Thiruchchikkaaran's Blog

கொலையும் செய்வாள் பத்தினி …..!

Posted on: September 10, 2011


என்னவோ மனிதன் தான் உயர்ந்த படைப்பு என்று எல்லாம் சொல்கிறார்கள். விலங்குகள் பசிக்காகவே இன்னொரு விலங்கைக் கொல்லுகின்றன. பசி எடுக்காத போது சிங்கமோ புலியோ மானையோ, காட்டெருமையை யோ கொல்வதில்லை. ஆனால் மனிதன் அப்படி இல்லை. தனக்கு அழகான மனைவி இருந்தாலும் இன்னொரு அழகிய பெண்ணைப் பார்த்தால் அடையத் துடிக்கிறான். இந்த மனிதக் குணம் சில சமயம் விலங்குகளையும் தொற்றிக் கொள்ளும் போல இருக்கிறது.

File:Tigers playing at Pilibhit Tiger Reserve area.jpg

டெக்சாஸ் எல் பாசோ விலங்கியல் பூங்கா வில் செரி என்னும் 3 வயது  பெண்புலியும்  வுசூய் என்னும் 6 வயது  ஆண் புலியும்   சேர்ந்து வாழ்ந்து வந்தன. ஆனால் zooக்கு புதியதாக வந்த மேலி என்னும் 15வயது பெண் புலிக்கு வுசூய் நூல் விட்டிருக்கிறது. இது விடயமாக செரிக்கும் மேலிக்கும் பிரச்சினை உண்டானதால் அதிகாரிகள் மேலியை வேறு செல்லுக்கு மாற்றி விட்டனர்.  தன்னுடைய துணைவன் தனக்கு துரோகம் இழைத்ததால்    வருத்தம் அடைந்த செரி வுசூயை தாக்கிக் கொன்று விட்டது. (வுசூய்  என்ன புலியோ… பெண் புலி தாக்கும் போது தன்னைக் காத்துக் கொள்ளக் கூட முயற்சி  செய்யவில்லை போல இருக்கிறது). மொத்தத்திலே விலங்காக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும் வாழ்க்கையில் துன்பம் வருவது தவிர்க்க இயலாது !

தன்னுடைய மனைவியை விட்டு இன்னொரு பெண்ணுக்கு நூல் விட விரும்புவோர் செரியின் உறுமலை நினைவு கொள்வது நல்லது.

http://news.yahoo.com/tiger-love-triangle-kills-mate-texas-zoo-222652586.html

Advertisements

4 Responses to "கொலையும் செய்வாள் பத்தினி …..!"

பிரபு தேவா நயன் தார mattera தான சொல்ல வரீங்க… கண்டு பிடிச்சுட்டேன்..

well done,seri, congrats.(அனால் மிருகங்களுக்கு இது ஓவர் என நினைக்குமடுத்த வினாடி ஒரு சமயம் இது நம் கண்ணெதிரே நடக்கும் ஒரு வித பரிணாமவியல் வளர்ச்சியோ,என எண்ணவும் தோன்றுகிறது. பரிணாமவியலின் ஒரு சிறு மாற்றமாவது ஒரு உயிரிடமாவது காண நினைக்கிறேன்)
சரி இப்ப நம்ம ஆட்களை பற்றி யோசிப்போம்,
இதுவே ஒரு பெண் அல்லது ஆண் தன் வாழ்க்கை துணையை கொன்றிருந்தால் ஒரு ஜனநாயக நாடாய் இருந்தால் கொன்றவர் இந்நேரம் காவலில் வைக்கப்பட்டு இருப்பார்.
சில நாடுகளில் ஒரு ஆண் இதை செய்திருந்தால் அது அந்நாட்டு சட்டப்படி சரி என ஏற்கப்பட்டிருக்கும். பெண் செய்திருந்தால் அது குற்றமாகக பட்டு கல்லெறிய நாள் குறிக்கபட்டிருக்கும்.

//////என்னவோ மனிதன் தான் உயர்ந்த படைப்பு என்று எல்லாம் சொல்கிறார்கள்//////
மனிதன் மட்டுமே எல்லா விலங்குகளையும் விட கொடூர விலங்காக இருந்து இன்று உலகின் பல அழிவு நாச வேலைகளுக்கு முக்ய காரணியாக விளங்குகிறான், இவ்வுலகில் பெரும் பயனுக்கு மாறாக பறவைகள் கூட மரம் வளர காரணமாகி இயற்கை சூழலை சமபடுத்த தன் பங்கை ஆற்றுகின்றன. தேனீ மற்றும் வண்டினங்கள் கூட தன் பங்குக்கு அயல்மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன. மனிதன் இயற்கையின் எல்லா வளங்களையும் அனுபவித்தும் அதற்கு எந்த விதத்திலும் உதவாமல் மாறாக ஊறு செய்கிறான், ஒசோனை கெடுத்து கொண்டிருக்கிறான்.
ஓவோர் மனிதனும் தன் பங்குக்கு முடிந்த மட்டும் மரங்களை வளர்த்தும் நிலத்தடி நீர் சேகரிக்க உதவியுமாவது இச்சமுதாயத்திற்கு உதவ முயலலாமே,
//////. விலங்குகள் பசிக்காகவே இன்னொரு விலங்கைக் கொல்லுகின்றன. பசி எடுக்காத போது சிங்கமோ புலியோ மானையோ, காட்டெருமையை யோ கொல்வதில்லை. ஆனால் மனிதன் அப்படி இல்லை. தனக்கு அழகான மனைவி இருந்தாலும் இன்னொரு அழகிய பெண்ணைப் பார்த்தால் அடையத் துடிக்கிறான்./////
ருசிக்காக பிற உயிர்களை கொன்று உண்பவன் மனிதன் மட்டுமே.
பாம்பை உன்னாதபோதும் அதையும் கொன்று தோலை விற்கிறான். பாம்பினால் எலித்தொல்லை குறையும், இது இயற்கை அமைத்த சமன்பாடு, வயல்வெளிகளில் விளைச்சலில் எலிகளால் ஏற்படும் நாசம் கட்டுக்கு வரும்..(இது விவசாய மக்களுக்கு சொல்வது)

பெண் மட்டுமல்ல மண் பொன் பெண் மூன்றும்தான் (மூன்றின் மேலுள்ள ஆசையும்தான் )
மனிதனை ஆட்டுவிக்கிறது.இதற்கு யாரும் விதிவிலக்கல்ல, யதனின் யதனின் நீங்கியான் நோதல் அதனில் அதனின் இலன் என்பதை திருக்குறளை தங்களின் வாத வாக்கு என்று கூறிகொள்வோரும் மறந்துவிடுகின்றனர்

அகோலிப்ட்ட படத்தின் ஆரம்பத்தில் ஒரு பெரியவர் கூறும் வரிகள் இங்கு நினைவி கூர்கிறேன்
இந்த உலகம் மனிதனுக்கு அவன் தேவையை எப்போதும் தன்னில்ருந்து தான் தோன்றிய நாள் முதல் கொடுத்து கொண்டிருக்கிறது.அது எவ்வளவு கொடுத்தும் மனிதன் எண்ணம் திருப்தி அடையவில்லை, அது இன்னும் தானுள்ள வரையும் கொடுத்து கொண்டே இருக்கும்.
ஆனால் நம்ம ஆட்கள் குண்டு போட்டும் குத்திக்கொண்டும் செத்து மடிவதோடு இயற்கையை எவ்வாறெல்லாம் அழிக்க முடியுமோ அவ்வளவு அழிப்பார்
கொஞ்சம் யோசித்து செயல்பட்டால் உலக உஷ்ணமயமாதல் மற்றும் இயற்கை சூழல் அழிந்து போதல் இவற்றை தடுக்கலாம், தேவை எண்ணம்தான்.
பசுமையான உலகம் எண்ணத்தில் வந்தால் இயற்கையிலும் வரும்.

செரி என்னும் புலி காஃபிராக இருக்கவேண்டும். அதற்கு அல்லாவின் ஆணை பற்றி தெரியவில்லை. ஆண் புலி 4 திருமணம் வரை செய்யலாம் என்பது அதற்கு தெரியவில்லை.
( வுசூய்க்கு சுன்னத் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.. விவரம் தெரிந்தால் கூறவும்). கட்டாயம் செரி நரகத்துக்கு தான் செல்லும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 37 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: