Thiruchchikkaaran's Blog

செவ்வாய்க் கிழமைக்குள் கள்ளப் பணக் கணக்கை வெளியிடு, சுவிஸ் வங்கிக்கு கெடு!!

Posted on: September 6, 2011


கட்டுரையின் தலைப்பைப் படித்து விட்டு இந்திய அரசின் உயர் அதிகாரிகளோ, மாண்பு மிகு பிரதமர் மன்மோகன் சிங்கோ , மாண்பு மிகு பிரணப் முகர்ஜியோ  மாண்பு மிகு ப. சிதமபரமோ … இந்த கெடுவை  விதித்தாக எண்ணி விட வேண்டாம்.

சுவிஸ் வங்கிகளுக்கு கிடுக்கிப் பிடி போட்டு அவர்களின் சிண்டைப் பிடித்து ஆட்டுவது அமெரிக்காவின் அட்டர்னி ஜெனெரல் !

சரி, அமேரிக்காகாரன் கேக்குறான் என்றால் அவனுக்கு பண நெருக்கடி. நமக்கு என்ன பிரச்சினை , அதான்  இளிச்சவாய் இந்தியன் வரியையும் கட்டி விட்டு, மாத மாதம் வாங்கிய லோனுக்கான பணத்தையும் வங்கியில் சரியாக கட்டி விடுகிறானே.  அப்ப நம்ப வங்கிகளும் நல்ல நிலையில் இருக்கு, அரசாங்கத்துக்கும் நிறைய வரி வருது.

அப்ப நாம எதுக்கு சுவிஸ் வங்கியிடம் கணக்கு கேட்க வேண்டும்,  அவன் அவன்  எவ்வளவு கஷ்டப்பட்டு வூழல் செஞ்சு சம்பாரிச்ச பணம், அதன் அருமை அவனுக்குத்தான் தெரியும் என்கிற சிந்தனையில் உள்ளனர் ஆளும் வர்க்க அறிவு ஜீவிகள் – அதாவது ஜால்ரா கோஷ்டிகள்  !

அமெரிக்கர்களின்  பணம் எந்த அளவுக்கு சுவிஸ் வங்கிகளில் உள்ளதோ அதை விட மடங்கு பல அதிகமாக சில பல இந்தியர்களின் பணம் உள்ளது. அந்தப் பணத்தை வெளியே எடுத்தால் உலக பொருளாதார சுனக்கமே சரியாகி விடும் என்கிறார்கள்.

முதுகொடிய உழைக்கும்  மக்களின் வரிப்  பணம் தானே இப்படி கள்ளப் பணமாக இருக்கிறது என எந்த அடிவருடியாவது நினைக்கிறானா? கள்ளப் பணத்தை பற்றிப் பேச்சு எடுத்தால் அவன் மீது ஆயிரம் வழக்குப் போட்டு அவனை ஒன்னும் இல்லாமல் ஆக்கி விடு என்பதுதானே இன்றைக்கும் பல்லக்கு தூக்கிகளின் பாவ கோட்பாடாக உள்ளது!

File:Credit Suisse building (London) Feb 2011.jpg

சுவிஸ் வங்கிகள் கள்ளப் பண விவரத்தை வழங்காவிட்டால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து பல பில்லியன்களை பைன் கட்டும்படி வைப்போம் என்கிறார்கள்.

If Switzerland does not comply, the United States could issue a subpoena against the banks to force them to hand over data, as it did in the case of UBS, the SonntagsZeitung and NZZ am Sonntag reported.

“This will be much more expensive as with UBS that had to pay a fine of $780 million,” one banking source told the SonntagsZeitung. “We expect that the Swiss banks will have to pay a fine of up to 2 billion Swiss francs ($2.6 billion) and deliver much more client data than in the UBS case.”

அய்யய்யோ அமேரிக்கா பெரிய நாடு, அவங்க கேட்டால் குடுப்பான் , நாம் கேட்டால் குடுப்பானா… என்று மழுப்புவார்கள். இந்தியா என்ன சிறிய நாடா? பொருளாதரத்தில்  உலகில் மிக வேகாமாக வளரும் நாடுகளில் இந்தியா ஒன்று. இந்திய மார்க்கட்டை பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் போட்டி போடுது. இந்த சுவிஸ் என்ன பெரிய வல்லரசா . நாம நம்ம நாட்டுக்கு சேர வேண்டிய பணத்தை தானே கேட்கிறோம்.

வங்கிக் கணக்கை தராவிட்டால் தூதரக உறவுகளை முறித்துக் கொள்வோம் என அறிவிக்க வேண்டும். இந்தக் கள்ளப் பணம் தான், கஞ்சா கடத்தல், இளம் சிறுமிகள் டிராபிக்கிங்..முதல் தீவிரவாதம் வரைக்கும் பொசிகிறது. இதை சர்வ தேச அரங்கில் இந்தியா எடுத்து விளக்கி, சுவிஸ் திருட்டுப் பணத்தை காப்பது மனித விரோத செயல் என்று எடுத்து சொல் வேண்டும். மேலும் இந்தியா , வடகொரியா போல ரோக் ஸ்டேட் அல்ல.

உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு மதிப்பு உண்டு. எனவே இந்தியாவும் சுவிஸ் வங்கிகளுக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் ஜால்ரா  கோஷ்டிகள் சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தை இன்னும் ரகசியமாக இருக்கவே முயலுமோ  என மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

http://www.reuters.com/article/2011/09/04/us-switzerland-usa-tax-idUSTRE7830IA20110904

Advertisements

3 Responses to "செவ்வாய்க் கிழமைக்குள் கள்ளப் பணக் கணக்கை வெளியிடு, சுவிஸ் வங்கிக்கு கெடு!!"

வணக்கம் நண்பரே,

இந்த அமெரிக்கா,சுவிஸ் சண்டை பங்கு பிரிப்பதில் வந்தது.சத்தம் போடாமல் பங்கு போட்டுக் கொள்வார்கள்.அமெரிக்கர்களின் பணம் வரி ஏய்ப்பு செய்தது,வரி மட்டும் சுவிஸ் வங்கி கணக்கிட்டு கொடுத்தால் பிரச்சினை முடிந்தது.

நம்மவர்கள் அந்த காசு போனாலும் போகட்டும் என்று நினைப்பார்களே தவிர இந்தியாவிற்கு கொண்டுவர விடமாட்டார்கள்.அத்தனையும் ஊழல் பணம்.பணமே அப்ப்டி இல்லை என்றுதான் சொல்வார்கள் இல்லையெனில் குற்றச் சாட்டு உறுதியாகிவிடுமே!!!!!!!!.

நன்றி

வணக்கம் சகோ. சார்வாகன்,

உங்கள் விளக்கம் சிறப்பாக உள்ளது.

ஆனால் அமெரிக்க அரசு வரி எய்ப்பு குற்றத்தை தண்டிக்காமல் விட்டு விடுமா?

ஜெர்மனி போன்ற நாடுகளில் வரி எய்ப்பு குற்றம் செய்தவரை தண்டிக்காமல் விட மாட்டார்கள். ஸ்டெபி கிராபின் தந்தை வரி ஏய்ப்பு குற்றத்துக்காக சிறையில் இருந்ததாக நினைவு!

நண்பரே.

மக்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று, சுவிஸ் வங்கி தகவல்களை சேகரிக்க வெளியிட மத்திய அரசு பகிரங்கமாக மறுக்கிறது. அந்த அளவுக்கு மக்கள் முட்டாள்கள் என்று மத்திய அரசுக்கு நம்பிக்கை.

இந்த தெனாவாட்டு எதனால் என்றால் கட்சி பேதமில்லாமல் எல்லோரும் சுவிஸ் வங்கியை நாடியிருக்கிறார்கள். மக்களுக்கு அதன் தாக்கம் இல்லை என்று கட்சிகளுக்கு நம்பிக்கை.

மத்திய அரசாங்கம் செய்ய வேண்டிய செயல்களை எல்லாம், உச்சநீதிமன்றம் செய்யவேண்டியுள்ளது. மத்திய அரசாங்கம், கட்சிகளுக்கு வெட்கம் மானம் சூடு ஒன்றுமே கிடையாது. அவர்கள் மக்களுக்கு அது இல்லை என்று நினைக்கிறார்கள் போலும்.

நல்ல பதிவு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: