Thiruchchikkaaran's Blog

போராட்டக்காரர் சங்கர ராமன் நினைவு நாள் அஞ்சலி!

Posted on: September 2, 2011


காஞ்சிபுரம் வரதராஜன் கோவில் மேலாளராக இருந்தவர் திரு. சங்கரரராமன்.
செப்டம்பர் 3, 2004 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப் பட்டார். அவர் படுகொலைக்கு பின் நடந்த நிகழ்வுகள் தமிழகத்தில் ஒரு பெரும் புயலைக் கிளப்பிய நிகழ்வுகள் ஆகி விட்டன.
அந்த நிகழ்வுகளைப் பற்றி பல சர்ச்சைகள் நடை பெற்று வருகின்றதேயல்லாமல், சங்கர ராமன்  நடத்திய  போராட்டங்கள் பத்திரிகைகளால் புறக்கணிக்கப் பட்டு விட்டன.

சங்கர ராமன் தனக்கு அருகில் நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் துணிவு உள்ள ஒரு போராட்டக்காரர்.

சங்கர ராமன் ஒரு பெரிய அறிங்கர் அல்ல.  ராஜா ராம் மோகன் ராய், விவேகானந்தர்,அம்பேத்கர், பெரியார், பாரதி இவர்களைப் போல சமுதாயத்தின் பலவேறு தளங்கள், அவற்றில் நிலவி வரும் பிரச்சினைகள், அதில் உள்ள அநீதிகள், அதற்கான தீர்வு பற்றிய தன்னுடைய அறிவுரை மற்றும் நிலைப்பாடு – பற்றிய தன் கருத்தை தெரிவிக்கும் அளவுக்கு சங்கர ராமன் ஒரு அறிங்கரோ, பேராசிரியரோ அல்ல.

சங்கர ராமன் ஒரு சாதாரண மனிதன்- ஆனால் தனக்கு அருகில் நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் துணிவு உள்ள ஒரு போராட்டக்காரர்!

1980 முதல் 2004 வரையிலான கால கட்டத்தில் யாராலும் எதிர்க்க முடியாத அளவுக்கு, யாரும் எதிர்க்க தயங்கிய அளவுக்கு மிகப் பெரிய சக்திகளை தனியாக நின்று எதிர்த்து இருக்கிறார்.

அவரின் பின்னே அணி வகுக்க இலட்சக் கணக்கில் தொண்டர்கள் யாரும் கிடையாது. ஒருவர் கூட இல்லை. ஆனால் அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப் படவும் இல்லை தனியாக நின்று போராடி இருக்கிறார்.

பெரிய அரசியல் சக்திகள்  கூட காஞ்சியில் உள்ள அமைப்புகளை   எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் காஞ்சியில் உள்ள அமைப்புகளை  திட்டி அதனால் ஓட்டு கிடைக்குமா, துட்டு சேருமா  என்ற வகையிலே செயல்பட்டார்களே அல்லாமல் அந்த அமைப்புகளில்  நடைபெற்றதாக சொல்லப் படும் விடயங்களை அறிய முற்படவோ, கொள்கை அளவில் எதிர்க்க முற்படவோ செய்யவில்லை.

ஆனால் சாதாரண மனிதனாக, பணபலமோ, அரசியல் பலமோ, “தொண்டர்கள்”பலமோ, எந்த விதமான செல்வாக்கும் இல்லாமல் மிக சாதாரணமான நிலையில் இருந்த சங்கரராமன் ஒரு செயற்கரிய செயலை செய்த பெரியார்  ஆகி விட்டார்.

அவருடைய தனிப் பட்ட வாழ்க்கை எளிமையானதாக இருந்ததாகவே செய்திகள் உள்ளன. சட்டத்துக்கோ , சமுதாயத்துக்கோ எதிரான வகையில் அவர் எந்த ஒரு செய்கையும் செய்ததாக நமக்கு எட்டிய வரையில் இல்லை. தன்னுடைய மாணவி, குழந்தைகள் என்று நேர்மையான குடும்ப வாழ்க்கை வாழ்ந்தவராகவே அறியப் படுகிறார்.

காஞ்சி யில் உள்ள சில அமைப்புகளில் அமைப்பில் சில தகாத செயல்கள் நடை பெறுவதாக சங்கர ராமன் சுட்டிக்காட்டி அவற்றை எதிர்த்து இருக்கிறார். சங்கர ராமனின் தந்தை காஞ்சி யில் உள்ள சில அமைப்புகளில்  இருந்திருக்கிறார்.  சங்கர ராமன் விரும்பியிருந்தால், அவரும் ஜோதியிலே  கலந்து மஞ்சக்  குளித்து இருக்கலாம். ஆனால் அவர் மனசாட்சிக்கு எதிராக செயல் படவில்லை.

சங்கரராமன் காசுக்காக , பணத்துக்காக பேரங்கள் பேசவில்லை.  காஞ்சி  தூய்மையானதாக இருக்க வேண்டும், தகவிலாத செயல்கள் கோபுரத்தின் உச்சியில் வைக்கப் பட கூடாது என்பதையே அவர் முக்கியமானதாக கருதி இருக்கிறார். உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவர் பாடு பட்டு இருக்கிறார்.

பிரண்ட் லயன் நாளிதழ் இவர் விதிகளை மீற மறுத்ததாகவும் அதனால் பலரின் கோவத்துக்கு ஆளானதாகவும் தெரிவிக்கிறது.

http://www.frontlineonnet.com/fl2124/stories/20041203006400700.htm

நாமும், நம் போல பலரும்  இங்கே இணையத்தில் எழுதுகிறோம். அத்தோடு முடிந்தது. ஆனால் சங்கர ராமன் களத்தில் இறங்கி போராடி இருக்கிறார்.  சிங்கத்தின் குகைக்குள்ளே சென்று சிங்கத்தை சந்திப்பது என்று சொல்வார்களே அதைப் போல அதிரடியாக பிரச்சினைகளை நேருக்கு நேர் தட்டிக் கேட்ட வீரராக இருந்திருக்கிறார்

தன்னை அறிந்தோ அறியாமலோ, இந்திய சமுதாயத்திற்கு , இந்து மதத்திற்கு ஒரு அரும் பணியை ஆற்றி இருக்கிறார், திரு. சங்கர ராமன்.  இந்து மதத்தின் பெயரால் தங்களை வளர்த்துக் கொள்வோர் மக்களுக்கு அடையாளம் காட்டப் படுவார்கள் என்பதை அவர் உணர்த்தி விட்டார்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் சங்கர ராமனின் கொலை வழக்கு பற்றி விவாதிப்பது அல்ல. அது பற்றி நீதி மனறத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது , நாம் அதைப் பற்றி இங்கே விவாதிக்க விரும்பவில்லை. நம்முடைய கட்டுரை, சாதாரண நிலையில் இருந்த ஒரு மனிதன் எப்படி செயற்கரிய செயல்களை செய்தார் என்பதை சுட்டிக் காட்டும் வகையிலே எழுதப் பட்டதாகும்.

பின்னூட்டம் இடும் நண்பர்கள், சங்கரராமன் கொலை வழக்கு பற்றி விவாதிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

சங்கரராமன் மரணித்த  நாளான இன்று அவர் நினைவுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

Advertisements

2 Responses to "போராட்டக்காரர் சங்கர ராமன் நினைவு நாள் அஞ்சலி!"

வண்க்கம் நண்பரே!!!!!!!!!!
நம்க்கு யார் செய்தாலும் சரியா என்று கேள்வி கேட்கும் மன் நிலை இருப்பதால்
யாரிடனும் ஒத்துப் போகமுடியவில்லை.

அப்படிப்பட்டவர்தான் அய்யா சங்கரராமன் என்பது என் கருத்து.
அவருக்கு நம் அஞ்சலி

வணக்கம் சகோ. சார்வாகன்,

நன்றி !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 37 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: