Thiruchchikkaaran's Blog

ஏம்பா, வீடியோ கேமிராவை வாங்கி மெட்ரோ நகர தெருக்களில் பொருத்தக் கூடாதா…

Posted on: September 8, 2011


ஏம்பா,  வீடியோ கேமிராவை வாங்கி மெட்ரோ நகர தெருக்களில் பொருத்தக் கூடாதா…

அந்த காமிராவில் பதிவாவதை காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கும் படி பல டி.வீ. க்களை காவல் நிலையத்தில் வைக்க முடியாதா?

கடந்த இருபத்து நாலு மணிநேர காட்சிகளை  மெமரியில் பதிவு செய்யும்படி வைக்க முடியாதா?

இதை எல்லாம் யாராவது வந்து சொல்லியா தர முடியும்?

இதை தில்லியிலே எவ்வளவு செலவு பண்ணி காமன் வெல்த் கேம்ஸ் நடத்தினீங்க…

அதுல எவ்வளவு அடிச்சீங்க…

அதை விட முக்கியமானது பாதுகாப்புனு தெரியாதா…

ஆட்சியில இருந்து என்னதான் பண்ணுறீங்க…

Advertisements

8 Responses to "ஏம்பா, வீடியோ கேமிராவை வாங்கி மெட்ரோ நகர தெருக்களில் பொருத்தக் கூடாதா…"

மனிதனை மதத்தின் பெயரால் பிளவு படுத்தவே அரசு இப்படி நடந்து கொள்கிறது.. ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சும்மாவா சொன்னாங்க..

இப்போது உள்ள தொழில் நுட்பத்தில் 10000க்கும் ரூபாயிக்கும் குறைவான செலவில் 2CCTV IR CAMERA + 1MONTH 24/7 HARD DISC RECORDING + IP வசதியுள்ள CHINA PACKAGE கள் மார்கெட்டில் கிடைகின்றன.. அரசு மொத்தமாக கொள்வனவு செய்தால் நான்கில் ஒரு பங்கு செலவில் தேவையான இடங்களில் பொருத்திவிடலாம்.

மேலும் CCTV பற்றி அறிந்து கொள்ள இந்த விக்கி லிங்கை பாருங்கள் http://tawp.in/r/1lhv

சகோதரர்கள் சூர்யாஜீவ் & ஒதிகை நிழல்

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி !

சூர்யாஜீவ்,

இது பொறுப்பில் உள்ளோரின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. எத்தனை குண்டு வெடிச்சாலும் இந்தியன் தடவிக்கிட்டு போய்க் கிட்டே இருப்பான், நாம குவிக்கிற வேலையை முடிப்போம் என்ற எண்ணப் போக்கு இருக்கலாம்.

ஒதிகை நிழல்,
ஒன மன் த் ரெகார்டிங் இருக்கிறது என்கிறீர்கள். அதை எல்லாம் வாங்கி பிக்ஸ் பண்ண கூடாதா, அதுலயும் ஏதாவது கமிசன அடிக்காமலா இருக்கப் போறாங்க, அந்தக் கமிசனுக்காவாவது காமிராவை வாங்கி பிக்ஸ் பண்ணும் எண்ணம் இவங்களுக்கு வந்து தொலையக் கூடாதா என்று தோன்றுகிறது.

இன்று ஹிந்து நாளிதழின் முதல் பக்கம் காண முடியாத கோரம். மனிதன் என்ன இரும்பாலான உடலா வைத்திருக்கிறான் , சதை பிச்சி பாதி உடம்பு அப்படியே கிடக்குது… என்ன வாழ்க்கை இது!

வணக்கம் நண்பரே,

இம்மாதிரி கேமராக்கள் பொருத்தலாம்.

பல பயன் பாடுள்ள அடையாள அட்டையின் தேவை மிகவும் அவசியம்.ஏற்கெனவே பலர் கடவுச்சீட்டு,வாக்களர் அட்டை,ஓட்டுனர் உரிமம் என்று ஏதாவது வைத்து இருக்கிறார்கள்.அவை அனைத்தையும் குடியுரிமை எண்ணோடு ஒரே அட்டையாக்கினால் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

பயோ மெட்ரிக் அடிப்படையில் தக்வல்கள் அந்த அட்டையில் ஏற்றி விட்டால்.பாதுகாப்பு,கண்காணிப்பு உடபட பல் விஷயங்களுக்கு பலன்ளிக்கும்.ஏன் நம்க்கு தோன்றுவது அரசியல்வாதிகளுக்கு தோன்றுவதே இல்லை.ஒரு தவறில் இருந்து சரியானதை கற்பவனே மனிதன்.

பல் நாடுகளில் குண்டு வெடிப்பு என்பது தினமும் நடக்கும் ஒரு செயல் ஆனது போல் இங்கும் ஆக கூடாது என்றால் பல மாற்றங்கள் அவசியம்.அப்ப்டி செய்யும் அரசே நம்க்கு தேவை.
நன்றி

நண்பரே.

வீடியோ காமிராக்களை வாங்கி மாட்டுவதால் கமிஷண் அதிகம் கிடைக்காது என்பதால் மாட்டவில்லை போலும். பொறுப்பாளர்கள் கோடிக்கணக்கில் நினைப்பதால் இந்த மாதிரி சின்ன விஷயங்களை சிந்திப்பதில்லை போலும். 15 உயிர்கள் போனால் அவர்களுக்கு என்ன கவலை. அவர்கள் வீட்டில் சாவு விழாத வரை.

கண்டிப்பாக வீடியோ காமிராக்களை வாங்கி பொருத்த வேண்டும். ஆனால் மதவாதிகளுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி தங்களுக்கு தேர்தலில் வாக்குகள் கிடைப்பதில் பாதிப்பு வந்து விடுமோ என்று அரசு தயங்குவதாகவும் இருக்கலாம்! மதத்தின் பெயரால் குண்டு வைத்து மனிதனை சாகடித்துள்ளான் இந்த கொடுமையை கொதிப்படைந்து கண்டிக்க வேண்டாமா? எவ்வளவு பேர் கண்டித்துள்ளார்கள்?

இது மத வாதத்தின் காரணமாக வைக்கப் பட்ட குண்டா என்பது தெரியவில்லை.

நண்பரே, பக்கத்து நாட்டுகாரன் பொறாமையில் குண்டு வைத்து விட்டான் என்றே வைத்து கொள்வோம். கொல்லபட்டவன் மனிதன் தானே! கண்டிக்க வேண்டாமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: