Thiruchchikkaaran's Blog

பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்! அமைதி காக்க வேண்டுகிறோம்!

Posted on: September 12, 2011


சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் அமைவதே நம்முடைய நோக்கம். அது ஒரே நாளில் , ஒரே வருடத்தில் அமைந்து விடாது. மக்கள் பிறரை மதிக்கும் நாகரீகப்  போக்கும் , நிதானமும் , மன முதிர்ச்சியும் உடையவர்களாக உருவெடுத்தால் சமத்துவ சமுதாயம் விரைவில் அமையும்.

இந்த நிலையில் வெவ்வேறு சமுதாயத்தினரும் தங்களுக்காக போராடிய தலைவர்களுக்கு மரியாதை செய்வதும்  , குரு பூஜை நடத்துவதும் புரிந்து கொள்ளக் கூடியதே. அவற்றை  அரசு தடுக்க வேண்டியது இல்லை, குரு பூஜையை ஒட்டிக் கூட்டங்கள் நடத்தப் பட்டால் அவற்றில் வன்முறை தூண்டலோ, வெறுப்புணர்ச்சி கருத்துக்களோ இருக்கக் கூடாது என்கிற அண்டர் டேகிங்கை பெற்றுக் கொண்டு அந்த குரு பூஜைகளை, விழாக்களை நடத்த அனுமதிக்கலாம்.

தலித் சமுதாய மக்கள மிகவும் மதிக்கும் தலைவர் இமானுவல் சேகரன். இவர் தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி 1957  ம் வருடம்கொலை செய்யப் பட்ட தியாகி. அவரது சமாதி உள்ள பரமத்தி நகருக்கு ஜான் பாண்டியன் வந்து அஞ்சலி செலுத்துவதாக இருந்ததாம். இதில் கடைசி  நேரத்தில் ஜான் பாண்டியனுக்கு அனுமதி  மறுக்கப் பட்டு விட்டது.

இதிலே ஜான் பாண்டியனுக்கு அனுமதி மறுக்க வேண்டிய அவசியம் என்ன வென்று தெரியவில்லை. கலெக்டர் போன்ற அதிகாரிகள் ஜான் பாண்டியனிடம் பெர்சனலாகப் பேசி கொஞ்சம் பாத்து பேசுங்க சார் என்று கேட்டு விடயத்தை லைட்டாக முடித்திருக்கலாம்.

ஜான் பாண்டியனுக்கு அனுமதி மறுக்கப் பட்டு அவர் வராததால் கடுப்பாகிப் போன தலித் சமுதாயத்தினர் தங்கள் கோபத்தை வெளிக் காட்ட கலவரம் மூண்டிருக்கிறது. இது தேவை இல்லாதா ஒன்று. ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை (இந்தியா முழுவதிலும் ) மக்கள் தங்கள் கோபத்தை வெளிக் காட்ட கலவரத்தில் ஈடுபடுவது அவ்வப் போது நடந்து வருகிறது. இது நிதானமில்லாத, கட்டுப் பாடு இல்லாத போக்கே, இது கண்டிக்கத் தக்கதே !
இந்த போக்கை மாற்றி  மக்களை பொறுமையும் , பொறுப்பும் உள்ளவர்களாக்க நமக்கு இன்னும் பல புத்தர்களும், காந்திகளும், விவேகானந்தர்களும் தேவைப் படுகின்றனர்.

கணிசமான மக்கள் கலவரத்தில் ஈடுபடும் போது அதில் பொது சொத்துகளும், அங்கே கடை வைத்திருப்போர்கள் , வியாபாரம் செய்வோர்  பாதிப்படையும் அபாயம் உள்ளது.கலவரத்தை சாமாளிப்பது போலீசுக்கு எளிதான காரியம் அல்ல. அதிக அளவில் மக்கள் இருக்கும் போது தடியடி நடத்தி ஆவது இல்லை. எனவே கண்ணீர் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பாய்ச்சியும் தான் கூட்டத்தை விலக்க வேண்டும். துப்பாக்கி சூட்டில் ஈடுபடுவது உயிர்கள் பலியாக காரணமாகி விட்டது. துப்பாக்கி சூட்டை தவிர்க்க  வேண்டும்,  ரப்பர் குண்டுகளையாவது  உபயோகிக்க வேண்டும்.

ஒவ்வொரு உயிரும் மிக முக்கியமானதே. தந்தையை இழந்த மகன், கணவனை இழந்த மனைவி…..! கலவரத்தை தொடராமல் நிறுத்தி  முழு  அமைதி காக்க வேண்டுகிறோம் .

துப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு  அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் பிரிவால் வாடும் உறவினர் , நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்!இறந்தவர்களில் குடுமபத்துக்கு தாரளமாக இழப்பீடு வழங்கக் கோருகிறோம்.

அதிகாரிகள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருந்து, சமூக  தலைவரக்ளுடன் தொடர்பு கொண்டு அமைதிக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.  இனி வரும்  காலங்களில் யாருக்கு குரு பூசை  நடத்தப் பட்டாலும் சம்பந்தப் பட்ட தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளும் அவர்களுடன் சேர்ந்து கலந்து கொண்டு, மாலை மரியாதை  செய்து குரு பூஜை, விழா போனறவற்றை சுமூகமாக முடிப்பதுதான் பிரச்சினைகளை தீர்க்க சிறந்த வழி!
Advertisements

4 Responses to "பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்! அமைதி காக்க வேண்டுகிறோம்!"

வண்க்கம் சகோ,
இச்செய்து கேட்டதும் மிகவும் மன‌திற்கு கஷ்டமாக் இருக்கிறது.6 மனித உயிர்கள் போய் விட்டன.இத்னை தடுத்திருக்க முடியாதா!!!!!!!!!

குண்டு வெடிப்பு,இம்மாதிரி கலவரம் போன்றவற்றை தடுக்க்(தவிர்க்க) ஏன் முடிவது இல்லை?
இனி விசாரணை கமிசன் ,ஏதாவது சொல்லி மெதுவாக மறக்க வைத்து விடுவார்கள்.
ஒரு மோசமான் விஷயம் நடக்காமல் தவிர்க்கவே வேண்டுகிறோம்.
அப்ப்டி நடக்குமென்றால் உண்மையான் குற்றவாளி சீக்கிரம் கண்டுபிடிக்கப் பட வேண்டும்.
விசாரணை&தண்டனை 6 மாதத்தில் வழங்க வேண்டும்.இதில் பாரபட்சம் கூடாது.
பல வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு ஊர்க்காவல் படை போல் அமைப்பில் வேலை கொடுத்து ,பாதுகாப்பை பல்ப் படுத்தலாம்.அதே ஊரை சேர்ந்தவன் பாதுகாப்பில் இருக்கும் போது வன்முறையாளன் எளிதில் பிடிபடுவான்.

காவல் துறை பல் மாற்றங்களுக்கும்,கண்காணிப்புக்கும் உட்படுத்தப் படவேண்டும்.

இதனை சாதிப் பிரச்சினையாக் பார்க்காமல் நமது கண்காணிப்பு முறையில் ஏற்பட்ட தவறாக் எண்ணி இது போன்ற செயல்கள் நட‌வாமல் இருக்க முய‌ல்வோம்.
உயிர் நீத்த சகோதரர்களுக்கு நம் அஞ்சலி.

யார் காரணம் என்றும், எது காரணம் என்றும் அடுக்கடுக்காய் கேள்விகள்,
நேர்மையான நீதி விசாரணை மர்மங்களின் முடிச்சுகளை அவிழ்க்குமா என்று தெரியவில்லை..
காத்திருப்போம் கனன்று கொண்டு இருக்கும் நெஞ்சங்களுடன்..
இந்த கலவர சத்தத்தில் கூடங்குளம் அணு உலை போராட்டம் இருளில் மூழ்கும் அபாயமும் உள்ளது..

நண்பர்கள் சார்வாகன், சூரிய ஜீவா,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

இது போன்ற பிரச்சினைகள் பல பரிமாணங்களை உடையவை.

முடியுமானால் அவற்றைத் தனிப் பதிவில் கருத்தாய்வோம்!

சகோ.
சாதி என்ற தீ கோர தாண்டவமாடியுள்ளது. சாதி என்ற அடையாளங்களை முன்னிறுத்தி செய்யும் செயல்களால் வரும் எதிர்வினைகள். இறந்து போன உயிர்கள் திரும்பி வருமா. அவர்கள் குடும்பத்தில் ஏற்படுத்தப்பட்ட வடுகள் ஆறுமா. நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஏன் சாதி என்கிற எண்ணம் ஒரு மனித மனதில் மிருக எண்ணங்களை தோற்றுவிக்கின்றன என தெரியவில்லை??

நடந்த சம்பவங்கள் வருந்த தக்க விஷயம், அதில் சம்பந்தப்பட்டவர்கள் சுய ஆய்வு செய்ய வேண்டிய சம்பவம்.

நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: