Thiruchchikkaaran's Blog

மனைவியை நேசிக்கிறவங்க …..

Posted on: November 27, 2011


மனைவியை மதிப்பது  அன்பு செய்வது – நாகரீகத்தின் முக்கிய காரணிகளுள் ஒன்று.   . மனைவியை மதிப்பது நாம் அவருக்கு காட்டும் சலுகையோ , உபகாரமோ இல்லை. உலகில் உள்ள எந்த ஒரு மனிதரையும் அவமதிக்க நமக்கு உரிமை இல்லை. எந்த மனிதரையும் மரியாதையுடன் அணுகுவது நடத்துவதே  நாகரீகமாகும். ஒரு மனிதர் பிறர்க்கு தீங்கு விளையும் வகையில் நடந்து கொண்டால் அன்றி அவரை விளக்குவதோ, மரியாதையை குறைப்பதோ கூடாது. இவாறு இருக்க நம்முடன் வாழும் மனைவியை மரியாதைக் குறைவாக நடத்துவது நாகரீகம் அல்ல.
நம்முடைய நாகரீக த்தை நாம் சந்திக்கும் நண்பர்கள், உறவினர்கள், சக பணியாளர்கள் இவர்களிடம் காட்டினால் மட்டும் போதாது. நம்முடைய நாகரீகத்தை நம்முடைய வீட்டிலே துவங்க வேண்டும். நம்முடன் வாழும், தினமும் நம்மை எதிர்கொள்ளும் , வாழ் நாள் முழுவதும் நமக்கு உறுதுணையாக இருந்து , நமக்கு உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த மனிவியிடம் நாம் நாகரீகமாக நடந்து கொள்கிறோமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
மனைவியை மரியாதையுடன் நடத்துவது  இருக்கட்டும் மனைவியைத் துன்புறுத்தாமல் இருக்கிறோமா என்று சிந்திக்க வேண்டும்
மனைவியை திட்டுவது, அடிப்பது, துன்புறுத்துவது…. கொடூரக்  காட்டு மிராண்டித்தனமே.
காட்டு மிராண்டியாக  கற்கால த்தில்  வாழ்ந்த மனிதன் நம்மை விட எவ்வளவோ மேலானவன். அவன் கல்வி பயின்றதில்லை, நூல்களைக் கற்றதில்லை.

ஆனாலும் தான்   தேர்ந்தெடுத்த  துணைவியை அன்பு செய்து

அரவணை க்கும் பண்பாட்டை வளர்த்து விட்டான். இன்றைக்கு இத்தனை கல்வி கற்று  நூல்கள் படித்தும் மனைவியை அன்பு செய்து மதித்து அவருக்கு துன்பம் தராமல் வாழும் பாங்கை நாம் கைக் கொள்ளுகிரோமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தன்னுடைய மனைவியின் முழு அன்பையும் பெற்று விட்ட ஒருவன்  வாழக்கையில் எல்லா செயல்களையும் செய்து முடித்தவன் ஆகிறான் என்கிறார் சுவாமி விவேகா னந்தர். தன்னுடைய மனைவியின் கண்ணிலிருந்து வடியும் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் அத்தனை வருடம் நரகத்தில் இருப்பான் என்கிறார் மகாசன்னிதானம் ஸ்ரீ வித்யா தீர்த்தர் ..  
நரகம் என்று ஒன்று இருக்கிறதா என்று நமக்கு தெரியாது. ஆனால் மனைவியை திட்டுவது, அடிப்பது, அவமதிப்பது… போன்ற செயல்களில் ஈடுபடுவோர் இங்கே பூலோகத்திலேயே தன்கள் மனைவியின் வாழ்க்கையை நரகமாக்கி தங்கள வாழ்க்கையையும் நரகமாக்கிக் கொள்ளுகின்றனர என்பதை நாம் பகுத்தரிவிலே அறிந்து கொள்ளலாம்.
அதே நேரம் காலம் விரைவாக மாறி வருகிறது!
காட்டுமிராண்டி செயலில் ஈடுபட்டு மனைவியை துன்புறுத்தும் கணவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டிய து காலத்தின் கட்டாயம். மனசாட்சி அடிப்படையில் நீ நாகரீகமாக நடந்து கொள்  அல்லது சட்ட பூர்வமாக உனக்கு காப்பு போடப்பட்டு ஆப்படிக்கப் படும் என்கிற நிலையை கொடுமைக்கார கணவனுக்கு உணர்த்த தைரியமுள்ள  நங்கைகள் தயாராகி விட்டனர்.
(தொடரும்)
Advertisements

10 Responses to "மனைவியை நேசிக்கிறவங்க ….."

ஆண்கள் திணறுவது ஒரே இடத்தில் தான் அம்மாவா? மனைவியா? என்பதில் தான்…

அருமையான பதிவு. வாழ்த்துக்கள். நன்றி நண்பரே!

திருச்சிக்கார நண்பரே
வெகுநாட்களாக தங்களிடமிருந்து பதிவுகளோ, பிற தளங்களில் தங்கள் கருத்துரைகளோ காணாமல் போனதைக் கண்டு என்னவோ ஏதோ என்று எண்ணிவிட்டேன். உங்களை மீண்டும் இணையத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி. தொடருங்கள் உங்கள் பணிகளை.

ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

இது எல்லாம் சரி, இத்தனை நாள் எங்கே போயிருந்தீர்கள்?
என்ன ஆச்சு என்று கொஞ்சம் கவலையாக இருந்தது.

மணைவியை சக மனிதராக கருத வேண்டும் என்ற கருத்து உண்மையே, பதிவை தொடருங்கள்.

சகோ. திருச்சிக்காரர் அவர்களே,

வணக்கம்.நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் பதிவைப் பார்த்தது மகிழ்ச்சி.

நல்ல பதிவு. மனைவியை நேசிப்பவர்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்கள்.இதை மாற்றியும் சொல்லலாம்.

(நீண்ட நாட்களாக எந்த பதிவும் எழுதவில்லையே.. பனி சுமை அதிகமா? )

Vanakkam!
I wonder what happend to you all thease time. I would like to share your sugam and thukkam.
Love Logan

நண்பருக்கு வணக்கம்
நலமா?.கொஞ்ச நாட்களாக பதிவையே காணவில்லை.குடும்பம் என்பது பரஸ்பர அன்பினாலும்,மரியாதையாலும் கட்டமைக்கப் பட வேண்டும் என்பதை அருமையாக தொடங்கி உள்ளீர்கள்.
வாழ்த்துக்கள் தொடர்கிறேன்

அன்புக்குரிய நண்பர்கள் தனபால், தமிழன், நரேன், லோகன், smpks ராஜா, சார்வாகன், ராம், surya jeeva….உள்ளிட்ட அனைத்து நண்பர்களின் அன்பிற்கும், அக்கறைக்கும் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பணி பளு காரணமாக முன் போல தொடர்ந்து எழுத முடியவில்லை. ஆனாலும் அவ்வப் போது கட்டுரைகள் வெளியாகக் கூடும். உங்கள் அன்பிற்கும் மீண்டும் நன்றி செலுத்துகிறேன் நண்பர்களே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: