Thiruchchikkaaran's Blog

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை உயர் நீதி மன்றத் தீர்ப்பு !

Posted on: August 31, 2011


இந்தியாவின் நீதித்துறை எந்த அளவுக்கு நியாயமும் சரியானதுமாக (Fair and Just) உள்ளது என்பதை வெளிப் படுத்தும் விதமாக பேரறிவாளன், சாந்தன், முருகனின் ஆகியோரின் முறையீட்டின் மீதான சென்னையின் உயர் நீதி மன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது.

தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனு மீதான முடிவை வெளியிடாமல் பல காலம் இழுத்தடித்ததை முன்பே சொல்லி இருந்தோம். ஒவ்வொரு நாளும் தூக்குக் கயிற்றை எதிர் நோக்கி கழிக்கும் சிறை வாசமானது எவ்வளவு கொடுமையானது என்பதை மக்கள் அறிவர்!

இந்த நிலையில் இவர்களை இத்தனை காலம் காக்க, தவிக்க  வைத்திருந்தது ஏன், என பதில் சொல்லுமாறு மைய அரசுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

மைய அரசு சவுத் பிளாக்கில் வேலை செய்யும் குமாஸ்தா சோணாச்சலம் அல்லது ராகுல் தேசாய் மீது பழியைப் போட்டு, “அவங்க பைலை வச்சுகிட்டு தூங்கிட்டு இருந்தாங்க, அவங்க மேல ஆக்சன் எடுக்கிறோம்,அவங்களை சஸ்பென்ஸ் பண்ணப் போறோம் கணம் நீதிபதி அவர்களே” என்று வழவழா கொழகொழா  பதிலை அனுப்புமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்!

ஆனால் இந்த கருணை மனுவின்  மீதான ஒரு முடிவுக்கு வர இவ்வளவு காலம் ஆனதுக்கு காரணம் ஒரு குமாஸ்தாவாகவோ அதிகாரியாகவோ இருக்க இயலாது.

ஏனெனில் இந்தக் கேஸ் ஒரு ஹை ப்ரொபைல் கேஸ் ஆகும். இதில் கருணை மனு பற்றி முடிவு  எடுக்கக் கூடியது குமாஸ்தாவோ, சாதா அதிகாரியோ இல்லை. மிகப் பெரிய அதிகாரி கூட இந்த விடயத்தில் முடிவு எடுக்கும் பொறுப்பை உள்துறை அமைச்சரிடம் விடுவதுதான் முறை என்று எண்ணி இருப்பார். உள்துறை அமைச்சர் … என்றால் அவர் தன்னிலும் மிகப் பெரிய சக்தியிடம் பொறுப்பை விட்டு விடுவார்.

இந்த நிலையில் ஏற்கனேவே வூழல் புகார்கள் அன்னா ஹசாரே வின் போராட்டம், தெலுங்கான பிரச்சினை, விலைவாசி  உயர்வு, மக்கள் அதிருப்தி ஆகியவற்றால் செய்வதறியாது திகைக்கும்  ஆளும் வர்க்கம் கோர்ட்டுக்கு என்ன பதில் அனுப்புவது என்று இன்னும் ஒரு இடியாப்பச் சிக்கலில் சிக்கும் நிலை உருவாகி உள்ளது.

அமைச்சகத்தின் பதில் எப்படி இருந்தாலும் மூவரின் மரண தண்டனையை இவ்வளவு காலத்துக்குப் பின் நிறைவேற்றுவது சரியா என்பதை மீண்டும் விசாரிக்க கோர்ட் தயங்கவில்லை என்பதை உயர் நீதி மன்ற தீர்ப்பு தெளிவாக்குகிறது.

உலகில் வேறு எந்த கோர்ட்டும் மரண தண்டனை குற்றவாளிகளுக்கு  இந்த அளவுக்கு வாய்ப்பு கொடுக்குமா, நியாயமாக நடந்து கொள்ளுமா, முறையீட்டை கவனிக்குமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்!File:Chennai High Court.jpg

இந்தியாவைப்  பற்றி அவதூறு சொல்லி, அது நியாயமற்ற நாடு… அது கெட்டது…என்று எல்லாம் புனைவுகளை அள்ளி வீட்டு இந்திய நாட்டையும், இந்திய நாட்டின் அமைப்புகளையும் திட்டுவதோடு, இந்திய சமுதாயத்தையும் , இந்தியரகளியும்  இழிவு படுத்துவதில் ஈடுபடும் இந்திய நாட்டை , சமுதாயத்தை பிளவு படுத்த முனையும்  உள்நாட்டு வெளி நாட்டு சக்திகளுக்கும் சூடாக வந்துள்ளது இந்த தீர்ப்பு.

அவர்களிடம் பல்லைக் காட்டி இந்திய நாட்டின் ஒருமைப் பாட்டைக் கெடுத்து இந்தியர்களை பலிகடா ஆக்கும் “அறப்” பணியில் ஈடுபடுவோர் தங்களின் மனசாட்சியை மீட்டெடுத்து கொள்கைகளை சரி பார்த்துக் கொள்ள வேண்டிய நேரமிதே!



Advertisements

4 Responses to "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை உயர் நீதி மன்றத் தீர்ப்பு !"

பொறுத்திருந்து பார்ப்போம் தீர்ப்பு எப்படி வருகின்றது என்று. எப்படி இருந்தாலும் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்வர் . மீண்டும் அவர்கள் சில வருடங்கள் சிறையில் இருக்க நேரிடலாம்

வண்க்கம் சகோ
மரண தண்டனை என்பதே நாகரிக உலகில் ஒழிக்க்ப் படவேன்டும்.இவ்விஷய்த்தில் உதவியாக் இருந்தார்கள் என்றுகூட‌ சரியாக் குற்றம் நிரூபிக்கப் படாத,விசாரணை 20 வருடங்களி கூட முடிக்கப் படாமல் தண்டனை அளிப்பது நியாயம் இல்லை.
மக்களின் தீர்ப்புக்கு அடிபணிந்துதான் ஆக் வேண்டும்.
______
மரண தண்டனை ஒழித்து விட்டால் குற்றங்கள் பெருகி விடுமே என்பது பல‌ விமர்சனம் வரும்.குற்ற்த்தில் நேரடியாக் ஈடுபட்டவர் கையும் களவுமாக் பிடிபடுகிறார்.அப்ப்டி சூழலில் 99 வருட(அதற்கு மேலும்) தண்டனை என்று இப்படிப்பட்டவர்களுக்கே ஒரு சிறப்பு சிறை ஏற்படுத்தி காலம் முழுதும் ஏதாவது வேலை செய்து வழும் வரை ஓரமாக் இருந்து விட்டு போ என்று சொல்ல வேண்டியதுதான்!.இறப்பது சுலபம் ,வாழ்வதுதான் கஷ்டம்.
நன்றி

வணக்கம் சகோதரர் சார்வாகன்,

மரண தண்டனை மட்டும் அல்ல, இன்னும் பல தண்டனைகளுக்கும் அவசியம் இருக்காது – சமூகத்தில் நிதானப் போக்கும், மன முதிர்ச்சியும் நாகரீகமும் நிலவினால்!

ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கூலிக்கு ஆள் வைத்து கொல்வது சர்வ சகஜமாக நடக்கிறது. இதை கிட்டத் தட்ட தொழிலாகவே செய்கிறார்கள். வெறும் ஐம்பாதயிரம், அறுபதாயிரத்துக்கு கொலை செய்ய தயாராகிராகள் என்பதை பத்திரிகை செய்தியின் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். கொலை செய்து விட்டு சரண்டர் ஆகி , போலீசிடம் கொன்சம் அடி வாங்கி விட்டு ஆயுள் தண்டனை பெற்று உள்ளே செல்கிறார்கள். கட்சி, சமூக செல்வாக்கு இருந்தால் நன்னடத்தை காரணமாக ஏதாவது தலைவன் அல்லது தலைவி பிறந்த நாளை முன்னிட்டு 7 வருடங்களில் சில சமயம் 5 வருடங்களில் கூட வெளியே வந்து விடுகிறார்கள். ஒரு மாதம் சும்மா இருந்து விட்டு பிறகு ஈண்டும் அடாவடியில் ஈடுபடுகிறார்கள். டேய், நான் தலையை சீவி விட்டு உள்ளே போய் விட்டு வெளியே வந்தவன்டா என்று சொல்வார்கள்.

கோவையில் பதினோரு வயதுடையசிறுமியை கதறக் கதறக் கற்பழித்து அவள் தம்பியையும் கொன்று வாய்க் காலில் போட்டு விட்டுப் போகிறார்கள். தருமபுரி பஸ் எரிப்பு நிகழ்வை நடத்தியதை எண்ணிப் பாருங்கள், அப்பாவிக் கல்லூரி மாணவிகளை துடிக்கக் துடிக்கக் உயிருடன் கருக்கி இருக்கிறார்கள்- அவனுடைய தங்கையாகவோ, மகளாகவோ இருந்தால் அப்பா, நான் உள்ளே இருக்கேப்பா என்று கத்தி இருந்தால் நெருப்புக் குச்சியைக் கிழித்து பஸ்ஸில் எரிந்திருப்பானா என்று சிந்திக்க வேண்டும். அதாவது எவன் பொண்ணோ செத்தால் எனக்கு என்ன, நான் கட்சியில் நல்ல பதவிக்கு வர வேண்டும் என்கிற எண்ணாம் அல்லாமல் வேறென்ன?

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் சென்னையில் பல இடங்களில் தொடர்ச்சியாக பில்டிங் வாட்ச் மென் கல் கொல்லப் பட்டனர். காரணம் என்ன? யார் செய்தது, யாருக்கும் தெரியாது. தனியாக வீட்டில் இருந்த பெண்கள் கொல்லப் பட்டனர்.

ஆலடி அருணா, தா. கிருஷ்ணன் போன்ற முன்னாள் அமைச்சர்களே கொல்லப் பட்டனர். சாதாரண மனிதனுக்கு என்ன பாதுகாப்பு?

அதாவது அப்பாவி சிறுமியை கற்பழித்து கொலை செய்து ஓடையில் வீசி விட்டு செல்பவனுக்கு வாழும் உரிமை பறிக்கப் படக் கூடாது. ஆனால் அந்த சிறுமிக்கு வாழும் உரிமை இல்லை!

மாணவிகளை எரிக்கும் கொடூரக் கொலைகாரனுக்கு மரண தனடனையில் இருந்து காப்பாற்றப் படும் உரிமை வேண்டும். நெருப்பில் உயிரோடு எரிந்து செத்த மாணவிகளுக்கு உயிரோடு வாழும் உரிமை இல்லை.

அதாவது அருவாளை, பெட்ரோல் கேனை தூக்கி கொண்டு ஓடிப் போய் கொல்லுபவனுக்கு வாழும் உரிமை உண்டு. அப்பாவிப் பெண்களுக்கு கற்பழிக்கப் பட்டு கொல்லப் படும் உரிமை மாத்திரமே உண்டு.

எந்த இடத்திலே அப்பாவிப் பெண்ணை துடிக்கக் துடிக்கக் கற்பழித்துக் கொன்றானோ அதே இடத்தில் பொது மக்கள் முன்னிலையில் அவனை தூக்கிலே போடுங்கள், ஒரு வருடத்தில் பத்து தூக்கு கொடுங்கள். கொலை செய்தால் தூக்கு uruthi என்றால், அவனவன் மூட்டை தூக்கிப் பிழைப்பான், கொலை செய்ய பணம் வாங்கி பிழைக்க மாட்டான்!

தூக்கு: தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறும் மத்திய அரசின் மூக்குடைக்கும் வழி என்ன?

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_5747.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: