Thiruchchikkaaran's Blog

விநாயகர் சதுர்த்தி விழாக்களின் தாக்கம் என்ன ?

Posted on: September 1, 2011


//ஜீன்ஸ் அணிந்து காரில் செல்லும், ஆன்மீகத்தில் அதிக நாட்டமில்லாத நவநாகரிக யுவதிகள் கூட  பிரம்மாணடமான சிலைகள் டிரக்குகளில் எடுத்து செல்லப் படுவதை கண்டு கார் கண்ணாடிகளை இறக்கி  அந்த வண்ண மயமான விநாயகரை சில நொடிகள் ஆர்வத்துடன் நோக்குகின்றனர்.//

இன்று விநாயகர் சதுர்த்தி பூஜையும் அதைத்  தொடர்ந்த வூர்வலங்களும் இந்தியா முழுவதும் பிரமாண்டமாக  கொண்டாடப் படுபவை ஆக உள்ளன !

இந்து மதத்தில் உள்ள இளைஞர்கள், சிறுவர், சிறுமியர், யுவதிகள் உள்ளிட்டோரை இந்து மதத்துடன் இறுக இணைக்கும் நாயகராக விநாயகர் இருக்கிறார்.

வெவேறு பகுதிகளிலும் வசிக்கும் இளைஞர்கள் பிரமாண்டமான  விநாயகர் சிலைகளை டிரக்குகளில் வைத்து எடுத்து செல்லுகின்றனர். தெருக்களில் சீரியல் பல்பு கட்டுதல், விநாயகர் சிலையின் வடிவமைப்பை இறுதி செய்தல், ஆர்டர் கொடுத்தல், நிறுவுதல், பூசனைகள், பக்தர்களுக்கு பிரசாதம், இறுதியில் சிலைகளை நீரில் கரைத்தல் வரையிலான் முழு ஈவன்ட் மேனேஜ்மேன்ட்டும் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டு உள்ளது.

இந்து மதத்தில் வழிபாடு செய்வதற்கு எந்த தடையும் இல்லை. இப்படிதான் வழி பட வேண்டும், அப்படி வழி படக் கூடாது … என்பது போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் கிடயாது. மனிதனின் மனதுக்கு தீங்கு விளைவிக்காத, உடலுக்கு மிகவும் வருத்தி நிரந்தர வூனம் விளைவிக்காத எந்த ஒரு வழிபாட்டு முறையையும் இந்து பின்பற்றலாம். எனவே இசை, நடனம், ஓவியம், சிற்பம் என்று எல்லாவற்றையும் இந்து மதத்தினர் பயன் படுத்திக் கொள்கின்றனர்.  இந்து மத திருவிழாக்கள் வண்ணமயமாக, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜகஜ் ஜோதியாக களை  கட்டுகின்றன. எத்தனை விதமான பிள்ளையார்கள்…எத்தனை வண்ணங்கள் …. கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில் அமைக்கப் பட்டு உள்ளன!

ஜீன்ஸ் அணிந்து காரில் செல்லும், ஆன்மீகத்தில் அதிக நாட்டமில்லாத நவநாகரிக யுவதிகள் கூட  பிரம்மாணடமான சிலைகள் டிரக்குகளில் எடுத்து செல்லப் படுவதை கண்டு கார் கண்ணாடிகளை இறக்கி  அந்த வண்ண மயமான விநாயகரை சில நொடிகள் ஆர்வத்துடன் நோக்குகின்றனர்.

இந்த சிலைகள் கிளே எனப் படும் களிமண்ணாலோ அல்லது மற்ற பிற எகோ பிரன்ட்லி பொருளினா லோ  செய்யப் பட வேண்டும் வண்ணப் பூச்சுகள் இயற்கை வண்ணங்களால் அமைக்கப் பட வேண்டும் என்பதை ஒரு முக்கிய கருத்தாக சொல்கிறோம்.

விநாயகர் வினைகளை தீர்ப்பவர், தடங்கல்களை விலக்குபவர் என இந்துக்கள் நம்புகின்றனர். எந்த ஒரு முக்கிய வேலையும் தொடங்கு முன் விநாயகரை வணங்கினால் தடங்கல் இல்லாமல் வெற்றிகரமாக நடக்கும் என்கிற நம்பிக்கையை அவர்கள் பெறுகின்றனர்.

தமிழ் சமுதாயத்தில் விநாயகர் வழிபாடு பண்டு தொட்டு இருந்து வருவதை ஒவ்வையாரின் விநாயகர் அகவல் மூலம் அறிகிறோம்.

ஒவ்வையார் விநாயகரை “சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பல இசைப் பாட” எனப்  போற்றிப் புகழ்வதில்ஆரம்பித்து “தெவிட்டாத  ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலந்தன்னை அடக்குமுபாயம் “என அறியாமையை நீக்கி ஞானத்தை அளித்து எல்லையற்ற இனபத்தை தரக் கூடிய விநாயகரின் காலில் சரணடைவோம் வித்தக “விநாயக விரைகழல் சரணே ” என்று முடிக்கிறார்

http://www.scribd.com/doc/8707554/Vinayagar-Agaval-in-Tamil

&

http://pm.tamil.net/pub/pm0231/mp231.html

ஒவ்வையாரின் விநாயகர் அகவலை முழுதுமாகப் படித்தவர்கள் விநாயகர் வழிபாடு எந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் கூடிய ஆன்மீக முன்னேற்றத்தைக் குறிகோளாகக் கொண்டு செயல் படுகிறது என்பதோடு எந்த வித வெறுப்புக் கருத்துக்களும் விநாயகர் வழிபாட்டில் இல்லை, விநாயகர் வழிபாடு முழுக்க முழுக்க ஆக்க பூர்வமானது என்பதை அவ்வையின் மூலம் சுட்டிக் காட்டுகிறோம்.

இவ்வளவு சிறப்பான விநாயகர் வழிபாடு உண்மையில்  அவ்வையின் அதே ஆக்கபூர்வமான ஆன்மீகத் தேடலாக இன்று பின்பற்றப் படுகிறதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். வெறுப்புணர்ச்சி துளியும் இல்லாத விநாயகர் வழி பாட்டில் இன்று பிற மதங்களுக்கெதிரான வெறுப்புணர்ச்சி புகுத்தப் படுகிறதா, அப்படிப் புகுத்தப் பட்டால் அது விநாயக கோட்பாட்டுக்கு செய்யப் படும் துரோகம் ஆகாதா என்பதை வரும் கட்டுரைகளில் தொடர்ந்து  ஆராய்வோம்!

மும்பை போன்ற நகரங்களில் கணேஷ் பூஜா பல பரிமாணங் களைக்     கொண்டது. அங்கே ஹவ்சிங் சொசைட்டி யில் பாட்டுப் போட்டி , டான்ஸ் நிகழ்ச்சிகள் என கணேஷ் பூஜா ஒரு சமூக இணைப்பு விழாவாக உள்ளது.

ஆனால் சென்னையில் விநாயகர் வூர்வலங்கள் என்றால் காவல் துறை அதிக பந்தோபஸ்துகளை செய்ய வேண்டிய நிலை  ஏன?  இதைப் பற்றி பிந்தைய கட்டுரையில் தொடர்ந்து விவாதிப்போம்!

(தொடரும் )

Advertisements

7 Responses to "விநாயகர் சதுர்த்தி விழாக்களின் தாக்கம் என்ன ?"

வணக்கம் நண்பரே,
எந்த பண்டிகை கொண்டாடினாலும் மனிதர்கள் மகிழ்ச்சியாக் இருந்தால் நம்க்கும் மகிழ்சிதான்.ஜீன்ஸ்,டி ஷர்ட் அணிந்த‌ ஆள் மிகவும் ஆன்மீகவாதியாக் இருப்பதும், கோயிலில் பூசை செய்பவர் கடவுள் எல்லாம் சும்மா என்று கூறுவதையும் கெட்டு இருக்கிறேன்.

நீங்கள் கூறிய வ‌ண்னம் இயற்கையை பாழ் படுத்தாத பொருள்களில் கணபதி செய்து ப்யன் படுத்தும் அறிவுரை மிக நன்று.

மகிழ்ச்சியாக பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் நம் வாழ்த்துக்கள்.
___________

அதாவ்து நம்பிக்கையாளர்,மறுப்பாள‌ர் என்பதை மிக சரியாக் பிரிக்க முடியுமா? ஒருவர் எத்னை எப்படி நம்புகிறார் என்பது அவர் மன‌திற்கு மட்டுமே தெரியும்.வெளியே அனைவரும் ஒரே மதம்,கொள்கை என்று காட்டினாலும்,ஒருவரின் மனதிலேயே பல்தரப் பட்ட முரண்படும் கொள்கைகள் சூழலுக்கு ஏற்றபடு வருவது இயல்பாக்வே நினைக்கிறேன்.
___________
அதுபோல் இறை மறுப்பாள‌ன் என்றால் நம்பிக்கையாள்ர்களை பற்றி அவதூறு கூறுபவன்,அவர்கள் சொல்வதை ,செய்வது அனைத்தையும் மறுப்பவன் என்ற கருத்தும் என்னை பொறுத்த் வரை தவறு.

நம்பிக்கைகளை ஆதார பூர்வமாக் சோதிப்பவன் .

நம்பிக்கையாளர்களுக்கு இந்த சோதித்தல் அவ்சியமில்லை.

சில மதங்களில் பிற‌ மதத்தவர் அனைவருமே இறை மறுப்பாளர்களே!!!!!!!.

இறை மறுப்பாளன் என்பவன் யார்? இந்த கேள்விக்கு உங்களிடம் விடை எதிர்பார்க்கிறேன்.இத்னை பற்றி கொஞ்சம் பேசுவோம்!!!!!!!!!

சகோதரர் சார்வாகன் அவர்களே,

வணக்கம்,வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

அதாவது ஜீன்ஸ் டி சர்ட் அணிந்த ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு காட்டாத, வீ டோன்ட் ஹேவ் தட் மச் இண்டரஸ்ட் இன் ஸ்பிரிச்சு வாலிட்டி அங்கிள் என்று என்னிடம் கூறிய ஒரு இளம் பெண் அப்படி கார் வழியாக ஆவலுடன் எட்டிப் பார்த்ததை அப்படியே எழுதி இருக்கிறேன். அவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது குற்றம் எதுவும் கிடையாது. அவர்களைக் குறை சொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரியாரிட்டி. நானே என் வாழ்க்கையில் சிறுவனாக இருந்த பொது ஆத்தீகனாக , வளர்ந்து பிறகு நாத்தீகனாக இருந்திருக்கிறேன். ஐ போன்… , நுனி நாக்கு ஆங்கிலம் , என்று இருபவர்களை கூட கவர்கிறார் விநாயகர் என்றே சொல்ல வந்தேன்.

மேலும் நீங்கள் சொல்வது போல நம்பிக்கையாளர் , மறுப்பாளர் என்று கச்சிதமாகக் கோடு போட்டு பிரிக்க முடியுமா என்பது சரியே.

நம்மைப் பொறுத்தவரையில் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்கிறோம். பகுத்தறிவு என்பது சொல்லப் பட்ட , கேட்கப் பட்ட எதையும் அப்படியே நம்பாமல் ஆராய்வது ஆகும் என்பது உங்களுக்கே தெரியும்.

கடவுள் என்று ஒருவர் தனியாக இருக்கிறாரா என்று தான் கேட்கிறான், அப்படி ஒருவர் இருப்பதற்கான ஆதாரத்தை, Verifiable proof ஐ , சான்றை கொடுத்தல் அதை ஒத்துக் கொள்ள அட்டியில்லை.

கடவுள் இருக்கிறார் என்று நாம் நம்பிக்கை கொள்ளவும் இல்லை. அவசரம் அவசரமாக கடவுள் என்கிற ஒருவர் இல்லவே இல்லை என்ற முடிவுக்கு வரவும் இல்லை.

ஆதாரத்தைக் கொடுங்கள், ஆராய்வோம் என்கிறோம்.

https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/16/rationalism/

நீங்கள்குறிப்பிடும் இறை மறுப்பாளர் நாகரீகமான சிந்தனாவாதி என்று நினைக்கிறேன்.

ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நாத்தீகர் என்றால் , இந்து மதக் கடவுளகளை இழிவாகப் பேசி, இந்து மதத்தை அசிங்கமாகத் திட்டி, அவ்வப் போது பிற மதங்களையும் லைட்டாக டச் பண்ணுவதுதான் “பகுத்தறிவு” பாரம்பரியம் என ஆகி விட்டது.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் !

வண்க்கம் நண்பரே
ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதத்தில் கடவுளை வரையறுக்கிறது என்னும் போது இறை மறுப்பு என்பது அனைத்துமே உண்மையா என்று சோதிப்பதாக் மட்டுமே இருக்க முடியுமே தவிர இறை மறுப்பையே அவர் இப்படி கூறினார் அப்ப்டியே வழி வழியாக் பின்பற்றுவோம் என்று அதயும் ஒரு மதமாக் மாற்றிய பெருமைக்குறியவர்கள் நம் பகுத்தறிவு சகோதரர்கள்.

ஒரு முறை ஜீனியர் விகடனில் ஒரு புகழ் பெற்ற பகுட்த்றிவு பேச்சாளர் இப்படி கூறியிருந்தார்

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் பேச சென்ற போது அந்த ஊரில் உள்ள இரட்டை குவளை முறை பற்றி பேச முயன்ற போது கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் சாமியை பத்தி என்ன வேண்டுமானாலும் பேசு,சாதியை பத்தி பேசினால் நடப்பதே வேறு”

என்று கூறியதை சொல்லி வருத்தப் பட்டார்.இதில் இருந்து என்ன தெரிகிறது ?

” செல்லுமிடத்து சினம்”அவ்வளவுதான்.!!!!!!!!!!!!

பாவம் பெரியார் ,இருந்தால் மிகவும் வருத்தப் பட்டு இருப்பார்!!!!!!!!!!.

நம்பிக்கையாளரோ,மறுப்பாளரோ சமூக ஏற்றத்தாழவுகளை,மத துவேஷத்தை களைய நினைப்போர் ஒன்று சேர்ந்து முயற்சி எடுப்பதே நல்லது.
நன்றி

இரட்டைக் குவளை முறையைஒழிக்க விரும்பவோர் வெறும் பிரச்சாரம் செய்தால் பலன் கிடைக்குமா?

அமைப்பு பலம் சார்ந்தவர்கள் கிராமங்களில் புதிய தேநீர் விடுதிகளை அமைக்க வேண்டும். மிகவும் சுவையான தேநீர் மற்றும் பலகார வகைகளை அங்கே கிடைக்க செய்ய வேண்டும். தேனீர் விடுதியும் நல்ல இருக்கைளுடன் சிறப்பாக இருக்க வேண்டும்.

ஆனால் இரட்டை குவளை முறை எல்லாம் கிடையாது. எல்லோருக்கும் ஒரே குவளை தான். ஆனால் சுத்தமாக ஸ்டீம் போட்டு கழுவி தருவோம் என்று சொல்ல வேண்டும். விருப்பமிருந்தால் வந்து குடியுங்கள் என சொல் ல வேண்டும். தரமான தேநீர், தரமான விடுதியில் குடிக்க விரும்பினால் வந்து குடிக்கட்டும். அப்படி இல்லாவிட்டாலும் கவலை இல்லை, இரட்டை குவளை முறையில் டிஸ்கிரிமினேட் செய்யப் படுபவர்கள் இந்த தரமான விடுதில் தரமான தேநீரை பருகுவார்கள். இரட்டை குவளை ஆதரவாளர்கள் அவர்கள் விரும்பும் இடத்திலேயே குடிக்கட்டும்.ஆனால் உயர்ந்த ரக தேநீரை பருகுவோர் தாழ்மையான வராக்கக் கருதப் பட இயலாது.
சிற்றுண்டிகளும் சுவையாகவும், தரமாகவும் இருந்து செர்வீசும் சிறப்பாக இருந்தால் சிறிது நாள் பார்த்து விட்டு இந்த விடுதிகளுக்கு ஆதிக்க சாதியினரும் வர ஆரம்பிப்பார்கள்.

அதே நேரம் இவை போன்ற விடுதிகள் லாபகரமாக இயங்குமா என சொல் இயலாது. இவற்றை சமூக முற்போக்கு சாரிட்டியாகவே கருதப் பட இயலும்.

இதை விட்டு விட்டு வெறுமனே கூட்டம் போட்டு பேசி என்ன பலன்?

சகோ.
சிறுவயதில் சொல்லித்தரப்பட்டு, அர்த்தம் புரியாமல் பாடி, 25 வருடங்கள் கடந்து இப்பொழுதுதான் அதன் பொருள் புரிந்தது – விநாயகர் அகவல்- இந்த தளத்தை பார்த்த பொழுது.

http://pm.tamil.net/pub/pm0231/mp231.html

சிறுவர்கள் திருவாசகம், திருப்பாவை மற்றும் பல தமிழ் சமய பாடல்களை படிக்க அறிந்து கொள்ள விரும்பினால் எங்கே செல்வது என்பதுதான் கேள்வி.

சகோ.,
பெருமாள் கோவில்களில் மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை கிளாஸ் எடுத்து போட்டி வைத்து பரிசும் கொடுக்கிறார்கள்.

சகோ.,பெருமாள் கோவில்களில் மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை கிளாஸ் எடுத்து போட்டி வைத்து பரிசும் கொடுக்கிறார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: