Thiruchchikkaaran's Blog

மாங்கல்யம் தந்துனானே, மம ஜீவன ஹேதுனா…. !

Posted on: September 12, 2011


“கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லுவதோடு,  தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டுகிறார் புரோகிதர். சமிக்ஞை சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பலரும் அதே போல கையை உயர்த்தி  விரலை ஆட்டி “கெட்டி மேளம் , கெட்டி மேளம்” என்கின்றனர். அதோடு இருக்கைகளை விட்டு எழுந்து பூவும் அட்சதையும் போடத் தயாராகின்றனர்.

மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மேடையின் அருகாமைக்கு விரைகின்றனர். வீடியோகிராபரும், போட்டோகிராபரும் மணமக்களை சுற்றி சூழ்ந்து  இருக்கும் உறவினர் நண்பர்களிடம் “சார் , கொஞ்சம் வியூ கொடுங்க” என்று கோருகின்றனர்.  இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையில் கெட்டி மேளம் முழங்க வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் தான் இருக்கும் பரபரப்பில் தாலியை மணப் பெண்ணின் கழுத்தில் கட்டுகிறார் மணமகன்!

மேல தாள ஓசை ஒருபுறம், உறவினர்  நண்பர்களின் உரையாடல்கள்… இப்படிப் பரபரப்புக்கு நடுவிலே கவனிக்கப் படாமல் போவது இந்திய சமுதாயத்தின் மிகச் சிறந்த நாகரிக சிந்தனையான இந்த செய்யுள்,

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”

புரோகிதரும் இந்த மந்திரத்தின் அர்த்தததையோ, அதன் முக்கியத்துவத்தையோ சொல்லிக் கொடுப்பதில்லை.  எல்லோரும் ஹாப்பியா ஒருத்தரை ஒருத்தர் கங்கிராஜுலேசன் பண்ணிண்டு இருக்கா, நாம ஏன் அர்த்தம் பொருள் எல்லாம் சொல்லி டிஸ்டர்ப் பண்ணனும், நாமளும்  ஜோதியிலே கலப்போம் என்கிற ரீதியில் எத்தனையோ சடங்குகளில் ஒன்றாக இந்த மந்திரத்தையும் சொல்கிறார்.

இந்த மந்திரம் எந்த ஒரு தேவனையோ, கடவுளையோ புகழ்ந்தோ, அவர்களிடம் விண்ணப்பமாக அமைந்ததோ இல்லை.  இந்த மந்திரம் மணமகன்  தன்னுடைய வாழ்க்கையில் மனைவி எந்த அளவுக்கு இன்றியமையாதவள் என்பதை உணர்ந்த நிலையை வெளிப்படுத்தும் விதமாக, மனைவியின் மேன்மையை போற்றி அவள் பல்லாண்டு வாழ வாழ்த்தும் பாவாக அமைந்துள்ளது.  இந்திய சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் கோட்பாட்டை இந்த மந்திரம் சொல்கிறது.

இந்திய சமுதாயத்தில்   ஒரு மனிதனுக்கு இன்றியமையாததாக உள்ளது எது என்றால் அது அவன் மனைவியே!மற்ற ஆட்சி, அதிகாரம்,  செல்வங்கள் , நில புலம், காடு , கழனி, வாய்க்கால் வரப்பு, தோட்டம் தொரவு… உள்ளிட்ட எல்லாவற்றியும் இழந்து அவன் நடுத் தெருவிற்கு  வந்தாலும் அவனை அன்பு செய்து அர்ப்பணித்த மனைவி அவன் அருகில் இருந்தால் அவன் கடைத்தேறி விடுவான்.

//சோழ நாட்டின் மிகப் பெரிய பணக்கார வணிகக்  குடும்பங்களில் ஒன்றில் பிறந்தவன் கோவலன்.

ஆசையின் பாதையில் மயங்கி விட்டதால் சொத்து பணம், தொழில், புகழ், நண்பர், உறவினர் அனைவரையும் இழந்து விட்டான். அந்தோ என்னும் கையறு நிலைக்கு வந்து விட்டான். யாருமே அவனுக்கு உதவி இல்லை. யாருமே அவனை நம்பவில்லை. அவனுக்கு கடன் கொடுத்தால் , உதவி செய்தால் … அந்தப் பணத்தையும் மாதவி போன்றவரிடம் கொடுத்து விடுவான் என்று பலரும் எண்ணி இருக்கக் கூடும். அதனால் நல்லவர்கள் கூட அவனை விட்டு விலகி விட்டனர்.

யாரையும் நெருங்கி உதவி கேட்கும் மன  நிலையிலும் அவன் இல்லை. உதவி கேட்கும் தகுதியைக் கூட தான் இழந்து விட்டதாக கருதி விட்டான். வாழ்க்கையே அவனுக்கு முடிந்து விட்டது, தொழில், பணம் , உற்றார் , நண்பர் அனைவரையும் இழந்து விட்டான், நம்பிக்கையை இழந்து விட்டான்.  உணமையிலே கோவலனின் நிலை பரிதாபமானது.

ஆனால் அந்த நிலையிலும் அவனைக்  கை விடவில்லை ஒருத்தி , அவனது கடந்த காலச் செயல்களால்  அதிகம் பாதிக்கப் பட்டவள். அவளைப் பார்த்து அவன் காதல் மொழி பேசவில்லை,அவளை உதறிச் சென்று வேறு பெண்ணிடம் காதல் செய்தவன், அவளை தனிமையில் வாட விட்டவன், அப்படிப் பட்ட கோவலன், எல்லாவற்றையும் இழந்து ஒன்றும் இல்லாமல் வந்த போது, அவனிடம் முழு அன்பைப் பொழிந்து, அவன் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நம்பிக்கை வூட்டி, அவனுக்கு பொருளீட்ட தன்னுடைய சிலம்பையும்  கொடுத்து அவன் வாழ்க்கையில் புதிய புத்துணர்ச்சியை அளித்திருக்கிறாள்.  உயிர் இருந்தும் உயிரற்ற நடை பிணமாக இருந்த கோவலனுக்கு உயிர் அளித்த உத்தமி கண்ணகி. கற்ப்புக்கரசி கண்ணகியே கோவலனின் தெய்வம். //

பார்வதி, சீதை, கண்ணகி, நளாயினி, சாவித்திரி …. இவர்கள் மட்டுமல்ல, இன்றைக்கு வாழும் தெய்வங்களாக உள்ள அன்பு மனைவியறாலே இந்திய சமுதாயம் வாழுகிறது!

திருமணத்தின் போது மணமகன்,  தன வாழ்வில் மனைவியின் முக்கியத்துவத்தை உணரந்தவனாக, இவ்வளவு சிறப்புகளுடைய  என வாழ்க்கை துணைவியே நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் என்பதை சொல்லும் மந்திரமே இந்த “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா…. !”

மம ஜீவன ஹேதுனாஎன்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி  இருப்பவளே

(மம -என்னுடைய, ஜீவன – வாழ்க்கையில், ஹேதுனா-  இன்றியமையாத(வளே)

மாங்கல்யம் தந்துனானே– இந்த மங்கல நானை 

கண்டே பத்னாமி –  உன்  கழுத்தை சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் )

சுபாகே– மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே 

த்வம் சஞ்சீவ சரத சதம்”– நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!

(த்வம் -நீ, சஞ்சீவ- வாழ்க , சரத – ஆண்டு ,  சதம் – நூறு) 

இந்த மந்திரம் மனித வாழ்க்கையின் அடிப்படையை உணர்த்தும் பகுத்தறிவு கோட்பாடாகும் .  இந்த மந்திரத்தை வெறுமனே சொல்வதோடு நில்லாமல், இந்த மந்திரத்தின் பொருளை தெரிந்து  கொள்வதோடு நிறுத்தாமல், இந்த மந்திரத்தின் உண்மையை மனதில் உணர்ந்தவன், தன் மனைவி தன் வாழ்க்கையில் எந்தளவுக்கு இன்றியமையாதவள் என்பதை அறிந்து கொண்டவனின் வாழ்க்கை ஓடம் சிக்கி சிதறாமல் காப்பாற்றப் படும். 

இந்த மந்திரத்தை கணவன்,  திருமண நாளன்று மட்டும் சொல்லாமல் ஒவ்வொரு நாளும், காலையில் எழுந்தவுடன்  தன் மனைவியிடம்  சொல்வது இன்னும் சிறப்பாகும்.

தன்னுடைய உடல் பொருள் ஆவி உள்ளிட்ட அனைத்தையும் தனக்கு வழங்கிய,   தன் வாழ்க்கையில் இன்றியமையாதவ்ளாகக் கிடைத்த மனைவியின் உறவைக் குறிக்கும் மாங்கலயத்தை தினமும் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டியது,  கணவன் செய்ய வேண்டிய செயலே என்றால் அது மிகையல்ல !

Advertisements

8 Responses to "மாங்கல்யம் தந்துனானே, மம ஜீவன ஹேதுனா…. !"

ஓ! அர்த்தம் இதுதானா. இது கூட தெரியாமல் தான் நான் ஒரு கல்யாணம் வேற பன்னிகிட்டேன்… 😉

மந்திரம் என்பது சொன்னவுடன் பலிக்கும் வித்தை கிடையாது. முதலில் அதற்கு ‘மந்திரம்’ என்ற சொல்லை வைத்ததே தவறு. ஒரு ‘மந்திரம்’ என்ற ஒன்றை உச்சரிக்கும் போது அதன் அர்த்தத்தின் படி வாழ வேண்டும் என்பதே. ‘சிவாய நம’ என்னும் போது அதில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் இருக்கிறது. அந்த அர்த்தம் அன்அது மந்திரம் கிடையாது. ஆனால், அந்த அர்த்தத்துக்கு ஏற்றார் போல வாழவேண்டும் என்பதே சரி.

“Na is the Lord’s concealing grace, Ma is the world, Śi stands for Śiva, Va is His revealing grace, Ya is the soul. The five elements, too, are embodied in this ancient formula for invocation. Na is earth, Ma is water, Śi is fire, Vā is air, and Ya is ether, or Ākāśa. Many are its meanings.”

நண்பர்கள் இராம், சீனு

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி !

இராம்.

நீங்கள் காட்டிய சுட்டியைப் பார்த்தேன். வரலாறைப் பொறுத்தவரையில் என்ன நடந்திருக்கும் என ஒரு அனுமானமாகவே கூற இயலும். அறுதியிட்டு உறுதியாக கூற இயலாது.

பகவத் கீதை கிரிஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே போர்க்களத்தில் நடைபெற்ற சம்பாஷணையாக இருப்பதற்கான வாய்ப்பே அதிகம் என்பதே என் கருத்து.

சீனு,

உங்களின் விளக்கத்துக்கு (‘சிவாய நம’) நன்றி!

இந்த மந்திரத்தின் அர்த்தம் என் திருமணத்தின் போது எனக்கும் தெரியாது. இப்போது கூட இந்த மந்திரத்தை (மாங்கல்யம்…) மனைவியிடம் சொல்லி , என் வாழ்வில் இன்றியமையாதவளாக நீ இருக்கிறாய், நீ நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன் என வாழ்த்தலாம். மனைவியின் பிறந்த நாளில் சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

வெறும் மந்திரத்தை சொல்லி அர்த்தத்தையும் சொல்வதோடு கூட ஒரு கிப்டும் குடுத்தால் இன்னும் எபெக்டிவாக இருக்கும் என நினைக்கிறேன்…இதெல்லாம் உங்களுக்கே தெரிந்திருக்கும், இதை விளக்க மந்திரம் தேவை இல்லை. பிறந்த நாள் அன்று வெறும் மந்திரம் மட்டும் சொல்லி கிப்ட் எதுவும் கொடுக்காமல் இருந்தால் சில பல அர்ச்சனைகள் பதிலுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என சில நண்பர்கள் சொல்லுகின்றனர்.

கல்யாணத்தில் கூறும் இந்த மந்திரத்தை விடுங்கள், அன்று கூறப்படும் பல மந்திரங்களில் இன்று வழங்கப் படும் தமிழ் நாகரீகத்துக்கு ஒவ்வாத கருத்துக்கள் அடங்கியிருப்பதாக கேள்விபட்டேன்.. உண்மையா?

நண்பர் சூர்யா ஜீவா, வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி!

இந்த கோட்பாட்டை விட்டு விட இயலாது , இது முக்கிய கோட்பாடு, இந்தக் கோட்பாட்டை புரிந்து இருந்தால் உணர்ந்து கோவலன் மாதவியை தேடி சென்ன்றிருக்க மாட்டான். (கோவலன் தான் வாழ்ந்த பெண்ணுக்கு (மாதவி)செல்வத்தை கொடுத்து விட்டான். இன்றைக்கு நாட்டிலே பலர் இளம் பெண்களிடம் நான் உன் முன்னேற்றத்துக்கு உதவியாக இருப்பேன் என்று வெறும் வார்த்தை ஜாலம் காட்டுவதோடு சரி, அதாவது ஓசி கேசுங்க).

மற்றபடி நீங்கள் குறிப்பிடும் மந்திரங்கள் பற்றி நாம் முன்பே சில பின்னூட்டங்களில் விவாதித்து இருந்தோம். தேடிப் பார்க்கிறேன்!

நல்ல பதிவு,

இனி இந்த தமிழாகத்தையும் சேர்த்து திரும்ணத்தின் போது சொன்னால் சொன்னால் அனைவருக்கும் புரியும.செய்வார்களா!!!!!!!!!

நன்றி

சகோ.
இந்த மந்திரத்தின் அர்த்தம் தந்தமைக்கு நன்றி. இந்த மந்திரத்தை ஒதாமல் பல சாதிகளில் திருமணங்கள் நடப்பது உண்டு. அதனால் இந்த மந்திரம் மட்டும்தான் திருமண பந்ததிற்கு இன்றிமையாதது என்று கூற மாட்டீரகள்.

வேறு நல்ல வாழ்த்துகள் இருந்தாலும் பயன்படுத்தலாம், பயன்படுத்தப்படுகின்றன. இந்த மந்திரத்தின் உட்கருத்து மனித இயல்பு வாழ்க்கையில் பார்பதுதான், ஆனால் எந்த கணவனும் தனது மனைவிக்கு நன்றி செலுத்தினார்களா என்பது சிந்திக்கும் விஷயம்.

இந்த மந்திரம் என்பது ஒரு சாதியின் கலாச்சாராமாகவே தெரிகிறது, அதை பயன்படுத்துவதும், எடுப்பதும் அவரவர் விருப்பம்.

வணக்கம் சகோ . நரேன்,

//அதனால் இந்த மந்திரம் மட்டும்தான் திருமண பந்ததிற்கு இன்றிமையாதது என்று கூற மாட்டீரகள்.//

கூறவில்லை.

இந்து மதத்தைப் பொறுத்தவரையில் எந்த ஒன்றும் கட்டாயமோ, பலவந்தமோ இல்லை. விரும்பினால் எடுத்துக் கொள்ளலாம்.

என்னைப் பொறுத்தவரையில் அக்னியை ஏழு முறை வலம் வருவது கூட அவரவர் விருப்பம். அக்னி சாட்சியாக உன்னை ஒரு போதும் கைவிட மாட்டேன் என்று ஏழு முறை சுற்றி வந்து உறுதி கூறுவதுதான் அக்னி வலம்.. அதாவது அக்னி தேவன் மிக முக்கிய சாட்சியாக கருதப் படுகிறார். ஆனால் அது எல்லாம் அந்த அக்னி தேவனை மதிப்பவருக்கு தான் பொருந்தும். ஒருவன் நல்லவனாக இருந்தால் அவனுக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுத்தல் அவன் எந்த சாட்சியும் இல்லாமலே அந்தப் பெண்ணை கை விடாமல் இருப்பான் ஆனால் பொறுப்பற்ற வனாக இருந்தால் எத்தனை சாட்சி வைத்தாலும் என்றைக்காவது விட்டு விட்டு சென்று விடும் வாய்ப்பு உள்ளது. இன்றைக்கு யாரவது உண்மையிலே இந்த தேவன் கடவுள் இவர்களுக்கு எல்லாம் மதிப்பு தருகிறார்களா?

பதவியை தம்பிக்கு கொடுக்க எனக்கு ஆட்சேபனை இல்லை, அது எனக்கு மகிழ்ச்சியே நான் வனம் செல்கிறேன் என்றார் இராமர். அவர் பேரை உபயோகப் படுத்தி தன்னை வளர்த்துக் கொண்ட பி.சே.பி. கட்சியினர் இன்று கர்நாடகத்தில் செய்யும் வூழல்களைப் பாருங்கள். இராமரின் பேரில் கொஞ்சமாவது மதிப்பு இருந்தால் இவர்கள் இப்படி வூழல் ஆட்சி நடத்துவார்களா?

இந்த ” மாங்கல்யம் தந்துனானே” மந்திரமானது இந்தியாவின் மிகப் பாப்புலரான மந்திரங்களில் ஒன்றாக இருக்கிறது என்பதால் அது என்ன சொல்லுகிறது என்பதை ஆராய்ந்தோம்.

இந்த மந்திரம் ஒரு குறிப்பிட்ட சாதியின் கலாச்சாரம் என்று கருதப் படுமானால் அப்படி தமிழ் நாட்டிலும், கேரளாவிலும் அவ்வாறு கருதப் பட இயலும். .ஏனெனில் ஆந்திர கர்நாடகம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களில் பெரும்பாலான திருமணங்களில் இந்த மந்திரம் ஓதப் படுகிறது.

இந்த மந்திரம் நல்ல விசயங்களை சொல்லுகிறது. பெண்ணின் பெருமையை எடுத்துரைப்பதாக , ஒரு மனிதனின் வாழ்க்கையில் மனைவி எந்த அளவு இன்றியமையாதவள் என்பதை விளக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது என்பதால் இதை சொல்லி இருக்கிறோம்.

இந்த மந்திரத்தை எல்லோரும் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டுரை போடவில்லை. அஸ்ஸலாம் அலைக்கும் என்கிற வாசகத்தைப் பற்றி விவரித்து முன்பு கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதைப் போன்றதுதான் இதுவும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 39 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: