Thiruchchikkaaran's Blog

ரா…… ரா…….

Posted on: September 14, 2011


ரா….. ரா ….என்று ஆரம்பித்தால் பதிலுக்கு நண்பர்கள் “சரசுக்கு ரா ரா” என்று முடிக்கும் அளவுக்கு தமிழ் நாட்டில் ரா … ரா…. பாப்புலராகி விட்டது என்றால் அதற்க்கு காரணம் சந்திரமுகி திரைப் படம் தான்.

ஆனால் இந்த ரா…. ரா….என்பது முன்பிலிருந்தே தெலுங்கு மொழியில் மிகப் பிரபலமான சொற்றொடர் ஆக இருந்தது, காரணம் சத்குரு தியாகராஜ சுவாமிகள் கீர்த்தனைகள்.  ரா … என்றால் “வா ..” என்று அர்த்தம் ரா…ரா என்றால், வா… வா… என்ற அழைப்பு. தியாகராஜ சுவாமிகள், இந்த ரா..ரா..வை உபயோகம் செய்தது இராமரை அழைப்பதற்கு!

 தியாகராஜரை பற்றி விளக்குவது என்றால், ஆயிரம் பதிவு போட்டாலும் என்னால் விளக்க இயலாது. அவர் ஒரு அபூர்வமான மனிதர். காசு பணம் வேண்டாம் என சொல்லி எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் !

பலரும் அவருடைய இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுகின்றனர். ஆனால் என்னுடைய பார்வையில் அவரை மிகச் சிறந்த ஆன்மீக வாதியாக அணுகுகிறேன்.  ஒலியை மின்சாரமாக  மாற்றி பிறகு கேரியர் (மின் காந்த அலைகள்) மூலம் செலுத்துகிறார்கள் அல்லவா? அதைப் போல தியாகராஜ சுவாமிகள் மிகச் சிறந்த அமைதியான ஆன்மீகத்தை இசையின் மேல் ஏற்றி இசையை கேரியர் ஆக்கி ஆன்மீகத்தை  பரப்பி இருக்கிறார். அவருடைய கீர்த்தனைகளால் ஒன்றான “யே லா நீ தய ரா காது ( ஏன் நீ தயை புரிந்து என்னை பார்க்க வரக் கூடாதா ) என்ற கீர்த்தனையை சலங்கை ஒலி படத்தில் கேட்டது நினைவிருக்கலாம்.

http://www.youtube.com/watch?v=RRCUUWzkdPg

இந்தப் படத்தில் கமலஹாசன் சமையல் பணியாளராக உள்ள ஏழை தாய்க்கு மகனாகப் பிறந்ததால் சிறந்த நடனத் திறமை இருந்தும் வாய்ப்பில்லாத நிலையில் இருப்பதை சித்தரிக்கும் பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். பாடல் காட்சியும் அதை உணர்த்தும் வண்ணம் இருக்கும். இந்த காட்சியிலும் தியாகராசரின் ஆன்மீகத்தை விட அவரது பாடலும் இசையுமே மக்களை சென்று அடைகின்றன.

தியாகராஜா சுவாமிகள், என்னைப் பார்க்க வர நேரம் இல்லையா (ஏலா சமயமு காது) என்று பாடி இராமரை பார்க்க விரும்பும் தன் தவிப்பை வெளிப்படுத்துகிறார்.

வா வா தேவாதி தேவா….வா வா மஹானுபாவா , வா ..வா … தாமரை போன்ற அழகிய விழிகளை உடையவனே என அழைக்கிறார்.

மேலும் சீதையை மீட்க கடலின் நடவில் பரிவாரங்களுடன் சென்று  கம்பீரமாகப் போர் புரிந்தவர் (பூர ஹிருதய பரிவார ஜலதிதம்  கம்பீர தனுஜதம் )  என்றும் இராமரை புகழந்து அப்படிப்பட்ட நீ என்னை பார்க்க வரவது இயலாத காரியமா என்கிறார்.

இராஜாதி இராஜர்களாலும்    முனிவர்களாலும்  பூஜிக்கப் படுபவனும், கவியரசர் களால் புகழப் படுபவனுமாகிய நீ தயவு செய்து எனைக் காண வர இயலாதா என அழைக்கிறார்.

இந்தப் பாட்டை  படத்தில் திருமதி S.ஜானகி பாடி இருப்பார். பலர் இந்தப் படலை பாடி உள்ளனர் , என்னைக் கவர்ந்தது கான கந்தர்வ செம்பை வைத்யநாத பாகவதரின் கம்பீரக் குரல். இணையத்தில் அந்த சுட்டி கிடைக்கவில்லை. அவரது சீடரான திரு.ஜேசுதாசின் பாடலின் சுட்டி கிடைத்தது.  சிறப்பாகப் பாடி இருக்கிறார் அவரது பாடலை இணைத்துள்ளேன்.

http://www.youtube.com/watch?v=PSh5bsL-cnk&feature=related

Advertisements

3 Responses to "ரா…… ரா……."

நமக்கு இசை ஞானம் கம்மி பாஸ்.

நண்பர்.
பதிவுக்கு நன்றி.
இந்த பதிவிலிருந்து சில கேள்விகள் எழுகின்றன.

1) ஏன் பாட்டுகளை வேற்று மொழிகளில் எழுதப்பட்டது என்று குறை சொல்லமாட்டேன். ஆனால் தமிழில் பாடியிருந்தால் அதன் தாக்கம் வேறு மாதிரி இருந்திருக்கும்.

2) கர்னாடக சங்கீதம் புரியாதவர்களும், அதனை புலப்படாதவர்களும் தமிழில் பாடினால் ரசிக்கின்றார்கள், அதே வேற்று மொழியில் இருந்தால் என்ன ஞெ ஞெ ஞெ ஞெ என்று பாடுகிறார்கள் என்று சொல்வார்கள். அதனை எவ்வளவுதான் ஆன்மீகம் என்றாலும் அதன் ஆன்கீகத்தன்மை அந்த மொழி அறிந்தவர்களுக்குத்தான்.

3)உண்மையை சொன்னால் கர்நாடக சங்கீதத்தை பிரபலபடுத்தியவர் இளையராஜாதான். அவரின் சொக்க வைக்கும் இசையால் அமைந்த பாடல்களை, இந்த ராகம் அந்த ராகம் என்று அறிய முடிந்தது. சாமன்ய மக்களின் நிலைமைக்கு எடுத்து வந்தது.

4)கர்நாடக சங்கீதத்தை ஒரு வட்டத்திற்குள் சில சாதி கூட்டதினுள் வைக்க வேண்டும் என முடிவு செய்து செய்ல்படுத்தப்பட்டது. பிற கிராமிய இசையிகளை தரமற்றவை என்று தோற்றம் அளிக்கப்பட்டுள்ளது. சாமன்ய மக்களின் பாரம்பரிய இசைக்கு உரிய அங்கீகாரம் அளிக்கபடவில்லை.

5) தற்பொழுது மக்களிடையே கர்நாடக சங்கீதம் கற்பது ஒரு fashion ஆக உள்ளது. இந்த வளர்ச்சிக்கு கர்நாடக சங்கீதத்தின் பாரம்பரியத்தை வைத்திருந்தவர்கள் காரணம் அல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான் காரணம்.

மேற்கூறிய வட்டத்திலிருந்து வெளியே வந்தால் நீங்கள் கூறிய காரணங்களுக்காகவும் இசையை ரசிப்பதற்க்காகவும் உதவும்.

நன்றி.

நீங்கள் சொன்ன தியாகராஜசுவாமி பாடலை விட இந்த பாடல் எனக்கு பிடித்தது.

நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 39 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: