Thiruchchikkaaran's Blog

இரட்டைக் குவளை முறை நீங்கி சமத்துவம் அமைய …!

Posted on: September 4, 2011


சகோதரர் சார்வாகன்  நமக்கு அளித்த பின்னூட்டத்தில் சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் அமைப்பதில் உள்ள தடங்கல்கள் குறித்து கீழ்க்காணுமாறு  குறிப்பிட்டு வருத்தப் பட்டார் !

//ஒரு முறை ஜீனியர் விகடனில் ஒரு புகழ் பெற்ற பகுத்தறிவு பேச்சாளர் இப்படி கூறியிருந்தார்

“கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் பேச சென்ற போது அந்த ஊரில் உள்ள இரட்டை குவளை முறை பற்றி பேச முயன்ற போது கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் சாமியை பத்தி என்ன வேண்டுமானாலும் பேசு,சாதியை பத்தி பேசினால் நடப்பதே வேறு”!

என்று கூறியதை சொல்லி வருத்தப் பட்டார்.இதில் இருந்து என்ன தெரிகிறது ?

” செல்லுமிடத்து சினம்”அவ்வளவுதான்.!!!!!!!!!!!!//

அதற்க்கு நாம் பதிலாக,

“இரட்டைக் குவளை முறையைஒழிக்க விரும்பவோர் வெறும் பிரச்சாரம் செய்தால் பலன் கிடைக்குமா?

அமைப்பு பலம் சார்ந்தவர்கள் கிராமங்களில் புதிய தேநீர் விடுதிகளை அமைக்க வேண்டும். மிகவும் சுவையான தேநீர் மற்றும் பலகார வகைகளை அங்கே கிடைக்க செய்ய வேண்டும். தேனீர் விடுதியும் நல்ல இருக்கைளுடன் சிறப்பாக இருக்க வேண்டும்.

ஆனால் இரட்டை குவளை முறை எல்லாம் கிடையாது. எல்லோருக்கும் ஒரே குவளை தான். ஆனால் சுத்தமாக ஸ்டீம் போட்டு கழுவி தருவோம் என்று சொல்ல வேண்டும். விருப்பமிருந்தால் வந்து குடியுங்கள் என சொல் ல வேண்டும். தரமான தேநீர், தரமான விடுதியில் குடிக்க விரும்பினால் வந்து குடிக்கட்டும். அப்படி இல்லாவிட்டாலும் கவலை இல்லை, இரட்டை குவளை முறையில் டிஸ்கிரிமினேட் செய்யப் படுபவர்கள் இந்த தரமான விடுதில் தரமான தேநீரை பருகுவார்கள். இரட்டை குவளை ஆதரவாளர்கள் அவர்கள் விரும்பும் இடத்திலேயே குடிக்கட்டும்.ஆனால் உயர்ந்த ரக தேநீரை பருகுவோர் தாழ்மையான வராக்கக் கருதப் பட இயலாது.
சிற்றுண்டிகளும் சுவையாகவும், தரமாகவும் இருந்து செர்வீசும் சிறப்பாக இருந்தால் சிறிது நாள் பார்த்து விட்டு இந்த விடுதிகளுக்கு ஆதிக்க சாதியினரும் வர ஆரம்பிப்பார்கள்.

அதே நேரம் இவை போன்ற விடுதிகள் லாபகரமாக இயங்குமா என சொல் இயலாது. இவற்றை சமூக முற்போக்கு சாரிட்டியாகவே கருதப் பட இயலும்.”

என்று எழுதினோம்.

இதை விட்டு விட்டு வெறுமனே கூட்டம் போட்டு பேசினால் நல்ல பலன் கிடைக்குமா என்பது ஐயமே 

மேலும் சிறந்த தேநீர் விடுதிகளோடு சிறிய அளவிலான தீம் பார்க்குகளும் அமைக்கப் படலாம். அவற்றில் விளையாட எல்லோருக்கும் சம அனுமதி. ஜெயன்ட் வீலில் அருகருகே அமர்ந்து செல்ல வேண்டியிருக்கும். இப்படியாக மக்களிடையே வேறுபாடு நீங்கி நட்பு வளர வசதி செய்து கொடுக்க வேண்டும். இந்த முறையில் மக்கள் இணைய மகத்தான  வாய்ப்பு உள்ளது.

 

இப்படி தீம் பார்க்குகளோடு பொது நூலகமும் அமைக்கப் பட்டு நல்ல நூல்கள் அதிலே தரப் பட வேண்டும்.

இவற்றோடு சிறுவர்களின்  மனதில் நிதானம் , பொறுமை, சக மனிதரை மதிக்கும் பண்பாடு, நேர்மை ஆகியவற்றை தொடர்ந்து பயிற்றுவிக்க வேண்டும். பிற மனிதரை மதிப்பதுதான் உண்மையான சிறப்பு.

ஆனால் தமிழ் நாட்டில் பிற மனிதரை சிறுமைப் படுத்தி அவமரியாதை செய்வதுதான் தன்னுடைய சுயமரியாதை என்ற எண்ணம்  உள்ளது.

ஒரு நாட்டில் எத்தனை மக்கள நாகரீகமும், பண்பாடும், பிறரை மதிக்கும் தன்மையும், பிறரை இழிவு செய்ய  துன்புறுத்த தயங்கும் தனமையும், பிறரிடம்  சிநேகமும் உள்ளவர்களாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு அந்த நாடு சமத்துவ சமுதாயம் உடையதாக இருக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: