Thiruchchikkaaran's Blog

உன் அழகிய உதடுகளில் நான் முத்தமிடலமா …..

Posted on: January 6, 2012


கணவனுக்காக காத்திருக்கும்   அவள் ஒரு குடும்பக் குத்து விளக்கு.

 கண்ணியமும் ஒழுக்கமும் நிறைவாக உள்ள பெரிய பணக்கார பிரபுத்துவ குடும்ப
 சூழ்நிலையில் வளர்ந்த அழகுப் பதுமை அவள்.
(அதாங்க அரிஸ்டோகிராடிக் பேமிலி என்று எல்லாம் சொல்வார்களே …)! அந்தக் குடும்பத்துக்கு அறிமுகமாகிறான் ஒரு இளைஞன். கண்ணியமிக்க கணவானாக காட்சி தரும்  அவன் அந்தக் குடும்பத்து அங்கத்தினர்களின் குட் புக்ஸில் இடம் பிடிக்கிறான். அவனை எல்லோருக்கும் பிடித்துப் போகிறது. அவன்தான் சிறந்த மாப்பிள்ளையாக இருக்கிறான் என்று திருமணம் பேசி முடிக்கிறார்கள்.
இப்போது…  கணவனின் அன்புக்காக காத்திருக்கிறாள் அந்த பெண். … அறையில் நுழைவது யார்…அவளது கணவனா …இன்னொருவனா…ஆம் அவளது கணவன்  தான்….ஆனால் அவள் குடும்பத்தில் இது வரைக்கும் பழகி வந்த
 இளைங்கனா அவன். சுத்தமான பழக்க வழக்கங்கள் உள்ளவனாக காட்சி
அளித்த அவன் கையில் மதுக்கோப்பையுடன்
சாராய வாடை வீச  அறைக்குள் நுழைகிறான். உலகமே சுழலுவது
போல இருக்கிறது அவளுக்கு. மயக்கத்துடன் கையில் மதுக் கோப்பையை ஏந்தி வரும் அவனைக் கண்டு   மனைவி  அதிர்ச்சியிலும்  வேதனையிலும் கண்ணீர் வடிக்கும் நிலையில் அவளிடம் சென்று பாடுகிறான், “உன் அழகிய  உதடுகளில் நான் முத்தமிடலாமா, நான் கையில் ஏந்தி உள்ள கோப்பையில் உள்ளது …..இது பழரசமே….,  நம்மைக் காக்க இயற்கை இதை (மதுவை) தந்துள்ளது என்று பாடி , நான் மது அருந்துவதை தவறாக நினைக்காதே …இது  ஓக்கேதான் ”என்று தன் தரப்பு நியாயத்தை முன் வைக்கிறான்.
“சூ லேனே தோ நாசூக்கு ஹோட்டோன் கோ   ….” என்னும் ( உன் அழகிய உதடுகளில் நான் முத்தமிடலமா ….. என்னும் பொருளுடைய ) இந்தப் பாடல் “காஜல் (Kaajal)”  என்கிற இந்திப் படத்தில் வரும் பிரபலமான பாடல் ஆகும்.  மனைவி பாத்திரத்தில் நடித்தவர் மீரா குமாரி. தறுதலை மாப்பிள்ளை பாத்திரத்தை  கன கச்சிதமாக செய்தவர் ராஜ் குமார்.
என்னய்யா ஒருத்தன் தண்ணி அடிக்கிறான் என்பதால் அவன் கெட்டவன் எனக் கருதிக் கண்ணீர் வடிக்க வேண்டுமா என்ற எண்ணம் வரலாம். ஆனால் எந்த வித தேவையற்ற பழக்கங்களும் இல்லாத சுத்தமான இளைங்கனாக கருதப் பட்டவனின் உண்மை நிலை வேறு மாதிரி உள்ளதே என்பதை அறிந்தே அவள் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் வடிக்கிறாள். இன்னும் போகப்போக  பல உண்மைகள் வெளியாகின்றன. அவன் அடிக்கடி கோட்டே எனப்படும் நடனக் காட்சிளில் மதுவுடன்  நங்கைகளின் ஆட்டத்தை ரசிக்கும் பழக்கம் உடையவன், ஒண்ணுக்கும் உதவாத தறுதலை… திட்டமிட்டு தங்களை ஏமாற்றி  தங்கள் குடும்ப பெண்ணை திருமணம் செய்து இருக்கிறான், என்பதை அறிந்து அந்த குடும்பமே அதிர்ச்சி அடைகிறது.
அவனை குடும்பத்தை  விட்டு விலக்கவும் முடியாமல், அவனைப் பொறுக்கவும் முடியாமல் தடுமாறுகிறது அந்தக் குடும்பம். குடும்பத்தின் முக்கிய பொறுப்புகளை கவனித்து வரும் தர்மேந்திரா (மீனா குமாரியை தங்கையாக பாவிப்பவர் ) ராஜ் குமாரைக் கண்டித்து  அவரை நல் வழிக்கு கொண்டு வர முயலுகிறார் . இந்த நிலையில் ஒரு திருப்பமாக அந்த தறுதலை மாப்பிளையை வளர்த்து திட்டமிட்டு இந்தக் குடும்பத்தில் மாப்பிள்ளையாக்கிய வளர்ப்பு தந்தை வருகிறான்.
அவன்வேறு யாருமல்ல, அந்த பிரபுத்துவ குடுமபத்தில் காரியதரிசியாக
 பணியாற்றியவன் தான்.  எல்லோரும் பெரிய டைனிங் டேபிளில் அமர்ந்து
உணவருந்தும் போது அந்த வளர்ப்பு தந்தை ஒரு திடுக்கிடும் உண்மையை வெளியிடுகிறான் . அது என்னவென்றால் இந்த
குடிகார மாப்பிள்ளை, வேறு யாருமல்ல. அந்த அரண்மனையின் முக்கிய பிரபு குடும்பத்தின்
 ஒரே வாரிசு அவன்தான், (இப்போது தறுதலை மாப்பிள்ளையாக இருக்கும் ராஜ்குமார் தான்).  முன்பு அரண்மனையில் காரியதரிசியாக இருந்த அந்த வளர்ப்பு தந்தை செய்த தில்லு முல்லுகளை அறிந்த பிரபு, அவனை வேலையை விட்டு தூக்கி விடுகிறார். கோபத்தில் அரண்மனை வாரிசான குழந்தையை தூக்கி சென்று, அவனையும் தன்னைப் போல தறுதலையாக வளர்த்து அந்தக் குடும்பத்தை பழி வாங்கி விட்டதாக சொல்கிறான் அந்த வளர்ப்பு தந்தை. மீரா குமாரியின் வாழ்க்கையையும் நரகமாக்கி இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன் என்று சொல்கிறேன்.
 இதைக் கேட்டு அனைவரும் பெருத்த அதிர்ச்சி அடைகின்றனர்.  இதைக் கேட்டு கோவம் அடைந்த தறுதலை மாப்பிள்ளை ராஜ்குமார் கோவத்துடன் இதுகாறும் தன்னை வளர்த்து வந்த வளர்ப்பு தந்தையின் கன்னத்தில் விடுகிறான் பளார்… பளார்…!. தர்மேந்திராவைப் போல நானும் கண்ணியமான இளைங்கனாக வளர்ந்து இருப்பேனே. என்னை விபச்சார கோட்டேக்களில் வளர்த்து கெடுத்து விட்டாயே, இனி என் முகத்தில் முழிக்காதே என்று தன்னை வளரத்தவனை விரட்டுகிறான்.
 ராஜ்குமாரிடம் முழு அதிகாரமும் வருகிறது. தன்னுடன் மோதிய தர்மேந்திராவை முக்கிய பொறுப்புகளில்  இருந்து நீக்குகிறான். தர்மேந்திராவிடம், நீ நல்லவன், ஆனால் என்னை நீ ரொம்பவும் அவமானப் படுத்தி விட்டாய் என்கிறான்.  அடிக்கடி ராஜ்குமாரும், தர்மேந்திராவும் மோதுகின்றனர்.
ஒரு முறை ராஜ் குமார்   கோவத்தில் பெரிய துப்பாக்கியை  எடுத்து தரமேந்திராவை சுட முயலுகிறான்.  துப்பாக்கியை பிடித்து அவனை தடுக்கிறார் தர்மேந்திரா. மீரா குமாரியும்  அழுகையுடன் கணவனை தடுக்கிறார். இந்த கை கலப்பில் தவறுதலாக துப்பாக்கி வெடித்து மீரா குமாரியின் உடலில் குண்டு பாய்ந்து விடுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீனா குமாரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் படுகிறார். அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்த ராஜ்குமார் குதிரையின் மீதேறி கண் போன போக்கில் அதை ஓட்டுகிறான். உண்மையிலே  மீனாகுமாரியை மனப் பூர்வமாக நேசித்து இருக்கிறான் ராஜ்குமார். தன்னுடைய அன்பு மனைவியை தானே சுட்டு விட்டதை அறிந்து மிகவும் வருத்தத்துடன் குதிரையை ஓட்டுபவன், போலீசில் சரண் அடைய போலீஸ் ஸ்டேஷன் செல்கிறான்.
அங்கே போலீசார் மீனா குமாரி மரண வாக்குமூலம் அளித்ததாகவும், அதை தன்னுடைய அன்பு கணவர் ராஜ்குமார் மீது எந்த தவறும் இல்லை என்றும் தானே கை தவறுதலாக துப்பாக்கியை இயக்கி விட்டதாகவும், தன்னுடைய கணவர் மீது எந்த தவறும் இல்லை என்றும் அவரை கைது  செய்ய வேண்டாம் என்றும் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் பேசிக் கொள்வதை ஜன்னல் வழியே கேட்ட ராஜ்குமார், தன் அன்பு மனைவி தன் மேல் இவ்வளவு அன்பு உள்ளவள் என்பதை அறிந்து இன்னும் அதிக மனவருத்தம் அடைகிறான். தன்னுடைய மனைவியை  பார்க்க மருத்துவமனைக்கு விரைகிறான். அதிர்ஷ்ட வசமாக மீனா குமாரி பிழைத்து விடுகிறார். அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்க மனம் திருந்திய நல்லவனாக ராஜ்குமார் குடும்பத்தில் இணைத்து அன்பு மனைவியுடன் நல் வாழ்க்கைக்கு வருவது படத்தின் முடிவாகும்.
 தூய்மையும், அர்ப்பணிப்பும் உடைய ஒரு மனைவியால் திருத்தப் பட முடியாத கொடுமைக்கார கணவனே இல்லை என்கிற சுவாமி விவேகானந்தரின் கூற்றை விளக்கும் படியாக படம் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
1965ல் வெளியான இந்த ஹிந்தி திரைப் படம் ஒரு சூப்பர் ஹிட் படம். படத்தில் தர்மேந்திராவுக்கு ஜோடியாக நாட்டியப் பேரொளி பத்மினி நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் தர்மேந்திரா ஹீரோ, பத்மினி ஹீரோயின், ராஜ்குமார் வில்லன்  என்கிற ரீதியில்  படம் ஆரம்பித்தாலும் உண்மையில்    ராஜ்குமார் ஹீரோவாகவும், மீனா குமாரி ஹீரோயினாகவும் இருப்பதை அனைவரும் உணரலாம். மீனா குமாரியை அழகு ராணி என்பதை விட சோக (அழுகை) ராணி  என்பதாகவே அக்கால  பாலிவுட்டில் பிரபலமானவர். தமிழ்
சினிமா உலகில்  விஜயகுமாரி அழுது தள்ளியதைப் போல ஹிந்தியில் மீனா குமரியும்  லிட்டர் கணக்கில் கண்ணீர் விட்டு தியேட்டரையும் கண்ணீர் வெள்ளத்தில் மிதக்க விடுவதில் பிரபலமானவர்.
சூ லேனே தோ நாசூக்கு ஹோட்டோன் கோ   ….என்கிற  பாடல் ஹிந்திப் பட உலகின் முடி சூடா மன்னர் முகமது ரபி பாடியது. அன்று முதல் இன்று வரை இந்த பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும்.  இந்தப் பாடலில்  ”அச்சோன் கோ  புரா ஸாபித் கர்னா துனியாக்கி புராணி ஆதத் ஹை…” (நல்லவற்றை கூட கெட்டதாக சாதிப்பது உலகத்தில் பண்டு தொட்டு இருந்து வரும் பழக்கம் ஆகும்) என்று பாடுகிறார் ராஜ்குமார்.  இந்த வரி தான் மது அருந்துவதை நியாயப்ப படுத்தும் விதமாமா  இருந்தாலும், பொதுவாக இந்த வரி ஒரு ஆச்சரியத்தை தருவதாக உள்ளது.
எட்டாயிரம் வருடங்களுக்கு மேலான இந்திய சமுதாயத்தின் முக்கிய காரணிகளில் ஒன்று மனைவியானவள் தன் கணவனுக்காக தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தந்தும் தன கணவனைக் காக்க தயாராக இருக்கிறாள் என்பதே. சீதை, கண்ணகி, தமயந்தி, சாவித்திரி, நளாயினி, பார்வதி  .. உள்ளிட்ட கோடானு கோடி இந்திய மனைவிகளாலே ஒரு இந்தியன் காக்கப்பட்டு வந்திருக்கிறான். ஒரு இந்திய மனைவி எந்தக் காலத்தும் தன் கணவனைக் கைவிடுவதில்லை. இதையே ரிக் வேதமும் ”மம  ஜீவன ஹேதுனா (என்னுடைய வாழ்க்கைக்கு இன்றி  அமையாதவளே ), மாங்கல்யம் தந்துனானே, கண்டே பத்னாமி (இந்த மாங்கலயத்தை உன் கழுத்தை சுற்றி அணிவிக்கிறேன்) ,சுபாகே (நல்ல குணம் உள்ளவளே) த்வம், சஞ்சீவ சரத  சதம் (நீ நூறாண்டு காலம் வாழ்க ) என்று சொல்லுகிறது.
இதே கருத்தையே தமிழ் சினிமாவில்  ராஜ் கிரண் “ஆண்டவன் தான் படைச்ச எல்லா உயிரையும் தானே காப்பாத்த முடியாதுன்னு தான், தாயைப் படைச்சான்…. அந்த தாயும் கடைசி வரைக்கும் இருப்பதில்லை என்பதால் தான் தாரத்தைப் படைச்சான்… அதுனால என்னைப் பொருத்தவரையில ஆண்டவன், தாய், தாரம்
 எல்லாம் ஒண்ணுதான் …” . என்கிற ரீதியில் பேசி
மனைவியின் சிறப்பை விளக்கி இருக்கிறார்.
மாணவப் பருவத்தில்  நண்பர்கள்  இதே டயலாக்கை இன்னும் கொஞ்சம் கலக்கலாக
 ”….அந்த தாரமும் கடைசி வரைக்கும் ஒல்லியாக இருப்பதில்லை என்பதால் தான் சின்ன வீட்டை படைச்சான்” என்று கலாய்ப்பது உண்டு. ஆனாலும் அதே நண்பர்கள் திருமணம் ஆண் பின்
 மனைவியின் அருமையை உணர்ந்து  சின்ன வீடு தன் உயிரைக் கொடுத்தாகிலும் கணவனைக் காக்குமா …என்கிறதை சிந்தித்துப் பார்ப்பதும் உண்டு!
Advertisements

1 Response to "உன் அழகிய உதடுகளில் நான் முத்தமிடலமா ….."

தனபால்

சகோ.திருச்சி சார்,

ஏன் உங்கள் தளத்தில் நீண்ட நாள்களாக பதிவு எதுவும் வரவில்லையே ஏன்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: