி இளைய ராஜாவும் திருவையாறும்

Posted on: May 31, 2012


சில நாட்களுக்கு முன்பு இளையராஜா அவர்கள் திருவையாறு அரசினர் இசைக் கல்லூரிக்கு வருகை தந்து இருந்தார்.

அங்கே மாணவர்களிடம்  பேசிய  அவர், “திருவையாறு செல்வது தன்னை போன்ற இசைக் கலைஞர்களுக்கு  ஒரு க்ஷேத்ராடனம் என்றும், அப்படியானால் திருவையாறிலே தங்கி சங்கீதம் பயிலும் மாணவர்களாகிய நீங்கள் எவ்வளவு புண்ணியம் செய்தவர்கள்” என்றும் அவர் பேசியதாக பத்திரிக்கை செய்திகளை காண்கிறோம்.

கணினி , மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விகளுக்கு மாணவர்கள் முன்னுரிமை கொடுக்கும் நேரத்தில் இசையை விரும்பி பயிலும் மாணவர்களைப் பாராட்டிய இளையராஜா, இசைக் கல்வி மிகச் சிறந்த கல்வி, அது  அமைதியை தருவது என்பதை சொல்லியிருக்கிறார்.

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3336980.ece

தமிழ் நாட்டில்  ஹிந்தி எதிர்ப்பு, வட நாட்டவர் ஆதிக்க எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு ….ஆகிய பற்பல எதிர்ப்புகளில் ஒன்றாக தெலுங்கு கீர்த்தனை எதிர்ப்பும் இருந்தது. தமிழ் நாட்டிலே தமிழிலே பாடு , எதற்கு தெலுங்கிலே பாட வேண்டும் என்ற கோஷம் எழுப்பப் பட்டது. அது சரிதானே, புரியாத பாட்டை வெறும் இசைக்காக கேட்பதால் என்ன பலன் என்கிற எண்ணம் பலருக்கும் உருவானது.

எல்லாமே தமிழில இருக்கு, ஆனால் இந்த சங்கீதத்தை மட்டும் ஏன் தெலுங்கு டாமினேட் செய்யுது என்று  பேஜாரானர்கள். இதை வெறுப்புணர்ச்சியாக மாற்றி தூண்டி விட்டு குளிர்காய நினைத்த சிலர் இதைப் பயன்படுத்தி இந்த தியாகராஜர் தான் இவ்வளவு தெலுங்கு கீர்த்தனையை எழுதி வைச்சுட்டாரு, இந்த பாப்பானுங்க எல்லாம்  தமிழை விட்டுட்டு தெலுங்கை பாடி தமிழை அமுக்க பாக்கிறாங்க என்கிற வகையிலே பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர்.

ஆனால் இசைக் கலைஞர்கள் கிட்டத் தட்ட அனைவரும் தியாகராஜரை சரியாகப் புரிந்து கொண்டனர், தியாகராஜரின்  இசை மட்டுமல்ல, அவரது வாழ்க்கையும் ஆன்மீகமும் எவ்வளவு மகத்தானது என்பதை அவர்கள் மனப் பூர்வமாக உணர்ந்து  கொண்டனர். சத்குரு தியாகராஜா சுவாமிகள் தங்களுக்கு  எல்லாம் வழிகாட்டியாக வாழ்ந்தவர், மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த தன்னலமற்ற தியாகி, ஆடம்பரம், படாடோபம் , புகழ், பணம் எதையும் விரும்பாமல் அமைதியாக தன்னுடைய  இசை பக்தி மார்க்கத்தில் வாழ்ந்தவர் என்பதை இசைக் கலைஞர் கள் அறிந்து கொண்டனர்.

மாபெரும் இசை ஞானியாகிய இளையராஜா அவர்கள் அவ்வப்போது சத்குரு தியாகராஜா சுவாமிகளின் சிறப்பை சொல்லத் தவறுவதில்லை . திருவையாறு பயணம் தன்னைப் போன்ற  இசைக் கலைஞர்களுக்கு  க்ஷேத்ராடனம் (புனிதப் பயணம்) போன்றது என்று இசைஞானி இளையராஜா அவர்கள்  சொல்லுகிறார் என்றால் அவருக்கும் சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கும்   உள்ள  இசை ஆன்மீக இணைப்பை நாம் புரிந்து கொள்ள இயலும்.

வெறுப்புணர்ச்சி இருந்தால் மனதில் அமைதியும் இருக்காது, ஆன்மீக முன்னேற்றமும் இருக்காது. வெறுப்புணர்ச்சியில் குளிர் காய மறுத்து, உண்மையான இசையை ஆன்மீகத்தை வாழ்க்கையை பாராட்டும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நம்முடைய நன்றிகளையும், வணக்கங்களையும்  அளிக்கிறோம் .

எந்தரோ மகானுபாவலு அந்தரிக்கு வந்தனமுலு

எவரெவர்  நல்லவரோ  அவருக்கு  வணக்கங்கள்

*****************************************

இந்தக் கட்டுரையை நாம் இங்கே முடிக்கிற நேரத்திலே தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளின் பொருளை  தமிழ் நாட்டு மக்கள் அறிந்து கொள்ள இயலவில்லை யே அதற்க்கு என்ன தீர்வு, இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அளவுக்கு சத்குரு தியாகராஜ சுவாமிகளிடமும் , அவரது கீர்த்தனைகளிலும் என்ன இருக்கிறது என்பது போன்ற கேள்விகள் நமது நண்பர்களின் மனதிலே எழலாம்! அவற்றைப் பற்றி நாம் அடுத்த கட்டுரைகளில் விவாதிப்போம் நண்பர்களே.

Advertisements

1 Response to "இசைஞானி இளைய ராஜாவும் திருவையாறும்"

வணக்கம் சகோ,
நலாமா?.நீண்ட நாட்கள்க்கு பிறகு பதிவு காண்பது மிக்க மகிழ்ச்சி.இசை ஞானி உண்மையிலேயே ஒரு ஞானி சாதி,மதம்,இனம்,மொழி கடந்தவர் என்பதால் அவர் இப்படி கூறி இருப்பது சாலப் பொருத்தம்.

சரி நம்க்கு கர்நாடக சங்கீதம் பரிச்சயம் இல்லை.சிந்து பைரவி,சங்கராபரணம் போன்ற படங்கள் மூலமே நம்க்கு கர்நாடக இசை அறிமுகம்.தமிழிசை வளர்க்கப்படவேண்டும்.தியாகராயரின்ன் கீர்த்த‌னைகளை தமிழில் மொழி பெயர்ப்பு செய்தால் நன்றாக இருக்கும் என்பது நம் கருத்து.

சரி தொடர்வோம்.
அடிக்கடி எழுதுங்கள்.
நன்றி
திருச்சிக் காரன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: