Thiruchchikkaaran's Blog

நீ பணம் கொடுத்து ஒரு பெண்ணிடம் சுகம் பெற சென்றால்…..

Posted on: September 11, 2011


ஒருவர் பணம் கொடுத்து ஒரு பெண்ணிடம் சுகம் பெற சென்றால், அவர் தன்னை அறியாமலே பல அப்பாவி சிறுமிகளின் வாழ்க்கை சீரழிக்கப் பட்டு ,அவர்கள்  பூமியிலே நரக வாழ்க்கை கொடுமையை அனுபவிக்க காரணமாக இருக்கிறார் என்பதை முதலிலேயே சொல்லுகிறோம்.

“நான் எந்தப் பொண்ணையும் கற்பழிக்கவில்லை , எனக்கு இன்பம் அனுபவிக்க விருப்பம் இருக்கிறது, அந்தப் பெண்ணிடம் காசு கொடுத்து, அந்தப் பெண்ணின் முழு சம்மதத்துடன் நான் உறவு கொள்கிறேன், இது தப்பா” என்று ஒரு நான் எவ்வளவு நேர்மையானவன் பாரு, நான் ரொம்ப நல்லவன் என்கிற ரீதியில் சிலர் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். இது ஒரு மேலோட்டமான எண்ணமே. அவர் காசு கொடுத்து விபச்சாரத்துக்கு போவதால் சமுதாயத்துக்கு எத்தனை கடுமையான   கொடுமை உண்டாகிறது என்பதை ஆராய்வோம்.

எந்த ஒரு தொழிலுக்கும் ஆணிவேர் அதன் கஸ்டமர்கள் தான். கஸ்டமர்கள் இல்லாத தொழில் காணாமல் போகும். கஸ்டமர்கள் அதிகரிக்கும்  தொழில் இன்னும் செழித்து விளங்கும்.

உதாரணமாக முன்பெல்லாம் விவசாயத்திற்கு  ஏற்றம் இறைக்கும் சவலை எனப் படும் பெரிய இரும்புக் குடுவைகளை தயாரிப்பது தமிழ் நாட்டின் பேரூராட்சிகளில் முக்கிய தொழிலாக இருந்தது. இப்போது இலவச பம்ப் செட் , இலவச மின்சாரம் எல்லாம் கிடைத்த பின் யாரும் சவலை கட்டி நீர் இறைப்பதும் இல்லை.  அந்த சவலையை செய்யும் தொழிலும் மறந்து விட்டது.

எனவே எத்தனை  ஆண்கள் பணம் கொடுத்து பெண்ணிடம் இன்பம் அனுபவிக்க விரும்புகிறார்களோ, அந்த அளவுக்கு விபச்சாரத் தொழில் விரிவடையும், அதாவது அப்பாவி சிறுமிகளுக்கு இன்னும் ஆபத்து அதிகரிக்கிறது.

ஆனா, ஒவ்வொரு சிறுமிக்கும் ஒரு கனவு இருக்கிறது, அந்தப் பெண் வளர்ந்து ஒரு டாக்டராகவோ, ஒரு கன்னிப் பொறியாளராகவோ விரும்பலாம், அல்லது ஒரு நல்ல கணவனுடன் அன்பான அமைதியான வாழ்க்கையை நடத்தவே விரும்புவார்கள். எந்த ஒரு சிறுமியும் தான் ஒரு விபச்சார விடுதியில் அடைக்கப் படுவதையோ, ஒவ்வொரு தினமும்  எருமை மாடு போன்ற தடிப்  பயல்கள் பலர் மூச்சு  முட்டக் குடித்து தன் மேல் விழுந்து தான் சின்னா பின்னப் படுத்தப் படும் கொடும் தண்டனையில் -இது ஆயுள் தணடனையை விட, மரண தணடனையை விடக் கொடுமையானது – விழ விரும்ப மாட்டாள். 

விபச்சாரத் தொழிலின் ஆணை வேறாக திகழும் மாமா பயல்களும், மாமா காரிகளும் தங்களுடைய தொழிலை விரிவு படுத்த எந்த சிறுமி யை கடத்த தயங்க மாட்டார்கள். இதிலே எந்த ஒரு சிறுமியும் கடத்தப் படும் வாய்ப்பு உள்ளது. நாம் பணக்காரன், அரசியல் செல்வாக்கு உள்ளவன் அதனால என் வீட்டுப் பெண்களுக்கோ, சிறுமிகளுக்கோ ஆபத்து வராது… என்று சிலர் நினைக்கலாம்.

மிட்டா மிராசு ஆளுவோரின் வீட்டுப் பெண்கள் கூட வேறு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல நேரிட்டால், அங்கே தங்கள் குழுவை விட்டுப் பிரிந்து விட்டால் அவர்கள் நிலை ஆபத்தானது, இதிலே காமத் தரகு தொழிலை நடத்தும் பெண் மாமாக்கள் மிக பயங்கரமானவர்கள். அன்பாகப் பேசி அந்த சிறுமியை தங்கள் குடோனுக்கு அழைத்து சென்று விடுவார்கள். அங்கிருந்து மயக்க மருந்து குடுத்து பல இடங்களுக்கு கடத்தப் படலாம். பிறகு பட்டினி  போடப் பட்டு, பல் சித்திரவதை செய்யப் பட்டு பல முறை கற்பழிக்கப் பட்டு காண காணாத இடத்தில் விபச்சாரத் தொழிலிலி தள்ளப் படலாம்.

ஆனால் ஏழை எளிய, ஆதரவற்ற சிறுமிகள் காமத் தரகிகளின்  கையில் சிக்கும் வாய்ப்பு பல மடங்கு  அதிகமாக உள்ளது. எனவே தன்னை ஒரு நாகரிக மனிதன் என்று கருதிக் கொள்ளும் ஒருவன், மனதாபிமான உள்ள மனிதன் என்று கருதிக் கொள்ளும் ஒருவன் … விபச்சாரத்துக்கு போகவோ கூடாது.

காசு கொடுத்து விபச்சாரத்துக்கு போகும் ஒருவன் ஒரு அப்பாவி சிறுமி கற்பழிக்கப் பட்டு பலவந்தமாக விபச்சாரத் தொழிலில் தள்ளப் படுவதற்கு காரணமாக இருக்கிறான் என்பதை தெளிவாக சொல்லுகிறோம்!

(தொடரும்) 

Advertisements

4 Responses to "நீ பணம் கொடுத்து ஒரு பெண்ணிடம் சுகம் பெற சென்றால்….."

sir
immoral trafficking is the scourge of the human kind more particularly to women. such things should be dealt severely. you are absolutely correct, on a personal level one should not promote it by being a customer to its end product..

//காசு கொடுத்து விபச்சாரத்துக்கு போகும் ஒருவன் ஒரு அப்பாவி சிறுமி கற்பழிக்கப் பட்டு பலவந்தமாக விபச்சாரத் தொழிலில் தள்ளப் படுவதற்கு காரணமாக இருக்கிறான் என்பதை தெளிவாக சொல்லுகிறோம்!//

அப்பெண்களை நமது வீட்டின் பெண்களாக இருந்தால் நாம் அந்தச் செயலில் ஈடுபடுவோமா அல்லது நமது எண்ணங்கள் அந்த சூழ்நிலையில் என்னவாக இருக்கும் என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்.

நல்ல பதிவு தொடருங்கள்

thiruchikkaran’s blog is really sensible and useful. I wish him all success. CHAMI

அன்புக்குரிய நண்பர்கள் நரேன் , சுவாமி நாதன் ஆகியோரின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

நரேன், மிக சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

சுவாமி நாதன்,உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி. நம்முடைய தளமானது மக்கள் இணைப்பு, மக்களின் நாகரிக முன்னேற்றம் ஆகியவற்றின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கட்டுரைகளை வெளியிடுகிறோம்.

இந்த தளத்தை ஆரம்பித்த போது, இப்படி ஒரு தளம் எடு படுமா என்று ஒரு தயக்கம் இருந்தது.

இந்த தளத்தின் வாசகர்கள் பலர் சிறந்த நாகரிக சிந்தனைகளை உடையவர்களாக இருப்பதாலே இந்த தளம் ஓடுகிறது. எனவே இந்த தளத்தின் சிறப்புக்கு காரணம் இந்த தளத்துக்கு வருகை தரும் நாகரிக சிந்தனையாளர்களே!

Absolutely right

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: