Thiruchchikkaaran's Blog

நீதிக்கு தலை வணங்கு ! சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம் !

Posted on: September 7, 2011


தமிழகத்தின் இந்தியாவின்  காவல் தெய்வம், கோடானு கோடி மக்களின் இதய தெய்வம், சமூக  நீதி காத்த வீராங்கனை (உபய  தாரர் மானமிகு வீரமணியார் ), தங்கத் தலைவி,  நிரந்தர முதல்வர், இந்தியாவின் வருங்கால …..

ஹா, ஹா, அண்ணே … ஹா, ஹா, எண்ணன்னே இது!

இருப்பா, முக்கியமான கட்டுரை எழுதிகிட்டு இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணாதே!

அண்ணே , பெரிய சூரப் புலி மாதிரி தலைப்பை போட்டுட்டு இப்ப இப்படி போஸ்டர் அடிக்கிற மாதிரி எழுதறீங்க !

தம்பி, இப்படி உக்காரு,

ஒரு கட்டுரைன்னு இருந்தா அதுல நாலும் இருக்கத் தான் செய்யும் ,நான் சொல்லுறதை முழுசா கேளு  ….

அட எண்ணானே.. சரி சொல்லுங்க…

நம்ப அம்மா இருக்கங்களே, அவங்க சின்ன வயசிலே மிகப் புகழ் வாய்ந்தவங்க … அவங்க கான்வென்டில படிக்கும் போது “பெஸ்ட் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டுடென்ட்” மெடல் வாங்கினவங்க.

“பெஸ்ட் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டுடென்ட்” னா அது எண்ணானே?

அப்படி கேளு , இதுக்கு தாண்டா வூரில என்னை மாதிரி ஆளுங்க இருக்கனும்கிறது!

“பெஸ்ட் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டுடென்ட்” னா படிப்பு, விளையாட்டு, சொற்பொழிவு, பாட்டு, நடனம், நல்ல மனம், நல்ல குணம் … இதில் எல்லாம் அவங்களை பீட் பண்ண யாருமே இல்லை , அவங்க தான் டாப் புனு அர்த்தம்.

சரி அதுக்கும் இந்த கட்டுரை தலைப்புக்கும்  என்ன சம்பந்தம்?

அவங்க தொடர்ந்து படிச்சு இருந்தா பெரிய விஞ்ஞானியாக கூட ஆகி இருப்பாங்க.

நோபெல் பரிசு னு சொல்றாங்களே அது கூட கிடைச்சிருக்குமா அண்ணே!

ஆஹா

ஓஹோ!

சரி சட்டு புட்டுன்னு விசயத்துக்கு வாங்க அண்ணே !

இவ்வளவு அறிவும், திறமையும், புத்திக் கூர்மையும் உடையவங்களுக்கு ஒரே ஒரு படிப்பை மட்டும் டீச்சருங்க சொல்லிக் கொடுக்கலை.

அது என்ன படிப்பு?

அந்த படிப்பு “விஞ்ஞான முறையில் சொத்து சேர்ப்பது எப்படி” என்பது!

ஏண்ணே நாட்டில் மிகப் பிரபலமான வாக்கியம் “விஞ்ஞான முறையில் வூழல் செய்வது” என்பதுதானே. நீங்க வேணுமின்னே மாத்தி சொல்றீங்க.

டே முள்ளம் பண்ணி தலையா நான் சொன்னது “விஞ்ஞான முறையில் சொத்து சேர்ப்பது எப்படி” என்று தான்.

என் தலை எப்படியோ இருக்கட்டும். உங்க தலை தப்புமான்னு பாருங்க.

(சற்று இறக்கமான குரலில்)தம்பி அப்படி எல்லாம் சொல்லக் கூடாது, நாம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு இல்லையா.

சரி சரி , “விஞ்ஞான முறையில் சொத்து சேர்ப்பது ” னா அது எண்ணானே!

நல்லா கேட்டுக்க, கேட்டுட்டு வூரில நாலு பேர் கிட்ட  போய் சொல்லு , இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா நல்லவரு , வல்லவரு…பெண்டு எடுக்கறதுல … அப்படின்னு,

பெண்டு யாருக்கு எடுக்கறாங்கனு அப்புறம் பார்க்கலாம், நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க , “விஞ்ஞான முறையில் சொத்து சேர்ப்பது ” னா அது எண்ணானே!

அதாவது இந்த பில்  கலெக்டர் முதல், இன்கம் டாக்ஸ் கலெக்டர் .. . சி.பி.ஐ அதிகாரி உட்பட இந்த உலகத்தில் இருக்கிற எந்த அதிகாரி வந்து எந்த சோதனை போட்டாலும் நம்மிடம் இருக்கும் சொத்து உலகில் எல்லா நாட்டு சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு மிகவும் நேர்மையாக சரியாக வாங்கப் பட்டது என்பதாக இருந்து ,அந்த சோதனை போடும் அதிகாரி சாரி பார் டிஸ்டர்பன்ஸ் , ஆல் டாக்குமென்ட்ஸ் ஆர் கரெக்ட்” என்று சொல்லி விட்டு வியர்வையை துடைத்துக் கொண்டே வெளியே போக வேண்டும். இதுதான் விஞ்ஞான முறையில் சொத்து சேர்ப்பது என்பது.

ஏன்னே, அப்ப எப்படி வேணாலும் சம்பாரிச்சுக்க்லாம், எப்படி வேணும்னாலும் சொத்து சேர்த்துக்கலாம், ஆனால் எல்லாமே ” சட்டப் படி” , விதி முறைகளின் படி கரெக்டா இருக்கறதா டாகுமென்ட் இருந்தா போரும் அதுதான் நீங்க சொல்லும் விஞ்ஞானமா?

ஆமா இராசா !

ஏன்னே இதுக்குப் பேரு விஞ்ஞானமா?

ஆமாம்பா, இன்னிக்கு உலகத்தில பல பேருக்கு இந்த விஞ்ஞானம் தான் ரொம்ப ரொம்ப தேவையா இருக்கு. அதுவும் இந்தியாவில இந்த விஞ்ஞானத்துக்கு பயங்கர டிமாண்ட் தம்பி! சில  நோய் வந்தா கூட அதோட எபக்ட் தெரிய கொஞ்ச நேரம் ஆவுது. ஆனா இந்த விஞ்ஞானம் பற்றாக்குறையாக இருந்தால் உடனடி அட்டாக் ஆகுது , விடியக் காலை அட்டாக் என்று ஒன்று இருக்கிறது. விடியக் காலையில பெங்களூர்ல ஒரு ஆளை பிடிச்சு 400 மைலுக்கு அப்பால ஹைதராபாத்ல கொண்டு போய் போடுது  அப்பா!

நீங்க என்ன சொல்ல வரீங்க, சொத்து அதிகமா இருக்கு .. அப்படிங்கறீங்களா?

அப்படி எல்லாம் நான் சொல்லலை ராஜா, அதை எல்லாம் பற்றி தீர்ப்பு சொல்ல வேண்டியது கோர்ட் தானே.

ஆனா கோர்ட்டில வழக்கு நடந்தா யாரா  இருந்தாலும் நேரில் போய் விசாரணையை சந்திக்கணும் அப்படினுதான் கோர்ட் சொல்லுது. கோர்ட்டுல கேசு ஒன்னும் இல்லாம கூட போயிடலாம், இன்னும் அப்பீல் எல்லாம் இருக்கு. அதுனால எந்தப் பிரச்சினையும் இல்லாம முடிஞ்ச அப்புறம் நீங்க விழா எடுத்து தெருவுக்கு தெரு இனிப்பு வழங்கி “காலத்தை வென்றவள் நீ, காவியமானவள் நீ”  அப்படின்னு லவுட் ஸ்பீக்கர்ல பாட்டு போட்டுக்கலாம்பா!

அப்படி செய்யுறதை விட்டுட்டு இப்ப எதுக்கு இந்த கட்டுரை எல்லாம்.

அதாவது நாட்டு நிகழ்வுகளை மக்களுக்கு தெரியப் படுத்தத் வேண்டிய கடமை…

அண்ணே , ஐ டோன்ட் லைக் திஸ், எனக்கே பெரிய செல்வாக்கு இருக்கு, அவ்வளவுதான் சொல்வேன்…

தம்பி இருப்பா , நாம எத்தனை வருசப்  பழக்கம் ,

அடப் போங்கண்ணே (வேகமாக நடக்கிறார் )….

தம்பி இருப்பா (பின்னாலே ஓடுகிறார்)!


Advertisements

3 Responses to "நீதிக்கு தலை வணங்கு ! சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம் !"

சார் இருந்தாலும் கொஞ்சம் நக்கல் தான், அடுத்த ஆளின் கேள்விகளை ”அம்மா”விற்கு பிடித்த பச்சை நிறத்தில் தந்தமைக்கு.

இதிலிருந்து தெரிய வரும் செய்தி
1. யாராக இருந்தாலும் நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் அனைவரும் சமம்.

2. காசு இருந்து பெரிய வக்கீலை அமர்த்தினால் எல்லா வழக்குகளும் தூள் தூள். அம்மா 21 “பொய்” வழக்குகளில் விடுதலை. “தாத்தா’ வும் அவரின் குடும்பத்தாரும், கழக குடும்பத்தாரும் “பொய்” வழக்குகளை சந்திக்க ரெடி.

3. அம்மாவின் தற்போது ஒரே குடைச்சல் முதல் மந்திரியாக நீதிமன்ற செல்வதுதான். முதல் மந்திரியாவதற்கு முன்னால் வாய்தா வாங்காமல் ஒரு எட்டு சென்றிருந்தால் இன்னும் இரண்டு வருடதிற்கு கதையை ஓட்டிருக்கலாம்.

4.அம்மாவின் நிலைமை பார்த்து அரசியல் தலைவர்கள் அம்மா உட்பட எல்லோரும் எப்படி விஞ்ஞான பூர்வமாம சொத்து சேர்ப்பது என்று தேர்ச்சி பெற்றுவிட்டார்கள்.

5. பாவம் பொதுஜன மக்கள்.

வணக்கம் சகோ!!!!!

மதத்தில் அறிவியல் போதாதென்று இப்போது ஊழலிலும் அறிவியலா!!!!!!

கண்ணைக் கட்டுதே!!!!!!!!!!!!!.
_________
நீதிக்குத் தலை வணங்கு திரைப்படம் அருமையான படம்.சமீபத்தில் கூட இணையத்தில் பார்த்தேன்.அதில் புரட்சி தலைவர் லதா நடித்து உள்ளார்கள்.

பல பாடல்கள் அருமை.
திரு ஜேசுதாஸ் பாடிய “இந்த பச்சைக் கிளிக்கொரு செவ்வந்தி பூவில்,

அய்யா டி.அம் எஸ் & சுசீலா அம்மா பாடிய “கன்வுகளே ஆயிரம் கனவுகளே” போன்ற தித்திக்கும் பாடல்கள் நிறைந்தது.

அத்திரைப்படத்தில் நடிக்காததால் நீங்கள் குறிப்பிட்ட விஷயம் அவருக்கு பொருந்தாது.வேறு படம் சொல்லுங்கள்.

நன்றி

ரொம்ப நன்றி சகோதரர். வந்தாலே மகராசி தலைப்பு ஓகேயா இருக்குமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: